Jump to content

அரசியல் கிசுகிசு செய்திகள்


Recommended Posts

16 பேரது கருத்தியல் பிரச்சினை
 

image_7e29d64805.jpgஅரசாங்கத்தின் கைச் சின்னத்திலிருந்து, எதிரணிக்குத் தாவிய 16 பேரில் சிலர், கருத்தியல் பிரச்சினையில் சிக்குண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தப் பிரச்சினைக்கு, இரண்டு காரணங்களும் சொல்லப்படுகின்றன.

இரண்டு கால்களையும் இரண்டு தோணிகளில் வைத்துக்கொண்டிராது, மொட்டோடு இணைந்து கொள்வோமெனக் கூறுபவர்களின் எண்ணிக்கையும், இதில் அதிகமாகத்தான் இருக்கிறதாம்.

இருப்பினும், இன்னும் கொஞ்ச காலம், கையோடேயே இணைந்திருப்போமென, 16 பேரில் சிலரும் கூறி வருகின்றார்களாம். எவ்வாறாயினும், இந்தச் சண்டைச் சச்சரவுகளைத் தனித்துவிட்டு, முன்னாள் தலைவரின் காலடியில் 16 பேரையும் சரணடையச் செய்யும் முயற்சியிலும், சிலர் ஈடுபட்டு வருகின்றார்களாம்.

 

 

வேட்பாளர் யார்?; குழப்பத்தில் மொட்டு
 

image_a5c1a6cd97.jpgமொட்டுச் சின்னத்தைச் சேர்ந்தவர்கள், கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டுவர முயற்சிக்கும் நிலையில், மேலும் சிலர், வேறு வேறு பெயர்களை முன்வைத்து வருகின்றனர். இதனால், மொட்டைச் சேர்ந்தவர்கள், பெருங் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

தினேஸ் தான், இந்தப் போட்டிக்குத் தகுதியானவரென சிலரும் இல்லை இல்லை... சமல் தான் பொருத்தமானவதென சிலரும் கூறி வருகின்றனர். இதனால், முன்னாள் தலைவர், அமைதி காத்து வருகின்றாராம்.

எது எவ்வாறாயினும், அவரது தீர்மானம், இன்னும் சில மாதங்களில் வரும் சுபமுகூர்த்த வேளையில் தான் அறிவிக்கப்படுமெனச் சொல்லப்படுகிறது.

 

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

கடிக்க...

 

 

•சிறந்த பெறுபேறுகளுக்காக குறைந்த புள்ளிகள் பெறும் மாணவர்களை இடைவிலக்கும் பாடசாலைகள்

           - –செய்தி

 குறைந்த புள்ளிகள் காரணமான ஆசிரியர்களை இடைவிலக்க முடியாதே!

•ஐ.நா. அறிக்கையில் குற்றச்சாட்டுக் கள் இல்லையென ஜனாதிபதி கூறுவது வேடிக்கை -

       –செய்தி

உள்ளதெனக் கூறுவது வாடிக்கை.

•பேருந்து கட்டண அதிகரிப்பிற்கும் தமக்கும் எதுவித தொடர்புமில்லை

   - –தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

அதிகரித்த கட்டணத்தைப் பெற்றுக் கொள்வது மாத்திரமே உங்கள் பணி

•இலங்கைத் தமிழர்களுடைய நலனில் இந்தியாவுக்கு அக்கறை கிடையாது

     -– தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தங்கள் நாட்டிலேயுள்ள தமிழர்கள் மீதே அக்கறையில்லாதபோது.....?

•இலங்கையில் சகல கட்சிகளுடனும் நல்லுறவைப் பேணவிரும்பும் சீனா - –செய்தி

  ஆமாம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒட்டுத்தான்.

•அரசைக் கவிழ்க்கும் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம் - –பொது எதிரணி

 இது எத்தனையாவது முதற்கட்டம்?

•இலங்கை அரசின் இனப்படு கொலைக் கும் தூத்துக்குடி படு கொலைக்கும் என்ன வேறுபாடு?

        - –திருமாவளவன்

 ஆராய ஒரு விசாரணைக் குழுவை அமைத்தால் போச்சி

•ஐக்கிய தேசியக் கட்சி என்னைத் தாக்குவதற்கு ஆரம்பித்துள்ளது

              - –ஜனாதிபதி

 இப்போதுதான் சுரணை வர ஆரம்பித்திருக்கிறது.

•மஹிந்தவையும், மைத்திரியையும் இணைத்து சுதந்திரக் கட்சி அரசை நாம் அமைப்போம் -

     –டிலான்

 சுப்பிரமணிய சுவாமி! எங்கே?

