Jump to content

IPL 9 செய்திகள் கருத்துக்கள்


Recommended Posts

4 புள்ளிகள் பெற்றுள்ள அணியுடன் இணைய வேண்டாமா? - வெற்றி குறித்து தோனி

 

 
தீபக் ஹூடா கொடுத்த கேட்சைப் பிடித்த தோனி. | படம்: ஏ.எஃப்.பி.
தீபக் ஹூடா கொடுத்த கேட்சைப் பிடித்த தோனி. | படம்: ஏ.எஃப்.பி.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களது 6-வது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய புனே அணி 2-வது வெற்றியைப் பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

தற்போது 4 புள்ளிகளில் புனே அணியும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உள்ளன. இந்த அணிகளுக்குக் கீழே கிங்ஸ் லெவன் பஞ்சாப் 1 வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக தாமதமாகத் தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை, முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 118/8 என்றி கட்டுப்பட்டது. தவண் மட்டுமே அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். புனே அணியில் அசோக் டிண்டா 3 விக்கெட்டுகளை 23 ரன்களுக்குக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய புனே அணி 11 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது, ஆனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி புனே அணி இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியைக் காட்டிலும் 34 ரன்கள் அதிகம் எடுத்திருந்ததால் வெற்றி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களையும் டு பிளெசிஸ் 30 ரன்களையும் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து தோனி கூறும்போது, “எங்களுக்கு இந்த வெற்றி மிக முக்கியமானது. சில அணிகள் 4 புள்ளிகளுடன் உள்ளன, எனவே நாங்கள் அவர்களுடன் முதலில் இணைய வேண்டும். பிட்ச் 40 ஒவர்களும் நல்லபடியாக இருந்ததால் நாங்கள் முதலில் பவுலிங் செய்ய விரும்பினோம்.

நிலைமைகளை பவுலர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான லெந்தில் பந்தை இறக்கினர். அஸ்வினும் அவர் இயல்பாக எப்படி வீசுவாரோ அப்படி வீச முடிந்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லையெனில் பேட்ஸ்மென்கள் எந்த ஒவரையும் அடித்து நொறுக்கும் உரிமம் பெற்று விடுவர். இந்த விஷயத்தில் இந்தப் போட்டி நன்றாக அமைந்தது.

பீல்டிங்கில் நாங்கள் சிறந்து விளங்கவில்லை. எங்களுக்கு அதிர்ட்ஷ்டமும் தேவை. எங்கள் அணியில் சராசரி முதல் மந்தமான பீல்டர்கள் சிலர் உள்ளனர். ஆகவே நாங்கள் கூடுதலாக 10-15 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த ஆட்டத்தில் பந்துகள் நல்ல பீல்டர்கள் கையில் சென்றன” என்றார் தோனி.

http://tamil.thehindu.com/sports/4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article8528170.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 209
  • Created
  • Last Reply

குஜராத் நிதான ரன் குவிப்பு: 173 ரன்கள் இலக்கு
13076902_1929606903932377_35001054092195

 

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லியை எதிர்த்து குஜராத் அணி முதலில் பேட் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஸ்மித்(53) & மெக்கல்லம்(60) சிறப்பான தொடக்கம் தந்தனர். ஸ்கோர் எகிறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற வீரர்கள் சொதப்ப 172 ரன்களை எடுத்தது குஜராத். டெல்லியின் மோரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்

Link to comment
Share on other sites

மும்பை - கொல்கத்தா இன்று மோதல்

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர் கொள்கிறது நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி.

கொல்கத்தா அணி 5 ஆட்டத்தில் விளையாடி 4 வெற்றிகளை பெற் றுள்ளது. இந்த தொடரில் மும்பை அணியுடன் 2-வது முறையாக மோதுகிறது கொல்கத்தா அணி. கடந்த 13-ம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8531339.ece

Link to comment
Share on other sites

வேகமான அரைச்சதம்; சனத்துடன் இணைந்தார் மொரிஸ்

 


 
 

வேகமான அரைச்சதம்; சனத்துடன் இணைந்தார் மொரிஸ்

நேற்றைய தினம் இடம்பெற்ற குஜராத் உடனான போட்டியில் கிரிஸ் மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் நேற்றைய தினம் மோதின.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணியின் தலைவர் சஹீர்கான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மக்கலம் 36 பந்துகளில் 60 ஓட்டங்களையும் ஸ்மித் 30 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டானர். டெல்லி தரப்பில் இம்ரான் தாஹீர் 3 விக்கெட்களையும், மொரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து 173 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி 16 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டீ கொக் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஏமாற்றமளித்தார். சாம்சன் 1 ஓட்டங்களுடனும், நாயர் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதனை தொடர்ந்து டுமினியுடன், பாண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. இருப்பினும் பாண்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி தோல்வி அடைந்துவிடும் என்றே கருதப்பட்டது.

அப்போது, டுமினியுடன், மொரிஸ் ஜோடி சேர்ந்தார். மொரிஸ் தொடக்கம் முதலே அடித்து விளையாடினார். டுமினி சீரான இடைவேளையில் ஓட்டங்களை சேர்த்தார். ஒரு கட்டத்திற்கு மேல் மொரிஸ் 6 ஓட்டங்களாக விளாச ஆரம்பித்தார்.

அதிரடியாக விளையாடிய மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் விளாசினார். மொரிஸின் மாயாஜாலத்தால் ஆட்டம் டெல்லியின் பக்கம் திரும்பியது.

இதன்மூலம் டி20 போட்டிகளில் மூன்றாவது அதிவேக அரைச்சதம் எனும் சாதனையை படைத்தார். அத்துடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் யுவராஜ் சிங்கால் பெறப்பட்ட 12 பந்துகிலான அசை்சதமே சாதனையாக உள்ளது.

