Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                     13886279_10205659713285710_2126223769678

  கி பி அரவிந்தனின் நினைவாக நடைபெற்ற சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற எனது கதை  

 

 

                                 வாழ்வு வதையாகி

 

காற்றுடன் மழையும் சுழன்றாடுவதை அந்த அறையின் சாளரத்தினூடு பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாந்தினி. சாதாரண ஆடை தான் அணிந்திருக்கிறாள். ஊசிக் காற்றில் சாளரக் கண்ணாடிகளையும் ஊடுருவிக் காற்று சிறிதாக உள்ளே வந்தபடி தான் இருக்கிறது. ஆனாலும் சமரில் வெப்பமாக இருப்பதுபோல் அறை கதகதப்பாக இருப்பதனால் குளிரவே இல்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் இந்த நாட்டில் வாழ்ந்து முடித்து விருட்சமாய் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என........ கையில் வைத்திருக்கும் காகிதங்களைக்  குனிந்து பார்த்தாள். காகிதங்கள் காற்றுப் பட்டு ஆடுகின்றனவா ?அல்லது தன்  மனதின் அதிர்வில் ஆடுகின்றனவா என்று புரியவில்லை சாந்தினிக்கு.

எல்லாம் ஓய்ந்து போகப் போகிறது. இந்த உலகம், ஊர்கள், உறவுகள், நண்பர்கள் தெரிந்தவர் போனவர் எல்லாமே என எண்ணியபோது சாந்தினிக்கு மனம் எண்ண முடியாத வேதனையை உணர்ந்தது. எத்தனை காலம் அவள் இப்பூமியில் வாழ்ந்துவிட்டாள். எண்ணிலடங்கா மகிழ்வை அனுபவித்திருந்தாலும் இப்போ கொஞ்ச நாட்களாக மனதில் எழும் வேதனை சொல்ல முடியாததாகி மனதுள்ளே குமைந்து குமைந்து அவள் அனுபவிப்பதை என்னவென்று சொல்லி யார் விளங்கி ......

சில நாட்களாக அவள் மனதிலோடும் எண்ணத்தைச் செயற்படுத்தும்  துணிவு அவளுக்கு இருக்கிறதுதான் எனினும் இவ்வுலகில் மீண்டும் இந்த உறவுகளுடன் வாழவே முடியாதே என்னும் ஏக்கமும் அதனால் எழும் அங்கலாய்ப்புமே அவளை அடிக்கடி துன்புறுத்திய வண்ணம் இருக்க, இன்னும் கொஞ்ச நாட்கள் அல்லது மாதங்கள் பொறுத்திருப்போம் என மனம் ஆசை கூட்ட, கண்களை மூடி ஒரு ஐந்து நிமிடங்கள் இருந்தவள், மனதைத் திடப்படுத்திக்கொண்டு அந்தப் படிவத்தில் கையொப்பம் இட்டு மேசையில் வைத்தாள்.

*****************************************************************************

சாந்தினி குளிராடைகள் அணிந்துதான் இருக்கிறாள். கீற்றர் இன்னும் போடப்படவில்லை. மகன், மருமகள்,பேரப்பிள்ளைகள் எல்லோரும் இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில்லை. இன்று சனிகிழமை என்பதால் அவர்கள் எழும்ப எட்டு ஒன்பது செல்லும். அவர்களுக்குக் குளிர்ந்தால் மட்டும் தான் இந்த வீட்டில் கீற்றர் போடுவார்கள். இவளுக்குக் குளிரும் என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை. இரண்டு மூன்று தரம் இவளும் குளிருது எண்டு மகனிடம் சொல்லிப் பார்த்ததுதான். "வெள்ளன எழும்பி என்ன அம்மா செய்யப் போறியள். படுத்து இருக்கிறதுதானே" என்றதுடன், "நல்ல மொத்த யம்பரைப் போட்டுக்கொண்டு காலுக்கு பெட்சீற் சுத்திக்கொண்டு இருந்தால் குளிராது தானே அம்மா" என்றதன் பின்னர் சாந்தினி ஒன்றும் சொல்வதேயில்லை.கால்கள் இரண்டும் செயலிழந்து சுரணையே இல்லையே. இதில் கால் ஏன் குளிரபோகுது? உடல் எல்லோ குளிருது என்று சொல்ல எண்ணியதையும் சொல்லாது மனதில் மட்டுமே சொல்லிக்கொண்டாள்.

சின்ன வயதில் இவனுக்குக் குளிரும் என்று தேடித்தேடி உடுப்புகள் போட்டுவிடுவதும், இவன் களட்டி எறியும் சொக்சைப் பார்த்துப் பார்த்துப் போடுவதிலுமே இவளின் நேரம் பாதி போய்விடும்.

முன்பெல்லாம் இவளுக்குக் குளிர்வதில்லை. கீற்றர் போட்டவுடன் மூக்குக் கண் எல்லாம் கடிக்கும். உடல் வேர்க்கும். இருந்தாலும் பிள்ளையளுக்குக் குளிருமே எண்டு இவள் தன்  துன்பத்தைச் சகித்திருக்கிறாள். இப்பவும் அதேதான் தொடர்கிறது.

இப்ப கொஞ்ச நாளாத்தான்  இவளுக்கு வெள்ளனவே விளிப்பு வந்துவிடுகிறது. நாள் முழுதும்  தூங்குவதும், தூங்காமல் விழித்திருப்பதும், எழுந்தால் இந்த யன்னலூடு வெளியே பார்ப்பதும் தானே இவளது வேலை .

