Jump to content

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்


Recommended Posts

யூரோ கோப்பை கால்பந்து காலிறுதிக்கு முன்னேறியது போலந்து

 
அந்தரத்தில் பறந்து கோல் அடித்த சுவிஸ் வீரர் ஷெர்தான் ஷாக்கிரி. | படம்: ராய்ட்டர்ஸ்.
அந்தரத்தில் பறந்து கோல் அடித்த சுவிஸ் வீரர் ஷெர்தான் ஷாக்கிரி. | படம்: ராய்ட்டர்ஸ்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று நேற்று தொடங்கியது. செயின்ட் எட்டியனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - போலந்து அணிகள் மோதின. சுவிட்சர்லாந்து அணி லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் வெற்றியும், இரு ஆட்டத்தை டிராவிலும் முடித்திருந்தது. அதேவேளையில் போலந்து இரு ஆட்டத்தில் வெற்றியும், உலக சாம்பியனுக்கு எதிராக டிராவும் கண்டிருந்தது.

ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் போலந்து முதல் கோலை அடித்தது. அந்த அணியின் குரோஷிகி கொடுத்த பாஸை பெற்று பிலாஸ்செகோவ்ஸி கோல் அடித்தார். சர்வதேச போட்டிகளில் பிலாஸ்செகோவ்ஸி அடித்த 18-வது கோல் இதுவாகும். முதல் பாதியில் போலந்து 1-0 என முன்னிலைப்பெற்றது. இரண் டாவது பாதியின் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்து அணியின் கோல் அடிக்கும் சில முயற்சிகளுக்கு போலந்து வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.

82-வது நிமிடத்தில் சுவிட்சர் லாந்தின் ஹர்டான் ஷாகிரி, அந்தரத்தில் பறந்த படி பிரம்மிக் கும் வகையில் கோல் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். சுவிட்சர்லாந்து அணி விளையாடிய கடைசி 11 ஆட்டங்களில் ஷாகிரி அடித்த முதல் இதுவாக அமைந்தது.

இந்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை பெற்றது. அதன் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல் எதும் அடிக்கப் படவில்லை. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப் பட்டது. இதிலும் கோல்கள் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டிஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் போலந்து வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

போலந்து தரப்பில் லீவான்டோவ்ஸ்கி, மிலிக், காமில், பிலாஸ்செகோவ்ஸி, கிரைசோவியக் கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து தரப்பில் ஸ்டீபன், ஹெர்டான் ஷாகிரி, பேபியன் ஷார், ரிக்கார்டோ ரோட்ரிக்ஸ் கோல் அடித்தனர். கிரையன்ட் ஹகா கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதால் அந்த அணி தோல்வியை தழுவ நேரிட்டது.

இன்றைய ஆட்டங்கள்

பிரான்ஸ் - அயர்லாந்து

நேரம்: மாலை 6.30

ஜெர்மனி- சுலோவேக்கியா

நேரம்: இரவு 9.30

ஹங்கேரி - பெல்ஜியம்

நேரம்: நள்ளிரவு 12.30

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-காலிறுதிக்கு-முன்னேறியது-போலந்து/article8775546.ece
Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

யூரோ 2016 : காலிறுதியில் போர்ச்சுகல், வேல்ஸ், போலந்து

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு போர்ச்சுகல், வேல்ஸ், போலந்து அணிகள் முன்னேறியுள்ளன.

north.jpg

செயின்ட் எட்டினியில் நடந்த போலந்து - ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் போலந்து அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் போலந்து காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன் முறை.

லென்னஸ் நகரில் நடந்த மற்றொரு நாக்அவுட் ஆட்டத்தில் போர்ச்சுல் அணி குரோஷிய அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேர ஆட்டமும் கோல் விழாமல் சமனில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதில் 117வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் இளம் வீரர் ரிச்சர்டோ குரோஷ்மா கோல் அடித்து அணியை காலிறுதிக்கு கொண்டு சென்றார்.

வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து அணிகளுக்கிடையேயான நாக்அவுட் ஆட்டத்தில்  வடக்கு அயர்லாந்து வீரர் மெக்குலே ஒரு  சேம்சைடு கோல் அடித்தார். இந்த ஆட்டத்தில் வேறு கோல்கள் அடிக்கப்படவில்லை. இதையடுத்து வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
 

http://www.vikatan.com/news/sports/65555-euro-football-results.art

Link to comment
Share on other sites

யூரோ 2016: கூடுதல் நேர கோலால் குரேஷியாவை வீழ்த்தி காலிறுதியில் போர்ச்சுக்கல்

 
போர்ச்சுக்கல் வீரர் ரிகார்டோ குரேஸ்மா கோலை கொண்டாடும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.
போர்ச்சுக்கல் வீரர் ரிகார்டோ குரேஸ்மா கோலை கொண்டாடும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.

போர்ச்சுக்கல் வீரர் ரிகார்டோ குரேஸ்மா கூடுதல் நேரத்தில் அடித்த ஒரே கோலால் குரேஷியாவை 1-0 என்று வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி யூரோ 2016 கால்பந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

காலிறுதியில் போலந்து அணியை சந்திக்கிறது போர்ச்சுக்கல்.

90 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் சவாலான தாக்குதல் ஆட்டத்தை ஆடி கடும் போட்டியுடன் நடந்ததால் கோல் வரவில்லை, இதனையடுத்து இன்னொரு பெனால்டி ஷூட் அவுட்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெஞ்சிலிருந்த ரிகார்டோ குரேஸ்மா 87-வது நிமிடத்தில் களம் புகுந்தார். ஆட்டத்தின் 117-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குரேஷிய பகுதியில் அருகிலிருந்து அடித்த கோல் முயற்சியை குரேஷிய கோல் கீப்பர் டேனியல் சுபாசிக் தடுக்க திரும்பி வந்த பந்தை சரியான நிலையிலிருந்த குரேஸ்மா கோலாக மாற்றினார். அப்போது வலை காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே வெற்றிக்கான கோலாக அமைந்தது.

போர்ச்சுக்கல் அணியின் 18 வயது இளம் வீரர் ரெனாட்டோ சான்செஸ், 50-வது நிமிடத்தில் இறங்கி தீப்பொறிகளை கிளப்பினார். சுமார் 30க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பாஸ்கள், 9 தாக்குதல் ஆட்டங்கள், மூன்று முறை குரேஷிய வீரர்களுக்குப் போக்குக் காட்டி பந்தை வெட்டி எடுத்துச் சென்றது என்று ரெனாட்டோ சான்சஸ் போர்ச்சுக்கல் அணியின் எதிர்காலம் என்பதை நிரூபித்தார், இவரது ஆட்டத்திற்காகவே ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சவாலான தாக்குதல், வேக ஆட்டத்தில் குரேஷியா 15 முறை கோலை நோக்கி அடிக்க முயன்ற ஷாட்கள் எதுவும் இலக்கு நோக்கி பயணிக்கவில்லை. இருஅணிகளுக்குமே குரேஸ்மா கடைசியில் அடித்த ஷாட்தான் இலக்கை சரியாகப் பிடித்தது. 117-வது நிமிட குரேஸ்மா கோலுக்கு முன்னதாக 114-வது நிமிடத்தில் குரேஷிய வீரர் டொமாகோ வீடா என்பவர் தலையால் மேற்கொண்ட முயற்சி கோலுக்கு மேலே சென்றது.

