Jump to content

கவிஞர் முத்துக்குமார் நினைவு பகிர்வுகள்


Recommended Posts

நா.முத்துக்குமார்: எளிய சொற்களின் காதலன் 
யுகபாரதி

நா.முத்துக்குமார், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழசான பராமரிக்கப்படாத ஒரு மிதிவண்டியில் என்னை சந்திக்க வந்திருந்தான். பத்திரிகையில் வெளிவந்திருந்த என்னுடைய சிறிய கவிதை ஒன்று அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தக் கவிதையை பாராட்டி தேநீர் வாங்கிக்கொடுத்தான். தேநீரை மட்டுமே வாங்கித்தரும் வசதிதான் அப்போதிருந்தது. அந்தத் தேநீரில் நிறைவடையும் மனம்தான் எனக்கும் இருந்தது.  முத்துக்குமார் என்னை சந்திக்க வந்தபோதே எழுத்தாளர் சுஜாதாவால் அவனுடைய தூர் கவிதை சிலாகிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், பரவலான கவனிப்பை பெற்றிருந்த கவிஞனாக அவன் இருந்தான். அவன் அளவுக்கு எழுதவோ அறிமுகமோ பெற்றிராத என்னை அவன் சந்திக்க வந்தது ஒருவிதத்தில் எனக்குப் பெருமையாய் இருந்தது. 

சக கவிஞனை பாராட்டவும் அவனை வேறு வேறு தளத்திற்கு இட்டுச்செல்லும் வெள்ளந்தி மனமும் வாய்த்தவனாக அப்போது அவனிருந்தான். ஒரு சில வெள்ளிக்கிழமை மாலைகள் அவனோடு கிறிஸ்தவக் கல்லூரியில் நிகழ்ந்துவந்த வனம் கவிதைக் கூடலில் கழிந்தன. அவன் மூலமே எனக்கு பாரதிபுத்திரனும் இயக்குநர் ராமும் அறிமுகமானார்கள். கவிதைக்கான வாய்ப்புகளை கண்டடைய துடித்த அவனுடைய அந்த காலங்களில் எத்தனையோ விவாதங்களை அவன் என்னோடு நிகழ்த்திக்கொண்டிருந்தான். இரவு பகலாக அலைந்து திரிந்து அவன் கண்டடையும் சாத்தியங்களை எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தான். கதவுகளை திறந்து திறந்து ஒரு பெரும் பயணத்திற்கு என்னைத் தயார்படுத்தினான். என்னை விட இரண்டொரு வயது மூத்தவன் என்றாலும் அவனை உரிமையோடு ஒருமையில் அழைக்க அனுமதித்தான்.அப்படி அழைப்பதையே இறுதிவரை விரும்பினான். மரணமுறுவதற்கு சில நாள்கள் முன்புவரை அவன் என்னை பாராட்டிக்கொண்டே இருந்தான். பரஸ்பர பாராட்டுகளில் எங்களுடைய இருபத்தி ஐந்து வருட அன்பு எதனாலும் அறுபடாமல் இருந்தது.

என் கவிதைகளைத் தொகுப்பாக பார்க்கும் ஆவல் என்னைவிட அதிகமாக அவனுக்கிருந்தது. அப்போது ஓர் அரசியல் வார பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்த என்னை இலக்கிய வெளியை நோக்கி நகரச் சொல்லிக்கொண்டே இருந்தவன் அவந்தான். கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடு என்றதோடு நில்லாமல் என் கவிதைநூல் வெளியீட்டு விழாவுக்கு தஞ்சாவூருக்கு வந்து வாழ்த்தினான். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவனே மூத்த மகனாகவே இருந்துவந்தான். எந்தத் தொலைபேசி அழைப்பிலும் அம்மாவும் அப்பாவும் அவனை விசாரிக்கத் தவறியதில்லை. அவன் தந்தையும் என்னை அப்படியே கருதினார். 

ஒருவர் மீது அன்பு செலுத்தி கிறங்கடிப்பதற்கு அவனுக்குக் கவிதை மட்டுமே போதுமானதாய் இருந்தது. நெருக்கடியான தருணங்களில் நிக்கோடின் மணத்தோடு அவன் பேசிய ஆறுதல் வார்த்தைகளால்தான் இன்றுவரை நானிருக்கிறேன் என்றுகூடச் சொல்லலாம். நவீன இலக்கியவாதிகளை சந்திக்கவும் அவர்களுடைய படைப்புகளில் கரைந்துபோகவும் அவன் போல எனக்கு யாரும் கற்பிக்கவில்லை. அவன் கைகாட்டிய திசையில் இருந்துதான் கணையாழியைப் பார்த்தேன். ஆறு ஆண்டுகாலம் அங்கே நான் பணிபுரிய காரணமாகவும் உந்து சக்தியாகவும் அவனிருந்தான். எந்த சந்தர்ப்பத்திலும் அவன் சந்திப்பு சலிப்பை ஏற்படுத்தியத்தில்லை. ஒரு புது செய்தியை ஒரு புது கவிதையை அவன் எனக்குத் தந்துக்கொண்டிருந்தான். அந்த கவிதையும் செய்தியும் நம்ப முடியாத அதிர்ச்சியைக் கொண்டிருக்கும். இறுதி செய்தியிலும் அதே அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டுப் போய்விட்டான். 

வீர நடை திரைப்படத்தில் அவன் பாடல் எழுதிய செய்தியை அறிவுமதி அண்ணனுக்குப் பிறகு அவன் பகிர்ந்துகொண்டது என்னிடம்தான். ஹக்கூ உத்திகளை திரைப்பாடலில் எழுதியிருக்கிறேன் என்று வரிகளை வாசித்துக்காட்டினான். அப்போதுவரை கூட நான் திரைப்பாடல் எழுதுவது குறித்து யோசித்திருக்கவில்லை. நீயும் திரைப்பாடல் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தனக்குத் தெரிந்த இயக்குநர் தயாரிப்பாளர்களிடம் எல்லாம் எனக்காக என் கவிதைத் தொகுப்பைக் கொடுத்து பேசுவதாகவும் சிபாரிசு செய்வதாகவும் உறுதியளித்தான். ஓரிருவரை சென்று பார்க்கவும் ஏற்பாடு செய்தான். அந்த சமயத்தில் திரைப்பாடல் துறையில் முன்ணணி பாடலாசிரியராக இருந்துவந்த கவிஞர் வாசனைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். ஒருகட்டத்தில் வாசன் மஞ்சக்காமாலையால் மரணமுற்ற செய்தியை எனக்கும் சரவணனுக்கும் (ராஜூமுருகன் சகோதரன்) வந்த சொன்னவன் அவன் தான். அதே மஞ்சக்காமாலை அதே செய்தி அவனைப்பற்றியும் வரும்மென்று அப்போது நாங்கள் நினைத்திருக்கவில்லை.

அவனுடைய பட்டாம் பூச்சி விற்பவன் கவிதை நூலுக்கு விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யலாம் என்று நான் சொன்னபோது எனக்கு மட்டுமென்ன விமர்சனம்? என்னோடு சேர்த்து உன்னுடய மனப்பத்தாயம், பச்சியப்பனின் உனக்குப் பிறகான நாட்கள், ஆசுவின் ஆறாவது பூதம், மா.காளிதாசின் சந்திப்பின் கடைசி நொடியில், எல்லா நூலுக்கும் இணைத்து ஒரு விழா ஏற்பாடு செய்யோம் என்றான். அப்படித்தான் லலித் கலா அகாடமியில் ஓவிய்ர்களின் உதவியோடு அவ்விழா வெகு சிறப்பாக நடந்தேறியது. என் நூல் குறித்து கவிதாபாரதியும் அவன் நூல் குறித்து பாரதிபுத்திரனும் பேசியவை குறிப்பிட்டு சொல்லத்தக்க இலக்கிய ஆவணம். எங்கள் பார்வைகளை மடைமாற்றிய அவ்விழாவுக்குப் பிறகு நாங்கள் இருவரும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரலானோம். 

தீவிர இலக்கிய வாசிப்பில் கறாராக இருந்த அவன் எப்போதும் யாரேனும் ஒரு நவீன படைப்பாளியின் எழுத்துக்களில் உருகிக்கொண்டே இருந்தான். வெகுஜன ஊடகங்களில் திரைப்பாடலாசிரியராக அவன் முன்னுறுத்தப் பட்டாலும் சிற்றிதழ்களில் அவன் பெயம் இடம்பெறுவதையே பெருமையாகச் சொல்லிக்கொள்வான்.
ந.பிச்சமூர்த்தியிலிருந்து கு.உமாதேவிவரை அவன் வாசிப்பில் கவனிக்கப்பட்டார்கள். நவீன இலக்கியத் தெறிப்புகளை திரைப்பாடலுக்குள் கொண்டுவரும் வேட்கை அவனுக்குள் தகித்துக்கொண்டே இருந்தது. அதற்காக பல இசையமைப்பாளர்களிடம் பல இயக்குநர்களிடம் அவன் முரண்படவும் செய்தான். ஒரு பாடலில் ஒரு வரியாவது புதிது வேணாமடா என்று என்னிடம் ஆதங்கப்படுவான். வணிக சினிமாவை அவன் புரிந்து வைத்திருந்த போதும் இலக்கிய நுகர்வு அவனைப் போராளியாகவே வைத்திருந்தது. எந்த சூழலுக்கும் எளிய சொற்களில் விரைவாக எழுதும் ஆற்றலைக் அவன் கொண்டிருந்தான். அப்பா மீதான அவன் பிரியமும் அவர் வாங்கிக்குவித்திருந்த புத்தகத்தின் மீதான பிரியமும் இறுதிவரை அவனுக்குக் குறையவே இல்லை. 

மத்தியதர வர்க்கத்து இளைஞனின் எல்லா போதாமைகளையும் கவிதைக்குள் பாடலுக்குள் கொண்டுவர சிந்தித்துக்கொண்டே இருந்தான். பயணமும் தனிமையும் அவனுக்குப் வெகுவாகப் பிடித்திருந்தது. எங்கேயாவது போய்க்கொண்டே இருந்தான்.   ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு இடத்தில் நல்ல கவிதையை நல்ல கவிஞனை சந்திப்பதே அவனுக்கு வேலையாயிருந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக அவனே அதிகத் திரைப்பாடலை எழுதியவன். என்றாலும், அவன் பயணத்திற்கே முன்னுரிமைக் கொடுத்தான். யுவன் - முத்துக்குமார் கூட்டணி பெருவெற்றி பெற்றிருந்த சமயங்களில் திரைப்பாடல் படைப்பின் உச்சத்தை அவன் தொட்டுவிட்டான். அதற்குமேல் போவதற்கு ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு அழகழகான வாக்கியங்களில் அவன் கட்டி எழுப்பிய கோட்டைக்குள் என்னையும் கூப்பிட்டுக்கொண்டே இருந்தான். வெற்றியை அவனுக்கு சுகித்தத் தெரியாது. எப்பவும் நிறைவுறாத மனம் அவனுடையது. 