சாப்பிடும் வேலையும் இருக்குத்தான். ஆனாலும் அதுக்குக் கூட இப்ப மனம் வருகுதில்லை. கீழே ஒரு அறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் என்ன செய்வது இந்த மகனின் வீடு அத்தனை வசதியாக இல்லை. இவன் சுதன் நினைத்தால் கீழே ஒரு அறையைக் கட்ட முடியும் தான். மருமகள் விட மாட்டாளே. கீழே ஒரு சிறிய அறை இருக்கிறதுதான். அங்கே இவளை மாற்றி விட்டால் நன்றாக இருக்கும் என எத்தனையோ நாட்கள் இவள்  எண்ணியிருக்கிறாள். ஆனால் வாய் திறந்து ஒருமுறை கேட்டதோடு சரி. அந்த அறையில் பிள்ளைகள் படிப்பதற்கு எனக் கணனியும் மேசை கதிரைகளும் புத்தக அலுமாரியுமாக..... 

அப்பப்போ பிள்ளைகள் மகன் மருமக்கள் எல்லாம் சிரித்துக் கதைப்பது கேட்கும். தானும் அவர்களுடன் சேர்ந்து கதைக்க மனம் ஏங்கும். பேரப்பிள்ளைகளின் கதைகளை, அசைவுகளை, சின்னச்சின்ன சண்டைகளை மருமகளின் வெருட்டல் உருட்டலையும் மகனின் அடங்கிய குரலையும் கேட்கக்கேட்க நடக்கேலாமல் படுத்திருக்கிறேனே என்னும் வெறுப்பும் கூடவே எழும். பிறகும் எதுவுமே செய்ய முடியாது ஆசைகளை ஆதங்கங்களை அடக்கியபடி சும்மா இருக்கத்தான் முடிகிறது.

கடந்த ஆண்டுவரை அவளது நண்பி பாமா இவளுக்கு மிக்க துணையாக அடிக்கடி தொலைபேசியில் கதைத்து இருவரும் தத்தமது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். அதற்கும் மருமகள் புறுபுறுப்பதுதான் என்றாலும் சாந்தினி அதை விளங்கியதுபோல் காட்டிக்கொண்டதே இல்லை. அவள் திடீரென இறந்த பின்னர் சாந்தினிக்கு நடுக்காட்டில் யாருமின்றி விட்டதுபோல் பயமும், தனிமையும், சுய பச்சாதாபமும் மேலோங்கி வயோதிகத்தைப் புரிந்து கொள்ளா மனிதர்களுடன் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது பெரும் பாடாய்ப் போனது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இன்று காலை அவள் நித்திரையால் எழும்பினாலும் பல் தீட்டாது கன நேரமாய் படுத்தே இருந்தாள்.வைத்தியசாலை போல் இருந்தாலும் இவர்கள் எல்லாம் எத்தனை சகிப்புத் தன்மையோடு எம்மை எல்லாம் பராமரிக்கின்றனர் என எண்ணியபோது வியப்பாக இருந்தது. இவள் மணியை அழுத்த அவர்கள் இவளுக்கு பல்லுத் தீட்ட, சிறுநீர் கழிக்க, குளிக்க என்று எந்த முகச்சுளிப்புமின்றி எல்லாம் செய்து உடை மாற்றி மீண்டும் கட்டிலில் கொண்டுவந்து விட்டபின், உனக்கு விருப்பம் என்றால் உன்னுடன் நிற்பதர்க்கு உன் பிள்ளைகளை நீ அழைக்கலாம் என்று கூறிவிட்டு இவளை அன்போடு பார்த்தாள் அந்தப் பெண். வேண்டாம் என்ற சாந்தினியின் தலையாட்டலை விளங்கிக்கொண்டு  இவளுக்குக் காலை உணவை இவளுக்குப் பக்கமாக நகர்த்திவிட்டுச் சென்றபின், கண்களில் கண்ணீர் முட்டி வழிவதா வேண்டாமா என்று காத்திருக்க, பிள்ளைகளைக் கண்டால் என்னையறியாமலே என் மனம் மாறியும் விடலாம் என்று எண்ணியவளாய், உணவை மெதுமெதுவாய் இருக்கும் சொற்ப பற்களால் கடித்து உண்ண ஆரம்பித்தாள் சாந்தினி.

கணவன் இருந்த வரை அவளை எல்லோரும் மரியாதையுடன் தான் நடத்தினார்கள். ஏனெனில் கணவனும் அவளும் தனி வீட்டில் சுதந்திரமாக இருந்து, சமைத்துச் சாப்பிட்டுக் கோவிலுக்குப் போய் எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது அவர் இறக்கும் மட்டும். ஐம்பது ஆண்டுகள் கூடிவாழ்ந்த அவர் இறந்தபின் அதிர்ச்சியில் அவளுக்கு பாரிசவாதம் வந்து ஆறுமாதங்கள் படுத்த படுக்கையாய் வைத்தியசாலையில் இருந்து அவளுக்கு நோய் பாதி குணமாகி வீட்டுக்குப் போகலாம் என்றபோதுதான் பிள்ளைகளுக்கிடையில் அம்மாவை யார் வைத்திருப்பது என்று பிடுங்குப்பாடு வந்தது. கடைசியில் கடைசியாகப் பெற்ற சுதன், தான் தாயை வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டான். நடக்க முடியாமல் இருப்பவரை வைத்திருக்க ஆருக்குத்தான் ஆசை வரும் என்று இவளுக்குமே புரிய "அந்தாளோட நானும் போயிருக்கக் கூடாதா? கடவுளே நான் என்ன பாவம் செய்தன் இப்பிடிக் கிடக்க" என்று மனதுள் அழ மட்டுமே முடிந்தது.

