Recommended Posts

சொல்லத் தெரியவில்லை
சுடர் போல எரிகிறது மனம்
விம்மி வெடித்து
நேற்றைய வானம் போல்
பொழிந்து தள்ளிட
விழிகள் இரண்டும்
முட்டிக் கிடக்கின்றன 
அழுவதற்கான நாள்
இது அல்ல 
எழுவதற்கான நாள் இது என்று
உள்மனம் உறுதியாய் சொன்னாலும்
விழி உடைத்து
விழி நீர் சொரிகிறது...

#ஈழத்துப்பித்தன்

#மே18 2016

Share this post


Link to post
Share on other sites

 

என் அம்மாவையும் என் தங்கையையும்
 என் காதலியையும்
 நிர்வாணமாக்கிப் பார்த்த மண் இது
 நீ தந்த துயரம் மலையெனில்,
அவமானம், கடலளவு
 என் கனவுபோல விரிந்திருக்கிறது
 இந்தக் கடல்
 குருதி பெருகிப் பீறிட்டு வழிந்த
 அந்த நாட்களின் வீச்சம்
 இன்னமும் மிச்சமிருக்கிறது இந்தக்
 காற்றில்
 ஓவ்வொன்றாய் இழந்துபோன
 அந்த ஆத்மாக்களின் அருகில்தான்
 இன்னமும் நின்றுகொண்டிருக்கிறோம்
 நாம்
 எரிந்தழிந்துபோன
 அந்த யுகத்தின் சிதைமேட்டில்
 நின்றபடியேதான்
 நினைவு கூருகின்றோம் அவர்களை
 மடியில் கிடந்திறைஞ்சிய அந்தக்
 குரல்களை
 இன்னமும் கடந்துவர இயலவில்லை எவராலும்
 எல்லலாவற்றிற்கும் அப்பால்
 எதுவுமே இல்லையென்றான வாழ்வை வாழச்
 சபிக்கப்பட்டவர்கள் நாம்
 புதைத்த இடத்திலும் தொலைத்த இடத்திலுமே
 இன்னமும்
 கிடந்துழல்கிறது மனம்
 அந்த நாட்களின் திறலை
 எங்குமே பாட முடியாத அந்தப் பாடலை
 தலைப்பிள்ளைகளின் குருதியால் எழுதிய
 அந்த வீர வரலாற்றை
 இறுதியாக
 இந்தக் கடற்கரை மணலில் தான்
 குழிதோண்டிப் புதைத்துவிட்டுப்
 புறப்பட்டோம்
 மேலே வானும் கீ;ழே நிலமும்
 நெருப்பாய் எரிந்த அந்த நாட்களில்
 நனைக்கவில்லைப் பெய்த மழையும்
 தீண்டவிலலை எந்தத் தென்றலும்
 ஊனும் சதையும் உருகி வழிய
 நாயும் தீண்டாப் பிண்டமெனக்
 கிடந்தோம்
 வழிநெடுக
 வரலாறு எம்மைக் கைவிட்ட கடைசி
 நொடியிலும்
 காலாற முடியாது
 சுமந்துகொண்டலைந்தோம்
 ராஜ கனவை
 காடு எம்மைக் காத்தது
 கடல் எம்மைக் கைவிட்டது
 ஒரு ராஜ்ஜியமே இந்தக்கடல்
 விளிம்பில்தான்
 குடங்கிப் படுத்துக் கிடந்தது
 காற்றே அற்ற அந்த நாட்களில்
 கந்தகம் மட்டுமே மூக்கில் மணந்தது
 வாழ்வை மரணம் துரத்தியது
 இருந்தும்
 எல்லாப் பாதைகளும் எங்கள்
 காலடியிலேயே முடிந்தன
 கொலுவிருந்த ஓரினமே பழிகிடந்த
 நாட்களவை
 ஆண்டவா
 எல்லாத் தியாகங்களையும் இந்தக் கடலடியில்
 தானே
 காவு கொடுத்தோம்
 புகைந்து கருகி எரிந்து நீறான
 ஒளிததும்பிய அந்த வாழ்வை
 இந்தக்கடலில் தானே கரைத்தோம் இறுதியாக
 பின்னர்
 எல்லாவற்றிற்கும் பின்னர்
 எழுந்து தடந்தோம் நிர்வாணமாக
 காடு எம்மைக் காத்தது
 இருந்தும் இன்னமும்
 என் கனவுபோல விரிந்திருக்கிறது
 இந்தக் கடல்...