போதும் என்று அவன் எதையும் நிறுத்தத் தெரியாதவன். இரண்டுமுறை தேசிய விருது வாங்கினான். இரண்டு முறையும் வாழ்த்துச் சொல்ல அழைக்கையில், எப்போடா நீ தேசிய விருது வாங்குவ என்றுதான் கடிந்துகொண்டான். நீ விடமாட்ட போலிருக்கே என்று சொன்னதற்கு ஒனக்காக வேணா..இந்த வருசம் எழுதாம இருக்கட்டுமா? என்றான். அடுத்தவர்க்கு எதையும் விட்டுத்தர துணிவது அவனுடைய இயல்பு. எங்கு என் பெயரைப் பார்த்தாலும் அவனிமிடருந்து அழைப்பு வரும். சமீபத்திய விகடன் கவிதையை குறித்தும் பகிர்ந்துகொண்டான். ஃபுல் பாஃம்ல இருக்குடா...அசத்து என்றான். பெரும்பாலும் ஒலிபதிவுக் கூடங்களில்தான் எங்கள் சந்திப்புகள் நிகழ்ந்துவந்தன. அவனும் நானும் இணைந்து எழுதிய பல படங்களில் அவனை நானும் என்னை அவனும் ரசித்துக்கொண்டே இருந்தோம். பாரதி..என்ன எழுதினான் என இசையமைப்பாளர்களிடம் நச்சரித்து பாடலை ஒலிக்கக் கேட்டு, கேட்டேண்டா...நல்லா எழுதியிருக்க... என்று சொல்வான். 

அவன் என்னை எங்கேயும் போட்டியாளனாக கருதவே இல்லை. அவனை போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பதால் நான் ஜெயிப்பதற்கான வாய்ப்புகளை அவன் ஏற்படுத்த எண்ணினான். என்னையும் ஒரு தம்பியாகவே வரித்துக்கொண்டான். ஆதவனுக்கு ( முத்துக்குமார் மகன் ) ஊதா கலரு ரிப்பன் ரொம்ப புடிச்சிருக்குடா என்று கைபேசியைக் கொடுத்து பேச வைத்தான். வெள்ள பாதிப்புக்காக சன் டிவி, என்னையும் அவனையும் இணைந்து ஒரு பாடல் எழுதக் கேட்டபோது ஆதவனையும் அழைத்துவந்து, இவன் தான்டா உன் மாமன் என்று கட்டித்தழுவினான். திரைப்பாடல் வரலாற்றில் அவன் பெயர் அழிக்க முடியாத இடத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. 

ஆழமாகவும் வேகமாகவும் அவன் எழுதும் அழகை அருகிருந்து பார்க்கையில் வாசிப்பு ஒரு படைப்பாளனை எவ்வளவு நேர்த்தியாக்கும் என அறிய முடியும். பறவைகள் மீது அவனுக்கு தீராதக் காதல். பறந்துகொண்டே இருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. பழசான மிதிவண்டியில் தொடங்கி உலகத்திலுள்ள பல விமானங்களில் அவன் பறந்திருக்கிறான். ஒரு பறவைக்கு நிகரான சிறகுகள் தனக்கும் கிடைக்க வேண்டும் என அவன் விரும்பியது, இவ்வளவு சீக்கிரம் பறந்துபோகத்தான என நினைக்கையில் அழாமல் இருக்க முடியவில்லை. பட்டாம் பூச்சிகளை விற்கத் தொடங்கியவன் கடைசியில் தானுமொரு பட்டாம்பூச்சியாக மாறிவிட்டதை விதி என்பதா? விருப்பம் என்பதா?

ஏய் முத்து..நீ செய்றது சரியில்லடா என சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆயிரத்து சொச்ச /  அசைவுகளுக்குப் பின் / அடங்கிவிட்டது / பாட்டியின் பாம்படம் என்றொரு கவிதையில் எழுதியிருப்பான். பாட்டியின் பாம்படத்தைப் போலவே தன்னையும் அவன் மரணத்தில் அடங்கிக்கொண்டுவிட்டான். செய்றது சரியில்லடா என்று சொல்லிய என்னை செஞ்சது சரியில்லடா என்று சொல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டான். என்வரையில், முத்துக்குமார் தன் ஆரோக்கியத்தில் அவ்வளவு அக்கறை காட்டுபவனில்லை. விட்டேத்தியான மனமும் அவசரமும் அவனை ஆட்கொண்டிருந்தன. சதா சிந்தனை உளைச்சலுக்குள் அவன் சிக்குண்டிருந்தான். படைப்பு மனம் அவனை துரத்திக்கொண்டே இருந்தது. 

பழசான மிதிவண்டியில் வந்து என்னையும் என் கவிதைகளையும் மரியாதை செய்த ஒருவனுக்கு மின் மயானத்தில் இறுதி மரியாதை செய்ய நேர்ந்த கொடுமையைவிட மரணம் ஒன்னும் அவ்வளவு அவலமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அவனே எழுதியது போல மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு, காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு திசை என்பது இல்லை. அவன் நம்மை தூசியாக்கிவிட்டு காற்றாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்துவிட்டான். அவன் வேடிக்கை காட்டுவதற்கும் பார்ப்பதற்கும் பிரியப்பட்டவன். இப்போதுதான் புரிகிறது அவன் காட்டியதும் பார்த்ததும் வேடிக்கை இல்லையென்று. 

காரியங்களில் அவன் காட்டிய அவசரம் மரணத்திலும் என்னும்போதுதான் அவனை மன்னிக்க முடியவில்லை. இதிலும் அவன் என்னை எங்களை தோற்கடித்துவிட்டான். கடல் தாண்டும் பறவைக்கு கண்டங்கள் எதுவுமில்லை என்று எழுதியவன் வேறு என்ன செய்வான்?

14 / ஆகஸ்ட் / 2016
நள்ளிரவு

யுகபாரதி முகநூல் 

2)

 

அந்த காஞ்சிபுரம் காயத்ரிக்கு தெரியுமா... அவளை உருகி உருகி காதலித்த குமரன் இன்று இல்லையென்று :(

---

பேருந்தில்,
டீக்கடையில் என
பொருள்வாயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
‘காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?’
என் பதில் :
‘பத்து வருடத்திற்கு முந்தைய
டென்த் ஏ க்ளாஸ் ரூம்ல...’

----

காதலித்து கெட்டு போ.
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட, திகட்ட காதலி..

----

தன் தம்பியுடன் வந்து
நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!

 

முகநூல் -யுவகிருஷ்னா பகிர்வு

Link to comment
Share on other sites

3)

 

தேவதையை கண்டேன்  காதலில் விழுந்தேன்...

இப்பாடலை  ந.முத்துக்குமார் எழுதிய அன்று மதியம் கோடம்பாக்கம் ரயிலடி எதிரே இருந்த ஓரு சிறிய வீட்டின் மாடி அறைக்கு வந்தான் தம்பி வீரமணி( இப்போது ஹரி அசொசியேட்)   அறை அது.. அங்கு சிலநாட்கள் தங்கியிருந்த காலம். அந்த அறைக்கு எதிர் அறை தபு சங்கர்.தங்கி இருந்தார் . அபிபுல்லா சாலை அறிவுமதி எனும் கோயிலை ஓட்டி உருவாக்கம் கொண்ட கிளை மடங்கள்.நேரே. அறைக்கு வந்தவன் வாங்க   யுவன் கிட்டருந்து சூப்பர் ட்யூன  வந்துருக்கு  இந்த சந்தோஷத்தை கொண்டாட நல்ல யிரியாணி சாப்பிடஸாம் என  அழைத்தான். இருவரும் பாண்டிபஜாரில் ஓரு புதிதாக திறந்த ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சென்று சாப்பிட்டுவிட்டு நாங்கம்பாக்கம்
லயோலாக்கல்லூரி வந்து அங்கு வளாகத்திலிருந்த சர்ச். முன் ஓரு மரத்தினடியில் அவன் அமர்ந்து எழுத நான்  உண்ட களைப்பில் படுத்துக்கொண்டிருந்தேன். சற்று கண்ணயர்ந்து எழுந்தவுடன் எழுதிய தாள்களை நீட்டினான். நான் படித்துவிட்டு இன்னா முத்து சிம்பிளா இருக்கே வைரமுத்து மாதிரி வார்த்தையில மாஜிக் இல்லையேன்னு கூற அவன் பேப்ளரை  பிடுங்கி இது எளிமயான ஒருஇளைஞனின் அவஸ்தை. மனக்குரல் அதுக்கு மாஜிக்லாம் தேவைப்படாது.பாட்டு ம்யுசிக்கோட கேளுங்க சூப்பரா வரும்னு சொன்னான். அந்த பாட்டுதான் மரணஹிட்டாகி அவனுக்கு மிகப்பெரிய வெற்றிய வாங்கிக்குடுத்தது

 

அஜயன் பாலா- முகநூல் 

 

4)

”முத்துகுமார் உங்களப்பத்தி ஒரு நியூஸ் பார்த்தேன். சீமான் இயக்கும் “வீரநடை” படத்தில் முத்துக்குமார் என்னும் இளங்கவிஞர் பாடல் எழுதுகிறார் என்று வந்திருந்தது” என்றேன் நான்.

“எதில வந்திருக்கு”என்று கண்களில் ஒரு இளைஞனின் ஆர்வத்துடன் கேட்டார்.

“தீக்கதிரின் ஒரு இணைப்பிதழில். நேற்று நூலகத்தில் பார்த்தேன்” என்றேன்.

இது 1998. கவிஞர் அறிவுமதியின் ஹபிபுல்லா சாலை அலுவலகம். அப்போது நான் சென்னைக்கு வந்த ’சிறுவன்’. ஓவியக்கல்லூரி முதலாண்டு மாணவன். அறிவுமதியின் அலுவலகத்திற்கு வரும் நிறைய கனவுப்பறைவைகளில் முத்துக்குமாரும் ஒருவர். முதல் தடவை அவரை பார்க்கும்போது கையில் ஹெப்சிபா ஜேசுதாசனின் “புத்தம் வீடு” வைத்திருந்தார். சினிமா உலகிற்கும் நவீன இலக்கியத்திற்கும் இடைவெளி அதிகம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. 

