Jump to content

இறுதிப்போரில் இராணுவம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியமை உறுதி! காடியன் தெரிவிப்பு


Recommended Posts

இறுதிப்போரில் இராணுவம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியமை உறுதி! காடியன் தெரிவிப்பு
 
 
 
4724.jpg
இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.
 
தெ காடியன் செய்தித்தாள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது
 
இதற்கு ஆதாரங்களாக வன்னியில் இருந்து மீட்கப்பட்ட கொத்துக்குண்டுகளின் பாகங்கள் புகைப்படங்களாக காட்டப்பட்டுள்ளன.
 
குறித்த பிரதேசத்தில் இருந்து ஆர்பிகே 500 ஏ கியு-2.5RD என்ற கொத்துக்குண்டுகளே முல்லைத்தீவு சாலை பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இது இலங்கை இராணுவத்துக்கு எதிரான வலுவான சாட்சியங்களாக அமைந்துள்ளன
 
கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் இந்த குண்டுகள், இறுதிப்போரின்போது அரசாங்கம் அறிவித்திருந்த தாக்குதல் அற்ற வலய பகுதியில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன.
 
இந்த தாக்குதலற்ற வலயத்தில் சுமார் 3 இலட்சம் பொதுமக்கள் வரை அடைக்கலம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனைதவிர வெடிக்காத நிலையில் இருந்த ஏ கியு-2.5RD கொத்துக்குண்டு ஒன்று சுண்டிக்குளம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
இறுதிப்போரின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்பதும் தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகாவே அப்போது இராணுவ தளபதியாக இருந்தார் என்பதையும் காடியன் சுட்டிக்காட்டியுள்ளது.
 
4334.jpg
இதேவேளை இந்த கொத்துக்குண்டுகள் மீட்ப்புச் செய்தியை ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவரே காடியனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
 
அத்துடன் இவ்வாறான கொத்துக்குண்டுகளின் 42 பாகங்கள், ஆணையிறவு, பச்சிலைப்பள்ளி போன்ற இடங்களிலும் 2012ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் மீட்கப்பட்டதாக ஹலோ ட்ரஸ்ட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த வகையான குண்டுகள் ஏற்கனவே ஜோர்ஜியா, சிரியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிவி;க்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் தமது குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கருத்தை பெறமுடியவில்லை என்று காடியன் குறிப்பிட்டுள்ளது.
 
எனினும் தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வரும் சூழ்நிலையில், இந்த தகவல்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://onlineuthayan.com/news/13940

Link to comment
Share on other sites

இறுதி  யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் :  பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை 

Published by MD.Lucias on 2016-06-20 17:47:50

 

 இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதி யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புகைப்பட ஆதாரங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள கார்டியன் சில புகைப்படங்களையும் வெளியடிட்டுள்ளது.  4724.jpg

அதாவது    இராணுவப் படையினர் சிவிலியன்கள் மீது கொத்தணி குண்டுத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த  2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியாளர்கள் கொத்தணி குண்டுகளை மீட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் யுத்த சூன்ய வலயத்தில் இவ்வாறு கொத்தணி குண்டுகளின் பாகங்களை காணக் கிடைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில்  கடமையாற்றிய மீட்புப் பணியாளர் ஒருவர் கொத்தணி குண்டு குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தில் காணப்படும் கொத்தணி குண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆயுதம் குறித்த கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.4692.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் அதற்கு முன்னர் ஆட்சி செய்த அசராங்கங்களும் நிராகரித்து வந்தன.  

கடந்த  2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுப் பகுதியில் நிலக்கண்ணி வெடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஆணையிறவு பாச்சிளாப்பள்ளி என்னும் இடத்தில் கொத்தணி குண்டுகளின் 42 பாகங்களை  மீட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனத்தின் பணியாளர் தெரிவித்துள்ளார்.4672.jpg4334.jpg46925.jpg

http://www.virakesari.lk/article/7823

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

இறுதிப்போரில் இராணுவம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியமை உறுதி! காடியன் தெரிவிப்பு

ஊர் உலகத்துக்கு எப்பவோ தெரிஞ்ச விசயத்தை கார்டியன் இப்ப உறுதிப்படுத்துவதன் மர்மம் என்னவாக இருக்கும்?  Zeitung

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஊர் உலகத்துக்கு எப்பவோ தெரிஞ்ச விசயத்தை கார்டியன் இப்ப உறுதிப்படுத்துவதன் மர்மம் என்னவாக இருக்கும்?  Zeitung

