Jump to content

கறுப்பராய் இருப்பதால் விபச்சாரி? தேனிலவில் நேர்ந்த அவலம்


Recommended Posts

கறுப்பராய் இருப்பதால் விபச்சாரி? தேனிலவில் நேர்ந்த அவலம்

160807154945_brazil_black_woman_monica_l

 திருமணத்தின்போது மோனிகாவும், அவரது கணவரும்

47 வயதான மோனிகா வலேரியா கொன்சால்வஸ் இரண்டு பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு சொந்தக்காரர்.

பிரேசிலியாவில் சட்ட ஆலோசகராக பணிபுரியும் அவர் ஒரு நீதிபதியான கார்லோஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.

ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த அவர், அடிக்கடி விடுமுறையின்போது, பிரேசில் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு.

விலை உயர்ந்த உணவகங்கள் மற்றும் பிரத்தியோக சமூக நிகழ்வுகளுக்கு அடிக்கடி செல்லும் அவர், பிரேசிலின் சிறந்ததொரு சுற்றுப்புறத்தில் வசித்து வருகிறார்.

சுருக்கமாக சொன்னால், ஒரு சதவீத உயர் வகுப்புக்கு பிரேசிலிய சமூகம் அனுபவித்து வருவதற்கு இணையான வாழ்க்கையை பெற்றிருக்கிறவர்.

ஒரேயொரு வித்தியாசம். அவர் கறுப்பு நிறத்தவர். அவ்வளவு தான்.

கறுப்பு பிடித்த கலர் அல்ல

சமூக நிகழ்வுகளுக்கு செல்லும்போது அவர் மட்டும் பெரும்பாலும் கறுப்பு இனத்தவராக இருப்பார்.

குறைந்தது வீட்டுப் வேலையாளாக இல்லாமல் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பவர் இவராகத்தான் இருப்பார்.

இத்தகைய நிகழ்வுகளுக்கு அவருடைய கணவருடன் சென்றால், மோனிகாவை கார்லோஸின் செயலராகத்தான் அனைவரும் எண்ணினர்.

“என்னை பற்றி தெரியாதவர் என்னை பற்றி தவறுதலாக பலவற்றைக் கூறுவர். கல்வி பயிலும் வட்டத்தில் கறுப்பு இனத்தவர் சுத்தம் செய்பவராக, கற்று கொடுப்பவராக அல்லது வரவேற்பாளராக பணிபுரிவதை பார்த்திருக்கிறேன். இதற்கு அப்பாற்பட்டு பணிபுரிபவரை பார்ப்பது அபூர்வம்” என்று மோனிகா விளக்குகிறார்.

கறுப்பராய் இருப்பதால் விபச்சாரி

ஆனால், அவரை மிகவும் கெடூரமாக பாதித்த சம்பவம் 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபோர்டோலிஸாவில் தேனிலவை கழித்தபோது நடைபெற்றது.

“ஒருவர் என்னை தொட்டு அழைத்தார், நான் பயந்து கூச்சலிட்டேன். பின்னர் அவர், ஒரு வெள்ளையருடன் விபச்சாரியாக இருப்பதாக நினைத்து அழைத்தேன் என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

தனிப்பட்ட வருவாய் ஈட்டுகின்ற, சட்டத்தில் பட்டம் பெற்றிருக்கும் என்னை திருமணம் செய்திருக்கும் கணவர் அவர் என்று எண்ணுவதற்கு கூட அந்த நபருக்கு தோன்றவில்லை. அந்த இடத்தில் ஒரு கறுப்பினத்தவர் இருப்பது என்பதற்கு அவருடைய உள்ளத்தளவில் சாத்தியமில்லாத ஒன்று”

 

160807154836_brazil_black_woman_monica_l

 அவர் கலந்து கொள்ளும் சமூக நிகழ்வுகளில் அவர் மட்டுமே கறுப்பராக இருப்பார்

கடந்து வந்த கடினமான பாதை

அவருடைய குடும்பத்தில் மோனிகா மட்டும்தான் கடும் முயற்சியால் சமூகத்தில் முன்னுக்கு வந்தவர். அதற்காக அவர் பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியிருந்தது.

“என்னுடைய வாழ்க்கையில் நான் செய்வதில் எல்லாம் சிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது, என்னுடைய வேலையின் தரத்தாலும், தோலின் நிறத்தாலும் சீர்தூக்கி பார்க்கப்பட்டேன்” என்று கொன்சால்வஸ் அங்கலாய்க்கிறார்.