 • Like 5
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

குமாரசாமித்தாத்தா வரவுக்கும் வலி சுமந்த வரிகளின் தரவுக்கும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

அழுது தீருமோ ஆறாத இத்துயரம்  கவிதைக்கு நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?
   தவறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்!

   அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான்!

   தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போக்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன?

   நண்பர்களே, உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்! வெறுமே நியாயப்படுத்துவதாலேயே கலைஞர் மீதான அந்தக் குற்றச்சாட்டை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

   முதலில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்! இனப்படுகொலை நடந்து எண்பது ஆண்டுகள் ஒன்றும் ஆகி விடவில்லை; வெறும் ஒன்பது ஆண்டுகள்தாம் ஆகின்றன. அந்த நேரத்தில் கருணாநிதி என்னென்ன செய்தார், என்னவெல்லாம் பேசினார் என்பவற்றையெல்லாம் ஊடகங்கள் வழியே பார்த்தவர்கள், கேட்டவர்கள் அத்தனை பேரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

   இனப்படுகொலையை நிறுத்தக் கோரிப் போராடியதற்காக உங்கள் கூட்டணிக் கட்சியினரான காங்கிரசுக் குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்ட இளைஞர்கள் இன்னும் இங்கேதான் இருக்கிறார்கள்!...

   அதே கோரிக்கைக்காகத் தங்கள் உடம்பையே தீக்கு இரையாக்கிச் செத்துச் சாம்பலான முத்துக்குமார் முதலான ஈகையர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர் இன்றும் இதே மண்ணில்தான் வாழ்கிறார்கள்!...

   ஈழ துரோகத்தால் உடைந்து போன தன் தமிழினத்தலைவன் அரியணைக்குப் பசை தடவுவதற்காகக் கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டை, புறக்கணித்த தமிழ்ப் பெரும் அறிஞர் தொ.பரமசிவன் தற்பொழுதும் நம்மிடையேதான் இருக்கிறார்!...

   செம்மொழி மாநாட்டின்பொழுது அந்த ஊரிலேயே இருக்க ஒவ்வாமல் தங்களைத் தாங்களே நாடு கடத்திக் கொண்டு தொ.ப., வீட்டுத் தாழ்வாரத்துக்குப் படை எடுத்த எழுத்தாளர் பாமரன் அவர்களும் அவர்தம் மானமுள்ள நண்பர்களும் இன்றளவும் நமக்கிடையில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்!...

   இவர்களைப் போலெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் எதிர்ப்பைப் பதிவு செய்ய இயலாமல், கருணாநிதி செய்த துரோகத்தையும் அதனால் வழிந்தோடிய குருதியையும் கண்டு இரவெல்லாம் தூங்காமல் அழ மட்டுமே முடிந்த என்னைப் போன்ற கையாலாகாதவர்களும் இன்று வரையில் சாகாமல்தான் இருக்கிறோம்!...

   இத்தனை பேரையும் வைத்துக் கொண்டே “கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யவில்லை. அஃது அவர் கைமீறி நடந்து விட்டது” என நீங்கள் சொல்வது அருவெறுப்பான பச்சைப் பொய்!!!

   இனப்படுகொலையை நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தராததோடு மட்டும் கருணாநிதி நிறுத்திக் கொண்டிருந்தால் கூட உங்களுடைய இந்தச் சொத்தை வாதத்தை ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மக்கள் தரப்பிலிருந்தும் அப்படி ஓர் அழுத்தம் ஏற்படாமல் தடுத்தவர் அவர்.

   இனப்படுகொலை நிறுத்தம் கோரிப் போராடிய மாணவர்கள், அன்றாடம் கல்லூரியில்தான் ஒன்று கூடிப் போராட்டங்களைத் திட்டமிட்டார்கள் என்பதால், கல்லூரிகள் அனைத்துக்கும் கால வரையின்றிப் பூட்டுப் போட்டு, எரிமலையாய் வெடிக்க இருந்த மாபெரும் மாணவர் போராட்டத்தைப் பொறி விட்டபொழுதே பொசுக்கி அணைத்தார்.