முன்பெல்லாம் காலை எழுந்து குளித்துவிட்டு வந்து தான் மிச்ச வேலை எல்லாம். இப்ப வாரம் இருமுறை என்றிருந்து ஒருமுறைதான் முழுக்கு என்றாகிவிட்டது. இவளால் தனிய கன நேரம் நின்று குளிக்கமுடியாது. ஒருக்கா இவள் தடக்கி விழுந்த பிறகு, தான் நிக்கும்போதுதான் குளிக்கவேணும் என்று மகன் சொல்லிவிட்டான். அதன் பிறகு மாலையில் மகன் வேலையால வந்த பிறகுதான் குளிப்பு முழுக்கு எல்லாம். தோலெல்லாம் சுருங்கி வற்றிவிட்டாலும் குழந்தைப் பிள்ளையைப் போல் மகன் சாந்தினியைத் தூக்கிக்கொண்டு போய் கதிரையில் இருத்தி குளிக்க வாக்க தன்னை அறியாமலே ஒரு கூச்சம் எழும். ஆனாலும் அடக்கியபடி இருக்கத்தான் முடிகிறது.

இப்ப கொஞ்ச நாளா இடுப்புக்குக் கீழே உள்ள பாகங்கள் செயலிழக்கத் தொடங்கிவிட்டன. இனிமேல் அதுக்கும் மற்றவரை எதிர்பார்த்து அவர்களின் முகச்சுளிப்போடு ....... நினைத்துப் பார்கவே முடியவில்லை அவளால். அந்த நிலை வரும்வரை இருக்கக் கூடாது என்ற வைராக்கியம் மட்டும் மனதில் எழுந்தது.

சுதன் ஒன்றும் சும்மா வைத்திருக்கவில்லை சாந்தினியை. கவுன்சிலில் இருந்து தாயைப் பராமரிக்க என்று குறிப்பிட்ட தொகையைப் பெறுகிறான் தான். ஆனாலும் தாய்க்கு தான் எந்த உதவியும் பெற்றுக்கொள்ளாமல் தன் செலவில் பார்ப்பதுபோல் தான் வருபவர்களிடம் கூறுவதை சில நேரங்களில் சாந்தினி கேட்டும் கேட்காததுபோல் இருந்துவிடுவாள். என்ன இருந்தாலும் அவன்தானே பாக்கிறான். பிள்ளையை ஏன் மற்றவர்கள் முன்னால் விட்டுக் கொடுப்பான் என எண்ணி மனம்  அமைதியடையும்.

மற்றப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எப்போதாவது வந்து போவார்கள். மூத்தவன் வந்து ஒரு அரை மணித்தியாலம் சாந்தினியோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டுப் போனாலும் மருமகள் அந்தி பூத்தாற்போல் வந்து போவதுடன் சரி. இரண்டாவது மகன் கொலண்டில் இருப்பதால் தொலைபேசியில்மட்டும் வாரம் ஒருநாள் கதைப்பதும் ஆண்டில் ஒருதடவை வருவதும் கூட இப்ப அருகிவிட்டது. தூர இருப்பவனைப் பார்க்க மனம் ஆசை கொள்வது இயல்புதான் என்றாலும் அவைக்கும் எத்தனை வேலைகள், பேரப்பிள்ளைகள் படிப்பு என்று இவளால் தன் ஏக்கத்தை ஒருபுறம் தள்ளி வைக்க மட்டுமே முடிந்தது. ஒரு பொம்பிளைப் பிள்ளை இருந்திருந்தால் இப்பிடி என்னைத் தனிய விட்டிருக்காது " என்று மனம் அங்கலாய்க்கும்.

என்ன எண்ணி என்ன எல்லாம் விதி என்று மனதை ஆற்ற எண்ணினாலும் ஆறாமல் கிடந்தது உழலும் மனதை என்னதான் செய்வது என்று அவளுக்குமே புரியத்தான் இல்லை.

*****************************************************

கீழ் மாடி எண்டால் எப்பிடியும் கோலுக்குள்ளை ஆராவது ஒருத்தர் நடமாடிக்கொண்டு இருப்பினை. இந்த அறைக்குள்ள நாலு சுவரையும், கிடக்கும் ஒரு அலுமாரி ஒருமேசையையும் தவிர என்ன கிடக்குப் பாக்க ? இன்னும் ஒருக்கா மகனைக் கேட்டுப் பாப்பமோ என்று எழுந்த ஆசையை முன்பு கேட்டபோது நடந்தது நினைவில் வந்து அடக்கியது.

"பிள்ளையளின்ரை வசதி முக்கியமோ உவவின்ரை முக்கியமோ. பிள்ளையளை மேல விட்டால் என்ன செய்யிறாங்கள் என்று தெரியாது. இவ்வளவு காலம் அனுபவிச்சது பத்தாதே" என்று மருமகள் சாந்தினியின் காதுபடச் சொன்னது இப்பவும் நெஞ்சை அதிரப் பண்ண எதுவும் தோன்றாமல் அமர்ந்திருந்தாள் சாந்தினி. 