•இன ஒற்றுமை உருக்குலைந்தால் தமிழினம் பெரும்பாதிப்பை சந்திக்கும்

         - –சிவமோகன்

அப்ப, இப்ப சிறு பாதிப்பைத்தான் சந்திச்சிருக்கு?

•சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் மக்கள் இம்முறையும் ஏமாற்றப்படுவார்கள் - –திகாம்பரம்

 நேரகாலத்துடனான தகவலுக்கு நன்றி.

•மிக ஆபத்தானவர் கோத்தாபய - –மங்கள

 பாம்பின் கால் பாம்பறியும்

• •ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சங்கக்காரவை களமி றக்குவதற்கு முடிவு -

       –செய்தி

                   அடித்தால் சிக்சர்

•மைத்திரி ஜனாதிபதியாக வந்த பின்னரே நாட்டில் இயற்கை அனர்த்தம் அதிகரிப்பு -

       –நாமல்

 கண்டுபிடிப்பில் நியூட்டனை மிஞ்சியவர்

•அரசாங்கம் வாக்குறுதிகளை நிறை வேற்றாவிட்டால் பெருந்தோட்ட மக்க ளுடன் வீதியில் இறங்குவோம்

                        - –வேலுகுமார்

 இந்த தமாஷ் தானே வேணாங்கிறோம்

•மஹிந்த ஆட்சியில் நான்தான் பிரதமர் - –மஹிந்தானந்த

         எல்லாரும் பிரதமர் தானுங்க

•தமிழின அழிப்பெனக் கூறி பகிரங்கமாக நினைவு கூர முடியாது

          - –கோத்தாபய

        அந்தரங்கமாக செய்யலாம்

•ஜனாதிபதியானவர் கட்சியில் பதவி வகிக்கவோ அங்கத்தவராக நீடிக்கவோ முடியாது

         - –செய்தி

     முற்றாகக் கருவறுக்க நினைக்கிறது ஜே.வி.பி.

•அர்ஜுன மகேந்திரனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரைக் காப்பாற்றவில்லை

          - –தயாசிறி

       உண்மை உங்களுக்குத் தானே தெரியும்.

•ராஜபக் ஷர்கள் ஆட்சி மீண்டும் வந்தால் பல ஊடகவியலாளர்கள் காணாமல் போவர் - –ரணில்

          நல்லவேளை ஞாபகப்படுத்தியது.  

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-05-27#page-4

Link to comment
Share on other sites

கடிக்க...

 

ஒருவர் செய்த குற்­றத்தை எல்லோர் மீதும் சுமத்த முடி­யாது -

                               –சுசில்

 எல்­லோரும் செய்த குற்­றத்தை ஒருவர் மீது மட்டும் சுமத்­த­லாமோ?

                                                 *******

 

சர்­வ­தேச மது­சாரக் கொள்கை மாநாடு 2019 இல் இலங்­கையில் நடத்த முடிவு

          - –செய்தி

 ரொம்பப் பொருத்­த­மான நாட்­டைத்தான் தெரிவு செய்­தி­ருக்­கி­றார்கள்

                                             ********

நீதி­மன்றில் பத்து இலட்சம் ரூபா அப­ராதம் செலுத்­தி­யவர் மீண்டும் குற்­ற­மி­ழைப்பு -

–செய்தி விடா­மு­யற்­சிக்கு ஓர் எடுத்துக் காட்டு!

                                       ************

தேசியப் பிரச்­சி­னைக்கு எம்மால் மட்­டுமே தீர்வு வழங்க முடியும் - –மஹிந்த

   அதி­கா­ரத்தில் உள்­ள­போது மட்டும் முடி­யாமல் போன­தேனோ?

                                            *****************

பிணை­முறி விவ­கா­ரத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அனை­வ­ருக்கும் மஹிந்த ஆட்­சியில் தண்­டனை

         - –கூட்டு எதிர்க்­கட்சி

இன்னும் பதி­னெட்டு மாசம் இருக்­குங்கோ.

                                                      *******

பெருந்­தோட்ட தமி­ழர்­களின் காணிகள் பல­வந்­த­மாக அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன -

                 –வடிவேல் சுரேஷ்

 எப்ப தூக்­கத்­தி­லி­ருந்து எழும்­பி­னீங்க?

                                         *********************

எஞ்­சிய 18 மாதங்­களில் கிரா­மங்­களில் துரித அபி­வி­ருத்தி

                 - –ரணில்

      துரிதம் துரிதம் என்று சொல்­லியே... தூர்ந்து போச்­சிங்க....!

