Jump to content

கதைக்கும் கவிதைக்கும் காதல்


Recommended Posts

எனது  சிந்தனைகளில் ஒன்று . கதையையும் கவிதையையும் காதலையும் இணைத்து 
ஒரு தொடர் பதிவாக எழுதப்போகிறேன் . அவன் சிந்தனைகளை கதையாகவும் .அவள் சிந்தனைகளை 
கவிதையாகவும் வடிவமைக்கப்போகிறேன் . உங்கள் ஆதரவுக்கு நன்றி 
என்றும் இனிமையுடன் 

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

அவன் ; இனிமை 
----------
அழகான அமைதியான இயற்கை அழகுகள் நிறைந்த சூழலில் வாழ்கிறான் .ஒரு புறம் கடல் .
வாழ்வாதாரமாக விவசாயம் . வீட்டுக்கு முதல் மகன் . அவனுக்கு கீழ் இரண்டு தங்கை ஒரு தம்பி .
அன்பான அம்மா அப்பா . உறவுக்கு சூழ்ந்துள்ள உறவுகள் . தோள் கொடுக்கும் உயிர் நண்பர்கள் .
படித்த படிப்புக்கு ஒரு வேலை . வேலை நேரம் மீதியில் விவசாயம் . இப்படி இன்பமான சூழலில் 
வாழும் " இனிமை " வாழ்க்கையில் நடக்கப்போகும் வாழ்க்கை எண்ணங்களை பகிரப்போகிறேன்
அவன் வாழும் கிராமத்தில் .அவன் நண்பனின் அக்காவின் திருமணத்துக்கு வந்தாள் .முற்றிலும் 
நகரப்புறத்தில் பிறந்து  வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் "வின்னியா " என்ற 
அழகு தேவதை . அவள் வாழும் இடம் தான் நகரம் .ஆனால் வாழ்க்கை முறையில் கிராமிய 
காற்றும் அடிக்க தான் செய்கிறது . இந்த இரட்டை வாடை அடிக்கும் இவளுக்கும் .கிராமிய வாடை 
கொண்ட இவனுக்கும் எப்படி காதல் வந்தது . என்ன நடைபெறப்போகிறது என்பதை 
தொடர்ந்து பார்ப்போம் . இது தொடர் பதிவுதான் என்றாலும் .ஒவ்வொரு பதிவும் முற்று பெறும் .

அவள் ;வின்னியா 
---------

மெல்லியதாய் பூசிய ......
உதட்டு சாயம் - வானவில் 
நெற்றியில் வளைந்து ....
இருப்பதுபோல் அவள் ....
புருவம் ........!!!

அவள் பருவமோ ....
அழகிலும் அழகு .....
அழகிய பூமரத்தில் ....
பூத்து குளுங்கும் பூவை ....
போல் சிரித்த முகம் ....
கொஞ்சம் வெட்கம் ...
நிறைய துடுதுடுப்பு .....!!!

&

இத்தனை குணங்களை கொண்ட ...
இருவரின் காதல் பயணம் தொடரப்போகிறது ..

 

Link to comment
Share on other sites

அவன் ; இனிமை 
----------
நண்பனின் திருமண வீட்டுக்கு இரவு வேளை இனிமையும் அவன் நண்பர்களும் வீடடையும் தெருவையும் அலங்கார படுத்த சென்றார்கள் . இரவு முழுவதும் அலங்கார படுத்தல் இருந்தது . நண்பர்களுக்கிடையே கடி ஜோக்குகள் மாறி மாறி நடைபெற்றன . அந்த வேளையில் தான் வின்னியா திருமண வீட்டுக்கு வான் ஒன்றில் இறங்கி வந்தாள். யாரடா மாப்பு இவங்க என்று நண்பனை கேட்க "அவன் அது அக்காவின் "பிரண்ட் குடும்பம் என்று சொல்ல .... வந்தவர்கள் வீட்டுக்குள் போனார்கள் . இரவு ஆகிவிட்ட்து .ஆரவாரமாக இருக்கும் இவர்களுக்கு தேநீர் தேவைப்பட .நண்பன் அம்மா தேநீர் வேணும் என்று சொன்னான் . 

இதோ தருகிறேன் என்று சொல்லிக்கொண்டு " வின்னியா " இந்த தேநீரை ஊறி அவங்களுக்கு குடும்மா .என்று சொல்லிவிட்டு தாய் தான் வேலைகளை பார்த்தார் . வின்னியா தேநீரை ஊற்றி கொண்டு சென்றாள். பத்து தேநீரை ஒரே தட்டில் கொண்டு சென்று கொடுத்தபோது . எதிர் பாராமல் வின்னியாவுடன் மோதிவிடடான் இனிமை . தேநீர் அனைத்தும் .கொட்டி விட்ட்து . "சாரி சாரி"மன்னிச்சுடுங்க என்று அடிக்கடி சொன்னான் இனிமை . 

வின்னியா ஒன்றும் பேசாமல் .சென்றுவிடாள்.இனிமைக்கு  ஒரே  மன குழப்பம் அவள் கோபித்து விடடாளா ....? என்று குழப்பத்தில் இருக்கும் போது மீண்டும் தேநீரோடு வந்தாள் வின்னியா .....!!! இப்போதான் இனிமைக்கு நிம்மதி மீண்டும் மன்னிப்பு கேட்டு  உங்க பெயர் என்ன என்று தயக்கத்தோடு கேடடான் . அப்போதும் அவள் மௌனமாக சென்று விடடாள் .

அவள் ;வின்னியா 
---------
மௌனம் 
ஒரு கொலைக்கொள்ளி ......
கொஞ்ச்ம கொஞ்சசமாய் ....
ஒருவனை கொல்லட்டும்.....
என்ற சின்ன இறுமாப்புடன் ....
இருந்தாள் வின்னியா .....!!!