அடுத்த சில வருடங்களில் அவர் தமிழின் முக்கியமான பாடலாசிரியர் ஆகி இருந்தார்.

“புதுப்பேட்டையில் செல்வராகவன் எனக்கு தரும் சுதந்திரம் பெரிது. ஜென் கவிதைகள் போன்ற வரிகளை பாடல்களில் கொண்டுவந்திருக்கிறேன். ’இருட்டினிலே நீ நடக்கையிலே நிழலும் உன்னை விட்டு பிரிந்து விடும்’ போன்ற வரிகள். எனக்கும் படம் இயக்கவேண்டும் என்றுதான் ஆசை” என்றார். 

இது 2006. கவிஞர் மனுஷ்யபுத்திரனின் அலுவலகம். முத்துகுமாருடைய சில புத்தகங்கள் அந்த வருட துவக்கத்தில் உயிர்மை வெளியீடாக வந்தது. அதற்கான வடிவமைப்பு வேலைகளின் போது தான் இந்த உரையாடல். மனுஷ்யபுத்திரன் உறங்கிய பிறகும் நாங்கள் இருவரும் வேலை செய்து கொண்டிருந்தோம். இரவு இரண்டு மணிக்குத்தான் வேலை முடிந்தது. 

வெளியே கேட் சாவி எங்கே இருக்கிறது என்று தேடியும் கிடைக்கவில்லை.

“பரவாயில்லை சந்தோஷ்” என்றவர் ஒரு நொடியில் கேட்டின் மீது தாவி வெளியே குதித்தார். 

“வறேன் சந்தோஷ்” என்று சிரித்தபடி மங்கலான ஓளியில் ஆட்டோ எடுக்க துள்ளலான நடையுடன் சென்றார்.

ஒரு கல்லூரி இளைஞனின் நடை. 
அது அவரது பாடல்களிலும் இருந்தது.

சந்தோஷத்தை நாராயணன்- முகநூல் 

5)

நா.முத்துக்குமாரின் மரணச் செய்தி என்னை உலுக்கியது.
முத்துக்குமாரை இயக்குனர் அருண்மொழி இயக்க நாங்கள் தயாரித்த ஒரு குறும்படத்தில் உதவி இயக்குனராகச் சந்தித்தபோதே அந்தத் துறுதுறுப்பும், திறமையும் என்னை ஈர்த்தது. பிறகு அழைத்து என்னோடு திரைக்கதை உதவிக்கு வருகிறீர்களா என்று கேட்டேன். உடனே சம்மதித்துச் சேர்ந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பணி புரிந்தபோது ஒரு முறைகூட அவர்மீது சின்ன வருத்தமும் ஏற்பட்டதில்லை. மாறாக மதிப்பும், மரியாதையும் உயர்ந்துதான் வந்தது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி செய்வார். கவிதை எழுதுவார். என் அலுவலகமும் வருவார். என்ன வேலை சொன்னாலும் மிகச் சரி்யாகப் புரிந்துகொண்டு நுட்பத்துடன் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடித்து "அடுத்து?" என்பார். முதலில் அவருக்கு இயக்குனராகும் ஆசை இருந்தது. அறிவுமதி அவர்களுடன் பழகிய பிறகு தன் திசை திரைப் பாடலாசிரியர் என்றுத் தீர்மானித்தார். அதை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தார். அதற்கு முன் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார் அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு அதன் நுட்பங்களைப் புரிந்துகொண்டு ஒரு போர் வீரனைப் போலத்தான் களத்தில் இறங்கினார்.
இவர் எழுதிய தூர் என்கிற அற்புதமான கவிதையைப் பற்றி ஒரு விழாவில் சுஜாதா பாராட்டிப் பேசி.. இவரை மேடையேற்றி கெள்ரவிக்க.. அனைவரின் கவனமும் இவர் பக்கம் திரும்பியது. அடுத்து பாலு மகேந்திரா இவரின் திற்மைகளை மிகச் சரியாக அடையாளம் கண்டார். இயக்குனர் சீமான் முதல் வாய்ப்பு தந்தார். அதைப் பிடித்துக்கொண்டு சரசரவென்று ஏணியில் ஏறத் துவங்கினார். சாதனைக்கு மேல் சாதனையாகச் செய்யத் துவங்கினார்.
முத்துக்குமாருக்கு அதிர்ந்து பேசத் தெரியாது.அன்பா்ல் மட்டுமே பேசத் தெரியும். அதிகமாக புன்னகைக்கவும் தெரியாது. எழுத்தால் மற்றவர்களைப் புன்னகைக்க வைக்கத் தெரியும். சதா சிந்தனையிலேயே இருப்பார். பேசினால் திருக்குறள் மாதிரி இரண்டே வரிகளில் முடித்துக் கொள்வார். தன் வளர்ச்சிக்குக் காரணமான எவரையும் என்றைக்கும் நன்றியுடன் நினைத்துப் பார்த்த பண்பாளர். தன் தந்தை மீது அலாதி பிரியம் அவருக்கு உண்டு. காஞ்சிபுரத்தில் பத்தாயிரம் புத்தகங்களுக்கு மேல் கொண்ட அப்பாவின் சொந்த லைப்ரரி பற்றி அடிக்கடி பெருமிதமாகப் பேசுவார். அந்தப் புத்தகங்கள்தான் தன்னை நல்ல வாசகனாகவும், படைப்பாளியாகவும் உருவாக்கியது என்பார்.
சமீபத்தில் கல்கி இதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பேச இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவரால் வர இயலவில்லை என்று விழாவில் அறிவித்தபோதே திக்கென்றது. உயிரையேக் குடிக்கும் அளவிற்கான உடல்நலக் குறைவு என்று எனக்கு உறைக்கவில்லை. உண்ர்ந்திருந்தால் அவரை உயிருடன் ஒருமுறைச் சந்தித்திருக்கலாம். யார்தான் இந்த அவசர முடிவை எதிர்பார்க்க முடியும?
என்ன இத்தனை அவசரம் முத்துக்குமார்? 41 வ்யதுதானே உனக்கு?. இத்தனை சீக்கிரம் விடைபெறத்தான் மிகக் குறுகிய காலத்தில் இரவு பகலாக உழைத்து 2000 பாடல்களுக்கு மேல் எழுதினாயா? அதனால்தான் அவசர அவசரமாக இரண்டு தேசிய விருதுகள் பெற்றாயா? அதனால்தான் இத்தனைக் கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டாயா? அதனால்தான் கடந்த பல வருடங்களாக மிக அதிகமான பாடல்களை எழுதியவர் என்கிற சாதனையிலிருந்து இறங்காமலிருந்தாயா? ( 2012 ல் மட்டும் 103 பாடல்கள்)
இயற்கைக்கு ஏன் தமிழ் மீது கோபமோ தெரியவில்லை. பாரதியாருக்கும் நீண்ட ஆயுள் தரவில்லை. தமிழை அழகழகாக வார்த்தெடுத்துப் பாடல்களாகத் தந்த உனக்கும் அப்படியே நிகழ்ந்து விட்டது. ஆனால் உன் முத்திரைப் படைப்புகள் மூலம் நீ வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாய் முத்துக்குமார். இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வாய்.

 

பட்டுக்கோட்டை பிரபாகர்-முகநூல் 

 

 

 

Link to comment
Share on other sites

படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க..?

ஐந்தாம் வகுப்பு 
-----------------------------
'அ' பிரிவு   
-----------------   

மழை பெய்யா நாட்களிலும் 
மஞ்சள் குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ் 
வகுப்பின் முதல் நாளன்று 
முன்பொரு முறை 
எங்களிடம் கேட்டார் 
"படிச்சு முடிச்சதும் 
என்ன ஆகப் போறங்க?"
_______

முதல் பெஞ்சை 
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும் 
"டாக்டர்" என்றார்கள் 
கோரஸாக 

இன்று 

கல்யாணம் முடிந்து 
குழந்தைகள் பெற்று 
ரேஷன் கடை 
வரிசையில் 
கவிதாவையும்;

கூந்தலில் செருகிய 
சீப்புடன் 
குழந்தைகளை 
பள்ளிக்கு வழியனுப்பும் 
வனிதாவையும் 
எப்போதாவது 
பார்க்க நேர்கிறது.
________

"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"
என்ற எல்.சுரேஷ்குமார் 
பாதியில் கோட்டடித்து 
பட்டுத் தறி 
நெய்யப் போய்விட்டான்.
_______

"எங்க அப்பாவுடைய 
இரும்புக் கடையைப் 
பாத்துப்பேன்"
கடைசி பென்ச் 
சி.என்.ராஜேஷ் 
சொன்னபோது 
எல்லோரும் சிரித்தார்கள்.

இன்றவன்
நியூஜெர்சியில் 
மருத்துவராகப் 
பணியாற்றிக்கொண்டே 
நுண் உயிரியலை 
ஆராய்கிறான்.
_______

"பிளைட்  ஓட்டுவேன்"
என்று சொல்லி 
ஆச்சரியங்களில் 
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு
டி.ன்.பி.ஸ்.சி. எழுதி 
கடைநிலை 
ஊழியனானான்.
________

"அணுசக்தி 
விஞ்ஞானியாவேன்"
என்ற நான் 
திரைப் பாடல்கள் 
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
________

வாழ்க்கையின் காற்று 
எல்லாரையும் 
திசை மாற்றிப் போட,

"வாத்தியாராவேன்"
என்று சொன்ன 
குண்டு சுரேஷ் மட்டும் 
நாங்கள் படித்த 
அதே பள்ளியில் 
ஆசிரியராகப் 
பணியாற்றுகிறான்.

"நெனைச்ச வேலையே
செய்யற,
எப்படியிருக்கு மாப்ளே?"
என்றேன்.

சாக்பீஸ் துகள் 
படிந்த விரல்களால் 
என் கையைப் 
பிடித்துக் கொண்டு 
"படிச்சு முடிச்சதும் 
என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும் 
என் மாணவர்களிடம் 
நான் கேட்பதே இல்லை! "
என்றான்.

- நா.முத்துக்குமார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன் தொடர்ந்தும் முத்துக்குமார் சம்மந்தப்பட்ட பதிவுக்ளை தொடர்ந்தும் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

அவனை அனுப்பிட்டு மயானத்துல இருந்து கிளம்பிட்டேன். சாவு வீட்ல நாலு பேர் முன்னாடி அழுக கூடாதுன்னு  போகும் போதே அழுது முடிச்சுட்டு கிளம்புனேன். உள்ள நுழையும் போது அண்ணன் சீமான் உக்காந்து இருந்தார். என்னைப் பார்த்ததும் அவரை அறியாம எந்திருச்சாரு. இருவரும் சம நேரத்தில் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வெடித்து அழத் துவங்கினோம்.  அருகில் இருந்த அண்ணன் நக்கீரன் கோபால் எங்கள் இருவரையும் பிரித்து சமாதானம் செய்ய துவங்கினார். சட்டென்று நகர்ந்து தம்பி நாகா பக்கம் வந்துவிட்டேன்.  