 

இவ்­வ­ருட இறு­திக்குள் சகல மகா­வலி குடி­யேற்ற மக்­க­ளுக்கும் காணி உறு­திகள் -

                        –ஜனா­தி­பதி

   இந்த அக்­க­றையைத் தோட்டத் தொழி­லா­ளர்கள் பக்­கமும் கொஞ்­ச­மா­வது திருப்­புங்­களேன் 

                                          ***************

குற்­றங்கள் குறித்த விப­ரங்­களை பொருத்­த­மான நேரத்தில் வெளி­யி­டுவேன் -

           –ஜனா­தி­பதி

நேரமே வராது போங்க

                                                  ******************

நீதித்­து­றை­யினர் அர­சி­யல்­வா­தி­களின் பின்னால் செல்லும் நிலை ஏற்­படக் கூடாது -

                        –ஜனா­தி­பதி

            பக்­கத்தில் போகலாம்.

                                             **************

காணி­க­ளுக்­காக ஜனா­தி­பதி வந்தார், பொரு­ளா­தா­ரத்­திற்­காக நான் வந்தேன் - –ரணில்

    உரி­மை­க­ளுக்­காக யாரா­வது வர வேண்டும் என்­ப­துதான் மக்கள் எதிர்­பார்ப்பு.

                                          ******************

வடக்கு தொடர்பில் நாமே முடி­வெ­டுப்போம் -

                              –விக்கி

   உங்கள் தொடர்பில் அரசு முடிவெடுக்கும்

                                    *****************

சமூக வலைத்தளங்களால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் –ஜனாதிபதி 

அதிகம் பாதுகாக்கப்பட்டதும் நீங்கள்

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-06-03#page-4

Link to comment
Share on other sites

கடிக்க...

 

குழப்பக்கூடாது கோத்தா -

 –மங்கள

புலம்பக் கூடாது ஏனையோர்.

 

மஹிந்த எந்தக் கட்சி அவரிடமே கேட்க வேண்டும்

 - –பஷில்

சிலவேளை அவருக்குமே தெரியாமலிருக்கலாம்.

 

 

ஐ.தே.க.வின் தலைமையையே வேட்பாளராகக் களமிறக்குவோம்

–அகில

தலைமை யார் என்பதுதானே பிரச்சினையே.

 

 

குழந்தையின் தந்தை ரணிலே!

- –விமல்

பலருக்கு தந்தை இவர்.

 

 

2020 வரை ரணிலின் அரசைக் கவிழ்ப்பதற்கு இடமளிக்கமாட்டோம்

–திகா

சேவல் கூவியா பொழுது விடியும்?

 

 

மலையகத்தில் எந்தக் கட்சியும் தொழிற்சங்கமும் இன்று மக்களின் நலன் கருதி செயற்படுவதில்லை

- –சதாசிவம்

 என்று தான் செயற்பட்டார்கள்?

 

 

அந்தப் பட்டியலில் எனது பெயர் இல்லை -

–சம்பிக்க

 வேறு பட்டியலில் இருக்கிறதோ என்னவோ?

 

தேர்தலுக்காக தனியாரிடம் பணம் பெறுவது அரசியல்வாதிகளுக்கு பெரும் இழுக்கு -

 –அகில

கம்பனிகளிடம் பெறலாமே!

 

 

மலையக மக்களை செம்பனை பயிர்ச்செய்கை உறிஞ்சிவிடும் -

–செய்தி

தொழிற்சங்கவாதிகளை விடவா?

 

 

புதிய தேர்தல் தொகுதிமுறை சிறுபான்மையினருக்கு ஆபத்து -

–ஹக்கீம்

சுட்டால் தான் தெரியும் நெருப்பென்று

 

 

பிரதமரின் சகோதரரின் ஊடக நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கோபுரம் மூடப்பட்டமை சுதந்திரத்தை பாதிக்கும்

- –விமல் வீரவன்ச

முதலைக் கண்ணீர் வடிப்பதில் வல்லவர்

 

 

பாராளுமன்றத்தில் யாரும் எதிர்க்காவிடில் கள்ளு, சாராயத்தின் விலைகளைக் குறைக்க முடியும்

- –மங்கள

 நல்லதை செய்ய விடமாட்டார்களே

 

 

25 வருட காலம் இணைந்து வாழ்ந்த கணவனை விடவும் நாய்களே

 பெரிது -

–செய்தி

உண்மை புரிய இவ்வளவு காலம்?

 

 

உள்ளூராட்சித் தேர்தல் பின்னடைவு தமிழ்க் கூட்டமைப்பு கூடி ஆராய்வு -

–செய்தி

அடுத்த தேர்தலின் பின்பு ஆராய்ந்தால் போதாதா?

 

 

இன்று நான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு என்ன காரணம்

 -– ஜனாதிபதி

ஒண்ணுமே புரியல உலகத்திலே

 

 

ஆரம்ப காலத்தில் கல்வியில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் தமிழர்களேயாவர் -

–பீடாதிபதி குணபாலன்

பழம் பெருமை பேசித்தான் இப்படியானோம்.

