Sign in to follow this  
நவீனன்

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்

Recommended Posts

EURO 2016 - துருக்கியை வென்ற குரோஷியா

EURO 2016 - துருக்கியை வென்ற குரோஷியா

 

ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் 2-வது சுற்றை எட்டும்.

பாரீஸ் நகரில் நேற்று அரங்கேறிய ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் குரோஷியாவும், துருக்கியும் மோதின. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க வரிந்து கட்டி நின்ற போதிலும் பலன் குரோஷியாவுக்கு தான் கிட்டியது.

41-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் லூக்கா மாட்ரிச், 25 மீட்டர் தூரத்தில் இருந்து தூக்கி உதைத்த பந்து சூப்பராக கோல் வலைக்குள் நுழைந்தது. இதன் பின்னர் குரேஷிய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. டாரிஜோ ஸ்ர்னா, பெரிசிச், புரோஜோவிச் உள்ளிட்டோர் அடித்த ஷாட்கள் கம்பத்தில் பட்டு நழுவின. அவர்களின் சில வாய்ப்புகளை துருக்கி கோல் கீப்பர் வோல்கன் பாபாகன் முறியடித்தார். இறுதியில் குரோஷிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது. ஐரோப்பிய கால்பந்தில் துருக்கி அணி குரூப் சுற்றில் ஒரு முறை கூட தொடக்க ஆட்டத்தில் வென்றது கிடையாது. அந்த சோகம் இந்த முறையும் தொடர்கிறது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு மார்செலி நகரில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தும், ரஷியாவும் கோதாவில் குதித்தன. முதல் வினாடியில் இருந்தே இரு அணியினரும் ஆக்ரோஷமாக ஆடினார்கள். முதல் பாதியில் பந்து கோல் பக்கம் செல்லவே இல்லை.

இதனால் பிற்பாதியில் ஆட்டம் மேலும் தீவிரமானது. 73-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் எரிக் டையர் ‘பிரிகிக்’ வாய்ப்பில் கோல் போட்டு கலக்கினார். இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கியது. பரப்பரப்பான சூழலில், கடைசி நிமிடத்தில் ரஷிய வீரர் வாசிலி பெரேசுட்ஸ்கி தலையால் முட்டி கோல் போட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்னொரு ஆட்டத்தில் வேல்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வென்றது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின்-செக்குடியரசு (மாலை 6.30 மணி), அயர்லாந்து-சுவீடன் (இரவு 9.30 மணி), பெல்ஜியம்-இத்தாலி (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.
 

Share this post


Link to post
Share on other sites

"அண்ணன்" விராத் கோஹ்லியின் அமோக ஆதரவு பெற்ற ஜெர்மனிக்கு முதல் வெற்றி..!

 

லில்லி, பிரான்ஸ்: யூரோ கோப்பை கால்பந்துத் தொடரில் தனது முதல் போட்டியில் ஜெர்மனி அணி உக்ரைனை 2-0 என்ற கோல் கணக்கில் விரட்டியடித்தது. உலக சாம்பியனான ஜெர்மனியே இப்போட்டியில் வெற்றி பெறும் என்று பலரும் ஏற்கனவே கணித்திருந்தனர். இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லியும் ஜெர்மனிக்கு தனது ஆதரவைத் தெரிவித்து டிவிட்டும் போட்டிருந்தார். அதற்கு ஜெர்மனி அணியும் நன்றி சொல்லியிருந்தது.

 

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட ஜெர்மனி, உக்ரைனை வெளுத்து வாங்கி வெற்றி பெற்றது. ஜெர்மனி அணியின் ஸ்கோட்ரன் முஸ்தபி முதல் பாதியிலும், பாஸ்டியன் ஸ்வீன்ஸ்டீகர் 2வது பாதியிலும் ஒரு கோலடித்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற வைத்தனர். சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் தனது முதல் போட்டியில் உக்ரைனைச் சந்தித்தது. லில்லி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஜெர்மனி திட்டமிட்டு ஆடியது. மிகத் தெளிவாக அதன் உத்திகள் இருந்தன.

 

3 முறை யூரோ கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி 4வது முறையாக கோப்பையை வெல்ல களம் குதித்துள்ளது. தொடக்கத்திலிருந்தே பந்தை ஜெர்மனி வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். முதல் பாதியிலேயே அது 1-0 என்ற அளவில் முன்னணியில் இருந்தது அந்த அணிக்கு உத்வேகம் அளித்தது. மேலும் உக்ரைனை இந்தப் போட்டியுடன் சேர்த்து 6 முறை சந்தித்துள்ளது ஜெர்மனி. ஒரு முறை கூட உக்ரைன் வென்றதில்லை என்பதால் ஜெர்மனி வீரர்கள் மன ரீதியாகவும் தைரியமாக உக்ரைனை சந்தித்தனர். வலிமை வாய்ந்த ஜெர்மனியை எதிர்த்து மோதிய போதிலும் உக்ரைன் அணியும் நல்ல போட்டியைக் கொடுத்தது. ஜெர்மனி அணி கோலடித்து விடாமல் தடுக்க கடுமையாக முயன்று போராடினர் உக்ரைனியர்கள்.

 

இதனால்தான் பெரிய அளவில் கோல் மழை பொழியாமல் போய் விட்டது. அந்த வகையில் 2 கோல்களை மட்டுமே உக்ரைன் கோல் கீப்பர் விட்டுக் கொடுத்து அணியின் மானத்தை பெரிய அளவில் காப்பாற்றி விட்டார். ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் முஸ்தபி முதல் கோலைப் போட்டார். அதன் பின்னர் மேலும் ஒரு கோலடிக்க ஜெர்மனி கடுமையாக முயன்றது. ஆனால் முதல் பாதி முடியும் வரை அதை உக்ரைன் வீரர்கள் அனுமதிக்கவில்லை.

2வது பாதியிலிலும் இரு அணிகளும் போராடின. உக்ரைன் அணி கோலடிக்க முயன்றதைக் காட்டிலும் கோல் விழுந்து விடாமல் தடுக்கவே அதிக கவனம் செலுத்தியது. இந்த நிலையில் பாஸ்டியன் இன்னொரு கோலடித்து ஜெர்மனியின் வெற்றியை உறுதியாக்கி, வலிமையாக்கி விட்டார்.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/clinical-germany-begin-euro-campaign-with-2-0-win-over-ukraine-255869.html

Share this post


Link to post
Share on other sites
யூரோ 2016: ஜேர்மனி, போலந்து, குரோஷியா வெற்றி
 
13-06-2016 01:19 PM
Comments - 0       Views - 6

article_1465818799-EuroBastSch90.jpgஇடம்பெற்றுவரும் யூரோ 2016 தொடரில் இடம்பெற்ற போட்டிகளில், ஜேர்மனி, போலந்து, குரோஷிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

ஜேர்மனிக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. போட்டியின் 19ஆவது நிமிடத்தில் ஷ்கோட்ரன் முஸ்தபியும் 90ஆவது நிமிடத்தில் பஸ்டியன் ஸ்‌வானேஸ்கரும் பெற்ற கோல்களின் உதவியுடன், ஜேர்மனி வெற்றிபெற்றது.