இப்பிடி நடமாட முடியாதவர்களுக்காக இங்க எத்தினையோ வயோதிக இல்லங்கள் இருக்குத்தான். ஆனாலும் சொந்தங்கள் பார்ப்பது போல் ஆர் பாக்கப் போயினம். அதோட அங்க நடக்கிற அநியாயங்களை அவள் பலதடவை தொலைக்காட்சியில் பார்த்தும் இருக்கிறாள் தானே. "தம்பி என்னைக் கடைசிவரை அங்க விட்டுடாதை" என்று மகனுக்குச் சொன்னபோது மகனுக்கும் கண்கலங்கிப் போனதை இவளும் கவனிச்சவள்தான். "நான் கொண்டு போய் விடமாட்டன் அம்மா" என்று தாயின் கைகளைப் பிடிச்சுக்கொண்டு சொன்னவன்தான். ஆனாலும் மருமகள் இப்பவெல்லாம் பலதடவை காதுபடவே "என்னாலை உந்தப் பம்பஸ் மாத்திற வேலை எல்லாம் செய்ய ஏலாது. கொண்டே ஹோமிலை விடுங்கோ" எண்டு கத்த "அம்மாக்குக் கேட்கப் போகுது" எண்டு அவன் மனைவியைத் தள்ளிக்கொண்டு வெளியே சென்று வாக்குவாதப் பட்டதும் தான் இவளுக்கு மனதில் அந்த யோசினை வந்தது.

இவள் ஒன்றும் ஒன்றும் தெரியாதவள் இல்லை. ஆங்கில அறிவும் மற்ற அறிவுகளும் உள்ள ஒருத்திதான். ஒரு கடையில் சுப்பவைசராக இருபத்தைந்து ஆண்டுகள் வேலையும் செய்து இப்ப பென்சனும் எடுப்பவள் தான். அப்பிடிப்பட்டவளையே வயது போட்டுது எண்டவுடன இப்பிடி வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறானே மகன். அப்ப படிக்காமல் வேலைவெட்டி செய்யாமல் பிள்ளையளையும் புருசனையும் நம்பி வாழுற பெண்களுக்கு என்ன நிலை என்று மனதில் அவர்கள் பால் சிறிது பச்சாதாபமும் எழுந்தது.

ஆரம்பத்தில் இவளுக்குக் கூட அறையில் டிவி ஒன்றும் இல்லை .கொலண்டிலிருந்து இரண்டாவது மகன் வந்தபோது என்னம்மா வேணும் உங்களுக்கு என்று கேட்க, "ஒரு பழைய டிவி எண்டாலும் ஒண்டு இருந்தால் பொழுது போகும் மகன்" எண்டதில், அவன் புதிதாகவே ஒரு சிறிய டிவி வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனான்.

அது வாங்கினது எவ்வளவு நல்லதாகிவிட்டது இப்பொழுது என்று தனக்குள் தானே மகிழ்ந்தாள் சாந்தினி. அது இல்லாவிட்டால் தானும் இந்த நரகத்தில் சாகும் வரை உழன்று கொண்டே இருந்திருப்பேன் என எண்ணியவள் யாரும் வீட்டில் இல்லை என நிட்சயம் செய்துவிட்டு தொலைபேசியை எடுத்தாள்.

********************************************************************

இன்னும் ஒரு மாதத்தில் அவள் இந்தப் பூமிக்கு வந்து எண்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. மாலையில் மகன் வேலையால் வந்து சாப்பிட்டு முடித்து மேலே இவளிடம் வந்து இவளை சுகம் விசாரித்தபின் இவள் மெதுவாகத் தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள். "தம்பி எனக்கு எல்லாச் சொந்தக்காறறையும் பாக்கவேணும் போல இருக்கு" என்றவுடனேயே உங்களைக் கூட்டிக்கொண்டு "என்னை வீடுவீடாப் போகச் சொல்லுறியளோ" என்று அவன் பாய்ந்தபோது அதை எதிர்பாத்தது இருந்ததால் சாந்தினி அசரவில்லை.

"என்னப்பன் உங்களைப் பெத்து வளத்து ஆளாக்கினதுக்கு நான் கேக்கிற ஒரு உதவியைக் கூடச் செய்ய மாட்டியளோ" என்று குரலைக் கொஞ்சம் உயர்த்தியே இவள் கேட்டாள். நீங்கள் ஒண்டும் என்னை வீடுவீடாக் கொண்டு போக வேண்டாம். எல்லாரையும் ஒரு இடத்துக்குக் கூப்பிடுங்கோ என்று இவள் கூறியதுதான் தாமதம், "உங்களுக்கு என்ன விசரோ அம்மா" என்றான் பிள்ளை சத்தமாக.