 

 

எனக்காக வழங்கப்பட்ட காசோலை குறித்து நான் அறிந்திருக்கவில்லை

 --– சுஜீவ

 மற்றவர்கள் அறிந்திருந்ததுதான் பிரச்சினை

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-06-10#page-4

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கடிக்க...

 

 

•பேய் பிசா­சுகள் பயத்தைப் போக்க சுடு­காட்டில் உண்டு உறங்­கிய உறுப்­பினர் - –செய்தி 

    உற­வினர் வந்­து­விட்டார் என்று குதூ­க­லித்­தி­ருக்கும்

 

 

•அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரி­மையை இரண்டு மாதங்­களில் இரத்து செய்வேன் - –கோத்தா

  அர­சனை நம்பி புரு­ஷனைக் கைவிட்ட கதை­யா­யி­டுமோ தெரி­யலை

 

 

•ரணில் வில­கா­விட்டால் தோல்வி நிச்­சயம் -

       –செய்தி

வில­கிட்டா மாத்­திரம் வெற்றி நிச்­சய மாக்கும்

 

 

•பிர­பா­க­ர­னுக்கு அன்று புரிந்­தது எமக்கு இன்­றுதான் புரி­கி­றது

         - –ஞான­சார தேரர்

தேர­ருக்கே புரிந்து விட்­டதால் மற்­றவர்களுக்குப் புரிந்­தது போலத்தான்.

 

 

•கல்வி அமைச்சின் அனைத்து நிய­ம­னங்­களும் தகுதி அடிப்­ப­டை­யி­லேயே வழங்கப்படு­கின்­றன

       - –இரா­தா­கி­ருஷ்ணன்

வேறு நிய­ம­னங்­க­ளுக்கு அவை தேவை­யில்லை போல

 

•அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விடம் ஒப்­ப­டைக்­கு­மாறு எம்மை பல­வந்­தப்­ப­டுத்­த­வில்லை

             - –ரணில்

  சீனாவை பல­வந்­தப்­ப­டுத்தி இருப்­பார்­களோ?

 

 

 •24 பெண்­களை மணம்­மு­டித்­த­வ­ருக்கு வீட்டுக் காவல்

            - –செய்தி

          பாவம், 25ஆவது தலை­வலி

 

 

 •இலங்­கையில் தேயிலை உற்­பத்தி 11 சத­வீதம் வளர்ச்சி

               - –செய்தி

கூட்டு ஒப்­பந்­தத்­தின்­போது மட்டும் இது வீழ்ச்சி

 

 

 •இளைப்­பா­றிய தமிழ் ஆசி­ரி­யர்­களை சேவையில் சேர்ப்­ப­தற்கு எதிர்ப்பு -

                               –செய்தி

   காவோலை விழ குருத்­தோலை சிரிக்­குமாம்.

 

 

 •சீனாவின் இரா­ணுவம் இலங்­கைக்கு வராது -

   –ரணில்

   வரா­மலே காரி­யத்தைச் சாதித்து விடு­வார்கள் என்­கி­றீர்கள்

 

 

 •ஹிட்லர், இடி அமின், பொல்­பொட்டின் ஆட்சி இலங்­கைக்கு அவ­சி­ய­மில்லை -

                                –ரணில்

        நானே போதும் என்­கி­றாரோ

 

 

•ரணில் இல்­லையேல் பலர் இருக்­கின்­றனர் ராஜபக் ஷக்கள் இல்­லையேல் எவரும் கிடை­யாது

       - –ஐ.தே.க. எம்.பி.சாடல்

  சாடல் உண்­மையில் ரணி­லுக்­குத்தான்.

 

 

*அடுத்த தேர்­தலில் இந்­தி­யாவால் தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் - – மஹிந்த

                   சீனாவை விடவா?

 

 

• அரச தொழில்­களை நாம் சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் -

                            –ஆறு­முகன்

  'சரி­யாக' பயன்­ப­டுத்தும் வாய்ப்பு காற்று வீசும் பக்­கம்தான்

 

 

* ரவி கரு­ணா­நா­யக்­கவின் குற்­றச்­சாட்டை நிரூ­பிக்க சாட்­சி­யங்கள் இல்லை

        - –இந்­தி­ரஜித் குமா­ர­சாமி

     சாட்­சியம் வைத்தா குற்றம் நடக்கும்

 

 

* படை­யி­னரின் கண்­கா­ணிப்பில் கஞ்சா பயி­ரிட யோசனை

          - –ராஜித

    பாலுக்குப் பூனை காவல்

 

 

* வறுமை இல்லாதொழிக்கப்படும்

                               –ஜனாதிபதி

            அப்ப அப்ப ஒரு ஜோக்?

