Jump to content

பிடிசாபம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியது ஆளும் வர்க்கம்.    வன்னியில் இறுதிப் போரின்போது பச்சிளம் பாலகரிலிருந்து பல்விழுந்த முதியவர்கள் வரை எரிகுண்டுகள் வீசப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.  அப்போதெல்லாம், நெஞ்சுவிம்ம நாடிநரம்புகள் புடைக்க என்ன செய்வது ஏதுசெய்வது என்று அறியாது தவித்தோம்.   எல்லாவற்றையும் விட க் கொடிதினும் கொடிதாய், எம் அக்கா தங்கைகளின் மானத்தைச் சூறையாடியதுமல்லாமல் அவர்கள் கழுத்துகளைத் திருகிக் கொன்றான் எதிரி.  எப்படிப் பொறுப்போம். 

இரதகஜதுரகபதாதிகளையிழந்து வெறுஙகையராய் நாம் நின்றோம்.  கையிலிருந்த வில்லம்புகளுக்குப் பதிலாகச் சொல்லம்புகளே எமக்கு மிஞ்சின.  அனியாயங்களைச் செய்தவன் யார் என்று தனித்தனியாக எப்படி இனங்காணுவது. இரக்கமற்ற பொது எதிரிக்காக அறம்பாடியாவது ஆத்திரத்தைத் தீர்க்க வேண்டுமென்ற உங்தல் மனதை உதைத்தபோது பிறந்தது இக் கவிதை.

அந்த இரக்கமற்ற கொடிய எதிரிக் காகப் பாடிய பாடல் இதோ!

பிடி சாபம்

இனவெறி கொண்ட நாய்காள் எம்தமிழ் பெண்கள் தன்னை

மனவெறி யடங்குமட்டும் வன்புணர்வதனைச் செய்தீர்

தினமும் எம் இனமழித்தீர்  தீயரே உமக்கு வாழ்வா

கனவிலும் மகிழ்விலாது கசடரே வாழ்வீர்! உங்கள்

 

ஆணுடலழுகும் கெட்டு அங்கமோ புழுத்து நாறும்

ஊனமுண்டாகும் கண்கள் ஒளியிழந்தொட்டிப் போகும்

ஈனமேயில்லா நெஞ்சோடெம்மினம் சிதைத்தீர் மீண்டும்

ஏனமாயப் பிறந்து எங்கள் ஈழத்தில் மலத்தையுண்பீர

 

வஞ்சமறென்வாய் சொன்ன வன்கவி யும் கல்லன்ன

நெஞ்சகந்தைத்து நாளை நிம்மதி கெடுத்திடட்டும்

தஞ்சமற்றுழலுமேழைத் தமிழினம் தவிக்க அங்கே

பஞ்சணைத் துயிலா கொள்வீர் பாம்புகள் நெளிந்திடாதா!

 

ஒழிந்திடும் பதர்காள் உங்கள் உயிரினி உருப்படாது

தெளிந்த நல் மனம் சேராது தேகமும் திடமாகாது

அழிந்து உம் குடும்ப வாழ்வு அவலமேயுருவாய் நாளும்

கழிந்திடும் வேசியர்க்கே கணவர்களாகிச் சோர்வீர்.

இதற்கு மேல் எதையெழுதுவது.  யாருக்கு எழுதுவது? அப்படியே நிறுத்திவிட்டேன்.   இப்போது இந்த மே 18 ஐ நினைவு கூரும்போது இதைப் பதிந்துவிடவேண்டுமென்று தோன்றியது. பகிர்ந்து விட்டேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனமென்பது பன்றியைக் குறிக்கும்.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

‘வஞ்சமறென்வாய் சொன்ன வன்கவி யும் கல்லன்ன‘

‘வஞ்சமற்றென்வாய் சொன்ன வன்கவி யும் கல்லன்ன...‘  எனத் திருத்தி வாசிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.