Archived

This topic is now archived and is closed to further replies.

யாழ்வினோ

ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு.

Recommended Posts

ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு.

கடந்த ஒரு மாத காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தினால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை சிறிலங்காவின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டால் கருணா குழுவினர் அவரை விடுதலை செய்யலாம் என பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அக் கடிதத்ததை ஏற்றுக்கொண்டதாக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் மகிந்தவினால் வழங்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது அதற்குரிய நேரம் வந்ததால் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எனவே அவர் விரைவில் விடுதலையாவார் என சமரநாயக்கா மேலும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருணா குழுவினரின் அச்சுறுத்தலை அடுத்து ரவீந்திரநாத் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். எனினும் அந்தக் கடிதத்தை மானியங்கள் ஆணைக்குழு ஏற்க மறுத்ததால் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் கொழும்பிலிருந்து செயற்பட்டு வந்தார்.

அதேவேளை, கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் கொழும்பில் கருணா குழுவினரால் அவர் கடத்தப்பட்டார்.

-Puthinam-

Share this post


Link to post
Share on other sites

பேராசிரியர் ரவீந்திரநாத்தின் இராஜினாமாக்கதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவீந்திரிநாத்தின் இராஜினாமாக் கடிதத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது

பேராசிரியர் ரவீந்திரநாத்தின் இராஜினாமாவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டால் அவர் விடுவிக்கப்படுவார் என அவரடைய மனைவி சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கடத்தப்பட்டவரின் குடும்ப அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தாங்கள் பேராசரியர் ரவீந்திரநாத்தின் இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து பேராசிரியர் ரவீந்திரநாத் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

பதிவு.கொம்

Share this post


Link to post
Share on other sites