Jump to content

மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை !


Recommended Posts

வலி.வடக்கில் காணி விடுவிப்பு - TNA - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-

17 ஜூலை 2015
Bookmark and Share
 

 

வலி.வடக்கில் காணி விடுவிப்பு - TNA - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-

 வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசத்தில் சில பிரதேசம் மக்கள் மீள் குடியேறுவதற்கு நாளை அனுமதிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

மீள் குடியேற்ற அமைச்சு சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன்  வலி.வடக்கில் விடுவிக்கப்படாத சில பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி இருந்தது.

அதனடிப்படையில்  நாளை சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலளார்கள் யாழில் விடுவிக்கப்படாத பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

வசாவிளான் தோலகட்டி பிரதேசம் ஏற்கனவே விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் இராணுவத்தின் முள் வேலி அடைத்து அப்பிரதேசத்தில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கவில்லை. அந்த பகுதி விடுவிக்கப்படும் என எதிர்பார்கின்றோம்.

அதேபோன்று பலாலியில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் ஆலடி சந்தியில் இருந்து பலாலி பெரும் பிரிவுக்கு போகும் பாதை இராணுவத்தினர் முள் வேலி போட்டு மூடியுள்ளார்கள். அந்த பாதையும் அந்த மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் வறுத்தலை விளான் பகுதியில் விடுவிக்கபப்ட்ட பிரதேசத்தில் இராணுவ முகாம் ஒன்று அமைந்துள்ளது. அந்த முகாம் அகற்றப்பட்டால் 46 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்.

வீமன் காமம் தையிட்டி மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் சில விடுவிக்கப்படாத பிரதேசம் உள்ளது அவையும் விடுவிக்கபப்டும் என எதிர்பார்க்கின்றோம். என தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122068/language/ta-IN/---TNA-----.aspx#.V4s5xfzT2h5.facebook

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக இடப்படும் வேலிகள். காங்கேசன்துறையில் விடப்பட்ட பகுதிகளில் புதிதாக முட்கம்பி வேலிகள் இடப்படுகின்றன. இவை கே கே எஸ் வீதியின் வலப்புறமாக ( அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரும் போது வீதிக்கருகாமையில்) . புதிதாக வீதி ஓரத்தில் நடப்படும் மரக்கட்டைகளை பாருங்கள். யாரை நொந்து என்ன பலன்.

13781910_1350330914980248_64498314381680

13692520_1350330948313578_26692040170591

13709793_1350330938313579_61405045786253

13718563_1350331068313566_69658601580287

Link to comment
Share on other sites

  • 1 month later...

வலி.வடக்கில் 600 ஏக்கர் அடுத்த வாரம் விடுவிப்பு! நேரில் சென்று ஆராய்ந்தது அதிகாரிகள் குழு

 

வலி. வடக்கில் அடுத்த வாரம் மேலும் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 600 ஏக்கர் வரையிலான நிலம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளது.

விடுவிக்கப்படவுள்ள பகுதிகளை யாழ். மாவட்டச் செயலர் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தனர்.

வலி.வடக்குக் காணி விடுவிப்புத் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது அடுத்த ஆண்டு நடுப் பகுதிக்குள் காணி விடுவிப்பதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர், விரைவில் 700 ஏக்கர் காணி வரை விடுவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கு அமைவாக முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகளே நேற்று நேரில் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினரால் பார்வையிடப்பட்டுள்ளன.

பலாலி படைத் தலைமையகத்தில் மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலைத் தொடர்ந்து விடுவிக்க அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் நேரில் சென்று காண்பிக்கப்பட்டன.

சாந்தைச் சந்தியிலிருந்து தையிட்டி ஊடாக ஊறணிச் சந்தி வரையான வீதியின் மேற்குப் பக்கம் முழுமையாக விடுவிக்கப்படுகின்றது.

வீதியின் கிழக்குப் பக்கம் வீதிக் கரையுடன் இருக்கின்ற பிரதேசம் மாத்திரம் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ளது.

