Jump to content

IPL 9 செய்திகள் கருத்துக்கள்


Recommended Posts

                                                                https://2.bp.blogspot.com/-Ktz7zeqqp_0/VnFlnqv6PiI/AAAAAAAAApA/LGpG-jLL6pU/s1600/IPL-2016-Schedule-Time-Table-IPL-9-Fixtures-Teams-Players-List-upcoming%2Bwiki.jpg

                                                             http://www.iplt20livecricket.com/wp-content/uploads/2016/03/IPL-2016-1.jpg

 

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 8-ம் தேதி ஐபிஎல் தொடக்க விழா

 
 
IPL-Logo_2799578h.jpg
 

ஐபிஎல் 9-வது சீசன் போட்டிகள் வரும் 9-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தொழில்முறை கிரிக்கெட் போட்டியான இந்த தொடரின் தொடக்க விழா வரும் 8-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் இங்கிலாந்தின் பாப் பாடல் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாலிவுட் நடிகைகளான கேத்ரினா கைஃப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் ரன்வீர்சிங் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் டெல்லி பாப் பாடகர் யோ யோ ஹனி சிங்கும் கலந்து கொண்டு பாடுகிறார்.

சுமார் 200 நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சியும், ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவற்றுடன் கண்கவரும் லேசர் கற்றைகள் நிகழ்ச்சியும் ரசிகர்களை குதூகலப்படுத்த உள்ளது.

தொடக்க விழாவை தொடர்ந்து 9-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் புதிதாக இடம் பெற்றுள்ள ரைஸிங் புனே சூப்பர்கெயின்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

மே 29ம் தேதி இறுதிப்போட்டி இதே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. 56 லீக் ஆட்டங்கள், பிளேப் ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள், இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் இந்த சீசனில் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article8429161.ece

Link to comment
Share on other sites

  • Replies 209
  • Created
  • Last Reply

தண்ணீர் பஞ்சம்: ஐ.பி.எல். போட்டியை நடத்த பா.ஜனதா எதிர்ப்பு!

 

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மராத்வாடா மற்றும் விதர்பா பிராந்தியங்களில் கடும் வறட்சியால் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், மும்பை உள்ளிட்ட அம்மாநிலத்தின் பிற பகுதிகளில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

IPL600.jpg

ஒன்பதாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா மும்பையில் வருகிற 8– ம் தேதி நடைபெறுகிறது. போட்டித் தொடர் மார்ச் 9–ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடக்கிறது. 9–ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை, புனே அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் மும்பை, புனே, நாக்பூர் நகரில் மட்டும் 19 போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டி நடைபெறும் மைதானங்களை தயார்படுத்த சுமார் 65 முதல் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம் கடந்த ஆண்டு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மாநிலத்தில் நடத்தக்கூடாது என அம்மாநில பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஷாங்க் மனோகருக்கு மாநில பா.ஜனதா தலைவர் விவேகானந்தா குப்தா எழுதியுள்ள கடிதத்தில், "மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மராத்வாடா மற்றும் விதர்பா பிராந்தியங்களில் கடந்த இரண்டாண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவி வருவதை நீங்கள் அறிவீர்கள். இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து 90 லட்சம் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர் நகரங்களில் நடத்தப்படவுள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்காக ஒவ்வொரு முறையும் மைதானத்தை செப்பனிட்டு, செம்மைப்படுத்த சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.வாரத்தில் மூன்றுமுறை இதைப்போல் செம்மைப்படுத்த சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

இவ்வகையில், 19 போட்டிகளுக்காகவும் மைதானங்களை தயார்படுத்த சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஒட்டுமொத்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்து இங்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது அறிவார்ந்த செயலாக அமையாது.

நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நீங்கள் கருணைகாட்ட வேண்டிய இந்த தருணத்தில், ஐ.பி.எல். போட்டிகளை மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடத்தும் முடிவை கைவிட்டு, வேறொரு இடத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக்கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/india/61736-bjp-doesnt-want-ipl-in-drought-hit-maharashtra.art

 

Link to comment
Share on other sites

மும்பை அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம்: ஹர்பஜன் சிங் கருத்து

 

 
மும்பைக்கு எதிரான போட்டியில் அரை சதம் எடுத்த ரஹானே. படம்: ஏஎப்பி
மும்பைக்கு எதிரான போட்டியில் அரை சதம் எடுத்த ரஹானே. படம்: ஏஎப்பி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை அணி தோற்றதற்கு மோசமான பேட்டிங்கே காரணம் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பலரும் சொற்ப ரன்களின் அவுட் ஆன நிலையில் ஹர்பஜன் சிங் மட்டும் உறுதியாக ஆடி 45 ரன்களைக் குவித்தார். புனே அணியில் இஷாந்த் சர்மா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் குவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆடிய புனே அணி ஆரம்பம் முதலே உறுதியுடன் ஆடி வெற்றிக்கு தேவையான ரன்களை சிக்கல் இல்லாமல் எட்டிப்பிடித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரஹானே 42 பந்துகளில் 66 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டூ பிளெஸ்ஸி 34 ரன்களைச் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ஆடவந்த பீட்டர்சன் 21 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். புனே அணி 14.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றது. புனே அணிக்காக ஆடி அரைசதம் எடுத்த ரஹானே ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தவறான ஷாட்கள்

