Jump to content

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016


Recommended Posts

வைகோவுக்குக் கிடைத்த மாபெரும் "வெற்றி".. !

 

 சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல முடியும்.

மூன்றாவது அணி அதாவது மக்கள் நலக் கூட்டணி உருவானதே, அதிமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றுதான் என்பதே ஆரம்பத்திலிருந்து அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த கூற்று. இதை வைகோ ஆரம்பத்திலிருந்தே உறுதிபட மறுக்கவில்லை.

ADMK shuold thank Vaiko!

மாறாக, தான் அமைத்துள்ள கூட்டணியை மிகப் பெரிய மாற்று அணி என்பது போன்ற அலிபியை அவர் சீரியஸாகவே உருவாக்கினார. மக்களும் அதை நம்பத் தொடங்கினர். அவரது தலைமையில் உருவான நான்கு கட்சி மக்கள் நலக் கூட்டணி பின்னர் விஜயகாந்த்தை இழுத்தபோதுதான் வைகோவை வைத்து ஜெயலலிதா போட்டுள்ள கேம் பிளான் என்ற கூற்று வலுப்பட்டது.

இப்போதுதான் சற்று வெளிப்படையாக ஜெயலலிதாவை விமர்சிக்க ஆரம்பித்தார் வைகோ. அப்படியும் கூட அவர் மீதான சந்தேகப் பார்வை போகவில்லை. விலகவில்லை.

இப்போது கிட்டத்தட்ட எல்லாமே தெளிவாகி விட்டது. தானும் கெட்டு, தன்னுடன் சேர்ந்தவர்களையும் காலி செய்துள்ளார் வைகோ. தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணி வாங்கியுள்ள வாக்குகளைப் பார்த்தால் மொத்தமாக 6 சதவீதம் கூட வரவில்லை. இதில் மிகப் பெரிய கேவலம் - தேமுதிகவுக்குத்தான்.

ஆரம்பத்திலிருந்தே சாலிடாக வாக்குகளைப் பெற்று வந்தது தேமுதிக. கடந்த தேர்தலில் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றது தேமுதிக. ஆனால் இன்று அதை காலி செய்துள்ளார் வைகோ.

அதேபோலத்தான் கம்யூனிஸ் கட்சிகள். இரு கட்சிகளும் தலா 2 சதவீத அளவுக்கு வாக்குகளை வைத்திருந்தன. அதையும் காலி செய்து விட்டார் வைகோ.

அதேபோல விடுதலைச் சிறுத்தைகளின் பலத்தையும் பதம் பார்த்து விட்டது இந்தக் கூட்டணி. எல்லாவற்றையும் ஊற்றி மூடிய மதிமுக கடைசியில் அது வெறும் 0.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி கூட 0.8 சதவீதவாக்குகளைப் பெற்றுள்ளது என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகும்.

இப்படி திமுகவுக்கு சாதகமாக போக வேண்டிய வாக்குகளை மிகச் சாதுரியமாக அதிமுக பக்கம் திருப்பி விட்டுள்ளார் வைகோ என்பதே உண்மை. தேமுதிக மட்டும் திமுகவுடன் போயிருந்தால் நிச்சயம் அதிமுக ஆட்சியை இழந்திருக்கும். அதைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் திருமாவளவனோ, கம்யூனிஸ்டுகளோ திமுக பக்கம் போய் விடாமலும் தடுத்து அதிமுகவைக் காப்பாற்றியுள்ளார் வைகோ என்பதே உண்மையாகும்.

மொத்தத்தில் தானும் கிணற்றில் விழுந்து, மற்றவர்களையும் குப்புறத் தள்ளி விட்டுள்ளது மதிமுக... உண்மையில் அதிமுகவினர் வைகோவைத்தான் கொண்டாட வேண்டும்!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-shuold-thank-vaiko-254045.html

08:21 அதிமுக 132; திமுக 95;  பாமக 2; தொகுதிகளில் முன்னிலை

08:20 நெய்வேலி தொகுதியில் 13,621 வாக்குகளுடன் அதிமுக 3- வது இடம்

08:20 நெய்வேலி தொகுதியில் பண்ருட்டி வேல்முருகன் 15,510 வாக்குகளுடன் 2-வது இடம்

08:20 நெய்வேலி தொகுதியில் திமுகவின் சபா ராஜேந்திரன் முன்னிலை

08:14 கொளத்தூரில் ஸ்டாலின் முன்னிலை

08:13 அதிமுக 134; திமுக 93;  பாமக 2; தொகுதிகளில் முன்னிலை

08:12 பாமக தொடர்ந்து பின்னடைவு- 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை

08:12 அதிமுக 136; திமுக 89;  பாமக 2; தொகுதிகளில் முன்னிலை

08:09 ஒசூரில் அதிமுக முன்னிலை, காங்கிரஸ் கோபிநாத் பின்தங்கினார்

08:08 திருச்செந்தூரில் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் சரத்குமார் பின்னடைவு

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

50 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 500க்கு உள்ளேதான்.. டிரெண்ட் மாறாதா என திமுக ஏக்கம்

50 constituencies has below 500 vote different between AIADMK and DMK

சென்னை: அதிமுக முன்னணியில் இருப்பதாக வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் காட்டிவரும் போதும், 50 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக நடுவே சுமார் 500 வாக்குகளுக்கு உள்ளேயே வித்தியாசம் இருப்பதாக வரும் செய்திகள் திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த காலை 8 மணி முதலே அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து அதிமுகவே முன்னணியில் இருந்து வந்தது. காலை 11.30 மணியளவிலும் அதே நிலைமை தொடர்ந்தது. எனவே ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அதேநேரம், சுமார் 50 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நடுவேயான வாக்கு வித்தியாசம் 50 தொகுதிகளுக்கு உள்ளேதான் இருந்து வருகிறது. இதில் எந்த கட்சி பக்கம் டிரெண்ட் மாறும் என்பதை பொறுத்து, வெற்றி தோல்வி அமையும். திமுகவினர் தங்கள் பக்கம் டிரெண்ட் மாறாதா என்று ஏங்கிக்கொண்டுள்ளனர்.

ஆனால், இதில் 25 தொகுதிகள் திமுகவுக்கும், 25 தொகுதிகள் அதிமுகவுக்கும் என பிரிந்து முன்னணி பெற்றாலும்கூட திமுகவால் ஆட்சியமைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/50-constituencies-has-below-500-vote-different-between-aiadmk-dmk-254046.html

Link to comment
Share on other sites

34 minutes ago, நவீனன் said:

தேமுதிக எங்கும் முன்னணி இல்லை, 2 இடங்களில் முன்னுக்கு வந்து பின்னே போனது

CizJLxvU4AUUsun.jpg

Link to comment
Share on other sites

மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!

 

 சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி எங்குமே முன்னிலையில் இல்லாவிட்டாலும் கூட வாக்குகளைப் பெறுவதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சிக்கு 1 சதவீத அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

என்ன விசேஷம் என்றால் நீண்ட காலமாக அரசியல் களத்தில் ஏதாவது ஒரு வகையில் சக்தியாக திகழ்ந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரையும், புதிதாய்ப் பிறந்த தமிழ் மாநில காங்கிரஸையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது நாம் தமிழர் கட்சி. இக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் முழுவதும் செய்த தீவிரப் பிரச்சாரம், இவரது கட்சியினர் நடத்தி வந்த தீவிர களப் பணி, இக்கட்சியின் வித்தியாசமான தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பலவற்றின் காரணாமாக இக்கட்சியும் மக்களின் பார்வையில் விழுந்துள்ளது.