சிறப்பாக விளையாடி வந்த டுமினி 48(43) ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அப்போது டெல்லி அணி 17.1 ஓவர்களில் 144 ஓட்டங்களை எடுத்திருந்தது. தொடந்து அதே ஓவரில் மொரிஸ் இரண்டு நான்கு ஓட்டங்களை விளாசினார். கடைசி 2 ஓவர்களில் 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19 ஆவது ஓவரை பிரவீன் குமார் வீசினார். மிகவும் கட்டுக் கோப்பாக வீசி 4 ஓட்டங்களை மட்டுமே பிரவீன் விட்டுக் கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்திலே மொரிஸ் பவுண்டரி ஒன்றை விளாசினார். இதனால் கடைசி 5 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ஓட்டம் மட்டுமே எடுக்கப்பட்டது.

4 ஆவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். 5 ஆவது பந்திலும் இரண்டு ஓட்டங்கள் எடுக்க கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் பிராவோ நேர்த்தியாக பந்து வீச, அந்த பந்தில் இரண்டு ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொரிஸ் 32 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் நான்கு பவுண்டரிகளும், 8 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

பிரவீன் குமார் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். குல்கர்னி 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்தது. இதனால் ஒரு ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. சுரேஷ் ரெய்னாவின் குஜராத் அணி தனது 5 ஆவது வெற்றியை பெற்றுக்கொண்டது.

http://newsfirst.lk/tamil/2016/04/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

Link to comment
Share on other sites

சென்னை இல்லாத ஐபிஎல் கிரிக்கெட்டை பார்க்க ஆளில்லை.. டிவி டி.ஆர்.பி மளமள சரிவு
 
மும்பை: நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாக டிவி சேனல் டி.ஆர்.பி ரேட்டிங் தெரிவிக்கிறது.
 
8 அணிகள் மோதும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சோனி குழுமம் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. போட்டி தொடங்கிய முதல் வார டி.ஆர்.பி. ரேட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
கடந்த ஐபிஎல் போட்டித்தொடரின் முதல் வாரத்தில் பதிவான டி.ஆர்.பி ரேட்டிங்கை ஒப்பிட்டால், இவ்வாண்டில் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரியவருகிறது.

 

 

27-1461754798-dhoni-pune.jpg

இங்கும் டோணிதான் இந்த முதல் வார போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டோணி தலைமையிலான ரைசிங் புனே அணிகள் நடுவேயான ஆட்டம்தான் அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. டெலிவிஷன் வியூவர்ஷிப் ரேட்டிங் கணக்குப்படி இது 3.24 புள்ளிகளாகும்.
 
27-1461754947-gautam34.jpg
சரிவு இதற்கு அடுத்தபோட்டி கொல்கத்தா மற்றும் டெல்லி நடுவேயானது. இப்போட்டிக்கான ரேட்டிங் 2.55 புள்ளி என்ற அளவில் சரிந்தது.
 
சென்னை இல்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்களிலும் கணிசமான ரசிகர்கள் இருந்தனர். தங்கள் மாநில அணிக்கு அடுத்தபடியாக, எல்லோருமே ஏகோபித்த தேர்வாக சென்னையை ரசித்தனர். ஆனால் இவ்வாண்டு சென்னை அணியால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாதது ரசிகர்களை துவள செய்துள்ளது.
 
அதிசயம் நிகழுமா ஐபிஎல் தொடரில் கெயில் புயல் வீசுவது போன்ற ஏதாவது அதிரடி சம்பவங்கள் நடந்தால் போட்டித்தொடருக்கான பார்வையாளர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
Link to comment
Share on other sites

கிறிஸ் மோரிஸ் இன்னிங்ஸ்: ரெய்னா, ஜாகீர் கான் பாராட்டு

 

 
8 சிக்சர்களை விளாசி ஐபிஎல் 3-வது அதிவேக அரைசதம் சாதித்த கிறிஸ் மோரிஸ். | படம்: சந்தீப் சக்சேனா.
8 சிக்சர்களை விளாசி ஐபிஎல் 3-வது அதிவேக அரைசதம் சாதித்த கிறிஸ் மோரிஸ். | படம்: சந்தீப் சக்சேனா.

டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 32 பந்துகளில் 82 ரன்கள் விளாசியது பற்றி வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா, தோல்வியடைந்த டெல்லி அணி கேப்டன் ஜாகீர் கான் ஆகியோர் பாராட்டினர்.

பந்து வீச்சில் ஒரே ஓவரில் மெக்கல்லம், ரெய்னா ஆகியோரை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அதிரடிக்கு செக் வைத்த கிறிஸ் மோரிஸ் பிறகு பேட்டிங்கின் போது 17 பந்துகளில் அரைசதம் அடித்து 3-வது அதிவேக ஐபிஎல் அரைசத சாதனையை நிகழ்த்தி கடைசியில் 32 பந்துகளில் 8 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், நம்ப முடியாத நிலையிலிருந்து வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தார் கிறிஸ் மோரிஸ், ஆனால் பிரவிண் குமார் வீசிய அதிஅற்புத 19-வது ஓவர் மற்றும் பிராவோ வீசிய அருமையான கடைசி ஓவர் ஆகியவற்றினால் குஜராத் லயன்ஸ் 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

கிறிஸ் மோரிஸ் இறங்கும் போது 56 பந்துகளில் 116 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. அதுவும் 6-ம் நிலையில் களமிறங்கி 2-வது பந்தையே சிக்சருக்குத் தூக்கினார். மோரிஸின் முதல் 2 சிக்சர்களால் 48 பந்துகளில் 101 என்ற இலக்கு 42 பந்துகளில் 85 என்று ஆனது. பிறகு டாம்பேயை ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் விளாசியதன் மூலம் 5 ஓவர்களில் 57 ரன்கள் என்று குறைந்தது. 17வது ஓவரில் டிவைன் ஸ்மித்தை 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுக்க 3 ஓவர்களில் 29 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. அதன் பிறகுதான் 19வது ஓவரில் பிரவீன் குமார் யார்க்கர்களின் துல்லியம் பேச 4 ரன்களேதான் வந்தது, கடைசி ஓவரில் பிராவோ அதே பாணியைப் பின்பற்றி குஜராத் லயன்ஸ் அணிக்கு த்ரில் வெற்றி கிட்டியது.

