Jump to content

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்


Recommended Posts

  • Replies 163
  • Created
  • Last Reply

யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் ‛சாம்பியன்'

 

 

செயின்ட் டெனிஸ் : யூரோ கோப்பை தொடரின் பைனலில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய போர்ச்சுகல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

 

ஐரோப்பிய அணிகள் மட்டும் பங்கேற்கும் 15வது யூரோ கோப்பை கால்பந்து தொடர், பிரான்சில் நடைபெறுகிறது. மொத்தம் பங்கேற்ற 24 அணிகளில் ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட 22 அணிகள் வெளியேறின. இறுதிப் போட்டிக்கு உலக தரவரிசையில் 8வது இடத்திலிருக்கும் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, 17வது இடத்திலிருக்கும் பிரான்ஸ் அணியை சந்தித்தது.

 

ரெனால்டோ ‛அவுட்' :

 

சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பிரான்ஸ் அணி, துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 25வது நிடத்திலேயே போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ காயம் காரணமாக மைதானத்திலிருந்த அழுதபடியே வெளியேற, அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரு அணிகளும், அடிக்கடி எதிரணியின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்காததால், முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலை வகித்தது.

 

கோல் கீப்பர்கள் அசத்தல் :

 

இரண்டாவது பாதி ஆட்டத்திலும், இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மாறி, மாறி வீணாக்கினர். இரு அணி கோல் கீப்பர்களும் எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சியை தொடர்ந்து தடுத்தனர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில்(90வது நிமிடத்தில்) பிரான்ஸ் வீரர் கிக்னாக், 6 அடி தொலைவிலிருந்து அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேற பிரான்ஸ் ரசிகர்கள் மவுனமாயினர். ஆட்ட நேர முடிவில் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

 

‛ஹரோ' ஈடர்:

 

கூடுதல் நேரத்தில் 109வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய போர்ச்சுகல் அணியின் ஆன்டனியோ ஈடர் அசத்தலாக கோல் அடித்தார். இதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய போர்ச்சுகல், யூரோ கோப்பையை முதன்முறையாக வென்று வரலாறு படைத்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1561575

WR_20160711033451.jpeg

வெற்றிக்கான கோலினை அடித்த ஈடரை பாராட்டும் போர்ச்சுகல் அணி வீரர்கள்.

WR_20160711033714.jpeg

போர்ச்சுகல் அணியில் வெற்றியை கொண்டாடும் அந்நாட்டு ரசிகர்கள்.

WR_20160711032843.jpeg

யூரோ கோப்பையை முதன்முறையாக வென்ற மகிழ்ச்சியில், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியினர்.

Link to comment
Share on other sites

ஐரோப்பிய கால்பந்து போட்டி... முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல்!

f4.jpg

பாரீஸ்: ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல் அணி.

f3.jpg

15வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த தொடரில் உலக சாம்பியனான ஜெர்மனி மற்றும் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன. லக கால்பந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் இறுதுப்போட்டிக்கு முன்னேறியது.

f2.jpg

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ரொனால்டோவின் வெளியேற்றத்தால், அந்த அணியின் ஆட்டம் சற்று தடுமாற்றத்துடனேயே இருந்தது. அதனால், பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் உயர்ந்திருந்தது.

f1.jpg

ஆனாலும், முதல் பாதியில் பந்தை பெரும்பாலும் தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த பிரான்ஸ் வீரர்களால், போர்ச்சுகல்லின் தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க முடியவில்லை. இராண்டாம் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் பரபரப்பாக விளையாடின. வீரர்களின் காலில் உதைப்பட்டு பறந்த பந்து, கோல் வலையில் சிக்காமல் கம்பத்தில் மட்டுமே பட்டு திரும்பியதால் அரங்கமே பதட்டத்துடன் காணப்பட்டது.

இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் சென்றது. சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், மேலும் ஆக்ரோஷமாக இரு அணி வீரர்களும் விளையாடினர். இந்நிலையில், ஆட்டத்தின் 109வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியில் மாற்று வீரராக களமிறங்கிய ஈடர், கோல் அடித்து அசத்தினார்.

 

இதை தொடர்ந்து, பதில் கோல் அடிக்க கடைசி நேரத்தில் முயன்ற பிரான்ஸ் அணி வீரர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

http://www.vikatan.com/news/sports/66009-portugal-win-1-0-with-eder-goa-in-euro-2016-final.art

Link to comment
Share on other sites

ஒரு கோலுக்கு பின்னால் எத்தனை சோக கதை !

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ காயம்  காரணமாக வெளியேறினார். பிரான்ஸ் வீரர் பேயட், ரொனால்டோவின் காலைத்  தாக்க அவரால் தொடர்ந்து  விளையாட  முடியாமல் போனது.

rons.jpg

முகத்தை பொத்திக் கொண்டு ரொனால்டோ களத்தைவிட்டு வெளியேற போர்ச்சுகலே அழத் தொடங்கியது. இனிமேல் எங்கே கோப்பை கிடைக்கப்போகிறது என  லிஸ்பனில் அகன்ற திரையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். 

இதற்கு முன் கடந்த 2004 ஆம் ஆண்டு  நடந்த ஐரோப்பிய கோப்பைத் தொடரில் போர்ச்சுகல் அணியில் டீன்ஏஜ் ரொனால்டோ இடம் பெற்றிருந்தார். போர்ச்சுகலில்தான் இந்த தொடரும்  நடந்தது. சொந்த நாட்டில் நடந்த உற்சாகத்தில் இறுதி ஆட்டம்  வரை முன்னேறிய போர்ச்சுகல்,  கிரீஸ் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு கோப்பையை நழுவவிட்டது.