   இன அழிப்பை நிறுத்த வேண்டி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மாநிலம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தபொழுது உச்சநீதிமன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி அதற்குத் தடை போட முயன்றார் (பின்னர் உச்சநீதிமன்றமே, “மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது; இந்த வேலைநிறுத்தத்துக்குத் தடை இட முடியாது” என்று அவர் தலையில் குட்டுவது போல் தீர்ப்பளித்தது).

   ஈகி முத்துக்குமாருக்கு அடுத்துப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து உயிர் துறந்தபொழுது அவர் குடும்பத் தகராற்றால் தற்கொலை செய்ததாகக் காவல்துறையை வைத்துப் பொய்யறிக்கை வெளியிடச் செய்தார் (பின்னர் ஈகையர் ரவியின் இறுதி வாக்குமூலம் வெளியாகி அவர் முகத்தில் சாணியடித்தது).

   எவ்வளவோ முயன்றும் தன் கைமீறி ஆங்காங்கே சில போராட்டங்கள் இப்படி நடந்து விடுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல், “ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய்ப் போராட வேண்டியதுதானே! நான் கரையில் இருந்து கண்டு களிப்பேன்” என்று திரைப்பட வில்லன் போல் கொக்கரித்தார்.
    
   கட்சி வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் பகடிச் சித்திரக்காரர் பாலா (Cartoonist Bala) அவர்கள் ஈழப் பிரச்சினையில் கருணாநிதியின் இரட்டை நிலைப்பாடு பற்றி வரைந்த கருத்துப் படம் இவ்வாறு, நிகழ்ந்த கொடுமையைத் தானும் தடுக்காமல், தடுக்கப் போனவர்களையும் இழுத்துப் கட்டிப் போட்டு, மீறிப் போனவர்களையும் இழிவுபடுத்தி எள்ளி நகையாடிய கருணாநிதியைப் பற்றித்தான் நீங்கள் சொல்கிறீர்கள், அந்தக் கொடுமை அவர் கைமீறி நடந்து விட்டது என்று. இதைச் சொல்ல உங்களுக்குக் கூசாமல் இருக்கலாம்; கேட்க எங்களுக்குக் குமட்டுகிறது!

   உச்சக்கட்டமாக, கடந்த வாரம் (12.08.2018) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சுப.வீ., சொன்னார், பார்வதியம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்பியதே கலைஞருக்குத் தெரியாமல் நடந்து போனதாம்!

   உளவுத்துறையையே கையில் வைத்திருக்கும் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்கும் அரசியல் சாணக்கியர், தன் மாநில எல்லைக்குள் அண்டை நாட்டிலிருந்து அவ்வளவு முக்கியமான ஒருவர் வந்ததையும் திருப்பி அனுப்பப்பட்டதையும் கூட அறியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார் எனச் சொன்னால் ‘பெரியார் பிஞ்சு’ படிக்கும் சிறு பிள்ளை கூட நம்பாது.

   அப்படியே அவரை மீறித்தான் இவ்வளவும் நடந்து விட்டன எனச் சொன்னால் அதன் பொருள் என்ன? என்னதான் இந்திய அரசையே தன் கையில் வைத்திருந்தாலும் தமிழ்நாட்டின் மாநில முதலமைச்சர் ஒருவரால் தமிழினத்தைக் காப்பாற்ற இயலாது என்பதுதானே? தமிழ்நாட்டு முதல்வர் எனும் பதவி தமிழர்களின் உயிரைக் காப்பாற்றக் கூடப் போதுமான அதிகாரம் இல்லாதது என்பதுதானே? எனில், கருணாநிதி அந்த நேரத்தில் செய்திருக்க வேண்டியது என்ன? இந்தியா, தமிழர்களுக்கான உண்மையான பிரதிநிதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கை எனும் பேராயுதத்தை அந்நேரத்தில் மீண்டும் கையிலெடுத்திருக்க வேண்டாவா அவர்? அதையாவது செய்தாரா? இல்லை! மாறாக, தானே கழுத்தைத் திருகிப் போட்ட ‘டெசோ’ எனும் உயிரில்லாப் பிண்டத்துக்குப் பூச்சூட்டி, பொட்டு வைத்து அழகு பார்த்தார்; அதுவும் தமிழினப்படுகொலை முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து!

   உடனே, “தலைவர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தாலும், போராட்டங்களையெல்லாம் நடக்க விட்டிருந்தாலும் கூட முடிவு வேறாக இருந்திருக்காது; அப்பொழுதும் இதேதான் நடந்திருக்கும்” என சோதிடம் கூறத் தொடங்கி விடாதீர்கள்!

