Jump to content

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்


Recommended Posts

யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் இத்தாலி

 

யூரோ கோப்பை கால்பந்தில் நேற்று மாலை இ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் எதும் அடிக்கப்படவில்லை. இத்தாலி அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளுக்கு சுவீடன் வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.

82-வது நிமிடத்தில் இத்தாலி நடுகள வீரர் பரோலோ தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியேறியது. அடுத்த 6-வது நிமிடத்தில் இத்தாலி கோல் அடித்தது. ஜாஜா உதவியுடன் சுவீடனின் தடுப்பு அரண்களை ஏமாற்றி இந்த கோலை ஈடர் அடித்தார். முடிவில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இத்தாலி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு இத்தாலி முன்னேறியது. கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலி 22-ம் தேதி அயர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

சுவீடன் முதல் ஆட்டத்தில் அயர்லாந்துடன் டிரா செய்திருந்த நிலையில் தற்போது தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பெல்ஜி யத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஜெர்மனி ஆட்டம் டிரா

நேற்று முன்தினம் நள்ளிரவு சி பிரிவில் ஜெர்மனி - போலந்து அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவ டைந்தது. உலக சாம்பியனான ஜெர்மனி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளை போலந்து வீரர்கள் முறியடித்தனர். இந்த ஆட்டத்தின் முடிவு ஜெர்மனி ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது. முதல் ஆட்டத்தில் உக்ரைன் அணியை வீழ்த்திய ஜெர்மனி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 21-ம் தேதி வடக்கு அயர்லாந்தை சந்திக்கிறது.

வடக்கு அயர்லாந்து வெற்றி

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து 2-0 என்ற கோல் கணக் கில் உக்ரைனை வீழ்த்தியது. வடக்கு அயர்லாந்துக்கு இது முதல் வெற்றியாகும். அதே வேளையில் 2-வது தோல்வியை சந்தித்த உக்ரைன் அடுத்த சுற்றுக்கு முன்னே றுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

பெல்ஜியம்-அயர்லாந்து

நேரம்: மாலை 6.30

ஐஸ்லாந்து-ஹங்கேரி

நேரம்: இரவு 9.30

போர்ச்சுக்கல்-ஆஸ்திரியா

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-நாக்-அவுட்-சுற்றில்-இத்தாலி/article8744563.ece

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
யூரோ 2016: இறுதிப் 16 அணிகளில் ஸ்பெயின், இத்தாலி
 

article_1466254694-tsjdojcz.jpgபிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு ஸ்பெயினும் இத்தாலியும் தகுதி பெற்றுள்ளன.

ஸ்பெயின், துருக்கி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி, ஏற்கெனவே செக் குடியரசையும் தனது முதலாவது குழுநிலைப் போட்டியில் வென்றிருந்த நிலையில், குழு டியிலிருந்து முதலாவது அணியாக இறுதி 16 அணிகள்ச சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில், ஸ்பெயின் சார்பாக அல்வாரோ மொறாட்டா இரண்டு கோல்களையும் நொலிட்டோ ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, இத்தாலி, சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி, ஏற்கெனவே தனது முதலாவது குழு நிலைப் போட்டியில் பெல்ஜியத்தை வென்றிருந்த நிலையில், குழு இயிலிருந்து முதலாவது அணியாக, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில், இத்தாலி சார்பாக பெறப்பட்ட கோலினை ஈடர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், குரோஷியா, செக்.குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இப்போட்டியின் நடுவே, எரிசுடர்களை, இரசிகர்கள் மைதானத்துக்குள் எறிந்திருந்த நிலையில், போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/175010/ய-ர-இற-த-ப-அண-கள-ல-ஸ-ப-ய-ன-இத-த-ல-#sthash.NU1IZSJm.dpuf
Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் - அயர்லாந்தை வீழ்த்தியது பெல்ஜியம்

 
 
யூரோ கால்பந்தில் துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்த ஸ்பெயின் மொராட்டா | படம்: ஏஎப்பி
யூரோ கால்பந்தில் துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்த ஸ்பெயின் மொராட்டா | படம்: ஏஎப்பி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் - துருக்கி அணிகள் நேற்று முன்தினம் மோதின. ஆரம்பம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. நட்சத்திர வீரர் அல்வாரா மொராட்டா 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். நோலிடோவிடம் பாஸை பெற்று தலையால் முட்டி கோல் அடித்தார் மொராட்டா.

அடுத்த 3-வது நிமிடத்தில் நோலிடோ கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது. முதல் பாதியில் துருக்கி அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. 25-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹகன் ஃப்ரீகிக் மூலம் அடித்த பந்து கோல்கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் உத்வேகத்துடன் விளையாடியது. 48-வது நிமிடத்தில் மொராட்டா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

அதன் பின்னர் 3 முறை கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த போதும் ஸ்பெயின் வீரர்கள் நழுவ விட்டனர். கடைசி வரை துருக்கியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்பெயின் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் செக் குடியரசை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் முன்னேறியது. ஸ்பெயின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 21-ம் தேதி நள்ளிரவு குரோஷியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தை டிராவில் முடித்தாலே ஸ்பெயின் தனது பிரிவில் முதலிடம் பிடித்து விடும். இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் நட்சத்திரம் இனியெஸ்டா கோல் அடிப்பதற்கு பல்வேறு வாய்ப்பு களை உருவாக்கி கொடுத்தார்.

இவரது துல்லியமான நகர்வு, பாஸ் பல்வேறு தருணங்களில் துருக்கி அணியை நிலைகுலையச் செய்தது.

துருக்கி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய மங்கி விட்டது. கடைசி லீக் ஆட்டத்தில் 21-ம் தேதி செக்குடியரசுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மற்ற பிரிவுகளில் உள்ள அணிகளின் முடிவை பொறுத்தே துருக்கியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

இங்கிலாந்து-ரஷ்யா போட்டி யைப் போன்றே இதுவும் ரசிகர்களின் ரகளை நிரம்பிய ஆட்டமாக அமைந்தது, துருக்கி ரசிகர்கள் மைதானத்துக்குள் பட்டாசைத் தூக்கி எறிந்து தங்கள் வெறுப்பைக் காட்டினர். இதனால் துருக்கி அணியே யுஏபாவின் தடைகளை எதிர்நோக்கியுள்ளது.

நேற்று மாலை இ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. லுகாஹூ இரு கோல்களும், விட்செல் ஒரு கோலும் அடித்தனர். பெல்ஜியத்துக்கு இது முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் தோல்வியடைந்திருந்தது. அதே வேளையில் அயர்லாந்துக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தை சுவீடனுன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது.