 உண்மையில் கிரீஸ் அணியும் அதுவரை எந்த கோப்பையையும் வென்றது கிடையாது. அந்த அணிக்கும் அதுதான் முதல் கோப்பை. சொந்த மண்ணிலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை போர்ச்சுகல் அணி தவற விட்டது.

யூரோவில் அதற்கு பிறகு இப்போதுதான் போர்ச்சுகல் அணி  இறுதி ஆட்டம் வரை முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இருந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவும் காயம் காரணமாக வெளியேற, கோப்பை கைநழுவி விட்டது என்றே போர்ச்சுகல் ரசிகர்கள் கருதத் தொடங்கினர்.

ஆனால் பெப் தலைமையிலான தடுப்பாட்டம்  போர்ச்சுகல் அணியை காப்பாற்றியது. இதனால் பிரான்ஸ் அணியின்  ஜிரார்ட், கிரீஸ்மேன் ஆகியோரின் கோல் முயற்சிகள் எளிதாக முறியடிக்கப்பட்டன.

rons1.jpg

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்தது. கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதில் 109வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ஈடர், 25 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து பிரான்ஸ் கோல்கீப்பர் லோரீசின் வலப்புறமாக சரியாக கோல் கம்பத்தின் கார்னர் பகுதிக்குள் சென்று கோலானது. இந்த ஒரு கோல்தான் போர்ச்சுகல் அணியை முதன் முறையாக ஐரோப்பிய கோப்பையை வெல்ல வைத்துள்ளது.  இந்த ஒரு கோலுக்கு பின்னால் எத்தனை சோகம் மறைந்திருக்கிறது தெரியுமா?

கால்பந்து உலகை பொறுத்தவரை, போர்ச்சுகல் சில உன்னத கால்பந்து வீரர்களை உருவாக்கியிருக்கிறது.  எஸ்பையோ, லூயீஸ் ஃபிகோ, ராய் கோஸ்ட்டா, டெக்கோ போன்றவர்கள் ரொனால்டோவுக்கு முன்னதாக போர்ச்சுகலின் நட்சத்திரங்கள்.

ஆனால் உலகக் கோப்பை, ஐரோப்பிய கோப்பைத் தொடர்களில் கோப்பையை வெல்லும் அளவுக்கு போர்ச்சுகல் அணி பலம் வாய்ந்ததாக இருக்காது. அணியில் ஒரு நட்சத்திர வீரர் இருப்பார். அவரை நம்பி அணியும் விளையாடும். இந்த முறையும் கேப்டன் ரொனால்டோதான் அந்த நட்சத்திர வீரர்.

rons3.jpg

இதனால், முக்கியத்  தொடர்களில்  போர்ச்சுகல் அணி தொடர்ந்து  தோற்றுக் கொண்டுதான் இருந்தது. குறிப்பாக பிரான்ஸ் அணியிடம் கடைசியாக 10 ஆட்டங்களில் தொடர்ச்சியாக போர்ச்சுகல் தோல்வி கண்டுள்ளது.

இதில் 1984, 2000 ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை அரையிறுதி ஆட்டங்களும் 2006 ஆம் ஆண்டு உலக் கோப்பை அரையிறுதி ஆட்டமும் கூட அடங்கும். தற்போது ஈடர் அடித்த இந்த கோல் போர்ச்சுகலின் அத்தனை சோகத்தையும் மறக்க செய்துவிட்டது.

 

மைதானத்தைவிட்டு, அழுதபடி வெளியேறிய ரொனால்டோகூட,  இப்போது சிரித்துக் கொண்டிருக்கிறார்!

http://www.vikatan.com/news/sports/66014-cristiano-ronaldo’s-sadness-turn-to-joy.art

Link to comment
Share on other sites

யூரோ கிண்ண செம்பியனானது போர்த்துக்கல் : சொந்த மண்ணில் வீழ்ந்தது பிரான்ஸ் (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-07-11 11:25:28

 

யூரோ கிண்ண  கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்ற போர்த்துக்கல் அணி செம்பியன் பட்டத்தை வெற்றிக்கொண்டது.

2390596_w2.jpg

ஐரோப்பிய  நாடுகள்  மாத்திரம் பங்கேற்ற இந்தத் தொடரில் கிரிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அணி சிறப்பான வெற்றியொன்றை பதிவு செள்துள்ளது.

2390561_w2.jpg

இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 1-0 என வீழ்த்தி செம்பியன் பட்டத்ததை வென்று போர்த்துக்கல் ரசிகர்களுக்கு மாபெறும் விருந்து படைத்துள்ளது போர்த்துக்கல் அணி.

2390529_w2.jpg

நேற்று (10) இடம்பெற்ற இறுதிப்போட்டி  ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

2390550_w2.jpg

கோல் போஸ்டிற்கு அருகில் பந்துகள் பறக்க, கோல் கீப்பர்களின் தடு்ப்பு ஒரு பந்தினைக் கூட கோலினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

2390493_w2.jpg

இவ்வாறு இரு அணிகளும் கோல் அடிக்க முற்பட்ட போதிலும் முதல் பாதி இரு அணிகளும் கோல் எதனையும் பெறாமல் நிறைவு செய்தது.

2390551_w2.jpg

இந்நிலையில் முதல் பாதியில் காயம் காரணமாக அணித்தலைவர் ரொனால்டோ கண்ணீர் சிந்தியபடி மைதானத்தில் இருந்து வெளியேற போர்த்துக்கல் அணி ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாய் தோன்றியது.

2390428_w2.jpg

2390412_w2.jpg

2390422_w2.jpg

1892539-39846620-2560-1440.jpg

அணித்தலைவர் வெளியேறினாலும் அணியின்  வீரர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் அமைந்தது போர்த்துக்கள் அணியின் வீரர்களின் சிறப்பான செயற்பாடுகள்.