கார்டியனுக்கு இப்ப தான் பேஜ் கிடைச்சிருக்கு படம் போட. அவங்க அவங்க தங்க தேவைகளுக்கு கொடுப்பாங்க.. கொட்டுவாங்க.. அப்புறம் கவலைப்படுவாங்க. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

Quote

இந்த வகையான குண்டுகள் ஏற்கனவே ஜோர்ஜியா, சிரியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில சிரியா இந்த அடி வாங்கினதில ஒரு சின்ன திருப்தி.. tw_anguished:

Link to comment
Share on other sites

அரசின் சுயரூபத்தை தோலுரித்த கொத்துக்குண்டு

 

10590.jpg
இறு­திக்­கட்டப் போரின்­போது, பொது­மக்கள் அடர்த்­தி­யாக வாழ்ந்த பகு­தி­களில் அர­ச­ப­டை­யினர் கிளஸ்டர் குண்­டு­களை வீசி­ய­தற்கு ஆதா­ர­மாக பிரித்­தா­னி­யாவின் ‘தி கார்­டியன்’ நாளிதழ் வெளி­யிட்­டுள்ள தக­வல்­க­ளையும், படங்­க­ளையும், இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­துள்ள விதம், ஆச்­ச­ரித்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
 
போர்க்­குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து சனல்-–4 வெளி­யிட்ட வீடியோ மற்றும் ஒளிப்­பட ஆதா­ரங்­களை மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் எவ்­வாறு அலட்­சி­யத்­துடன் நிரா­க­ரித்­ததோ அதே­போன்று தான், கிளஸ்டர் குண்­டு­க­ளையும் இப்­போ­தைய அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது.
 
போர்க்­குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்ளும் விட­யத்தில், மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­துக்கு ஈடி­ணை­யற்­றது என்­பதை நிரூ­பிக்கும் வகையில் அர­ச­த­ரப்பின் கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன.
 
கடந்த திங்­கட்­கி­ழமை ‘தி கார்­டியன்’ கிளஸ்டர் குண்­டுகள் மீட்­கப்­ப­டு­வது தொடர்­பான நான்கு படங்­களை- வெளி­யிட்­டி­ருந்­தது. வன்­னியில் கண்­ணி­வெடி அகற்றும் பணியில் ஈடு­பட்­டி­ருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறு­வ­னத்தில் பணி­யாற்­றிய அதி­காரி ஒருவர் மூலம் பெறப்­பட்ட படங்கள் அவை.
 