 

கடைசி நிலவரப்படி நாம் தமிழர் கட்சிக்கு 1 சதவீத வாக்கு கிடைத்துள்ளது. அதாவது இதுவரை இக்கட்சிக்கு 1,01,985 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தமாகா (0.8%), சிபிஐ (0.7%), மதிமுக (0.7%), சிபிஎம் (0.7%), விடுதலைச் சிறுத்தைகள் (0.6%) உள்ளன. நீண்ட காலமாக அரசியலில் உள்ள கட்சிகளை விட கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamilar-gets-decent-votes-254047.html

அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி பின்னடைவு

Valarmathi and Gokula Indira trailing of DMK candidates

சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் அண்ணா நகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக பெண் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அதிமுகவில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் பா.வளர்மதி. இவர்கள் இருவரும் அதிமுகவின் முக்கிய பெண் அமைச்சர்கள். இந்த தொகுதிகளின் சிட்டிங் எம்.எல்.ஏக்களாகவும் இருவரும் உள்ளனர்.

இவர்களுக்கு எதிராக திமுக சார்பில் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கு.க. செல்வம், அண்ணாநகர் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் ஆகியோர் மிகவும் வலுவான நிலையில் உள்ளனர்.

 

வளர்மதி, கோகுலஇந்திரா பின்னடைவை சந்தித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி சட்டசபை அதிமுகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அவர்கள் அமைச்சர் நத்தம் விஸ்வாநாதன், கோகுல இந்திரா, வளர்மதி, பழனியப்பன், வைத்திலிங்கம் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/valarmathi-gokula-indira-trailing-dmk-candidates-254048.html

Link to comment
Share on other sites

CizKVPlU4AAGb4O.jpg:large

பாமக ரியாக்சன் நவ் ?? லேசா எட்டி பார்த்ததுக்கே கிடமாடு மாதிரி ஓடுரானுக

Link to comment
Share on other sites

08:34 ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வி

08:34 ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி

08:34 இதுவரை அதிமுக பெற்றுள்ள மொத்த வாக்குகள் 41.6%

திமுக கூட்டணி பெற்றுள்ள மொத்த வாக்குகள் 39.8%

அதிமுக, திமுக கூட்டணி வாக்கு வித்தியாசம் 1.8% 08:29   

      அதிமுக 133; திமுக 96;  பாமக 2; தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

08:36 சங்ககிரியில் காங். வேட்பாளர் ராஜேந்திரனை 37,777 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் அதிமுகவின் ராஜா

Read more at: http://tamil.oneindia.com/

08:43 உளுந்தூர்பேட்டையில் விஜய்காந்த் ஊ... ஊ!

உளுந்தூர்பேட்டையில் அதிமுக 29622, திமுக 27252, விஜய்காந்த் 12570, பாமக 5884

08:43   காட்பாடியில் திமுகவின் துரைமுருகன் வெற்றி

பூம்புகாரில் அதிமுவின் பவுன்ராஜ் வெற்றி

08:40 ஆர்.கே.நகரில் ஜெயலலிதா 21,143 வாக்குகள் வித்தியாசத்தில் முன்ன்னிலை

08:39 அருப்புக்கோட்டையில் திமுகவின் கே.கே.எஸ்.ராமச்சந்திரன் 9592 வாக்குகளில் முன்னிலை

08:36 சங்ககிரியில் காங். வேட்பாளர் ராஜேந்திரனை 37,777 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் அதிமுகவின் ராஜா

Read more at: http://tamil.oneindia.com/

முன்னிலை நிலவரம்

அ.தி.மு.க. கூட்டணி 131
தி.மு.க. கூட்டணி 94
ம.ந. கூட்டணி 0
பா.ம.க 1
பா.ஜ.க. கூட்டணி 0
நாம் தமிழர் 0
பிற 0
மொத்தம் 232
Link to comment
Share on other sites

கடலூர் தொகுதியில் சீமான் கடும் பின்னடைவு

COMMENT   ·   PRINT   ·   T+  
 
 
 
 
 
சீமான் | படம்: வி.எம்.மணிநாதன்
சீமான் | படம்: வி.எம்.மணிநாதன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று நிலவரப்படி நாம் தமிழர் கட்சி 1% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 1,41,232 பேர் மட்டுமே அக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். மேலும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட கடலூர் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெறும் 1,691 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் முதல் நபராக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் தொடங்கினார் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article8619998.ece?homepage=true

08:50 அதிமுக 130; திமுக 95;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

08:50 கடலூரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு 5-வது இடம் கடலூரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு 2,288 வாக்குகள்

08:48 பாப்பிரெட்டிப்பட்டியில் அமைச்சர் பழனியப்பன் தோல்விமுகம், பாமக முன்னிலை

08:47 திமுக வேட்பாளர் ரகுபதியை 19,723 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் பெரியபுள்ளான்

08:47 மதுரை மேலூரில் அதிமுக பெரியபுள்ளான் வெற்றி

08:46 அதிமுக 131; திமுக 95;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

08:45 பூம்புகார் தொகுதியில் அதிமுகவின் பவுன்ராஜ் மு.லீக் வேட்பாளர் ஷாஜகானை 21,294 வாக்குகளில் தோற்கடித்தார்

Read more at: http://tamil.oneindia.com/

காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவனுக்கு 3-வது இடம் 

Read more at: http://tamil.oneindia.com/

விளவங்கோடு தொகுதியில் காங்கிரசின் விஜயதாரணி முன்னிலை- அதிமுகவுக்கு 4வது இடம் 

Read more at: http://tamil.oneindia.com/

கட்சிவாரி முடிவுகள்

கட்சிகள் முன்னிலை முடிவுகள்
admk.png அ.தி.மு.க., 129 3
dmk.png தி.மு.க., 83 3
congress.png காங்கிரஸ் 8 2
bmk.png பா.ம.க., 1  
bjp.png பா.ஜ.க., 1  
dmdk.png தே.மு.தி.க., 0  
mtmk.png ம.தி.மு.க.,    
vc.png விசி 0  
ptm.png புதிய தமிழகம் 1  
vote.png மற்றவை    

09:00 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்:

ஜெயலலிதா வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி: ஜெயலலிதா

08:59 வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

08:59 காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவனுக்கு 3-வது இடம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக முன்னிலை; காங்கிரஸ் 2-வது இடம்

08:58 விளவங்கோடு தொகுதியில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு 2, 3-வது இடம்

08:58 விளவங்கோடு தொகுதியில் காங்கிரசின் விஜயதாரணி முன்னிலை- அதிமுகவுக்கு 4வது இடம்

08:54 அதிமுக 130; திமுக 95;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை 08:54 அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன்  முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

வெள்ள பாதிப்புக்கு பதிலடி கொடுத்ததா சென்னை? பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை

 சென்னை: வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த சென்னையில் பெரும்பான்மையான தொகுதிகள் திமுக பக்கம் செல்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்துவிட்டு பல மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா அரசுக்கு எதிராக திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

மக்களை ஈர்க்கும் வகையிலான விளம்பரங்களை திமுக வெளியிட்டது. திமுகவின் வியூகத்திற்கு ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. பகல் 12 மணி நிலவரப்படி, சென்னையிலுள்ள 16 தொகுதிகளில் 12 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றது. அண்ணாநகர், ஆயிரம் விளக்கு போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி போன்றோர் தோல்வி முகத்தில் உள்ளனர்.

