Archived

This topic is now archived and is closed to further replies.

போல்

மீண்டுமொரு போராட்டத்திற்கு தயாராகும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள்!

Recommended Posts

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்கள் பூர்வீக வாழ்விட நிலங்களில் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மீண்டுமொரு உண்ணாவிரதப் போரட்டம் ஆரம்பிக்கவுள்ளனர்.

இன்று மாலை 4.00 மணியவளில் கேப்பாபுலவு மாதிரிக் கிராம சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்வரும் 19ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து தமக்கு ஒரு நீதியான முடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான தமிழ் கட்சி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை அடுத்து மேற்படி முடிவு எடுத்துள்ளதாக சம்மந்தப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிகள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கேப்பாப்புலவைச் சேர்ந்த 230 குடும்பங்கள், 2010 ஆம் ஆண்டு கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

குடியமர்த்தப்பட்ட இக் கிராம மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

இறுதியாக 3ம் மாதம் 23ம் திகதி ஆறுமுகம் வேலாயுதம் என்பவர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டார். மூன்றாம் நாள் வடமாகாண முதலமைச்சர் உண்ணவிரதத்தினை கைவிடுமாறும் மூன்று மாதத்தில் நல்லதொரு தீர்வை பெற்றுத்தருவதாக வடமாகண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக அறியத்தந்திருந்தார். இந்நிலையில் அறிவித்தலை ஏற்று உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து 4ம் மாதம் மாங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவின் ஏற்பாட்டில்முல்லைத்தீவு மாவட்ட மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது.

அதில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கேப்பப்புலவு மக்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

எனினும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என இன்று கேப்பப்புலவு மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

http://www.tamilwin.com/property/01/110642

Share this post


Link to post
Share on other sites

 • Similar Content

  • By போல்
   இலகுவில் செய்யக்கூடிய விடயங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
   அமெரிக்க காங்கிரஸ் சபையின் இலங்கை ஆர்வலர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
   இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னேற்றம் அற்ற நிலைமை காணப்பட்டது.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஓரளவு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
   காணிகளை விடுவித்தல் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றன தொடர்பில்செய்யக்கூடிய ஆற்றக்கூடிய கருமங்களை அரசாங்கம் ஆற்றத் தவறியுள்ளது.
   ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில்அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.இதனால் மக்கள் தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ளனர்.
   அரசியல் அமைப்பு விடயங்கள் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.எனினும் அன்றாடம் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறையவில்லை.
   எனவே, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு உரிய நலன்களை வழங்கவில்லை எனதெரிவித்துள்ளார்.
   மேலும், இந்த சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத்காரியவசம் பரிந்துரைகள் மெதுவாகவே நிறைவேற்றப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டைஏற்றுக்கொள்வதாக கூறினார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
   ஆனால் ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் எல்லா விடயங்களும் நிறைவேற்றப்படும், அதில் தாமதம் ஏற்பட்டிருக்குமே தவிர நிறைவேற்றப்படாத நிலை ஏற்படாது எனகாரியவசம் கூறியிருந்தார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
   http://www.tamilwin.com/politics/01/107704