Jump to content

இப்படியும் ஒரு போட்டோக்காரன்...


Recommended Posts

புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் கருவிகளை எளிதில் வாங்கக்கூடியவர்கள், வாங்கியபிறகு அதன் முழுபயன்பாட்டை தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள், அவர்களுக்கு உதவுபவர்தான் தாஸ் என்கின்ற தணிகாசலம் ஸ்ரீதர் தாஸ்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவரான தாஸ் அங்குள்ள அசோக் லேலண்டு நிறுவனத்தின் வெள்ளிவிழா ஊழியர். அங்கு வேலை பார்த்த நேரம் போக மீதி நேரம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிட்டாரில் ஆரம்பித்து போட்டோகிராபி வரை பல விஷயங்களை கற்றுக்கொண்டார்.

அதிலும் ஆப்பிள் ஐமேக் நிறுவனத்தில் இரண்டு வருடம் பைனல் கட் புரோ (fcp)வீடியோ எடிட்டிங் படித்து உயர் சான்றிதழ் பெற்றவர். இவருக்கு உள்ள நல்ல பழக்கம் தான் கற்றதை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் சொல்லித்தருவார்.

gallerye_132840283_1512154.jpg
prev.png

இதற்காகவே போட்டோக்காரன்.காம் என்ற வலைதளத்தை உருவாக்கியுள்ளார். இவரது வலைத்தளத்தில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் என்று இதுவரை 1250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து போட்டோ மற்றும் வீடியோக்களில் வரும் புதிய விஷயங்களை தெரிவித்து வருகிறார்.

வீடியோ எடிட்டிங் என்பது ஹார்டு ஒர்க் இல்லை ஸ்மார்ட் ஒர்க் அதில் உள்ள நுட்பத்தை புரிந்து கொண்டால் இரண்டு நாள் செய்யும் வேலை இரண்டு மணிநேரத்தில் செய்து முடிக்கலாம் நிறைய சம்பாதிக்கலாம். ஒரு வீடியோகிராபராக இருப்பவர் திறமையான வீடியோ எடிட்டராகவும் இருந்தால் அவருக்கு நிச்சயம் நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். இதெல்லாம் வெறும் வாய்வார்த்தை இல்லை நான் நடத்தும் இலவச பயிற்சி முகாமிற்கு வாருங்கள் பாருங்கள் என்று அவரது வலைத்தளத்தில் விளம்பரம் செய்திருந்தார்.
கடந்த வாரத்தில் ஒரு நாள் அவர் நடத்திய இலவச பயிற்சி முகாமிற்கு சென்றிருந்தபோது அவர் சொல்வதும் செய்வதும் உண்மை என்றேபட்டது. மூன்று மணி நேர வகுப்பும் உபயோகமாக இருந்தது பல தொழில்நுட்ப விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு குழுவாக அழைத்தாலும் வந்து பயிற்சி வழங்க தயாராக இருக்கிறார்.

வீடியோ எடிட்டிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்,அவரது போட்டோக்காரன்.காம் வலைத்தளம் பற்றி புரிந்து கொள்ளவும் அவரிடமே பேசலாம் அவரது எண்:9791162927.
-எல்.முருகராஜ்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1512154

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.