Jump to content

சிங்களம் தெரியுமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மொழியை ஒருவன் விரும்பி கற்கும் போது....இருக்கும் ஆர்வம் வேறு,
அந்த மொழியையையோ, மதத்தையோ திணிக்கும் போது.... அதில் வெறுப்புத் தான் ஏற்படும்.
அதில்... சிங்களமும், புத்த சமயமும் முதலிடம்.

எத்தனை மொழியென்றாலும் கற்பதில் தப்பேதும் இல்லை . ஆனால் தமிழ் சிறி சொன்னதுபோல சிங்களத்தில் வெறுப்பு வரக்காரணம் சிங்களவர்களின் செயற்பாடே தவிர வேறொன்றும் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் அலுவலக வேலை காரணமாக ஒரு நிறுவனத்தின் தொழிற்நுட்ப திறனையும், அது வழங்கிவரும் சேவையையும் பரிசோதிக்க அபுதாபி செல்லவேண்டியிருந்தது.. அந்த நிறுவனத்தின் சில பிரிவுத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு மதிய உணவு விருந்திற்கு அருகேயுள்ள ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்கள்..

அந்த நிறுவனக் குழுவில் ஒருவர் உத்திரப்பிரதேசம், மற்றொருவர் குஜராத்தி..இன்னும் இரண்டு பேர் எகிப்தியர்கள்..!

உணவின் நடுவே ஒரு எகிப்தியர் ஆரம்பித்தார்.. "நான் இந்தியா உணவான 'ஆலு' மற்றும் 'பலாக்' விரும்பி உண்பேன்..!" என்றார்..

என்னை பார்த்து, "நீங்கள் எப்படி..?" என்றார்.

நமக்குத்தான் இந்தி வராதே! "இல்லை, நீங்கள் கூறும் உணவு வகைகளின் பெயர் நான் அறியவில்லை..!" என்றேன்..

"ஏன் இந்தி தெரியாதா..? அது இந்தியாவின் தேசிய மொழி(?)யாயிற்றே..!" என்றார்..

நான் புன்னகையுடன், "உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான், இந்தியாவிற்கென்று தேசிய மொழியே இல்லை, பேசப்படும் பல்வேறு மொழிகளில் இந்தியும் ஒன்று, எனது மொழி தமிழ்..!" எனக் கூறிவிட்டு உண்ணத் தொடங்கினேன்..

உடனே இரு வட இந்தியர்களும், "யெஸ்.. யெஸ்.. இந்தியாவின் பழமையான மொழி சமஸ்கிருதம், அதிலிருந்து பிறந்ததுதான், இந்தியும், தமிழும்..!" என்றனர்.

உடனே தமிழ் மொழியின் தோன்றலை நான் ஆதாரத்துடன் விளக்கியவுடன், வட இந்தியர்களிடம் பேச்சு மூச்சே இல்லை!

ஏன் கூறுகிறேன் என்றால், பல வட இந்தியர்களுக்கு 'இந்தியா' என்றால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சமஸ்கிருதம், இந்தி மட்டுமே.. அம்மாதிரியே இந்தியாவை விட்டு வெளியுலகிலும் பரப்புரை செய்யப்படுகிறது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

சிங்களவருக்கு தமிழ் தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு யாரும் புகுத்தவில்லை. தமிழர்களும் அப்படித்தான்.புகுத்தி சிங்களம் படிக்க வேண்டிய அவசியம் என்ன? விரும்பினால் யாரும் எந்த மொழியும் படிக்கலாம். இதில் சிங்களம் தெரியாததால் வெட்கித்தலை குனிய என்ன உள்ளது?

கனடாவில் அரச கரும மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் உண்டு. ஆங்கிலம் பேச தெரிந்தவர் பிரெஞ் தெரியாததால் வெட்கி தலை குனியவில்லை. அதே போல் பிரெஞ் தெரிந்தவர் ஆங்கிலம் தெரியவில்லை என வெட்கி தலை குனியவில்லை. இது எமக்கும் பொருந்தும்.எமது தாழ்வு மனப்பான்மை தான் வெட்கித்தலை குனிய  காரணம் என நினைக்கிறேன்.

பச்சை முடிஞ்சது.. Good one.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

சமீபத்தில் அலுவலக வேலை காரணமாக ஒரு நிறுவனத்தின் தொழிற்நுட்ப திறனையும், அது வழங்கிவரும் சேவையையும் பரிசோதிக்க அபுதாபி செல்லவேண்டியிருந்தது.. அந்த நிறுவனத்தின் சில பிரிவுத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு மதிய உணவு விருந்திற்கு அருகேயுள்ள ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்கள்..