முன்னதாக 25-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு ஃப்ரீ கிக்கை எடுக்க குவெரோ அதனை அருமையாக மீண்டும் எடுத்து பீப்பிடம் அடிக்க 6 அடியிலிருந்து அவரது தலையால் கோல் அடிக்கும் முயற்சி கோலாக மாறவில்லை.

கடைசி 10 சர்வதேச போட்டிகளில் தோல்வியடையாத குரேஷியாவின் தொடர் சாதனை முடிவுக்கு வந்தது. இந்த 10 சர்வதேச போட்டிகளில் 8 வெற்றி 2 மட்டுமே டிரா என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று இவான் பெர்சிக் அடித்த கடைசி நிமிட கோலினால் ஸ்பெயினை 2-1 என்று வீழ்த்தி குரூப் டி-யில் முதலிடம் பிடித்த குரேசியா கடைசியில் அவ்வளவு அச்சுறுத்தல் இல்லாத போர்ச்சுக்கல்லிடம் தோல்வி தழுவி வெளியேறியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-கூடுதல்-நேர-கோலால்-குரேஷியாவை-வீழ்த்தி-காலிறுதியில்-போர்ச்சுக்கல்/article8775744.ece?homepage=true

Link to comment
Share on other sites

  அடுத்த போட்டி

ஜெர்மனி- சுலோவேக்கியா 

3 வாரங்களுக்கு முதல் நடந்த சிநேகபூர்வ போட்டியில்  ஸ்லோவாகியா ஜேர்மன் அணியை 3 -1 ரீதியில் வெற்றி பெற்றது..

 அந்த போட்டியில் ஜெர்மனி அணியில் பல முன்னணி வீரர்கள் விளையாடவில்லை.

Link to comment
Share on other sites

காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

பாரீஸ்: யூரோ கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது. நாக்வுட் சுற்றில் அயர்லாந்தை எதிர்கொண்ட பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1551387

Link to comment
Share on other sites

யூரோ 2016 : கிரீஸ்மேன் அபாரம் காலிறுதியில் பிரான்ஸ்!

யூரோ  கால்பந்து  தொடரில் நேற்று நடந்த நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

footba.jpg

லியோன் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் 2வது நிமிடத்திலேயே கோல் அடித்து, அயர்லாந்து மிரட்டியது. இதற்கு பதிலடி கொடுக்க பிரான்ஸ் போராடியது. முதல் பாதியில் பலன் கிடைக்கவில்லை. பிற்பாதியில் 58வது நிமித்தில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மேன் புல்லட் வேகத்தில் முட்டிய பந்து அயர்லாந்து கோலுக்குள் புகுந்து கொண்டது. தொடர்ந்து 61வது நிமித்தில் கிரீஸ்மேனே மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு நாக்அவுட் ஆட்டத்தில் ஜெர்மனி ஸ்லோவேகியா அணியை 3 கோல் அடித்து வீழ்த்தியது. ஜெரோம் போடங், மரியோ கோமஸ், டிராக்ஸ்லர் ஆகியோர் ஜெர்மனிக்கான கோல்களை அடித்தனர். டூலாஸ் நகரில் நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி ஹங்கேரியை 4 கோல்கள் அடித்து தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

http://www.vikatan.com/news/sports/65569-griezmann-nets-decisive-double.art

Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து: பெல்ஜியம், ஜெர்மனி கால் இறுதிக்கு முன்னேற்றம்

 

Daily_News_5679241418839.jpg

லீல்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று இரவு லீலில் நடந்த 4வது நாக் அவுட் போட்டியில், ஜெர்மனி-ஸ்லோவாக்கியா அணிகள் மோதின. உலக சாம்பியனான ஜெர்மனி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் போட்டாங் (8வது நிமிடம்), கோம்ஜ் (43வது நிமிடம்), டிராக்ஸ்லெர் (63வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். 2வது கோலை கோம்ஜ் அடிக்கவும் டிராக்ஸ்லெர் உதவி புரிந்தார். ஆட்ட நேரம் முடியும் வரை, ஸ்லோவாக்கியாவால் ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை.

இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்று, கால் இறுதிக்குள் நுழைந்தது. இத்தாலி அல்லது ஸ்பெயின் அணியை கால் இறுதியில் ஜெர்மனி எதிர்கொள்கிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=227199

Link to comment
Share on other sites

இத்தாலி 2 - 0 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்று, கால் இறுதிக்குள் நுழைந்தது.

எதிர்வரும் சனிக்கிழமை ஜெர்மனியை கால் இறுதி போட்டியில் இத்தாலி எதிர்கொள்கிறது.

Link to comment
Share on other sites

  ஐஸ்லாந்து  2 - 1 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்று, கால் இறுதிக்குள் நுழைந்தது.

Link to comment
Share on other sites

இங்கிலாந்து - ஐஸ்லாந்து ஆட்டம் என்ன ஒரு ஆட்டம்.. அருமையாக இருந்தது.. இதில் இங்கிலாந்து தோற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி.. :D:

Link to comment
Share on other sites

நடப்பு சாம்பியன் ஸ்பெயின் கதை முடிந்தது : இங்கிலாந்து 'அவுட் '

யூரோ கால்பந்து தொடரில் இத்தாலி அணியிடம் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஐஸ்லாந்து அணி தொடரை விட்டு வெளியேற்றியது.

ital.jpg

'ஸ்டேட் டி பிரான்சில் ' நடந்த  நாக் அவுட் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணியுடன் இத்தாலி மோதியது. பந்தை வழக்கம் போல தனது கட்டுப்பாட்டிலேயே ஸ்பெயின் வைத்திருந்தது. ஆனால் இத்தாலி திறம்பட தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தது.  33வது நிமிடத்தில் இத்தாலி அடித்த ஃப்ரீ கிக்கை ஸ்பெயின் கோல்கீப்பர் டி ஜியா தடுக்க, அது ரீபவுண்டானது. அந்த சமயத்தில் பெனால்டி ஏரியாவுக்குள் நின்று கொண்டிருந்த இத்தாலி வீரர் கெலினி எளிதாக கோலுக்குள் அடித்தார். 