விடுவிக்கப்படும் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளைப் பின்நகர்த்தும் செயற்பாடு இடம்பெற்று வருவதாகவும், அடுத்த வாரம் இது முடிவுறும் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விடுவிக்கப்படும் பகுதிகளிலுள்ள சில முகாம்களை இடமாற்றம் செய்வதற்குரிய நிதி கிடைக்கப் பெறவில்லை என்றும், அவை விரைவில் கிடைக்கப் பெற்றதும் அந்த முகாம்களும் இடமாற்றம் செய்யப்படும் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.

காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை கிழக்கு, தையிட்டி, தையிட்டி கிழக்கு, பளை வீமன்காமத்தின் எஞ்சிய பகுதிகளே அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/114571

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜீவன் சிவா said:

1980 இல் செல்லப்பிள்ளையார் கோவிலில் எனது நண்பர்கள்.

1229974_518620741548992_1119173793_n.jpg

படத்தில்... தாடியுடன் இருப்பது,  சேரன் போல் உள்ளது. சூப்பர் .. ஐயா... உங்கள் பணிக்கு, தலை வணங்குகின்றேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

படத்தில்... தாடியுடன் இருப்பது,  சேரன் போல் உள்ளது.

இந்தப் படத்தை எடுத்தது சேரன். எனவே அவர் இங்கு இல்லை. 
என்னுடன் சேர்ந்து 6 பேர் நோர்வேயிலும் இரண்டு பேர் கனடாவிலும் இப்போது புலம் பெயர்ந்துள்ளார்கள்.


பழைய நாட்கள் எப்பவுமே பசுமையானது.

Link to comment
Share on other sites

வலி.வடக்கில் விடுவிக்கப்படவுள்ள நிலங்களை அடையாளப்படுத்த உரிமையாளர்களுக்கு அனுமதி

27/8/2016

0 Comments

 

யாழ்.வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து 460 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ள நிலையில் அந்த நிலங்களை உரிமையாளர்கள் நேரில் பார்வையிட்டு அடையாளப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டுள்ள பகுதி காணி உரிமையாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு குறித்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

வலி.வடக்கில் 233, 234, 235, 236, மற்றும் 250 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 460 ஏக்கர் நிலம் 26 வருடங்களின் பின்னர் இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே விடுவிக்கப்படவுள்ள காணிகளை பார்வையிடுவதற்கும் அவற்றை நேரில் சென்று அடையாளப்படுத்துவதற்கும் காணி உரிமையாளர்களை அழைத்துச் செல்ல படைத்தரப்பு மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 கிராமசேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் முன்பாக ஒன்றுகூடி தங்கள் பகுதி பொறுப்பு கிராம சேவகர்கள் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

5 கிராமசேவகர் பிரிவுகளிலும் விடுவிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்கள் மட்டுமே இதன்போது அழைத்துச் செல்லப்படுவார்கள். ஏனையவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்குப் பதிலாக
வேறு இடங்களில் குடியேற்றி மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாக காட்ட சதி நடப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

குறிப்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இம்மாத இறுதியில் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் வேறு மீள்குடியேற்றப் பிரச்சினைகளுக்கு தாம் தீர்வு கண்டுவிட்டதாக காட்டவே அரசாங்கம் இவ்வாறான துரித சதித்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்க தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவிக்கிறார்.

குறிப்பாக அகதி யாழ்ப்பாணத்தில் உள்ள 30 முகாம்களில் உள்ள காணியற்ற மக்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்கி வீடுகளை அமைத்துக் கொடுத்து முகாம்களை மூடிவே திட்டமிடப்படுகிறது.

இதனை விடுத்து வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாற்றுக் காணிகள் எங்களுக்கு வேண்டாம். எமது சொந்த நிலங்களே எமக்கு வேண்டும் என பெரும்பாலான வலி.வடக்கு மக்கள் உறுதியாக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடற்றொழிலாளர்களை அவர்கள் வாழந்த கடலோரங்களை அண்டிய பகுதிகளிலும் விவசாயிகளை அவர்களது விவசாய நிலங்களிலும் தாக் குடியேற்ற வேண்டும்.