போலந்து அணிக்கும் வட அயர்லாந்து அணிக்குமிடையிலான போட்டியில், போலந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போலந்து அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை, 51ஆவது நிமிடத்தில் அர்க்கடியுஸ் மிலிக் பெற்றுக் கொடுத்தார்.

குரோஷிய அணிக்கும் துருக்கி அணிக்குமிடையிலான போட்டியில், குரோஷிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக 41ஆவது நிமிடத்தில் லூகா மோட்ரிக், கோலைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/174595#sthash.dlioB2xl.dpuf

Share this post


Link to post
Share on other sites

யூரோ 2016 கால்பந்து போட்டிகளின் இடங்களில் மதுவுக்கு தடை - பிரான்ஸ்

 

யூரோ 2016 கால்பந்து போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகிலும், ரசிகர்களின் பகுதிகளிலும் மதுவை தடை செய்ய விரும்புவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

160613112557_euro_16d_976x549_getty.jpg

மார்செய் நகரில் கால்பந்து அணிகளின் ரசிகர்களுக்கு இடையே மூன்று நாட்கள் நடைபெற்ற வன்முறைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

 

160613113519_euro_england_rusia_violence

 

அதேவேளையில், ரஷியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆதரவாளர்கள் இன்னும் மோதல்களில் ஈடுபட்டால் அந்த இரு நாடுகளின் அணிகளும் போட்டியிலிருந்து விலக்கப்படும் என்று யுஇஃபா அந்நாடுகளை எச்சரித்துள்ளது.

    160613113435_euro_england_rusia_violence

மார்செய்யில் நடைபெற்ற அதிக மோதல்களுக்கு “அல்ட்ராஸ்” என அறியப்படும் ரஷிய ரசிகர்களே குற்றம்சாட்டப்படுகின்றனர். சிறப்பாக ஒருங்கிணைவதற்கும், வன்முறை, அதிக தேசியவாத மற்றும் இனவாத உணர்வுக்கும் இவர்கள் பெயர் வாங்கியவர்கள்.

http://www.bbc.com/tamil/sport/2016/06/160613_eurofrance

Share this post


Link to post
Share on other sites

யூரோ 2016: இனியெஸ்டாவின் மாஸ்டர் கிளாஸ்; செக்.குடியரசை வீழ்த்தியது ஸ்பெயின்

 

 
ஸ்பெயின் வீரர் ஆந்த்ரெஸ் இனியெஸ்டா (சிகப்பு) செக்.குடியரசுத் தடுப்பு வீரர் பிளாசிலைத் தாண்டி பந்தை எடுத்துச் செல்லும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
ஸ்பெயின் வீரர் ஆந்த்ரெஸ் இனியெஸ்டா (சிகப்பு) செக்.குடியரசுத் தடுப்பு வீரர் பிளாசிலைத் தாண்டி பந்தை எடுத்துச் செல்லும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.

பிரான்சில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரின் பிரிவு டி போட்டியில் செக்.குடியரசு அணியை ஸ்பெயின் 1-0 என்று வீழ்த்தியது. 87-வது நிமிடத்தில் இனியெஸ்டாவின் உதவியுடன் ஜெரார்ட் பிகே தலையால் முட்டி வெற்றிக்கான கோலை அடித்தார்.

பிரான்சின் டூலவ்சில் நடைபெற்ற இந்த ஆட்டம் முழுதும் கடந்த யூரோ சாம்பியன் ஸ்பெயின் அணியின் நட்சத்திரம் இனியெஸ்டாவின் காலில் இருந்தது என்றால் மிகையாகாது, அவர்தான் போட்டியை நடத்தினார், அவர்தான் விறுவிறுப்புக் கூட்டினார், அவர்தான் முழுக்க முழுக்க அச்சுறுத்தலாக விளையாடினார்.

ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் டி ஜியா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியது முதல் ஸ்பெயின் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது, ஆனால் இந்தப் போட்டியில் மிகப்பெரிய கோல் கீப்பர் ஐகெர் கேசிலாஸுக்குப் பதிலாக டி ஜியாவையே ஸ்பெயின் பயிற்சியாளர் வின்செண்ட் டெல் பாஸ்க் களமிறக்கினார்.

செக்.குடியரசின் பாதுகாப்பு உறுதியினால் இனியெஸ்டாவின் ஊடுருவல் கோலாக மாற முடியாமல் ஸ்பெயின் அணியை வெறுப்பேற்றியது. 8-வது நிமிடத்தில் யுவான்பிரான் பிகேயின் அபாயகரமான கிராஸ் ஹூப்னிக்கினால் தடுக்கப்பட்டது.

ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு உண்மையான கோல் வாய்ப்பு கிட்டியது. ஜுவான்பிரானின் அருமையான குறுக்குக் கள பாஸ் டேவிட் சில்வாவிடம் வலது புறத்தில் வர அவர் மொராட்டாவுக்கு சரியாக பந்தை அடிக்க மொராட்டா கோல் அடிக்க வேண்டியவர் நேராக செக். கையில் கொடுத்தார், கோல் வாய்ப்பு பறிபோனது. மிகவும் நெருக்கமாக வந்து மொராட்டா கோல் வாய்ப்பை பறிகொடுத்தார்.

18வது நிமிடத்தில் இனியெஸ்டா ஒரு அபாரமான பாஸை அளிக்க அது கார்னரில் முடிந்தது, ஆனால் எதுவும் நடக்கவில்லை. 25-வது நிமிடத்தில் இனியெஸ்டாவின் கோணமான பாஸ் ஒன்று பாக்சில் யுவான்பிரானிடம் வந்தது ஆனால் இவரால் பந்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை, மொராட்டாவிடமும் அளிக்க முடியவில்லை. துல்லியமாக வேகமாக இனியெஸ்டா அடித்தார், ஆனால் அத்தகைய தரமான ஷாட்டை பிக் செய்யும் திறன் அங்கு பிகேயிடம் இல்லை. 29-வது நிமிடத்தில் மீண்டும் இனியெஸ்டாவின் பாஸ் ஒன்று மொராட்டாவிடம் சரியாக வர அவர் அதனை இடது காலால் கோல் நோக்கி அடித்தார். ஆனால் செக் அதனை எளிதில் வெளியே திருப்பி விட்டனர். இந்த நிலையில் செக்.குடியரசு தங்களது தாக்குதல் ஆட்டத்தைக் கைவிட்டனர் என்றே கூற வேண்டியுள்ளது.