இன்றைய ஆட்டங்கள்

சுவிட்சர்லாந்து-பிரான்ஸ்
நேரம்: நள்ளிரவு 12.30

ருமேனியா-அல்பேனியா
நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-நாக்-அவுட்-சுற்றில்-ஸ்பெயின்-அயர்லாந்தை-வீழ்த்தியது-பெல்ஜியம்/article8748430.ece

Link to comment
Share on other sites

பெனால்டி வாய்ப்பு உட்பட பலவற்றை நழுவ விட்ட ரொனால்டோ: ஆஸ்திரியாவுடன் போர்ச்சுகல் டிரா

 
பெனால்டி வாய்ப்பை போஸ்டில் அடித்து கோட்டை விட்ட ரொனால்டோ முகத்தை மூடிக் கொண்டார். | படம்: ஏ.பி.
பெனால்டி வாய்ப்பை போஸ்டில் அடித்து கோட்டை விட்ட ரொனால்டோ முகத்தை மூடிக் கொண்டார். | படம்: ஏ.பி.

யூரோ 2016 கால்பந்து போட்டித் தொடரில் 2-வது முறையாக போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சொதப்பலாக ஆட ஆஸ்திரியாவுடனும் 0-0 என்று டிரா ஆனது. ஐஸ்லாந்து டிராவுக்குப் பிறகு 2-வது டிராவாகும் இது.

குறிப்பாக கோல் அடிக்கக் கிடைத்த அருமையான ஸ்பாட் கிக் வாய்ப்பில் ரொனால்டோ போஸ்டில் அடித்து விரயம் செய்தது போர்ச்சுகல் அணி நிர்வாகத்திற்கு வெறுப்பைக் கிளப்பியது.

ஃபீகோவின் சாதனையை முறியடித்து 128-வது போட்டியில் ஆடும் ரொனால்டோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் நிமிடத்திலிருந்து முன்னணி நிலையில் குவாரெஸ்மா, ரொனால்டோ, நானி ஆடினர். ஆனால் குவாரெஸ்மா ஒரு நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை புறக்கணித்து நோக்கமெதுவுமற்று உள்ளுக்குள்ளே விரயமான பாஸ் ஒன்றை அடிக்க ரொனால்டோ அவருக்கு ‘டோஸ்’ கொடுத்தார்.

20 நிமிடங்களுக்குப் பிறகு நானி, ரஃபேல் குரைரோ இணைந்து ஒரு நகர்வை மேற்கொள்ள பந்து ரொனால்டோவுக்கு அடிக்கப்பட ரொனால்டோ பக்கவாட்டு காலில் அதனை கோலாக அடித்திருக்க முடியும் ஆனால் அதனை வைடாக அடித்தார் ரொனால்டோ. சிறிது நேரம் கழித்து நானி, தலையால் அடித்த ஷாட் ஒன்றும் கோலாக மாறவில்லை.

ஆஸ்திரியாவுக்கு 41-வது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பும் விரயமானது. அலாபாவின் ஃப்ரீகிக்கை பினிஷ் செய்ய ஆளில்லை. இடைவேளைக்குப் பிறகும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இரண்டு ஃப்ரீ கிக்குகள் விரயமானது, ஒன்று கிராஸ்பாருக்கு மேல் சென்றது, மற்றொன்று கோலுக்கு வெளியே சென்றது. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் மட்டும் ஃப்ரீ கிக் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்தது. இது குறித்த புள்ளிவிவரங்களின் படி 36 ஃப்ரீ கிக்குகளில் 13 ஷாட்கள் கிராஸ்பாருக்கு மேல், 12 அவுட்டில் அடிக்கப்பட்டது, 10 கீப்பரால் தடுக்கப்பட்டது.

இப்படியே கோட்டை விடப்பட்ட வாய்ப்புகளாகச் சென்று கொண்டிருக்க ஆட்டம் முடிய 13 நிமிடங்கள் இருந்த போது ரொனால்டோ வேகமாக பாக்ஸிற்குள் பந்துடன் சென்றார். மார்டின் ஹிண்டெரிகருடன் ஏற்பட்ட மோதலில் ரொனால்டோ கீழே தள்ளப்பட பெனால்டி வாய்ப்பு போர்ச்சுகலுக்கு வழங்கப்பட்டது. பெனால்டி மற்றும் ஆஸ்திரிய வீரருக்கு மஞ்சள் அட்டை. ரொனால்டோ ஸ்பாட் கிக்கை அடிக்க அது போஸ்டில் பட்டது, கோலுக்கான அருமையான வாய்ப்பு பறிபோனது. இதற்குச் சில நிமிடங்கள் கழித்து ரொனால்டோ கோல் அடித்தார், ஆனால் மிகச்சரியாக ஆஃப் சைடு என்று கோல் மறுக்கப்பட்டது.

போர்ச்சுகல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கூறும்போது, “நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

அனைத்திற்கும் மேலாக பெனால்டி வாய்ப்பை நழுவ விட்ட ரொனால்டோ ஆட்டம் முடிந்தவுடன் ரசிகர் ஒருவருக்கு செல்ஃபி போஸ் கொடுத்ததும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு டிராவினால் போர்ச்சுக்கல் இனி வரும் ஆட்டங்களில் வென்றேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/பெனால்டி-வாய்ப்பு-உட்பட-பலவற்றை-நழுவ-விட்ட-ரொனால்டோ-ஆஸ்திரியாவுடன்-போர்ச்சுகல்-டிரா/article8748514.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Ranking of third-placed teams

Pos Grp Team Pld W D L GF GA GD Pts Qualification
1 C 23px-Flag_of_Northern_Ireland.svg.png Northern Ireland 2 1 0 1 2 1 +1 3 Advance to knockout phase
2 B 23px-Flag_of_Slovakia.svg.png Slovakia 2 1 0 1 3 3 0 3
3 F 23px-Flag_of_Portugal.svg.png Portugal 2 0 2 0 1 1 0 2
4 D 23px-Flag_of_the_Czech_Republic.svg.png Czech Republic 2 0 1 1 2 3 −1 1
5 A 23px-Flag_of_Romania.svg.png Romania 2 0 1 1 2 3 −1 1  
6 E 23px-Flag_of_Sweden.svg.png Sweden 2 0 1 1 1 2 −1 1
Updated to match(es) played on 18 June 2016. Source: UEFA

Knockout phase

In the knockout stage, extra time and a penalty shoot-out are used to decide the winner if necessary.[12] All times are local, CEST (UTC+2).