அதனை விடுத்து அரசின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நினைத்த இடங்களில் குடியமர்த்தினால் அவர்கள் தொழிலுக்கு எங்கு செல்வது? எனவும் குணபாலசிங்கம் கேள்வி எழுப்புகிறார்.

எனவே, அவசரப்பட்டு அரசாங்கம் பணத்தை வீணடிக்காமல் வலி.வடக்கு மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நன்றி:தமிழ்வின்.கொம்.

http://www.ourmyliddy.com/299029913007299430072975302129753007-297030142991302129803007296529953021/myliddy-news-9623774

Link to comment
Share on other sites

விரைவில் மக்களிடம் கையளிப்பதாக இன்று உறுதி கூறப்பட்ட இடங்கள் நீல நிறத்திலும், இராணுவம் தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் பகுதிகள் சிவப்பிலும், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட விடுவிக்கப்படாத பகுதிகள் பச்சை நிறத்திலும் உள்ளன. முகாம்களில் உள்ளவர்களின் பிரதிநிதிகளாக 15 பேரும், இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசிப்பவர்களின் பிரதிநிதிகள் 15 பேரும் இடங்கள் காட்டுவதற்காக இன்று அழைத்து செல்லப்பட்டனர்.

தலைவிதி யாதெனில் எமது வீடுகள் யாவும் (எனது சகோதர, சகோதரிகளது, நான் பிறந்து வளர்ந்தது) சிவப்புக்குள்ளேயே இருக்குது.

 
14102250_1383497918330214_4259878889298424193_n.jpg?oh=b42803861988b50828754e0416198bc4&oe=583B59D3
 

கீழே உள்ள படம் கிராம சேவையாளர் பிரிவுகளை கொண்டுள்ளது. இங்கு நீல நிறத்தில் உள்ளது விடுவிக்கப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்ட பகுதியாகும். பச்சை நிறத்தில் உள்ளது - இராணுவம் தொடர்ந்து வைத்திருக்கே விரும்பும் பகுதியாகும்.

சிவப்பு நிறத்தில் உள்ளது எப்பவோ மக்களிடம் கையளிக்கப்பட்டது, பின்னர் மீண்டும் பொலிஸாரினால் முள்ளுக்கம்பி வேலி அடைக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட பகுதியாகும்.

 

14095972_1383510448328961_5721743490069411536_n.jpg?oh=3593517f9f445999ad38f4ae7c31f31d&oe=584BFE0B

Link to comment
Share on other sites

  • 2 months later...

நாளை காங்கேசன்துறையில் சில பகுதிகளுக்கு விடிவு வரலாம் என்கிறார்கள் - பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

தினமும் மக்கள் காங்கேசன்துறைக்கு போகிறார்கள், சிலரது காணிகள் விடுவிக்கப்படுகின்றன, பலர் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். ஆனாலும் எதோ நல்லது நடக்குது - பார்க்கலாம். காங்கேசன்துறை விடுவிப்பு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி சொல்கிறார். இனிமேல் இது நம்ம கைகளில்தான்.

 

Link to comment
Share on other sites

ஜீவன், தோட்ட காணிகளை துப்பரவு செய்து திரும்பவும் தோட்டம் செய்வது என்றால் துப்பரவு பணிக்கு மணித்தியாலத்துக்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று சொல்கின்றார்கள், உண்மையா?

இது உண்மை என்றால் விரைவில் இந்த வேலையை உங்கு வந்து செய்யலாம் என்று நினைக்கின்றேன். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

மணித்தியாலத்துக்கு கனடா காசில் $160 உழைக்கலாம் என்றால் அடேங்கப்பா.

அங்கே பற்றைக்காடுதானே உள்ளது? ஏதோ முப்பது நாற்பது அடி உயரத்துக்கு வானளாவ உயர்ந்ந்துள்ள அமேசன் காடு கணக்குக்கு காணிக்கு உரித்துடைய் ஆட்கள் வெளிநாட்டில் என்றவுடன் கணக்குவிடுகின்றார்களோ என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கரும்பு said:

ஜீவன், தோட்ட காணிகளை துப்பரவு செய்து திரும்பவும் தோட்டம் செய்வது என்றால் துப்பரவு பணிக்கு மணித்தியாலத்துக்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று சொல்கின்றார்கள், உண்மையா?