2390577_w2.jpg

இந்நிலையில் இரண்டாவது சுற்றும் விறுவிறுப்பாக செல்ல  இரண்டு அணிகளும் கோல் எதனையும் பெறாத நிலையில் நேரம் முடிவடைந்தது.

2390562_w2.jpg

இதன் காரணமா இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இறுதி நேரத்தில் போர்த்துக்கல்  அணியின் சார்பில் மாற்று வீரராக களமிறக்கப்பட்ட ஆன்டனியோ ஈடர் 109 நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இறுதியில் போர்த்துக்கல் அணி 1-0 என செம்பியன் பட்டத்தை வெற்றிக்கொண்டது.

2390607_w2__1_.jpg2390516_w2.jpg2390530_w2.jpg2390496_w2.jpg2390494_w2.jpg2390492_w2.jpg2390491_w2.jpg2390490_w2.jpg2390490_w2.jpg2390476_w2.jpg2390463_w2.jpg2390461_w2.jpg2390457_w2.jpg2390455_w2.jpg2390447_w2.jpg2390431_w2.jpg2390437_w2.jpg2390427_w2.jpg2390420_w2.jpg2390357_w2.jpg2390356_w2.jpg2390651_w2.jpg2390653_w2.jpg2390654_w2.jpg2390655_w2.jpg2390659_w2.jpg

http://www.virakesari.lk/article/8792

Link to comment
Share on other sites

பதிலி வீரர் எடெர் கோல் தந்த கொண்டாட்டம்: போராடிய பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் 'யூரோ' சாம்பியன்

ஆர்.முத்துக்குமார்

Comment (2)   ·   print   ·   T+  
 
 
 
 
 
2016 யூரோ சாம்பியன் போர்ச்சுக்கல் | படம்: கெட்டி இமேஜஸ்
2016 யூரோ சாம்பியன் போர்ச்சுக்கல் | படம்: கெட்டி இமேஜஸ்

நட்சத்திர வீரர், கேப்டன் ரொனால்டோ ஆட்டத்தின் அரைமணி நேரத்துக்குள்ளாகவே காயத்தின் காரணமாக ஸ்ட்ரெச்சரில் கண்ணீருடன் வெளியேறினார். ஆனால், அவரது கண்ணீர்... ஆனந்தக் கண்ணீராகப்போவதை அவர் அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

109-வது நிமிடத்தில் பதிலி வீரர் எடெர் அடித்த எதிர்பாராத கோலே வெற்றிகோலாக மாற, பிரான்ஸை போர்ச்சுக்கல் வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியன் ஆனது.

30 நாட்கள் 50 போட்டிகள் 107 கோல்கள் என்ற நிலையில் யூரோ இறுதிப் போட்டி ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் தொடங்கியது.

அன்று ஜெர்மனிக்கு என்ன நடந்ததோ இன்று பிரான்ஸுக்கு நடந்தது. பந்தை அதிகம் தங்கள் வசம் வைத்திருந்ததும் பிரான்ஸ், கோல் நோக்கி அதிக ஷாட்களை அடித்ததும் பிரான்ஸ், பாஸ்களிலும் சிறந்து விளங்கியது பிரான்ஸ், ஆனாலும் ரொனால்டோ இல்லாத போர்ச்சுக்கல் சாம்பியன்!

இதற்காக எடெர் அடித்த அந்த அபாரமான கோலின் தரத்தை குறைத்து எடை போட முடியாது. அன்று ஜெர்மனி ஆட்டத்தையும் கடந்து சென்று ஆடியது. ஆனாலும் தோல்வி. பிரான்ஸ் அன்று ஜெர்மனி ஆடிய அளவுக்கு ஆடவில்லை என்றாலும், போர்ச்சுக்கலை விட நன்றாகவே ஆடியது. ஆனாலும் தோல்வி! இதுதான் கால்பந்தாட்டத்துக்கே உரிய தனித்தன்மை என்று கூறுகிறோம்.

ஆனாலும் பார்த்ததை எழுதும்போது கூட 'சாக்கர்' என்று எழுதி ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடும் அன்பர்கள் 'நியூட்ரல் ப்ளீஸ் ப்ரோ' என்று ஆலோசனை வழங்குகின்றனர். ஆட்டத்தை வர்ணிக்கும்போது நியூட்ரலாக எழுதுவது 'நியூட்ரல் ஆகாது ப்ரோ' என்று மட்டும் கூறிக்கொண்டு மேலே செல்வோம்.

வலியில் துடித்த ரொனால்டோ

ரொனால்டோ 25 நிமிடங்கள் கூட ஆட முடியவில்லை. பிரான்ஸ் அவரை 'கவனித்துக் கொள்கிறோம்' என்று கூறியிருந்தனர், கூறியபடியே 'கவனித்தனர்'. ஆனால் காயமடைந்தும் சிகிச்சை பெற்று விளையாட முயற்சி செய்தார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் அவரால் தொடர முடியாமல் போனது, கண்ணீருடன் வெளியேறினார்.

ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் முதல் வாய்ப்பு போர்ச்சுக்கலுக்கே கிடைத்தது. 5-வது நிமிடத்தில் செட்ரிக் அடித்த லாங் பாஸை நானி விறுவிறுவென எடுத்துச் சென்று ஓரளவுக்கு அருகிலிருந்து ஷாட்டை அடிக்க பந்து கோல் பாருக்கு மேலே சென்றது.

மறுமுனையில் பிரான்ஸ் ஒரு முயற்சியை மேற்கொண்டது. அந்த அணியின் மவுசா சிசோகோ அடித்த ஷாட்டும் கோல் போஸ்டுக்கு மேலே சென்றது. முன்னதாக ஆண்டாய்ன் கிரீஸ்மேன் மேற்கொண்ட முயற்சியும் கோலுக்கு நன்றாக வெளியே சென்றது.

ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கடும் போராட்டம் ஒன்றில் ரொனால்டோவும், டிமிட்ரி பயேட்டும் மோதிக்கொண்டனர். முழங்கால்கள் மோதிக்கொள்ள ரொனால்டோ வலியால் துடித்தார். சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்தார்.

இதற்கு அடுத்த நிமிடத்தில் பெபே பந்தை நழுவ விட இடது புறத்தில் பயேட் பந்தை பெற்றார். அவர் போர்ச்சுக்கல் தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து ஒரு அருமையான ஷாட்டை அடிக்க, அங்கு கிரீஸ்மேன் அருகிலிருந்து தலையால் முட்டினார். பந்து கோலா என்று அனைவரும் ஆவலாகப் பார்க்க, பந்து கிராச் பாருக்கு சற்று கீழே கோலுக்குள் செல்லும்போது போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ரிசியோ எம்பி தள்ளிவிட்டார், மிக அருமையான 'சேவ்' அது. இதனால் விளைந்த கார்னர் ஷாட்டை ஜிரோட் தலையால் முட்ட அதனை சுலபமாகப் பிடித்தார் பேட்ரீசியோ.

17-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் வலியால் துடிக்க, சிகிச்சை அளிக்கப்பட்டு 3 நிமிடங்களில் மீண்டும் மைதானம் திரும்பினார். இதன் பிறகு பிரான்ஸ் வீரர் சிஸோகோ செய்த கோல் முயற்சி வீணானது, அட்ரியன் சில்வா அடித்த மற்றொரு ஷாட்டும் வலது புறம் கோலை தவற விட்டது.

இந்நிலையில்தான் 25-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் மைதானத்தில் வலியினால் விழுந்தார். இம்முறை அவரால் மீள முடியவில்லை, மீண்டும் கண்ணீர், ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். இவருக்குப் பதில் ரிக்கார்டோ குரேஸ்மா களமிறங்கினார். ரொனால்டோவைக் கொண்டு செல்லும் போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.

ஓர் அரிதான தாக்குதல்...

ரொனால்டோ போனவுடன் பிரான்ஸின் ஆட்டத்திலும் சற்றே தொய்வு ஏற்பட்டது. போர்ச்சுகல் ஆட்டத்திலும் தொய்வு ஏற்பட்டது, ஆனால் பிரான்ஸ் வீரர் சிஸாகோ மீண்டும் ஒருமுறை கோல் கீப்பர் பேட்ரீசியோவை சோதித்தார். அடித்த ஷாட்டை பேட்ரீசியோவும் சம திறமையுடன் முறியடித்தார்.

37-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் ஓர் அரிதான தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் கடைசியில் ரஃபேல் குரைரோ அடித்த ஷாட் வைடாகச் சென்றது. மற்றொரு கார்னர் ஷாட்டை ஃபாண்ட் தலையால் அடித்தது கோலுக்கு மேலே சென்றது. முதல் பாதி இதன் பிறகு பெரிய அளவில் சம்பவங்கள் இல்லாமல் சென்றது.

இரண்டாவது பாதியில் 8-வது நிமிடத்தில் போக்பா தூரத்திலிருந்து ஓர் அடி அடித்துப் பார்த்தார். பந்து மேலே சென்றது. பிறகு செட்ரிக், கிரீஸ்மேன் இடையே கடும் போட்டியில் கிரீஸ்மேன் அடித்த ஷாட்டில் வலுவில்லை. பேட்ரீசியோ சுலபமாக பிடித்தார். பிரான்ஸ் பயிற்சியாளர் பயெட்டை வெளியே அழைத்து கொண்டு கிங்ஸ்லி கோமனை களமிறக்கினார்.

ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியது. இடது புறத்திலிருந்து கோமான் ஒரு கிராஸ் செய்ய அங்கு 6 அடி தூரத்தில் கோல் அருகே மார்க் செய்யப்படாமல் இருந்தா கிரீஸ்மேன் ஆனால் பந்தை தலையால் முட்டும்போது வெளியே சென்றது. இது உண்மையான ஒரு கோல் வாய்ப்பு. 90 நிமிட ஆட்டம் முடிய 12 நிமிடங்களே இருந்த போது மாற்றங்கள் செய்யப்பட்டன, ஆட்டம் சரியாக அமையாத ஜிரோட் திருப்பி அழைக்கப்பட்டு கிக்நாக் களமிறக்கப்பட்டார்.

போர்ச்சுக்கலுக்கு இதனையடுத்து ஒரு கோல் வாய்ப்பு கிட்டியது. நானியின் கிராஸ் வலது புறத்திலிருந்து கோல் நோக்கிச் சென்றது. ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அதனை தட்டி விட்டார். ஆனால் பந்தை குரேஸ்மா மீண்டும் அடிக்க லோரிஸ் கைக்குச் சென்றது. பிறகு 25 அடியிலிருந்து நானி செய்த முயற்சியும் வீணானது. உடனேயே பிரான்ஸின் இன்றைய சிறந்த ஆட்டக்காரர் சிசோகோ நடுக்களத்திலிருந்து அருமையாக பந்தை வேகமாக எடுத்துச் சென்று பிரமாதமான ஷாட் ஒன்றை கோல் நோக்கி அடிக்க அங்கு பேட்ரீசியோ வலது புறம் பாய்ந்து தள்ளிவிட்டார்.