இத்தாலி முன்னிலை பெற்றது. பதிலடி கொடுக்க ஸ்பெயின் அணி எடுத்த முயற்சிகளை இத்தாலியின் சிறப்பான தடுப்பாட்டமும் கோல்கீப்பர் பஃப்பனும் தடுத்து விட்டனர். தொடர்ந்து 90வது நிமிடத்தில் இத்தாலிக்கான 2வது கோலை பெல்லே அடிக்க ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. கடந்த  யூரோ 2012 இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு தற்போது இத்தாலி ஸ்பெயினை பழிதீர்த்துக் கொண்டது.

icel.jpg

நீஸ் நகரில் நடந்த மற்றொரு நாக் அவுட் ஆட்டத்தில் வலுவான அணியான  இங்கிலாந்துடன் கத்துக்குட்டி ஐஸ்லாந்து மோதியது. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே இங்கிலாந்துக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை ரூனி கோலாக மாற்றினார். அடுத்த 2வது நிமிடத்திலேயே ஐஸ்லாந்து பதிலடி கொடுத்தது. சிகுர்ட்சன் இந்த கோலை அடித்தார்.

பின்னர் 35வது நிமிடத்தில் சிகுர்போர்சன்  ஐஸ்லாந்துக்கான 2வது கோலை அடிக்க இங்கிலாந்து அணி அதிர்ந்து போனது. முன்னிலை பெற்ற ஐஸ்லாந்து அணி பின்னர் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த, இங்கிலாந்து அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோற்று போட்டியை விட்டு வெளியேறியது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ராய் ஹாட்சன் பதவி விலகியுள்ளார்.

http://www.vikatan.com/news/sports/65607-euro-football-results.art

Link to comment
Share on other sites

யூரோ 2016: இங்கிலாந்தின் தோல்வி எதிரொலியாக அணி மேலாளர் ராய் ஹட்ஜ்சன் பதவி விலகல்

 

பிரான்சில் நடைபெற்று வரும் யூரோ 2016 கால்பந்து போட்டி தொடரில், வெற்றி பெறாது என்று திட்டவட்டமாகக் கருதப்பட்ட ஐஸ்லாந்து அணி, இங்கிலாந்தை இரண்டு கோல்களுக்கு ஒன்று ( 2-1) என்ற கணக்கில் வென்றுள்ளது.

 

160627211242_england_iceland_euro_2016_6

 யூரோ 2016: தோல்வியடைந்த இங்கிலாந்து அணி

இந்த தோல்வியினால், யூரோ 2016 கால்பந்து போட்டி தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேறிவிட்டது.

இங்கிலாந்து தோல்வியடைந்ததன் எதிரொலியாக, நான்கு ஆண்டுகள் இங்கிலாந்து கால்பந்து அணியின் மேலாளராக பொறுப்பிலிருந்த ராய் ஹட்ஜ்சன் தான் பதவி விலகுவதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இங்கிலாந்தை வெற்றி கொண்ட ஐஸ்லாந்து அணி, வரும் ஞாயிறு அன்று (ஜுலை 3-ஆம் தேதி) பாரிஸில் நடக்கும் தனது அடுத்த போட்டியில், போட்டியை நடத்தும் அணியை சந்திக்கவுள்ளது.

இதனிடையே, மற்றொரு போட்டியில் தற்போதைய நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணியை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வீழ்த்தியது.

http://www.bbc.com/tamil/global/2016/06/160628_euro_2016

Link to comment
Share on other sites

யூரோவில் இங்கிலாந்தின் பல்லை பிடுங்கிய 'பார்ட் டைம் ' பல் டாக்டர்!

லகக் கோப்பையாக இருந்தாலும் சரி ...யூரோவாக இருந்தாலும் சரி ...கோப்பை எங்களுக்குதான் என்று புறப்பட்டு போவது இங்கிலாந்து அணியின் வழக்கம். இங்கிலாந்து அணி புறப்பட்டதும் கூடவே முரட்டு ரசிகர்களும் கூட்டம் கூட்டமாய் அந்த நாட்டுக்கு போய் இறங்கி விடுவார்கள்.  இங்கிலாந்துக்கான போட்டிகள் எந்த நகரில்  நடக்கிறதோ அங்கே போய்  முகாமிட்டுக் கொள்வார்கள். போட்டியை பார்க்கிறார்களோ இல்லையோ எதிரணி ரசிகர்களை வம்புக்கு இழுப்பதுதான்  இங்கிலந்து அணி ரசிகர்களின்  முதல் வேலை..பிரான்சில் இந்த முறையும் ரஷ்ய ரசிகர்களிடம் சண்டைக்கு போய் செமத்தையாக வாங்கிக் கட்டினார்கள்.

hel.jpg

கால்பந்தை பொறுத்த வரை இங்கிலாந்து அணியை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு ஒப்பிடலாம். எப்போ எப்படி யார்கிட்டனு வரைமுறை இல்லாம தோற்பதில் இங்கிலாந்துக்கு நிகர் இங்கிலாந்துதான். பின்னர்  தாய்நாட்டுக்கு போய் ஒரு மாத காலம் தலைமறைவாகி விடுவார்கள். வெளியே தலைகாட்டினால் அழுகிய தக்காளி, முட்டை வந்து விழும்.

இந்த யூரோவிலும் நாக்அவுட் சுற்றில் கத்துக்குட்டியான ஐஸ்லாந்து அணி இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்துள்ளது.  இங்கிலாந்து அணிக்குஎன்ன குறைச்சல் ? ஏன் இப்படி தோற்கிறார்கள் ? என்ற கேள்விதான் எழுகிறது. ரூனி தலைமையில் ஜேமி வார்டி, டேனியல் ஸ்டர்ரிஜ், கேரி காகில், கிறிஸ் ஸ்மால்லிங், ஜேம்ஸ் மில்னர், ரஹீம் ஸ்டெர்லிங், ஜேக் வில்ஷயர், ஜோர்டான் ஹேண்டர்சன், மார்கஸ்  ரஷ்ஃபோர்டு என பிரீமியர் லீக்கில் அசத்தும் அத்தனை இளம் வீரர்களும் கொட்டி கிடக்கின்றனர். அப்படியும் தோல்விதான் மிஞ்சுகிறது ஏன்? என்பது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்களுக்கே இன்னும் வரை புரியாத புதிர்தான்.

icel1.jpg

ஆனால் இப்படியெல்லாம் அடி வாங்குவது இங்கிலாந்து அணிக்கு வழக்கமான ஒன்றுதான். கடந்த 1950ம் ஆண்டு பிரேசில் உலகக் கோப்பைத் தொடரிலேயே இங்கிலாந்து அணி கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் செமத்தையாக அடி வாங்கியுள்ளது. அப்போதுதான் அமெரிக்க அணி கால்பந்து விளையாட்டை  எப்படி விளையாட வேண்டுமென்று கற்றுக் கொண்டிருந்தது.  தட்டுத் தடுமாறி உலகக் கோப்பைக்கும் வந்திருந்தது.  பெரும்பாலான அமெரிக்க வீரர்கள் பார்ட் டைம் பிளேயர்கள்தான். இங்கிலாந்தை போல தொழில்முறை ஆட்டம் அமெரிக்கவில் அப்போதெல்லாம் கிடையாது. இங்கிலாந்து அணிக்கும் அதுதான் முதல் உலகக் கோப்பைத் தொடர்.  அதற்கு முன் நடந்த 3 உலகக் கோப்பை போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஃபிஃபாவுடன் ஏற்பட்ட  மோதல் காரணமாக பங்கேற்கவில்லை.

footi.jpg

இந்த மோதலில் அனுபவமில்லாத அமெரிக்க அணிக்கு இங்கிலாந்து அணி  லாடம் கட்டி விடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.  இந்த மோதலை பொறுத்த வரை இங்கிலாந்து பவர்ஃபுல், அமெரிக்கா 'அன்டர்டாக் 'அந்த அணிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.  அதனால்  போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. போட்டித் தொடங்கியது.