"எனக்கு எண்பது வயது வருது. அதுக்கு வரச்சொல்லிக் கூப்பிடு" என்றதும் மகனின் முகத்தில் எள்ளல் தெரிந்தது. "உவவுக்கு பேத்டே கொண்டாடுற ஆசை வந்திட்டுதோ அப்பா. உந்த வயதில நல்ல ஆசைதான் "  என்றபடி உள்ளே வந்த மருமகளைச் சட்டை செய்யாது, "ஆசை எண்டே வச்சுக்கொள்ளுங்கோ. நீங்கள் ஒண்டும் பணம் சிலவழிக்கத் தேவை இல்லை. என்ரை தாலிக்கொடி கிடக்கு. அதை வித்துப்போட்டு வீட்டுக்குப் பக்கத்தில கிடக்கிற கோலை புக்பண்ணி எல்லாரையும் அம்மாக்குப் பிறந்த நாள் எண்டு கூப்பிடுங்கோ. சாப்பாடும் ஓடர் செய்யுங்கோ. உங்களுக்கு எந்தச் சிலவும் இராது" என்று சொல்லிவிட்டு நீங்கள் போகலாம் என்பதுபோல் மகனைப் பார்த்தாள்  சாந்தினி.

எதோ சொல்ல வாயெடுத்த மனைவியை கண்காட்டி வெளியே கூட்டிச் சென்றான் மகன். "சத்தம் போடாதையப்பா. மனிசி இனி எவ்வளவு நாளைக்கு இருக்கப் போகுதோ. சரி அவவின்ர ஆசையை ஏன் கெடுப்பான்" என்று கூறியது சாந்தினிக்குக் கேட்டதாயினும் அதற்குப் பதிலாக மருமகள் முணுமுணுத்தது விளங்கவே இல்லை. 

ஒரு வாரமாக மருமகள் மனதுக்குள் சாந்தினியைத் திட்டித்திட்டி எல்லாரையும் பிறந்த நாள் விருந்துக்கு அழைக்க "அட சாந்தினியின்ர மகனைப் பாரன். தாய்க்கு பிறந்தநாள் செய்கிறான். குடுத்து வச்ச மனிசி" என்று எல்லாரும் தம்முள் கதைத்துக் கொண்டனர் மனிசி கொடுத்தது தாலிக்கொடியை என்று தெரியாமல்.

  *******************************************

தாலிக்கொடி காசாகி சாந்தினிக்கு ஒரு நல்ல பட்டுச் சீலையும் வந்துசேர, சாந்தினியின் பிறந்த நாள் அன்று இரு உறவினர்கள் வந்து மருமகளுடன் சேர்ந்து அவளை வெளிக்கிடுத்தி சாந்தினியின் இரட்டை வடச் சங்கிலி, இரண்டு சோடி காப்பும் போட்டு அலங்கரிச்சு, முடிமயிர் வச்சு ஒரு பெரிய கொண்டையும் போட்டு முடிய, சந்தோசப்படுவதர்க்குப் பதிலாக மனம் முழுதும் பாராமாகிச் சுமக்க முடியாத அவஸ்த்தையானது சாந்தினிக்கு.

கொலண்டிலிருந்து வந்திருந்த இரண்டாவது மகனும் நேற்று முதல் குடும்பத்துடன் வந்து இங்குதான் நிக்கிறான். இரண்டு மக்களுமாக சாந்தினியை தூக்கிக் கொண்டு வந்து மகனின் ஜீப்பில் இருத்தி மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். மண்டபத்துள் இவளைக் கூட்டிக்கொண்டு போனதும் எல்லாரும் எழும்பி வெள்ளைக்காரர் செய்வது போல் கைகளைத் தட்டி இவளை வரவேற்க இவளுக்குக் கூச்சமாகப் போய்விட்டது.

நடுவில் போட்டிருந்த பெரிய சிம்மாசனம் போன்ற இருக்கையில் இவளை இருத்த, இவளுக்கு என்னவோ போல் இருந்ததுதான் என்றாலும் மண்டபம் நிறைய உறவினர்கள் நண்பர்களைப் பார்க்க மனதில் இன்பமும் துன்பமும் மாறிமாறி எழுந்தன. மண்டபத்துக்கு வந்திருந்த மூத்த மகன் தனக்குத்தான் முதல் உரிமை அம்மாவில் என்பதுபோல மைக்கை வாங்கி வந்திருந்த எல்லோருக்கும் வருகை தந்தமைக்காக நன்றியும் கூறி வரவேற்க, அம்மாவைப் பற்றி ஆகா ஓகோ என்று மற்ற மகன்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் எல்லோரும் புகழ்ந்து புளுக, ஒரு புன்சிரிப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தினி. அம்மாவுக்காகச் செய்வித்த பெரிய கேக்கைப் பிள்ளைகள் சூழ நின்று அம்மாவைக் கொண்டு வெட்டுவித்து அம்மாவுக்குத் தீத்தி, தாமும் அம்மாவின் கையால் வாங்கி உண்டு.... பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவர்களின் பாசம்கண்டு மனம்பூரித்து தாம் தம் பெற்றோருக்குச் செய்யவில்லையே என்னும் ஆதங்கத்தையும் இதைவிட தம் பெற்றோருக்குச் சிறப்பாகச் செய்யவேணும் என்னும் நினைப்பையும் கொடுக்க, சாந்தினி மட்டும்  மனதுக்குள் பலவித அல்லாடல்களோடு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

பிள்ளைகளைக் குறை சொல்ல முடியாதபடி எல்லாரும் ஓடியோடி அனைவரையும் உபசரிக்க அனைவரும் மகிழ்வாக உண்டும், சிலர் சாந்தினிக்குப் பக்கத்தில் கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டும் ஊர்க்கதை உலகத்துக்கதை எல்லாம் கதைத்து முடிய, சாந்தினியோடு நின்று எல்லாரும் படம் எடுக்க ஆரம்பிக்க, மைக்கை ஒருக்காக் கொண்டா தம்பி என்று அதை வாங்கி எல்லாரும் என்ர பிறந்த நாளுக்கு வந்து என்னை சந்தோசப்படுத்தினதுக்கு மிக்க நன்றி. ஆனால் படம் எடுத்துப்போட்டு உடன எல்லாரும் போயிடாதேங்கோ. எல்லாரும் படம் எடுத்து முடிய நான் உங்களுக்கு ஒண்டு சொல்லப்போறன். அதைக் கேட்டுட்டுப் போங்கோ என்றதும் மண்டபத்தில் சலசலப்பு எழுந்தது.