அந்த நிறுவனக் குழுவில் ஒருவர் உத்திரப்பிரதேசம், மற்றொருவர் குஜராத்தி..இன்னும் இரண்டு பேர் எகிப்தியர்கள்..!

உணவின் நடுவே ஒரு எகிப்தியர் ஆரம்பித்தார்.. "நான் இந்தியா உணவான 'ஆலு' மற்றும் 'பலாக்' விரும்பி உண்பேன்..!" என்றார்..

என்னை பார்த்து, "நீங்கள் எப்படி..?" என்றார்.

நமக்குத்தான் இந்தி வராதே! "இல்லை, நீங்கள் கூறும் உணவு வகைகளின் பெயர் நான் அறியவில்லை..!" என்றேன்..

"ஏன் இந்தி தெரியாதா..? அது இந்தியாவின் தேசிய மொழி(?)யாயிற்றே..!" என்றார்..

நான் புன்னகையுடன், "உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான், இந்தியாவிற்கென்று தேசிய மொழியே இல்லை, பேசப்படும் பல்வேறு மொழிகளில் இந்தியும் ஒன்று, எனது மொழி தமிழ்..!" எனக் கூறிவிட்டு உண்ணத் தொடங்கினேன்..

உடனே இரு வட இந்தியர்களும், "யெஸ்.. யெஸ்.. இந்தியாவின் பழமையான மொழி சமஸ்கிருதம், அதிலிருந்து பிறந்ததுதான், இந்தியும், தமிழும்..!" என்றனர்.

உடனே தமிழ் மொழியின் தோன்றலை நான் ஆதாரத்துடன் விளக்கியவுடன், வட இந்தியர்களிடம் பேச்சு மூச்சே இல்லை!

ஏன் கூறுகிறேன் என்றால், பல வட இந்தியர்களுக்கு 'இந்தியா' என்றால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சமஸ்கிருதம், இந்தி மட்டுமே.. அம்மாதிரியே இந்தியாவை விட்டு வெளியுலகிலும் பரப்புரை செய்யப்படுகிறது..!

காந்தி நெல்சன் மண்டேலா போன்றோர் பெருத்த தலைவர்கள் ஆனார்களா ?
ஆக்கப்படடார்களா ?
இவர்கள் இருவராலும் இவர்களது நாடு கண்ட நல்ல விடயம் என்ன ?
மூளைச்சலவை ஒரே பொய்யை திருப்பி திருப்பி சொல்லுதல் 
என்பவனாவால் உலகில் பல உண்மைகள் இருந்த இடமே இல்லாமல் போய்விட்ட்து.

நான் ஒரு நாட்டுக்கு பயணம் செய்தால் அந்த பயண நேரத்தில் ஆவது 
அந்த நாட்டை பற்றி வாசிப்பது வழக்கம். அப்படி கவாய் என்று ஒரு அமெரிக்காவின் 
மாநிலமாக பசுவிக் சமுத்திரத்த்தில் இருக்கும் ஒரு தீவு கூட்ட்டத்திட்கு சென்றேன்.

அப்போது அதை வாசிக்கும்போது ....
2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் பிஜி தீவு மக்கள் அங்கே குடியேற தொடங்கினார்கள் என்றும் 
(பொலிசியன்ஸ்) 
பின்பு 1778இல் கப்டன் ஜேம்ஸ் கூக் அதை கண்டு பிடித்தார் என்று இருந்தது.

ஹவாய் இல் இருந்து பிஜி தீவு அமெரிக்காவை விட தொலைவாகவே இருக்கிறது.
அந்த நாட்டு மக்கள் கடல் பயணங்களை இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடங்கி இருக்கிறார்கள் 
மனிதர்கள் இல்லாத மனித வாழ்விட்கு உகந்த இடங்களில் குடியேறி அடுத்தவனை கொல்லாது 
வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இவளவு உண்மையும் ஒரே வரியில் உலகிட்கு மறைக்கப்படுகிறது 

ஜேம்ஸ் கூக் ஹவாய் யை கண்டுபிடித்தார்! 
இந்த ஒரு பொய்யை சொல்லிவந்ததால் .... ஹவாய் இன்று உரியவர்களுக்கு சொந்தமில்லை.

ஹிட்லர் இல்லாது போயிருந்தால் ......
இலங்கை வரலாறு எப்படி இருந்திருக்குமோ யாருக்கும் தெரியாது.

ஆங்கிலம் தெரியாது என்று எங்கள் அப்பப்பா ஆச்சி மாரை 
இங்கிருக்கும் சில தமிழரே சுட்டிருப்பார்கள். 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.