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை வகித்தாலும், வாக்கு வித்தியாசம் என்பது மிகப்பெரிய அளவில் இல்லை. திமுகவின் கோட்டை என்று முன்பு சென்னை வர்ணிக்கப்படும். ஆனால், கடந்த தேர்தலில் அது முற்றிலும் மாறியது. டிரெண்ட் மாறுவது தெரிந்துதான், சேப்பாக்கம் தொகுதியை தவிர்த்து, தனது சொந்த மாவட்டமான திருவாரூர் தொகுதியில் போட்டியிட ஆரம்பித்தார் கருணாநிதி. ஆனால், இம்முறை திமுகவின் கோட்டையாக தலைநகரம் மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-has-the-edge-chennai-as-it-has-been-lead-12-constituenci-254053.html

ஜஸ்ட் 1.6 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது அதிமுக!

 

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள போதிலும் கூட, திமுக அணியை விட அதன் வாக்கு வித்தியாசம் வெறும் 1.6 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தேமுதிக திமுக பக்கம் வந்திருந்தால் நிச்சயம் திமுக அணிதான் வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால் அது நடைபெறாமல் வைகோ தடுத்து விட்டதால் அதிமுக அணி வெற்றி பெற்று விட்டது. இதுவரை வெளியாகியுள்ள நிலவரப்படி அதிமுகவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் 41.5 சதவீதமாகும்.

திமுக அணிக்கு கிடைத்துள்ள வாக்குகள் 39.9 சதவீதம்

திமுக- 31% காங்கிரஸ்- 6.5%

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1.1%

மனிதநேய மக்கள் கட்சிக- 0.7%

புதிய தமிழகம்- 0.5%

அதிமுக, திமுக கூட்டணி வாக்கு வித்தியாசம்- 1.6 சதவீதமாகவே உள்ளது.

அதேசமயம் 2.2 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றுள்ளது. இது திமுக கூட்டணிக்குப் போனால், அதிமுகவை விட அதிக வாக்குகள் கிடைத்திருக்கும், திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். எனவே கூட்டணி வலுவானதாக அமையாமல் போனதால்தான் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மயிரிழையில்தான் அதிமுக தப்பிப் பிழைத்து ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-assures-its-govt-a-meager-vote-difference-254056.html

09:13 ஆத்தூர் தொகுதியில் 5-வது முறையாக வெல்கிறார் திமுகவின் ஐ பெரியசாமி அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை வீழ்த்துகிறார் ஐ. பெரியசாமி

09:12 ஒட்டன்சத்திரத்தில் 5-வது முறையாக வெல்கிறார் திமுகவின் சக்கரபாணி

09:12 தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமி மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் பல்லாவரத்தில் போட்டி

09:12 பல்லாவரம் தொகுதியில் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமிக்கு 3,171 வாக்குகள்- 3வது இடம்

09:11 அதிமுக 129; திமுக 96;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

09:09 நெய்வேலி தொகுதியில் அதிமுக, பாமகவுக்கு 3,4வது இடம்

09:09 நெய்வேலி தொகுதியில் திமுக முன்னிலை; தமிழக வாழ்வுரிமைக் கட்சி 2-வது இடம்

09:09 நெய்வேலியில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி 09:02 தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க பாடுபடுவேன்: ஜெயலலிதா

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

அதிமுக தொடர்ந்து முன்னிலை... சோக மயத்தில் திமுகவின் அண்ணா அறிவாலயம்

 

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் உள்ளதால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு சில தொண்டர்கள் சோகமயத்துடன் காட்சியளிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 134 தொகுதிகளில் அதிமுக முன்னணியில் இருந்தாலும் சென்னை மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளதால் பெரும்பாலான திமுக தொண்டர்கள் உற்சாகத்துடனே காணப்படுகின்றனர்.

சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமையன்று காலை 8 மணிக்குத் தொடங்குவதற்கு முன்பிருந்தே திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர். காலை 8.30 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியபோது திமுக முன்னணி பெற்ற தொகுதிகள் நிலவரம் அறிவிக்கப்பட்டபோது கூடியிருந்த திமுக தொண்டர்கள் சந்தோஷ மனநிலையில் "கலைஞர் வாழ்க' என்று முழக்கமிட்டனர்.

தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து முதல் சுற்று நிலவரம் அறிவிக்கப்பட்டபோது,அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிந்ததும் திமுக தொண்டர்கள் பலரின் முகம் மாறிப் போனது. அண்ணா அறிவாலயமே சோகமயமாக காணப்பட்டது. மூன்றாம் சுற்று, நான்காம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது திமுக வெற்றிபெறப்போவதில்லை எனத் தெளிவாகத் தெரிந்ததும் தொண்டர்கள் ஒவ்வொருவராகக் கலையத்தொடங்கினர்.

தமிழகத்தில் 134 தொகுதிகளில் அதிமுக முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டது. திமுக 93 தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. சென்னையில் 12 தொகுதிகளில் திமுக முன்னணியில் இருந்தது. இது திமுகவினரை உற்சாகப்படுத்தியது. பல தொண்டர்கள் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

மீதமிருந்த 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் "இப்படி ஆயிடுச்சே. இப்படி ஆயிடுச்சே' என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்களில் ஒரு சிலர் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-headquarters-anna-arivalayam-sad-look-254049.html

09:25 அதிமுக 127; திமுக 96;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை 09:21 தேர்தலில் வெற்றி: முதல்வர் ஜெ.க்கு ஆளுநர் ரோசய்யா வாழ்த்து 09:15 நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வெற்றி அதிமுக 4; திமுக 3 தொகுதிகளில் வெற்றி 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

அதிமுகவுக்கு வாங்கு வங்கியாக மாறிய டாஸ்மாக் பயம்

TASMAC,a major boost for ADMK

 சென்னை: தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் பிற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மாக்கிற்கு மூடுவிழா நடத்திவிடுவார்களோ என்ற பயம் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தன.

 

ஆனால் அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறியது. இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதிமுக அதிமுக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

 

அதனால் அதிமுகவினர் தற்போதே வெற்றிக் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர். டாஸ்மாக் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது. தெருவுக்கு தெரு டாஸ்மாக்கில் குறைந்த விலையில் மது வாங்கி குடித்து பழகிவிட்ட அவர்களுக்கு வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்து டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம். மது டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் அல்லாட வேண்டும் என்ற பயமும் அதிமுகவுக்கு வாக்கு வங்கியாக மாறியுள்ளது.