கிறிஸ் மோரிஸின் இந்த இன்னிங்ஸ் பற்றி சுரேஷ் ரெய்னா கூறும்போது, “மோரிஸ் அருமையாக பேட் செய்தார். 15-வது ஓவரிலிருந்து நாங்கள் போட்டியை இழப்பதாகவே கருதினோம். பிரவீண் குமார் அருமையாக வீசினார், பிறகு பிராவோ தனிச்சிறப்பாக வீசினார். பனிப்பொழிவு பிரச்சினை ஏற்படுத்தியது, ரிஷப் பண்டை வீழ்த்தியதற்காக பாக்னரை பாராட்டுவது தகும். டாம்பே 2 ஓவர்கள் வீசியிருக்கலாம் ஆனால் மோரிஸ் அவரை எளிதில் விளாசினார். பிறகு ஸ்மித்திடம் சென்றேன் அவரும் அடி வாங்கினார். பிரவீண் குமார் யார்க்கர்களை சிறப்பாக வீசி வருகிறார். தவால் குல்கர்னியும் நன்றாக வீசினார். பந்து வீச்சாளர்களுடன் கடுமையாக உழைத்த ஹீத் ஸ்ட்ரீக்குக்கு நன்றி” என்றார்.

ஜாகீர் கான் கூறும்போது, “அருமையான போட்டி, இதிலிருந்து நிறைய தன்னம்பிக்கை அம்சங்களை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். டிவைன் ஸ்மித், மெக்கல்லம் காட்டடி அடித்த பிறகு ஆட்டத்தைத் திருப்பியது சிறப்பு வாய்ந்தது. மோரிஸ் பேட் செய்ததைப் பார்க்கும் போது வெற்றி நிச்சயம் என்றே நினைத்தோம். ஜே.பி.டுமினி அருமையாக பேட் செய்தார். மந்தமாகத் தொடங்கி நெருக்கமாக வந்தோம். பீல்டிங்கில் சில வாய்ப்புகளை உருவாக்கினோம் ஆனால் சில விஷயங்கள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. பந்து வீச்சிலும் மோரிசின் அந்த ஒரு ஓவர் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. பேட்டிங்கில் அவரும், டுமினியும் கூட்டு சேர்ந்து எடுத்த ரன்கள் எங்களை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்தது. இந்தத் தொடரில் இன்னும் செல்ல வேண்டியுள்ளது, ஆனால் அணியில் உற்சாகம் குன்றவில்லை” என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8532776.ece?homepage=true

Link to comment
Share on other sites

டோணியின் புனே அணிக்கு மற்றொரு ஷாக்.. பீட்டர்சனை தொடர்ந்து டுப்ளசிஸ் விலகல்
 
Pune's Faf du Plessis ruled out of IPL 2016

 புனே: டோணி தலைமையிலான புனே ஐபிஎல் அணிக்கு மற்றொரு சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் டுப்ளசிஸ் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார்

.ஏற்கனவே இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன், காயத்தால் முழுமையாக விலகிய நிலையில், டுப்ளசியும் விலகுவதாக அறிவித்து தாயகம் திரும்பியுள்ளார்.

கை விரல் முறிவு இதற்கான காரணமாக கூறப்படுகிறது.நடப்பு சீசனில் புனேக்காக 6 போட்டிகளில் களமிறங்கிய டுப்ளசிஸ் 2 அரை சதம் உட்பட 206 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருந்தார்.

பேட்டிங்கில் தடுமாறி வரும் புனே அணிக்கு, டுப்ளசிஸ் இல்லாதது மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நாளை, ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியுடன், புனே மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

பொல்லார்டின் விளாசலில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

 

கொல்­கத்­தா­வுக்கு எதி­ரான போட்­டியில் பொல்­லார்டின் அதி­ரடி ஆட்­டத்­தினால் மும்பை இந்­தியன்ஸ் அணி 6 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது.

241267.jpg

நேற்று மும்பை வான்­கடே மைதா­னத்தில் நடை­பெற்ற 24ஆவது ஐ.பி.எல்.லீக் போட்­டியில் மும்பை மற்றும் கொல்­கத்தா அணிகள் மோதிக்­கொண்­டன.

இந்­தப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடக் கள­மி­றங்­கிய கொல்­கத்தா அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக உத்­தப்பா மற்றும் அணித் தலைவர் கம்பீர் ஆகியோர் கள­மி­றங்­கினர்.

இந்த ஜோடி சிறப்­பான ஒரு ஆரம்­பத்தைக் கொடுக்க 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 174 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது கொல்­கத்தா. இதில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கிய உத்­தப்பா (36)இ கம்பீர் (59) மற்றும் யாதவ்(21)இ ரஸல் (22) என ஓட்­டங்­களைச் சேர்த்­தனர்.

அதைத் தொடர்ந்து 175 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் கள­மி­றங்­கிய ரோஹித் ஷர்மா தலை­மை­யி­லான மும்பை இந்­தியன்ஸ் அணி 18 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 178 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

மும்பை இந்­தி­யன்ஸின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் பட்டேல் ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் பட்டேல் 1 ஓட்­டத்­துடன் வெளி­யேறஇ அடுத்து வந்த அம்­பத்தி ராயுடு 32 ஓட்­டங்­களை விளா­சினர். அதன்­பி­றகு கள­மி­றங்­கிய பாண்­டியா (6)இ பட்லர்(15) ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க அணி இக்­கட்­டான நிலைக்கு தள்­ளப்­பட்­டது.