Link to comment
Share on other sites

கால்பந்தாட்ட போட்டிகளில் வன்முறை: பல்வேறு அணிகளுக்கு எதிராக யுஇஃபா ஒழுங்கு நடவடிக்கை

 

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளின் நிர்வாக அமைப்பான யுஇஃபா, சனிக்கிழமையன்று நடைப்பெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில், கால்பந்து போட்டிகளை காணவந்த ரசிகர்களுக்கு இடையே நடந்த வன்முறை காரணமாக அங்கேரி, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய அணிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

160618215429_hungry_fan_euro_2016_624x35
 

ஏற்கனவே யுஈஃபா வின் ஒழுங்கு நடவடிக்கை நிர்வாக அமைப்பு துருக்கி மற்றும் க்ரோஷியா ஆகிய அணிகளை விசாரித்து வருகிறது.

மேலும் இங்கிலாந்து மற்றும் ரஷிய கால்பந்து ரசிகர்களின் நடவடிக்கைகளுக்காக அந்த இரு அணிகளையும் அதிகாரபூர்வமாக எச்சரித்துள்ளது.

கடந்த வருடம் இஸ்லாமியவாத திவிரவாதிகளால் பாரிஸில் தாக்குதல் நடைத்தப்பட்டதையடுத்து பெரும் பாதுகாப்பு குறித்த அக்கறைகளுக்கு இடையே இந்த ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன.

http://www.bbc.com/tamil/global/2016/06/160619_euro_2016

Link to comment
Share on other sites

யூரோ 2016: இறுதி 16 அணி சுற்றில் சுவிற்ஸர்லாந்து
 
20-06-2016 06:28 PM
Comments - 0       Views - 7

article_1466431170-EuroPiswadars.jpgபிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ண போட்டிகளில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில், பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து ஆகிய போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு சுவிற்ஸர்லாந்து தகுதி பெற்றதுடன், மற்றைய போட்டியில், றோமானியாவை தோற்கடித்த அல்பேனியா, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான தனது வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சுவிற்ஸர்லாந்து, பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டிக்கான பிரான்ஸ் அணியில், கடந்த போட்டியில் ஆரம்பித்திருக்காத அந்தோனி கிறீஸ்மன்னும் போல் பொக்பாவும் ஆரம்பித்திருந்த நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில், கோல்களைப் பெற்ற திமித்திரி பயேட் ஆரம்பித்திருக்கவில்லை.

இதேவேளை, அல்பேனியா, றோமானியா அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் அல்பேனியா வெற்றி பெற்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

மேற்படி போட்டிகளின் முடிவில், குழு ஏயில் முதலிடம் பெற்றுள்ள பிரான்ஸ், இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், குழு சி, டி அல்லது இயில் மூன்றாவது இடம்பெற்ற அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) லயோனில் சந்திக்க வேண்டுமென்ற நிலையில், பெரும்பாலும், வடக்கு அயர்லாந்து அல்லது அயர்லாந்துக் குடியரசை சந்திக்கவுள்ளது.

மறுகணம், இக்குழுவில் இரண்டாமிடம் பெற்றுள்ள சுவிற்ஸர்லாந்து, குழு சியில் இரண்டாமிடம் பெற்ற அணியை இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்க வேண்டுமென்ற நிலையில், தற்போதைய நிலையில், போலந்தை சந்திக்க வேண்டும். எனினும், சந்திக்க வேண்டிய அணியானது ஜெர்மனி அல்லது வடக்கு அயர்லாந்தாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

தவிர, இக்குழுவில் மூன்றாமிடம் பெற்றுள்ள அல்பேனியா, ஏனைய நான்கு, மூன்றாமிடம் பெற்ற அணிகளில் சிறந்த அணியாக இருக்குமானால், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறும்.

- See more at: http://www.tamilmirror.lk/175153/ய-ர-இற-த-அண-ச-ற-ற-ல-ச-வ-ற-ஸர-ல-ந-த-#sthash.jgnFx19s.dpuf
Link to comment
Share on other sites

யூரோ கால்பந்து தொடரில் அல்பேனியாவுக்கு முதல் முறையாக வெற்றி: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து

 
 
யூரோ கால்பந்தில் ருமேனியாவுக்கு எதிராக கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடிக்கும் அல்பேனியா வீரர் அர்மான்ட் சடிகு. படம்: கெட்டி இமேஜஸ்.
யூரோ கால்பந்தில் ருமேனியாவுக்கு எதிராக கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடிக்கும் அல்பேனியா வீரர் அர்மான்ட் சடிகு. படம்: கெட்டி இமேஜஸ்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ருமேனியா-அல்பேனியா அணிகள் மோதின. 43-வது நிமிடத்தில் அல்பேனியாவின் அர்மான்ட் சடிகு முதல் கோலை அடித்தார். லெடியன் மெமுஷாஜிடம் இருந்து கிராஸை பெற்ற அர்மான்ட் சடிகு, ருமேனியா கோல்கீப்பர் சிப்ரியனின் தடுப்பை மீறி கோல் அடித்து அசத்தினார்.

பெரிய தொடர் ஒன்றில் அல்பேனியா அடித்த முதல் கோல் இதுதான். இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியா முன்னிலை வகித்தது.

இதற்கு பதில் கோல் திருப்ப இரண்டாவது பாதியில் ருமேனியா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியா வெற்றி பெற்றது. பெரிய தொடரில் அல்பேனியா பெற்ற முதல் வெற்றி யாக இது அமைந்தது. இந்த போட்டி யில் 62 சதவீத நேரம் ருமேனியா தான் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனாலும் அர்மான்ட் சடிகு அடித்த கோல் ருமேனியாவை வீழ்த்துவதற்கு போதுமானதாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு அல்பேனியா முன்னேறுவதற்கு சிறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அல்பேனியா 3 ஆட்டத்தில் இரு தோல்வி, ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த பிரிவில் இருந்து பிரான்ஸ் 7 புள்ளிகளுடனும், சுவிட்சர்லாந்து 5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

மூன்றாம் நிலை அணிகளின் தரவரிசை அடிப்படையில் அல்பேனியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற மற்ற பிரிவில் உள்ள அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறது அல்பேனியா.

சுவிட்சர்லாந்து அசத்தல்

லில்லி நகரில் ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தொடரை நடத்தும் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. பிரான்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களிலும் ருமேனியா, அல்பேனியா அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தது. சுவிட்சர்லாந்து அணி டிரா செய்தால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழ்நிலையில் இந்த ஆட்டத்தை சந்தித்தது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கோலின்றி போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் கோல் அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை பிரான்ஸ் வீணடித்தது. இருமுறை அந்த அணி வீரர்கள் அடித்த பந்து கோல்கம்பத்தின் கம்பியில் பட்டு வெளியே சென்றது. போக்பா அடித்த பந்தை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமர் தடுத்து நிறுத்தினார். அடுத்த முறை 25 யார்டு தூரத்தில் இருந்து அவர் அடித்த பந்து கோல் கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.