இந்த ஆட்டத்துக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைய ஆட்டத்தில் எங்கள் பேட்டிங் பலவீனமாக இருந்தது. பேட்டிங்குக்கு சாதகமான மும்பை ஆடுகளத்தில் எங்கள் பேட்ஸ்மேன் கள் பலரும் தவறான ஷாட்களை ஆடி அவுட் ஆனார்கள் இதுவே எங்கள் தோல்விக்கு காரணமாகும். முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி களைக் குவிக்க முயல்வோம்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

கெவின் பீட்டர்சன்

ஆட்ட நாயகன் விருது பெற்ற ரஹானே நிருபர்களிடம் கூறியதாவது:

முதல் போட்டியிலேயே சிறப் பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 170 முதல் 180 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் மும்பை அணியை 121 ரன்களில் கட்டுப்படுத்தினார்கள். எங்கள் அணியின் வெற்றியில் பந்துவீச்சாளர்களின் பங்கு முக்கியமானது. ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, மிட்செல் மார்ஷ், ரஜத் பாட்டியா, முருகன் அஸ்வின் ஆகிய அனைவரும் சிறப்பாக பந்துவீசினர்.

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுடன் ஆடும் அனுபவம் இனிமையாக இருந்தது. நாங்கள் இருவரும் ஆடும்போது என்னிடம் பேசிய அவர், “நீ அடித்து ஆடு. நான் ஒவ்வொரு ரன்களாக எடுத்து நீ அதிக பந்துகளை எதிர்கொள்ள வாய்ப்பளிக்கிறேன்” என்று கூறினார். அவரைப் போன்ற ஒருவர் எங்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம்.

இவ்வாறு ரஹானே கூறினார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8460560.ece

Link to comment
Share on other sites

ஒரு மோசமான தினத்தில் தோல்வி அடைந்தோம்: டெல்லி கேப்டன் ஜாகீர் கான்

 

 
ஜாகீர் கான். | படம்: கே.பாக்யபிரகாஷ்.
ஜாகீர் கான். | படம்: கே.பாக்யபிரகாஷ்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியிடம் டெல்லி டேர் டெவில்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி தழுவியதையடுத்து, ‘ஒரு மோசமான தினத்தில் தோல்வி ஏற்பட்டது’ என்று டெல்லி கேப்டன் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

டாஸ் வென்ற கவுதம் கம்பீர் டெல்லி அணியை முதலில் பேட் செய்ய அழைக்க ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகையை செலவிட்டு வீரர்களை தேர்ந்தெடுத்த டெல்லி அணி 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 14.1 ஓவர்களில் 99/1 என்று அபார வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆந்த்ரே ரசல் தேர்வு செய்யப்பட்டார்.

தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ஜாகீர் கான் கூறியதாவது:

“மிகவும் கடினமான தினமாக அமைந்து விட்டது, ஆனால் இது ஒரேயொரு மோசமான தினமே, இப்படி சில சமயங்களில் நடப்பதுண்டு. எனவே இதனைப் பின்னுக்குத் தள்ளி வரும் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

நாங்கள் ஒருங்கிணைந்து மீண்டு எழுச்சியுறுவோம். இது மிகவும் பெரிய தொடர், எனவே ஒரு தோல்வியைக் கொண்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஆனாலும் களத்தில் வீரர்கள் காண்பித்த தீவிரம் மற்றும் ஆற்றல் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு இளம் அணி. டுமினி இல்லை. ஆனால் அணிச்சேர்க்கை திருப்திகரமாகவே அமைந்தது. இதில் வேறுபட்ட சிந்தனைக்கு வழியேயில்லை. கடினமான ஒரு தினம் அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எங்கள் அணியின் பேட்டிங் நிச்சயம் வரும் போட்டிகளில் அதன் திறமையை வெளிப்படுத்தும். இந்த சீசனுக்காக நாங்கள் தயார் செய்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். நிச்சயம் பெரிய ஸ்கோர்கள் வரும், எங்கள் அணியின் பேட்டிங் மீது நம்பிக்கை இருக்கிறது.