25வது நிமிடத்தில் அமெரிக்க அணி முதல் கோல் அடிக்க, ரேடியோக்களில் வர்ணணை  கேட்டுக் கொண்டிருந்த 10 ஆயிரம் பிரேசிலியர்கள் டிக்கெட் எடுத்து கொண்டு போட்டியை பார்க்க மைதானத்துக்கு வந்து விட்டனர்.  அமெரிக்க அணிக்கு ஆதரவாக அவர்கள் கூச்சலிட, கடைசி வரை இங்கிலாந்து அணியை  பதில் கோல் அடிக்க விடாமல்  தடுப்பாட்டத்தை ஆடி அமெரிக்க அணி வெற்றி பெற்று விட்டது.  கால்பந்து அரங்கில் இங்கிலாந்தின் இந்த தோல்வி  இப்பவும் பேசப்படும் ஒரு விஷயம்.  அதே பாரம்பரியம்தான் தற்போது ஐஸ்லாந்துக்கு அணிக்கு எதிராக தொடர்ந்துள்ளது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ராய் ஹாட்சனுக்கு ஆண்டுக்கு 3.5 பில்லியன் பவுண்டு சம்பளம் . இங்கிலாந்தை வீழ்த்திய ஐஸ்லாந்து அணியின் பயிற்சியாளர் ஹெல்மிர் ஹெல்குர்சன் ஒரு' பார்ட் டைம் 'டென்டிஸ்ட் .

http://www.vikatan.com/news/sports/65620-icelandic-dentist-kicked-england-in-the-teeth.art

Link to comment
Share on other sites

யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்தை வெளியேற்றியது ஐஸ்லாந்து: காலிறுதியில் ஜூலை 3-ம் தேதி பிரான்ஸை சந்திக்கிறது

 
 
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்த மகிழ்ச்சியில் ஐஸ்லாந்தின் சிக்த்ரோசன். படம்: ஏஎப்பி.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்த மகிழ்ச்சியில் ஐஸ்லாந்தின் சிக்த்ரோசன். படம்: ஏஎப்பி.

யூரோ கால்பந்து தொடரில் கத்துக்குட்டியான ஐஸ்லாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி யடைந்தது. இந்த வெற்றியால் காலிறுதிக்கு முன்னேறிய ஐஸ்லாந்து வரும் 3-ம் தேதி போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றின் கடைசி போட்டியில் நைஸ் நகரில் இங்கிலாந்து - ஐஸ்லாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. 4-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி முதல் கோலை அடித்தது. பெனால்டி வாய்ப்பை கேப்டன் வேய்ன் ரூனி கோலாக மாற்றினார். இந்த கோல் அடித்ததன் மூலம் டேவிட் பெக்காமின் 53 கோல்கள் சாதனையை ரூனி சமன் செய்தார்.

ஐஸ்லாந்து அடுத்த நிமிடத்திலேயே பதில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது. 5-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹாரி ஆர்னசன் உதவியுடன் சிகுர்ட்சன் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. தொடர்ந்து 18-வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் சிக்த்ரோசன் 2-வது கோலை அடித்து முன்னிலையை ஏற்படுத்தினார். இந்த கோலை அடிக்க ஜான் டடி போட்வார்சன் உதவினார்.இதனால் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து முன்னிலை வகித்தது.

2-வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. மேலும் ஒரு கோல் அடித்து சமன் செய்ய இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஐஸ்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.

இறுதி விசில் அடிக்கப்பட்டதும் ஐஸ்லாந்து ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில் இங்கிலாந்து அணி வீரர்கள் கண்ணீர் மல்க மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

யூரோ கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாக இங்கிலாந்தின் இந்த தோல்வி அமைந்தது. குறைந்த மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து, முதல் முயற்சியிலேயே காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

1950 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் பகுதி நேர வீரர்களை கொண்டு விளையாடிய அமெரிக்க அணியிடம் ஒரு கோல் வாங்கி தோல்வியடைந்தது. அந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து பட்டம் வெல்லும் அணியாக கருதப்பட்டது. ஆனால் இந்த தோல்வி எல்லாற்றையும் புரட்டி போட்டது. அதன் பின்னர் 66 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள கத்துக்குட்டி அணியிடம் படுதோல்வி கண்டுள்ளது.

1966-ல் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றிருந்தது. அதன் பின்னர் பெரிய அளவி லான தொடரை இதுவரை கைப்பற்றவில்லை. இந்த தொடரிலும் அந்த அணியின் சோகம் தொடர்கிறது. மேலும் இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய 3 நாட்களில் யூரோ தொடரில் இருந்து இங்கிலாந்து கால்பந்து அணி தோல்வியை சந்தித்து மூட்டை கட்டியுள்ளது.

பயிற்சியாளர் ராஜினாமா

ஐஸ்லாந்திடம் தோல்வி யடைந்து காலிறுதி வாய்ப்பை இங்கிலாந்து அணி இழந்த நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இங்கிலாந்து பயிற்சியாளர் ராய் ஹோட்ஜ்சன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு இத்தாலியின் பேபியோ கேப்பெல் லாவுக்கு பதிலாக ஹோட்ஜ்சன், இங்கிலாந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து விளையாடிய 56 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெரிய தொடர்களில் சாதித்த தில்லை.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-நாக்-அவுட்-சுற்றில்-இங்கிலாந்தை-வெளியேற்றியது-ஐஸ்லாந்து-காலிறுதியில்-ஜூலை-3ம்-தேதி-பிரான்ஸை-சந்திக்கிறது/article8787457.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த போட்டி எங்கு , எப்போது , யாரோடு... ப்ளீஸ்....!  tw_blush:

Link to comment
Share on other sites

யூரோ கோப்பை முதல் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - போலந்து இன்று பலப்பரீட்சை: கைகொடுப்பாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ

 

 

15-வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்த கால்பந்து திருவிழாவில் 24 நாடுகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, வேல்ஸ், இங்கிலாந்து, சுலோவேக் கியா, ஜெர்மனி, போலந்து, வடக்கு அயர்லாந்து, குரோஷியா, ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், அயர்லாந்து குடியரசு, ஹங்கேரி, ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

நாக் அவுட் சுற்றில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, போர்ச்சுக்கல், வேல்ஸ், பெல்ஜியம், ஜஸ்லாந்து ஆகிய 8 நாடுகள் வெற்றி பெற்று காலிறுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஸ்பெயின், இங்கி லாந்து, குரோஷியா, சுவிட்சர் லாந்து, சுலோவேக்கியா, ஹங்கேரி, வடக்கு அயர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.