சிறிது நேரம் கழித்து 'நாம் தமிழர்' கட்சி டீ ஷர்ட் அணிந்த இளைஞர்கள் இருவர் என் அருகில் வந்தனர். "சீமான் அண்ணனுக்கு நீங்க ரொம்ப நெருக்கமா சார்?" என்றனர். "எனக்கு அவரை தெரியும்ங்க..அவ்வளவுதான்" என்றேன். " இல்லீங்க.. வந்ததில் இருந்து இறுக்கமா இருந்தாரு..உங்களைப் பார்த்ததும்தான் கட்டி பிடிச்சு அழுதாரு..அதான் கேக்குறோம்" என்றார்கள்.  என்னத்த சொல்ல!!! 

அண்ணன் சீமானை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவன் அவன்தான். முதுகலை படித்துக்கொண்டு இருந்தோம். வாரா வாரம் ஞாயிறு அன்று அண்ணன் சீமானின் தசரதபுரம் ரூமிற்கு செல்வோம். "போய் சிக்கன் வாங்கிட்டு வாங்கடா.. மட்டன் வாங்கிட்டு வாங்கடா" என காசு குடுத்து அனுப்பி தன் கையால் சமைத்தும் போடுவார் அண்ணன் சீமான். லலிதா ஜீவல்லர்ஸ் வழங்கும் அப்துல் ஹமீதின் பாட்டுக்கு பாட்டு துவங்கி விசுவின் அரட்டை அரங்கம் தொடர்ந்து மதியம் படத்தை பார்க்கத் துவங்கும் நேரத்தில் சாப்பாடு போட்டு எங்களை தூங்கவும் வைத்து விடுவார் அண்ணன் சீமான். மாலை எழுந்து அவரோடு வாலிபால் விளையாடி இரவு எங்கள் அறைக்கு திரும்பினால் அந்த வார இறுதி முடியும். அவனும் முடிந்துவிட்டான்.

அப்துல்லா- முகநூல் 

 

 

அன்புள்ள முத்துக்குமாருக்கு

அரசி எழுதிக்கொள்வது................... கடித மரபுப்படி
நான் இங்கு நலம் நீ அங்கு  நலமா? என்று தான் எழுத வேண்டும். ஆனால் கண்கள் ஓர் நீர்த்தேக்கமாய் மாற சட்டென்று நீ அங்கு நலமா என்ற வார்த்தை கடிதத்தின் முனை ஒன்றில் மரிக்கிறது.

வாழ்வதற்கு நூறு காரணங்கள் இருப்பது போல் நீ சாகவோர் காரணம் தேவைப்பட்டிருக்கிறது. சர்வ நிச்சய மரணம் உன்னை இன்னும் சில காலம் விட்டுச்சென்றிருக்கலாம். லாம் தான் ஆனால் ஏனோ லை என்றாகி விட்டது விதியின் வழி.

உன்னிடம் சொல்லவும் கேட்கவும் ஏதுமில்லாத ஒரு சராசரி ரசிகை நான். நீ எழுதுவாய் அது பாடலாகும் கவிதையாகும் நாங்கள் கேட்போம் ருசிப்போம் சிலாகிப்போம் அனுபவிப்போம் எங்கள் காதலுக்கு அதை துணையாக்கி கொள்வோம். காதல் ஒன்றென்னை அணுகாத காலத்தே நீ எழுதிய நினைத்து நினைத்து பார்த்தால் பாடல் எனக்கு மிகவும் பிடித்து போனது அதில்

 // உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில்// 
என்ற  வரி. அது ஏன் எனக்கு பிடிக்கும் தெரியுமா? 

உள்ளங்கையின் சூடென்பது கர்ப்பப் பையின் இளஞ்சூட்டின் வெம்மை கொண்டது. அது ஒரு இதம் அது ஒரு தணிப்பு அதுவொரு தவிப்பு  அது ஒரு தகிப்பு. உணர முடிந்த எதையும் சொல்ல முடியாததொரு காலத்தில் அப்போதிருந்தேன் நான்.

அப்போது தான் நீ அதை இப்படி சொல் இனி உன் ஆசையை என்று வரிகள் கூட்டி வாகாய் பாடலாய் தந்தாய். விரல்களின் கோர்ப்பென்பதும் அதோர் வரமென்பதும் என்னைப் போலவே உனக்கும் தெரிந்தும் தேவையாய் இருந்தும் இருக்கிறது போல.

இப்போது நீ என்ன செய்து கொண்டிருப்பாய் என்ற முட்டாள் தனமான கேள்வியின் போது 
இந்த முட்டாளின் பதில் உன் மரணம் முன் கூட்டியே தெரிந்திருந்தால் சொல்லி இருந்தால் என்னிடம் நிறைய டைரி இருக்கு கொடுத்தனுப்பி இருப்பேன் அங்கு எழுத... என எண்ணும் இந்த வஞ்சகியை எல்லாருக்கும் திட்டத் தோன்றினாலும் நானென்ன செய்வேன் முத்துக்குமார். உன் பாட்டுக்கு உயிரோர் பொருட்டில்லை என்று நீ போய் விட்டாய். நானொன்றும் உனக்காக இரவும் பகலும் மூக்கை சிந்தி முக்காடிட்டு அழுதுக்கொண்டிருக்கவில்லை. ஆனாலும் நீயோர் காயமேற்படுத்திவிட்டாய். உன் பாடல்களில் கண்ணீர் மல்கி என் காயமாற்றும் மருந்தை நீ எனக்கு கொடுத்து பழக்கி விட்டிருந்தாய்.

பால் கொடி மாற பச்சிளங்குழந்தைக்கு தாயின் மரணம் எப்படி எங்கே தெரியவரப்போகிறது சொன்னாலும் புரியவா போகிறது அப்படி தான் இனி தேற்ற ஆயிரம் முத்தண்ணாக்கள் வந்தாலும் உன் போல் என் கண்ணீர் மணிகளை கோர்க்கும் வித்தகனுக்கு நானெங்கு போவேன் முத்துக்குமாரா.

காலம் அவசரப்பட்டதா காலன் அவசரப்பட்டானா என என்ன பட்டி மன்றம் நடத்தி பார்த்த போதும் எதிலும் நீயற்ற தீர்ப்பே எழுதப்படுகிறது, இங்கு எப்பக்கம் சென்றாலும் உன் பாடல் வரிகளை எழுதி சிலாகித்து உச் கொட்டியும் வலியை உணர்த்தி கொண்டிக்கிறார்கள். சத்தியமாக முத்துக்குமாரா அவ்வரிகளை என்னால் வாசிக்க கூட முடியவில்லை நீயில்லை நீயில்லை நீயில்லை என்ற எண்ணம் மேலோங்க 

உன் வசப்பட்டிருந்த இலக்கியம் எத்தனை வாஞ்சைகளை தர காத்திருந்ததோ என்றெண்ணி பார்க்கிறேன். வெள்ளை தாள்களிலெல்லாம் நீ வார்த்தைகளாய் நிறைந்து வழிகிறாய். ஆனால் வாசிக்க தான் அதற்கோர் மொழி அங்கு தென்படவில்லை. 

எத்தனை பேரின் மெளனங்களை நீ பேச வைத்திருக்கிறாய் தெரியுமா? எத்தனை ஆதூரமாய் அவை வாய்த்திருந்தது தெரியுமா உனக்கு. வேகமாய் நடக்கத் தெரியாத சத்தமாய் பேசத் தெரியாத கதறி அழத் தெரியாத விழுந்தால் சட்டென்று எழத் தெரியாத ஓர் மழலையாய் உன்னை இப்போது உணர்கிறேன். 

எத்தனை உணர்த்தி இருக்கிறாய் நீ எத்தனை விழிக்கச் செய்திருக்கிறாய் நீ அத்தனை அப்படியே காற்றில் உலர்ந்த துணி போல் இன்னும் கயிற்றில் ஆடிக்கொண்டிருக்க ஆடிக்காற்றுன்னை அள்ளிக்கொண்டு போயிருக்க கூடாது முத்துக்குமாரா..

திறமைகளை மண்ணுக்கு தாரை வார்க்க ஏனோ மனம் எப்போதும் ஓப்புவதில்லை. அதனால் தானோ என்னவோ இப்படி உள்ளுக்குள் தணலாய் மனம் வெந்துக்கொண்டேயிருக்கிறது. ஒரு முறை விதியோ காலமோ பின்னோக்கி சென்றால் இரவு பகல் உன்னை தூங்கவிடாமல் அத்தனை பாடல்கள் கவிதைகள் என எழுதி வாங்கிவிட்டிருப்பேன். என்ன பொன் முட்டை இடும் வாத்தின் கழுத்தறுத்த கதை நினைவுக்கு வருகிறதா? இப்போது நீ செய்து விட்டு போனாயே அதற்கு கூட பெயர் இது தானே முத்துக்குமாரா.

கைக்கட்டிய உன் பணிவில் தான் எத்தனை கவிதைகள் கட்டுண்டு கிடந்தனவோ,  உன் புன்னகையில் தான் சிந்த எத்தனை பாடல்கள் இதழ்கடையோரம் பூத்திருந்தனவோ... போ இரக்கமற்றவனே யார் செய்த சதியோ நீ சாதிக்கும் முன் சதி சாதித்துக் கொண்டது உன்னை.

எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு தந்தாய்  உன் மகனுக்கு முத்துக்குமாரா

நீ எழுதிய கடிதத்தை நாடெல்லாம் தங்கள் மகன்களுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறது கண்ணீர் கரையோடு. அதை அவன் படித்து உணர்ந்து பதில் எழுதும் காலம் வரையேனும் நீ காத்திருந்திருக்கலாம்.

 //போகாதே போகாதே நீயிருந்தால் நானிருப்பேன்//

 என உனக்காக உன் பாடலை பாடி உன்னை போக விடாமல் தடுத்து நிறுத்த தெரியாத அந்த பச்சை மண்ணை விட்டு நீ மாண்டிருக்க கூடாது முத்துக்குமாரா. 