அதன்­பி­றகு அணித் தலைவர் ரோஹித் ஷர்­மா­வுடன் ஜோடி சேர்ந்த பொல்லார்ட் இறு­தி­வரை களத்தில் நின்று அணியை வெற்­றி­பெ­ற­வைத்தார். இதில் ரோஹித் ஷர்மா 49 பந்துகளில் 68 ஓட்டங்களையும்இ அதிரடியாக ஆடிய பொல்லார்ட் 17 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும் பெற்று களத்தில் நின்றனர்.

இறுதியில் மும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

http://www.virakesari.lk/article/5738

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., கிரி்க்கெட்: குஜராத் அணிக்கு 196 ரன் இலக்கு
 


புனே: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் புனேவில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும், புனே அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய புனே அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் ஸ்மித் ஆபாரமாக ஆடி 101 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ராஹானே அரைசதம்(53) அடித்தார். தோனி 30 ரன் எடுத்தார். இதனையடுத்து குஜராத் அணிக்கு 196 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1512181

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., கிரிக்கெட்:குஜராத் அணிக்கு 6-வது வெற்றி
 

புனே: புனே அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனே வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் வீணானது.

இந்தியாவில் ஒன்பதாவது பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. புனேயில் நடந்த போட்டியில் தோனியின் புனே, ரெய்னாவின் குஜராத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

 

புனே அணிக்கு சவுரப் திவாரி (1) ஏமாற்றினார். ரகானே (53) அரை சதம் கடந்தார். சிறப்பாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் (101) சதம் விளாசினார். முடிவில், புனே அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. தோனி (30), திசரா பெரேரா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதை விரட்டிய குஜராத் அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. மெக்கலம் 43 ரன்கள் எடுத்தார். டுவைன் ஸ்மித் (63) அரை சதம் கடந்தார். டிண்டா 'வேகத்தில்' தினேஷ் கார்த்திக் (33), டுவைன் பிராவோ (7) சிக்கினர். ஜடேஜா (0) ரன்-அவுட்டானார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ரெய்னா (34), இஷான் (0) அவுட்டானபோதும், குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பால்க்னர் (9), பிரவீண் குமார் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இத்தொடரில் ஏற்கனவே குஜராத் அணியிடம் வீழ்ந்த புனே அணி, இரண்டாவது தோல்வியை பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1512374
Link to comment
Share on other sites

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்தில் 51 ரன் விளாசல்: பொல்லார்டுக்கு ரோஹித் சர்மா பாராட்டு

 
 
பொல்லார்டு
பொல்லார்டு

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது.

காம்பீர் 59, உத்தப்பா 36, ஷாகிப் அல் ஹஸன் 21, சூர்யகுமார் யாதவ் 22, யூசுப் பதான் 19 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியின் பீல்டிங் இந்த ஆட்டத்தில் படுமோசமாக இருந்தது. காம்பீர் 8 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை மெக்லினஹன் தவறவிட்டார். உத்தப்பா, கிறிஸ் லின், யூசுப் பதான் ஆகியோர் கொடுத்த கேட்ச்களையும் மும்பை வீரர்கள் கோட்டை விட்டனர்.

இதையடுத்து 175 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 49 பந்தில், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்னும், பொலார்ட் 17 பந்தில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்னும் விளாசினர்.

13 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்த நிலையிலேயே பொல்லார்ட் களமிறங்கினார். அப்போது வெற்றிக்கு 42 பந்துகளில் 69 ரன்கள் தேவைப்பட்டது. 15-வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கினார் பொல்லார்ட். ஷாகிப் அல் ஹஸன் வீசிய இந்த ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டினார்.

அடுத்து சதீஷ் வீசிய 16-வது ஓவரில் 3 இமாலய சிக்ஸர்கள் பறக்கவிட அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் குவிக்கப்பட்டது. இரு ஓவர்களில் 33 ரன்கள் விளாசப்பட்டதால் மும்பை அணியின் வெற்றி பாதைக்காக பயணம் எளிதானது.

18-வது ஓவரை வீசிய ஜெயதேவ் உனத்கட் பந்து வீச்சையும் பதம் பார்த்தார் பொல்லார்ட். இந்த ஓவரிலும் அவர் 3 சிக்ஸர்கள் விளாச மும்பை அணி 12 பந்துகள் மீதமிருக்க 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சீசனில் கொல்கத்தா அணியை 2-வது முறையாக மும்பை வென்றது. மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 8 ஆட்டத்தில் விளையாடி உள்ள அந்த அணி 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “இது சிறந்த ஆட்டமாக இருந்தது. பொல்லார்ட் பார்ம் மிகவும் முக்கியமானது. அவர் சரியான நேரத்தில் உச்சக்கட்ட நிலைக்கு வந்துள்ளார். மும்பை மைதானத்தில் இது எங்களது கடைசி ஆட்டமாக இருக்க போகிறது. ரசிகர்கள் ஆதரவு இங்கு அபாரமாக இருந்தது. இதற்காக அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

அடுத்தது எங்கள் உள்ளூர் மைதானம் எது என்று தெரியவில்லை. நாங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விரைவில் தகவமைத்துக்கொள்வோம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-51-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8540625.ece

Link to comment
Share on other sites

கிங்ஸ் லெவனின் புதிய அணித் தலைவராக முரளி விஜய்

 

800f0c9a079844d932a0d8c5fe59bb98e37.jpg

 