   இப்படியெல்லாம், கருணாநிதி இவ்வளவு வெளிப்படையாகச் செய்த பட்டப்பகல் துரோகங்களை வெறுமே “இல்லை... இல்லை” எனத் திரும்பத் திரும்பச் சொல்லியும், நான்கைந்து பொய்களைக் கூறியும் மறைத்து விட நீங்கள் முயல்வது, வரலாற்றுப் பெருநிகழ்வு ஒன்றை எச்சில் தொட்டு அழிக்கப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம்! அது முடியாது! இதை இப்படிச் செய்ய முடியாது! இதற்கு வழி வேறு உண்டு! அதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.

   கருணாநிதி மீதான இன துரோகக் குற்றச்சாட்டைத் துடைக்க உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால், அடுத்த முறை தி.மு.க., - காங்கிரசுக் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்பொழுது, காங்கிரசிடம் வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கச் செய்யுங்கள்! தமிழீழம் மலர இந்தியாவுக்கு எந்தத் தடையும் இல்லை என முறைப்படி ஐ.நா-வில் அறிவிக்கச் செய்யுங்கள்! இலங்கையில் ‘தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு’ நேர்மையான முறையில் நடக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்! கருணாநிதியின் நண்பரான ஈழத் தந்தை செல்வா முதல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை அனைவரும் காணத் துடித்த தமிழீழத்தைப் படைத்துக் காட்டுங்கள்!

   இதை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் ஈழத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகத்தில் இருக்கும் அத்தனை கோடித் தமிழர்களும் தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கைகூப்பித் தொழுவோம்! நெகிழ்ச்சிக் கண்ணீர் விட்டு அழுவோம்! அதுதான்... அந்தக் கண்ணீர் ஒன்றுதான்... அது மட்டும்தான் ஒன்றரை இலட்சம் பேரின் செங்குருதியில் தோய்ந்து கிடக்கும் கருணாநிதி மீதான பழிக்கறையை அழிக்கும் வல்லமை வாய்ந்தது!

   எனவே நாம் தமிழர் தம்பிகளோடு சண்டை பிடிப்பது, பிரபாகரன் அவர்களையும் விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்துவது, ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவது, இலங்கைப் பிரச்சினைக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு என நெஞ்சில் ஈரமே இல்லாமல் கேட்பது, கருணாநிதி செய்த துரோகத்தை எடுத்துச் சொன்னால் பொதுமக்கள் மீதே பாய்வது போன்றவற்றையெல்லாம் ஏறக்கட்டி விட்டு இதைச் செய்யப் பாருங்கள்! வரலாற்றைத் திரிக்கப் பார்க்காதீர்கள்; மாற்றப் பாருங்கள்! கருணாநிதி மீதான குற்றச்சாட்டை மறைக்க முயலாதீர்கள்; போக்க முயலுங்கள்! அதுதான் கருணாநிதிக்கும் குருதி கொப்பளிக்கக் கொன்று குவிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நீங்கள் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி!
   ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி நியூசு டி.எம், பகடிச் சித்திரக்காரர் பாலா. 

   தொடர்புடைய பதிவுகள்:
   ✎ தமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்! – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்!
   ✎ யாருக்கு அளிக்கலாம் வாக்கு? - வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்!
   ✎ 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!

   தொடர்புடைய வெளி இணைப்புகள்:
   ✎ அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யே சக்தி! – திருமாவேலன், விகடன்
   ✎ ஈகையர் முத்துக்குமார் அவர்களின் நெஞ்சத்தை நொறுக்கும் இறுதிக் கடிதம் 
   ✎ ஈழத் தமிழர் படுகொலை! கருணாநிதி துரோகம்! வரலாறு மன்னிக்காது!
    