 

மேலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற பயமும் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது. கருத்துக்கணிப்பு நியூஸ்7 சேனல் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மக்களில் 30 சதவீதம் பேர் மதுவிலக்கு வேண்டாம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tasmac-a-major-boost-admk-254052.html

09:38         அதிமுக 126; திமுக 96;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

09:25 அதிமுக 127; திமுக 96;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

09:21 தேர்தலில் வெற்றி: முதல்வர் ஜெ.க்கு ஆளுநர் ரோசய்யா வாழ்த்து

09:15 நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வெற்றி அதிமுக 4; திமுக 3 தொகுதிகளில் வெற்றி 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

'என்னை ஒதுக்கினால் இதுதான் நடக்கும்!' -அழகிரி ரியாக்ஷன்

azhagirilaugh6002.jpg

சட்டமன்றத் தேர்தலில் வைகோவின் கண்ணாமூச்சி ஆட்டம் ஒருபுறம் இருந்தாலும், மதுரையில் தி.மு.கவை குறிவைத்து அழகிரி நடத்திய ஆட்டங்கள் தேர்தல் களத்தை அதிர வைத்தன. 'தேர்தல் முடிவுகளால் அண்ணன் ரொம்ப உற்சாகத்தில் இருக்கிறார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

இதுபற்றி நம்மிடம் பேசிய அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஒருவர், " மதுரை, சத்யசாய் நகரில் உள்ள மு.க.அழகிரியின் வீட்டில் காலையில் இருந்தே அவரது ஆதரவாளர்கள் குழுமி விட்டனர். தேர்தல் முடிவுகளைப் பார்க்க ஆர்வத்தோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தார் மு.க.அழகிரி. ஆதரவாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசினார். 'அ.தி.மு.க முன்னிலை' என டி.வியில் செய்தி ஓடும்போது, பலமாக சிரித்தார். எங்களைப் பார்த்து, ' நான் சொன்னதுதான நடந்துருக்குன்னு'  சொன்னார்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்து,' என்னை ஒதுக்கி வச்சுட்டு வெற்றி பெற்றுவிடலாம்னு ஸ்டாலின் கணக்குப் போட்டார். இப்ப என்ன நடந்துச்சு பார்த்தீங்கல்ல? மதுரை, தேனி, விருதுநகர் என 20 தொகுதிகள்ல சாதாரணமா நாம் ஜெயிச்சிருக்க முடியும். நம்மகிட்ட ஒரு வார்த்தைகூட அவங்க பேசலை. தேர்தல் வேலை பாருங்கன்னு சொல்லியிருந்தாங்கன்னா, நம்ம ஆட்கள் சந்தோஷப்பட்டிருப்பாங்க. எல்லாத்தையும் கெடுத்தது ஸ்டாலின்தான். இனி கட்சி என்ன பண்ணப் போகுதுன்னு பார்க்கத்தான் போறேன்' னு சொன்னார். ரொம்பநாள் கழிச்சு அவர் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கறோம்" என்றார். 

” நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றியைப் பறிகொடுத்தபோது, எந்தக் கலக்கமும் இல்லாமல் தன்னை சந்திக்க வந்த துரைமுருகனுக்கு இனிப்பு கொடுத்தார் கருணாநிதி. அவ்வளவு பெரிய தோல்வியின்போது என்ன மனநிலையில் இருந்தாரோ, இப்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறார். அழகிரியின் பேச்சுக்களை அவர் பொருட்படுத்தவில்லை” என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர். 

தேர்தல் காலங்களில் மட்டும் அதிரடிகளை அள்ளித் தெளிக்கும் அழகிரிக்கு, அறிவாலயம் எந்த மாதிரியான கடிவாளத்தைப் போடப் போகிறது? என்பதை அறிய ஆவலோடு இருக்கிறார்கள் தென்மண்டல உடன்பிறப்புகள். 

http://www.vikatan.com/news/article.php?aid=64373

Link to comment
Share on other sites

CizJxHcUYAA33qV.jpg:large

நான் பாட்டுக்கு திமுகவோடோ,அதிமுகவோடோ இருந்துருப்பன்.. கூட்டிட்டு வந்து நட்டத்துல விட்டுட்டானே. எங்கடா அவன்..?

Link to comment
Share on other sites

இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா

H.Raja 3rd place in T.nagar

சென்னை: சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா மிக மிக குறைந்த வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலை காணப்படுகிறது. தியாகராய நகரில் அதிமுக வேட்பாளர் சத்யநாராயணன் 20,507 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

அடுத்த இடத்தில் திமுகவின் டாக்டர் என்.எஸ். கனிமொழி 20,314 வாக்குகளுடன் உள்ளார். 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது.

வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-3rd-place-t-nagar-254060.html

09:58 அதிமுக 121; திமுக 94;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

அதிமுக 8; திமுக 7 தொகுதிகளில் வெற்றி

09:57 அதிமுக 8; திமுக 7 தொகுதிகளில் வெற்றி

09:54 அதிமுக 7; திமுக 6 தொகுதிகளில் வெற்றி

09:49 அதிமுக 123; திமுக 95;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

அதிமுக 7; திமுக 5 தொகுதிகளில் வெற்றி

09:46 அதிமுக 125; திமுக 94;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை அதிமுக 7; திமுக 5 தொகுதிகளில் வெற்றி 09:42 அதிமுக 125; திமுக 95;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை அதிமுக 6; திமுக 4 தொகுதிகளில் வெற்றி

Read more at: http://tamil.oneindia.com/

10:02 66,736 வாக்கு வித்தியாசத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை

10:01 முடிவு அறிவிக்கப்பட்ட 15 தொகுதிகளில் அதிமுக 8, திமுக 7ல் வெற்றி

10:00 216 தொகுதிகளில் அதிமுக 121, திமுக 94, பாமக- 1 இடத்தில் முன்னிலை

Read more at: http://tamil.oneindia.com/

அ.தி.மு.க. கூட்டணி 122
தி.மு.க. கூட்டணி 94
ம.ந. கூட்டணி 0
பா.ம.க 1
பா.ஜ.க. கூட்டணி 0
நாம் தமிழர் 0
பிற 0
மொத்தம் 232

அதிமுக 121; திமுக 93;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை அதிமுக 8; திமுக 8 தொகுதிகளில் வெற்றி

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

திமுக தோல்விக்கு காரணங்கள் என்ன? அரசியல் விமர்சகர்கள் அடுக்கும் பாயிண்டுகள்!

 

 சென்னை: இயல்பாகவே ஆட்சிக்கு எதிராக எழும் மக்களின் மன நிலையையும் தாண்டி, அதிமுக இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்ப்பலையை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதில் திமுக தோல்வியை தழுவியுள்ளது.

 

காலை முதல் மதியம்வரையிலான தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிரெண்ட், மீண்டும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையப்போகிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டது.

திமுக கடந்த 2011 சட்டசபை தேர்தல், 2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என வரிசையாக தோல்வியை தழுவிய நிலையில், இப்போது, 2016 சட்டசபை தேர்தலையும் இழந்துள்ளது.

What are the reasons for DMK defeat in the Tamilnadu assembly election?

விமர்சகர்கள்

திமுகவின் தோல்விக்கான காரணம் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் இதோ: திமுக கடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வென்று, எதிர்க்கட்சியாக கூட வர முடியாமல் போனது. அந்த அளவுக்கு மக்கள் அக்கட்சி மீது கோபமாக இருந்தனர்.

 

ஈழம் காரணம்

திமுக மீது மக்களின் கோபம் இந்த அளவுக்கு அதிகரிக்க, ஈழத்தில் இறுதிகட்ட போர் நடந்தபோது, அதை தடுத்து மக்களின் உயிரை காப்பாற்ற உருப்படியான நடவடிக்கையை திமுக எடுக்கவில்லை என்பதும், மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் எழுந்த தன்னெழுச்சி போராட்டங்களை முன்னின்று அடக்கியது என்பதும்தான்.