இது உண்மை என்றால் விரைவில் இந்த வேலையை உங்கு வந்து செய்யலாம் என்று நினைக்கின்றேன். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

மணித்தியாலத்துக்கு கனடா காசில் $160 உழைக்கலாம் என்றால் அடேங்கப்பா.

அங்கே பற்றைக்காடுதானே உள்ளது? ஏதோ முப்பது நாற்பது அடி உயரத்துக்கு வானளாவ உயர்ந்ந்துள்ள அமேசன் காடு கணக்குக்கு காணிக்கு உரித்துடைய் ஆட்கள் வெளிநாட்டில் என்றவுடன் கணக்குவிடுகின்றார்களோ என்று நினைக்கின்றேன்.

கரும்பர்,  நிலக் கண்ணி வெடிகளின் ஆபத்து நிரம்ப உள்ளது தானே?

கை , கால் ..அல்லது ஆளே போனால்...யார் அந்தக் குடும்பத்தைப் பராமரிப்பது?:mellow:

Link to comment
Share on other sites

நான் குறிப்பிடும் பகுதி அப்படியான இடம் இல்லை. அங்கு மிதிவெடி வைக்கவேண்டிய தேவை இல்லை. சண்டை ஏதும் நடைபெறாத இடம். தோட்டக்காணி பற்றைக்காடாகியுள்ளது அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கரும்பு said:

நான் குறிப்பிடும் பகுதி அப்படியான இடம் இல்லை. அங்கு மிதிவெடி வைக்கவேண்டிய தேவை இல்லை. சண்டை ஏதும் நடைபெறாத இடம். தோட்டக்காணி பற்றைக்காடாகியுள்ளது அவ்வளவுதான்.

சரி...அப்படியென்றால்..நானும் உங்களோட 'பத்தை' கிளியர் பண்ண வர ஆயத்தம்!

Link to comment
Share on other sites

5 hours ago, கரும்பு said:

ஜீவன், தோட்ட காணிகளை துப்பரவு செய்து திரும்பவும் தோட்டம் செய்வது என்றால் துப்பரவு பணிக்கு மணித்தியாலத்துக்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று சொல்கின்றார்கள், உண்மையா?

இல்லை ஒரு பரப்பு துப்பரவாக்குவதற்கு 4000 - 5000 தான் முடியும். வேலை செய்பவர்களின் நாட்கூலி 1000 + சாப்பாடு அல்லது 1200. பெரிய மரங்கள் இருந்தால் அகற்றுவதற்கு இயந்திரம் (ஜேசிபி / பெக்கோ) வாடை 3500 / மணித்தியாலம்.

எப்படிப் பாத்தாலும் ஒரு பரப்பிற்கு 5000 இற்கு மேல் வராது. நீங்கள் வள்ளிநாயகி டீச்சரின் வீட்டிற்கு அருகாமையில் இருந்ததாக எழுதிய ஞாபகம். அது சரியாயின் உங்கள் பகுதி ஓரளவு விடப்பட்டுள்ளது. ஆனால் குரு வீதியில் இருந்துதான் போகலாம். கல்லூரி வீதி திறக்கப்படவில்லை. குரு வீதிக்கும் கே கே எஸ் வீதியிலிருந்து வரமுடியாது. மாவிட்டபுரம் புகையிரத நிலையத்திலிருந்து புகையிரதப் பாதை அருகே வரும் வீதிதான் ஒரே வழி.

5 hours ago, புங்கையூரன் said:

கரும்பர்,  நிலக் கண்ணி வெடிகளின் ஆபத்து நிரம்ப உள்ளது தானே?

கை , கால் ..அல்லது ஆளே போனால்...யார் அந்தக் குடும்பத்தைப் பராமரிப்பது?:mellow:

மற்றது இப்பகுதியில் சண்டை நடை பெறவில்லை. எனவே கண்ணி வெடிகள் இல்லை.