 

 

* கூட்டமைப்புக்கு விசுவாசமாகவே இதுவரை நடந்து கொண்டுள்ளேன் -

   –விக்கி

    இனிமேல் சொல்ல முடியாது?

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-01#page-4

Link to comment
Share on other sites

கடிக்க...

 

கடிக்க....

விஜ­ய­க­லாவை அங்­கொடை ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்­புங்கள்

                           –மரிக்கார்

அங்­கி­ருந்து வந்த அனு­பவம் போல

 

 

கடு­மை­யாக தண்­டி­யுங்கள் -

ஞான ­சார­தேரர்

     “ஜம்­பரில்" வந்த ஞானம்

 

 

பகி­ரங்க மன்­னிப்பு கேட்க வேண்டும்

         - –ஜே.வி.பி விஜித ஹேரத்

  மறந்து போன கடந்த காலம்.

 

 

கோத்தா ஜனா­தி­ப­தி­யானால் நான் நாட்டை நிர்­வ­கிப்பேன்

                                     –பசில்

    அலி­பா­பாவும் 40திரு­டர்­களும் தான் நினை­வுக்கு வரு­கி­றது.

 

 

விஜ­ய­க­லா­வி­ட­மி­ருந்து பத­வியை பறி­யுங்கள்.

                          -–கூட்டு எதி­ரணி

   சரிதான் தேசிய தலை­வ­ராக்கி விட்­டீங்க போங்க.

 

 

600பேரைக் கொன்­ற­வ­ருக்கு

உப­த­லைவர், பிர­பா­க­ரனை கொன்­றவர் சிறை­யி­ல­டைப்பு -

                             –பிர­தமர்

     மாமி உடைத்தால் மண்­குடம் மரு­மகள் உடைத்தால் பொன்­குடம்.

 

 

விஜ­ய­க­லா­வுடன் தொலை­பேசி உரை­யாடல்

                –ரஞ்சன் ராம­நா­யக்க

   தேசிய கட்­சியின் நய­வஞ்­சகம்

 

 

பிர­தமர் ரணில் நாளை சிங்­கப்பூர் பயணம் -

                              –செய்தி

             நண்­பேன்டா?

 

 

"எங்கே ஜனா­தி­பதி?” என்று கூச்­ச­லிட்­ட­வாறு இர­க­சிய சேவை உத்­தி­யோ­கத்­தரை அறைந்த இளைஞன் -

       –செய்தி

    அவ­ச­ரப்­ப­டா­தீர்கள் இது அமெ­ரிக்­காவில்

 

 

விஜ­ய­க­லா­வுக்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஆத­ரவு

                                  – -செய்தி

  நிலை­மையை மேலும் மோச­மாக்­காமல் இருந்தால் சரிதான்.

 

 

இரண்டாம் அத்­தி­யா­யத்­துக்கு தயா­ரா­குங்கள் மஹிந்த சிந்­த­னையைத் தொடர்வோம்

                             - –மஹிந்த

முதலாம் அத்­தி­யா­யத்தை ஒழுங்­காக முடிக்­க­வில்­லையே நீங்கள்.

 

 

 மத்­திய, ஊவா கல்வி அமைச்­சுக்கள் இரா­ஜாங்க அமைச்­சோடு இணைந்து செய­லாற்­றட்டும் - –ஆறு­முகன்

  அப்ப எதுக்கு வேறாக மாகாணக் கல்வி அமைச்சு

 

 

முதியோர் இல்­லத்­துக்கு அனுப்ப முயற்­சித்த மகனை சுட்­டுக்­கொன்ற 92 வயது தாய் - –செய்தி

              வீரத்தாய்!

 

 

வாங்­கா­மத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட ஆறு கோடி ரூபா வேறு பிர­தே­சங்­க­ளுக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டது -

                    –உது­மா­லெப்பை

வாங்­காமம் வாங்­காமல் விட்­டதோ?

 

 

கால­னித்­துவ காலத்­துடன் ஒப்­பி­டு­கையில் மலை­யக சுகா­தாரத் துறையில் முன்­னேற்றம்

   –செய்தி

     அப்­படி சொல்வதில் ஒரு சுகம்

 

 

மோத வேண்­டு­மெனில் எம்­மோடு மோதுங்கள் -மஹிந்­த­விடம் நியூயோர்க் டைம்ஸ் ஆசி­ரியர் -

      –செய்தி

 சபாஷ் சரி­யான போட்டி

 

 

மாட்டுக் கொட்­டில்­க­ளாக இருந்த மலை­யகப் பாட­சா­லைகள் சீனாவின் உத­வியால் மாடி­க­ளாக மாறி­வ­ரு­கின்­றன.

