Jump to content

தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும்(நிலாந்தன்)

Recommended Posts

1400297_10208724364295621_39277147973962
தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான
விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் கனடாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
கனடாவில் இடம்பெற்ற புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடலின் போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே தாயக அரசியல் நிலவரம்,மற்றும் போர்க்குற்ற விசாரணையினை எவ்வாறு அரசால் கொண்டுசெல்லப்படப்போகின்றது என்பது தொடர்பிலும் நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்களுக்காக இணைக்கிறோம்.
 
Link to comment
Share on other sites

இந்த நிகழ்விற்கு நான் செல்லவில்லை ஆனால் நேற்று ஒரு கலந்துரையாடல் வைத்து மனம விட்டு பேசினோம் .

நாட்டில் இருப்பதால் வெளிப்படையாக பேச சற்று தயங்கினாலும் கூட்டமைப்பு அரசியலில் நிலாந்தன் சற்றும் திருப்தியில்லை என்று அவர் பேச்சில் அப்பட்டமாக தெரிந்தது .

மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்தபின் பாரிய மாற்றங்கள் நாட்டில் வந்தாலும் தமிழர்களுக்கான தீர்வு என்ற எதையும் வைக்கஅவர்களுக்கு விருப்பமில்லை ஆனால் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் செயல்களில் இறங்கி அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தை குறைத்து தீர்வை இழுத்தடிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது என்றார் ,

அதனால் சர்வதேசத்தை எமக்கான தீர்வு வைக்க நாங்கள் தான் போராடவேண்டும் என்பதுதான் அவர் கருத்து .

பல விடயங்கள் சற்று குழப்பமாகத்தான் அவர் பதில் இருந்தது .எதிர்பார்த்த திருப்தி அந்த சந்திப்பில் எனக்கு ஏற்படவில்லை .

Link to comment
Share on other sites

11218800_1155286404502750_12747645141191

நிலாந்தன் ,ஷோபா ,ரகீம் முரளி எல்லோரும் நிற்கின்றார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் உண்மையை உள்ளதை விபரித்துள்ளார். ஆனாலும் புலம்பெயர்ந்த ஒருசிலர் திருந்த வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, Sakkaravarththi Jaffna said:

தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான

விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும்

இதை எல்லோரும் சொல்லி வகுப்பெடுக்கின்றார்கள் ,பூனைக்கு யார் மணிகட்டுவது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நிலாந்தன் உண்மையை உள்ளதை விபரித்துள்ளார். ஆனாலும் புலம்பெயர்ந்த ஒருசிலர் திருந்த வாய்ப்பில்லை.

இவர் சொல்லுறதைத்  தானே நாங்க எல்லாம் யாழ் களத்தில் பக்கம் பக்கமா சொல்லுறம்.. அதைக் கேட்க நாதியற்றவர்கள்.. போட்டோ பிடிக்க மட்டும் முன்னாடி போய் குந்திடுறார்கள். நானும் நானும் என்று ஊருக்கு விடுப்புக்காட்ட. வேற ஒரு மண்ணாங்கட்டி அரசியலும் தெரியாது.. உதுங்க சிலதுக்கு. எல்லாம் ஓசி விளம்பரத்துக்கு மட்டுமே.tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, arjun said:

நாட்டில் இருப்பதால் வெளிப்படையாக பேச சற்று தயங்கினாலும் கூட்டமைப்பு அரசியலில் நிலாந்தன் சற்றும் திருப்தியில்லை என்று அவர் பேச்சில் அப்பட்டமாக தெரிந்தது .

மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்தபின் பாரிய மாற்றங்கள் நாட்டில் வந்தாலும் தமிழர்களுக்கான தீர்வு என்ற எதையும் வைக்கஅவர்களுக்கு விருப்பமில்லை ஆனால் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் செயல்களில் இறங்கி அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தை குறைத்து தீர்வை இழுத்தடிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது என்றார் ,

என்னண்ணை செய்வது ...நாட்டில் இருந்து வந்திருக்கிறார் ...அரசியல் ஆய்வாளர் பெயர்  வேறு...... உண்மையை தானே சொல்லவேண்டும் .....
வெட்டுவோம் ....புடுங்குவோம் ...சிங்களவன் தீர்வை தட்டில் வைத்துகொண்டிருக்கிறான் எடுக்க எங்களுக்கு தான் மனசில்லை என்று கதையடிக்க 
முன்னாள் / இந்நாள் கூத்தமைப்பு எம்பீக்களை கூப்பிட்டிருக்க வேண்டும்..

9 hours ago, arjun said:

அதனால் சர்வதேசத்தை எமக்கான தீர்வு வைக்க நாங்கள் தான் போராடவேண்டும் என்பதுதான் அவர் கருத்து .

பல விடயங்கள் சற்று குழப்பமாகத்தான் அவர் பதில் இருந்தது .எதிர்பார்த்த திருப்தி அந்த சந்திப்பில் எனக்கு ஏற்படவில்லை

அதானே பார்த்தேன் ....சம்மும் சும்மும் பிரிச்சு மேய்கிறார்கள் ...தீர்வுக்கு இன்னும் ஒரு இன்ச் இடைவெளியில் தான் நிற்கிறோம் ....நாங்கள் கடப்பதா அவர்கள் கடப்பதா என்பதில் தான் பிரட்சினையே என்று கண்டபடிக்கு கப்சா விட்டு ...புலிகளையும் சகட்டுமேனிக்கு போட்டு தாக்கியிருந்தால்  இவரை போல ஒரு நல்ல, வல்ல ஆய்வாளரை வாழ்நாளிலேயே கண்டிருந்திருக்கமாட்டீர்கள். இந்தாள் உண்மையை பேசிப்போட்டுது  அதனால ஆளுமையும் குறைஞ்சிபோட்டுது  .....  எவ்வளவற்றை பார்த்துவிட்டோம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.