Link to comment
Share on other sites

10 hours ago, ஜீவன் சிவா said:

இல்லை ஒரு பரப்பு துப்பரவாக்குவதற்கு 4000 - 5000 தான் முடியும். வேலை செய்பவர்களின் நாட்கூலி 1000 + சாப்பாடு அல்லது 1200. பெரிய மரங்கள் இருந்தால் அகற்றுவதற்கு இயந்திரம் (ஜேசிபி / பெக்கோ) வாடை 3500 / மணித்தியாலம்.

எப்படிப் பாத்தாலும் ஒரு பரப்பிற்கு 5000 இற்கு மேல் வராது. நீங்கள் வள்ளிநாயகி டீச்சரின் வீட்டிற்கு அருகாமையில் இருந்ததாக எழுதிய ஞாபகம். அது சரியாயின் உங்கள் பகுதி ஓரளவு விடப்பட்டுள்ளது. ஆனால் குரு வீதியில் இருந்துதான் போகலாம். கல்லூரி வீதி திறக்கப்படவில்லை. குரு வீதிக்கும் கே கே எஸ் வீதியிலிருந்து வரமுடியாது. மாவிட்டபுரம் புகையிரத நிலையத்திலிருந்து புகையிரதப் பாதை அருகே வரும் வீதிதான் ஒரே வழி.

மற்றது இப்பகுதியில் சண்டை நடை பெறவில்லை. எனவே கண்ணி வெடிகள் இல்லை.

தகவலுக்கு நன்றி சார். இது தோட்டக்காணி, குருவீதி கிழக்குப்பக்கத்தால் முடிவடையும் இடத்தில் துண்டி ஒன்று இருந்தது அல்லவா, துண்டியுக்கு கிழக்கால் இந்த காணி உள்ளது. இதை குரட்டாவத்தை என்று அழைப்பார்கள். உங்களுக்கு மூர்த்தியை தெரியுமா? மூர்த்தி வீட்டுக்கு பின்னால் உள்ளது.

Link to comment
Share on other sites

1 hour ago, கரும்பு said:

தகவலுக்கு நன்றி சார். இது தோட்டக்காணி, குருவீதி கிழக்குப்பக்கத்தால் முடிவடையும் இடத்தில் துண்டி ஒன்று இருந்தது அல்லவா, துண்டியுக்கு கிழக்கால் இந்த காணி உள்ளது. இதை குரட்டாவத்தை என்று அழைப்பார்கள். உங்களுக்கு மூர்த்தியை தெரியுமா? மூர்த்தி வீட்டுக்கு பின்னால் உள்ளது.

நாளை அநேகமாக காங்கேசன்துறை போவேன் வசதிப்படின் + கண்டு பிடித்தால்  உங்கள் காணியையும் படம் எடுத்து போடுகின்றேன்.

Link to comment
Share on other sites

வீடு நோக்கிய ஒரு பயணம்

நண்பனும் காடுகளும்.
4 கிலோ குறைந்திருப்பார் இன்று.

14980595_1450198814993457_4694371572090213945_n.jpg?oh=f677f811c5bdb16b8ab8068c9e518f8c&oe=589BAF80

14947718_1450198854993453_350104677748670704_n.jpg?oh=d53d0e8c59fd55ddd183a8aefdc3235a&oe=589287B6&__gda__=1485653262_2585bf9af5576c4bbc65db1899ab9631

14563367_1450198804993458_7544403264259449975_n.jpg?oh=615359eef940ae7dbc0bab32ebf996f9&oe=58D16CFC&__gda__=1489631351_07a60687ceb2c26aafe452991824ee7b

 

Link to comment
Share on other sites

ஒருகாலத்தில் கலகலவென்று இருந்த College Road (கல்லூரி வீதி).

ஓரிடத்தில் முன்னொரு காலத்தில் தார் இருந்ததிற்கான அடிச்சுவடும் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டமை வரலாற்றில் பதிக்கப் படவேண்டியது..