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய அணித் தலைவராக முரளி விஜய் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

9வது  ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு தென்ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.அவரது தலைமையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மேலும் மில்லர் 6 போட்டிகளில் (15,9,7,6,9,30) மொத்தமே 76 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் தனது தலைவர் பொறுப்பை வேறு ஒருவரிடம் அவர் விட்டுக் கொடுக்க தயாராகவே இருந்தார்.இந்நிலையிலேயே டேவிட் மில்லருக்கு பதிலாக தமிழக வீரர் முரளிவிஜய் அந்த அணிக்கு புதிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இன்று இடம்பெறும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முரளி விஜய் புதிய தலைவராக களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது

http://onlineuthayan.com/sports/cricket/NUQrY0xaV3NGejg9

Link to comment
Share on other sites

டில்லி அணி பதிலடி

 

புதுடில்லி: கோல்கட்டா அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் ஒன்பதாவது பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. டில்லியில் இன்று நடந்த போட்டியில் கோல்கட்டா, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

கருண் அரை சதம்:

டில்லி அணிக்கு குயின்டன் (1), ஸ்ரேயாஸ் (0) ஏமாற்றினர். கருண் நாயர் (68), பில்லிங்ஸ் (54) அரை சதம் கடந்தனர். பிராத்வைட் 11 பந்தில் 34 ரன்கள் விளாசினார். முடிவில், டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. கோல்கட்டா சார்பில் ரசல், உமேஷ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஜாகிர் அசத்தல்:

இதை விரட்டிய கோல்கட்டா அணிக்கு கேப்டன் ஜாகிர் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' கேப்டன் காம்பிர் (6), சாவ்லா (8) ஆட்டமிழந்தனர். பிராத்வைட் பந்துவீச்சில் யூசுப் பதான் (10), சூர்யகுமார் (21), சதீஷ் (6) சிக்கினர். பொறுப்புடன் செயல்பட்ட உத்தப்பா (72) அரை சதம் கடந்தார். மற்றவர்கள் ஏமாற்ற, கோல்கட்டா அணி 18.3 ஓவரில் 159 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. டில்லி அணி சார்பில் அதிகபட்சமாக ஜாகிர், பிராத்வைட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இத்தொடரில் ஏற்கனவே நடந்த லீக் போட்டியில் டில்லி அணி, கோல்கட்டாவிடம் வீழ்ந்திருந்தது. இன்றைய வெற்றியின் மூலம், இதற்கு பதிலடி தந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1512857

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.,: ஐதராபாத் அணி அபார வெற்றி

 

ஐதராபாத்:ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.ஐதராபாத் அணியின் வார்னர் 50 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடித்து 92 ரன் எடுத்தார். வில்லிம்சன் அரைசதம்(50) அடித்தார்.195 ரன் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன் மட்டுமே எடுத்தது.இதனையடுத்து ஐதராபாத் அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1513236

Link to comment
Share on other sites

எந்த ஒரு பந்துவீச்சுச் சேர்க்கையும் எடுபடவில்லை: தோனி ஏமாற்றம்

 

 
 
குஜராத் கேப்டன் ரெய்னா அடித்த பவுண்டரியை பார்க்கும் தோனி. | படம்: ஏ.எஃப்.பி.
குஜராத் கேப்டன் ரெய்னா அடித்த பவுண்டரியை பார்க்கும் தோனி. | படம்: ஏ.எஃப்.பி.

புனேயில் நடைபெற்ற 25-வது ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றதையடுத்து 7 போட்டிகளில் 5-வது தோல்வியைச் சந்தித்தது தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

ஜெயண்ட்சை வீழ்த்திய லயன்ஸ்:

டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா முதலில் புனே அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசி, 101 ரன்கள் எடுத்து சதம் கண்டார். புனே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் லயன்ஸ் அணி டிவைன் ஸ்மித் (63), மெக்கல்லம் (43) ஆகியோர் மூலம் 8 ஓவர்களில் 93 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டது. ரெய்னா, தினேஷ் கார்த்திக் பங்களிப்புடன் கடைசி பந்தில் வெற்றி ரன்னை எட்டி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ஆட்ட நாயகனாக டிவைன் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உண்மையில் கடைசி பந்து வரை ஆட்டம் சென்றிருக்க வேண்டியதில்லை. குஜராத் லயன்ஸ் வீரர்களின் தவறான ஷார்ட் தேர்வும், சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பீல்டிங்கும் கடைசி பந்து வரை செல்லும் த்ரில்லராக மாற்றியது.

புனே அணியின் ஸ்மித்தின் 54 பந்து சதத்தை மெக்கல்லம், டிவைன் ஸ்மித் இன்னிங்ஸ் பின்னுக்குத் தள்ளியது. இருவரும் 8 ஓவர்களில் 93 ரன்கள் சேர்க்க, ரெய்னா (34), கார்த்திக் ( 33) ஆகியோர் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தினர். ஆனால் கார்த்திக் அவுட் ஆனவுடன் 22 பந்துகளில் 30 ரன்கள் என்ற இலக்கு சற்றே திணறல் கண்டது, காரணம் லெக்ஸ்பின்னர் முருகன் அஸ்வின் 18-வது ஓவரில் 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

மேலும் டிவைன் பிராவோ, ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப ஆட்டம் த்ரில் முடிவை நோக்கி நகர்ந்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனி திசர பெரேராவிடம் பந்தை அளித்தார். முதல் பந்து தாழ்வான புல்டாஸாக அதனை லெக் திசையில் முறையாக பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் பாக்னர். 2-வது பந்து ஆஃப் திசையில் வைடால் ஒரு ரன். மீண்டும் 2வது பந்தில் 1 ரன் எடுத்தார் பாக்னர். அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னா ஆளில்லாத ஸ்கொயர் லெக் திசையை குறிவைத்தார் ஆனால் பந்து சரியாகச் சிக்காமல் பவுல்டு ஆனார். அதற்கு அடுத்த பந்தில் இசாந்த் கிஷன் திவாரியின் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். ஆட்டம் டென்ஷன் ஆனது.