2 நாள் ஓய்வுக்கு பிறகு காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் போலந்து - போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

போலந்து அணி 34 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் முதல்முறையாக காலிறு திக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி லீக் ஆட்டங்களில் 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தையும், 1-0 என்ற கணக்கில் உக்ரைனையும் வீழ்த் தியது. பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் கோல் ஏதுமின்றி டிரா செய்தி ருந்தது. நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. யூரோ வரலாற்றில் போலந்து அணி காலிறுதியை கடந்த தில்லை. இம்முறை அந்த அணி போர்ச்சுக்கலை வீழ்த்தி முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது.

போலந்து அணியின் லீவான் டோவ்ஸ்கி, மிலிக், ஜாகூப், பிளாஸ்செவோவ்ஸ்கி ஆகியோர் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இதில் பிளாஸ்செவோவ்ஸ்கி இந்த தொடரில் இரு கோல்கள் அடித்துள்ளார். லீவான்டோவ்ஸ்கி, சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்திருந் தார். இதனால் அவர் போர்ச்சுக் கலுக்கு எதிரான ஆட்டத்தில் கள மிறங்குவாரா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில் அந்த அணியின் துணை பயிற் சியாளர், லீவான் டோவ்ஸ்கி போர்ச்சுக்கலுக்கு எதிரான ஆட்டத்துக்கு தயாராகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

போர்ச்சுக்கல் அணி லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. 1-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்துடனும், 0-0 என்ற கணக்கில் ஆஸ்திரியா வுடனும், 3-3 என்ற கணக்கில் ஹங்கேரியுடனும் டிரா செய்திருந் தது. நாக் அவுட் சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.

2004-ம் ஆண்டு யூரோ தொடரில் போர்ச்சுக்கல் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. இதுவே அந்த அணியின் சிறந்த செயல் பாடாக உள்ளது. இம்முறை கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால் டோவையே முழுமையாக அணி சார்ந்துள்ளது. அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ள அதேவேளையில் கூடுதல் திற மையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் ரொனால்டோ உள்ளார். இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் போர்ச்சுக்கல் ஒரு முறையும், போலந்து ஒரு முறைவையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித் ததன் மூலம் 4 தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டா படைத் திருந்தார். யூரோ தொடர்களில் ரொனால்டோ இதுவரை 8 கோல்கள் அடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் ஒரு கோல் அடித்தால் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் கால்பந்து அணியின் ஜாம்பவான் மைக்கேல் பிளாட்டினியின் சாதனையை சமன் செய் வார். அவர் யூரோ தொடர் களில் 9 கோல்கள் அடித்து அதிக கோல் கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத் தில் உள்ளது குறிப் பிடத்தக்கது.

31 வயதான ரொனால்டோ தனது அணியை அரையிறு திக்கு அழைத்து செல் வதற்கு இன்றைய ஆட்டம் உதவக்கூடும். போர்ச்சுக்கல் வெற்றி பெறும் பட்சத்தில் அரை யிறுதியில் வேல்ஸ் அல்லது பெல் ஜியத்தை அந்த அணி எதிர் கொள்ளும்.

லீக் சுற்று முதல் ஆட்டத்தில் பலம் குறைந்த ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்த போதும், ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற தவறவிட்ட போதும் ரொனால்டோ கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

ஆனால் ஹங்கேரி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ரொனால்டோ இரு கோல்கள் அடித்து அசத்தியதுடன் தனது அணியை நாக் அவுட் சுற்றுக்கும் தகுதி பெற செய்தார். எனினும் அவரது சிறந்த ஆட்டம் இந்த தொடரில் இன்னும் வெளிப்பட வில்லை. குரோஷியாவுக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் 117 நிமிடங்கள் களத்தில் இருந்த போதிலும் ரொனால்டோவால் கோல் அடிக்க முடியவில்லை. அந்த ஆட்டத்தில் ரிக்கார்டோ குயர்ஸ்மா கோல் அடித்ததாலேயே போர்ச்சுக்கல் காலிறுதி வாய்ப்பை பெற்றது. எனினும் இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் வழக்கமான 90 நிமிடங்களில் இலக்கை நோக்கி ஒரு ஷாட்டை கூட அடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. யூரோ கால்பந்து தொடரில் ஒரு அணி இதுபோன்று மோசமாக செயல்பட்டதும் இது தான் முதல்முறை என்றும் விமர்சிக்கப் பட்டது.

போர்ச்சுக்கல் பின்கள வீரர் ஜோஸ் போன்ட்டி கூறும்போது, ‘‘எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் சிறந்த வீரரான ரொனால்டோவுடன், நானி, குயர்ஸ்மா, ஜோவா மரியா ஆகியோரும் அணியில் உள்ளனர். குரோஷியாவுக்கு எதிராக நாங்கள் மோசமாக விளையாடினாலும் வெற்றி பெற்றோம். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறவே விரும்புகிறோம். ஆனால் சில சமயங்களில் அது முடியாமல் போகிறது’’ என்றார்.

போலந்து கோல் கீப்பர் வோஜ்சீக் கூறும்போது, ‘‘குரோஷி யாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த வீரராக தேர்வான போர்ச்சுக்கலின் ரீனாட்டோ சான்சேஸ் தாக்கத்தை ஏற்படுத்தினார். போர்ச்சுக்கல் சிறந்த அணி. அந்த அணி ரொனால்டோவை மட்டும் நம்பி யில்லை. ரொனால்டோ தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என சிலர் கூறுகின்றனர். ஆனால் ரொனால்டோ போன்ற வீரர் ஒருவர் எனது அணியில் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புவேன். அவரை தவிர ரீனாட்டோவும் என்னை கவர்ந் துள்ளார். சந்தேகமே இல்லை காலிறுதியில் எங்களுக்கு பெரிய பணி இருக்கிறது’’ என்றார்.

இன்றைய ஆட்டம்

முதல் காலிறுதி

போர்ச்சுக்கல் - போலந்து

 

தரவரிசை

போர்ச்சுக்கல் 8

போலந்து 27

நேருக்கு நேர்

3 ஆட்டத்தில் மோதியுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-முதல்-காலிறுதி-ஆட்டத்தில்-போர்ச்சுக்கல்-போலந்து-இன்று-பலப்பரீட்சை-கைகொடுப்பாரா-கிறிஸ்டியானோ-ரொனால்டோ/article8791354.ece

Link to comment
Share on other sites

யூரோ 2016: அரையிறுதிக்குள் நுழைந்தது போர்த்துக்கல்
 
 

article_1467322542-102118735_ronaldosancபிரான்ஸில் இடம்பெற்று வருகின்ற யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்கு, முதலாவது அணியாக போர்த்துக்கல் தகுதி பெற்றுள்ளது. முதலாவது காலிறுதிப் போட்டியில் போலந்தை தோற்கடித்தே அரையிறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றுள்ளது. 