பிள்ளைகள் மூண்டுபேரும் என்ன அம்மா இது என்று, தம்மைப் பற்றித்தான் தாய் ஏதேனும் உளறி வைக்கப் போகின்றாவோ என்று முகம் முழுதும் பயம்தெரிய வந்து நிக்க, ஒண்டும் இல்லை பயப்பிடாதேங்கோ என்று விட்டு, வாங்கோ படம் எடுக்க என்று நிலைமையை வழமையாக்க, வந்திருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று சாந்தினியுடன் நின்று படம் எடுக்க ஆரம்பித்தனர்.

**********************************************************

அனைவரும் ஒருவித எதிர்பார்ப்புடன் படம் எடுத்தபின்னும் போகாது காத்திருக்க, சாந்தினி அருகிலிருந்த மைக்கை நடுங்கும் கைகளால் எடுத்தாள்.

"என்ர பிள்ளையள் மூண்டுபேரும் என்னை முதல்ல மன்னிக்க வேணும். பிள்ளையளுக்கு மட்டும் இதைச் சொல்லியிருந்தால் அவை கடைசிவரை இதுக்குச் சம்மதிச்சிருக்க மாட்டினம். அதாலைதான் எல்லாருக்கும் முன்னால வச்சுச் சொல்லுறன்" என்றதும் பிள்ளைகளிலும் விட மனைவிமாரின் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்க, எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் சாந்தினி தொடர்ந்தாள்.

"நான் இந்த உலகத்தில இருக்கப் போறது இன்னும் சில வாரங்கள் தான்" என்று அவள் முடிக்க முன்னர் மண்டபத்தில் பெரும் இரைச்சல் எழுந்தது . "தயவு செய்து எல்லாரும் அமைதியாக் கேளுங்கோ. எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. என்ர பிள்ளையள் என்னை நல்ல வடிவாத்தான் பாக்கினம். ஆனால் நான் நோயாளியாகிப் பிள்ளையளுக்குப் பரமா இருக்க விரும்பேல்லை. அதனால பிள்ளையளைக் கேட்காமலே நான் இறந்து போறதுக்கு முடிவெடுத்திட்டன்" என்றதும் "அம்மா உங்களுக்கு விசரே" என்றபடி நெருங்கி வந்த பிள்ளைகள், தாயின் தீர்க்கமான பார்வையையும், எதுவும் கதைக்க வேண்டாம் என்று தாய் காட்டிய சைகையையும் பார்த்து செய்வதறியாது நிற்க, சாந்தினி தொடர்ந்தாள்.

"நடக்க முடியாமல் இருக்கும் போதே என்னால பிள்ளைகள், மருமக்களுக்குத் துன்பம். ஏதும் நோய் வந்து படுத்த படுக்கையானா .... என்னால நினைச்சுப் பார்க்கவே முடியேல்லை. தற்செயலா ஒருநாள் தொலைக்காட்சி பாக்கேக்கை Euthanasia பற்றி அறிஞ்சனான். அதால சுவிசில இருக்கிற அந்த நிறுவனத்தோட  நான் தெளிவாக் கதைச்சிட்டன். என்ர லைப் இன்சூரன்ஸ் இன்னும் சில நாளில முப்பது ஆண்டுகள்  முடியப்போகுது. ஒரு குறிப்பிட்ட காசு தருவினம். அந்தக் காசு இந்தச் செலவுகளுக்கும் செத்தவீட்டுச் செலவுக்கும் போதும். அவையே என்னைப் பொறுப்பெடுத்து கூட்டிக்கொண்டு போய் என்ர உடலை இங்கே திருப்பக் கொண்டு வந்தும் தருவினம். எல்லாரும் என்னை மன்னிச்சு சந்தோசமா வழியனுப்பி வைக்கவேணும்" என்றுவிட்டு மைக்கை மேசையில் வைக்க, சின்னச் சத்தம் கூடக் கேட்காமல் மரண அமைதியாகிப் போன மண்டபத்தில் மைக்கின் சத்தத்தம் டொங் என்று பெரிதாய்க் கேட்டது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் யாழ் களத்தின் இன்றைய நிலை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமும் வயதான கிழவியாகி கருணைக்கொலையில் முடியிற நிலைக்கு வந்துவிட்டதா!

கதையை வாசித்தேன். எல்லா இடமும் நடக்கிற கதைதானே, கருணைக் கொலையைத் தவிர.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில நடந்து திரியும் பெற்றோருக்கே இதை விட மோசம் என்று கேள்வி.காலும் ஏலாது என்றால் சொல்லவா வேண்டும். 

