Jump to content

குட்டிக் கதைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது. 
ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்  இருக்கின்றன? 
 கோபால்.👨
 முருகன். 👨
 பழனிச்சாமி 👨
 மாயாண்டி 👨
 முருகேசன். 👨
 ஆனால்  நமக்கு மட்டும் "கோழி" 🐔என்ற  ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள். 
அதற்கு தாய்கோழி 🐔:
மனிதர்களுக்கு  பல பெயர்கள் உள்ளன. 
ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு  ஒரே பெயர் " பிணம் "💀💀💀💀💀💀💀
ஆனால் நாம் செத்தபிறகு  நமக்கு பல பெயர்கள் :
சிக்கன் 65.
சிக்கன் புலாவ்
சில்லி சிக்கன் 
சிக்கன் வறுவல்
சிக்கன் தந்தூரி
கார்லிக் சிக்கன்
ஜிஞ்சேர் சிக்கன்
பெப்பேர் சிக்கன்....
🥙பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்..👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 207
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அன்புத்தம்பி

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

தமிழ் சிறி

இணையத்தில், ரசித்த...  குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதா

தமிழ் சிறி

படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ப்ளாக் டீயும்... ப்ளாக்கான திருமணமும்.

அன்றொரு நாள்
பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.
ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்.
இன்னொரு தட்டுல சிக்கென் கட்லெட், பருப்பு வடை, பழ, பஜ்ஜி.!
குடிக்க காப்பியா டீயான்னு அவங்க கேட்க...
எல்லாரும் டீ, காப்பி ன்னு ஆர்டர் பண்ண...
நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...
எல்லோருக்கும் என்னையும் பிடித்து போக...,
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...
கூச்சத்தை கலைத்து பழ, பஜ்ஜியை ஒரு கடி கடித்து...,
ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..
எங்க அக்கா பையனுக்கு என்ன தோணிச்சோ...
திடீர்ன்னு,
"மாமா....
சோடா ஊத்தலையா"ன்னு கேட்க..
Rest is History.....
ப்ளாக் டீயும்... ப்ளாக்கான திருமணமும். 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீதிபதி தன் மனைவியிடம் சொன்னார்,
"என் வாழ்நாளில் நான் வழக்கறிஞராக இருந்தபோதும் பிறகு நீதிபதியாக வந்தபோதும் இப்படி ஒரு வழக்கை நான் சந்தித்தது இல்லை,
அப்படி ஒரு வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது"
மனைவி கேட்டார்:-
அப்படி என்ன வழக்கு சொல்லுங்கள்!!
அதற்கு நீதிபதி சொன்னார்:-
வயதான தந்தை தன் மகனைப் பற்றி வழக்கு பதிவு செய்தார்.
அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால்,
"என் மகன் எனக்கு பணம் தருவதே கிடையாது,
எனவே மாதம் ஒரு முறையாவது அவன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்!!
உடனே அந்த முதியவரின் மகனை அழைத்து நான் (நீதிபதி) கேட்டேன்,
இவர் உங்களின் தந்தையா.??
என்று கேட்டேன்!!
அதற்கு அவர்:-
ஆம் இவர் என் தந்தை தான் என்று சொன்னார்!!
அப்போது நான் அவரிடம் (மகனிடம்) கேட்டேன்,
உங்களின் தந்தை குறிப்பிடுவது போல் மாத மாதம் அவருக்கு பணம் கொடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்.??
ஏன் அப்படி கொடுப்பதில்லை.??
அதற்கு அவர் (மகன்) சொன்னார்:-
ஐயா, அவர் பணக்காரர்.
அவருக்கு வருமானம் அதிகமாக வருகிறது.
அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.
அவருக்கு ஓய்வூதியம் வருகிறது.
அதனால்தான் நான் என் தந்தைக்கு பணம் கொடுக்கவில்லை.
இவர் (என் தந்தை) இப்படி வழக்கு தொடுத்திருப்பது எனக்கு வியப்பாக உள்ளது!!
நான் முதியவரிடம் கேட்டேன்.
உங்களுக்கு பணம் உள்ளது,
மாதா மாதம் ஓய்வூதியமும் வருகிறது,
வரவை விட உங்களின் செலவு குறைவாகத்தானே இருக்கிறது.??
என்று கேட்டேன்!!
அதற்கு அந்த பெரியவர்:-
ஆம் எனக்கு பணம் போதிய அளவில் உள்ளது.
இருந்தாலும் என் மகன் மாதா மாதம் எனக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயாவது கொடுக்க வேண்டும்.
அதுவும் என் மகன் நேரில் வந்து என்னிடம் கொடுத்து,
குறைந்தபட்சம் ஒரு நாளாவது என்னிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்!!
நானும் பெரியவர் சொன்னபடியே அவரின் மகனிடம் நீங்கள் உங்கள் தந்தைக்கு பணம் கொடுத்து,
ஒரு நாள் அவரிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டேன்!!
நீதிமன்றத்தை விட்டு நான் வெளியில் வந்ததும் அந்த முதியவரை தனியாக அழைத்து,
உங்களிடம் பணம் அதிகமாக இருந்த போதும் உங்கள் மகனிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு,
அந்த முதியவர் சொன்னார்,
எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகன்.
நானும் என் மனைவியும் என் சொந்த ஊரில் வசிக்கிறோம்,
மாதம் ஒரு முறையாவது என் மகனை பார்க்கின்ற வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று கருதினேன் என்று கண்கள் கலங்கியபடி சொன்னார்......
Voir la traduction
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