ஸ்டாப்பேஜ் நேரத்தில் பிரான்ஸ் வீரர் கிக்னாக் கோல் அடித்திருப்பார். பெபேவுக்கு போக்குக் காட்டி 6 அடியிலிருந்து அடித்த ஷாட் உண்மையில் கோல் சென்றிருக்க வேண்டியதுதான், ஆனால் போர்ச்சுகலின் அதிர்ஷ்டம் அது போஸ்டில் பட்டது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

உற்சாகப்படுத்திய ரொனால்டோ

கூடுதல் நேரத்தில் முதல் ஷாட் ரொனால்டோ பதிலி வீரர் குரேஸ்மவின் முயற்சியாக இருந்தது. வலது புறத்திலிருந்து ஒரு அருமையான ஷாட்டை ஆட பந்து பிரான்ஸ் கோல் அருகே 6 அடி தூரத்திலிருந்த எடெர் நோக்கி வர அவர் எழும்பி தலையால் முட்டியது லோரிஸைத் தாண்டவில்லை.

கூடுதல் நேர ஆட்டத்தின் போது ரொனால்டோ விங்கிலிருந்து வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தா, அவ்வப்போது 'கட்டிப்பிடி' வைத்தியமும் மேற்கொண்டார்.

போர்ச்சுக்கல் அணிக்கு பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து சென்று கோல் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாதது போல் தெரிந்தது, பிரான்சும் மெல்ல மங்கிக் கொண்டிருந்த்து.

ஓர் அரிய கோல்... சாம்பியன்!

இந்நிலையில்தான் பதிலி வீரர் எடெர் ஓர் அரிய கோலை அடிக்க, அது வெற்றி கோலாக மாறியது. ஆட்டத்தின் 109-வது நிமிடத்தில் இடது புறத்தில் எடெரிடம் பந்து வந்தது, இவரை லாரன்ஸ் கோசியெல்னி மார்க் செய்திருந்தார். ஆனால் அந்தத் தடையைக் கடந்து இன்ஃபீல்டிற்குள் நுழைந்த எடெர் 25 அடியிலிருந்து மிக அருமையான, சக்தி வாய்ந்த ஓர் உதை உதைக்க பந்து பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸுக்கு வலது புறம் கோலாக மாறியது.

ஸ்வன்சீ சிட்டி அணிக்காக கடந்த சீசனில் 15 ஆட்டங்கள் ஆடிய எடெர் ஒரு கோலை கூட அடிக்க முடியாத நிலையில் இன்று போர்ச்சுகலின் ஹீரோவானார். ஆனால் எடெர் பதிலி வீரராகக் களமிறங்கியது முதல் உற்சாகமாகவே ஆடினார், சில பல அச்சுறுத்தல் நகர்வுகளையும் அவர் மேற்கொண்டார். ஆனால் அவர் கோல் அடிக்கும் கணமும் எதிர்பாராத ஒன்று, அவர் கோல் அடிப்பார் என்பதும் எதிர்பாராத ஒன்று. பிரான்ஸ் வீரர் சிசோகோ ஆடிய ஆட்டத்திற்கு பிரான்ஸ் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நன்றாக ஆடும் அணி வெற்றி பெறும் என்பது கால்பந்தை பொறுத்தவரை எப்போதும் உண்மையாகி விடாது.

உற்சாகக் கடல்

லாங் விசில் ஊதப்பட்டவுடன் கேப்டன் ரொனால்டோ உற்சாகக் கடலில் மிதந்தார். ஒவ்வொரு வீரரையும் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். போர்ச்சுகல் கால்பந்தில் ஒரு பொன்னான கணமாகும் இது.

பிரான்ஸுக்கு எதிராக 10 போட்டிகள் தோல்வியடைந்ததை போர்ச்சுகல் தற்போது முடிவுக்குக் கொண்டுவந்தது.

2004-ம் ஆண்டு யூரோ கோப்பையை நடத்திய போர்ச்சுகல் அணி கிரீஸிடம் 0-1 என்று தோல்வி தழுவியது, அதே வலியை இன்று பிரான்ஸுக்கு அளித்தது போர்ச்சுகல். அப்போது கிரீஸ் வென்ற ஆட்டத்தில் 19 வயது ரொனால்டோ மைதானத்தில் கண்ணீர் சிந்தினார். இன்று ஸ்ட்ரெச்சரில் எடுத்து செல்லும் போது அழுது கொண்டேதான் சென்றார் ரொனால்டோ, ஆனால் கூடுதல் நேரத்தில் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியத்துடன், சில டிப்ஸ்களையும் அளித்து கடைசியில் முக்கியமான தொடர் ஒன்றில் முதல் முறையாக வெற்றி பெறும் ஆனந்தக் கண்ணீருடன் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தார்.

http://tamil.thehindu.com/sports/பதிலி-வீரர்-எடெர்-கோல்-தந்த-கொண்டாட்டம்-போராடிய-பிரான்ஸ்-அணியை-வீழ்த்தி-போர்ச்சுக்கல்-யூரோ-சாம்பியன்/article8834339.ece?homepage=true

Link to comment
Share on other sites

கவலையையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தேன்: ரொனால்டோ
 
11-07-2016 11:39 AM
Comments - 0       Views - 194

article_1468235435-LEAD-Near-1dojodnjfms2004ஆம் ஆண்டு, அப்போது பதின்ம வயதானவராக இருக்கும் போது, கிரேக்க அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போர்த்துக்கல் அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த இறுதிப் போட்டிக்கு முன்பு கருத்துத் தெரிவிக்கும் போது, போட்டியின் முடிவில் மகிழ்ச்சியால் அழ விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

அவரது விருப்பம், நிறைவேறியிருந்தது, ஆனால் வேறு விதமாக.
தனது நாட்டுக்கான முதலாவது சர்வதேசப் பட்டத்தை வென்று கொடுப்பதற்குத் தயாராகக் நட்சத்திர வீரராகவும் அணித்தலைவராகவும் களமிறங்கிய ரொனால்டோ, 24ஆவது நிமிடத்தில் காயம் காரணமாக வெளியேற வேண்டியேற்பட்டது.

