Jump to content

ஃபேஸ் டைம்-ஐ வீழ்த்துமா கூகுள் டுயோ? #Google Duo


Recommended Posts

ஃபேஸ் டைம்-ஐ வீழ்த்துமா கூகுள் டுயோ? #Google Duo

                                 duooo.jpg

ன்றைய தொழில்நுட்ப உலகில் தகவல் பரிமாற்றத்தை பொறுத்தவரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களின் வருகை அதிகமாகி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் கூகுளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ், ஹேங் அவுட் என பல ஆப்களை வெளியிட்டாலும் அது மக்களிடம் போதிய வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை.

கூகுள் நிறுவனம், கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் தனது 'அலோ மற்றும் 'டுயோ' ஆகிய இரு ஆப்களை அறிமுகப்படுத்தியது. இந்த இரு ஆப்களும் தகவல் பரிமாற்றத்தில் ஒரு புதிய அனுபவத்தை மக்களுக்கு  வழங்கும் எனக் கூறியது கூகுள். இந்நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திற்கான 'டுவோ' ஆப்பை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது கூகுள். சொன்னதைச் செய்துள்ளதா 'டுயோ'?

வழக்கம்போல இதனை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். பேஸ்டைம், ஸ்கைப் மற்றும் ஐ.எம்.ஓ ஆகிய ஆப்ஸ்களே, இதுவரை  வீடியோ அழைப்புகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், இதற்கு போட்டியாகவே கூகுளின் 'டுயோ' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 'டுயோ',  பயனாளிகள் எளிதில் உபயோகப்படுத்தக்கூடிய வகையிலும் வீடியோ அழைப்புக்களை ஏற்கும் வகையிலும் User Friendly-யாக டிசைன் செய்யப்படுள்ளது.

                                   duo11.jpg

மேலும் இதன்  மூலமாக மேற்கொள்ளப்படும் அழைப்புகள் (end to end) என்கிரிப்ஷன் செய்யப்படுவதால்,  பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் இதில் சாத்தியம். அழைப்பவரின் புகைப்படத்திற்கு பதிலாக அவர்களின் வீடியோ, நேரடியாக திரையில் தோன்றும். Knock Knock வசதி மற்றும் குறைந்த சிக்னல் கிடைத்தாலும், தரமான வீடியோ காலிங் செய்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பது, இதன் இன்னொரு சிறப்பு.

எளிமையாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் குரூப் சாட், filters போன்ற மற்ற ஆப்களில் இருக்கும் வசதிகள் 'டுயோ'வில் இல்லாதது இதன் பலவீனம். ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை வீடியோ காலிங் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும், அந்த எண்ணிக்கையை 'டுயோ' அதிகரிக்கும் எனவும் கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஸ்கைப், ஐ.எம்.ஓ போன்ற ஆப்களை விடவும், Facetime தான் தனது பிரதானப் போட்டியாளர் என அறிவித்துள்ளது கூகுள். ஆனால் ஸ்கைப் மற்றும் ஐ.எம்.ஓ-வை வீழ்த்துவதில்தான் இருக்கிறது 'டுயோ' வின் உண்மையான வெற்றி!

இது தொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள 'டுயோ' வீடியோ இங்கே...
 

                            

 

http://www.vikatan.com/news/information-technology/67215-google-duo-arrives-to-take-on-facetime.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.