Jump to content

தடைகளை பார்க்க மறுத்த குருடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் பத்தாவது பரீட்ச்சையில் தேறினார் பிறவியில் இருந்து பார்வை இல்லாதவரான ஸ்ரீ காந்த் போலா. 

தேறினார் என்றால், சும்மா இல்லை, விஞ்ஞான பாடத்தில் 93% புள்ளிகளுடன்.

ஆனால் பிளஸ் 2, என்னும் உயர் வகுப்பில் அவரை சேர்க்க பள்ளிகள் மறுத்தன. ஒரு பிறவிக் குருடருக்கு செய் முறையுடன் கூடிய விஞ்ஞான பாடங்கள் செய்ய முடியாது என்று காரணம் கூறின.

ஒத்துக் கொள்ள மறுத்த அவரோ, மாநில அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். நீதி தேவதை அவருக்கு கை கொடுக்க,  விஞ்ஞான பாடத்தில் 97% புள்ளிகளுடன் சாதனை செய்தார்.

மறுபடியும் தடை. இந்தியாவின் உயர் கல்வியில் புகழ் மிக்க IIT, NIT போன்ற நிறுவனங்கள் கூட அவருக்கு கதவை திறக்க மறுத்தன.

இந்நிலையில் அசராமல் முயல, உலகப் புகழ் மிக்க நான்கு பல்கலைக்கழகங்கள் அவருக்கு கதவை திறக்க, போஸ்டன் நகரின் MIT நிறுவனத்தில் முழு புலமைப் பரிசல் பெற்று கல்வியினை முடித்து, நாடு திரும்பி ஒரு நிறுவனத்தினை ஆரம்பித்து அதில் வேலை செய்வோரில் 60% வலது குறைந்தவர்களாக உள்ளவர்களாக பார்த்து நடாத்தி வருகிறார். 

வாழ்த்துக்கள்  

ஒரு மனமிருந்தால், அதில் தெளிவிருந்தால் வானம் வசமாகும்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் என் சக மாணவன், தோழன் ஆ.ரவீந்திரன் 85 எ/ல் பிரிவு,  கண் பார்வையற்றவர்.யாழ்  பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும்  கற்பித்து பல வருடஙகளாக தான் வளர்ந்த அதே காப்பகத்தில் அவரை வாழ வைத்த அந்தக் காப்பாளரின் நினைவாக அவருடைய பணிகளை இன்றும் சிறப்பவுடன் வாழ்வகம் என்னும் பெயரில் யாழ். சுன்னாகத்தில் பராமரித்து வருகின்றார். அவருடைய வாழ்வகத்தில் பல சிறார்கள் கண் தெரியாத நிலையிலும் கல்வி கற்று வருகின்றார்கள்.
கல்விக்கும் மனிதாபிமானத்திற்கும் கண்கள் மட்டும் தேவையில்லை என்று இவரூடாக அறிந்துகொண்டேன்.
வாழ்த்துக்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு நிறுவனத்திலும், மாற்றுத் திறனாளிகளுக்கு குறிப்பிட்ட  இடங்களை ஒதுக்க வேண்டும் என்பது சர்வதேச வரைமுறை.
அதனைப் பெறுவதற்கு.. மாற்றுத்திறனாளிகளை..... அலைக்களிப்பது, துயரமானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.