Sign in to follow this  
Followers 0
தமிழ் சிறி

குட்டிக் கதைகள்.

35 posts in this topic

இணையத்தில், ரசித்த...  குட்டிக் கதைகள்.

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..
அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..
ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்..
நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி..
மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்..
நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்..
வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!!
😜😜😜

உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்..
இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!???

3 people like this

Share this post


Link to post
Share on other sites

472280404-customer-speaks-with-an-employ

வங்கி மேலாளருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்.
"ஏம்பா! மாடு வாங்கணும்ன்னு லோன் கேக்குறியே? பணத்தை ஒழுங்கா திருப்பி கட்டுவியா?"
"என்ன சார் நீங்க? கட்டலைன்னா மாடு ஓடிடாதா? நிச்சயமா கட்டி வைப்பேன் சார்."
"நான் கேட்டது மாட்டை இல்லை.!"
"மாடுதான் இன்னும் வாங்கவே இல்லையே. அப்புறம் அதை எப்படி சார் கேப்பிங்க?"
"அப்ப வாங்கினப்புறம் கேட்டா?"
"வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது சார்."
"மாட்டை கேக்குறதுன்னு நான் சொன்னது மாட்டை இல்லை."
"பின்னே எதை?"
"மாடு வாங்குனப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன்."
"மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும். நான் எப்படி குடுப்பேன்?"
"ஐயோ.... சரி ஆரம்பிச்ச இடதுக்கே வருவோமா? கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை."
"நானும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். கட்டுவியான்னு என்னைத்தானே கேட்டிங்க..?"
"உன்னை ஏன் கட்டணும்?"
"என்னைக் கேட்டா? நீங்கதானே கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லைன்னு சொன்னீங்க. அப்ப
என்னைன்னு தானே அர்த்தம்."
"கேட்டது உன்னைத்தான்."
"அப்பிடீன்னா ஏன் என்னைக் கட்டனும்னு நீங்களே சொல்லிடுங்க."
"கட்டறதுன்னா மாடும், நீயும்தானா..? 
மூணாவதா ஒண்ணு இருக்கே. அதைக் கட்டுவியா ஒழுங்கா?"
"மூணாவதான்னா..? இங்க நீங்கதான் இருக்கிங்க."
"என்னைப் பிடிச்சி கட்டிடு. இல்லேனா கடிச்சாலும் கடிச்சிடுவேன்."
"அப்பவே சொன்னாங்க! பேங்க் மேனேஜர் ஒரு பைத்தியம்ன்னு."
நான்தான் கேக்கல...!

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

13782228_707082632778558_395358278229340

Share this post


Link to post
Share on other sites

728x410_550_husband-wife-fight.jpg

டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.

கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
சரிங்க ....

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

தோ உடனே செய்றங்க...

இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

ஒகேங்க

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....

உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!

:grin:

Share this post


Link to post
Share on other sites

13882577_708345872652234_722290228356140

Share this post


Link to post
Share on other sites

13606641_699518993534922_317689489439157

2 people like this

Share this post


Link to post
Share on other sites

13962564_716390435181111_741899936230144

 

##################################################################################################################

13935124_716850728468415_638320668494835

Edited by தமிழ் சிறி
1 person likes this

Share this post


Link to post
Share on other sites

வாயால்,  வந்த வினை...

 

Share this post


Link to post
Share on other sites

14322283_737590663061088_7300014931691385314_n.jpg?oh=5b79b6eefd80290c8d1601780cbe5434&oe=587A74CE

ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும் மது அருந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.
மூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
முதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட வேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.
ஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்.. பலமான காயத்துக்கு ஆளானார்.
அடுத்து சீனர்.
“எனக்கும் 50 சவுக்கடிகளை பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார்.
ஒப்புக்கொள்ளப்பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்டச் சொன் னார்.
அவ்வாறே செய்யப்பட்டது.
15 சவுக்கடிகளில் தலையணை கள் கிழிந்து அவரது முதுகு பிளந்தது.
அடுத்து இந்தியர்.
“எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த் துங்கள்..!” என்றார்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச் சியுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
இரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது.
“எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்” என்றார். 
:grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