பிறகு 39, 40வது நிமிடங்களிலும் இனியெஸ்டாவின் ஆதிக்க பாஸ் தொடர்ந்தது ஆனால் கோலாக மாறவில்லை. இடைவேளையின் போது 0-0 என்றே இருந்தது. பந்தை தங்கள் ஆதிக்கத்தில் ஸ்பெயின் வைத்திருந்தாலும் இனியெஸ்டாவின் பாஸ்களை புரிந்து கொண்டு செயல்படும் வீரர்களோ, கள வியூகமோ இல்லை. ஆட்டம் தொடங்கி 46-வது நிமிடத்தில் மீண்டும் இனியெஸ்டாவின் பாஸ் ஒன்று பாக்சிற்குள் மொராட்டாவிடம் வர அவர் ஒரு கிராஸ் அடித்தார் இதுவும் கோலாக மாறவில்லை. 56-வது நிமிடத்தில் செக்.குடியரசு வீரர் காதெராபெக் தலையால் முட்டிய பந்து தவறாக ஸ்பெயின் வீரர் மொராட்டாவிடம் வர அவர் அடிப்பதற்குள் செக். தடுப்பணை அவரைப் புடை சூழ்ந்தது. இன்னொரு வாய்ப்பு நழுவ விடப்பட்டது. 75-வது நிமிடத்திலும் இனியெஸ்டா பந்தை செக். வீர்ர்களிடமிருந்து அபாரமாகத் தக்க வைத்து நொலிடோவிடம் பாஸ் செய்தார். கோலுக்கு அருகே டி வட்டத்திற்குள் இருந்த நொலிட்டோ அதனை சரியாகக் கட்டுப்படுத்த தவறினார். இந்த வாய்ப்பும் நழுவியது.

இந்நிலையில்தான் 87-வது நிமிடத்தில் சரியாக கிளியர் செய்யப்படாத கார்னர் ஷாட் ஒன்று இனியெஸ்டாவிடம் வர இடது புறம் பாக்ஸிலிருந்து கோல் கீப்பருக்கும், தடுப்பாட்ட வீரருக்கும் இடையில் அருமையான ஒரு பாஸைக் கொடுக்க இம்முறை பிகே அதனை தலையால் கோலுக்குள் செலுத்தினார், ஸ்பெயின் 1-0 என்று முன்னிலை பெற்றது.

கூடுதல் நேரத்தில் அதாவது 92-வது நிமிடத்தில் செக்.குடியரசு சமன் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இடது புறத்திலிருந்து செய்யப்பட்ட கிராஸ் டாரிடாவிடம் வர அவர் அதனை கோல் நோக்கி அடித்தார். அது ஸ்பெயின் கோல் கீப்பர் டி ஜியாவுக்கு நெருக்கமாகவே இருக்க அவர் அதனை திசைதிருப்பினார்.

ஆட்டம் முடிந்தது, ஒரு ஸ்பெயின் ரக வெற்றியே இது, அதிகம் பந்துகளை சுமந்து சென்றனர், ஆனால் ஒரேயொரு கோல் மட்டுமே வெற்றிக்கு வித்திட்டது.

இனியெஸ்டாவின் ஆட்டம் மட்டும் தனித்து வேறு ஒரு உலகில் இருந்தது. உத்திரீதியாக 100% சரி என்று கூறும் அளவுக்கு அவரது பாஸ், கணிப்புகள் அமைந்தன. அவரை பின்பற்றி ஆடும் ஸ்ட்ரைக்கர் ஸ்பெயின் அணியில் இல்லை, குறைந்தது இந்த ஆட்டத்தில் வெளிப்படவில்லை என்று கூறலாம்.

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-இனியெஸ்டாவின்-மாஸ்டர்-கிளாஸ்-செக்குடியரசை-வீழ்த்தியது-ஸ்பெயின்/article8724778.ece?homepage=true

Share this post


Link to post
Share on other sites

ரஷிய ரசிகர்கள் பலர் வன்முறைகளை நடத்த தயாராக வந்தவர்கள் - பிரான்ஸ்

யூரோ 2016 கால்பந்து போட்டிகளை காண வந்துள்ள 150 ரஷியர்கள் அதீத வன்முறைகளை செயல்படுத்த நன்கு தயார் நிலையில் வந்தவர்கள் என்று பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

160612032238_euro2016_fans_tear_gas_512x

 

அவர்கள் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு அதிவேக தாக்குதல்களை நடத்தியுள்ளதால் தான், மார்செய்யில் இங்கிலாந்து ரசிகர்களோடு மோதிய பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து ரஷியர்களால் தப்பிக்க முடிந்துள்ளது என்று மார்செய் தலைமை அரசு வழக்கறிஞர் பிரைஸ் ராபின் கூறியுள்ளார்.

 

160612201235_germany_ukraine_first_goal_

 

இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக இரண்டு பிரிட்டன் ரசிகர்கள் மேல் பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

 

160612174800_poland_nortern_ireland_640x

 

ஒருவருக்கு இரண்டு மாதமும், இன்னொருவருக்கு மூன்று மாதமும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

160612001757_euro_2016_clashes_640x360_r

 

ஆஸ்திரிய மற்றும் பிரெஞ்சு குடிமக்கள் உள்பட இன்னும் எட்டு பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

160612031656_marseille_football_fans_vio

 

இந்த வாரத்தின் இறுதியில் லீலில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு முன்னதாக அங்கு ஆதரவாளர்கள் குவித்து வருகையில் ரஷிய, பிரிட்டன் ரசிகர்களுக்கு இடையில் மேலும் கும்பல் வன்முறை பிரச்சனைகள் தோன்றலாம் என்று அச்சங்கள் நிலவுகின்றன.

http://www.bbc.com/tamil/sport/2016/06/160613_euro2016

 

Share this post


Link to post
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: ஜெர்மனி வெற்றி

 
 
சச்வெய்ன்ஸ்டெய்ஜர்
சச்வெய்ன்ஸ்டெய்ஜர்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியனான ஜெர்மனி, உக்ரைன் அணியுடன் மோதியது.

ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. 19-வது நிமிடத்தில் ப்ரீ கிக் மூலம் ஜெர்மனியின் டோனி க்ரூஸ் தூக்கி அடித்த பந்தை தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார் முஷ்டாபி. சர்வதேச போட்டியில் இது அவருக்கு முதல் கோலாமாக அமைந்தது.