இனியொரு முறை பிறந்து விடாதே முத்துக்குமாரா அப்படியே பிறந்தாலும் முத்துக்குமாராய் மட்டும் பிறந்து விடாதே முத்துக்குமாரா.. உன் பாடல்கள் உயிர் வதை செய்துக்கொண்டிருக்கிறது முத்துக்குமாரா.. உன் நினைவாய் விட்டுச்சென்ற அவை ஆறா காயமாய் மட்டுமே என் கண்களில் இசைக்கிறது இப்போதெல்லாம். இனியொரு முறை பிறக்காதே முத்துக்குமாரா, அப்படியே பிறந்தாலும் நான் சென்று சேர்ந்த சேதி அறிந்த பின்னே நீ பிறக்க வா இப்பூமிக்கு முத்துக்குமாரா

//பேசிப்போன வார்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
பார்த்துப்போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
தொடர்ந்துவந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்துபோகும்
திருட்டுப்போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறோம் // .................... இப்படிக்கு நான்

பதிலற்ற கடிதங்கள் தூரம் தெரியாத வாழ்க்கையின் வாதையை விட கொடுமை தெரியும் தானே முத்துக்குமாரா.. :(

 

தமிழ் அரசி-முகநூல்

On 8/22/2016 at 3:23 AM, ரதி said:

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன் தொடர்ந்தும் முத்துக்குமார் சம்மந்தப்பட்ட பதிவுக்ளை தொடர்ந்தும் இணையுங்கள்.

நன்றி அக்கா  வருகைக்கு :)

Link to comment
Share on other sites

இனிய உதயம் இதழுக்காக எழுதியது.///////நா.முத்துக்குமாருக்கு நினைவாஞ்சலி///////
கவிதையின் பெருங்காட்டிற்குள் தொலைந்து போன மாயமான்/////////
1997 வாக்கில் நான் ஜீன்ஸ் திரைப்படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்து கொண்டிருந்த நேரம் அப்போது பெப்ஸி என்ற திரைப்பட அமைப்பை உடைந்து தமிழ் திரைப்படப்படைப்பாளிகள் சங்கம் உருவானது. சங்கத்தின் முதல் கூட்டத்தில் பேச வந்த இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் தூர் என்ற கவிதையை மேடையில் வாசித்தார்.கவிதையை எழுதியவர் தன் உதவியாளர் கவிஞர் நா.முத்துக்குமார் என்று சொன்னார்.கவிதையின் கடைசி வரை என்னை ஏதோ செய்தது.அதன்பிறகு அந்த கூட்டத்தில் பேசப்பட்ட எந்த விசயமும் என்று மண்டையில் ஏற மறுத்தது.அந்த கவிதையின் வரிகள் மீண்டும் மீண்டும் அந்தநாள் முழுக்க மூளையில் ஓடியவண்ணம் இருந்தது. நாமும் கவிதை எழுத துவங்கவேண்டும் என்ற பரபரப்பை மனதில் உருவாக்கியது. அதன் பிறகு அதை மறந்தே போனேன்.
2002ம் ஆண்டு கவிதாலயா நிறுவனத்தில் ஆல்பம் படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளராக ஆக்கினேன்,கவிதாலயா அலுவலகத்தில் வைத்து நா முத்துக்குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஒடிசலான தேகம் நட்பான முகம் நீண்ட நேரம் நான் அவரின் கவிதைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.என் திரைப்படத்தின் கதையை கூறி விட்டு பாடலின் சூழ்நிலையை சொன்னேன்.காதலன் காதலி இருவரும் தங்கள் குடும்பத்துடன் இரயில் பயணிக்கிறார்கள் எதிர் எதிர் அப்பர் பெர்த்களில் காதலனும் காதலியும் படுத்துக்கொண்டிருக்கின்றனர்,காதலன் பார்க்கிறாள் காதலி பார்க்கிறாள் இருவரும் பார்த்தவண்ணம் இருக்கிறார்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே காதல் பூக்கிறது என்று சொன்னேன்.உடனே முத்துக்குமார் சொன்னான் 
எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக 
நான்கு கண்களும் சண்டைகள் போட 
நாபிக்கமலத்தில் நண்டுகள் ஊற 
பார்வையில் காதல் பூக்கள் பறித்தாள் பறித்தாள் பறித்தாளே 
என்று சொன்னான் 
உடனே அதிர்ந்து போனேன் 
நாம் சொன்ன சாதாரண காதல்காட்சி 
இலக்கியத்தின் உச்சத்தில் இருக்கிறதே என்று.
அன்று முழுக்க உட்கார்ந்து சரணங்களையும் எழுதி கொடுத்தான் அத்தனையும் கவிதை. இலக்கிய வரிகள்.
கட்டி அணைத்து கொண்டேன்.ஒரு ஜநூறு ரூபாய் நோட்டில் இலக்கியத்தரமான பாடலுக்கு பரிசாக அன்புடன் என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்தேன்.உலகத்தரமான கவிஞனை கண்டடைந்து விட்டோம் என்று மனது அரட்டிக்கொண்டே இருந்தது.
பல இரவுகள் கவிதாலயா அலுவலக வாசலில் இருவரும் சேர் போட்டு அமர்ந்து ஆல்பம் படத்தின் மற்ற பாடல்களையும் எழுதினோம் அப்போது ஒரு ஓட்டை டிவிஎஸ் 50 வாகனத்தில் வருவான் முத்துக்குமார்,இருவர் மனதிற்குள்ளும் சிநேகம் தொற்றிக்கொண்டது.ஆல்பம் தோல்வியடைந்தது. முத்துக்குமாருக்கு தொடர்ந்து வெற்றி பாடல்கள் வந்து குவிந்தன.நான் படம் இல்லாமல் வீட்டிலிருக்கும் போது அடிக்கடி என் பேச்சுலர் அறைக்கு வந்து இலக்கியம் சினிமா இப்படி பேசி கொண்டிருப்பான்.உப்புக்கறி சமைத்து சாப்பிடுவோம்,பலமுறை என்னை சென்னையின் பல ஓட்டல்களுக்கு அழைத்து சென்றிருக்கிறான்.குற்றால இலக்கிய அமர்வுக்கு அழைத்து சென்று நான் சோர்ந்து இருந்த நேரங்களில் ஒரு நண்பனாய் என்னை தேற்றி கொண்டே இருப்பான்.2005ம் ஆண்டு எனக்கு வெயில் படம் கிடைத்தது உடனே அவனுக்கு போன் செய்து பகிர்ந்து கொண்டேன்.அவ்வளவு ஆனந்தம் அடைந்தான்.முழு கதையையும் சொன்னேன். கட்டிப்பிடித்துகொண்டான்/ வாழ்க்கைன்னா இதான் தெக்கத்தி ஜனங்களின் வாழ்க்கை.அப்படியே வந்திருக்குன்னா இந்த கதைல. இந்த படம் உங்களை பல உயரங்களுக்கு இட்டு செல்லும் என்று ஆருடம் கூறினான்.

முதல் பட தோல்விக்கு பிறகு எனக்கு ஒரு தெளிவு பிறந்து இருந்தது.
மாற்று சினிமா முயற்சியில் தான் இந்த படம் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.அதை முத்துக்குமாரிடம் கூறினேன்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் கதை சொல்லும் பாடல்களாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.துருத்தி கொண்டு தனிப்பாடல்களாக தெரியக்கூடாது என்பதை முத்துக்குமாரிடம் விளக்கினேன்,முத்துக்குமாருக்கு பல வெற்றி பாடல்கள் அமைந்த பின்பும் அவன் ஆழமாக நம்பியது யதார்த்தமான படங்களில் வரும் மெலடி பாடல்கள் தான் என்பதில் அவனும் முடிவாக இருந்தான்.மெலடி பாடல்கள் தான் தனக்கான இடத்தை இந்த திரையுலகில் தனக்கு பெற்று தரும் என்பதிலும் தெளிவாக இருந்தான்.மெலடி பாடல்கள் சாகாவரம் பெற்றவை அந்த வகை பாடல்களை எழுதுவதில் உள்ள பேரானந்தத்தை பற்றி இரவெல்லாம் நாங்கள் இருவரும் பேசியவண்ணம் இருப்போம்.அழகி திரைப்படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா பாடலையும் அவதாரம் படத்தில் வரும் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்ற இரண்டு பாடல்களையும் அவ்வளவு சிலாகித்து பேசுவான்,இப்படி ஒருபாட்டு எழுதிட்டா போதும்ண்ணா நான் சினிமாவை விட்டே விலகிருவேன் என்று கூறியபடியே இருப்பான்

வெயில் படத்தில் வரும் குழந்தைகள் பாடல்கள் பற்றி இருவரும் பலமணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.உலகம் முழுக்க மழையை கொண்டாடி பாடல்கள் வந்துள்ளது வெயிலை கொண்டாடி பாடல்கள் வரவில்லை,எங்களுர் வெயிலூர் வெயிலுகுந்தாப்பட்டிணம் வெயிலுகந்தம்மன் கோவில் உள்ளது.எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய வெயிலை கொண்டு வாருங்கள் சிறுகதை தொகுப்பை பற்றி பேசினோம்.
எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நெருங்குருதி நாவலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் இரவெல்லாம். இந்த பாடல் அழகி படத்தில் வரும் சிறுவர்பாடலையும் ஆட்டோகிராப் படத்தில் வரும் சிறுவர் பாடலையும் தாண்டி வெற்றியடைய வேண்டும் அதில் சொல்லாத விசயங்களை இந்த பாடலில் சொல்லவேண்டும் அத்தோடு  அதற்குள் இலக்கியத்தரமும் வரவேண்டும் வெற்றியும் வேண்டும் என்று கூறினேன்.பல்லவி என்ன‘ வேண்டும் என்று கேட்டான் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது,அதை சொன்னேன் வெயிலிலே பிறந்து வெயிலிலே வளர்ந்து வெயிலிலே வெந்து வெயிலிலே கருகி வெயிலிலே கருவாடாய் செத்து போனவர்களே என்று வரவேண்டும் என்று திருப்பி திருப்பி வெயில். வெயில் தான் வாழ்க்கை என் ஜனனமும் மரணமும் வெயிலிலே நிகழ வேண்டும் என்று கூறினேன்.உடனே முத்துக்குமார் எழுதினான்
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி 
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே 
நண்டுறும் நரியூறும் கருவேலங்காட்டோரோரம் 
தட்டானாய் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
பசிவந்தா குருவிமுட்ட
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தட்டை
புழுதி தான் நம்ம சட்டை
வெயிலத்தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
தொப்பிள் கொடிய போல தான் இந்த ஊர உணர்ந்தோம்
என் பால்யத்தையும் அவனுடைய பால்யத்தை ஒன்றாக கரைந்து இந்த பாடல் வரிகளில் ஊற்றி தந்தான்.
புழுதி தான் நம்ம சட்ட தெக்கத்தி மனிதர்களின் ஆன்மாவே புழுதி தான் அதுதான் அந்த ஜனங்களின் அடையாளம்.அழுத்தமாக கைகுலுங்கினேன்.
இந்த பாடலுக்கு அவனுக்கு முதல் பிலிம் பேர் விருது கிடைத்தது.