               –வடிவேல் சுரேஷ்

  'சீனயென்' பேசுகிறது

 

 

புதுக்­கடை மேல் நீதி­மன்றக் கட்­டடம் இடிந்து விழும் அபாயம்

                         –விஜ­ய­தாஸ

   இலங்­கையின் நீதித்­து­றையைப் பிர­தி­ப­லிக்­கி­றதோ?

 

 

 

இலங்­கைக்கு ஹிட்லர் வரு­வா­ரென சிறு­வர்கள் அச்­ச­ம­டையத் தேவை­யில்லை -

              –சந்­தி­ராணி பண்டார

 பெரியவர்கள் மட்டும் அச்ச மடைந்தால் போதும்?

 

 

வட மாகாண சபையைக் கைப்பற்றி யிருந்தால் தேனும்- பாலும் ஓட வைத்திருப்போம் -

                           –டக்ளஸ்

   பூச்சியும் புழுவும் தான் மிஞ்சியிருக்கும்.

 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-08#page-4

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
pg9-1.jpg?itok=drrFYsQ9
 

அமைதிக்கும் பின்னால்....

அமைச்சரவை கூட்டம் என்றாலே மோதல் இல்லாமல் இருக்காது. நல்லாட்சி அரசாங்கத்தில் இரு கட்சிகள் இணைந்துள்ள நிலையில் மோதல் குறைவின்றி இருக்கும். ஆனால் கடந்த வார அமைச்சவை கூட்டம் உப்புச்சப்பின்றி அமைதியாக நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. அமைச்சரவை பத்திரங்கள் குறித்து ஆராயப்பட்ட பின்னர் கொஞ்ச நேரத்தில் கூட்டம் முடிந்து விட்டதாம். அமைதிக்குப் பின்னால் தான் பூகம்பம் வெடிக்கும் என்பதால் அடுத்த கூட்டம் சூடாக இருக்கும் என சிலர் ஆருடம் கூறியுள்ளனர்.

கடவுளாக மாறிய அமைச்சர் ராஜித

 

 
 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த வாரம் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருக்கு தமிழ் அரசியல்வாதிகளும் மக்களும் மகத்தான வரவேற்பு அளித்திருந்தார்கள். சில அரசியல்வாதிகளை அவர்கள் புறக்கணித்தாலும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைச்சர் ராஜிதவை அவர்கள் அன்பாக வரவேற்றிருந்தார்கள்.

ஏனைய அமைச்சர்களையும் அரசாங்கத்தையும் வெளிப்படையாக விமர்சிக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்,வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகள் வடமாகாண அமைச்சர்கள் என பலரும் இதில் பங்கேற்றார்கள். சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் இதில் பங்கேற்றிருந்தார்.

சீ.வி.விக்னேஷ்வரனும் விஜயகலாவும் அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்து அவருடன் நெருக்கமாக உரையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

'இப்பொழுது யாழ்ப்பாணத்தில் தான் குடியிருக்கிறீர்களா'? வடமாகாண முதலமைச்சரிடம் அமைச்சர் கேட்டாராம்.'ஆமாமாம். இங்கு தான் இருக்கிறேன். மாதத்திற்கு ஒரு தடவை அலுவலக தேவைகளுக்காக கொழும்பு சென்று வருவேன்' என சீ.வி விக்னேஸ்வரன் பதிலளித்தார். சுகாதார துறை குறித்தும் இருவரும் பேசிக் கொண்டார்களாம். வடக்கில் சுகாதார அபிவிருத்து குறித்து முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் கடவுளைப் போன்றவர்கள். எனது நண்பர் டொக்டர் ராஜித சேனாரத்னவும் கடவுளைப் போன்று சேவையாற்றுகிறார் என சீ.வி பாராட்டினாராம். மாவை சேனாதிராஜாவும் அமைச்சரை புகழ்ந்துதள்ளியதாக அறிய வருகிறது. தமிழ் மக்களின் உரிமைக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுக்கும் ஒரே சிங்கள தலைவர் ராஜித என அவர் கூறினாராம்.

இங்கு உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், தனது புலி ஆதரவு உரை பற்றி விளக்கினாராம்.

விஜயகலாவை பற்றி அருகில் இருந்த மாவை சேனாதிராஜவுடன் சிரித்தவாறு பேசிக் கொண்டிருந்த அமைச்சர் 'விஜயகலா இப்பொழுது மிகப் பிரபலமாகி விட்டார்' என்றாராம். இதனை மாவையும் ஆமோதித்தாராம். 'சில வேளைகளில் விஜயகலா அவரின் கணவர் மகேஸ்வரன் போன்று செயலாற்றுகிறார். இது சிறந்த அரசியல் இலட்சணம் என்று அமைச்சர் சிரித்தபடி சொன்னாராம்.