போட்டியின் வழமையான நேரத்தில் நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலையே பெற்றிருந்த நிலையில், மேலதிக நேரத்துக்கு போட்டி சென்றிருந்தது. அதிலும் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், வழங்கப்பட்ட பெனால்டியில், 5-3 என்ற ரீதியில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குள் போர்த்துக்கல் நுழைந்தது.

இப்போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே, போலந்து அணியின் தலைவர், ரொபேர்ட் லெவன்டோஸ்கி கோலோன்றைப் பெற்று தனது அணியை முன்னிலைப்படுத்தியபோதும், போட்டியின் 33ஆவது நிமிடத்தில், போர்த்துக்கல் அணியின் 18 வயதான இளம்வீரர் ரெனாட்டோ சந்தேஸ் அபாரமாக கோலோன்றினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியிருந்தார்.

பெனால்டியில், போர்த்துகல் அணியின் தலைவரான கிறிஸ்டியனோ ரொனால்டோ அதிரடியாக ஆரம்பித்ததிலிருந்து, இரண்டு அணிகளின் வீரர்களும் மாறி மாறி கோலைப் பெற்றபோதும் போலந்து சார்பில் நான்காவது பெனால்டியை போர்த்துக்கல் அணியின் கோல்காப்பாளர் பற்றிசியோ அபாரமாக தடுக்க, போர்த்துக்கல்லின் ஐந்தாவது பெனால்டியை குவாரஸ்மா அமைதியாக கோல்கம்பதுக்குள் புகுத்த போர்த்துக்கல் த்ரில் வெற்றி பெற்றது.

- See more at: http://www.tamilmirror.lk/175954/ய-ர-அர-ய-ற-த-க-க-ள-ந-ழ-ந-தத-ப-ர-த-த-க-கல-#sthash.IW0qMkmd.dpuf

 

Link to comment
Share on other sites

அரையிறுதிக்கு முன்னேறுவது யார்?- வேல்ஸ் - பெல்ஜியம்: இன்று மோதல்

 
 
hazard_2915945f.jpg
 

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் இன்று வேல்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. லில்லி நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை சோனி இஎஸ்பிஎன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பெல்ஜியம் அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரு கிறது. அந்த அணி லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.இரண்டாவது ஆட்டத்தில் அயர்லாந்தை 3-0 என்ற கணக்கிலும், கடைசி ஆட்டத்தில் சுவீடனை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. நாக் அவுட் சுற்றில் ஹங்கேரியை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

தன்னம்பிக்கை

1980-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன் னேறியதை போன்று இம்முறையும் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி ஆயத்தமாகி உள்ளது. அந்த அணியில் டி புருனி, ஈடன் ஹஸார்டு, மிஸி, லுஹாகு, யானிக் காரஸ்கோ ஆகியோர் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். பெல் ஜியம் அணிக்கு இது 5-வது யூரோ கோப்பை தொடராகும். அந்த அணி1980-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தது.

இந்த முறை நாக் அவுட் சுற்றில் ஹங்கேரியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றிருந்தது. அந்த அணி இவ்வளவு கோல்கள் வித்தி யாசத்தில் பெரிய தொடர்களில் இதற்கு முன்னர் வெற்றி பெற்றதில்லை.

லில்லி நகரில் இதற்கு முன்னர் பெல் ஜியம் இரு போட்டிகளில் விளையாடி உள்ளது. 1914-ல் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்திருந்தது. அதன் பின்னர் 1989-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் லக்ஸர்பர்க் அணியை பந்தாடியிருந்தது.

மதிநுட்பம்

‘‘பெல்ஜியம் அணியின் நடுகள வீரர் டி புருனி கூறும்போது, நாங்கள் தொழில் நுட்பத்துடனும், மதி நுட்பத்துடனும் உள்ள அணி. ஹங்கேரி அணிக்கு எதிராக எப்படி விளையாடினோமோ, அதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்துவோம்’’ என்றார்.

வேல்ஸ்

வேல்ஸ் அணி ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கிடை யாது. அதிகபட்சமாக காலிறுதி வரை எட்டிப்பார்த்துள்ளது. 1976-ம் ஆண்டு யூரோ தொடரின் காலிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லேவியாவிடம் தோல்விகண்டிருந்தது. இம்முறை வேல்ஸ் அணி லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் சுலோவேக்கியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. 2-வது ஆட் டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கி லாந்திடம் தோல்வியை சந்தித்தது. கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை தோற்கடித்தது. நாக் அவுட் சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வென்றது

நட்சத்திர வீரரான கரேத் பாலே 3 கோல்கள் அடித்துள்ளார். ஒரு கோல் அடிக்க உதவியாக இருந்துள்ளார். இவரை அணி பெரிதும் நம்பி உள்ளது. பாலேவுடன் ஆரோன் ராம்ஸே, ஜோ ஆலென் தலிஸ் மான், நெய்ல் டெய்லர் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.

தகுதி சுற்று போட்டியின் இரு ஆட்டங்களிலும் வேல்ஸ் அணி பெல் ஜியத்தை வீழ்த்தியிருந்தது. இந்த இரு ஆட்டத்திலும் பெல்ஜியம் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இன்றைய ஆட்டத் திலும் பெல்ஜியத்தை வீழ்த்தி முதன் முறையாக அரையிறுதிப்போட்டிக்கு முன் னேறும் முனைப்பில் உள்ளது வேல்ஸ்.

பெனால்டி ஷூட் அவுட்

பெல்ஜியம் அணி இதுவரை விளையாடி உள்ள போட்டிகளில் இரு முறை மட்டுமே பெனால்டி ஷூட் அவுட்டை எதிர்கொண்டுள்ளது. 1986 உலகக் கோப்பை காலிறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. 1998-ல் நடைபெற்ற நட்பு ரீதியிலான ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்திருந்தது. அதேவேளையில் வேல்ஸ் அணி ஒரு முறைகூட பெனால்டி ஷூட் அவுட்டை எதிர்கொண்டதில்லை.

எல்லை சாதகம்

இன்றைய ஆட்டம் நடைபெறும் லில்லி நகரம் பெல்ஜியம் நாட்டில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது. இதனால் வேல்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தை பெல்ஜியம் அணி தனது சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியாகவே கருதுகிறது.

நேரம் : 12.30 நள்ளிரவு ஒளிபரப்பு : சோனி இஎஸ்பிஎன்

நேருக்கு நேர்

இரு அணிகளும் சர்வதேச அளவில் 12 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெல்ஜியம் 5 ஆட்டத்திலும், வேல்ஸ் 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன.

http://tamil.thehindu.com/sports/அரையிறுதிக்கு-முன்னேறுவது-யார்-வேல்ஸ்-பெல்ஜியம்-இன்று-மோதல்/article8795653.ece

Link to comment
Share on other sites

யூரோ 2016: போலந்தை பெனால்டியில் வீழ்த்தி அரையிறுதியில் போர்ச்சுக்கல்!