முதல் இரு ஆட்டங்களிலும் கோல் அடித்து அசத்திய பயெட், 63-வது நிமிடத்தில் மவுஸாவிடம் இருந்து பெற்ற பாஸை இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு வெளியே சென்றது.

இந்த போட்டி டிரா ஆனதால் ஏ பிரிவில் 7 புள்ளிகளுடன் பிரான்ஸ் முதல் இடத்தையும், 5 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. யூரோ கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணி முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தற்போது தான் முன்னேறி உள்ளது.

நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி சி, டி அல்லது இ பிரிவில் 3-வது இடம் பிடிக்கும் அணியுடன் மோதும். அதேவேளையில் சுவிட்சர்லாந்து அணி நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி, போலந்து அல்லது வடக்கு அயர்லாந்து ஆகிய அணிகளில் ஏதாவது ஒரு அணியை எதிர்கொள்ளும்.

இன்றைய ஆட்டங்கள்

வடக்கு அயர்லாந்து - ஜெர்மனி

நேரம்: இரவு 9.30

உக்ரைன் - போலந்து

நேரம்: இரவு 9.30

குரோஷியா - ஸ்பெயின்

நேரம்: நள்ளிரவு 12.30

செக்குடியரசு-துருக்கி

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

Link to comment
Share on other sites

யூரோவில் வேல்ஸ் அபாரம்: ரஷ்ய கலகக்கும்பல் தலைவன் கைது!

யூரோ கால்பந்து தொடரில் வேல்ஸ் அணி ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் லீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியும் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

wales.jpg

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், பி பிரிவில் நேற்று டூலாஸ் நகரில் நடந்த ஆட்டத்தில்,  ரஷ்ய அணியுடன் வேல்ஸ் மோதியது. இந்த போட்டியில் வேல்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் பாதியில் 11 வது நிமிடத்தில் ஆரான் ராம்சே வேல்ஸ் அணிக்கான முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து 19வது நிமிடத்தில் டெயிலரும் பிற்பாதியில் 67வது நிமிடத்தில் காரத் பேலும் வேல்ஸ் அணிக்கான கோல்களை அடித்தனர். இதனால் பி பிரிவில் இருந்து வேல்ஸ் 6 புள்ளிகளுடன் 2வது சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியும் இந்த பிரிவில் இருந்து 5 புள்ளிகள் பெற்று அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது. ரஷ்யா போட்டித் தொடரில் இருந்து வெளியேறியது.

‘இதற்கிடையே  கடந்த இரு நாட்களுக்கு முன் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய கால்பந்து ரசிகர்கள் சங்கத்  தலைவர் அலெக்சான்டர் ஸ்பிரிங்கின்  நேற்று போட்டி நடந்த டூலாஸ் நகரில் பிடிபட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவர், ஸ்பெயின் வழியாக மீண்டும் பிரான்சுக்குள் புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மார்செலி நகரில் நடந்த ரஷ்யா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் போட்டியின் போது ஏராளமான ரஷ்ய ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட, அலெக்சான்டர்தான் காரணமென்று குற்றஞ்சாட்டிய பிரெஞ்சு போலீஸ் அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.

http://www.vikatan.com/news/sports/65375-wales-beat-russia-euro-2016.art

Link to comment
Share on other sites

ஆடுகளத்தில் புகுந்து ரொனால்டோவுடன் செஃல்பி எடுத்த ரசிகரை இழுத்து சென்ற போலீஸ் (வீடியோ)

ஐரோப்பா கால்பந்து போட்டியின் போது, போர்ச்சுகல் ரசிகர் ஒருவர் அதிரடியாக மைதானத்திற்குள் நுழைந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் செஃல்பி எடுத்துக் கொண்டார். அவரை காவல்துறையினர் இழுத்து சென்றனர்.

பாரிஸில், போர்ச்சுகல்– ஆஸ்திரியா மோதிய லீக் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. போட்டியின் போது, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் தவறவிட்டார். இதனால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார் ரொனால்டோ.



 

இந்தநிலையில் திடீரென ஒரு போர்ச்சுகல் ரசிகர் மைதானத்திற்குள் நுழைந்து ரொனால்டோவுடன் செஃல்பி எடுக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். அந்த ரசிகருடன் செஃல்பி எடுக்க முன்வந்த ரொனால்டோ சிரித்தபடி அவருக்குப் போஸும் கொடுத்தார். ரசிகரும் உற்சாகமாக செஃல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் அவரை காவல்துறையினர் இரண்டு பேர் சேர்ந்த இழுத்துச் சென்றனர். மைதானத்தை சுற்றி காவலர்கள் இருந்தபோதும், ரசிகர் ஒருவர் உள்ளே நுழைந்து செஃல்பி எடுத்துக் கொண்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

http://www.vikatan.com/news/sports/65397-police-captured-fan-who-too-selfie-with-ronaldo.art

Link to comment
Share on other sites

யூரோ 2016: நொக்-அவுட் சுற்றில் வேல்ஸ், இங்கிலாந்து
 
 

article_1466508432-LEADramyeiba.jpgபிரான்ஸில் இடம்பெற்று வரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு, குழு பியிலிருந்து வேல்ஸும் இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளன.

திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ரஷ்யாவுடனான போட்டியில் வேல்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தும் ஸ்லோவாக்கியாவுடனான போட்டியை இங்கிலாந்து சமநிலையில் முடித்துக் கொண்டதை தொடர்ந்துமே, வேல்ஸும் இங்கிலாந்தும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

வேல்ஸ், ரஷ்யா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் ரஷ்யாவைத் தோற்கடித்த வேல்ஸ், குழு பியிலிருந்து முதலாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. வேல்ஸ் சார்பாக, ஆரோன் ராம்ஸே, நீல் டெய்லர், கரித் பேல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர்.