உருகுதே மருகுதே பாடலில் ஒரு வரி வரும்
சாமி பாத்து கும்பிடும் போதும நீ தானே நெஞ்சில் இருக்க
ஊர விட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னால தான் வாழுறேன்
கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா
உதிரம்முழுக்க உனக்கே தான்னு எழுதி கொடுக்கவா
படத்தின் கதையை அப்படியே சொல்லி செல்கிற பாடல் வரிகள்.

பசுபதி தோற்று போய் ஊருக்கு வந்து விவாகரத்தான தன் பழைய காதலியுடன் ஒரு நட்பு பூக்கிறது புது உறவு புது மகிழ்ச்சி இந்த இடத்திற்கு ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று படப்பிடிப்பு இடைவெளியில் எனக்கு தோன்றியது.முத்துக்குமாரை அழைத்து தொலைபேசியில் கூறினேன்.ஐந்து நிமிட இடைவெளியில் என்னை மீண்டும் அழைந்து இந்த பாடல் வரிகளை சொன்னான்.
இறைவனை உணர்கிற தருணம் எது
இங்கே வாழும் நிமிடம் அது
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்ததை விதி வந்து இணைக்கின்றது
முகவரி மாறிய கடிதம் ஒன்று மறுபடி இங்கே வருகின்றது
மழழைக்காலம் கண்முன் வந்து மயிலிறகாய் அசைகின்றது

எத்தனை உன்னதமான பாடல். கதாசிரியன் இயக்குனர் சொல்ல முடியாத விசயங்களை வார்த்தைகளில் வடித்து வைத்திருந்தான்.பாடல் வரிகளை படித்து முடித்துவிட்டு ஐ லவ்யு முத்து என்று sms அனுப்பினேன்.

வெயில் வெற்றியடைந்த போது என்னை விட அவன் அதை அதிகமாக கொண்டாடினான் தன் வெற்றியாக நினைத்தான்.போகிற இடங்களில் எல்லாம் வெயில் படத்தை பற்றி பேசினான்.
அங்காடித்தெரு திரைப்படத்தில் வரும்   
அவள் அப்படியொன்றும் அழகில்லை 
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எனக்கு எதுவுமில்லை என்று எழுதினான்.
எத்தனை கவித்துவமான இயல்பான எண்ணம்.
மாநிறமான கருப்பான களையான அத்தனை இந்திய பெண்களுக்கும் அந்த பாடல் சமர்ப்பணம்.

கதைகளை பேசும் விழியருகே 
உன் பேரை சொல்லும் போதே பாடல் 
இது எல்லாவற்றையும் விட வறுமையின் வலியை சொல்கிற பாடல் 
புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழியில்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த பிழையில்லையா
பசி தான் மிக பெரும் மிருகம் அதை அடக்கிடவழிகள் இங்கில்லையா

இப்படி சொல்லிக்கொண்டே போக எத்தனையோ வரிகள் பாடல்கள் உள்ளது.
எளிய மனிதர்கள் தான் தங்களின் உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க தெரியாமல் தவிப்பார்கள் அவர்களின் குரலாக தன் பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்று முத்து விரும்பினான்.

வைரமுத்துவும் வாலியும் கோலோச்சிய திரையுலகில் உள்ளே நுழைந்து தனி சாம்ராஜ்யம் அமைத்தான்.திரையுலக பாடல்கள் உலகை நா.முத்துக்குமாரின் காலம் என்று கடந்த 15 வருடங்களை குறிப்பிடலாம்.கவிதையின் பெருங்காட்டில் தொலைந்த போன மாயமான் அவன்.அவன் இறக்கவில்லை அவன் எழுதிய பாடல்களுக்குள் அவன் வாழ்கிறான்.நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.அவன் நினைவுகளில் இருந்து தப்பமுடியவில்லை எங்கு ஓடினாலும் அவன் ஞாபகம் துரத்துகிறது.திரும்பிய திசையெங்கும் அவன் பாடல் டிவி,பண்பலை என்று ஒலித்து கொண்டே இருக்கிறது.அவன் எழுதிய ஆகச்சிறந்த பாடல் எது என்று என் மனம் இடையெறாது கேட்டு கொண்டே இருந்தது.இந்த உலகத்தை தத்துவம் தான் ஆள்கிறது.இருவேறு தத்துவங்களுக்காகத்தான் பாரதப்போரே நிகழ்ந்திருக்கிறது.அப்படி அவன் எழுதிய தத்துவப்பாடல் புதுப்பேட்டை திரைப்படத்தில் இடம்பெறாத ஒலிப்பதிவான ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது என்ற பாடல் கேட்டுப்பாருங்கள் எனக்கு பிடித்தப்பாடல்.என் நெஞ்சில் அந்த பாடல் ஒலித்து கொண்டே இருக்கிறது.கண்களில் கண்ணீர் கசிகிறது.எத்தனை கோடிக்கண்ணீர் கண்ட பின்பும் இந்த பூமி பூக்கும் என்ற முத்துக்குமார் வரி தான் என்னை அவனுடைய துயரத்தில் என்னை மீண்டெடுத்து ஆற்றுப்படுத்திறது.

 

 

வசந்தபாலன் -முகநூல்

Link to comment
Share on other sites

nakkheerangopal-in-muthukum.jpgmuthukumar.jpg


ம்பி நா. முத்துக்குமாரின் இழப்பு, மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நம்முன் ஒரு வானவில்லாய் ஜாலம் காட்டிவிட்டு, எதிர்பாராத ஒரு ஒற்றைநொடியில் மின்னல்போல் மறைந்துவிட்டார் முத்துக்குமார். அவரை நான் நீண்டகாலமாகப் பார்த்தும், பழகியும், ஒரு சகோதரனாய் அன்புசெலுத்தியும் வந்திருக்கிறேன்.

ஒரு சாமான்ய நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அந்தத் தம்பி, கடும் உழைப்பால் படிப்படியாக முன்னேறி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டவர்
அவரது பாடல்கள் ஒவ்வொரு நொடியிலும் காற்றுவெளி எங்கும் இழைந்துகொண்டே இருக்கிறது.  திரைப்பாடல்கள் மூலம் அவர் எட்டாத உயரத்தை அடைந்தபோதும், தன் தலைமீது கர்வம் ஏற அவர் அனுமதித்ததே இல்லை. தன்னடக்கக் கோட்டினை அவர் தாண்டவே இல்லை. அவரது அந்த எளிமைதான் என்னை மிகவும் கவர்ந்தது.

திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பே, "இனிய உதய'த்திலும், "சிறுகதைக் கதிரி'லும் தன் பங்களிப்பைச் செலுத்தி, எங்களோடு பயணித்தவர் நா. முத்துக்குமார்.  திரைப்படப் பாடல்களால் அவர் புகழ்பெற்று வந்ததை சற்று தள்ளிநின்றே ரசித்தவன் நான். 

படைப்பு மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அவரது எந்தத் திரையுலக முயற்சியிலும், நான் கைகோர்த்துக் கொண்டதில்லை. அதேசமயம், அவரது  திருமண நிகழ்வு உள்ளிட்ட அவர் குடும்பம் சார்ந்த அத்தனை நல்லது கெட்டதுகளிலும், ஒரு மூத்த சகோதரனாய் நான் உரிமையோடு பங்கெடுத்திருக்கிறேன். 

தம்பி நா. முத்துக்குமாரை, நான் படைப்புகள் சார்ந்து கவனம் வைத்துப் பாராட்டத் தொடங் கியது அண்மைக் காலமாகத்தான். ஒரு நாள் அவரெழுதிய பாடல் ஒன்றை நான் கேட்டேன். அது, இயக்குனர்  வசந்தபாலனின் "வெயில்'’ படத்தில் இடம்பெற்ற பாடல்.  

"வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே'

என்று தொடங்கிய அந்தப் பாடலின் வரிகளில் நான் மிகவும் மகிழ்ந்துபோனேன். அந்தப் பாடல் என்னை, வெய்யிலில் ஆடிப்பாடி விளையாடித் திரிந்த எங்கள் கிராமத்தின் பால்ய காலத்துக்கே இழுத்துப்போனது. 

’அட... தம்பி முத்துக்குமார், வாழ்க்கையின் வெக்கையையும் உள்வாங்கிக்கொண்டு சிறப்பாகப் பாட்டெழுதுகிறாரே’ என்று மனதிற்குள் அளவுகடந்த ஆனந்தம் அடைந்தேன். இதன்பின்னர் தம்பி முத்துக்குமாரின் இன்னொரு பாடல் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அந்த அனுபவம் மறக்கமுடியாத அனுபவம்.

மணிப்பூரில் என் மூத்தமகள் பிரபாவதி, படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒருமுறை வந்திருந்தார். இரவு 10.30 மணி இருக்கும்... அவர் என்னை அழைத்து, ‘""அப்பா, முத்துக்குமார் மாமா டைரக்டர் ராம் இயக்கிய "தங்க மீன்கள்' படத்தில் ஒரு பாட்டு எழுதியிருக் காங்க. ரொம்பவும் அருமையான பாட்டுப்பா. கேட்டுப் பாருங் கப்பா''’ என்று மனம்பூரித்துச் சொன்னதோடு, அந்தப் பாடலை நான் கேட்கும்படி செய்தார்.

"ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!'

என, அப்பா- மகளுக்கிடை யிலான உறவுநிலையின் உன்னதத் தைச் சொன்ன அந்தப் பாடலைக் கேட்டு நெகிழ்ந்துபோனேன். அந்தப் பாட்டின் ஒவ்வொரு வரியிலும் அப்பா- மகள் உறவைக் கொண்டாடி யிருப்பார் முத்துக்குமார்.  

மகிழ்ந்துபோன நான், அந்த இரவிலேயே தம்பி முத்துக்குமாரை போனில் அழைத்து, ‘""தம்பி, இந்தப் பாட்டுக்கு உங்களுக்கு தேசியவிருது இருக்கு. குறிச்சி வச்சிக்கங்க தம்பி''’ என்றேன். தூக்கம் கலைந்த அவர் நெகிழ்ச்சியாக, ""நன்றிண்ணே'' என்றார். 