5-வது பந்தை பாக்னர் லெக் திசையில் ஒதுங்கியபடியே மேலேறி வந்து லாங் ஆஃபில் ஆடி 2 ரன்களுக்கு ஓடினர், ரன்னர் முனையில் பிரவீன் குமார் மெதுவாக ஓடி வந்தார், ஆனால் ரஹானேயின் த்ரோ சரியாக அமையவில்லை. த்ரோவை ரன்னர் முனைக்கு அடித்திருக்க வேண்டும் என்று ரஹானேயிடம் தோனி அறிவுறுத்தினார்.கடைசி பந்து ஷார்ட் பிட்சாக அமைய பாக்னர் அதனை காற்றில் ஷார்ட் மிட் ஆனைத் தாண்டி அடித்தார் ஒரு ரன், ஆனால் ஸ்டீவ் ஸ்மித் டைவ் அடித்தார் பலனளிக்கவில்லை, பாக்னர் தனது பிறந்தநாளில் வெற்றி தேடித் தந்தார்.

196 ரன்களை குஜராத் லயன்ஸ் எடுத்து வென்றாலும் இதில் 3 சிக்சர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மெக்கல்லம் 2, ஸ்மித் 1. ஆனால் 22 பவுண்டரிகளை குஜராத் லயன்ஸ் அடித்தது. மொத்தம் 106 ரன்கள்தான் பவுண்டரிகளில் வந்துள்ளது மீது 90 ரன்கள் ஓடி எடுக்கப்பட்டதாகும். புனே அணியில் ஒருவரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வீசவில்லை, முருகன் அஸ்வின் 3 ஓவர்களில் 22 ரன்களுடன் 7.33 என்ற குறைந்த சிக்கனவிகிதம் காட்டினார். மோர்கெல், டிண்டா, பெரேரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பந்து வீச்சு எடுபடவில்லை.

தோல்வி குறித்து தோனி கூறியது:

முதல் 6 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்தோம், அதன் பிறகே நெருக்கடி அதிகரித்தது. நிச்சயமாக நாங்கள் புதிய பந்தில் பந்துவீச்சை மேம்படுத்தியே ஆக வேண்டும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். இல்லையெனில் அடித்து நொறுக்கப்படுவது உறுதி. அணியில் காயம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று எனவே அதைப்பற்றி பேசிப் பயனில்லை.

பேட்டிங்கை விட பவுலிங்கில்தான் திணறி வருகிறோம் என்பது உறுதி. 5 பவுலர்கள் சேர்க்கை, 6 பவுலர்கள் சேர்க்கை என்று மாற்றி மாற்றி விளையாடிப் பார்த்தோம் எங்களுக்கு எதுவும் பயனளிக்கவில்லை.

போட்டிகளுக்கு இடையே அதிக இடைவெளிகளை விரும்புகிறேன். பல விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது, இல்லையெனில் தோல்வியிலிருந்து தப்ப முடியாது என்பது உறுதி, என்றார் தோனி.

தோனியை ஏமாற்றமடைந்திருப்பார்: ரெய்னா

நெருக்கமான வெற்றி. முதல் 6 ஓவர்களில் மெக்கல்லம், டிவைன் ஸ்மித் துவம்சம் செய்தனர். இலக்கு என்னவென்று தெரியும் போது முதல் 6 ஓவர்களில் ஆக்ரோஷமாக ஆட முடியும். பாக்னருக்கு இன்று ஒரு நல்ல பிறந்த நாள். கேப்டன்சியும் நன்றாக இருப்பதாகவே கருதுகிறேன். தோனியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று இரவு நான் தோனியை சந்திக்கப்போவதில்லை அவர் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பார். அவரை மற்றொரு நாள் சந்திப்பேன், என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article8541257.ece?homepage=true&ref=tnwn

Link to comment
Share on other sites

கருண் நாயர், பில்லிங்ஸ், ஜாகீர் கான் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

 

 
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் டெல்லி டேர்டெவில்ஸ். | படம்: பிடிஐ.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் டெல்லி டேர்டெவில்ஸ். | படம்: பிடிஐ.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, டெல்லி டேர் டெவில்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தார், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது. உத்தப்பா மட்டுமே 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்து ஒரு முனையில் போராடினார். டெல்லி அணியில் ஜாகீர் கான் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளையும் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக பேட்டிங்கில் 11 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் குவித்து ஆல்ரவுண்ட் திறமைகாட்டிய பிராத்வெய்ட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் ஓவரிலேயே ஆந்த்ரே ரசல் அசத்தினார். அதிரடி வீரர்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் குவிண்டன் டி காக்கை வீழ்த்தினார். 2/2 என்று டெல்லி அணி தடுமாறிய போது சஞ்சு சாம்சன் இறங்கி 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரும் சுனில் நரைனிடம் எல்.பி.ஆக 5-வது ஓவர் முடிவில் டெல்லி 32/3 என்று ஆனது.