சுயாதீனமாக செயற்படும் திட்டம் பின்வாங்கியது மஹிந்த அணி

சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை வெளியிடும் திட்டத்தை ஒன்றிணைந்த எதிரணி சற்று ஒத்திவைத்துள்ளதாக அறிய வருகிறது. இதனால் தமது எம்.பி பதவி பறிபோகும் என்பதால் அவசரப்படக் கூடாது என சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறியுள்ளதாக அறிய வருகிறது. இந்த விடயம் பற்றி ஆராய நிபுணர் குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி நியமித்துள்ளாராம்.

முடிந்தால் சுயாதீமாக செயற்படுமாறு அரசாங்க தரப்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள சு.க தவிர்ந்த கூட்டணி கட்சிகளுக்கு சுயாதீனமாக செயற்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அந்த கட்சி தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனாராம். ஆனால் அவசரப்பட வேண்டாம் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய வருகிறது.

கதிரையால் கதிரைக்கு பிரச்சினை

மேல் மாகாண சபைக்கு 125 கதிரைகளை அதிகவிலையில் கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட முயற்சி ஜனாதிபதியின் பணிப்பினால் தடைப்பட்டது. இதனை நிறுத்துமாறு ஆளுநரிடம் அவர் உத்தரவிட்டதையடுத்த அதனை அவர் நிறுத்த ஆலோசனை வழங்கினார்.

அரசாங்கம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த கதிரை கொள்வனவு பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மாகாண சபையின் நிதியின் கீழ் தான் இவற்றை கொள்வனவு செய்தாலும் மக்களின் பணம் வீணடிக்கப்படுவதாக ஜனாதிபதி கடுமையாக கூறியிருந்தாராம். முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய உட்பட முக்கியஸ்தர்கள் சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கடுமையாக எச்சரித்ததாகவும் அறிய வருகிறது.

http://www.vaaramanjari.lk/2018/08/19/அரசியல்/கீத்-நோயர்-கடத்தல்-விசாரணை-வாய்திறக்காத-மஹிந்த-பிரத்தியேக-செயலாளருக்கு-பலர்

கடிக்க...

 

* மாகாண சபை விவ­கா­ரங்­களில் மத்­திய அரசு தலை­யி­டாது –- ராஜித

 அரசு தலையிடாது ஆளுநர்கள் தலையிடுவர்.

 

* சுயா­தீ­ன­மாகச் செயற்­படும் விவ­காரம் குறித்து கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் குழப்பம் இல்லை – கம்­மன்­பில

   குழப்பம் வேறு பல விவ­கா­ரங்கள் குறித்­துத்தான்.

 

* தமிழ் மக்­க­ளுக்கு எதிர்க்­கட்சி தலைமைப் பதவி தேவை­யில்லை

        – கூட்டு எதி­ரணி உங்­க­ளுக்குத் தேவை­யாக இருக்கிறதே.

 

* ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களைப் பயன்­ப­டுத்தி நிதி­மோ­சடி செய்தால் கடும் நட­வ­டிக்கை

 - –மனுஷ் நாண­யக்­கார

அமைச்­சர்­களின் பெயர்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடையொன்றுமில்லையோ?

 

* இளம் அர­சி­யல்­வா­தி­களை வழி­ந­டத்த வேண்­டி­யது காலத்தின் கட்­டாய தேவை - – செய்தி முதிய அர­சி­யல்­வா­தி­களை வீட்­டுக்கு அனுப்ப வேண்­டி­யது அதை­விட முக்கியம்.

 

*கூட்­ட­மைப்பும், ஜே.வி.பி.யும் அரசை காப்­பாற்றி வரு­கின்­றன

 - – விமல் வீர­வன்ச

உங்­க­ளுக்கு மஹிந்த போல

அவர்­க­ளுக்கு அரசு.

 

 

* இரா­ணுவ வீரர்­களை எந்த நீதி­மன்­றுக்கும் கொண்டு செல்ல இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை –- தலதா

    இனப்படு­கொ­லைக்கு நியாயம் ஒரு­போதும் கிடைக்கப்

போவது­மில்லை.

 

 

* முதலில் ஜனா­தி­பதித் தேர்தல்

         –- லக் ஷ்மன் கிரி­யெல்ல

   தேர்­தலை முன்­கூட்­டியே

வைத்­த­வர்­களின் கதைகள் தெரிந்­துமா?

 

* தேர்தல்கால வாக்­கு­று­தி­களை அமைச்சர் திகாம்­பரம் நிறை­வேற்றி வரு­கிறார் – ஹக்கீம்

                    நீங்கள்.....?

 

*அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் அடுத்த தேர்தல் வரை வேலை­நி­றுத்­தங்கள் தொடரும்

    – -இம்ரான் மஹ்ரூப்

    இதே அரசு மீண்டும் வென்றால் மறு­ப­டியும் வேலை நிறுத்தமா?