 

 
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடர் அரையிறுதிக்கு போர்ச்சுக்கல் அணி முன்னேறியுள்ளது. பரபரப்பான காலிறுதி ஆட்டம் 1-1 என்று டிரா ஆக, பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுக்கல் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெனால்டி ஷூட் அவுட்:

பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ முதல் ஷாட்டை அடிக்க வந்தார், போலந்து கோல் கீப்பர் ஃபேபியான்ஸ்கியை தவறான திசையில் நகர வைத்து ரொனால்டோ முதல் கோலை அடித்தார். போர்ச்சுகல் 1-0.

அடுத்து போலந்தின் நட்சத்திர வீரர் லெவாண்டோவ்ஸ்கி தனது ஷாட்டை கோலாக மாற்றினார் 1-1.

இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய 18 வயது போர்ச்சுகல் வீரர் ரொனாட்டோ சான்சேஸ் அடுத்ததாக கோல் வலையில் இடது மூலைக்கு பந்தை அனுப்பினார் போர்ச்சுக்கல் 2-1.

போலந்து அணியின் மிலிகி இடது காலால் கோல் வலைக்குள் செலுத்தினார் 2-2.

அடுத்ததாக போர்ச்சுக்கல் வீரர் மவ்டின்ஹோ, போலந்தின் கோல் கீப்பர் ஃபேபியன்ஸ்கிக்கு போக்குக் காட்டி வலது காலினால் கோலுக்குள் செலுத்தினார் போர்ச்சுகல் 3-2.

போலந்தின் கிளீக் தனது கோலை முறையாக அடிக்க 3-3.

போர்ச்சுகலின் நானி அடுத்ததாக ஓடிவரும் போது சற்றே தடுமாறினாலும், பக்கவாட்டு பாதை உதை மூலம் வலது மூலைக்குள் பந்தை செலுத்த போர்ச்சுகல் 4-3.

அடுத்ததாக வந்து பிளாசிஸ்கோவ்ஸ்கி போர்ச்சுக்கல் கோல் கீப்பருக்கு இடது புறம் அடிக்க அதனை பேட்ரிசியோ அருமையாக பாய்ந்து தடுத்தார்.

அடுத்து வந்த போர்ச்சுகலின் குரேஸ்மா இடது மேல் மூலையில் வலைக்குள் பந்தை உதைக்க போர்ச்சுகல் 5-3 என்ற கோல் கணக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

120 நேர விறுவிறுப்பான ஆட்டத்தில் 1-1:

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே போலந்து அணி அபாரமான ஓர் ஆட்டத்தில் முதல் கோலை அடித்து போர்ச்சுக்கலுக்கு அதிர்ச்சி அளித்தது.

கிட்டத்தட்ட தங்கள் பகுதிக்கு அருகே வலதுபுறத்திலிருந்து மிக நீண்ட பாஸ் ஒன்றை போலந்து வீரர் ஒருவர் தங்களது வலதுபுறத்திலிருந்து குறுக்காக அடிக்க பந்து மேலாக, நேராக அருமையாக போர்ச்சுக்கல் கோல் பகுதிக்கு இடது புறமாக வர அங்கு போர்ச்சுக்கல் வீரர் செட்ரிக் பந்தின் பவுன்ஸை தவறாகக் கணிக்க பந்து போலந்து வீரர் கோர்சிக்கியிடம் சிக்கியதை பார்க்கத்தான் முடிந்தது. அவர் உடனே விறுவிறு மூவில் பந்தை பாக்சிற்குள் எடுத்துச் சென்று நட்சத்திர வீரர் லெவண்டோவ்ஸ்கி அடிக்குமாறு பந்தை பெனால்டி பகுதிக்குள் அனுப்ப அவர் துல்லியமாக அதனை பக்கவாட்டு பாத உதையில் கோலுக்குள் செலுத்தினார். போலந்து 1-0.

இந்த முன்னிலை கொடுத்த உற்சாகத்தில் போலந்து அணி தங்கள் வசத்திலிருந்து பந்தை போர்ச்சுகலுக்கு அளிக்கவில்லை, போர்ச்சுக்கல் அணி வீரர்களும் தங்கள் வசம் வரும் பந்தையும், பாஸ்களையும் போலந்து வீரர்களிடம் விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர், மேலும் முதல் கோல் உட்பட போலந்து 5 ஷாட்களை கோலை நோக்கி அடிக்க போர்ச்சுகல் அணி ஒரு ஷாட்டை கூட கோலை நோக்கி அடிக்கவில்லை. பாஸ் செய்துகொண்டேயிருந்தனரே தவிர ஒருவீரராவது உள்ளே நுழைந்து பெனால்டி பகுதிக்குள் நுழைய முயற்சி செய்யவில்லை என்பதோடு சீராக போலந்தின் தடுப்பு வீரர்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டனர் போர்ச்சுகல் வீரர்கள்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்த இடம் தெரியாமல் ஆடினார், வலது புறம், இடது புறம், நடுக்களம் என்று அவர் மாறி மாறி ஆடினாலும் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை, ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில்தான் போர்ச்சுக்கல் வசம் பந்து சிறிது நிமிடங்கள் இருந்தன. அதுவும் சான்சேஸ் மட்டுமே உள்ளே ஊடுருவ முயற்சி செய்து கொண்டிருந்தார், இம்முறையும் அவர் அருமையாக செட்ரிக்கிடம் அடிக்க வந்த பந்தை ரொனால்டோ கோல் நோக்கி அடித்தார், ஷாட்டில் வலுவில்லை.

11-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த கார்னரால் ஒன்றும் நடக்கவில்லை. 15-வது நிமிடத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே ரொனால்டோ தனக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை எதிர்பார்த்தபடியே விரயம் செய்தார்.

போர்ச்சுக்கல் இன்னமும் செட்டில் ஆகாத நிலையில் பந்துகளை தங்கள் கால்களிலிருந்தே இழந்து கொண்ட ஒரு தருணத்தில் 17-வது நிமிடம் போர்ச்சுக்கலுக்கு பெரும் ஆபத்தாக முடிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பந்தை ஒரு லாங் பாஸில் விறுவிறுவென்று போர்ச்சுக்கல் பகுதிக்குள் எடுத்துச் செல்ல லெவண்டோவ்ஸ்கி அடித்த ஷாட் ஒன்று கோலுக்கு வெளியே சென்றது, ஆனால் அடுத்த நிமிடமே லெவண்டோவ்ஸ்கியிடம் பிளாசிஸ்கோவ்ஸ்கி பந்தை அளிக்க அவர் மிகவும் சாதுரியமாக ஃபாண்ட்டேயின் இடது புறம் தட்டி விட்டு பிறகு லெவண்டோவ்ஸ்கியே விறுவிறுவென நகர்ந்து பந்தை தனது வலது காலுக்கு மாற்றிக் கொண்டு அடித்த ஷாட் போர்ச்சுகல் கோல் கீப்பர் பேட்ரிசியோவினால் தடுக்கப்பட்டது. இந்த நகர்வில் நிச்சயம் போலந்து 2-வது கோலை அடித்திருக்க வேண்டும், ஏனோ அது தகையவில்லை.