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யாழ் களமும் வயதான கிழவியாகி கருணைக்கொலையில் முடியிற நிலைக்கு வந்துவிட்டதா!

கதையை வாசித்தேன். எல்லா இடமும் நடக்கிற கதைதானே, கருணைக் கொலையைத் தவிர.

 

எல்லாம் எல்லா இடமும் நடக்கிறது தானே கிருபன்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

கனடாவில நடந்து திரியும் பெற்றோருக்கே இதை விட மோசம் என்று கேள்வி.காலும் ஏலாது என்றால் சொல்லவா வேண்டும். 

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளீல் சில இடங்களீல் வயோதிபர்களீன் யதார்த்தத்தை நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.....!

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதுதான் யாழ் களத்தின் இன்றைய நிலை tw_blush:

இதுதான் மனதுக்கு நெருடலாக இருக்கின்றது...! 

இன்னும் யாழ்களத்தை எவ்விதம் மேம்படுத்தலாம் மேலும் எப்படியான திட்டங்கள் முன்னெடுக்கலாம் என்றூதான் இங்கே கதைத்திருந்தோம்....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைபோட்டு ஒரு நாள் முழுதும் யாரும் வந்து பார்க்கவில்லை. அந்தக் கடுப்பில் எழுதியது அண்ணா. நானும் மற்றவர்களுக்கு எழுதாது மர்ரவரைஎதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் முன்னர் என்றால் சண்டையோ சச்சரவோ நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் எழுதினார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதைபோட்டு ஒரு நாள் முழுதும் யாரும் வந்து பார்க்கவில்லை. அந்தக் கடுப்பில் எழுதியது அண்ணா. நானும் மற்றவர்களுக்கு எழுதாது மர்ரவரைஎதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் முன்னர் என்றால் சண்டையோ சச்சரவோ நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் எழுதினார்கள். 

நான் என் வரையில் கதையோ கவிதையோ நன்றாக வாசித்து விட்டுத்தான் கருத்து எழுதுவது . அதுவரை  மேலோட்டமாக பார்த்து விட்டுப் போவேன் . பலருக்கு கதைகள் வாசிக்க நேரம் பற்றாக்  குறை , அதை எழுத்தாளர்களும்  புரிந்துகொள்ள வேண்டும் . tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2016 at 3:57 AM, குமாரசாமி said:

கதை நல்லாயிருக்கு...

இவர் வாசிக்காமல் சொல்லியிருக்கிறார் என்பதை அடித்து சொல்கிறேன்tw_blush: 
tw_blush:

 நான்முக புத்தகத்தில் தான் படித்தன் இதுலையும் இணைத்து இருக்கிறியள் 

வயது முதிர்ந்த ஒரு வாழ்க்கையை  உருவகித்து எழுதியிருக்கிறியள் சூப்ப‌ர் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

இவர் வாசிக்காமல் சொல்லியிருக்கிறார் என்பதை அடித்து சொல்கிறேன்tw_blush: 
tw_blush:

நான் வாசிக்கேல்லை எண்டதுக்கு ஆதாரம் கீதாரம் ஏதும் இருக்கா! :grin:
ஆளை மடக்கிட்டன்:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2016 at 3:57 AM, குமாரசாமி said:

நான் வாசிக்கேல்லை எண்டதுக்கு ஆதாரம் கீதாரம் ஏதும் இருக்கா! :grin:
ஆளை மடக்கிட்டன்:cool:

ஆதாரம் எல்லாம் காட்ட முடியாது அக்கா வந்து சொல்லுவா பாருங்கோவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி வாசிக்கேல்லை எண்டதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை முனிவர் tw_blush:ஜி

Link to comment
Share on other sites

On 1.8.2016 at 9:04 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதைபோட்டு ஒரு நாள் முழுதும் யாரும் வந்து பார்க்கவில்லை. அந்தக் கடுப்பில் எழுதியது அண்ணா. நானும் மற்றவர்களுக்கு எழுதாது மர்ரவரைஎதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் முன்னர் என்றால் சண்டையோ சச்சரவோ நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் எழுதினார்கள். 

வணக்கம் சுமேரியர்!

யாழைத் திறந்ததும் அதில் தெரியும் பதிவுகளைப் படிப்பது என் வழமை. என்னைப்பற்றி உறவுகள் தெரிவித்தது யாழில் வெளிவந்தும், நான் கண்டுகொள்ளாத சில செய்திகளைத் தமிழ் சிறி தெரிவித்தபின்பு சென்று பார்த்தது உண்டு. நீங்கள் ஆதங்கப்பட்டதுபோல் அலட்சியம் காரணமல்ல. என்னைப்போன்றே பல உறவுகளும் இருக்கலாம் என்பதில் எனக்கு ஐயமில்லை. பதிவுகளின் நீள அளவுகளைக் கொண்டு அவற்றில் குறுகியவற்றை முதலில் படிப்பதும் பலரிடமும் உள்ள ஒன்றுதான் என நினைக்கிறேன். உங்கள் கதையின் பதிவு சற்று நீளமாக இருந்ததால், ஆறுதலாக வாசிக்கலாம் என்ற நோக்கம் நாட்களை நகர்த்திவிட்டது உண்மை.