இது­தொ­டர்­பார்­பாக ‘தி கார்­டியன்’ சுமத்­தி­யுள்ள குற்­றச்­சாட்­டுக்கு இது­வரை அர­சாங்­கமோ, பாது­காப்பு அமைச்சோ அதி­கா­ர­பூர்வ அறிக்கை மூலம் மறுப்பைத் தெரி­விக்­க­வில்லை.
ஆனாலும், இது­தொ­டர்­பாக பாது­காப்புச் செயலர் கரு­ணா­சேன ஹெற்­றி­யா­ராச்சி, இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர, அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன, ஊட­கத்­துறைப் பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான ஆகியோர், செய்­தி­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு அளித்­துள்ள பதில்கள், வித்­தி­யா­ச­மா­னவை.
“இவ்­வா­றான செய்­தி­களின் உண்­மைத்­தன்­மைகள் குறித்து தெரி­யாமல், எந்த தீர்­மா­னமும் எடுக்க முடி­யாது. கிளஸ்டர் குண்­டு­களை பயன்­ப­டுத்த வாய்ப்­புகள் இல்லை என ஆரம்­பத்தில் இருந்தே பாது­காப்பு பிரி­வினர் தெரி­வித்து வரு­கின்­றனர்.
இவ்­வா­றான நிலையில் இப்­போது இத்­த­கைய செய்­தி­களை வெளி­யி­டு­வதன் பின்­னணி என்ன வென்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட வேண்டும்.
அதே­போல போர் தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. விசா­ர­ணை­களின் மூலம் இவற்றை ஆராய்ந்து தீர்­மானம் எடுப்போம்” என்று கூறி­யி­ருந்தார் பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெற்­றி­யா­ராச்சி.
இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயநாத் ஜெய­வீர, “வெளி­யா­கி­யுள்ள படங்கள் தொடர்­பாக உறு­தித்­தன்மை இல்லை. ஆகவே, இவற்றை உண்­மை­யென எம்மால் கருத முடி­யாது.
அதேபோல் இப்­போது சர்­வ­தேச ரீதி­யாக தமக்கு சாத­க­மான கார­ணி­களை முன்­வைத்து இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்க முனை­கின்­றனர். அர­சியல் ரீதி­யாக சில பொய்­யான கார­ணி­களை முன்­வைத்து இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­யாக்க முயற்­சிக்­கின்­றனர் .
இரா­ணுவம் விதி­மு­றை­க­ளுக்கு முர­ணான வகையில் போர் செய்­ய­வில்லை. ஆகவே, அர­சாங்­கமும், பாது­காப்பு தரப்பும் எப்­போதும் எமது இரா­ணு­வத்தின் மீதான பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்தே செயற்­படும்” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.
இவர்­களின் கருத்­துக்­களில், நேர­டி­யாக குற்­றச்­சாட்டை நிரா­க­ரிக்­காத ஒரு நழுவல் பதி­லையே பார்க்க முடிந்­தது. முன்னர் மறுப்பு வெளி­யிட்­டதைச் சுட்­டிக்­காட்டித் தப்­பித்துக் கொள்ளும் ஒரு நிலையை அவ­தா­னிக்க முடிந்­தது.
அத்­துடன், இரா­ணுவம் மீது வேண்­டு­மென்றே குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு தண்­ட­னைக்­குட்­ப­டுத்த முயற்­சிகள் நடப்­பது போன்று விவ­கா­ரத்தை மாற்­றவும் முயற்­சித்­தி­ருந்­தனர்.
ஆனால், அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்­னவோ, கிளஸ்டர் குண்­டுகள் பற்­றிய குற்­றச்­சாட்டுக் குறித்த கேள்­விக்கு பதிலை அளிக்­க­வில்லை. மாறாக அவரே பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்தார்.
“அந்தப் படங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டா­தவை. இது­போன்ற படங்­களை அவர்கள் தொடர்ந்து வெளி­யி­டு­கி­றார்கள். இந்தக் குண்­டு­களை நாம் தான் பயன்­ப­டுத்­தினோம் என்று எவ்­வாறு நிரூ­பிக்க முடியும்? அவற்றில் இரா­ணு­வத்தின் இலச்­சினை இருக்­கி­றதா?
போர் முடிந்து, பெரும்­பா­லான வெடி­பொருள் அகற்றும் பணிகள் நிறை­வ­டைந்து ஆறு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் ஏன் இந்தப் படங்கள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன? எதற்­காக இவற்றை முன்­னரே அவர்கள் வெளி­யி­ட­வில்லை?” என்று அவர் எழுப்­பிய கேள்­விகள் முக்­கி­ய­மா­னவை.