 

 

* தினேஷ் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­வதில் ஐ.தே.க.வுக்கு எந்த சிக்­கலும் இல்லை - – நவீன் சிக்கல் இருப்­பது கூட்டு எதி­ரணி­யில் தான்.

 

* நிரந்­தர அர­சியல் தீர்வை நோக்கி தமிழ்க் கூட்­ட­மைப்பு நிதா­ன­மாகப் பயணம்- – செய்தி

         இருந்­தாலும் ஆமை வேகமாகவும் கூடாது.

 

 

* மஹிந்­த­வுடன் இணை­வ­தற்கு இன்னும் தீர்­மா­னிக்­க­வில்லை

  - – மனோ

எந்த நிமி­டத்­திலும்

 தீர்­மா­னிக்­கப்­ப­டலாம்.

 

 

* எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தும் சுதந்­திரம் யாழ். மக்­க­ளுக்கும் இருக்­கி­றது - – ராஜித

 ஒன்றும் கொடுக்கப் போவதில்லை என்று உங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.

 

* சிங்­கப்பூர் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம்: நாட்­டுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­மாயின் ஒரு வரு­டத்­துக்குள் திருத்தம்

   –- அரசு – விடிந்த பின்­னாலே விளக்­கெ­தற்கு?

 

* உலகில் போதை­வஸ்து பாவ­னையில் பெண்­களே முன்­னி­லையில்

- – மேஜர் நிசங்க அம­ர­சிங்க

         ஆண்கள் வெட்கித் தலை குனிய வேண்­டாமோ?

 

 

* ஒரு­புறம் முரண்­பாடு மறு­புறம் புதிய நட்பு –- தலைப்பு

       பூனைக்கும் தோழன்; பாலுக்கும் காவல்

 

* சிறு­பான்மை மக்­களின் எதிர்­கா­ல­மாக கல்வி மாத்­தி­ரமே காணப்­ப­டு­கின்­றது -

    – பைசர் முஸ்­தபா

      மற்­ற­தெல்லாம் தான் பிடுங்­கப்­பட்டு விடு­கி­றதே.

 

 

* இலங்­கையில் வரு­டாந்தம் 200 வைத்­தி­யர்கள் காணாமல் போகின்­றனர்

   -– பைசல் காசீம்

 காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தில் முறைப்­பாடு செய்தால் என்ன?

 

 

* நல்­ல­வர்கள், திற­மை­யா­ன­வர்­களை வடக்கில் விட்டு வைக்­க­மாட்­டார்கள் -

        –விக்கி

  உங்­களை விட்டு வைத்­தி­ருப்­பது ஏன் என்­பது இப்­போது தான் புரி­கி­றது.

 

 

* தமிழ் கிரா­மத்தை முழு­மை­யான ஆக்­கி­ர­மிப்பில் வைத்­தி­ருக்கும் வன­வி­லங்கு இலாகா - – செய்தி

    எப்­படி இருந்­தாலும் வன­வி­லங்கு இலா­கா­தானே?

 

* மஹிந்தவை நாட்டின் தலைவராக்கும் தெளிவான வேலைத்திட்டம் எம்மிடம் உண்டு

  –- ஜானக வக்கும்புர

    ஆனால் மக்களிடம் இல்லையே?

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-08-19#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு கூட்டணி அமைத்ததன்  பிறகு  தனித்து  நிற்கும் போது  எல்லா கட்சிகளினும் ஆதரவு குறைத்து உள்ளது   உதாரணம் வைகோ   விசயகாந்த்.        இவர்களுக்கு கூட்டணி அமைக்க முதல் இருந்த ஆதரவு வீதம்   கூட்டணி உடைந்த பிற்பாடு  இல்லை  சடுதியாக மிகவும் குறைத்து விட்டது   சீமானும். கூட்டணி அமைத்து   அதன் பின் கூட்டணி உடைத்து தனியாக நிற்கும் போது  ஆதரவு குறையும்     இதை தான் சொன்னேன்   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது    அப்படி அமைக்கப்படும் போது  சீமான் கட்சியின் ஆதரவு குறையாது    சீமான் அல்லது வேறு கட்சி தலைவர்கள்   இன்னொரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து   அது உடைத்து அடுத்து வரும் தேர்தலில் தனியாக போட்டி இடும் போது  பொதுவாக  அனைத்து கட்சியின் ஆதரவு குறையும்     கூட்டணி அமைத்து  உடைந்த பிற்பாடு  சின்ன கட்சிகளின் எதிர்காலம்  எப்படி இருக்கும்?? இருக்கிறது?? 
    • ஆகா தில்லை எனக்கு 21 வயது ஐஸ்வரியாவை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. ஐஸ்வரியா வரியா வரியா.
    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.