409717626_1585878045517743_2132391997270

முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ஒரு மணியார்டர் வந்தது.
"இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்...
நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம்.
நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் .
இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் .
நான் இறந்து விட்டால்...
என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை.
எனவே
எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும்.
அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்.
வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன் பாதித் தொகையை உங்கள் காப்பகதிற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள்
மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.
என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால்...
தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்."
இப்படிக்கு மீனாள் ராமசாமி.
என்று எழுதி இருந்தது.
சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர் இருக்கின்றனர்.
தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டிருந்தது.
'யார் இந்த மீனாள் ராமசாமி? '
என்று அறிந்து கொள்ள காப்பக மேனேஜருக்கு, ஆவல் அதிகரித்து வந்தது.
'ஒரு நாள் நேரில் சென்று பார்த்து வரவேண்டும்' என்று நினைத்தார்.
ஆனால், வேலைப் பளு காரணமாக
முடியவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை...
'இன்று, கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார்.
அவருடைய இருசக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.
சின்ன கட்டிடம்...
வெளியில் தகரப் பலகையில் கூரை வேயப்பட்டிருந்தது.
பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது.
எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.
"நீங்கள் தானே மீனாள் ராமசாமி?”
என்று கேட்டார்.
“ஆமாம் தம்பி! நீங்கள் யார்? “ என்று கேட்டார்.
விவரங்களைச் சொன்னார்.
“அப்படியா தம்பி
ரொம்ப சந்தோஷம்...
உட்காருங்க.
ஏதாவது சாப்பிடுகிறீர்களா?”
என்று இருக்கையைக் காண்பித்தார்.
“ஒன்றும் வேண்டாம்
தண்ணீர் மட்டும் கொடுங்கள்”
தண்ணீர் கொடுத்தபடியே,
“நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடையை முப்பது வருடங்களாக நடத்தி வருகிறோம்...
ஆரம்பித்தில், இரண்டு இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் .
பிறகு இரண்டு, மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம்.
எங்கள் கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே சாதாரணமாக ஒருவருக்கு வயிறு நிறைந்துவிடும்.
கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் வருவார்கள்.
நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம்.
எங்களுக்கு குழந்தைகள் இல்லை...
எனவே, அதிகம் செலவுகள் இல்லை.
அதனால் குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம்.
வாராவாரம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை விட மேலும் கொஞ்சம் மிஞ்சும்...
அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார்.
எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம்”
என்று விபரமாகச் சொல்லி
முடித்தார்.
இதற்குள் மணி மாலை ஐந்து ஆனது.
“இப்போது ஆரம்பிச்சா தான் ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.
“சரிங்க ஐயா,
உங்களைப் பார்க்க வந்தேன்.
வேறு விஷயம் இல்லை...
கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகிறேன்" என்றார் மானேஜர்.
சரியாக ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இட்லி இருந்தது .
அடுத்த பாத்திரத்தில் நிறைய சாம்பார் இருந்தது .
வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும்
“நான்கு கொடுங்கள் ஐந்து கொடுங்கள் "
என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும் மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால், அங்கு
கல்லாப்பெட்டி அருகில் யாரும் இல்லை.
வருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில் போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் எடுத்துக்
கொண்டார்கள்.
பெரியவர்கள் இருவரும் அந்தப் பக்கமே பார்க்கவில்லை.
இட்லி சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள்.
“கல்லா பெட்டியில் ஒருவரும் இல்லையே?
யாராவது ஏமாற்றினால் என்ன செய்வீர்கள் “
என்று கேட்டார் மானேஜர்.
“இல்லை தம்பி யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
அப்படியே இருந்தாலும் போனால் போகிறது.
காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்”
“இந்த நாள் வரை எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்”
என்று சொன்னார்.
மானேஜருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
'இப்படியும் மனிதர்களா?' என்று வியப்படைந்தார்.
மேலும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டார்.
மாதங்கள் போனது.
கடந்த இரண்டு வாரங்களாக மணியார்டர் வரவில்லை.
'என்ன விஷயம்?' என்று அவருக்குப் புரியவில்லை.
காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள்.
மாலை மணி ஆறுக்கு போய் சேர்ந்தார்கள்.
எப்போதும் போல் இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
மீனாட்சி அம்மாள் மட்டும் இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார்.
எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு போனார்கள்.
அதே கல்லாப்பெட்டி .
எல்லோரும் பணத்தைப் போட்டு பாக்கியை எடுத்துக் கொண்டு போனார்கள்.
சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரை ஊற்றி கொண்டு போனார்கள்...
மீனாள் ராமசாமியை மட்டும் காணவில்லை.
உள்ளே நுழைந்த போது அவருடைய பெரிய புகைப்படம் மாலை போட்டு வைத்திருந்தார்கள்.
மேனேஜருக்கு புரிந்து விட்டது.
விசாரித்ததில்...
அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம்.
அங்குள்ள மக்கள் உதவியால் ஈமச் சடங்குகள் நடந்ததாம்.
இரண்டு நாட்களாகத் தான் மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளாராம் அவர் மனைவி.
“உங்கள் கணவர் எங்கள் காப்பகத்திற்கு வாராவாரம் பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
“தெரியும் “என்று சொன்னார்.
“நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றார்.
“இல்லை ஐயா! அவர் இறந்தவுடன் இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு என்னை வியப்படையச் செய்து விட்டது.