இந்த கோல் மூலம் ஜெர்மனி அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலைப் பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஜெர்மனியின் ஆதிக்கமே தொடர்ந்தது. பதில் கோல் திருப்ப உக்ரைன் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

90 நிமிடங்கள் முடிந்ததும் கூடுதலாக வழங்கப்பட்ட 2 நிமிடங்களில், சச்வெய்ன்ஸ்டெய்ஜர் அபாரமாக கோல் அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. 2011ம் ஆண்டுக்கு பிறகு சச்வெய்ன்ஸ்டெய்ஜர் அடித்த முதல் சர்வதேச கோல் இதுதான். கடந்த மார்ச் மாதம் முதல் காயம் காரணமாக எந்த ஆட்டத்திலும் விளையாடாத நிலையில் களம் கண்ட சச்வெய்ன்ஸ்டெய்ஜர் கோல் அடித்து அசத்தியது சிறப்பம்சமாக இருந்தது.

தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள ஜெர்மனி, 3 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்த வெற்றியின் மூலம் யூரோ கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்தது இல்லை என்ற பெருமையை ஜெர்மனி தக்கவைத்துக்கொண்டது.

இன்றைய ஆட்டங்கள்

ஆஸ்திரியா -ஹங்கேரி

நேரம்: இரவு 9.30

போர்ச்சுக்கல்-ஐஸ்லாந்து

நேரம்: நள்ளிரவு 12.30

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-தொடர்-ஜெர்மனி-வெற்றி/article8727379.ece

Share this post


Link to post
Share on other sites
யூரோ 2016: ஸ்பெயின், இத்தாலி வெற்றி
 

article_1465896974-Euroingerpiwospanoib.பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் வென்றுள்ள நிலையில், அயர்லாந்துக் குடியரசு, சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

கடந்த இரண்டு முறை யூரோ சம்பியன்களான ஸ்பெயினும் செக் குடியரசும் மோதிய போட்டியின் 87ஆவது நிமிடத்தில், ஸ்பெய்னின் அன்றே இனியஸ்ட்டா கொடுத்த அருமையான பந்தை, தலையால் முட்டி ஜெராட் பிகே கோலாக்க, 1-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. முன்னதாக, ஸ்பெய்னின் அல்வரோ மொறாட்டா, ஜோர்டி அல்பா, டேவிட் சில்வாவின் கோல் பெறும் முயற்சிகளை, அபாரமாகச் செயற்பட்ட செக் குடியரசின் கோல்காப்பாளர் பீற்றர் செக் தடுத்திருந்தார். மறுகணம், அயர்லாந்துக் குடியரசின் விளாடிமிர் டரிடா, கோல் எண்ணிக்கையை சமப்படுத்த முயன்றபோது ஸ்பெயின் கோல்காப்பாளர் டேவிட் டீ கியா தடுத்திருந்தார்.

அடுத்து, அயர்லாந்துக் குடியரசு, சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் 48ஆவது நிமிடத்தில், அயர்லாந்துக் குடியரசின் வெஸ் ஹூலகன் பெற்ற கோலின் மூலம் அவ்வணி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோதும், மன்செஸ்டர் யுனைட்டெட்டுடன் இணையப் போகின்றார் எனக் கூறப்படும் சுவீடனின் நட்சத்திர வீரரும் அவ்வணியின் தலைவருமான ஸல்டான் இப்ராஹிமோவிக் அடித்த பந்தானது, அயர்லாந்துக் குடியரசின் கிரண் கிளார்க்கின் காலில் பட்டு ‘ஓவ்ண் கோல்’ ஆக மாற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. போட்டிக்கு முன்னர், ஜாம்பவானால் இன்னும் திறமையை வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்த 34 வயதான இப்ராஹிமோவிக், போட்டியின் சில தருணங்களில் மட்டுமே ஜாம்பவானாக செயற்பட்டிருந்தார்.

இதேவேளை, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. இத்தாலி சார்பாக பெறப்பட்ட கோல்களை, இம்மானுவேலே ஜக்கேலினி, கிறேசியானோ பெலே ஆகியோர் பெற்றிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/174667#sthash.rKN7shxG.dpuf
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டதால் ரஷ்ய அணிக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் அபராதம்

Date: 2016-06-14@ 19:54:13
Daily_News_8257671594620.jpg

பாரிஸ்: ரசிகர்களின் தகராறு தொடர்ந்தால் போட்டித் தொடரிலிருந்து ரஷ்ய அணி தகுதி நீக்கம் செய்யப்படும் என்றும் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து போட்டியின்போது ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டதால் ரஷ்ய அணிக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது. பிரான்சில் யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ரஷ்யா - இங்கிலாந்து இடையிலான போட்டி சனிக்கிழமை மார்செல் நகரில் நடந்தது. போட்டியின்போது ரசிகர்களிடையே பெரும் வன்முறை வெடித்தது. இரு நாட்டு ரசிகர்களும் மிக மோசமாக நடந்து கொண்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகராறில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்திய போது  இறுதியில் ரஷ்ய கால்பந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இனியும் ரஷ்ய ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டால் போட்டித் தொடரை விட்டு ரஷ்ய அணி நீக்கப்படும் என்றும் சம்மேளனம் எச்சரித்துள்ளது. ரஷ்ய அணிக்கு இன்னும் 2 சுற்றுப் போட்டிகள் உள்ளன. நாளை லில்லி நகரில் ஸ்லோவேக்கியா அணியுடனும், திங்கள்கிழமை டூலோஸ் நகரில் வேல்ஸ் அணியுடனும் மோதவுள்ளது ரஷ்யா. எனவே இந்தப் போட்டிகளில் ரஷ்ய ரசிகர்கள் அமைதியாக இருந்தால் அந்த அணி தப்பும்.

இல்லாவிட்டால் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது. ரஷ்ய அணிக்கு தற்போது 1 லட்சத்து 69 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் செய்த தொந்தரவு, இன ரீதியான தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், பட்டாசு வெடித்தல் போன்றவற்றுக்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=224089

Share this post


Link to post
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து: பெல்ஜியத்தை வீழ்த்தியது இத்தாலி

 
 
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேம் சைடு கோல் அடித்த அயர்லாந்து வீரர் சியரன் கிளார்க். படங்கள்: ராய்ட்டர்ஸ்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேம் சைடு கோல் அடித்த அயர்லாந்து வீரர் சியரன் கிளார்க். படங்கள்: ராய்ட்டர்ஸ்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் லயானில் நடைபெற்ற ஆட்டத்தில் இ பிரிவில் இடம் பெற்றுள்ள இத்தாலி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை எதிர்த்து விளையாடியது. 32-வது நிமிடத்தில் லியானார்டோ பொனிசி கொடுத்த நீண்ட தூர பாஸை, ஜியாஜெர்னி கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி முன்னிலை பெற்றது.