துயரத்தில் இருந்து ...
அவனை பார்ப்ப்தும் ....
அவன் பார்க்கும்போது ....
முகம் திருப்புவதுமாய் ....
காதல் அரும்பு விளையாட்டு .....
விளையாடினாள் வின்னியா ....!!!

&
கதைக்கும் கவிதைக்கும் காதல் 
கதையும் கவிதையும் 02
கவிப்புயல் இனியவன் 


 

Link to comment
Share on other sites

  • 3 months later...

அவன் -இனிமை 
--------
எப்படியாவது அவளின் பெயரை கண்டறிய துடித்தான் .இனிமை தண்ணி குடிக்க போவதுபோல் எல்லா இடத்திலும் அவளை தேடினான் . அவள் வேண்டுமென்றே கதவு திரைக்குப்பின்னால் நின்றாள் .தேடிப்பார்க்க இனிமை 
அவளை காணாமல் சுவாதிடத்துடன் .வரும்போது . வின்னியாவின் அம்மா குரல் ஒலித்தது .......!!!

வின்னியா ...வின்னியா ....எங்கம்மா இருக்கிற .....? வின்னி வின்னி ....என்று 
கூப்பிட்டபோது  திரைக்குப்பின்னால் இருந்து வந்தாள் வின்னியா ......

ஓ பெயர் வின்னியாவா ஓகே ஓகே என்று அவள் காதில் மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு தெரு முனைக்கு வந்தான் நண்பர்களுடன் தெருவை அலங்காரம் செய்வதற்கு ......இன்னும் விடிவதற்கு ஒரு சில மணி நேரமே இருந்தது . ஒரு சின்ன தூக்கம் கூட ஒருவரும் தூங்கவில்லை . விடிந்தால்  கல்யாணம் .

தூரத்தில் இருந்து வின்னியா சைகை கொடுத்தாள். தூங்குங்க என்று 
பதில் சொல்ல முடியாமல் இனிமை தானும் சைகையால் நீ முதல் தூங்கு 
என்பதுபோல் சொன்னான் . 

தலையை அசைத்தபடி தூங்க சென்றாள் - வின்னியா 

அவள் - வின்னியா 
------
தூக்கம் என்பது கண் ......
மூடுவது மட்டுமல்ல .....
மனமும் மூடவேண்டும் .....
இத்தனை நினைவுகளை ....
தந்து விட்டு தூங்க சொல்லும் ....
அவன்தூங்கி விடுவானா .......?

நினைவுகளால் வெந்து .....
துடிக்கிறேன் விடிய இருக்கும் ....
சிலமணி நேரம் கூட .....
ஜென்மமாய் இருக்குதடா .....
விடிந்து உன்னை பார்ப்பது.....
எனக்கு சூரிய உதயம் ......!!!

&
கதைக்கும் கவிதைக்கும் காதல் 
கதையும் கவிதையும் 03
கவிப்புயல் இனியவன் 

இன்னும்தொடரும் 

Link to comment
Share on other sites

  • 2 months later...

கதைக்கும் கவிதைக்கும் காதல் 04

-------------------------------------------------

அவன் - இனிமை - கதை 

=======================

இரவு முழுதும் தூக்கம் இன்றி அவஸ்தைபட்டான் இனிமை .நேரமோ போகாமல்நத்தை வேகத்தில் நகர்ந்து அவனை கொன்றது. நண்பர்கலுக்கு தெரியாமலெழுந்துஅறைக்குள் நடந்து கொண்டிருந்தான். எதிர்பாராமல் ஒருவனின் காலை மிதித்துவிட்டான். யாரடா அது என்று உரத்து கேட்டபோது அந்த இடத்திலேயே தூங்குவதுபோல் நடித்து தூங்கினான். இனிமை..............!!!

 

ஒருபடியாக பொழுது விடிந்தது. முகம் கழுவதற்கு கிணறுக்கு நண்பர்களுடன் போனான். அங்கும் வின்னியா வரவில்லை. ஒருவாறு முகத்தை கழுவிமுடிந்த தருனத்தில் தோழிகளோடு வந்தாள்" வின்னியா"  ஓரக்கண்ணால் ஒருமுறை இனிமையை பார்த்தாள் .அந்த பார்வையில் தான் இரவு பட்ட துன்பத்தை சொன்னது போல் இருந்தது இனிமைக்கு.............!!!

 

அவள் - வின்னியா -கவிதை

==========================

 

ஏய் கரியவனே என் கரிகாலனே......

எதற்கடா என்னை கொல்கிறாய் .....

ஏனடா என் கண்ணில் பட்டாய்......?

ஒவ்வொரு நொடியையும் இரும்பு....

ஆணிமேல் நடப்பது போல் இருகுதடா...!!!

 

இருட்டில் கூட உன் முகம் பார்தேன்......

விடியும் வரை காத்திருந்தேன் உன்....

கருமுக திருவிழியை காண.......

கண்டேன் உன் முகம் மகிழ்ந்தேன்....

சூரிய ஒளியில் மலர்ந்த தாமரையாய்.....

அகம் மலர்ந்தேன்......................!!!

 

&


கதைக்கும் கவிதைக்கும் காதல் 04
கவிப்புயல் இனியவனின் 

இன்னுமொரு காதல் பயணம் 
இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்

தொடர்ந்து படியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாய்த்தான் இருக்கின்றது தொடருங்கள்....!

அதென்ன இந்த வின்னியாவின் காதல் ஜன்னி மாதிரி பார்த்த உடனே பத்திட்டுது....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.