அது­போ­லவே, இதே செய்­தி­யாளர் மாநாட்டில், ஊட­கத்­துறைப் பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தா­னவும், அந்தப் படங்கள் இலங்­கையில் தான் எடுக்­கப்­பட்­டவை என்று எப்­படி உறுதி செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.
அத்­துடன், கண்­ணி­வெ­டி­களை அகற்­று­ப­வர்கள் இவ்­வா­றான தக­வல்­களை வெளி­யி­டு­வது சட்­ட­வி­ரோ­த­மா­னது. ஜெனீவாவில் இலங்­கையை தனி­மைப்­ப­டுத்­தவும், அர­சாங்­கத்­துக்கு கெட்­ட­பெ­யரை ஏற்­ப­டுத்­தவும் மேற்­கொள்­ளப்­படும் முயற்சி என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.
போர்­களின் போது இது­போன்ற குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வது வழக்கம். இரா­ணு­வத்­தி­னரின் செயற்­பா­டுகள், மீறல்கள், விதி­க­ளுக்கு முர­ணான ஆயு­தங்­களின் பயன்­பா­டுகள் தொடர்­பாக குற்­றச்­சாட்­டு­களைச் சந்­திக்­காத இரா­ணு­வமே உலகில் இல்லை.
குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­படும் போது, எடுத்த எடுப்­பி­லேயே நிரா­க­ரித்து விடாமல், அதன் உண்­மைத்­தன்­மையை ஆராய்ந்து, உரிய நட­வ­டிக்கை எடுப்­பதில் தான் எந்­த­வொரு இரா­ணு­வத்­தி­னதும் பெயர் காப்­பாற்­றப்­ப­டு­கி­றது.
ஆனால், இலங்கை இரா­ணு­வமும் சரி, அர­சாங்­கமும் சரி தமது பெயர்­களைப் பாது­காப்­பது என்­பது, தனியே குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரிப்­பதில் தான் இருப்­ப­தாக கருதிக் கொண்­டி­ருக்­கின்­றன.
மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் செய்த அதே தவறைத் தான் இப்­போ­தைய மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கமும் செய்து கொண்­டி­ருக்­கி­றது.
போர்க்­குற்­றங்கள் தொடர்­பான வீடியோ மற்றும் ஒளிப்­பட ஆதா­ரங்­களை சனல்-4 வெளி­யிட்ட போது அதனை பொய் என்று கூறி­யது அப்­போ­தைய அர­சாங்கம்.
அது போலி­யாகத் தயா­ரிக்­கப்­பட்­டது என்றும், திரி­பு­ப­டுத்­தப்­பட்­டது என்றும் கூறி நிரா­க­ரித்­தது. ஆனால், அண்­மையில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ­வுக்கு எழு­தி­யி­ருந்த கடிதம் ஒன்றில் அது உண்­மை­யா­னது என்­பதை ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார்.
அந்தக் குற்­றச்­சாட்டை எதிர்­கொண்ட விதம் தவ­றா­ன­தென மங்­கள சம­ர­வீர தனது கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அதே மங்­கள சம­ர­வீர அங்கம் வகிக்கும் அர­சாங்கம் தான் கிளஸ்டர் குண்டுக் குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது.
அது­மட்­டு­மன்றி, அமைச்சர் ராஜித சேனா­ரத்ன எழுப்­பி­யுள்ள கேள்­விகள் சிறு­பிள்­ளைத்­த­ன­மா­னவை. அடிப்­படை இரா­ணுவ அறி­வில்­லாத ஒருவர் தான் அவ்­வா­றான கேள்­வி­களை எழுப்ப முடியும். கிளஸ்டர் குண்­டு­களை இரா­ணுவம் தான் வீசி­யது என்று நிரூ­பிக்க முடி­யுமா என்று அவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். நிச்­ச­ய­மாக நிரூ­பிக்க முடியும்.
எவ்­வா­றெனின், மீட்­கப்­பட்ட கிளஸ்டர் குண்டின் பாகங்கள், RBK-–500 AO–-2.5RT வகையைச் சேர்ந்­தவை,
சுமார் 500 கிலோ எடை­யுள்ள அந்த கிளஸ்டர் குண்டை 445 நொட்ஸ் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட, விமானம் ஒன்­றினால் தான் வீச முடியும். அத்­த­கைய வேகத்தில் பறக்கக் கூடிய அல்­லது 500 கிலோ குண்டை வீசக்­கூ­டிய விமானம் எதுவும் புலி­க­ளிடம் இருந்­த­தில்லை. வேறு நாட்டு விமா­னங்கள் ஏதும் வன்­னியில் குண்­டு­களை வீச­வு­மில்லை.
(11 ஆம் பக்கம் பார்க்க)
அரசின் சுய­ரூ­பத்தை ...
(௯ஆம் பக்க தொடர்ச்சி)
ஒரு­வேளை, புலி­களே அந்தப் பாரிய குண்டை வீசி­யி­ருந்தால் அதற்­கான தட­யங்­க­ளை­யா­வது போரின் முடிவில் இரா­ணுவம் கண்­டு­பி­டித்­தி­ருக்க வேண்டும். அதனை வெளிப்­ப­டுத்தி புலி­களின் போர்க்­குற்­ற­மாக நிரூ­பித்­தி­ருக்க வேண்டும்.
 