90 நிமிடங்கள் முடிந்ததும் கூடுதலாக வழங்கப்பட்ட 2 நிமிடங்களில் அன்டோனியா ஹன்ட்ரிவா கொடுத்த கிராஸை பெற்று கிராஸினோ பெலி மேலும் ஒரு கோல் அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் சமன் செய்ய கிடைத்த இரண்டு வாய்ப்புகளை பெல்ஜியம் வீர்கள், லுகாகு, ஒரிஜி ஆகியோர் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினர்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய இத்தாலி கடும் விமர்சனங்களை சந்தித்திருந்தது. யூரோ கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் வலுவில்லாத அணி என நிபுணர்களால் விமர்சிக்கப்பட்ட நிலையில் இத்தாலி அணி தொடரை வெற்றியுடன் தொடங்கி அசத்தியுள்ளது. இத்தாலி தனது 2வது ஆட்டத்தில் வரும் 17-ம் தேதி ஸ்வீடனை சந்திக்கிறது. இதே நாளில் பெல்ஜியம், அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

சேம்சைடு கோல்

இ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அயர்லாந்து-சுவீடன் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் பாதியில் கோல் எதும் அடிக்கப்படாத நிலையில் 48-வது நிமிடத்தில் அயர்லாந்தின் ஹூலாஹன் முதல் கோலை அடித்தார். சுவீடன் வீரர்கள் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. 71-வது நிமிடத்தில் திடீர் திருப்பமாக சியரன் கிளார்க் சேம்சைடு கோல் அடிக்க அயர்லாந்து அணி அதிர்ச்சியில் உறைந்தது.

சுவீடன் வீரர் இப்ராமோகிவிக் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்தை கிளார்க் தலையால் முட்டி தடுக்க முயன்ற போது அது கோலாக மாறியது.

இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது. அதன் பின்னர் இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சியரன் கிளார்க்கின் சேம்சைடு கோலால் 28 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கால்பந்து தொடரில் வெற்றி பெறும் வாய்ப்பை கோட்டை விட்டது அயர்லாந்து அணி.

இன்றைய ஆட்டங்கள்

ரஷ்யா-சுலேவேக்கியா

நேரம்: மாலை 6.30

ருமேனியா-சுவிட்சர்லாந்து

நேரம்: இரவு 9.30

பிரான்ஸ்-அல்பேனியா

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-பெல்ஜியத்தை-வீழ்த்தியது-இத்தாலி/article8731495.ece

Share this post


Link to post
Share on other sites

யூரோ 2016: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏமாற்றம்; போர்ச்சுகலுடன் ஐஸ்லாந்து டிரா

 
கடைசியில் ஃப்ரீ கிக் அடிக்கக் காத்திருகும் ரொனால்டோ. | படம்: ஏ.பி.
கடைசியில் ஃப்ரீ கிக் அடிக்கக் காத்திருகும் ரொனால்டோ. | படம்: ஏ.பி.

பிரான்சில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரின் எஃப் பிரிவு போட்டியில் வலுவான போர்ச்சுக்கல் அணியுடன் ஐஸ்லாந்து அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து அதிர்ச்சியளித்தது.

நட்சத்திர வீரர் ரொனால்டோ தலையால் முட்டி அடிக்க வேண்டிய கோல் வாய்ப்பைத் தவற விட்டதோடு, பெபேயின் கிராஸ் ஒன்றை கோலாக மாற்றும் முயற்சியில் பந்தைக் கோட்டை விட்டார்.

ஐஸ்லாந்து அணி முக்கியமான தொடர் ஒன்றில் ஆடுவது இதுவே முதல் முறை. ஆனால் தொடக்கத்தில் கைல்ஃபி சைகுர்ட்சன் கோல் அடிக்க முயன்றார் ஆனால் போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ர்சியோவைத் தாண்ட முடியவில்லை.

பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த அபாரமான கிராஸ் நானியிடம் வர அவர் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த முயன்றபோது தடுக்கப்பட்டது. மிகவும் நெருக்கமான வாய்ப்பு.

பிறகு ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் வலது புறத்தில் போர்ச்சுகல் வீரர் ஆந்த்ரே கோம்ஸ் அற்புதமான ஒரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து வீரர்களுக்குப் போக்கு காட்டி பிறகு தாழ்வாக கிராஸ் ஒன்றைச் செய்ய அருகிலிருந்த நானி கோலாக மாற்றினார், போர்ச்சுகல் 1-0 என்று முன்னிலை பெற்றது.

இடைவேளைக்குப் பிறகும் போர்ச்சுகல் ஆதிக்கம் அதே பாணியில் தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சிகரமாக ஐஸ்லாந்து அணி சமன் செய்தது.

50-வது நிமிடத்தின் போது ஐஸ்லாந்து வீரர் ஜொஹான் பெர்க் குட்மண்ட்சன் வலதுபக்கத்திலிருந்து கிராஸ் ஒன்றை அடிக்க அது ஜார்னேசனிடம் வர அவர் அதனை அருமையாக கோலாக மாற்றி சமன் செய்தார், போர்ச்சுகல் அதிர்ச்சியடைந்தது.

அதன் பிறகு ரொனால்டோ சரியாக மார்க் செய்யப்பட்டார். இதனால் 56-வது நிமிடத்தில் அவரது ஒரு நகர்த்தல் தோல்வி அடைந்தது. 71-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க அதனை ரஃபேல் கிரைரோ அடித்தார், பந்து நானியிடம் வர மற்றொரு தலையால் அடிக்கும் கோல் முயற்சி கோலுக்கு வெளியே சென்றது. ரொனால்டோவின் கோல் முயற்சி ஒன்றும் கோல்போஸ்டுக்கு மேலே சென்றது.

85-வது நிமிடத்தில் ரொனால்டோவின் தலையால் அடிக்கும் கோல் முயற்சியும் தடுக்கப்பட, கடைசியில் ரொனால்டோவுக்குக் கிடைத்த 2 ஃப்ரீ கிக் வாய்ப்புகளிலும் கூட கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஐஸ்லாந்துடன் 1-1 என்று டிரா செய்து ஏமாற்றமளித்தது போர்ச்சுகல்

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-கிறிஸ்டியானோ-ரொனால்டோ-ஏமாற்றம்-போர்ச்சுகலுடன்-ஐஸ்லாந்து-டிரா/article8731947.ece

Share this post


Link to post
Share on other sites

ரஷ்யாவை வீழ்த்தியது சுலோவேக்கியா

 