அணித்தலைவருக்கான கைப்பட்டியைக் கழற்றிய ரொனால்டோ, கண்ணீருடன் தூக்குப்படுக்கையில் மைதானத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார். போட்டியில் பங்குபற்றி, நேரடியான பங்களிப்பை வழங்க முடியாத நிலையில், மைதானத்துக்கு வெளியே இருந்து, ஊக்குவிப்பு வழங்க வேண்டியேற்பட்டது.

90ஆவது நிமிடத்தில், மேலதிக நேரத்துக்கு முன்னரான இடைவெளியில், களைப்படைந்த தனது சக வீரர்களிடம் சென்று, அவர்களை ஊக்கப்படுத்திய ரொனால்டோ, போட்டியில் கோல் பெறப்பட்டு, இறுதி விசில் அடிக்கப்பட்டதும், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த அவரது கால்கள், அவரது மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கவில்லை. தனது அணியின் வெற்றிக் கிண்ணத்தை, அவரே தூக்கியிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ரொனால்டோ, "கவலையையும் மகிழ்ச்சியையும் நான் இன்று உணர்ந்தேன். எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் இது ஒன்று என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். நான் அழுதேன்" என்றார்.

எதிர்பாராத விதமாக, மாற்று வீரரான ஈடரே, போர்த்துக்கல்லின் நாயகனாக மாறியிருந்த நிலையில், அதை எதிர்பார்த்திருந்ததாகவும் ரொனால்டோ தெரிவித்தார். "மேலதிக நேரத்தில் போட்டியை முடிக்கக்கூடியவர் அவரே என நான் உணர்ந்தேன். நான் மந்திரவாதியோ அல்லது எதிர்காலத்தைக் கணிக்கக்கூடியவனோ அல்லன், ஆனால் எனது உணர்வுகளை நான் எப்போதும் பின்பற்றுபவன்" எனத் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/176761/கவல-ய-ய-ம-மக-ழ-ச-ச-ய-ய-ம-உணர-ந-த-ன-ர-ன-ல-ட-#sthash.RadQJy56.dpuf
Link to comment
Share on other sites

போர்ச்சுகல் சாம்பியன்: பாரீசில் கலவரம்!

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனதையடுத்து, பிரான்சில்  கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக  40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

france.jpg

 

நேற்றிரவு ஸ்டேட் டி பிரான்சில் நடந்த யூரோ இறுதியாட்டத்தில் , போர்ச்சுகல் அணி ஒரு கோல் அடித்து  பிரான்சை வென்று முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது. பாரீஸ் நகரில், ஈஃபிள் டவரில் உள்ள  பகுதியில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள், அகன்றத் திரையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். பிரான்ஸ் தோற்றதையடுத்து அங்கிருந்தவர்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

டயர்களுக்கு  தீ வைத்தனர்.  போர்ச்சுகல் ரசிகர்கள் மீது பாட்டில்களை எறிந்து தாக்கினர். போர்ச்சுகல் தேசியக் கொடியையும் எரித்தனர். கார்களுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக பாரீசில் 31 பேரும் லியோனில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/sports/66036-40-arrested-in-paris-over-euro-2016-violence.art

Link to comment
Share on other sites

போர்த்துக்கல் விளையாடிய விளையாட்டைப் பார்த்தபோது அவர்கள் 12 பேருடன் விளையாடி வந்தது தெரிய வந்தது. :unsure: அந்த 12 ஆவது நபரின் பெயர் அதிர்ஷ்டமாம்.. :D:

அதுபோக, ரொனால்டோ அணித்தலைவர் பட்டையை நானியிடம் குடுத்துவிட்டு கடைசியில் கோப்பையை மட்டும் முதல் ஆளாக வந்து எப்படி வாங்கினார்? :unsure:

Link to comment
Share on other sites

நிறைவுக்கு வந்தது 2016 யூரோ கிண்ணம்.ஓர் முழுமையான அலசல். 

 

 

 

fraaaa

நிறைவுக்கு வந்தது 2016 யூரோ கிண்ணம்.ஓர் முழுமையான அலசல்.

யூரோ கிண்ண தொடரின் 15 ஆவது தொடர் நேற்றைய இறுதி போட்டியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இதில் போர்த்துக்கல் வெற்றி பெற்று முதல் முறையாக ஐரோப்பாவின் சம்பியன்களாக முடி சூடியுள்ளது.

FB_IMG_1468188294944

 

1960 ஆம் ஆண்டு தொடங்கப்படட யூரோ கிண்ணம்  ஐரோப்பிய அணிகளுக்கிடையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 15 ஆவது யூரோ கிண்ண தொடர் இந்த ஆண்டு ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை பிரான்சில் நடைபெற்றது.

பிரான்சில் நடைபெறும் 3 ஆவது யூரோ கிண்ண தொடராக அமைந்தது. 3 ஆவது முறை யூரோ தொடரை நடத்தும் முதல் நாடாக பிரான்ஸ் திகழ்கிறது.