எனவே என்னால் முடியும் வரை இந்த கடையை நடத்துவது என்று முடிவு செய்துள்ளேன்.
அடுத்த வாரம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை, நானே தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன்.
அதை நீங்கள், உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும்.
அங்கு உள்ள வயதானவர்களுக்கு என் கணவருடைய ஆசைப்படி உபயோகப்படட்டும்.
என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
“சரிம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு போன் செய்யுங்கள்”
என்று சொல்லி காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்கள்.
இப்போது அவர்களுக்குபுரிந்து விட்டது...
*இந்த உலகம் எப்படி பட்டது * என்று...
எதையும் பெறுவதை விட...
*கொடுப்பதில் தான்... *
*ஆனந்தம்,*
*அமைதி,*
*திருப்தி*
*நிம்மதி* உள்ளது.
இதை புரிந்து கொண்டால் நாமும் புத்திசாலி தான்.
நன்றி!
Singaravelu Balasubramaniyan
  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.*
அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.
இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.
அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர்.
நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.
ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.
தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை.
எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான்.
மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான்.
வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான்.
சாம்பல் கயிறு.
ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.
சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்.
போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை.
அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான்.
போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.
மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான்.
அடி எது? நுனி எது?
ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான்.
அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.
கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.
மகன் தந்தையிடம் அரசனின் கேள்வியைக் கேட்டான்.
தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக சாய்வாக மூழ்கும்; அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார்.
மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான்.
தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்.
அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான்.
அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.
வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.
அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.
தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார்.
மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான்.
அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.
இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.
அனுபவம் தந்த பதில்கள்.
“அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.
இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது.
சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான்.
உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.
அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.
அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.
ஆம்,
வயதான பெரியவர்கள்
வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம்.
நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள்
நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் நமக்கான கடமை மட்டுமல்ல
நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம்.
தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும்
மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும் நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை
*என்றாலும் நாம் நன்றியுடன்* *பராமரிக்க வேண்டும்.*
🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,
“நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல்தான் சாப்பிட வேண்டும்.
உனக்குஅவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.
இதற்கு கழுதை சொன்னது
நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்.”
கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்
“நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்.”
இதற்கு நாய் கூறியது,
“கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்”
கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
“நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.”
இதற்கு குரங்கு கூறியது “20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்”
கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.
கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார்.
”நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.”
இதற்கு மனிதன் கூறினான்.
“20 வருஷம் ரொம்ப குறைவு.
கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும்,
நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும்,
குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும்
எனக்கு கொடுத்து விடு”
கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.
அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.
வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணிக்கின்றான்.
முடிவில்லா எண்ணங்கள்.........!
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பில் அலாதி ஆனந்தம்

author.png கதையாசிரியர்: வளர்கவி
tags.png கதை வகை: ஒரு பக்கக் கதை
category.png கதைத்தொகுப்பு: குடும்பம்
date.png கதைப்பதிவு: February 19, 2024
eye.png பார்வையிட்டோர்: 448 

நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று.

கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக இருந்தது அவர் அழைத்த விதம்.

என்வீட்டிற்கு வந்தவர் ‘கல்யாணத்துக்குக் கண்டிப்பா குடும்பத்தோட வந்திடணும்., குறிப்பா  உங்க அம்மாவையும்  கூட்டிக்கிட்டுத்தான் வரணும்’ என்றார் உண்மை அன்போடு.