பி பிரிவில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ரஷ்யா-சுலோவேக்கியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் வெயிஸூம், 45-வது நிமிடத்தில் ஹம்சிக்கும் கோல் அடிக்க சுலோவேக்கியா அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது. 80-வது நிமிடத்தில் ரஷ்யாவின் குளுஸகோவ் முதல் கோலை அடித்தார். ஆனால் அதன் பின்னர் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவேக்கியா வெற்றி பெற்றது. அந்த அணி பெறும் முதல் வெற்றியாகும். சுலோவேக்கியா தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-கால்பந்து-ரஷ்யாவை-வீழ்த்தியது-சுலோவேக்கியா/article8735954.ece

Share this post


Link to post
Share on other sites

இங்கிலாந்து வேல்ஸ் ரசிகர்கள் இணைந்து ரஷ்யர்கள் மீது தாக்குதல்

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், நேற்று நடந்த ஆட்டத்தில் ரஷ்ய அணி, ஸ்லோவேகியா அணியிடன் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.  போட்டியை காண்பதற்காக இரு நாட்டு ரசிகர்களும் லில்லி நகரில் குவித்திருந்தனர். கூடவே, ஏற்கனவே ரஷ்ய ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து ரசிகர்களும், லில்லி நகரில் திரண்டிருந்தனர். ரசிகர்கள் மோதலைத் தடுக்க லில்லி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 
 
 

             

எனினும் இந்த போட்டியில் ரஷ்ய அணி தோல்வி கண்டதால், ரசிகர்களுக்கிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டது. போட்டி முடிந்ததும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் திரண்டிருந்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ரசிகர்கள்,  ரஷ்ய ரசிகர்களுடன் தகராறில் ஈடுபடத் தொடங்கினர். பிரிட்டானியர்கள் என்ற ரீதியில் இரு தரப்பும் ஒன்று சேர்ந்து ரஷ்ய ரசிகர்களைத் கடுமையாகத் தாக்கினர். ஆனாலும் ரஷ்ய ரசிகர்களிடம் அடி வாங்கியதில் 16 இங்கிலாந்து ரசிகர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில்  36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இதற்கிடையே லில்லியில் பிடிபட்ட 2 ரஷ்ய ரசிகர்கள்,  பிரான்சில் இருந்து ரஷ்யாவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம்,  ரஷ்யாவுக்கான பிரான்ஸ் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 
 
ஐரோப்பிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் இங்கிலாந்து, வேல்ஸ் அணியை 6.30 மணிக்கும்,  உக்ரேன், வடக்கு அயர்லாந்து அணியை 9.30 மணிக்கும், ஜெர்மனி, போலந்து அணியை 12.30 மணிக்கும் சந்திக்கின்றன. 

http://www.vikatan.com/news/sports/65233-english-fans-attack-russians.art

Share this post


Link to post
Share on other sites
ஐஸ்லாந்தின் 'சிறுமைத்தனத்தை' விமர்சிக்கிறார் ரொனால்டோ
 
15-06-2016 05:30 PM
Comments - 0       Views - 16

article_1466074888-Euro-NEARSiruicsaaronபோர்த்துக்கல் - ஐஸ்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஐஸ்லாந்து அணி வீரர்கள் மீது, போர்த்துக்கல் அணியின் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

போட்டி முடிவில், ஐஸ்லாந்து அணியின் வீரர்களோடு கைகுலுக்க மறுத்திருந்த ரொனால்டோ, ஐஸ்லாந்து வீரர்கள் கொண்டாடிய விதம் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். "இறுதியில் அவர்கள் கொண்டாடிய விதத்தைப் பார்க்கும்போது, யூரோ கிண்ணத்தை அவர்கள் வென்றுவிட்டார்கள் என நினைத்தேன்" என்றார்.

"நம்ப முடியாதிருந்தது. போட்டி வெல்வதற்கு நாம் கடுமையாக முயன்றோம். ஐஸ்லாந்து எதையும் முயலவில்லை. என்னைப் பொறுத்தவரை இது, சிறுமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. அத்தோடு, இந்தத் தொடரில் அவர்கள் எதனையும் செய்யப் போவதில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது" என்றார்.

எனினும், ரொனால்டோவின் விமர்சனங்களை நிராகரித்த ஐஸ்லாந்தின் முன்னாள் வீரர் ஹெர்மன் ரெய்டர்சன், ரொனால்டோவுக்குப் பதிலடி வழங்கினார். ரொனால்டோவை சில்லறைத்தனமானவர் எனவும் தோல்வியை ஏற்காதவர் எனவும் வர்ணித்தார். அத்தோடு, "கோல்களைத் தட்டில் வைத்துத் தருவார்கள் என நினைக்கிறார்" என்று தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/174853/ஐஸ-ல-ந-த-ன-ச-ற-ம-த-தனத-த-வ-மர-ச-க-க-ற-ர-ர-ன-ல-ட-#sthash.LHVfDw3i.dpuf

Share this post


Link to post
Share on other sites

வெஸ்ட் ஹாம் மகுடத்தின் வைரக்கல்லாக ஒளிரும் பயட்!

FB1.jpg
 

கால்பந்தின் மிகப்பெரிய தொடர்களில் ஒன்றான யூரோ கோப்பையின் முதல் போட்டி.  போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி, ரொமேனியாவுடன் 1-1 என்று சமநிலை வகிக்கிறது. கோப்பை வெல்லும் என்று கருதப்பட்ட சொந்த ஊர் அணி, முதல் போட்டியிலேயே திணறியதை அந்நாட்டு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 89 நிமிடங்கள் கடந்துவிட்டன. பிரான்ஸ் வீரர்கள் கோல் கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். ஒரு நிமிடமே மீதமிருக்க, ரசிகர்களெல்லாம் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். அப்போதுதான் காண்டே கொடுத்த பாசை, சுமார் 25 அடி தூரத்திலிருந்து கோல் நோக்கி உதைத்தார் பிரான்ஸ் வீரர் டிமிட்ரி பயட். மின்னலெனப் பாய்ந்த பந்து, கோல் வலையினுள் செல்ல, மொத்த மைதானமும் அலறியது.

கோல் அடித்த அடுத்த நொடி, மகிழ்ச்சியில் மைதானத்தைச் சுற்றி ஓடினார் பயட். அடிமனதில் கிளம்பிய சந்தோஷம் மற்ற வீரர்கள் போல் அவருக்கு சிரிப்பாய் வெளிவரவில்லை. கண்ணீராய் மைதானத்தில் கரைபுரண்டோடியது. அவரால் பேச முடியவில்லை. சிரிக்கக்கூட முடியவில்லை. அவரது அந்தக் கண்ணீர் இவ்வுலகத்திற்கு ஏதோ ஒன்றை நிரூபித்தது.
 