1958ஆம் ஆண்டு உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகளின்போது, பீலே பெற்ற கோலினால், பிரேஸிலிடம் தோல்வியடைந்து வெளியேறிய பின்னர், சர்வதேசத் தொடர் ஒன்றின் நொக்-அவுட் சுற்றுக்கு வேல்ஸ் நுழையும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், முதற்தடவையாக யூரோ கிண்ணப் போட்டிகளில் பங்கேற்ற வேல்ஸ், தனது, இறுதி 16 அணிகளுக்‌கான சுற்றுப் போட்டியின்போது, குழு ஏயில் மூன்றாமிடம் பெற்றுள்ள (அல்பேனியா) அல்லது குழு டியில் மூன்றாமிடத்தைப் பெறும் (செக் குடியரசு அல்லது குரோஷியா அல்லது துருக்கி) அல்லது குழு சியில் மூன்றமிடத்தைப் பெறும் (ஜெர்மனி அல்லது போலந்து அல்லது வடக்கு அயர்லாந்தைச் ) எதிர்வரும் சனிக்கிழமை (25)  சந்திக்கவுள்ளது.

மறுகணம், இங்கிலாந்து, ஸ்லோவாக்கியா அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து அணியில் அணித்தலைவர் வெய்ன் ரூனி உள்ளிட்ட ஆறு பேர் மாற்றப்பட்டிருந்த நிலையில், இரண்டு அணிகளும் இப்போட்டியில் கோல்களை பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், குழு பியில் இரண்டாமிடம் பெற்றுள்ள இங்கிலாந்து, குழு எஃப்இல் இரண்டாமிடம் பெறும் அணியை, தனது இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்கவுள்ளது. குழு எஃப்இல் இரண்டாமிடம் பெறும் அணியாக, பெரும்பாலும் போர்த்துக்கல்லே இருக்கும் என்ற நிலையில், 2004ஆம் ஆண்டு யூரோ கிண்ணத்தின் போதும் 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போதும் போர்த்துக்கல்லே இங்கிலாந்தை வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் ஒஸ்திரியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய அணிகளும் குழு எஃப்இல் இரண்டாமிடத்தைப் பிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குழு நிலைப் போட்டிகளுடன் ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் லெயோனிட் ஸ்லூட்ஸ்கி பதவி விலக முன்வந்துள்ளார். இவரினது ஒப்பந்த காலம், யூரோ 2016 உடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குரோஷியா, செக் குடியரசு அணிகளுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற போட்டியில், இரசிகர்கள் குழப்பம் விளைவித்தமைக்காக, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பு, குரோஷியாவுக்கு 100,000 யூரோ அபராதம் விதித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/175231#sthash.8SScE7g7.dpuf
Link to comment
Share on other sites

யூரோவில் ஸ்பெயின் தோல்வி ;

யூரோ கால்பந்து தொடரில் குரோஷிய அணி  ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. யூரோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயினை குரோஷியா வீழ்த்தியுள்ளது.

rams.jpg

 டி பிரிவில் நடந்த இந்த ஆட்டத்தில், 7வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோல் அடித்தது. பெப்ரிகாஸ் கொடுத்த பாசை அல்வாரோ மாரட்டா எளிதாக கோலாக்கினார். இந்த கோலுக்கு 45வது நிமிடத்தில் குரோஷியாவின் கல்நிக் பதிலடி கொடுத்தார். ஸ்பெயினுக்கு 70வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. செர்ஜியோ ரமோஸ் அடித்த இந்த பெனால்டியை குரோஷியா கோல்கீப்பர் டன்ஜெல் அற்புதமாக டைவ் அடித்து தடுத்து விட்டார்.

ஆட்டம் முடியும் தருவாயில் 87வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெர்சிக் நேர்த்தியாக ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த பிரிவில் குரோஷியா 7 புள்ளிகளுடன் முதலிடத்தையும் ஸ்பெயின் 6 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்தது. நேற்று நடந்த பிற ஆட்டத்தில் துருக்கி 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசையும் போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரேனையும் தோற்கடித்தன.

.

557 ரசிகர்கள் கைது

இதற்கிடையே கடந்த 12ம் தேதி நடந்த இங்கிலாந்து- ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இவ்விரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் ஈடுபட்ட இரு  ரஷ்ய ரசிகர்களுக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  30 இங்கிலாந்து ரசிகர்களும், 7 வடக்கு அயர்லாந்து ரசிகர்களும், 5 வேல்ஸ் ரசிகர்களும் பிரான்சை விட்டு வெளியேற்றப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் இதுவரை 557 ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/65413-perisic-stuns-champions-with-late-winner.art

Link to comment
Share on other sites

குரேஷியாவிடம் சாம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி: இறுதி 16-ல் இத்தாலியுடன் மோதல்

ஆர்.முத்துக்குமார்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
பெனால்டி கிக் கோல் வாய்ப்பை தவறவிட்ட ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ். | படம்: ஏ.எஃப்.பி.
பெனால்டி கிக் கோல் வாய்ப்பை தவறவிட்ட ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ். | படம்: ஏ.எஃப்.பி.

பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரில் குரேஷியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்ற கடந்த முறை சாம்பியன் ஸ்பெயின் அணி இதனால் இறுதி-16 சுற்றில் இத்தாலியை சந்திக்க நேரிட்டுள்ளது.

பிரிவு டி-யில் ஸ்பெயின் முதலிடம் பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குரேஷிய அணியின் இவான் பெரிசிக் அடித்த கடைசி நேர அதிர்ச்சி கோலினாலும், ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டதாலும் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.

ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்த போது செர்ஜியோ ரேமோஸ் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட, கடைசி 3 நிமிடங்கள் இருக்கும் போது பெரிசிக் கோல் அடித்து வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

15 போட்டிகளாக தோல்வியடையாத யூரோ சாதனை ஸ்பெயினை பொருத்தவரை முடிவுக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் ஸ்பெயின் அணியே ஆதிக்கம் செலுத்தியது, 7-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இதுவும் இந்தத் தொடரில் ஸ்பெயின் வீரர்கள் செயல்படுத்தும் அபாரமான துல்லியம் மற்றும் சாதுரியத்துக்கு மற்றொரு உதாரணம், எந்த ஒரு அணியும் ஸ்பெயின் போல் இந்தத் தொடரில் இவ்வளவு துல்லியமான கால்பந்தாட்டத்தை ஆடவில்லை என்றே கூறிவிடலாம், என்ன இந்தப் போட்டி இனியெஸ்டாவின் ஆதிக்கம் கடந்த போட்டிகளை ஒப்பிடும்போது சற்றே குறைந்தது.