கருண் நாயரின் அற்புதமான பேட்டிங் மற்றும் பில்லிங்ஸின் அரைசதம்:

பவர் பிளே முடிவில் 37/3 என்று இருந்த டெல்லி அணியை கருண் நாயர் தனது அற்புதமான ஆட்டத்தினால் நிலைநிறுத்தினார், நைட் ரைடர்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், யாதவ் ஆகியோரின் லெக் திசை பந்து வீச்சினால் 3 பவுண்டரிகளை ஏற்கெனவே அடித்து செட்டில் ஆன கருண் நாயர், பவர் பிளே முடிந்து சுனில் நரைன் வீசிய பந்தை அருமையாக ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தார். மறுமுனையில் பில்லிங்ஸ் ரன் இல்லாத பந்தே இல்லாமல் ஆடினார். 12-வது ஒவரில் பில்லிங்ஸ், பியூஷ் சாவ்லாவை 2 பவுண்டரிகள் விளாசினார். 15-வது ஓவரை சுனில் நரைன் வீச சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்கள், ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் 3 பவுண்டரிகளை அடித்து அரைசதத்தைக் கடந்தார் கருண் நாயர்.

அடுத்த 2 ஓவர்களில் பில்லிங்ஸ், கருண் நாயர் இருவரும் ஆளுக்கொரு சிக்சரை அடித்தனர். உமேஷ் யாதவ் இந்நிலையில் கருண் நாயர் (68 ரன்கள், 9 பவுண்டரி 1 சிக்சர்), மற்றும் கிறிஸ் மோரிஸ் (0) ஆகிய இருவரையும் 17-வது ஓவரில் வீழ்த்தினார். பிராத்வெய்ட் இறங்கியவுடனேயே உமேஷ் யாதவ் இரண்டு மோசமான பந்துகளை வீச 2 பவுண்டரிகளை அதே ஓவரில் அடித்து தொடங்கினார். 18-வது மற்றும் 20-வது ஓவர்களுக்கு இடையே பிராத்வெய்ட், பில்லிங்ஸ் ஆகியோர் 4 சிக்சர்களை அடித்தனர். கடைசி 5 ஓவர்களில் 66 ரன்கள் சேர்க்கப்பட்டது, பிராத்வெய்ட் 11 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார். பில்லிங்ஸ் 34 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுக்க டேர் டெவில்ஸ் அணி 186 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் ரஸல், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, நரைன் சிக்கனமாக வீசி 22 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஜாகீர் கான், பிராத்வெய்ட் அபாரம்:

187 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 8 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த கம்பீர் விக்கெட்டை ஜாகீர் கானிடம் 3-வது ஓவரில் இழந்தது. கம்பீர் புதிதாக கண்டுபிடித்துக் கொண்ட லெக் திசை ஆட்டத்தினால் ஜாகீர் கானின் சாதுரியம் புரியாமல் லெக் திசையில் ஒரு பந்தை ஆட நினைக்க அது முன் விளிம்பில் பட்டு ஆஃப் திசையில் ஐயரிடம் கேட்ச் ஆனது. சாவ்லா இறங்கி 2 பவுண்டரிகளுடன் (ஒன்று எட்ஜ்) 8 ரன்கள் எடுத்து ஜாகீர் கானின் அருமையான பந்துக்கு எல்.பி.ஆகி வெளியேறினார்.

யூசுப் பதான் மோசமான ஷாட்டுக்கு 10 ரன்களில் பிராத்வெய்ட்டின் முதல் விக்கெட்டாக வெளியேறினார், லெக் திசையில் வீசப்பட்ட வேகம் குறைந்த ஷார்ட் பிட்ச் பந்தை ஒரே சாத்து சாத்துவதற்குப் பதிலாக பலவீனமாக ஆடி ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார் யூசுப் பத்தான். சூரியகுமார் யாதவ், சதிஷ் ஆகியோரையும் பிராத்வெய்ட் காலி செய்ய 13.3 ஓவர்களில் 107/5 என்று ஆனது கொல்கத்தா, உத்தப்பா மட்டும் இருந்தார்.

ஒரு நேரத்தில் ஒரே ஓவரில் 5 ரன்கள் வரும் நோபால் ஒன்றை வீசி 22 ரன்களை ஒரே ஓவரில் பிராத்வெய்ட் விட்டுக் கொடுத்த போது கொல்கத்தா பக்கம் ஆட்டம் இருந்தது.

பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளைச் சாய்க்க ஆட்டம் உத்தப்பா, ரஸல் கைகளுக்கு வந்தது. விக்கெட்டுகள் சரிய 19 பந்துகளில் பவுண்டரியே காணாத உத்தப்பா, ரஸல் இறங்கியவுடன் அமித் மிஸ்ராவைக் குறிவைத்தார். மிஸ்ரா வீசிய 15-வது ஓவரில் உத்தப்பா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். ஆனாலும் ஜாகீர் கான் 17-வது ஓவரை அமித் மிஸ்ராவிடமே கொடுத்தார். கொல்கத்தாவுக்கு 4 ஒவர்களில் 51 ரன்கள் தேவை. இதே ஓவரில் உத்தப்பாவும், ரசலும் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தனர். ஆனால் 6-வது பந்தை ரஸல் அதிரடியாக மிஸ்ராவின் முகத்துக்கு நேராக அடித்தார், எப்படியோ இதனை கேட்ச்சாக்கினார் அமித் மிஸ்ரா ரஸல் அவுட் ஆனவுடன் ஹோல்டர், உத்தப்பா, நரைன், உமேஷ் யாதவ் ஆகியோர் சடுதியில் வெளியேற 159 ரன்களில் முடிந்தது கொல்கத்தா.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/article8541777.ece?homepage=true

Link to comment
Share on other sites

வெற்றி தேடிக்கொடுப்பாரா புதிய கேப்டன் முரளி விஜய்

 
 
முரளி விஜய். | படம்: கே.பிச்சுமணி.
முரளி விஜய். | படம்: கே.பிச்சுமணி.

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு ராஜ்காட்டில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முரளி விஜய் தலைமையில் களமிறங்குகிறது.

ரெய்னா தலைமையிலான குஜராத் அணி 7 ஆட்டத்தில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது. இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோதுகின்றன. ஏப்ரல் 11-ல் நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றிருந்தது.