FB2.jpg

இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி நகர்வோம்…2014 ஃபிஃபா உலகக்கோப்பைக்கான பிரான்ஸ் அணியை அறிவிக்கிறார் பயிற்சியாளர் டெஸ்கேம்ப்ஸ். நஸ்ரி, பயட் உள்ளிட்ட வீரர்கள் திடீரென அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்கள். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஓரளவு செயல்பட்டபோதும் பயட்டிற்கு உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பயட்டைப் பொருத்தவரையில், களத்தில் பம்பரமாகச் சுற்றுபவர். தான் கோல் அடிக்க வேண்டும் என்பதை விட, அணி வெல்ல வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் ஓங்கியிருக்கும். மற்ற வீரர்களுக்கு கோலடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் வல்லவர். ஃப்ரீ கிக் கில்லாடியும் கூட.
 

FB3.jpg

உலகக்கோப்பையில் விளையாடாத ஏமாற்றம் பயட்டை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாகப் போராடினார். வாய்ப்புகளுக்காக அவர் காத்திருக்கவில்லை. வாய்ப்புகளை உருவாக்கினார். ஒவ்வொரு மூளை முடுக்கிலும் பந்தை தன்வசப்படுத்தப் போராடினார். மார்சிலே அணிக்காக விளையாடிய அவர், 2014-15 சீசனில் மட்டும் 17 அசிஸ்டுகள் செய்து தனது அணி வீரர்கள் கோலடிக்க உதவினார். அதுமட்டுமல்லாது, மொத்த ஐரோப்பாவிலும் த்ரூ பால் கொடுத்ததில் மெஸ்ஸிக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்தார் பயட். அதன் விளைவாக 2015 ல்,  இங்கிலாந்தின் வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்காக ஒப்பந்தம் ஆனார் பயட். பல முன்னணி வீரர்கள் சொதப்பிய பிரீமியர் லீக் தொடரில், தனது முதல் சீசனிலேயே முத்திரை பதித்தார் அவர். இந்த சீசனின் சிறந்த பிரீமியர் லீக் அணியிலும் தேர்வு செய்யப்பட்டார் பயட்.
 

அதன் விளைவு, செல்சி உள்ளிட்ட முன்னணி அணிகள் அவரை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்து வருகின்றன. அதுமட்டுமல்லாது சொந்த மண்ணில் நடக்கும் யூரோ கோப்பைக்கான அணியில் இடமும் கிடைத்தது. ஆனால் ஆடும் லெவனில் பயட் இடம்பெறுவாரா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. காரணம், பயிற்சியாளர் டெஸ்கேம்ப்ஸ். பயட் மீது அவருக்கு மிகப்பெரிய அபிப்பிராயம் இருந்தது இல்லை. அவருக்கு சரியான வாய்ப்புகளையும் அவர் கொடுத்ததில்லை. ஒருமுறை பயட்டே “அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார். அப்படியிருக்கையில் தேசிய அணியில் தனது எதிர்காலத்தை நிலைநிறுத்திக்கொள்ள பயட்டிற்கு இது கடைசி வாய்ப்பாக அமைந்தது.
 

FB51.jpg

இறுதியாக டெஸ்கேம்ப்ஸ் அறிவித்த ரொமானியாவிற்கு எதிரான ஆடும் லெவனில், பயட்டின் பெயரும் இடம்பெற்றது. ஆட்டம் முழுதும் உழைத்துக்கொண்டே இருந்தார். பெனால்டி ஏரியாவில் பந்துகளை செலுத்துவது, சக வீரர்களுக்கு பாஸ் மழை பொழிவது என பயட்டின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. பிரான்ஸின் ஜிரௌட் அடித்த முதல் கோலிற்கான அசிஸ்ட் செய்ததும் பயட்தான். பெனால்டியின் வாயிலாக ரொமேனியா சமநிலை அடைய, வெற்றி எட்டாக்கனியாகிக் கொண்டிருந்தது. அப்போதுதான் பயட்டின் அந்த அற்புத கோல், வெற்றியை வசப்படுத்தியது. இறுதிக் கட்டத்தில் எவ்வித பிரஷரும் இன்றி லாவகமாக கோல் அடித்த பயட், தன்னை உலகக்கோப்பை அணியில் சேர்க்காததற்கு பெரும் பாடம் புகட்டினார். அவரால் பொங்கிய கண்ணீரை அடக்கவே முடியவில்லை. கூடுதல் நேரத்தில், சப்ஸ்டிட்யூட்டாக பயட் மாற்றப்பட்ட போது மொத்த அரங்கமும் ஸ்டேண்டிங் ஓவேஷன் கொடுத்தது. அப்போதும் ஆனந்தக் கண்ணீருடனேயே வெளியேறினார் பயட்.
 

FB42.jpg

மொத்த தேசமும் பயட்டின் பெயரை புகழ்ந்து கொண்டிருந்த நேரம், அல்பேனியா அணியுடனான இரண்டாவது போட்டியிலும் கடைசி கட்டத்தில் கோலடித்து, பிரான்ஸ் அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் பயட். பிரான்ஸ் ஜாம்பவான்கள் ஜிடேன், ஹென்றி ஆகியோருக்கு இணையாக இன்று பயட்டின் பெயரும் பிரான்ஸ் காற்றில் கலந்திருக்கிறது.

பயட் விளையாடிவரும் வெஸ்ட் ஹாம் அணியின் மேனேஜர் ஸ்டீவன் பிலிக்,  யூரோ கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, “நீ நிரூபிப்பதற்கு எதுவுமில்லை. நீ ஒரு சிறந்த வீரன்தான்” என்று பயட்டிற்கு மெசேஜ் செய்துள்ளார். அந்த மெசேஜ் இன்று உண்மையாகிவிட்டது. மொத்த உலகத்திற்கும் தனது கால்களாலும் கோல்களாலும் பதிலளித்துவிட்டார் டிமிட்ரி பயட். இனியும் அவர் நிரூபிப்பதற்கு எதுவுமில்லைதான். பல கோடிகள் சம்பளம் பெரும் கால்பந்து நட்சத்திரங்களில் பயட்டும் ஒரு நட்சத்திரம் தான். அதுவும், தன்னை சந்தேகிப்பவர்களைப் பொசுக்கும் அக்னி நட்சத்திரம். அக்கண்ணீர் உணர்த்துவது இதைத்தான்!
 

