Jump to content

குறிஞ்சி மலர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nochchi said:

 

10 hours ago, nochchi said:

யதார்த்தமாக நகரும் கதை. கதையென்பதைவிட உண்மை. பாராட்டுகள் முனிவர் ஜீ.

"சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்"

உள்ளத்தையெரிக்கும் கனதியான வரிகள். 
தனியொருவனால் குமுகாய மாற்றத்தை உடனே ஏற்படுத்த முடியாதென்பது உண்மைதான். ஆனால் சிற்றுளி கொண்டுதானே பெரும் சிலைகளே செதுக்கப்படுகிறது. 

நன்றி நொச்சி சகோ  உங்கள் கருத்துக்கும் 

உளி விழுந்து சிலையாக கல் பொறுமையாக இருக்கவும் வேண்டும் நல்ல கல்லாகவும் இருக்க வேண்டும் கற்களில் பல வகை உண்டு இந்த மனிதர்களின் தினம் தினம் பிரச்சினைகளோடு திரியும் மக்கள் மாணவர்கள் மாணவிகள் நிறையவே 

சில பேர் சிலையாகுறார்கள் சில பேர் செதுக்கும் போதே உடைந்து வீழ்கிறார்கள் அதுபோலவே இந்த மாணவியும் 

9 hours ago, ரதி said:

முனிவர்ஜீ,நீங்கள் எந்தப் பாடம் படிப்பிங்கிறனீங்கள்? கணக்கா?...உங்கள் அனுபவப்பதிவுகளை தொடர்ந்தும் எழுதுங்கள்.

கன காலம் வைத்து ரதிக்கு என்மேல் ஒரு டவுட்டு பாட‌சாலையில் படிப்பிக்கிறனோ என்று இல்லை ரதி நான் படிப்பிக்க வில்லை  ஒரு பாடசாலையிலே வேலை செய்து கொண்டு இருக்கிறேன். 

நன்றி ரதி நிட்சயமாக ஊரில் இருக்கும் நிறைய கதைகளை கற்பனையாக தர காத்துகொண்டு இருக்கிறேன்  

3 hours ago, யாயினி said:

இப்போது எல்லாம் நான் கணணிக்கு வருவதில்லை ஒரு குட்டி ஐபாட் வைத்திருக்கிறேன் அதன் மூலம் ஏதாச்சும் தட்டிப் பார்த்துட்டு போய் விடுவது வழமை.. மன்னிக்க வேண்டும்..அதனால் தான் உங்கள் ஆக்கங்களைப் பார்த்தாலும் உடன் வர கருத்து எழுது முடிவதில்லை..

 

உண்மையாகவே குறிஞ்சி மலரை இணைத்தது தலைப்பு ஏற்றால்போல் இருக்கட்டுமே என்று தான்..கதை இவ்வாறு இருக்கும் என்று நிச்சயமாக தெரியாது...சொறி முனி.....அதிகமாக நான் வெறும் தேனீரோடு தான் காலத்தைக் கடத்துவது 

சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்,,,,,,,பகிர்வுக்கு நன்றி என்பதை விட  படித்துக்கு கொண்டு இருக்கும் போது மனதுக்குள் ஏதோ செய்தது,செய்கிறது...இப்படியாக படிப்பதற்கு கஸ்ரப்படும் மாணவ,மாணவிகள் இருந்தால் அறியத் தாருங்கள்  நான் சொல்லலோடு நிற்க மாட்டேன் முனி என்னால் முடிந்ததை செய்து முடிப்பது வழமை...உண்மையாக வறுமைப்பட்ட பிள்ளைகளை அடையாபடுத்துங்கள்..அத்தோடு நினைத்தவுடன் வேலை இடமாற்றம் செய்வதையும் சற்று குறைத்தால் நன்று முனி சிறு மன அபிப்பிராயம் மட்டுமே.

கடந்த காலங்களில் மலையகத்தில் ஏற்பபட்ட மண் சரிவின் பின் மலையகத்தை சேர்ந்த    கொழும்பில் வானொலித்துறையில் பணி புரியும் ஒரு சில உறவுகளை முகப் புத்தகத்தில் இணைத்து வைத்திருந்தேன். அவர்களுடாக அங்குள்ள விடையங்களை அறிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் தான்..ஆனால் காலப் போக்கில் அந்த உறவுகளை இப்போ என் முகப் புத்தகத்திலும் காணவில்லை..
 

நன்றி யாயினி உங்கள் கருத்துக்கும் 

முந்தய வருடம் மண்சரிவு ஏற்பட்ட போது கூட எங்கள் ஊர் மக்களால் கிழக்கில் இருந்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் அறவீடு செய்து அந்த பாதிக்கப்பட்ட மக்களூக்கு கொடுத்தோம் அதை எனது முகநூலிலிலும் இணைத்து இருந்தேன் 

இப்படி நிறை பிள்ளைகள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை கண்டு பிடிப்பது தான் கொஞ்ச கஸ்ரம் உங்களுக்கு தெரிந்தவரகள் மூலமே நீங்கள் உதவ முன் வாருங்கள் ஏனென்றால் கன ஏமாற்றும் பேர் வழிகளும் இருக்கின்றனர்

நீங்கள் முகநூலில் ஏதாவது கிறிக்கிவிட்டு போங்கள் சும்மா படத்தை மட்டும் மாற்றி மாற்றி போனால் யார்த்தான் கண்டு கொள்வது ஹாஹா இல்லாவிட்டால் எதையாவது மொக்கை கவிதை என்று எழுதிவிட்டு போங்கள்  ஆஹா ஓகோ என்று கொமன்ஸ் வரும் இல்லாவிட்டால் காணாமல் போய்விடுவீர்கள் 
நானாவது வந்து லைக்கை போடுவன் ம்கும் 

ஐயோ நான் ஒரு ஆசிரியர் இல்லை யாயினி பேந்து எங்க இடம் மாறுவது தினசரி நாளிதழ்களில் மலையக மக்கள் படும் துன்பங்களை வைத்து கதையாக எழுதினேன் நன்றி 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதை உண்மைச் சம்பவம் என்பதனால் மனதை கனதியாக்குகிறது. வாழ்த்துக்கள் . இன்னும் உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்தும் எழுதுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதை உண்மைச் சம்பவம் என்பதனால் மனதை கனதியாக்குகிறது. வாழ்த்துக்கள் . இன்னும் உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்தும் எழுதுங்கள். 

நன்றி அக்கா உங்கள் முகநூலிலும் இணைத்து இருந்தீர்கள்  

ம் நிட்சயமாக  நடக்கும் சம்பவங்களை வைத்து கதையாக தருவேன் tw_blush:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாள் பயணமாக மலையகம் சென்று வந்தேன்  மக்கள் அதே வாழ்க்கையில்  தொழிநுட்பம் விருத்தியடைய நாகரிகம் மாறிக்கொண்டு வருகிறது சம்மள பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது  .கூடைகளுக்கு பதிலாக உரப்பைகளை சுமந்து கொண்டு   கொழுந்து  கொய்து கொண்டு மக்களும் தங்கள் வாழ்க்கையில் ஒரு சம்பள மாற்றம் வராத என்ற ஏக்கத்துடன் வான் பார்த்து வருகிறார்கள் .

மாற்றம் வருகிறது மாறவில்லை வாழ்க்கை  இவர்களுக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.