இவை எதை­யுமே செய்­யாமல் மூடி­ம­றைக்க முயன்­றதில் இருந்தே அது யாரால் வீசப்­பட்­ட­தென்­பதை கண்­டு­பி­டிப்­பது அவ்­வ­ளவு கடி­ன­மா­ன­தல்ல.
இரா­ணு­வத்தின் இலச்­சினை அதில் இருக்­கி­றதா என்று முட்­டாள்­த­ன­மான கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருக்­கி­றது.
 
எந்த நாட்டு இரா­ணு­வமும் தாம் வீசும் குண்டில் தமது இரா­ணு­வத்தின் சின்­னத்தை பொறிப்­ப­தில்லை. எந்த நாட்டுத் தயா­ரிப்பு என்று தெரியக் கூடாது என்­ப­தற்­காக, ரஷ்ய மொழியில் இருந்த எழுத்­துக்­களை அழித்து விட்டுக் குண்­டு­களை வீசி­ய­வர்கள், தமது சின்­னத்தை பொறிப்­பார்கள் என்று எப்­படி எதிர்­பார்க்க முடியும்?
 
போர் முடிந்து ஆறு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் ஏன் இந்தப் படங்­களை வெளி­யிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார். இது ஒன்றும் இப்­போது தான் வெளி­யான படங்கள் அல்­லது தகவல் அல்ல. ஏற்­க­னவே வெளி­யான ஒன்று தான்.
 
கண்­ணி­வெடி அகற்றும் பணியில் ஈடு­ப­டு­ப­வர்கள் மீட்­கப்­படும் வெடி­பொ­ருட்கள் பற்­றிய தக­வலை வெளி­யிடக் கூடாது என்றும், அது சட்­ட­வி­ரோதம் என்றும் பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான கூறி­யி­ருக்­கிறார்.
 
அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலையில் இந்த ஆதா­ரங்கள் ஆறு ஆண்­டு­க­ளுக்கு மேலாக மறைக்­கப்­பட்­டி­ருக்­கலாம். தற்­போது, அர­சாங்­கமே போர்க்­குற்ற விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஜெனி­வாவில் இணங்­கி­யுள்ள சூழலில், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்­ப­தற்­காக, இந்தப் படங்­களை எடுத்து வைத்­தி­ருந்­தவர் ஊட­கத்­திடம் வழங்­கி­யி­ருக்­கலாம்.
 
இது­போன்று போர்க்­க­ளங்­களில் எடுக்­கப்­பட்ட பல அரிய படங்கள் பல தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் கூட வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. அவை உண்மை என்று நம்­பப்­பட்ட பொய்­களின் சுய­ரூ­பத்தை தோலு­ரித்­தி­ருக்­கின்­றன.
 
அது­போல இந்தப் படங்கள் ஒன்றும் நீண்­ட­காலம் கழித்து வெளி­யா­க­வில்லை. போர்க்­குற்ற விசா­ரணை ஒன்­றுக்­கான சூழல் எழுந்­துள்ள போது தான் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.
 
இந்தப் படங்கள் இலங்­கையில் தான் எடுக்­கப்­பட்­டவை என்று எவ்­வாறு உறு­திப்­ப­டுத்த முடியும் என்ற, அப்­பா­வித்­த­ன­மான கேள்வி ஒன்றை ஊட­கத்­துறை பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான எழுப்­பி­யி­ருக்­கிறார்.
தி கார்­டியன் வெளி­யிட்­டுள்ள, சாலை பகு­தியில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட RBK-500 AO-2.5RT கிளஸ்டர் குண்டின் எஞ்­சிய வெளிப்­பா­கத்தை மீட்கும் படத்தில், இரண்டு பேர் காணப்­ப­டு­கின்­றனர் அவர்­களின் முகத்தை அடை­யாளம் காண முடி­யாமல் படம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
ஒருவர் ஹலோ ட்ரஸ்ட் நிறு­வ­னத்­தினர் அணியும் குண்­டு­து­ளைக்­காத ஜக்­கட்டை அணிந்­துள்ளார். அவர் உள்ளூர் பணி­யாளர் என்று தெரி­கி­றது. அவ­ரது முகத்தை தெளி­வின்றிப் பிர­சு­ரித்­துள்­ளது தி கார்­டியன். மூலப்­ப­டத்தில் அவர் யார் என்­பதை தெளி­வாக பார்க்க முடியும்.
மற்றவரின் பின்புறத்தில் இருந்தே படம் எடுக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டவர் போலத் தோன்றுகிறது. அவர் அணிந்துள்ள ரிசேட்டின் பின்புறத்தில், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் mine clearence என்று தெளிவாக பார்க்க முடிகிறது.
 
உலகில் வேறெந்த நாட்டிலும், சிங்கள மொழி பயன்பாட்டில் இல்லை. சிங்கள மொழி பொறித்த ரிசேட்டுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுமில்லை.
 
அதைவிட, இந்த ஒளிப்படங்களை முறைப்படி நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தாலே உண்மைகள் தெரிந்து விடும்.
 
ஆனால், சனல்-4 ஆதாரங்களைப் போன்று இவற்றையும் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முனைந்திருக்கிறது அரசாங்கம்.
 
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் குற்றச்சாட்டுகளை நிராகரித்துப் பழகிப் போனவர்கள் என்பதால், இப்போதும் அப்படியே செய்கின்றனர் போலும்.
கிளஸ்டர் குண்டுக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள விதத்தைப் பார்க்கும் போது, இந்த அரசாங்கம் எவ்வாறு உண்மையான- நேர்மையான ஒரு போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் என்ற கேள்வியைத் தான் எழுப்பத் தோன்றுகிறது.

http://www.vivasaayi.com/2016/06/cluster-bumb_23.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.