  • By நவீனன்
   சோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்!!-
    

         மே-18 இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
   உறவுகள் மண்ணில் புரண்டு கதறி அழுத காட்சியைக் கண்டு பலரது நெஞ்சையும் கலங்க வைத்தது.
   முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவிடத்தில் சுடயேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
   http://newuthayan.com/story/11/சோகமயமானது-முள்ளிவாய்க்கால்-மண்ணில்-புரண்டு-கதறி-அழுத-உறவுகள்.html
  • By karu
   எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியது ஆளும் வர்க்கம்.    வன்னியில் இறுதிப் போரின்போது பச்சிளம் பாலகரிலிருந்து பல்விழுந்த முதியவர்கள் வரை எரிகுண்டுகள் வீசப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.  அப்போதெல்லாம், நெஞ்சுவிம்ம நாடிநரம்புகள் புடைக்க என்ன செய்வது ஏதுசெய்வது என்று அறியாது தவித்தோம்.   எல்லாவற்றையும் விட க் கொடிதினும் கொடிதாய், எம் அக்கா தங்கைகளின் மானத்தைச் சூறையாடியதுமல்லாமல் அவர்கள் கழுத்துகளைத் திருகிக் கொன்றான் எதிரி.  எப்படிப் பொறுப்போம். 
   இரதகஜதுரகபதாதிகளையிழந்து வெறுஙகையராய் நாம் நின்றோம்.  கையிலிருந்த வில்லம்புகளுக்குப் பதிலாகச் சொல்லம்புகளே எமக்கு மிஞ்சின.  அனியாயங்களைச் செய்தவன் யார் என்று தனித்தனியாக எப்படி இனங்காணுவது. இரக்கமற்ற பொது எதிரிக்காக அறம்பாடியாவது ஆத்திரத்தைத் தீர்க்க வேண்டுமென்ற உங்தல் மனதை உதைத்தபோது பிறந்தது இக் கவிதை.
   அந்த இரக்கமற்ற கொடிய எதிரிக் காகப் பாடிய பாடல் இதோ!
   பிடி சாபம்
   இனவெறி கொண்ட நாய்காள் எம்தமிழ் பெண்கள் தன்னை
   மனவெறி யடங்குமட்டும் வன்புணர்வதனைச் செய்தீர்
   தினமும் எம் இனமழித்தீர்  தீயரே உமக்கு வாழ்வா
   கனவிலும் மகிழ்விலாது கசடரே வாழ்வீர்! உங்கள்
    
   ஆணுடலழுகும் கெட்டு அங்கமோ புழுத்து நாறும்
   ஊனமுண்டாகும் கண்கள் ஒளியிழந்தொட்டிப் போகும்
   ஈனமேயில்லா நெஞ்சோடெம்மினம் சிதைத்தீர் மீண்டும்
   ஏனமாயப் பிறந்து எங்கள் ஈழத்தில் மலத்தையுண்பீர
    
   வஞ்சமறென்வாய் சொன்ன வன்கவி யும் கல்லன்ன
   நெஞ்சகந்தைத்து நாளை நிம்மதி கெடுத்திடட்டும்
   தஞ்சமற்றுழலுமேழைத் தமிழினம் தவிக்க அங்கே
   பஞ்சணைத் துயிலா கொள்வீர் பாம்புகள் நெளிந்திடாதா!
    
   ஒழிந்திடும் பதர்காள் உங்கள் உயிரினி உருப்படாது
   தெளிந்த நல் மனம் சேராது தேகமும் திடமாகாது
   அழிந்து உம் குடும்ப வாழ்வு அவலமேயுருவாய் நாளும்
   கழிந்திடும் வேசியர்க்கே கணவர்களாகிச் சோர்வீர்.
   இதற்கு மேல் எதையெழுதுவது.  யாருக்கு எழுதுவது? அப்படியே நிறுத்திவிட்டேன்.   இப்போது இந்த மே 18 ஐ நினைவு கூரும்போது இதைப் பதிந்துவிடவேண்டுமென்று தோன்றியது. பகிர்ந்து விட்டேன்.
    
  • By Mayuran
   வளமான வன்னிமண் வதையுண்டதோ
   பாடியவர் : வீரமணிராயு
   பாடல்வரிகள் : பொன்செல்வன்
   இசை : அக்னிஉமா
   படத்தொகுப்பு : ரமேஸ் , அஐந்தா ஸ்ருடியோ
   தயாரிப்பு : நிலாவெளியீடு
  • By Mayuran
   சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்)  பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு.