டேவிட் சில்வா 7-வது நிமிடத்தில் பந்தை குரேஷிய எல்லைக்குள் கொண்டு சென்றார், பிறகு ஒரு சற்றும் எதிர்பாராத ரிவர்ஸ் பாஸ் மூலம் செஸ்க் பேபர்காஸுக்கு அனுப்பினார். அவர் குறுக்காக பந்தை எடுத்துச் சென்றதை யாரும் கவனிக்காதது போல் இருந்தது, கடைசியில் அவர் செய்த கிராஸ் பேக் போஸ்ட்டுக்கு வந்த மொராட்டாவினால் கோலாக மாற்றப்பட்டது. இந்தத் தொடரில் இவரது 3-வது கோலாகும் இது. காரத் பேலுடன் சரிசமமாக நிற்கிறார் மொராட்டா.

ஒரு அணியாகத் திரண்டு ஆடும் தங்கள் திட்டத்தில் சற்றும் சுணக்கம் ஏற்படாத ஸ்பெயின் 2-வது கோலையும் அடித்திருக்கும், ஆனால் இம்முறை சில்வாவின் கிராஸை நொலிட்டோ கோலுக்கு சற்று வெளியே அடித்தார். இன்னொரு புறம் குரேஷியா தனது அச்சுறுத்தல் ஆட்டத்தையும் கைவிடவில்லை, ஸ்பெயின் அணி மீதான ‘பிரபை’ குறித்து கவலைப்படாமல் ஆடியதால் குரேஷியா தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை ஆடமுடிந்தது.

ஸ்பெயின் தனது 2-வது கோலுக்காக தேடிக்கொண்டிருக்கும் போது குரேசியா சமன் செய்தது. பெரிசிக் கிராஸ் ஒன்று காலினிச்சிடம் வர ரேமோஸைக் கடந்து அவர் பந்தை எடுத்து வந்து ஸ்பெயினின் டி ஜியாவைத் தாண்டி கோலாக மாற்றினார் 1-1.

2-வது பாதியில் குரேஷியா தன்னம்பிக்கையுடன் தொடங்கியது, முதலில் டாரிஜோ ஸ்ரணாவின் கிராஸை ஸ்பெயினின் டேவிட் டி ஜியா தட்டி விட்டார், பிறகு டின் ஜெட்வஜ் அதே பந்தை அடித்ததையும் தடுத்தார்.

ஆனால் 72-வது நிமிடத்தில் தங்களுக்கு எதிராக அநீதி பெனால்டி ஸ்பெயின் சார்பாக வழங்கப்பட்டதாக குரேஷியா வருந்தியிருக்கக் கூடும். இனியெஸ்டா அடித்த அபாரமான தூக்கி அடித்த பாஸை சில்வா விரட்டினார். ஆனால் அவருக்கு குரேஷிய வீரர் சைமி வ்ரசாலிகோ கடும் நெருக்கடி கொடுக்க கீழே விழுந்தார் சில்வா.

இதற்கு ஸ்பாட் கிக் கொடுக்கப்பட்டது. கேப்டன் ரேமோஸ் பெனால்டி ஷாட்டை சரியாக அடிக்கவில்லை, குரேஷிய கோல் கீப்பர் சுபசிச் சுலபமாக தடுத்து விட்டார். கேப்டன் ரேமோஸ் கால்பந்து வாழ்வில் இது பெரிய கரும்புள்ளியாகவே பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.

இது நடக்கும் போது ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்தன. ஆனால் ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருக்கும்போது பெரிசிக் அருமையான கோல் ஒன்றை அடிக்க குரேஷியா 2-1 என்று வெற்றி பெற்று குரூப் டியில் முதலிடம் பிடித்து இறுதி 16 சுற்றில் பெரிய அணிகளை சந்திப்பதை தவிர்த்துள்ளது, ஸ்பெயின் இத்தாலி அணிகள் திங்கட்கிழமை மோதுகிறது.

http://tamil.thehindu.com/sports/குரேஷியாவிடம்-சாம்பியன்-ஸ்பெயின்-அதிர்ச்சித்-தோல்வி-இறுதி-16ல்-இத்தாலியுடன்-மோதல்/article8760198.ece

Link to comment
Share on other sites

செய்தியாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ

Ronaldo

 

போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னிடம் கேள்வி கேட்ட தொலைக்காட்சி செய்தியாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசினார் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்த்ரியா அணியுடனான போட்டியில், பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால், அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் மீடியாக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவருக்கு அழுத்தத்தை உருவாக்கி வருகின்றன. தனியார் டிவி ரிப்போர்டர் ஒருவர், ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாரா என்று ரெனால்டோவிடம் கேள்வி கேட்டார். ஆனால் ஆஸ்திரியாவுடனான போட்டி டிராவில் முடிந்த கோபத்தில் இருந்த ரொனால்டோ, ரிப்போர்டரிடம் இருந்து ஆடியோ மைக்கை பிடுக்கி குளத்தில் வீசிவிட்டு சென்றார்.

 

போர்ச்சுகல் அணி தற்போது நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இதுவரை வெற்றி பெறவில்லை. ஹங்கேரியுடனான போட்டியில் வென்றால் மட்டுமே அந்த அணியால் அடுத்தச்சுற்றுக்கு செல்ல முடியும் இல்லாவிட்டால் தொடக்கநிலை சுற்றோடு வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே ஹங்கேரியுடன் வெற்றி பெற்று தங்கள் அணியை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லும் முனைப்பில் ரொனால்டோ தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/sports/10/33783/cristiano-ronaldo-throws-television-reporters-microphone-into-lake

Link to comment
Share on other sites

அடுத்த  சுற்றுக்கு முன்னேறி உள்ள நாடுகளின் போட்டி விபரம்

25.06.     15.00 மணிக்கு      சுவிஸ்லாந்து vs போலந்து

               21.00 மணிக்கு      குரோசியா   vs போர்த்துக்கல்

 

26.06     18.00 மணிக்கு     ஜெர்மனி   vs ஸ்லோவாகியா

 

27.06    18.00 மணிக்கு   இத்தாலி vs ஸ்பெயின்

             21.00 மணிக்கு   இங்கிலாந்து vs ஐஸ்லாந்து

Link to comment
Share on other sites

நான்கு யூரோ தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ சாதனை!

நான்கு ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் ரொனால்டோ பெற்றுள்ளார்.

rans.jpg

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில்,  நேற்று போர்ச்சுக்கல் அணி,  ஹங்கேரி அணியை எதிர்கொண்டது. ஐரோப்பிய கோப்பையில் ரொனால்டோ களமிறங்கும் 17வது ஆட்டம் இதுவாகும். இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்தப் போட்டியில் ரொனால்டோ 49 மற்றும் 61 வது நிமிடங்களில் என இரு கோல்கள் அடித்தார்.