21-வது நிமிடத்தில் போலந்து வீரர் மிலிக் கோல் நோக்கி அடித்த ஷாட்டை போர்ச்சுகலின் பீப் தடுக்க கார்னர் வாய்ப்பு போலந்துக்குக் கிடைத்தது. அதாவது போலந்து அணியின் ஜெட்ரிஸிக் மற்றும் பிளாஸிஸ்கோவ்ஸ்கி முக்கோண வடிவமைத்து பந்தை போர்ச்சுக்கல் எல்லைக்குக் கொண்டு வந்து பிளாசிஸ்கோவ்ஸ்கி பாக்ஸிற்குள் எகிறி அருமையாக ஸ்ட்ரைக்கர் லெவண்டோவ்ஸ்கியிடம் அடிக்க, இதைத்தான் பீப் தடுக்க கார்னர் விளைந்தது, அது ஒன்றும் ஆகவில்லை, கார்னர் கோலாக மாறுவதெல்லாம் அரிதாகி விட்டன.

இரு அணிகளும் சவாலான ஆட்டத்திற்கு காலிறுதியைக் கொண்டு வர போர்ச்சுக்கலின் ரொனால்டோ சான்சேஸ் அருமையாக ஆடி வந்தார், ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் ஒரு ஆக்ரோஷ நகர்வை மேற்கொண்டது. முதலில் சான்சேசிடம் பந்து வர அதனை நானியிடம் அனுப்பினார், இவரை போலந்து வீரர்கள் சூழும் முன்னர் அவர் மீண்டும் சான்சேஸிடம் அனுப்பினார். அவர் தனது வலதுகாலிலிருந்து மின்னல் வேகத்தில் இடது காலுக்கு மாற்றி, இதற்கு மேல் பாஸ் செய்து கொண்டிருந்தால் மரியாதை இல்லை என்று நினைத்த சான்சேஸ் மிக அருமையாக இடது காலால் கோலை நோக்கி அடித்தார், அவர் குறி வைத்து அடித்த இடம் வேறு ஆனால் அடித்த புல்லட் ஷாட் இடையில் கிரிச்சோவியாக் என்ற போலந்து வீரரின் கையில் பட்டு லேசாக திசைதிரும்பியது, சான்சேஸின் ஒரிஜினல் ஷாட்டுக்கு தன்னை திசைப்படுத்திக் கொண்ட போலந்து கோல் கீப்பர் ஃபேபியான்ஸ்கியால் பந்தின் திடீர் திசைமாறலை ஒன்றும் செய்ய முடியவில்லை போலந்து சமன் செய்தது ஆட்டம் 1-1 என்று சமநிலை எய்தியது.

இடைவேளைக்குப் பிறகு...

இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தில் போலந்து தொடக்கம் போலவே விறுவிறுப்பு காட்டியது. 48-வது நிமிடத்திலேயே லெவண்டோவ்ஸ்கியின் தலையால் அடிக்கும் முயற்சியில் வலுவில்லாமல் போனது.

48-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல்லிடம் கொஞ்ச நேரம் பந்தைக் காட்டாத போலந்து பிளாஸிகோவ்ஸ்கி, பிஸ்செக் ஆகியோரின் அருமையான ஒன் டு ஒன் பாஸ்கள் மூலம் கொண்டு செல்லப்பட பிஸ்சேக், மிலிக்கைக் குறிவைத்து அடித்த கிராஸ் தடுக்கப்பட்டது. 52-வது நிமிடத்தில் மீண்டும் போர்ச்சுகலின் 18 வயது சுறுசுறுப்பு கால்கள் முன்னகர்ந்து போலந்து கோல் நோக்கி அடித்த ஷாட்டை ஃபேபியான்ஸ்கி எளிதில் பிடித்தார்.

இரண்டாவது பாதியில் முதல் பாதி போலவே போலந்து அணி சிறிது நேரத்திற்குப் பிறகு சற்றே களைப்படைய போர்ச்சுகல் ஆட்டம் அச்சுறுத்தலாக அமைந்தது, குறிப்பாக ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் ஃபாண்டே போலந்து கோல் நோக்கி தலையால் முட்டினார், முன்னதாக, பீப்பின் பாஸ் ஒன்று ரொனால்டொவை குறிவைத்து அடிக்கப்பட அதனை ஜெட்ரிக்சிக் படாதபாடு பட்டு வெளியே தட்டி விட்டார்.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது இரு அணிகளுமே களைப்படைந்து விட்டதா அல்லது பெனால்டியில் ஷூட் அவுட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆடியதா என்பது தெரியவில்லை மொத்தத்தில் ஆக்சிலேட்டரிலிருந்து இரு அணிகளும் காலை எடுத்துவிட்டன, ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது.

அதில் ஒரேயொரு தவறு அல்லது போர்ச்சுக்கல் கோல் கீப்பரின் ஒரே ஒரு கணிப்பு சரியாக இந்தத் தொடர் முழுதும் மோசமாக ஆடிய போர்ச்சுகல் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இது ஏதோ ஒருவிதத்தில் அதிர்ஷ்டமே. குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த காலிறுதியிலும் சரியாக ஆடவில்லை, பாஸ்களை கோட்டைவிட்டார் கோல் நோக்கி அடித்த ஷாட்டில் வலுவில்லை.

அரையிறுதிக்குச் செல்ல வேண்டிய அணி உண்மையில் போலந்து அணியே, இந்த ஆட்டத்தில் அந்த அணியே சுறுசுறுப்பாக ஆடியது, அச்சுறுத்தலாக ஆடியது, ஆனால் பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரேயொரு ஷாட் அவர்களை வெளியேற்றியது. இந்த தொடரில் போர்ச்சுகல் அணி இதுவரை 6 முறை காலிறுக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 4 யூரோ கால்பந்து தொடர்களில் 3 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுகல்.

அரையிறுதியில் போர்ச்சுகல் அணி பெல்ஜியம் அல்லது வேல்ஸ் அணியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-போலந்தை-பெனால்டியில்-வீழ்த்தி-அரையிறுதியில்-போர்ச்சுக்கல்/article8796730.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ரொனால்டோனின் விளையாட்டு சோபிக்கவில்லை...!  சுலபமாய் வந்த இரு பந்துகளைத் தவற விட்டுட்டார்....! :cool:

போலந்து தூரத்தில் இருந்தே கோல் அடிக்க முயற்சி செய்தார்கள்... ஆனால் கமராவை நோக்கித்தான் பந்துகள் செல்பி எடுத்தன....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.