‘அம்மா எதுக்குங்க? அவங்களுக்கு எண்பது வயதாச்சு முடியாதே!’ என்றேன்.

%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%

‘என்ன அப்படிச் சொல்றீங்க?! நாளை நமக்கும் வயசாகாதா என்ன? வயதில்  மூத்தவங்க வாழ்த்தே தனிதான்! கிடைக்க என் குடும்பத்துக்கு கொடுத்து வச்சிருக்கணும்!

உங்களுக்குச் சிரமம்னா… வேணா ‘கேஃப்’ புக் பண்ணி அனுப்பி வைக்கிறேன்!’ என்று சொல்லி நெகிழ்ந்தார். 

ஆயிரம் ரூபாய் மொய் வந்தால் கிடைக்காத ஆனந்தம் அம்மாவை அழைத்து வரச் சொல்லி அவர் பத்திரிக்கை வைத்ததில் எனக்குக் கிடைத்தது.

சொன்னபடி அழைத்துப் போனேன். அம்மாவை அவரே வந்து கைத் தாங்கலாக அழைத்துப் போய் முன் வரிசையில் உட்கார வைத்தும், மாங்கல்யத்தை கொடுத்து வாழ்த்தச் சொல்லி வாங்கீட்டதும், பந்திவரை பவ்யமாய் போலி இல்லாமல் இருந்து உபசரித்ததும் அந்த இளம் தம்பதியினருக்கு  அவர் கற்றுத் தந்த கலாச்சாரப் பதிவாய்  அமைந்தது.

எவ்வளவு சொல்லியும் மொய்கவரை திருப்பித்தந்து எங்களை அனுப்பிவிட்டார்.

நிஜங்கள் இன்னமும் உலகில் நடமாடத்தான் செய்கின்றன. நாம்தான் உலகை ஒழுங்காய் புரிந்து  கொள்வதில்லை. காரணம்…

அழைப்பிதழே இப்போ தெல்லாம் வாட்ஸிப்பில் தானே வருகிறது?! 

வாட்ஸிப்பால் வடுக்கள் பதிகின்றன. நேரில் அழைப்பதே நேசத்தை மெய்ப்பிக்கிறது.

https://www.sirukathaigal.com/ஒரு-பக்கக்-கதை/அழைப்பில்-அலாதி-ஆனந்தம்/

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பிரான்சில் வளர்நிலை 7 இல், தமிழ் கற்றுவரும் மாணவி ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியினைக் கேட்டார்.
ஆசிரியர், எங்களுடைய அம்மா, அப்பாவிற்கு பெரிதாகப் பிரெஞ்சு மொழி தெரியாது… ஆனால் எங்களை நன்றாகப் படிப்பிக்கவேணும், நல்ல முறையில் எங்களை வளர்க்கவேணும் என்று எப்படியெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கினம்? நான் யோசிச்சு பார்க்கும் போது ஆச்சரியாமாக இருக்குது என்று அந்த மாணவி சொன்னார்.
நான் சொன்னேன். எனக்கு ஆச்சரியமாக இல்லை! உங்கள் பெற்றோர்களுக்கு பிரெஞ்சு மொழி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பிரான்ஸ் வரும் போது வெறுங்கையோடு வரவில்லை. மிகப்பெறுமதியான தமிழரின் மொழியையும் பண்பாட்டையும் தங்களோடு எடுத்துக்கொண்டுதான் வந்தார்கள். கல்வியின் அருமையை தமிழர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதற்கும் பிறரிடம் கையேந்தக்கூடாது தன்மானத்தோடு வாழவேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் தமிழ், பிச்சை புகினும் கற்கை நன்றே என்று விதிவிலக்கையும் சொல்லிக் கொடுத்திருக்குது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லிக் கொடுக்குது. வாழ்வுக்கு அறநெறியை எடுத்துச் சொல்லும் திருக்குறளை தமிழர் வாழ்கையோடு அனுபவபூர்வமாக கற்றுவருபவர்கள். அதனால் எப்படிச் சிறப்பாக தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும் என்றேன்.
தமிழ் என்பது வெறுமனே ஒரு மொழியல்ல; அது தமிழரின் வாழ்வு, எம் மூதாதையரின் உயர்ந்த சிந்தனைகளையெல்லாம் சுமந்து வந்து எங்களுக்கு கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றது.
இன்று பெப்ரவரி 21. சர்வதேச தாய்மொழிதினம். தமிழாலேயே சிந்திக்கின்றோம், கருத்தினைப் பகிர்கின்றோம், தமிழாலேயே தாலாட்டி சீராட்டி வளர்ந்தோம். தமிழை மறவாதிருப்போம். தமிழே எம் அடையாளம்.
Voir la traduction
  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.