காங்கிரஸ் கூட்டணி

தொடர் ஊழல்களால், அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் மக்களின் மனநிலை இருந்ததால் அக்கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த திமுக படுதோல்வியை சந்தித்தது.

அடாவடி அரசியல்

சாதிக் பாட்ஷா மர்ம சாவு, தினகரன் அலுவலகம் எரிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் திமுகவுக்கு கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டன. குடும்ப சண்டை வெகுவாக திமுகவுக்கு அடி வாங்கி கொடுத்தது. குறுநில மன்னர்களை போல திமுக கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்கள் அடாவடி அதிகாரம் செலுத்தியதை கருணாநிதியால் கட்டுப்படுத்த முடியாததும் தோல்விக்கு காரணம்.

இப்போதும் திருந்தவில்லை

இந்த சட்டசபை தேர்தலிலும், திமுகவை வெற்றிபெறச் செய்ய மேற்கூறிய காரணங்களில் பெரும்பாலானவை மாறவேயில்லை. இந்தியா முழுக்க விரட்டியடிக்கப்பட்டு வரும், அதே காங்கிரசோடுதான் திமுக கூட்டணி வைத்தது. அப்போதே, திமுகவின் தோல்வி பாதி உறுதியாகிவிட்டது.

குடும்ப சண்டை

திமுகவின் குடும்ப சண்டை இந்த தேர்தலிலும் நீடித்தது. மதுரை பக்கம் செல்வாக்கு கொண்ட அழகிரியை திமுக புறக்கணித்தது. அவரது ஆதரவாளர்கள் உள்ளடி வேலை செய்தனர். மதுரை மாவட்டத்தில் திமுக படுதோல்வியடையும் என்று அழகிரி பேட்டியே கொடுத்தார்.

புது ரத்தம் பாயவில்லை

கடந்த ஆட்சியின்போது திமுகவில் அதிகாரம் செலுத்திய, பல பெரும் புள்ளிகளுக்கு, இந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கியது திமுக. கட்சிக்கு ஸ்டாலின் புது ரத்தம் பாய்ச்சுவார் என்று எதிர்பார்த்த பொதுவான வாக்காளர்களுக்கு, இது ஏமாற்றத்தை தந்தது.

பின்னுக்கு தள்ளப்பட்ட ஸ்டாலின்

93 வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள கருணாநிதியே இம்முறையும் முதல்வர் வேட்பாளர் என்று திமுகவால் அறிவிக்கப்பட்டதும், இளம் வாக்காளர்களை ரசிக்க வைப்பதாக இல்லை. ஒருவேளை ஸ்டாலினை முன்னிருத்தியிருந்தால் களத்தின் காட்சிகள் மாறியிருக்கலாம்.

வாக்குகள் சிதறல்

திமுக நம்பிக்கொண்டிருந்தது ஜெயலலிதா அரசுக்கு எதிரான வாக்குகளை மட்டுமே. இந்த வாக்குகள் இம்முறை மக்கள் நல கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் என பல கட்சிகளுக்கும் பங்காக போய் விட்டது. இதுவும் திமுகவால் வெல்ல முடியாததற்கு காரணம்.

மத வாக்குகள்

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை தொடர்ந்து கருணாநிதி ஏற்படுத்திவருகிறார். இந்துக்கள் பண்டிகை தினத்தின்போது மட்டும், விடுமுறை தினம் என்று திமுக தொலைக்காட்சி கூறுவது வழக்கம். இதை பாஜக போன்ற வலதுசாரி கட்சிகள் வசதியாக பயன்படுத்தி வருகின்றன. அதேநேரம், ஒருபக்கம் இந்துக்களையும் பகைக்காமல், இஸ்லாமியர் உள்ளிட்ட பிற மதத்தவரையும் பகைக்காமல் கம்பிமேல் நடந்து சாதிக்கிறார் ஜெயலலிதா.

பரவாயில்லை

இத்தனை காரணங்கள் இருந்தும், அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பெருமளவுக்கு ஈர்த்துள்ளது திமுக. தேர்தல் வாக்குறுதிகளும் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. எனவேதான் கடந்த தேர்தலை போல படுதோல்வியை சந்திக்காமல் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/what-are-the-reasons-dmk-defeat-the-tamilnadu-assembly-election-254070.html

10:22     அதிமுக 118; திமுக 89;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

10:17 வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் வெற்றி

10:16 வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் விபிபி பரமசிவம் வெற்றி திமுக வேட்பாளர் சக்திவேலை 19,600 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்

10:16 அதிமுக 118; திமுக 90;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை அதிமுக 11; திமுக 11 தொகுதிகளில் வெற்றி

 

10:15 முடிவு அறிவிக்கப்பட்ட 22 தொகுதிகளில் திமுக 11, அதிமுக 11ல் வெற்றி

10:13 மேற்கு வங்கத்தில் முதன்முறையாக 4 இடங்களில் வென்ற பாஜக அஸ்ஸாமில் காங்கிரஸை விரட்டி ஆட்சியை பிடிக்கிறது பாஜக

10:12 முடிவு அறிவிக்கப்பட்ட 21 தொகுதிகளில் திமுக 11, அதிமுக 10ல் வெற்றி

10:12 முடிவு அறிவிக்கப்பட்ட 20 தொகுதிகளில் திமுக 10, அதிமுக 10ல் வெற்றி

10:08 முடிவு அறிவிக்கப்பட்ட 19 தொகுதிகளில் திமுக 10, அதிமுக 9ல் வெற்றி

10:08 திருவாரூரில் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி

அதிமுகவின் பன்னீர்செல்வத்தை ரெக்கார்ட் பிரேக் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார் இது கருணாநிதியின் 13வது தேர்தல் வெற்றி 

Read more at: http://tamil.oneindia.com/

முன்னிலை / வெற்றி நிலவரம்

10:31 முடிவு அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளில் திமுக 15, அதிமுக 14ல் வெற்றி

Read more at: http://tamil.oneindia.com/

10:33 நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி  உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை- ஜெ.

Read more at: http://tamil.oneindia.com/

10:34   1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி தேர்தலில் மீண்டும் வெல்வது என்பது இப்போதுதான்  நிகழ்ந்துள்ளது 10 கட்சிகள் எதிர்த்தபோதும் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன் -ஜெ. 

Read more at: http://tamil.oneindia.com/

பிற்பகல் 1.30 மணி: கட்சிகளின் வாக்கு சதவீத விவரம்

COMMENT   ·   PRINT   ·   T+  
 
 
 
 
 
பட உதவி: தமிழக தேர்தல் ஆணைய இணையதளம்
பட உதவி: தமிழக தேர்தல் ஆணைய இணையதளம்

மதியம் 1.30 மணி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மதியம் 1.30 மணி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 41.3%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.4%, பாமக 5.0%, பாஜக 2.7%, தேமுதிக 2.3%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.9%, மதிமுக 0.9% வாக்குகள் பெற்றுள்ளன.