 

 

14906880_1450210321658973_3118043961624344347_n.jpg?oh=bf62f7c220d3c7a569c1b059eeb87b41&oe=5893919E

 

14907224_1450210401658965_6145574669283852337_n.jpg?oh=e83c2a50bcf36433333c20afdb0017db&oe=589E89FD

 

14708184_1450210581658947_7127082754991989661_n.jpg?oh=305184aa3cf344f436b30fb7f137c0fb&oe=5896C403&__gda__=1490025091_85926d4c41030073dcec9aa5384dec4a

 

14907205_1450214758325196_3849350504405831724_n.jpg?oh=e19c0756b9a0d2524af27190c7cca2de&oe=58C940E9&__gda__=1486772715_f21a22702d1a179574091465996f8dd8

 

14900362_1450215758325096_5037557550754017108_n.jpg?oh=b80b8b3bc8e9bedcc604249ac3aedaa0&oe=589D4A6F&__gda__=1490120016_1c7876e3aef05607ddda770327f13d1f

 

14908168_1450215784991760_1257174731619316743_n.jpg?oh=7962b7f82168aba2fbef1d1cf8da6899&oe=58993DE4&__gda__=1486620864_fd7d3f4a5466873d5c23744322d8089b

 

14910409_1450215461658459_1480669740043656314_n.jpg?oh=b106948fc6c5bdef783a788bb8054b7b&oe=58CEE0E4

 

 

Link to comment
Share on other sites

எமது வீட்டின் மதில் மூலை,

வீழ்ந்து கிடக்கும் வாசல் தூணில் ஒன்று.

இன்றும் நிமிந்திருக்கும் இன்னொரு தூண்

பாதியெண்டாலும் உயரே நிற்கும் கிணத்துச்சுவர்.
அருகே அண்ணை 70 களில் நட்ட இப்பில் இப்பில் மரம் நிலத்தோடு.

வீடு ஒரு கற்குவியலாக.

14909897_1450256614987677_7266835957993443214_n.jpg?oh=f38a0d3b8a62e7902b2c46211704147d&oe=589177D0

14963125_1450260118320660_8916703836417433523_n.jpg?oh=c6a32a18933953a9cd38c32e0e3c3144&oe=58A0D6DE

14938247_1450260114987327_7107094291748158271_n.jpg?oh=94b0a66ae11c8635d8c67aee5d8c900b&oe=58A0249D

 

14900519_1450260574987281_7742008861986551806_n.jpg?oh=abb4dafb65e7546645ea3f0ee6d9bff5&oe=588C65F0

14962802_1450261181653887_6720613135378991515_n.jpg?oh=a2d1f54b67373ecb5a0cec9d21860559&oe=58CA509B

14908297_1450262831653722_2465261423438669809_n.jpg?oh=a02a17695b9fcc7156d1bbf3693f4739&oe=58CA8FB9

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை,  என்னால் மறக்க முடியாத நகரம். :)

சாரணர் இயக்கத்தில் இருந்த போது.... ராணி சாரணர் (Queen Scout / President Scout) பயிற்சிப் பட்டறை செய்வது, மாணவப் பருவத்தில் கடுமையாக இருக்கும். ஐந்து நாள்.... நடந்து, யாழமாவட்டத்தில் உள்ள பல ஊர்களுக்கு சென்று, அவர்கள் குறிப்பிட்டவர்களை... குறிப்பிட்ட நேரம்  சந்திக்க  வேண்டும். இரவு தங்குவதற்கு, பாடசாலைகளையோ, பேருந்து தரிப்பிடங்களையோ நாமே தெரிவு செய்து கொள்ள வேண்டும்.  அந்தக் குழுவில், நாம் ஐந்து பேர் இருந்தோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்த பயணம் அரியாலை போய்... காங்கேசன் துறையில் முடிய வேண்டும் என்பது,  அந்தப் பட்டறையின் விதி. முதல் நான்கு நாட்களை.... ஒருவாறு சமாளித்து விட்டோம். ஐந்தாம் நாள் இரவு,  காங்கேசன் துறை பஸ் நிலையத்தை  அடைய... இரவு 10 மணியாகி விட்டது, பசியும்... வயித்தை கிள்ளுது. கையிலை, காசும் இல்லை.   சரி... இன்று, இங்கு படுப்போம்.. என்று, அங்கு ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்த போது....