14457350_741989255954562_7694495709282225459_n.jpg?oh=51d429297687cbf1bc556bd421660fe8&oe=5865E02B

Share this post


Link to post
Share on other sites

14708220_592398594278046_1039187200182760885_n.jpg?oh=d336ecfa85c699a8861310f5a1c7c73c&oe=589C6FF6

Share this post


Link to post
Share on other sites
 
உன் பேர் சொல்லு
ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.
சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. .
"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா",
அடுத்தப் பையன எழுப்பி , 
"உன் பேர் சொல்லு"
"மாரி"
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி.
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" 
"பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு.
அடுத்தப் பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு" 
"ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,
உன் அப்பா பேர சொல்லு,
"ரிச்சர்டு"
உன் பேரு,
"ரிச்சர்டசன்"
கொலவெறி ஆயிட்டாரு,
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
உன் தாத்தா பேர சொல்லு,
"அப்பாவோட தாத்தாவா?,
அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு,
அப்பாவோட தாத்தான்னாரு
"மணி",
"சரி அப்பா பேரு?",
"ரமணி",
"உன் பேரு?",
"வீரமணி"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.
1 person likes this

Share this post


Link to post
Share on other sites

15178214_782212231932264_1602843865838976386_n.jpg?oh=65891e8404baab9a1514ac8009cf4b85&oe=58CD55B6

Share this post


Link to post
Share on other sites

சம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு, BOSS வைத்த TEST..!!
#BOSS: நீ FLIGHT - லபோய்கிட்டு இருக்க.. அதுல 50 செங்கல் இருக்கு.. அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா, மீதி எவ்ளோ இருக்கும்..??
*வேலையாள்: 49 இருக்கும்..!!
#ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..??
*ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!!
#ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..??
*ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!! 
#அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள்..!! எல்லா விலங்குகளும் வந்துடுச்சு..!! ஒன்னு மட்டும் வரல, அது என்ன..??
*மான், ஏன்னா.. அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு..!!
#முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும்.. என்ன பண்ணுவாங்க..??
*தாரளமா கடக்கலாம்..
எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு..!!
#ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க, எப்படி..??
*குளத்தில் மூழ்கிட்டாங்க..!!
#அதான் இல்ல, முதல்ல FLIGHT - ல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல.. அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு..!!
இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க.. இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற..!!
ஒழுங்கா கவனமா வேலைய பார்.. இல்லன்னா சீட்டு கிழிச்சிரும்..!!

☆☆☆
நீதி: கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது..!!

@@படித்ததில் பிடித்தது@@

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: Text

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: Text

Share this post


Link to post
Share on other sites

 

பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

 

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து "ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு!" என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, "என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்" என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், "என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்", என்று தொடர்ந்தது.

 

 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, மாறன் said:

 

பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து "ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு!" என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, "என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்" என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், "என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்", என்று தொடர்ந்தது.

கி... கீ..... கீ.... 
கிளியை....  தொட்டாலும் பிரச்சினை, சும்மா.... விட் டாலும்,  பிரச்சினை. :grin:

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: Text

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: Text

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: Text

Share this post


Link to post
Share on other sites

படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை.

உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்
பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார் ஆனால் "INDITEX SPAIN" நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி... அமான்சியோ ஓர்டேகா,  80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.
இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும், சரியான திரைப்படங்கள் அமையாமலும்... தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது.

24 வயதில் திருமணம் செய்த... என் தந்தை தனது 30 வது வயதில் இறந்தார், தனது 40 வயதில் திருமணம் செய்த... என் பெரியப்பா தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார்

எல்லோருக்கும்.... எல்லாமும்,  அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால்... அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு, உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது.... அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று. இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். இங்கே.... இப்போது,  இந்த நொடியில்..... என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ,  அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.

தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.  

ஆனால்  ஆசைகள்... ஓட்டை குடம் போல  எப்போதும் நிறைவு செய்ய முடியாது. 

Edited by தமிழ் சிறி
3 people like this

Share this post


Link to post
Share on other sites

மாடியில... லைட் எரியுது. :grin:

Bild könnte enthalten: Text

 

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: Text

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0