இன்றைய வாழ்வின் யதார்த்தத்தை அறிந்து எழுதினீர்களா! அல்லது உணர்ந்து எழுதினீர்களா! என்ற ஐயமும் எழுகிறது. ஏனெனில் உங்கள் தந்தையோடு பழகிய காலத்தில் தனது வாழ்வின் இன்ப துன்பங்களையும் சிறிது என்னுடன் பகிர்ந்துள்ளார். இருந்தும் உங்களுடைய எழுத்தின் ஆற்றலும், கருவின் உண்மையும், தங்கள் கடமையிலிருந்து தவறிய பலரையும் உறுத்தும் என்பது உண்மை.

யாழ்களம்தான் எங்களை உறவுகளாக ஈன்றெடுத்தது. ஆதலினால் அதனை எங்கள் தாயைப்போன்றும் கருதுவதில் தவறில்லை. ஒரு வயோதிபத் தாயின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத பிள்ளைகள்பற்றி உணர்வபூர்வமாக எழுதியிருக்கும் தாங்கள், யாழ்களத்தையும் அதன் உறவுகளையும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டீர்களோ...? என்ற எண்ணத்தையும் தோற்றம்கொள்ளச் செய்கிறது.       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி பாஞ்ச்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 05/08/2016 at 2:42 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

குமாரசாமி வாசிக்கேல்லை எண்டதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை முனிவர் tw_blush:ஜி

நான் சொன்னது தானே

அக்கா அந்த மனுசனை பற்றி எனக்கல்லோ தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையின் 19வது பந்தியில் வரும்   அந்த திருப்புமுனை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01/08/2016 at 7:07 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதுதான் யாழ் களத்தின் இன்றைய நிலை tw_blush:

இன்றைய என்ன நிலை.......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2016 at 2:04 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதைபோட்டு ஒரு நாள் முழுதும் யாரும் வந்து பார்க்கவில்லை. அந்தக் கடுப்பில் எழுதியது அண்ணா. நானும் மற்றவர்களுக்கு எழுதாது மர்ரவரைஎதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் முன்னர் என்றால் சண்டையோ சச்சரவோ நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் எழுதினார்கள். 

நல்ல வேலை நீங்கள் ஊரில் இல்லை .....
இருந்திருந்தால் .....

இப்போ யாரும் வருகிறார்கள் இல்லை எப்போதாவது இரவில் கள்ளன் மட்டுமே வருகிறான்.
முன்பு என்றால் பிடிக்க.... அடிக்க... பாலியல் துன்புற ஆமியாவது வருவான்.
என்று ஏங்கி இருப்பீர்கள் போல. 

நல்லது நடக்காது போனால் கூட பரவாயில்லை.
யாழ் நாசம் ஆகாது இருந்தாலே போதும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நல்ல வேலை நீங்கள் ஊரில் இல்லை .....
இருந்திருந்தால் .....

இப்போ யாரும் வருகிறார்கள் இல்லை எப்போதாவது இரவில் கள்ளன் மட்டுமே வருகிறான்.
முன்பு என்றால் பிடிக்க.... அடிக்க... பாலியல் துன்புற ஆமியாவது வருவான்.
என்று ஏங்கி இருப்பீர்கள் போல. 

நல்லது நடக்காது போனால் கூட பரவாயில்லை.
யாழ் நாசம் ஆகாது இருந்தாலே போதும்.  

அருமையான.... கருத்து, மருதங்கேணி.
அதை வாசிச்சு.... வாற, சிரிப்பை மட்டும், அடக்க  முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/08/2016 at 7:12 PM, குமாரசாமி said:

இந்தக்கதையின் 19வது பந்தியில் வரும்   அந்த திருப்புமுனை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

ஆ ....எந்தத் திருப்புமுனை tw_blush:

On 12/08/2016 at 11:00 PM, putthan said:

இன்றைய என்ன நிலை.......?

பதிவுகளை பெரிதாக வாசிக்காத நிலை tw_blush:

On 13/08/2016 at 1:13 AM, Maruthankerny said:

நல்ல வேலை நீங்கள் ஊரில் இல்லை .....
இருந்திருந்தால் .....

இப்போ யாரும் வருகிறார்கள் இல்லை எப்போதாவது இரவில் கள்ளன் மட்டுமே வருகிறான்.
முன்பு என்றால் பிடிக்க.... அடிக்க... பாலியல் துன்புற ஆமியாவது வருவான்.
என்று ஏங்கி இருப்பீர்கள் போல. 

நல்லது நடக்காது போனால் கூட பரவாயில்லை.
யாழ் நாசம் ஆகாது இருந்தாலே போதும்.  

உங்களைப் போல் ஆக்கள் இருக்கும்போது எப்படி நாசமாகும் யாழ் ??? மருதங்கேணி . வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .

காகத்துக்கு எப்போதும் எதையோ கிளறும் நினைப்பென்று கூறுவார்கள். அதுபோல் தான் சிலரும் இங்கு.

 

வருகை தந்து பச்சை வழங்கிய உறவுகள் புங்கை, நேசன், பாஞ்ச, நுணாவிலான், நவீனன், தர்சன், புத்தன் ஆகியோருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1 August 2016 at 3:22 PM, ஈழப்பிரியன் said:

கனடாவில நடந்து திரியும் பெற்றோருக்கே இதை விட மோசம் என்று கேள்வி.காலும் ஏலாது என்றால் சொல்லவா வேண்டும். 

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் பச்சைக்கும் நன்றி சகாரா tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.