நான் சொன்னதுபோலவே அந்தப் பாடலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வந்த அடுத்த நிமிடமே என்னைத் தொடர்புகொண்டு, ‘""உங்க வாக்கு பலிச்சிடுச்சிங்கண்ணே...  நன்றிங் கண்ணே'' என்று தழுதழுத்தார் முத்துக்குமார்.

அவருக்கு அந்தப் பாடல் கூடுதல் நெகிழ்ச்சியைக் கொடுத்த பாடல். அதற்குக் காரணம், அவருக்குப் பிறந்த ஆனந்த யாழ். 

முத்துக்குமார் குடும்பத்தில் பெண் குழந்தைகள் யாரும் இல்லை. அந்த ஏக்கம் அவரது அப்பாவுக்கு இருந்தது. அதே ஏக்கம் தம்பி முத்துக் குமாருக்கும் இருந்தது. இந்த நிலையில்தான் இரண்டாம் பிரசவத்துக்காக முத்துக்குமாரின் மனைவி ஜீவலட்சுமி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். அவருக்கு சிசேரியன் பிரசவம் நடந்தபோது, முத்துக்குமார் அருகில் இல்லை. பிரசவம் பார்த்த டாக்டர் தமிழ்ச்செல்வி, முத்துக் குமாரின் கல்லூரிப் பேராசிரியர் மா.கி. தசரதன் அவர்களின் மகளாவார்.

பிரசவத்திற்குப் பின், அரைகுறை மயக்கத்தில் இருந்த ஜீவலட்சுமியிடம் டாக்டர் தமிழ்ச்செல்வி, ’""ஜீவா, உனக்கு ஆனந்தயாழ் பிறந்திருக்கிறது'' என்று, பெண்மகவு பிறந்திருப்பதைச் சொன்னார்.

இதை முத்துக்குமாருக்கு போன்மூலம் தெரிவித்த ஜீவலட்சுமி, ""நமக்கு ஆனந்தயாழ் பிறந்திருப்பதாக டாக்டர் சொன்னாங்க'' என்று சொல்ல, தான் எழுதிய ஆனந்தயாழ், தனது மகளுக்கே குறியீட்டுப் பெயராக மாறிவிட்டதை எண்ணி மிகவும் நெகிழ்ந்து பூரித்துப்போனார்.

தனக்கு மகள் பிறந்த செய்தியை என்னிடம் ஏகப்பட்ட சந்தோசத்தோடு அவர் சொன்னவுடன், நானும் என் துணைவியாரும் மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்தோம். 

‘உலகை ஆளவந்த எங்கள் குட்டி இளவரசிக்கு’ என்று, ஒரு வாழ்த்து அட்டையையும் எழுதிக் கொடுத்து வாழ்த்தினோம். அப்போது தம்பி முத்துகுமாரிடம்.... ""பொம்பளைப் பிள்ளை வேற பொறந்துடுச்சி. இனி நீங்க ரொம்பவும் கவனமா இருக்கனும் தம்பி. நீங்க போகவேண்டிய தூரம் இன்னும் இருக்கு. உடம்பைப் பத்திரமாப் பார்த்துக்கங்க'' என்று அறிவுறுத்தியதோடு, சில உறுதிமொழிகளையும் அவரிடம் வாங்கினேன்.

அவர் தவமாய்த் தவமிருந்து பெற்ற ஆனந்தயாழ் மீது, அவர்  நெஞ்சுகொள்ளாப் பேரன்பு கொண்டிருந்தார். எனவேதான் தனது ஆனந்த யாழ் பாடலுக்கு தேசியவிருது என்றதும், அவருக்குப்  பன்மடங்கு பூரிப்பு உண்டானது. 

இதேபோல், "சைவம்' படத்திற்காக தம்பி முத்துக்குமார் எழுதிய ’"அழகே அழகே...' என்ற பாடலை நான் கேட்க நேர்ந்தது. 

’"அழகே அழகே  எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே...'’ 

என்று தொடங்கி... "மழை மட்டுமா அழகு... சுடும் வெயில் கூட ஒரு அழகு'’ என்று அபாரமாக எழுதியிருந்தார்.  இதைக்கேட்டதும் ஒரு குபீர் உற்சாகம் ஏற்பட்டது. உடனே முத்துக்குமாரைத் தொடர்பு கொண்டு... ‘""சுட்டெரிக்கும் வெய்யிலையும் அழகுன்னு சொன்ன ஒரே கவிஞர்  உலகத்திலேயே நீங்களாத்தான் இருக்கும். இந்தப் பாட்டுக்கும் ஒரு தேசியவிருது இருக்கு தம்பி''’ என்று வாழ்த்தினேன். இதுவும் பலித்தது. இதற்கும் பூரிப்போடு நன்றிசொன்னார் முத்துக்குமார்.

தேசியவிருது பற்றிய முத்துக்குமார் குறித்தான என் நம்பிக்கைகள் எல்லாம் முழுதாகப் பலித்துவிட்டது. ஆனால், இன்னும் நீண்டகாலம் இருந்து, முத்துக்குமார் சாதிப்பார் என்று நான் கண்ட கனவு மட்டும் பொய்த்துப்போய்விட்டது. நடந்தது எல்லாம் ஒரு கனவுபோல் இருக்கிறது.

ஜூலை 12. இதுதான் முத்துக்குமாரின் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அவர் என்னைத் தேடிவந்து வாழ்த்து பெற்றுச்செல்வார். இந்த ஜூலை 12-ல் அவர் வரவில்லை. உடனே அவரைத் தொடர்பு கொண்டு, ""தம்பி, எங்கே உங்களைக் காணோம்'' என்றேன்.

""உடம்பு சரியில்லைண்ணே'' என்றார். ""உடம்புக்கு என்ன'' என்றேன். ""டைபாய்டு'' என்றார்.  பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, ‘""உடம்பைப் பார்த்துக்கங்க தம்பி''’ என்று வழக்கம்போல் அறிவு றுத்தினேன். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி (5-8-2016) இரவு ஒரு நம்பரில் இருந்து எனக்குத் தொடர்ந்து ஆறேழு மிஸ்டுகால் வந்தது. பொதுவாக எனக்குத் தெரியாத புதிய எண்கள் என்றால் நான் எடுக்க யோசிப்பேன். அதனால் அந்த அழைப்பை நான் ஏற்கவில்லை.  அடுத்து, அந்த எண்ணிலிருந்து.. "நான் நா. முத்துக்குமார் மனைவி'’ என்று குறுந்தகவல் வந்தது. 

வழக்கமாக முத்துக்குமார்தானே போன் பண்ணு வார். அவர் ஏன் பண்ணவில்லை என்று திகைத்த நான், உடனே அந்த எண்ணுக்குப்போய், ""எங்கம்மா முத்துக்குமார்? அவருக்கு என்னம்மா?'' என்றேன்.

ஜீவலட்சுமியோ உடைந்த குரலில்...’""அவங்க ஆபத்தான கட்டத்துல இருக்காங்க. டாக்டருங்க அவங்க உயிருக்கு ஆபத்துன்னு சொல்றாங்க. மஞ்சள் காமாலை முத்திப்போச்சாம். ஏதோ ரத்தத்தில் பில்ரூபினாமே... அது 23 அளவுக்கு இருக்காம். கல்லீரல் ஒரு பர்சன்ட்தான் வேலைசெய்யுதாம். எனக்கு பயமா இருக்குண்ணே!'' என்றார்.

பதறிப்போன நான், ""தம்பி இப்ப எங்கே?'' என்றேன்.

""அப்பல்லோவில் அட்மிட் பண்ணியிருக்கோம். கல்லீரலை மாத்தணும்ன்னு சொல்றாங்கண்ணே. அவங்களுக்கு வேற ஒருத்தர் கல்லீரலை எடுத்து வைக்கனுமாம்'' என்றார் அழுகையோடு. 

""லிவர் சிரோஸியஸ்னு சொன்னாங்களா?'' என்றேன்.

""ஆமாண்ணே'' என்றார்.

""அவருக்கு கல்லீரலை டொனேட் பண்ணப்போறது யார்?'' என்றேன்.

’""நாந்தாண்ணே. என் கல்லீரலை எடுத்து வைக்கச் சொல்லிட்டேன். சரின்னு டெஸ்ட்டெல்லாம் பண்ணிட்டாங்க'' என்றார். நான் மேலும் திகைத்தேன்.

‘""ஏம்மா, உனக்குக் குழந்தை பிறந்தே 5 மாசம்தானே ஆகுது. தாய்ப்பாலையே அது மறந்திருக்காது. சிசேரியன் வேற பண்ணியிருக்கே. டோட்டலா பார்த்தா நீயோ பாதி நோயாளி. அப்படியிருக்க நீ எப்படி லிவர் டொ னேட் பண்ணமுடியும்?. தம்பி ரமேஷ் எங்க இருக்கார்? அவர்ட்டயும் நான் பேசணும். வேற டோனரைப் பார்க் கலாம். நான் காலைல அப்பல்லோ வர்றேன்'' என்றேன்.

’""அண்ணே, அவங்க அட்மிட் ஆன விசயத்தை  நான்தான் சொன்னேன்னு அவங்ககிட்ட சொல்லிடாதீங்கண்ணே. தனக்கு உடம்பு சரியில்லாத விசயமே யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்றாங்க. அவங்க தம்பி ரமேஷும் என் அண்ணன் பிரசாத்தும்தான், இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. என்ன பண்றதுன்னே தெரியலை'' என்றார் தேம்பலோடு.

மறுநாள் காலை அப்பல்லோ சென்றேன். ஐ.சி.யூ.வில் இருந்த முத்துக்குமாரைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திகைத்தார். ’""அண்ணே, யாரு உங்களுக்கு நான் இங்க இருக்கேன்னு சொன்னது?'' என்றார்.

நானோ, ’ ""டி.வி.எஸ். பிரேக்ஸ் இன்டியாவில் சீனியர் மெடிக்கல் ஆபீஸராக இருக்கும் என் மைத்துனர் டாக்டர் ராஜாராம், இங்கே ஐ.சி.யூ.வுக்கு வந்திருக்கார். அப்பதான், நீங்க அட்மிட் ஆகியிருப்பதை அவர்ட்ட சொல்லியிருக்காங்க. அவர் என் துணைவியாரிடம் இதைச் சொல்ல, அவர் மூலம்தான் தம்பி எனக்குத் தகவல்''’ என்றேன்.

""பயப்படத் தேவையில்லண்ணே. எனக்கு சரியா யிடும்ண்ணே. எனக்கு ஜீவாதான் லிவர் கொடுக்குது. 15 நாள்ல கல்லீரல் மாற்று ஆபரேசன் பண்ணிடலாம்ன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்கண்ணே. 45 லட்ச ரூபா வரை செலவாகுமாம்'' என்றார் அப்போதும் நம்பிக்கையாய்.