 

கட்சிகள்

வாக்கு சதவீதம்

அதிமுக

41.3%

திமுக

31.6%

காங்கிரஸ்

6.4%

பாமக

5.0%

பாஜக

2.7%

தேமுதிக

2.3%

மதிமுக

0.9%

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-130-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8620447.ece?homepage=true

10:39 முடிவு அறிவிக்கப்பட்ட 32 தொகுதிகளில் திமுக 17, அதிமுக 15ல் வெற்றி

10:37 அதிமுக 114; திமுக 85;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

அதிமுக 15; திமுக 16 தொகுதிகளில் வெற்றி 10:35 முடிவு அறிவிக்கப்பட்ட 31 தொகுதிகளில் திமுக 16, அதிமுக 15ல் வெற்றி

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

CizfEqnUYAELns2.jpg:large

என்னை முதல்வர்னும் உன்னை அன்னை தெரஸானும் சொன்ன அந்த பச்ச தலப்பாக்காரன் பேச்ச கேக்காத சொன்னேன் கேட்டியாடி

Link to comment
Share on other sites

திருவாரூரில் கருணாநிதி அபார வெற்றி.. வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வென்று சாதனை!

 

 சென்னை: திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வத்தை அவர் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வீழ்த்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலில் திருவாரூரில் போட்டியிட்டார் திமுக தலைவர் கருணாநிதி. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திருவாரூரில் கருணாநிதி 121196 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இத்தொகுதியில் அவர் இரண்டாவது முறை போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார் கருணாநிதி. அதிலும் இம்முறை அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் கருணாநிதி. பன்னீர் செல்வத்தை விட 67212 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் கருணாநிதி. இதுவரை அவர் பெற்ற மிகப் பெரிய வாக்கு வித்தியாசம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர அகில இந்திய அளவில் சட்டசபைக்கு 13வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையும் கருணாநிதிக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து 13 முறை சட்டசபைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை களமிறங்கிய எந்தத் தேர்தலில் கருணாநிதி தோல்வியைத் தழுவவில்லை.

கடந்த முறை திருவாரூரில் அவர் அவர் பெற்ற வாக்குகளை விட இம்முறை கூடுதலாக 18,117 வாக்குகள் பெற்றுள்ளார். கருணாநிதியின் வெற்றியை திருவாரூரில் உள்ள திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunaidhi-national-level-record-254071.html

 

 

 

 

வெற்றி மீது வெற்றி வந்து இவரைச் சேரும்.. 13வது முறையாக வென்ற கருணாநிதி!

 

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இதுவரை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதே இல்லை என்ற சாதனையை தக்க வைத்துள்ளார். திருவாரூர் தொகுதியில் அவர் 2வது முறையாகவும், சட்டசபைத் தேர்தலில் 13வது முறையாகவும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

முதல்வர் கருணாநிதி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அதில் ஒன்று 12 முறை சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வென்றது. தற்போது 13வது முறையாக தேர்தல் களம் கண்டுள்ள கருணாநிதி அதிலும் வென்றுள்ளார்.

1957ம் ஆண்டு தனது முதல் தேர்தலை குளித்தலைில் சந்தித்தார் கருணாநிதி. அன்று முதல் அதன் பிறகு அவர் சந்தித்த ஒவ்வொரு தேர்தலையும் அவர் வென்று வந்துள்ளார்.

1962 - தஞ்சாவூர்

1967 - சைதாப்பேட்டை

1971 - சைதாப்பேட்டை

1977 - அண்ணா நகர்

1980 - அண்ணா நகர்

(1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது அவர் எம்எல்சியாக இருந்தார்)

1989 - துறைமுகம்

1991 - துறைமுகம்

1996 - சேப்பாக்கம்

2001 - சேப்பாக்கம்

2006 - சேப்பாக்கம்

2011- திருவாரூர்

2016 - திருவாரூர்

தமிழகத்தில் எந்தத் தலைவரும் இதுவரை இத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றதில்லை. அந்த வரலாற்று சாதனையை இனி யாரேனும் படைப்பார்களா என்பதும் தெரியவில்லை.

அந்த வகையில் கருணாநிதியின் இந்த வெற்றி மிகப் பெரிய சாதனையாகும். 13 தேர்தல்களில் வென்றுள்ள கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தும் சாதனை படைத்தவர்.

தற்போது 6வது முறையாக அவர் முதல்வர் பதவியை ஏற்று வரலாறு படைப்பார் என்று திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அது ஏமாற்றத்தில் போய் முடிந்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-wins-record-13th-time-254072.html

10:42 அதிமுக 129- திமுக 101; பாமக-1 தொகுதிகளில் முன்னிலை

10:42 ஆற்காடு தொகுதியில் திமுக வெற்றி அண்ணா நகர் தொகுதியில் அமைச்சர் கோகுல இந்திரா தோல்வி- திமுக வெற்றி

10:40 ஒட்டன்சத்திரத்தில் 5-வது முறையாக வென்றார் திமுகவின் சக்கரபாணி

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

Screenshot%2025_zps1cmtluij.png

Breaking News 11:00 விராலிமலையில் அதிமுக வெற்றி

திருவிக நகரில் திமுக வென்றது

கிள்ளியூரில் காங்கிரஸ் வெற்றி

11:00 அதிமுக 132; திமுக 98;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

10:59 அதிமுக 131; திமுக 99;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

10:59 அதிமுக 130; திமுக 100;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

10:58 அதிமுக 131; திமுக 99;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

10:57 ராசிபுரம், நாமக்கல், சேலம் ஆத்தூர், சீர்காழியில் அதிமுக வெற்றி

10:57 அதிமுக 132; திமுக 98;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

10:54 திருச்சி மேற்கில் திமுகவின் கே.என். நேரு வெற்றி

10:46 சேப்பாக்கத்தில் திமுகவின் ஜெ. அன்பழகன் வெற்றி

10:42 அதிமுக 129- திமுக 101; பாமக-1 தொகுதிகளில் முன்னிலை

10:42 ஆற்காடு தொகுதியில் திமுக வெற்றி

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

தோல்வி முகம் கண்ட பிரபலங்கள்.. அமைச்சர்களும் தப்பவில்லை

By dn

First Published : 19 May 2016 02:29 PM IST

 

 

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனையோ கருத்துக் கணிப்புகளும், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளும் வெளிவந்தன.

ஆனால், மக்களின் தீர்ப்பு எப்போதுமே யாராலும் கணிக்க முடியாததாகவே இருக்கும் என்பதற்கு இந்த தேர்தலும் ஒரு முன்னுதாரணமாகவே அமைந்துவிட்டது.