இம்முறை தொடரில் 24 அணிகள் பங்குபெற்றன. யூரோ கிண்ண தொடரில் 24 அணிகள் பங்குபற்றுவது இதுவே முதல் முறையாகும். 1960 4 அணிகளுடன் ஆரம்பித்த தொடர் 1980 ஆம் ஆண்டில் 8 அணிகளாக விருத்தியடைந்து 1996 ஆம் ஆண்டு 16 அணிகளாக உருவெடுத்து இம்முறை 24 அணிகளாக மாற்றம் பெற்றுள்ளது. தொடர்ந்தும் யூரோ தொடரில் 24 அணிகளே பங்குபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

euro 1

இம்முறை பங்குபெற்ற 24 அணிகளில் 5 அணிகள் யூரோ கிண்ண போட்டிகளில் முதல் முறையாக பங்குபெற்றன. யூரோ கிண்ண தொடரில் 5 அணிகள் அறிமுகம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அல்பானிய, ஐஸ்லாந்து, வட அயர்லாந்து, ஸ்லோவாகிய, வேல்ஸ் ஆகிய அணிகள் இத்தொடரில் அறிமுகம் பெற்றன. இவற்றில் அல்பானிய தவிர்ந்த மற்றைய அணிகள் குழு நிலைப் போட்டிகளில் இருந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. அதிலும் வேல்ஸ் அரை இறுதி வரை முன்னேறி அசத்தியிருந்தது.

euro 16

இம்முறை 24 அணிகள் பங்கு பற்றி இருந்தாலும் முன்னாள் யூரோ சம்பியன்களான நெதர்லாந்து, டென்மார்க், கிரீஸ் போன்ற அணிகள் இம்முறை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக சில போட்டியின் முடிவுகள் ரசிகர்களை ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளன.

குழு நிலை போட்டிகளில் அறிமுக அணிகள் மற்றைய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்தன. குறிப்பாக ஐஸ்லாந்து ,போர்த்துக்கல் மற்றும் ஹங்கேரி அணிகளுக்கு எதிரான போட்டிகளை சமநிலையாக்கி ஆஸ்திரியா அணிக்கெதிரான போட்டியில் கூடுதல் நேரத்தில் கோல் அடித்து வெற்றிபெற்று அசத்தியது. வட அயர்லாந்து உக்ரைனுடனான போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. வேல்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ரஷ்யாவை  வீழ்த்தியிருந்தன.

அல்பானிய ரோமானிய அணிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. கத்துக்குட்டி அணிகள் அசத்தல் வெற்றிகளை பெற்ற வேளையில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்த சில அணிகள் இத்தொடரில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. குறிப்பாக முன்னாள் சாம்பியன் ரஷ்யா ஒரு போட்டியை மாத்திரம் சமன்செய்து மற்றைய இரு போட்டிகளிலும் தோற்று தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்வீடன் அணி ஒரே  ஒரு போட்டியில் மாத்திரம் சமநிலை பெற்று வெற்றி இல்லாமல் விடைபெற்றது. இம்முறை சாம்பியனான போர்த்துக்கல்லும் குழு நிலைப்போட்டிகளில் ரசிகர்களை ஏமாற்றியிருந்தது.

FB_IMG_1468188288171

குழுநிலை போட்டிகளில் தான் விளையாடிய 3 போட்டிகளையும் சமன் செய்து ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் அடுத்த சுற்றுக்கு நுழைந்திருந்தது.

நொக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தன. Round of 16 இல் இத்தாலி, ஸ்பெய்ன் அணிகள் மோதின. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை வெளியேற்றியது இத்தாலி. அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் ஏமாற்றியது நடப்பு சாம்பியன் ஸ்பெய்ன்.

இன்னொரு போட்டியில் இங்கிலாந்து ஐஸ்லாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புக்களை சிதைத்தது ஐஸ்லாந்து.

தகுதி சுற்றுக்களில் சிறப்பாக விளையாடி கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணியான இங்கிலாந்து, ஐஸ்லாந்திடம் தோற்று வெளியேறியமை இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருந்தது. காலிறுதி போட்டிகளில் இத்தாலி ,ஜெர்மனி அணிகள் மோதிய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. காற்பந்து ஜாம்பவான்களான இரு அணிகளும் மோதிய போட்டியில் பெனல்ட்டி முறையில் வெற்றி பெற்றிருந்தது உலக சம்பியன்களான ஜெர்மனி.

அரை இறுதி போட்டியில் ஜெர்மனி, பிரான்ஸை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஜெர்மனி சொதப்பலாக விளையாடி பிரான்சிடம் தோற்று வெளியேறியிருந்தது.

காலிறுதி போட்டியில் ஜெர்மனி இத்தாலி அணிகள் மோதிய ஆட்டத்தில் ஆட்டம் மேலதிக நேரத்திலும் சமநிலையில் முடிவடைய பெனல்ட்டி கிக் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் 120 ஆவது நிமிடத்தில் இத்தாலி சாசா வினை மாற்று வீரராக களமிறக்கியது. பெனல்ட்டி வாய்ப்பில் பங்கு பெறுவதற்காக மாத்திரம் களமிறக்கப்பட்ட சாசா தனக்கு கிடைத்த பெனல்ட்டி வாய்ப்பை கோல் கம்பத்தை விட்டு வெளியில் அடித்து இத்தாலி இன் நம்பிக்கையை வீணடித்தார்.

இப்போட்டியில் இத்தாலி தோற்று தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.

இம்முறை முதல் முறையாக யூரோ தொடரில் இரு சகோதரர்கள் வெவேறு அணிகளுக்காக களமிறங்கியிருந்தன. கிரானிட் ஸ்க்க சுவிற்சர்லாந்து அணிக்காவும் அவரது மூத்த சகோதரர் டலன்ட் ஸ்க்க அல்பானிய அணிக்காகவும் விளையாடினர்.

இத்தொடரில் தனிப்பட்ட முறையில் சில வீரர்கள் சாதனைகளை படைத்திருந்தனர். இத்தொடரில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியுள்ளார் பிரான்ஸின் கிரெய்ஸ்மன்.FB_IMG_1467926478667

1984 பிளாட்டினி 9 கோல்கள் அடித்ததே ஒரு தொடரில் தனிப்பட்ட வீரரால் பெறப்பட்ட அதிக கோல்களாகும். இந்த பட்டியலில் கிரெய்ஸ்மன் தற்போது 6 கோல் களுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார். கிரெய்ஸ்மன் அடித்த 6 கோல்களில் 5 கோல்கள் நொக் அவுட் சுற்றுக்களில் பெறப்பட்டன. இதன் மூலம் நொக் அவுட் சுற்றுக்களில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரெய்ஸ்மன்.