’""பணப் பிரச்சினை இருக்கா தம்பி?'' என்றேன்.

""இல்லைண்ணே... வந்தவாசியில் இரண்டு இடம் வாங்கிப் போட்டிருக்கேன். 25 லட்சரூபா வரை போகும். அதை என் நண்பர் ஒருத்தர் வாங்கிக்கிறேன்னு சொல்லியிருக்கார். ஜீவா நகைகள்ல ஒரு 10 லட்சரூபா தேறும். தம்பி, ரமேஷ் கூட, இப்ப ஒன்றரை லட்ச ரூபா எடுத்துக்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கான். மேற்கொண்டு ஆவன ரமேஷ் புரட்டிவிடுவான். பார்த்துக்கலாம்ண்ணே. ஆபரேசனுக்கு பணத்தை ரெடி பண்ணவும், ஆபரேசனைத் தாங்கற அளவுக்கு உடம்பைக் கொஞ்சம் தேத்தவும், ஒருவாரம் வீட்டுக்குப் போய்ட்டு வரலாம்ன்னு இருக்கேண்ணேன். இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகறேன்''’ என்றார்.

இந்த நிலையில், அவர் நேராக வீட்டுக்குப் போவதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது மைத்துனர் பிரசாத், தம்பி ரமேஷ், முத்துக்குமாரின் தாய்மாமா மகன் பரணி மற்றும் அவர் மனைவி ஜீவா ஆகியோருடன் ஆலோசித்தேன். 

மோசமான மஞ்சள்காமாலை நோயாளிகள்கூட, அடையாறு தர்மா கிளினிக்கில் மாற்று மருத்துவம் மூலம் குணமடைந்ததைச் சொல்லி, அவரிடம் ஆலோசனை பெறலாமா? என்று கேட்டேன். எல்லோருக்கும் அது உடன்பாடாக இருந்தது. இதைத்தொடர்ந்து 6-ந் தேதியான அன்று, டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குக் கிளம்பிய முத்துக்குமாரை, கைத்தாங் கலாகக் காரில் ஏற்றி, நேராக அந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். லிவர் தொடர்பான மருத்து, மாத்திரைகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. உணவுக் கட்டுப்பாடு பற்றியும் சொன்னார்கள். மருந்து மாத்திரை களை வாங்கிக்கொண்டு முத்துக்குமார் வீட்டுக்குச் சென்றார்.

அந்த மருத்துவம் முத்துக்குமாருக்கு விரைவாக வேலைசெய்தது. முத்துக்குமாரின் உடல்நிலையை அருகிலிருந்து கவனிக்க, செவிலியர் ஒருவரும்  அமர்த்தப்பட்டார். முத்துக்குமார் எடுத்துக்கொண்ட  மருந்துகளால், அவருக்குப் பசி எடுத்தது. ""இப்போது தான் எனக்கு நாக்கில் ருசியே தெரியுது'' என்றார் முத்துக்குமார். 

வயிற்றின் வீக்கமும், கால்களின் வீக்கமும் வெகு வாகக் குறையத் தொடங்கியது. மோசனும் சிறுநீரும் அவருக்கு இயல்பானது. பாத்ரூமுக்குத் தானாக எழுந்துபோகிற நிலைக்கு வந்துவிட்டார் முத்துக்குமார். தம்பி, கண்டத்திலிருந்து தப்பித்துவிட்டார் என்று நானும், முத்துக்குமரின் தம்பி ரமேஷும், மாப்பிள்ளை பரணியும், மைத்துனர் பிரசாத்தும் மகிழ்ந்தோம். அவர் குடும்பமும் மகிழ்ந்தது.

உடல்நிலை கொஞ்சம் தேறத்தொடங்கியதும், வழக்கம்போல் தன் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் முத்துக்குமார். தொடர்ந்து புத்தகம் படித்திருக்கிறார். டைரக்டர் விஜய் படத்துக்கு பாடல் எழுத, அதற்கான பின்னணிக் கதையைக் கேட்டிருக்கிறார். வி. சேகரின் படத்துக்கும் பாட்டு எழுதியிருக்கிறார். கடைசியாக, சிறுத்தைகள் திருமாவளவனின் பிறந்த நாளைக்கு வாழ்த்துக் கவிதை கேட்டார்கள் என்று, கவிதையும் எழுதியிருக்கிறார். 13-ந் தேதி காலை டைரக்டர் ராமுக்கு போன் செய்து, "என் மனசுக்குள் பாடல் தயாராகி விட்டது. போனிலேயே சொல்லுகிறேன் .எழுதிக்கொள்' என்றும் பேசியிருக்கிறார்.

இந்தத் தகவல்கள் எல்லாம் எனக்குத் தெரிந்ததும், ’""தம்பி, கொஞ்ச நாளைக்கு எழுதுவதையும் படிப்பதையும் நிறுத்துங்க. முழுசா ஓய்வெடுங்க'' என்றேன் கறார் குரலில். அவரோ, ’""வர்ற வாய்ப்பை விட்றக்கூடாதுண்ணே'' என்றார். ’""உடல் முக்கியம். அதை முதல்ல கவனிங்க தம்பி'' என்றேன். 

6-ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதிவரை, அவர் உடல்நிலை, ஏறுமுகமாகவே இருந்தது. 13-ஆம் தேதி இரவு பேசும்போது கூட, ’""நல்ல டெவலப் தெரியு துண்ணே. உடம்பு இப்ப நல்லா இருக்கு''’ என்று, தான் ஆபத்தைத் தாண்டிவிட்டதாக நினைத்துப் பூரித்தார். நானும் இதை நம்பி மகிழ்ந்தேன். அன்று நள்ளிரவில் திடீரென்று முத்துக்குமாருக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டிருக்கிறது. செவிலியரே சமாளித்திருக்கிறார்.

14-ஆம் தேதி காலை விடிந்தது. இயல்பு நிலைக்கு முத்துக்குமார் திரும்பியிருக்கிறார். மருத்துவரிடம் கேட்டு, காலை 8 மணிக்கு முத்துக்குமார், கஞ்சி குடித்திருக்கிறார். காலை 9 மணிக்கு எதிர்பாராத வகையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. 

முத்துக்குமாரின் மனவி ஜீவா, என்னைத் தொடர்புகொண்டு இந்த விவரத்தைச் சொல்ல, வீட்டுக்கே சென்று ஆக்ஸிஜன் கொடுக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொண்டேன். முன்பணம் 10 ஆயிரம் ரூபாய். தினசரி 400 ரூபாய் ஆகும் என்றார்கள். அவர்களை உடனடியாக முத்துக்குமார் வீட்டுக்குச் செல்லும்படி சொல்லிவிட்டு, ஆம்புலன்ஸுக்கு டிரிபிள் எம் மருத்துவமனையை தொடர்புகொள்ள முயன்றேன். சரியான தொடர்புகள் கிடைக்கவில்லை. உடனடியாக பில்ராத் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு, ஆம்புலன்ஸ் ஒன்றை உடனடியாக முத்துக்குமார் வீட்டு முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். பின்னர் நானும்  முத்துக்குமார் வீட்டை நோக்கி விரைந் தேன். நான் முத்துக்குமார் வீட்டுக்குச் சென்றபோது தான், அவருக்கு கடைசிக்கட்ட முதலுதவி முயற்சிகள் நடப்பதைப் பார்த்தேன். நின்றுவிட்ட சுவாசத்தை மீண்டும் ஏற்படுத்த, அவர் நெஞ்சில் தட்டியும், அழுத்தி யும் பல்வேறுவிதமாய் முயன்றுவிட்டு, உதடு பிதுக்கி னார்கள். எனக்கு திக்கென்றது. மனம் நிஜத்தை நம்பமறுத்தது.

15 நிமிடம் முன்னதாக வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றபடி மருத்துவ டீம் நகர்ந்தது. வீட்டை எளிதாய்க் கண்டு பிடிக்கமுடியாமல், ஆக்சிஜன் வாகனமும், ஆம்புலன்ஸும் அரைமணி நேரத்துக்கும் மேலாய் அலைந்ததால்தான் இந்தத் தாமதம். 15 நிமிடங்கள் முன்னதாக இந்த முதலுதவிகள்  முத்துக்குமாருக்கு கிடைத்திருந்தால், அந்தத் தம்பி இன்று நம்மோடு இருந்திருப்பார்.

தம்பி முத்துக்குமார் விடைபெற்றுப் போய்விட்டார்.  எடுத்த முயற்சிகள் எல்லாம் கைமீறிப் போய்விட்டன. அதிர்ச்சியில் அப்படியே அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்துவிட்டேன். உள்ளே முத்துக்குமாரின் மனைவி ஜீவாவின் கதறல் கேட்கத்தொடங்கியது.

அந்த நேரம் பார்த்து, தம்பிகளான நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடனும், தலைமை நிருபர் இளையசெல்வனும், முத்துக் குமாருக்காக "இனிய உதயம்' இதழ்களை எடுத்துக் கொண்டு, பழம் வாங்கிக்கொண்டு அங்கே வந்தனர். ’""முத்துக்குமார் நேத்து போன் பண்ணிக் கூப்பிட்டார்ண்ணே...''’ என்றவர்கள், நிலைமையை உணர்ந்து திகைத்து திகிலடித்து நின்றனர். ""தம்பியைப் போய்ப் பாருங்கள்'' என்று அவர்களை உள்ளே போகச்சொன்னேன். 

முத்துக்குமாரின் மேல் உயிரையே வைத்திருக்கும் அவர் தம்பி ரமேஷுக்கும், அவர் துணைவியார் ஜீவலட்சுமிக்கும் எப்படி ஆறுதல் சொல்வது? அவர்களை  எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் திணறிப்போய் நின்றேன்.

"நெருனல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு'

என்று, என்னதான் வள்ளுவன் வாழ்வின் நிலை யாமை பற்றிச் சொன்னாலும்,  இழப்பின் வலியையும் துயரையும் ஜீரணிக்க முடியவில்லை. 

"கடல்தாண்ட பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை... கலங்காமல் கண்டம் தாண்டுமே...'’ என எங்கள் போராட்டங்களுக்கெல்லாம் உத்வேகம் தரக்கூடிய பாடல் வரிகளைப் படைத்தவர் தம்பி முத்துக்குமார். 

இப்போது, அவர் கொடுத்துவிட்டுப் போயிருக்கும் சோகத்தையும் துயரத்தையும் எப்படித் தாண்டுவது?

-துயரத்துடன்
நக்கீரன்கோபால்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.