பணியில், கறுப்பின நீதிபதிகள் இருவரோடு மட்டுமே வழக்கறிஞர் சபையின் தலைவராக இருந்திருக்கிறேன். என்னுடைய அனுபவத்தை கறுப்பின நீதிபதிகள் மட்டுமே ஏற்று கொள்கிறார்கள். ஏன் இவ்வாறு நடைபெறுகிறது” என்று கேள்வி எழுப்புகிறார்.

அவருடைய சமூக தகுநிலை, சில சூழ்நிலைகளில் முன்சார்பு எண்ணங்களை குறைக்கிறது. சில இடங்களில் நல்லவிதமாக நடத்தப்பட்டும் இருக்கிறார்.

ஆனால், பிற இடங்களில் அவருடைய சமூக நிலை, பாகுபாடு காட்டுவதை மிகவும் மோசமாக்குகிறது.

கறுப்பர் பற்றி முன்சார்பு எண்ணம்

“கடையிலுள்ள ஒரு பொருளின் விலையை கேட்டால், என்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல், அது மிகவும் விலை உயர்ந்தது என்று கூறுகின்றபோது அதிக முன்சார்பு எண்ணத்தை அந்த பதிலில் உணர்கிறேன்” என்கிறார்.

“அவர்கள் என்னை பற்றி எண்ணுவதை விட நான் நேர்மாறானவர் என்பதை காட்ட வேண்டும்” என்று உணர்கிறேன் என்கிறார்.

160807155045_brazil_black_woman_monica_l  மோனிகாவும், கார்லோசும் அவர்களுடைய மகள் லெட்டிசியாவோடு, பிரேசிலியாவிலுள்ள ஒரு பணக்கார புறநகரான லாகொ சுல்லில் வாழ்கின்றனர்

என்னவாகும் எதிர்காலம்?

இந்த நாட்களில் எல்லாம் பிரேசிலில் பணக்காரர்கள் நடுவில் வாழ்கின்றவர்களில் ஒருவர் என்றெல்லாம் மோனிகா பெரிதாக எடுத்துகொள்வில்லை. ஆனால் எதிர்காலத்தை பற்றிய கவலை அவரை தொற்றியுள்ளது.

எட்டு வயதுப் பெண் குழந்தையின் தாயாக, மேம்பட்ட சமத்துவ சமூகத்தை பார்க்க அவர் விரும்புகிறார்.

அவருடைய மகள் லெட்டீசியா, ஒரு விதிவிலக்காக அவரை பார்க்கின்ற பாரம்பரியமான, இருமொழி வழி தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.

“அங்கு 200-க்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களில் என்னுடைய குழந்தையும், வீட்டில் வேலை செய்பவர் ஒருவரின் குழந்தையும் என இருவர் மட்டுமே கறுப்பினத்தவர்” என்று மோனிகா கூறுகின்றபோது அவருடைய வேதனையை உணரமுடிகிறது,.

http://www.bbc.com/tamil/global/2016/08/160808_prostitute_on_my_honeymoon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேஸிலிலும் இப்படியொரு அவலமா?  நான்பணிபுரியும் நிறுவனத்திலே ஒரு பிறேஸில்காரன் வேலைசெய்கிறார். ஆள் வெள்ளை முடி சாதுவான சுருள். அவர் பெரும்பாலும் வெள்ளைகளோடுதான் திரிவார். வந்தபுதிதில் சம்மா கதைப்பார்.  இதை வாசித்த பின்புதான் அவரையே புரிந்தகொள்ள முடிந்தது. இணைப்புக்கு நன்றி!

Link to comment
Share on other sites

6 hours ago, nochchi said:

பிரேஸிலிலும் இப்படியொரு அவலமா?  நான்பணிபுரியும் நிறுவனத்திலே ஒரு பிறேஸில்காரன் வேலைசெய்கிறார். ஆள் வெள்ளை முடி சாதுவான சுருள். அவர் பெரும்பாலும் வெள்ளைகளோடுதான் திரிவார். வந்தபுதிதில் சம்மா கதைப்பார்.  இதை வாசித்த பின்புதான் அவரையே புரிந்தகொள்ள முடிந்தது. இணைப்புக்கு நன்றி!

பிரேசிலில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும் கூட கறுப்பரை கண்டுகொள்ளாமல் வெள்ளையரை தான் தூக்கி பிடிக்கிறார்கள். இன்றைய தமிழ்வின் முகப்பு செய்தியில் வெள்ளையின பெண்கள் சேலை கட்டி நல்லூர் வந்தததை பெருமையுடன் செய்தியாக வெளியிட்டுள்ளார்கள். அதனுடன் உள்ள படங்களில் உள்ள சம தொகையான கறுப்பு இன பெண்கள் சேலை கட்டிவந்தது பற்றி ஒரு வார்த்தை இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.