   முள்ளிவாய்க்கால் பேராவலம்
   முடிவில்லா ஓர் அவலம்
   பன் நாட்டுப்படை புகுந்து
   பல்லாயிரம் உயிர் தின்று
   சொல்லாத கதை கோடி
   சுமந்து கிடக்கும் மண்ணது
   வில்லாண்ட இனம் ஒன்று
   வீறுகொண்டு போர் கண்டு
   விடுதலைக்காய் வேள்வியொன்றை
   விருப்புடனே நடத்தியதையை
   கண் காணச் சகிக்காத
   காடையர்கள் கூட்டிணைவில்
   இனம் ஒன்று அழிந்ததுவே
   ஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமே
   பல தேசம் வாழ்ந்தோம்
   பார் எங்கும வீதி வழி குவிந்தோம்
   பலனேதும் கிடைக்காமல்
   பரிதவித்து பைத்தியமானோம்
   இனப்படுகொலை ஒன்றை
   இரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறி
   இந்தியப் பெருங்கடலும் செந்நிறமாக
   இடி வீழ்ந்துபோல் கிடந்தோமே
   இமை மூட மறந்தோமே
   ஆண்டுகள் ஏழு
   அனல் இடை கரைந்து
   அரவணைக்க ஆரும் இன்றி
   அரற்றிக் கிடக்கிறோம் நாம்

   எங்கள் இரத்த உறவுகளே!
   ஆறாக உங்கள் இரத்தம்
   அலை புரண்டு ஓடி
   ந்ந்திக் கடல்
   செங்கடல் ஆனபோதும்
   அகிலம் முழுதும்
   பரந்து கிடந்த எம்மால்
   எதுவுமே செய்ய
   முடியவில்லையே
   என்ற குற்ற உணர்வும்
   இயலாமையும்
   கண்களைக்குளமாக்க
   உங்களை இழந்த நினைவுகளோடு....
   எங்கள் உரிமையை வென்று
   உலக அரங்கில்
   எமக்கான நீதியைப்பெற
   அணிதிரள்வோம்
   அலை அலையாய்....
   ஓரணியில்..

   #ஈழத்துப்பித்தன்
   02.05.2016
    
   http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_13.html
  • By வாத்தியார்
   மே 18  2016 நினைவுகளும் நிகழ்வுகளும்
   சுவிஸ்