பயட் கண்ணீர் சிந்திய காட்சியின் வீடியோ இங்கே...


http://www.vikatan.com/news/sports/65258-payet-became-jewel-in-west-hams-crown.art

Share this post


Link to post
Share on other sites

யூரோ கோப்பை 2016 வேல்ஸ் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து

 

டெல்லீஸ் : யூரோ கோப்பை 2016 கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டியில் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=224692

Share this post


Link to post
Share on other sites

யூரோ கோப்பை 2016 : ரஷ்ய ரசிகர்களுக்கு 2 ஆண்டு சிறை

 

யூரோ கோப்பை 2016  தொடரில் இங்கிலாந்து- ரஷ்யா அணிகள் மோதிய போட்டியில் ரசிகர்களிடையே மோதல் வெடித்தது. இதில் ரஷ்யா ரசிகர்கள் தான் கலவரத்தில் ஈடுப்பட்டனர் என வீடியோ ஆதாரங்கள் மூலம் பிரான்ஸ் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர் . கைது செய்த ரசிகர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர், கலவரத்தில் ஈடுபட்ட ரஷ்ய ரசிகர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=224690

Share this post


Link to post
Share on other sites
யூரோ கிண்ண இரண்டாம் சுற்றில் பிரான்ஸ்
2016-06-17 10:21:06

பிரான்ஸில் நடை­பெற்­று­வரும் யூரோ கிண்ண கால்­பந்­தாட்­டத்தின் இரண்டாம் சுற்றில் விளை­யா­டு­வ­தற்கு முத­லா­வது அணி­யாக பிரான்ஸ் தகு­தி­பெற்­றுக்­கொண்­டது.

 

17379111111.jpg

 

 

மார்செல், வெலோட்ரோம் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற அல்­பே­னி­யா­வுக்கு எதி­ரான குழு ஏ லீக் போட்­டியில் அல்­பே­னி­யாவை 2 – 0 என்ற கோல் அடிப்­ப­டையில் பிரான்ஸ் வெற்­றி­கொண்­டது. இந்த வெற்­றியே பிரான்ஸ் இரண்டாம் சுற்­றுக்குள் நுழை­வதை உறுதி செய்­தது.

 

17379Ero-antoine-griezemann-france-no-7-இரண்டு அணி­யி­னரும் சம­மா­கவும் கடு­மை­யா­கவும் மோதிக் கொண்ட இப் போட்டி கோல்கள் போடப்­ப­டாமல் வெற்றி தோல்­வி­யின்றி முடி­வ­டை­யலாம் என பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

 

ஆனால் போட்­டியின் 90ஆவது நிமி­டத்தில் அன்டொய்ன் க்றீஸ்மான் கோல் ஒன்றைப் போட்டு பிரான்­ஸுக்கு நம்­பிக்கை ஊட்­டினார்.

 

இதனைத் தொடர்ந்து உபா­தை­யீடு நேரத்தின் 6ஆவது நிமி­டத்தில் டிமிட்றி பாயே இரண்­டா­வது கோலைப் போட்டு பிரான்ஸ் இரண்டாம் சுற்­றுக்கு செல்­வதை உறுதி செய்தார்.

 

யூரோ கிண்ணம் 2016 போட்டிகளில் 24 நாடுகள் ஆறு குழுக்களில் போட்டியிடுகின்றன.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17379#sthash.0vn7fURW.dpuf

Share this post


Link to post
Share on other sites

யூரோ 2016 : வேல்ஸிடம் இருந்து தப்பித்தது இங்கிலாந்து

ரோப்பிய கோப்பைத் தொடரில் வடக்கு அயர்லாந்து அணி, முதன் முறையாக வெற்றியை பதிவு செய்தது. டேனியல் ஸ்டர்ரிஜ்'லேட் கோல் ' இங்கிலாந்து அணி வேல்ஸ் அணியை வீழ்த்த உதவியது.

       

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து அணி, வேல்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஐரோப்பிய கோப்பைத் தொடரில், வடக்கு அயர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து வடக்கு அயர்லாந்து  ரசிகர் ஒருவர் மாரடைப்பால் பலியானார்.

நேற்று லியோன் நகரில் நடந்த ஆட்டத்தில், வடக்கு அயர்லாந்து அணி, உக்ரேன் அணியுடன் மோதியது. இந்த போட்டியில், வடக்கு அயர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தங்கள் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் திளைத்த வடக்கு அயர்லாந்து ரசிகர் ஒருவர் பலியாகினார்.

ஜெர்மனி - போலந்து அணிகளுக்கிடையேயான ஆட்டம், கோல் எதுவும் விழாமல் சமனில் முடிந்தது. இங்கிலாந்து - வேல்ஸ் அணிகளுக்கிடையேயான மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, அபார வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தில், வேல்ஸ் அணியின் காரத் பேல் முதல் கோல் அடித்தார். இந்த கோலுக்கு ஜேமி வார்டி பதிலடி கொடுக்க, ஸ்டாப்பேஜ் நேரத்தில் டேனியல் ஸ்டர்ரிஜ் அடித்த கோல், இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவியது.

மற்றொரு ஆட்டத்தில், போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி அல்பேனியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 

http://www.vikatan.com/news/sports/65272-daniel-sturridge-inspires-famous-fightback-at-euro.art

 

Share this post


Link to post
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து ஜெர்மனி-போலந்து ஆட்டம் கோல்களின்றி டிரா

 

Daily_News_1545025110245.jpg

பாரிஸ்:  யூரோ கோப்பை கால்பந்து தொடர், பிரான்சில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த போட்டியில், குரூப் சி-யில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி-போலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி, ஆட்ட நேர முடிவில் கோல்கள் இன்றி 0-0 என டிராவில் முடிந்தது. நடப்பு யூரோ கோப்பை தொடரில், கோல்கள் விழாமல் டிரா ஆன முதல் போட்டி இதுதான். இந்த போட்டி டிராவில் முடிந்ததால், குரூப் சி-யில் ெஜர்மனி, போலாந்து அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே முதல் 2 இடங்களில் உள்ளன. இதனால் தங்கள் கடைசி லீக் போட்டிகளில் இரு அணிகளும் தோல்வியை தவிர்க்கும் பட்சத்தில், நாக் அவுட் சுற்றுக்குள் முன்னேறி விடும் வாய்ப்பை பெற்றுள்ளன. இந்த போட்டி டிராவில் முடிந்தது, உக்ரைன் அணி தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. இந்த போட்டியில் போலாந்து அணிக்கு கோல் அடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்தன.


ஆனால் மில்க், ராபர்ட் லீவாண்டோஸ்க்கி ஆகியோர் அந்த வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இதேபோல் ஜெர்மனி அணிக்கு 69வது நிமிடத்தில், கோல் அடிக்க மிக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மெசல்ட் ஓசில் அதனை வீணடித்தார். இதனால் கோல்களின்றி போட்டி டிராவில் முடிந்தது. ஜெர்மனி அணியின் ஜெரோம் போட்டங், ஆட்ட நாயகன் விருது வென்றார். முன்னதாக நேற்று இரவு நடந்த போட்டியில், உக்ரைன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில், அயர்லாந்து அணி வீழ்த்தியது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=224935

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this