FB_IMG_1468189614468போர்த்துக்கல்லின் நட்சத்திர வீரர் ரொனால்டோ தொடரில் 3 கோல்கள் அடித்து யூரோ தொடரின் அதிக கோல் அடித்த பிளாட்டினியின்(9 கோல்கள்) சாதனையை சமப்படுத்தினார். மேலும் ஒரு கோல் அடித்து பிளாட்டினியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி போட்டியில் 25 ஆவது நிமிடத்திலேயே காயம் காரணமாக வெளியேறி சாதனையை தவறவிட்டார் ரொனால்டோ.

ஆனாலும் வேல்ஸ் அணிக்கெதிரான அரை இறுதி போட்டியில் கோல் அடித்து 1964 ஆம் ஆண்டிற்கு பின் 2 வெவ்வேறு அரை இறுதி போட்டிகளில் கோல் அடித்த வீர என்ற பெருமையைப் பெற்றார் ரொனால்டோ.

இம்முறை தொடரில் 108 கோல்கள் பதிவு செய்யாப்பட்டுள்ள்ளன. அத்துடன் 205 மஞ்சள் அட்டைகளும் 3 சிவப்பு அட்டைகளும் பதிவாகியுள்ளன. இவ் எண்ணிக்கை மற்றைய தொடர்களிலும் பார்க்க அதிகம் என்றாலும் மற்றைய தொடர்களிலும் பார்க்க இத்தொடரில் அதிகமான போட்டிகள்(51) நடாத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் இறுதி போட்டி போர்த்துக்கல் பிரான்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் போர்த்துக்கல் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. போர்த்துக்கல் இறுதி போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் பிரான்ஸ் யூரோ இறுதி போட்டியில் தோற்பது  இது முதல்  முறையாகும்.

இத்தொடரில் போர்த்துக்கல் 4 போட்டிகளை சமன் செய்திருந்தது. அதிக போட்டிகளை சமன் செய்து  சாம்பியனான அணி மற்றும் அதிக போட்டிகளில் வெற்றியின்றி சாம்பியனான அணி என்ற பெருமையைப் பெற்றது போர்த்துக்கல். பிரான்ஸ் அணி தொடரில் 5 வெற்றிகளை பெற்று சாம்பியன் இல்லாமல் அதிக வெற்றி பெற்ற அணியாக திகழ்கிறது.

யூரோ 2016 இந்த பின் பல வீரர்கள் சர்வதேச போட்டிகளில் தமது ஓய்வை அறிவித்துள்ளனர்.இவர்களுள் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் இனியெஸ்டா காசிலஸ் யூரோ கிண்ணத்தில் இருந்து ஸ்பெய்ன் வெளியேறியதும் தமது ஓய்வை அறிவித்துள்ளனர்.

ரசிகர்களின் பேராதரவைப்பெற்ற யூரோ தொடர் இம்முறையும் பல சுவாரஷ்யங்களுடன் நடந்து முடிந்துள்ளது. அடுத்த யூரோ கிண்ண தொடர் 2020 ஆம் ஆண்டில் யூரோ தொடரின் 60 ஆண்டு நிறைவை ஒட்டி  13 நாடுகளின் 13 நகர்களில் இடம்பெறவுள்ளது.

#வைகரன் ஆனந்த்மூர்த்தி

பொறியியல் பீடம்.

மொரட்டுவை பல்கலைக்கழகம்.

france FB_IMG_1468221796564 FB_IMG_1468221800240FB_IMG_1468221803625 FB_IMG_1468221811141

http://vilaiyattu.com/நிறைவுக்கு-வந்தது-2016-யூரோ-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/07/2016 at 5:34 PM, இசைக்கலைஞன் said:

போர்த்துக்கல் விளையாடிய விளையாட்டைப் பார்த்தபோது அவர்கள் 12 பேருடன் விளையாடி வந்தது தெரிய வந்தது. :unsure: அந்த 12 ஆவது நபரின் பெயர் அதிர்ஷ்டமாம்.. :D:

அதுபோக, ரொனால்டோ அணித்தலைவர் பட்டையை நானியிடம் குடுத்துவிட்டு கடைசியில் கோப்பையை மட்டும் முதல் ஆளாக வந்து எப்படி வாங்கினார்? :unsure:

எனக்கு தனிப்பட்ட முறையில் போத்துக்கலை பிடிக்காது.காரனம் அந்த நாட்டினர் இங்கு நடந்து கொள்ளும் விதத்தால்.குறிப்பாக வேலை விடையத்தில் எம்மவருக்கும் அவர்களுக்கும்  எக்கச்சக்க பிடுங்குப்பாடு.பொது ரீதியாகப்பார்த்தால் பணக்கார நாடுகள் அவர்கள்( போத்கீயர்)கூலி வேலைக்குததான் லாய்க்கு விளையாடி கப் எடுக்க அல்ல என்று பகிரங்கமாகவே கதைத்தார்கள்.இந்தக் கேலி என்னை மாதிரி கூலி வேலை செய்யும் எம்மவருக்கும் பொருந்தும்.அது தான் எனக்கு இந்த வெற்றி ஒரு ஆறுதல்.மற்றும் படி ரொனால்டோ கப் வாங்கியது அவமாணங்களால் பாதிக்கப்பட்ட நாடு அந்த வீரனுக்கு வழஙகிய நன்றி அல்லது கொளரவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.