அந்த வகையில், எத்தனையோ கட்சிகளின் கடும் போட்டிகளுக்கு இடையே இன்று அதிமுக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், திமுக மற்றும் அதிமுக கட்சி தலைவர்களைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுமே தோல்விகளைத் தழுவியுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரின் வெற்றி நிலவரம் இழுபறியிலேயே உள்ளது.

http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/19/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/article3440991.ece

Breaking News 11:18 ராசிபுரத்தில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.பி. டாக்டர் சரோஜா வெற்றி 11:18 கேவிகுப்பத்தில் அதிமுகவின் லோகநாதன் வெற்றி புதுக்கோட்டையில் பெரியண்ணன் அரசு வெற்றி 11:18 துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு வெற்றி 4,836 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சீனிவாசனை தோற்கடித்தார் சேகர் பாபு 11:17 அறந்தாங்கியில் அதிமுக வெற்றி- திருநாவுக்கரசர் மகன் தோல்வி குன்னம் தொகுதியில் அதிமுக வெற்றி

Read more at: http://tamil.oneindia.com/

தமிழக தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

  அதிமுக 41.2%; திமுக 31.4%; காங். 6.6% பாமக 5.1% 

பாஜக 2.7%; தேமுதிக 2.3% வாக்குகள் 

நாம் தமிழர்- 1.0%; மதிமுக 0.9%; சிபிஐ-0.8%; விசிக-0.8%; சிபிஎம்-0.7% 

நாம் தமிழரை விட மதிமுக வாக்கு சதவீதம் குறைவு 

 

Link to comment
Share on other sites

32 வருடங்களுக்கு பிறகு.. தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடித்து அதிமுக சாதனை

 

] சென்னை: 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை. 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான, அதிமுக 144 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 48 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து சென்று அதிமுகவை தொடங்கிய இந்த, முதல் தேர்தலிலேயே அக்கட்சி வெற்றிவாகை சூடியது. இரு கட்சிகளுக்கும் முறையே, 33.52 மற்றும் 24,89 சதவீத வாக்குகள் கிடைத்தன.

 

எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியிலும், கருணாநிதி அண்ணாநகர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். 1980ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக 162 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 69 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 48.92 சதவீதம், அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 44.43 சதவீதம். மதுரை மேற்கு தொகுதியில் எம்ஜிஆரும், அண்ணா நகர் தொகுதியில் கருணாநிதியும் வெற்றி பெற்றனர். 1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுகவும், கருணாநிதி தலைமையில் திமுகவும் மோதின. இதில் அதிமுக 195 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக 34 தொகுதிகளை மட்டுமே வென்றது.

 

கருணாநிதி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர், ஆண்டிப்பட்டியில் அமோக வெற்றி பெற்றார். அதிமுகவுக்கு வந்த வாக்கு சதவீதம், 53.87 சதவீதமாகும். திமுகவுக்கு 37 சதவீத வாக்குகள் கிடைத்தன. முந்தைய தேர்தலைவிட வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு உயரவே செய்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இல்லை என்பதை அது காண்பித்தது. இப்படி ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த அதிமுக, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1989ல் நடந்த தேர்தலில் பிளவுபட்டு ஜெ அணி, ஜா அணி என பிரிந்து மோதியது.

 

இதில் திமுக எளிதில் வென்று, கருணாநிதி முதல்வரானார். ஆனால் ஆட்சி கலைப்புக்கு பிறகு, 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரான இந்த தேர்தலில் அதிமுக 224 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஜெயலலிதா பர்கூர் தொகுதியிலும், கருணாநிதி துறைமுகம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால் மக்கள் திமுக மீது இந்த அளவுக்கு வெறுப்பை காட்டினர். இதன்பிறகு 1996ல் திமுக 221 தொகுதிகளில் வென்று பழி தீர்த்தது.

 

அதிமுகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன. பர்கூரில் ஜெயலலிதா தோற்றார். சேப்பாக்கத்தில் கருணாநிதி வென்றார். சொத்துக்குவிப்பு, ஆடம்பர திருமணம் போன்றவை ஜெயலலிதாவுக்கு வரலாறு காணாத அடியை பெற்றுக்கொடுத்தது. இதன்பிறகு, 2001 சட்டசபை தேர்தலில் அதிமுக 196 இடங்களிலும், திமுக 37 தொகுதிகளிலும் வென்றது. 2006 சட்டசபை தேர்தலில் திமுக 163 தொகுதிகளிலும், அதிமுக 69 தொகுதிகளிலும் வென்றது.

2011ல் நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 31 தொகுதிகளில் மட்டும் வென்றது. இப்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்துள்ளது. 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/after-3-decade-aiadmk-win-continuously-tamilnadu-254076.html

Breaking News 11:32 திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் 26,001 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

11:31 அதிமுக 126; திமுக 104;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

11:29 சென்னை ஆர்கே நகரில் ஜெயலலிதா வெற்றி ஆர்கே நகரில் 39,537  வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் சிம்லா  முத்துசோழனை வென்றார் ஜெ.

 

11:28 புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15ல் திமுக - காங். கூட்டணி வெற்றி

11:25 அதிமுக 127; திமுக 103;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

11:24 அதிமுக 128; திமுக 102;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

11:23 அதிமுக 127; திமுக 103;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

11:20 ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி; ம.தே.மு.தி.க.வின் சந்திரகுமார் தோல்வி

11:18 ராசிபுரத்தில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.பி. டாக்டர் சரோஜா வெற்றி

11:18 கேவிகுப்பத்தில் அதிமுகவின் லோகநாதன் வெற்றி புதுக்கோட்டையில் பெரியண்ணன் அரசு வெற்றி

11:18 துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு வெற்றி

4,836 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சீனிவாசனை தோற்கடித்தார் சேகர் பாபு

Read more at: http://tamil.oneindia.com/

Breaking News 11:47 அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்த ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள்

11:45 வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகன் வெற்றி

11:45 கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் வெற்றி

11:45 அதிமுக 125; திமுக 106;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

11:44 வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகன் வெற்றி

11:43 கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆறுகுட்டி வெற்றி சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் வெற்றி

11:32 திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் 26,001 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

11:31 அதிமுக 126; திமுக 104;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

Breaking News 12:09 அதிமுக 134; திமுக 97;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

12:06 அதிமுக 139; திமுக 92;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

12:05 அதிமுக 137; திமுக 94;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

12:04 அதிமுக 138; திமுக 93;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

12:01 அதிமுக 137; திமுக 94;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

11:55 அந்தியூர்; குடியாத்தம், ஆண்டிபட்டியில் அதிமுக வெற்றி பெரம்பூர், தென்காசியில் அதிமுக வெற்றி திருத்துறைப்பூண்டியில் திமுக வெற்றி

11:52 நாகையில் மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி வெற்றி

11:52 மேட்டூரில் பாமக தலைவர் ஜி.கே. மணிக்கு -3வது இடம் 11:52 மேட்டூரில் மதேமுதிக பார்த்திபன் முன்னிலை- அதிமுகவின் செம்மலையுடன் மல்லுகட்டு

11:49 அதிமுக 129; திமுக 102;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

11:47 அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்த ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள்

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

Breaking News 12:59 காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போராடித் தோல்வி அதிமுக வேட்பாளர் முருகுமாறன் மயிரிழையில் வெற்றி

12:48                     அதிமுக 131; திமுக 100;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

12:34 சைதாப்பேட்டையில் திமுகவின் மா.சுப்பிரமணிய வெற்றி

சைதாப்பேட்டையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தோல்வி

12:33     காட்டுமன்னார்கோவிலில் அதிமுக- திருமா இடையே பெரும் இழுபறி 225 ஓட்டு வித்தியாசத்தில் தடுமாறும் திருமாவளவன்

12:30 விளவங்கோட்டில் காங். விஜயதாரணி வெற்றி

12:30 அதிமுக 132; திமுக 99;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை 12:26 அதிமுக 133; திமுக 98;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை 12:09 அதிமுக 134; திமுக 97;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை 

Read more at: http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

அதிமுகவுக்கு 41% வாக்குகள்... திமுக 31% , காங். 6.6% , பாமக 5.3% ... தேமுதிக 2.3% மட்டுமே!