இன்றைய ஆட்டத்தில் இருந்து பஞ்சாப் அணி முரளி விஜய் தலைமையில் களமிறங்க உள்ளது. டேவிட் மில்லர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக முரளி விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். மில்லர் இந்த தொடரில் 76 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/article8543886.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். போட்டி: 23 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

 

Daily_News_3852764368058.jpg

 

 

ராஜ்கோட்: ஐ.பி.எல். டி.20 போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=213823

Link to comment
Share on other sites

நான் உட்பட பேட்டிங் சரியாக ஆடவில்லை: தோனி ஒப்புதல்

 

 
Rising Pune Supergiants captain Mahendra Singh Dhoni plays a shot during the 2016 Indian Premier League(IPL) Twenty20 cricket match between Rising Pune Supergiants and Mumbai Indians at The Maharashtra Cricket Association Stadium in Pune on May 1, 2016. GETTYOUT/----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / AFP PHOTO / INDRANIL MUKHERJEE
 

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பையிடம் தோல்வி தழுவியதையடுத்து 8 போட்டிகளில் 6-ல் தோற்றுள்ள புனே அணியின் கேப்டன் தோனி கடும் ஏமாற்றமடைந்துள்ளார்.

சரியான அணித்தேர்வை செய்வதற்கும் அவருக்கு சரிவரத் தெரியவில்லை. மாற்றத்திற்கான நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. தமிழக வீரர் பாபா அபராஜித்தை தொடர்ந்து 3-வது சீசனாக உட்கார வைத்து மகிழ்கிறார் தோனி.

ஈஸ்வர் பாண்டே, இர்பான் பத்தான் ஆகியோர் இதுவரை கண்டுகொள்ளப்படவேயில்லை. ஏன் உஸ்மான் கவாஜா ஒரு சிறந்த வீரர் அவருக்கும் வாய்ப்பு வழங்காமல் பேட்ரிக் ஹேண்ட்ஸ்கோம்ப் என்பவருக்கு வாய்ப்பு வழங்கினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 112தான். இவரை ஒப்பிடும் போது இர்பான் பத்தான் எவ்வளவோ விதத்தில் உபயோகமான வீரர், இன்னும் சொல்லப்போனால் டிண்டாவை விடவும், ரஜத் பாட்டியாவை விடவும் எந்த விதத்தில் இர்பான் பத்தான் குறைந்தவர் என்பது தெரியவில்லை, இந்தக் கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினால், அவர்கள் மீது எரிச்சலடைவார், அருகில் அழைப்பார், தோள் மீது கைபோடுவார், பின்னால் தட்டிக் கொடுப்பார், ஆனால் பதில் கிடைக்காது.

அதே போல்தான் பாபா அபராஜித்துக்கு வாய்ப்பு வழங்காததும் சர்ச்சைக்குரியதே. இந்நிலையில் வழக்கமான தோல்விக்குப் பிறகு வழக்கம்போல் கூறிய தோனி,

“10-வது ஓவருக்குப் பிறகு நாங்கள் சரியாக ஆடவில்லை. என்னையும் சேர்த்துத்தான். இந்தப் பிட்சில் 24 பந்துகளில் 23 ரன்கள் என்பது உண்மையில் உதவிகரமானதல்ல.

சில வேளைகளில் விக்கெட்டுகள் விழும்போது நாங்கள் அதிகமாக யோசிப்பதாகப் படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் களத்தில் இறங்கி சூழ்நிலைகளைப் பாராமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதைத்தான். பந்து வீச்சில் லேசான முன்னேற்றம் தெரிகிறது, ஆனால் எதுவானாலும் தோல்வியடைந்து கொண்டேயிருந்தால் இதனாலும் பயனில்லை.

வரும் போட்டிகளில் சில கொள்கைகளை மாற்றுவோம், சில புதிய முயற்சிகளை மேற்கொள்வோம். நிச்சயம் அந்த மாற்றங்கள் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்”

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8546648.ece?homepage=true

Link to comment
Share on other sites

அம்பத்தி ராயுடு ஹர்பதான் சிங் சண்டை (காணொளி இணைப்பு)

 

மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 29-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை மும்மை இந்தியன்ஸ் அணி வெற்றிகொண்டது.

இப்போட்டியில் மும்பை இந்தியன் அணிக்காக விளையாடி வரும் ஹர்பதான் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பதான் சிங் வீசிய 10.4 ஆவது பந்தை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடிய சவுரப் திவாரி நான்கு ஓட்டங்களை பெற்றார். நான்கு ஓட்டங்களை தடுக்க முற்பட்ட ராயுடுவால் பந்தை தடுக்க முடியாமல் போனது.

இதனையடுத்து ஹர்பதான் சிங் ராயுடுவை பார்த்து தகாத வார்த்தைகளால் ஏசினார். இதனை அவதானித்த ராயுடு உடனே கோபம் கொண்டு ஹர்பதானை நோக்கி வந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

அந்த காட்சி பதிவான காணொளி உங்களுக்காக

http://www.virakesari.lk/article/5855

Link to comment
Share on other sites

மேலும் மேலும் காயத்தால் அடி வாங்கும் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ஸ் : ஸ்டீவன் ஸ்மித் விலகல்

 

Daily_News_7587505578995.jpg


 

புனே: புனே அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவன் ஸ்மித் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது புனே அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இருந்து நட்சத்திர ஆட்டக்காரர்கள் குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி வருகின்றனர்.

புனே அணியில் பாப் டூ பிளசிஸ், கெவின் பீட்டர்சன், மிட்செல் மார்ஷ், காயம் காரணமாக ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளனர். இந்நிலையில் அந்த அணியில் இருந்த ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவன் ஸ்மித்தும் நேற்றைய போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=213929

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.