இதன் மூலம் 4 ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். அதாவது 2004,2008,2012,2016 ம் ஆண்டுகளில் தொடர்ந்து கோல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். யூரோவில் இதுவரை ரொனால்டோ 6 கோல்கள் அடித்துள்ளார். போர்ச்சுக்கல் ஜாம்பவான் நுனோ கோம்ஸ், யூரோவில் அதிகபட்சமாக 7 கோல்களை அடித்துள்ளார்.

http://www.vikatan.com/news/sports/65464-ronaldo-sets-new-european-record.art

 

13533015_1190647250954514_43483715577537

Link to comment
Share on other sites

ஊடகவியலாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ ( காணொளி இணைப்பு)

 

Cristiano-Ronaldo-throws-microphone-into

கால்பந்து வீரர் ரொனால்டோவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அவருடைய மைக்கை பிடுங்கி அருகில் இருந்த குளத்துக்குள் வீசிய சம்பவம் சமூக வலைத்தளங்கில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி சமநிலையில் முடிந்தது. 

 

இந்நிலையில் தனியார் தொலைகாட்சிய சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் ரொனால்டோவிடம் ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார். 

அப்போது கோபத்தில் இருந்த ரொனால்டோ, ஊடகவியலாளரிடம் இருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளார்.

http://www.virakesari.lk/article/8002

Link to comment
Share on other sites

யூரோ 2016 கால்பந்து: நாக் அவுட் சுற்று அட்டவணை

 
கடந்த யூரோ சாம்பியன் ஸ்பெயினின் தோல்வியடையாத தொடர் சாதனைக்கு முற்றுப் புள்ளி வைத்த குரேஷிய வீரர் பெர்சிக் கோல் அடித்து முடித்த பிறகு. | படம்: கெட்டி இமேஜஸ்.
கடந்த யூரோ சாம்பியன் ஸ்பெயினின் தோல்வியடையாத தொடர் சாதனைக்கு முற்றுப் புள்ளி வைத்த குரேஷிய வீரர் பெர்சிக் கோல் அடித்து முடித்த பிறகு. | படம்: கெட்டி இமேஜஸ்.

பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடர் அதன் இறுதி-16 சுற்று நிலையை எட்டியுள்ளது.

இறுதி 16 சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்: பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், வேல்ஸ்.

தகுதி பெற்ற 3-ம் இடம் பிடித்த அணிகள்: நாதர்ன் அயர்லாந்து, போர்ச்சுகல், அயர்லாந்து குடியரசு, ஸ்லோவேக்கியா

வெளியேறிய அணிகள்: அல்பேனியா, ஆஸ்திரியா, செக்.குடியரசு, ருமேனியா, ரஷ்யா, ஸ்வீடன், துருக்கி, உக்ரைன்.

இறுதி 16 சுற்று போட்டி அட்டவணை:

தேதி அணிகள் நேரம்

ஜூன் 25 சுவிட்சர்லாந்து - போலந்து மாலை 6.30

ஜூன் 25 குரோஷியா - போர்ச்சுக்கல் இரவு 9.30

ஜூன் 26 வேல்ஸ் - வடக்கு அயர்லாந்து நள்ளிரவு 12.30

ஜூன் 26 ஹங்கேரி - பெல்ஜியம் மாலை 6.30

ஜூன் 26 ஜெர்மனி - ஸ்லோவேக்கியா இரவு 9.30

ஜூன் 27 இத்தாலி - ஸ்பெயின் நள்ளிரவு 12.30

ஜூன் 27 பிரான்ஸ் - அயர்லாந்து இரவு 9.30

ஜூன் 28 இங்கிலாந்து - ஐஸ்லாந்து நள்ளிரவு 12.30

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-கால்பந்து-நாக்-அவுட்-சுற்று-அட்டவணை/article8764828.ece?homepage=true

Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து; இத்தாலியை வீழ்த்தியது அயர்லாந்து- நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், வெளியேறியது சுவீடன்

 
 
இத்தாலி கோல்கீப்பரின் தடுப்பை மீறி தலையால் முட்டி கோல் அடிக்கும் அயர்லாந்தின் பிராடி. படம்: ஏஎப்பி
இத்தாலி கோல்கீப்பரின் தடுப்பை மீறி தலையால் முட்டி கோல் அடிக்கும் அயர்லாந்தின் பிராடி. படம்: ஏஎப்பி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் நடைபெற்றன. இ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இத்தாலி - அயர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 84-வது நிமிடத்தில் அயர்லாந்தின் வெஸ் கூலாகனின் கோல் அடிக்கும் முயற்சியை, இத்தாலி கோல் கீப்பர் சிறிகு தடுத்தார்.

ஆனால் அடுத்த நிமிடத்திலேயே அயர்லாந்தின் பிராடி, பந்தை அற்புதமாக தலையால் முட்டி கோல் அடித்தார். இத்தாலி அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

இந்த பிரிவில் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த அயர்லாந்து, 3-வது நிலையில் சிறந்த அணி என்ற அடிப்படையில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

இ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவீடனை 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. இந்த தோல்வியால் சுவீடன் தொடரில் இருந்து வெளியேறியது.

எப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஐஸ்லாந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 1-1 என ஆட்டம் சமனில் இருந்த நிலையில் இஞ்சுரி நேரத்தில் டிராஸ்டாசன் கோல் அடித்து ஐஸ்லாந்துக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். இந்த பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஐஸ்லாந்து நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ரொனால்டோ சாதனை

எப் பிரிவில் ஹங்கேரி - போர்ச்சுக்கல் இடையிலான ஆட்டம் 3 - 3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்கள் அடித்து ஆட்டம் டிராவில் முடிவடைய உதவினார். இந்த பிரிவில் ஹங்கேரி 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஹங்கேரிக்கு எதிராக கோல்கள் அடித்தன் மூலம் 4 யூரோ கோப்பை கால்பந்து தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். 2004,2008,2012,2016 ம் ஆண்டுகளில் தொடர்ந்து கோல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். யூரோவில் இதுவரை ரொனால்டோ 6 கோல்கள் அடித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-இத்தாலியை-வீழ்த்தியது-அயர்லாந்து-நாக்-அவுட்-சுற்றில்-போர்ச்சுக்கல்-வெளியேறியது-சுவீடன்/article8768257.ece

Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்று இன்று தொடக்கம்

 
 
kkkk_2908565f.jpg
 

காலிறுதி முனைப்பில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி, போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, போலந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, குரோஷியா, அயர்லாந்து, சுலோவேக்கியா, ஹங்கேரி, பெல்ஜியம், ஐஸ்லாந்து ஆகிய 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அல்பேனியா, ருமேனியா, ரஷ்யா, உக்ரைன், துருக்கி, செக் குடியரசு, சுவீடன், ஆஸ்திரியா ஆகிய அணிகள் வெளியேறின. நாக் அவுட் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தோல்வியை தழுவும் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.