கடைசி  பேருந்து அங்கு வந்தது.... அதில் இருந்து, இறங்கிய சாரதி, "தம்பியவை... இங்கை, என்ன செய்து கொண்டிருக்கிறியள்." என்று அதட்டலுடன் கேட்டார். நாங்கள்.. விஷத்தை விளங்கப் படுத்திய போது,  "இங்கை படுக்காதேங்கோ.... என்ரை வீட்டுக்கு வாங்கோ, சாப்பிட்டு படுக்கலாம்"  என்று அழைத்தார்."

"கரும்பு,  தின்ன.... கைக் கூலியா" என்ற சந்தோசத்தில் .... நாம் எல்லோரும் ஓமண்ணை என்று சொல்லி அவருடன் மீண்டும் இரண்டு கிலோ மீற்றர், பல விடயங்களையும் கதைத்துக்   கொண்டு  நடந்து அவரின் வீ ட்டை அடைய... அவரின் மனைவி, கணவனை மட்டுமே  எதிர் பார்த்தவர், அவருடன் ஐந்து   பெடிப் பயலுகளை கூட்டிக் கொண்டு வந்ததைப்  பார்த்து, அதிர்ச்சியானதை அவரின் முகம் சொல்லியது. அவர் அவவுக்கு, விசயத்தை சொன்னவுடன்....  "பிள்ளையள்....  கொஞ்சம் பொறுங்கோ"  என்று சொல்லி விட்டு... சோறு சமைத்து தந்து, நித்திரை கொள்ளவும் வசதி ஏற்படுத்தித் தந்த... அந்த அன்பான காங்கேசன் துறை   குடும்பத்தை மறக்கவே முடியாது.

இன்னும்... அந்த விடயத்தையும், நகரத்தைப்  பற்றியும் எழுத வேண்டும் போல் இருந்தாலும்.... 
ஜீவன் சிவாவின்... தலைப்பில், சம்பந்தமில்லாத விடயங்களை  எழுதுவது சரியல்ல, என்பதால் நிறுத்திக் கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14708184_1450210581658947_7127082754991989661_n.jpg?oh=305184aa3cf344f436b30fb7f137c0fb&oe=5896C403&__gda__=1490025091_85926d4c41030073dcec9aa5384dec4a

இந்த மரம்.... "இப்பில், இப்பில்" மரமா? அல்லது  "வாதராணி" மரமா? ஜீவன் சிவா.

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

இன்னும்... அந்த விடயத்தையும், நகரத்தைப்  பற்றியும் எழுத வேண்டும் போல் இருந்தாலும்.... 
ஜீவன் சிவாவின்... தலைப்பில், சம்பந்தமில்லாத விடயங்களை  எழுதுவது சரியல்ல, என்பதால் நிறுத்திக் கொள்கின்றேன். :)

இது சம்பந்தமில்லாத, வேண்டாத விடயம் இல்லைத்தானே - தொடர்ந்து எழுதுங்கள்.

6 hours ago, தமிழ் சிறி said:

இந்த மரம்.... "இப்பில், இப்பில்" மரமா? அல்லது  "வாதராணி" மரமா? ஜீவன் சிவா.

இப்பில் இப்பில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14708184_1450210581658947_7127082754991989661_n.jpg?oh=305184aa3cf344f436b30fb7f137c0fb&oe=5896C403&__gda__=1490025091_85926d4c41030073dcec9aa5384dec4a


படத்தில்.. எல்லைக்கு, நடப்பட்டுள்ள, மரக் கட்டைகள்  (குத்திகள்)  எல்லாம், ஏன் மேல் பக்கம் கூராக உள்ளது.
ஏனென்றால்.... இங்கு, கூரான  பக்கத்தை, அந்த,  ஈர  மண்ணில் இடித்து இறக்குவது வழமை.
நீங்களும்.... ஐரோப்பாவில், இருந்த படியால், 
எங்கடை சனம், கதியாலை....தலை கீழாய் நட்டுப் போட்டினமோ... என்று தெரியவில்லை.
அல்லது...  கூர் பக்கம், மேலே இருக்க.... சமய நம்பிக்கைகளும் காரணமாக இருக்குமோ...... 
மண்டை... மீண்டும்.... விறைக்குது.  34.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.