    
   பெல்ஜியம்

    
   நோர்வே

   ஸ்கொட்லண்ட்

    
   ஹொலண்ட்

    
   பிரான்ஸ்

   கனடா

   டென்மார்க்

  • By Mayuran
   மீண்டும் மீண்டும் உருவேற்றி
   மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி
   சொல்லவும் மெல்லவும் முடியாமல் 
   உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை
   அணையாமல் காப்பது நம் கடனே   அடையாளம் அத்தனையும் தொலைத்து
   அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள்
   எங்கள் அன்னைத் தமிழீழ பூமி
   உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை
   உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு   இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம்
   இல்லாமல் செய்தனர் அதைக் கூட
   தினம் அங்கு தடம் அழித்து அழித்து
   திருவிழா பூமியாய் மிளிருது இன்று
   பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு   கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த
   கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது
   செத்துக் கிடந்தவர் பிணம் கூட
   சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது
   முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம்   மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல்
   மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு
   மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று
   ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து
   மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று   இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே
   உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு
   பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும்
   சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்
   இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம். ‪#‎ஈழத்துப்பித்தன்‬
   11.05.2016 (படங்கள் பறந்த வாகனத்துள் இருந்து மனம் கனத்துச் சுட்டவை.)   http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_11.html
  • By kavimahan
   சென்ற  வாரம் **** அழுகுரல்கள் வானளவு எழுந்தது. ஆனால் அந்த குரல்கள் எந்த வல்லரசுக்கும் கேட்கவே இல்லை… தொடர்ந்து கொண்டிருந்தது அந்த இடத்தை துடைத்தழிப்பதற்கான தாக்குதல்கள் …. அப்போது தான் அண்ணா……. அந்த குரல் தேய்ந்து கொண்டிருந்தது..
   தொடர்ச்சி****
   இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவிர்ப்பது என்பது புரியவில்லை. சுமார் என் உறவுகள் முப்பது பேருக்கு மேலானவர்கள் அந்த இடத்திலே சூழ்ந்திருந்தோம். அதில் குறித்த சிலரைத்தவிர அனைவருக்கும் படு காயம். கட்டு போடுவதற்கு எந்த அவகாசமும் கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசம் எமக்கு தரவில்லை. பாய்ந்து வந்து கொண்டிருந்தன சிங்களன் ஏவிய எம்மை கொல்லுவதற்கான இரும்புத்துண்டுகள். அதற்குள்ளும் தவழ்வதும் உருழ்வதுமாக ஒவ்வொருவராக பார்க்கின்றோம்.
   அனைவரும் முனகி கொண்டு இருக்கின்றார்கள். இருந்த துணிகள் அனைத்தும் அவர்களுக்கு கட்டுப்போடும் துணிகள் ஆகின்றன. கை உடைந்ததும் கால் துண்டானதுமாக ஒவ்வொருவரும் துடித்து கொண்டிருந்தார்கள். தம்பி அண்ணா மாமா என்று பல குரல்கள் எம்மை அழைத்து கொண்டிருந்தன. முதலில் பலத்த காயமடைந்தவர்களுக்கான முதலுதவி செய்ய முனைகிறேன். ஆனால் எதுவுமே முடியவில்லை. அந்தளவு தாக்குதல் அங்கே நடத்தப்படுகிறது. இருப்பினும் அனைவருக்கும் கிடைத்த துணிகள் கொண்டு இரத்த போக்கை கட்டுப்படுத்த முயல்கிறோம்.
   அந்த இடத்தில் என் உறவுகளில் ஏற்கனவே காலில் பலத்த காயமடைந்த நிலையில் களமுனையில் இருந்து விலகி மூத்த போராளி ஒருவரும் குடும்பமும் படுத்திருந்ததும் அவர்களது எந்த சத்தமும் எமக்கு கேட்காததும் நாம் உணராத ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் யோசிக்கவே இல்லை. ஆனால் மீண்டும் தம்பியின் குரல் “டே அண்ணா இங்க ஓடிவாடா” இங்க வந்து பாருடா…. அவனின் கூப்பிட்ட குரலுக்கு நான் ஓடி சென்ற போது அந்த காட்சி என்னால் நம்பவே முடியாது இருந்தது.
   தாய் தந்தைக்கு நடுவில் தூங்கி கொண்டிருந்த பொன்னும் பையனும் நடந்த சம்பவத்தால் திக் பிரமை பிடித்தவர்களாக திகைத்து போய் கிடந்தார்கள். இவற்றையும் தூக்கி நெஞ்சோடு அணைத்து கொள்கிறேன். செல்லங்களுக்கு ஒன்றும் இல்ல மாமா இருக்கான் குட்டிக்கு ஒன்றும் இல்லை என்று அணைத்த வாறு பங்கருக்குள் பாய்கிறேன். உண்மையில் அதிசயமா அல்லது எது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை காரணம்.அனைவரும் சாகும் தருவாயில் காயமடைந்து கிடந்த போதும் அந்த குழந்தைகளுக்கு எந்த கீறல்களும் இல்லை. அவர்கள் இருவரும் தப்பி இருந்தார்கள். பங்கருக்குள் அவர்களை இருந்தி விட்டு திரும்ப அங்கே போன போது,
   ஏற்கனவே காயத்தால் உடைந்து போய் கிடந்த கால் மீண்டும் ஒரு தடவை பல இஞ்சி எலும்பை உடைத்தெறிந்து பிஞ்சு போய் கிடந்தது. தம்பி என் பிள்ளைகளை காப்பாத்து. அவர் அப்பிடித்தான் சொல்லி கொண்டிருந்தார். அவரது காலுக்கு மம்பெட்டி பிடியை கழட்டி வைத்து கட்டுகிறேன். அவரது கால் தோலில் மட்டும் தொங்கிய படி கிடக்கிறது. இரத்தம் தொடர்ந்து வெளியேறி கொண்டே இருக்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் இரத்தத்தை கட்டுப்படுத்த பலவாறு முனைகிறேன் இரத்தமோ தொடர்ந்தும் வெளியேறுகிறது. கட்டுப்படவில்லை…. முயற்சியில் சிறு வெற்றி அதனால் அவரது மனைவியின் காயத்துக்குமான இரத்தக்கட்டுப்படுத்தலை செய்து முடித்து நிமிரும் போது மீண்டும் அந்த குரல்
   அண்ணா…. அந்த குரல் தேய்ந்து கொண்டே போனது…
   நாளை அந்த குரலுக்கு என்ன நடந்தது…? கூறுகிறேன்
   தொடர்ந்து  வாசிக்க http://www.kavikkural.com/2016/03/20/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-11/