சுவிட்சர்லாந்து - போலந்து

நாக் அவுட் சுற்றில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு செயின்ட் ஈட்டியன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - போலந்து அணிகள் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றில் முதல் முறையாக கால் பதித்துள்ள சிறிய அணியான போலந்து லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் 2-ல் வெற்றி பெற்றது. உலக சாம்பியனான ஜெர்மனிக்கு எதிராக டிரா செய்திருந்தது. இதனால் அந்த அணி சுவிட்சர்லாந்துக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். சுவிட்சர்லாந்து அணியில் நட்சத்திர வீரராக கிரெய்ன்ட் ஹகாவும், போலந்து அணியில் நட்சத்திர வீரராக ராபர்ட் லீவான்டோவ்ஸ்கியும் உள்ளனர்.

கரத் பாலே

பாரிஸ் நகரில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ் - வடக்கு அயர்லாந்து பலப்பரீட்சை நடத்து கின்றன. இரு அணிகளும் இந்த முறைதான் முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

வேல்ஸ் அணிக்கு நட்சத்திர வீரர் கரத் பாலே பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்த தொடரில் அவர் 3 கோல்கள் அடித்துள்ளார். இன்றும் அவர் அசத்தக்கூடும். வடக்கு அயர்லாந்தை சாதாரண அணி என்று கருதமுடியாது.

நாக் அவுட் சுற்றுக்கு அந்த அணி கடுமையாக போராடி முன்னேறி உள்ளது. தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக கையாளும் வடக்கு அயர்லாந்து இன்றைய ஆட்டத்தில் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கும்.

போர்ச்சுக்கல்-குரோஷியா

லென்ஸ் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு போர்ச்சுக்கல் - குரோஷியா அணிகள் மோதுகின்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி லீக் ஆட்டத்தில் வெற்றியே பெறாமல் 3 ஆட்டத்தையும் டிரா செய்தது.

முதல் 2 ஆட்டத்தில் 20 முறை இலக்கை நோக்கி பந்தை கொண்டு சென்றபோதிலும் கோல் அடிக்க முடியாமல் திணறிய ரொனால்டோ ஹங்கேரிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அற்புதமாக இரு கோல்கள் அடித்து மிரட்டினார். இதனால் அந்த அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

குரோஷியா லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் 2 ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. அந்த அணி வீரர்கள் ஆக்ரோஷ மான ஆட்டத்தை வெளிப் படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். இதனால் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற கூடுதலாக மெனக் கெட வேண்டியதிருக்கும். ரொனால்டோ மீண்டும் அசத்தினால் காலிறுதியில் நுழையும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-தொடர்-நாக்-அவுட்-சுற்று-இன்று-தொடக்கம்/article8772372.ece?homepage=true

Link to comment
Share on other sites

குரோஷியா வலுவான அணி: கிறிஸ்டியானோ ரொனால்டோ கருத்து

 
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

யூரோ கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் கிறிஸ்டியானோ ரெனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி, குரோஷியாவை எதிர்த்து விளையாடு கிறது. இந்நிலையில் குரோஷியா மிகவும் பலம் வாய்ந்த அணி என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

லீக் சுற்றின் கடைசி ஆட்டத் தில் ஹங்கேரிக்கு எதிராக இரு கோல்களை ஆக்ரோஷ மாக அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு கிறிஸ்டி யானோ ரொனால்டோ முற்றுப் புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தை டிரா செய்ய உதவிய அவர் போர்ச்சுக்கல் அணி முதல் சுற்றுடன் வெளியேறுவதை தடுத்தார்.

இதனால் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஹங்கேரி ஆட்டத்தில் கோல்கள் அடித்ததன் மூலம் நான்கு யூரோ தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.

இன்றைய ஆட்டத்தில் அவர் கோல் அடித்தால் யூரோ தொடரில் அதிக கோல்கள் அடித்துள்ள பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி யின் சாதனையை சமன் செய்வார். பிளாட்டினி 9 கோல்கள் அடித்துள்ளார். 8 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோவுக்கு இந்த சாதனையை நெருங்க ஒரு கோல் மட்டுமே தேவையாக உள்ளது.

எனினும் இன்றைய ஆட்டத்தில் ரொனால்டோ இந்த சாதனையை நிகழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனேனில் குரோஷியா பலம் வாய்ந்த அணி. லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி டி பிரிவில் முதல் இடத்தை குரோஷியா பிடித்திருந்தது.

இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, “சிறந்த அணியை நாங்கள் எதிர்கொள்கிறோம். வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் சம அளவில் உள்ளது. குரோஷியா கடினமான அணி, சிறந்த வீரர்களை கொண்டது. மற்ற அணிகள் ஸ்பெயினை சமாளிக்க முடியாத நிலையில், லீக் சுற்றில் ஸ்பெயினை குரோஷியா வீழ்த்தியுள்ளது. குரோஷியா அணியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்கள் பலத்தை நாங்கள் அறிவோம்’’ என்றார்.

போர்சுக்கல் பயிற்சியாளர் சான்டோஸ் கூறும்போது, “குரோஷியா அணி சுறா போன்றது. நாங்கள் தவிர்க்க நினைக்கும் அணிகளில் அதுவும் ஒன்று. ஸ்பெயின் அணி உள்ள பிரிவில் அந்த அணி முதலிடம் பிடித்துள்ளது.

இதில் இருந்தே அந்த அணியை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இரு கோல்கள் அடித்துள்ளதால் ரெனால்டோவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. எப்படியும் ரொனால்டோ நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர் தான், இந்த கோல்கள் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு ஊக்கமளிப் பதாக இருக்கும்’’ என்றார்.

அதிக வலிமையுடன் களமிறங்கும் விதமாக குரோஷியா அணியில் இன்று 5 மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ரியல் மாட்ரிட் கிளப்பில் ரொனால்டோவின் சக வீரரான லுகா மாட்ரிக் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கு கிறார். மேலும் மரியோ மான்ட்ஸூகிக்கும் இன்று களமிறக்கப்படுகிறார்.

http://tamil.thehindu.com/sports/குரோஷியா-வலுவான-அணி-கிறிஸ்டியானோ-ரொனால்டோ-கருத்து/article8772523.ece?homepage=true

Link to comment
Share on other sites

காலுறுதிக்கு முன்னேறியது போலந்து அணி

 

பாரிஸ்: யூரோ கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து அணியை 5-4 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி போலந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1550768

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.