 
 
 

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 41 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. திமுகவுக்கு 31 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

தேமுதிக படு மோசமான நிலைக்குப் போயுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 2.3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

 

ADMK gets 42% votes, DMDK cornered with 2.3 % votes

 

மாலை 5 மணி நிலவரப்படி ஒவ்வொரு கடசியும் பெற்றுள்ள வாக்குகள் விவரம்:

அதிமுக - 40.9%
திமுக 31.3%
காங்கிரஸ் - 6.6%
பாமக - 5.3%
பாஜக - 2.8
தேமுதிக - 2.3%
நோட்டா - 1.3%
நாம் தமிழர் - 1.1%
மதிமுக - 0.9%
சிபிஐ - 0.8%
விடுதலைச் சிறுத்தைகள் - 0.8%
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.8
சிபிஎம் - 0.7%
தமாகா - 0.6%
புதிய தமிழகம் - 0.5%
மனிதநேய மக்கள் கட்சி - 0.5%
கொங்கு மக்கள் தேசிய கட்சி - 0.4%

http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-gets-42-votes-dmdk-cornered-with-2-3-votes-254035.html

Breaking News 13:58 நெய்வேலியில் திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் வெற்றி

நெய்வேலியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 36,058 வாக்குகளுடன் 2-வது இடம்

பண்ருட்டி வேல்முருகன் 30,528 வாக்குகளுடன்  3-வது இடம்

 

13:42 அதிமுக 132; திமுக 99;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

13:29 அதிமுக 131; திமுக 100;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

13:21 கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் படுதோல்வி- 5-வது இடம்

13:21 கடலூரில் அதிமுகவின் எம்.சி. சம்பத் 24,413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

13:16 உளுந்தூர்பேட்டையில் அதிமுக குமரகுரு வெற்றி

13:12 உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி உளுந்தூர்பேட்டையில் 3-வது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டார் விஜயகாந்த்

13:12 நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் வெற்றி

13:10 அதிமுக 130; திமுக 101;  பாமக 1; தொகுதிகளில் முன்னிலை

12:59 காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போராடித் தோல்வி அதிமுக வேட்பாளர் முருகுமாறன் மயிரிழையில் வெற்றி 

Read more at: http://tamil.oneindia.com/

WR_20160519170941.jpeg

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,முன்னிலையில் இருப்பதை தொடர்ந்து, மகளிர் அணியினர் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தனர். இடம்: கரூர் -

232 தொகுதிகளில் 2ல் மட்டுமே 2வது இடமே கிடைத்தது.. இது ம.ந.கூ சோகம்

Updated: Thursday, May 19, 2016, 17:15 [IST]
 
 
 

சென்னை: போட்டியிட்ட எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாததோடு, இரண்டே, இரண்டு தொகுதிகளில்தான் 2வது இடத்தையாவது பிடித்துள்ளது, மக்கள் நல கூட்டணி.

மக்கள் நல கூட்டணி, விஜயகாந்த்தின் தேமுதிக, வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைத்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் களம் கண்டது. ஆனால் எந்த தொகுதியிலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை.

 

Vijayakanth alliance came 2nd place in just 2 constituencies

 

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் 2வது இடம் பிடித்துள்ளார். காட்டுமன்னார் கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் 2வது இடத்தை பிடித்துள்ளார். 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.

இவர்களை தவிர விஜயகாந்த் உள்ளிட்ட எந்த ஒரு மக்கள் நல கூட்டணி மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களும் 2வது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. இந்த வகையில் பாஜகவைவிட மோசமான நிலைக்கு இந்த கூட்டணி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-alliance-came-2nd-place-just-2-constituencies-254096.html

விஜயகாந்தை 3வது இடத்துக்கு தூக்கி அடிச்ச உளுந்தூர்பேட்டை மக்கள்

Updated: Thursday, May 19, 2016, 17:30 [IST]
 
 
 

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக-மக்கள் நல கூட்டணி முதல்வர் வேட்பாளரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தோல்வி அடைந்துள்ளார். இவர் 34060 ஓட்டுகள் மற்றுமே பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை அதிமுக வேட்பாளர் குமரகுரு 81043 ஓட்டுகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் வசந்தவேலு 76233 ஓட்டுகள் பெற்றுள்ளார். தேமுதிக மநகூ முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் 34060 ஓட்டுகள் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் பாலு 20009 ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 4810 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

Vijayakanth goes to third place in Ulundurpet

 

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விஜயகாந்த் இருந்து வந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு கடைசியில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் விஜயகாந்துக்கு 3வது இடம்தான் கிடைத்தது

2006ம் ஆண்டுதான் முதல் சட்டசபைத் தேர்தலை விஜயகாந்த் சந்தித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் சந்தித்த தேர்தல் அது. 234 தொகுதிகளிலும் அவரது கட்சி தனித்துப் போட்டியிட்டது. கணிசமான வாக்குகளைப் பெற்று பரபரப்பையும் ஏற்படுத்தியது. தனது முதல் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் விஜயகாந்த். அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் விஜயகாந்த்.

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றதோடு தேமுதிகவைச் சேர்ந்த 29 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்று எதிர்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

உளுந்தூர்பேட்டை மூன்றாவது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணி, தமகா உடன் இணைந்து முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார். இம்முறை உளுந்தூர்பேட்டை தொகுதியில் களமிறங்கினார்.

பலமான போட்டி

இந்த தொகுதியில் அதிமுக, திமுக, பாமக, நாம்தமிழர், பாஜக என பலமுனை போட்டி நிலவுவதோடு பலமான வேட்பாளர்களும் விஜயகாந்துக்கு எதிராக நிறுத்தப்பட்டனர்

விருத்தாச்சலம் வெற்றி

2006 சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த்துக்கு 61,337 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற பாமகவின் கோவிந்தசாமிக்கு 47,560 வாக்குகள் கிடைத்தன.

ரிஷிவந்தியத்தில் 2வது வெற்றி

2011ல் நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற விஜயகாந்த், இந்த முறை ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸ் கட்சியின் கடுமையான போட்டியையும் தாண்டி அதிமுக பலத்தால் அவர் எளிதான வெற்றியைப் பெற்றார்.

 

Vijayakanth goes to third place in Ulundurpet

 

வாக்குகள் எவ்வளவு

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்துக்குக் கிடைத்த வாக்குகள் 91,164 ஆகும். எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கு 60,369 வாக்குகளே கிடைத்தன.

அதிமுக வெற்றி

உளுந்தூர்பேட்டை அதிமுக வேட்பாளர் குமரகுரு 81043 ஓட்டுகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் வசந்தவேலு 76233 ஓட்டுகள் பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் 34060 ஓட்டுகள் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் பாலு 20009 ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 4810 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

Vijayakanth goes to third place in Ulundurpet

 

விஜயகாந்த் 3வது இடம்

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் வாக்குகள் 47,529 வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 3வது முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட விஜயகாந்துக்கு சங்கு ஊதி விட்டனர்.

அதிர்ச்சியில் தேமுதிகவினர்

தங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த்தை விட அதிமுக, திமுக முன்னிலை பெற்றிருப்பது மட்டுமல்லாமல், 3வது இடத்திற்கு விஜயகாந்த் தள்ளப்பட்டிருப்பது தேமுதிகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-goes-third-place-ulundurpet-254057.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.