முதல் 2 ஓவர்களுக்குப் பிறகே கொல்கத்தா வீச்சாளர்கள் எங்களை சீரான நெருக்கடிக்குள்ளாக்கினர். மொகமது ஷமி வலைப்பயிற்சியில் நன்றாகவே வீசினார். நான் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

ஏப்ரல் 15-ம் தேதி டெல்லி டேர் டெவில்ஸ் தங்கள் சொந்த மண்ணில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

நேற்று முதல் 2 ஓவர்களில் குவிண்டன் டி காக், மயங்க் அகர்வால் ஜோடி 23 ரன்களை விளாசிய பிறகே ஆந்த்ரே ரசல் ஓரே ஓவரில் அதிரடி வீரர் டி காக் (17) பிறகு ஷ்ரேயஸ் ஐயர் (0) ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பினார். மயங்க் அகர்வாலையும் ரஸல் காலி செய்ய டெல்லி 31/3 என்று சரிவடைந்து பிறகு பிராட் ஹாக் பந்து வீச்சில் சஞ்சு சாம்சன், பவன் நெகி ஆகியோரை இழக்க கடும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய பிராத்வெய்ட் 6 ரன்களில் சாவ்லாவிடம் அவுட் ஆக 11 ஓவர்களில் 67/6 என்று டெல்லி சரிவு கண்டு பிறகு 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலக்கை கொல்கத்தா அணி 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article8461135.ece

 

Link to comment
Share on other sites

ஐபிஎல் வர்ணனையிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கவில்லை: ஹர்ஷா போக்ளே

 

 
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. | கோப்புப் படம்: கே.பாக்ய பிரகாஷ்.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. | கோப்புப் படம்: கே.பாக்ய பிரகாஷ்.

கிரிக்கெட் வர்ணனை என்றாலே தவிர்க்க முடியாத ஒரு குரல் ஹர்ஷா போக்ளேயுடையது, ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனை குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2008-ம் ஆண்டு தொடக்க ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதல் ஹர்ஷா போக்ளே தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டை தனது உற்சாகமான வர்ணனையின் மூலம் மதிப்புக் கூட்டியுள்ளார் என்பது வர்ணனையை உன்னிப்பாக கவனிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு ஒருவாரம் முன்னதாக ஹர்ஷா போக்ளேயின் ஐபிஎல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இவருக்கான விமான டிக்கெட்டுகளைக் கூட ஒளிபரப்பு நிறுவனம் முடிவு செய்து விட்ட நிலையில் இந்த திடீர் ஒப்பந்த ரத்து நிகழ்ந்துள்ளது.

சோனி தொலைக்காட்சி நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றிருந்தாலும், பிசிசிஐ கட்டுப்பாட்டில்தான் பல விஷயங்கள் முடிவாகின்றன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திடீரென போக்ளே நீக்கப்பட்டதற்கான காரணத்தை பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர், அல்லது ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் கூட இதுவரை தெரிவிக்கவில்லை.

ஆனால் இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “வர்ணனையாளர்களைத் தீர்மானிப்பதில் நாங்கள் ஒவ்வொருவரின் ஆலோசனையையும் பெறுவோம். சமூக வலைத்தளங்களைப் பார்ப்போம், அதில் வர்ணனையாளர்கள் பற்றி என்னென்ன பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பதையும் பார்ப்போம். மேலும் வீரர்களிடமிருந்தும் கருத்துகள் கேட்போம்” என்றார்.

ஆனால், உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியின் போது விதர்பா கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவரிடம் ஹர்ஷா போக்ளே கடுமையான வாக்குவாதம் புரிந்ததே கடைசி நிமிடத்தில் ஐபிஎல் வர்ணனை ஒப்பந்தம் அவருக்கு ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று பிசிசிஐ-யில் ஒருசிலர் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தனது செய்தியில் தெரிவித்தது.

இந்நிலையில் தனது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் பற்றி போக்ளே தெரிவிக்கையில், “ஒருவரும் என்னிடம் எந்த வித காரணங்களையும் கூறவில்லை. இது பிசிசிஐ முடிவு என்பது மட்டும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஹர்ஷா போக்ளே மீதான இந்த திடீர் முடிவின் பின்னணி:

உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரின் போது இந்திய வர்ணனையாளர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உரையாடலில் ஈடுபட்டனர். இதில் வங்கதேசத்துக்கு எதிரான 1 ரன் வெற்றி குறித்து அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில், “அனைத்து மரியாதையுடன் நான் கூற விரும்புவது என்னவெனில், இந்திய வர்ணனையாளர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றி அதிகம் பேச வேண்டும், எப்போதும் அயல்நாட்டு வீரர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது சரியல்ல” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து ட்விட்டரில் அமிதாபை பின் தொடர்பவர்கள், யார் அந்த வர்ணனையாளர் என்று கேட்டு துளைத்தெடுக்க, அதற்கு அமிதாப், நான் சுனில் கவாஸ்கரையோ, மஞ்சுரேக்கரையோ குறிப்பிடவில்லை என்று ட்வீட் செய்தார். இதனால் ஹர்ஷா போக்ளேயைத்தான் அமிதாப் குறிப்பிடுகிறார் என்ற பரவலான எண்ணம் எழுந்தது.

இதனையடுத்து போக்ளே தனது பேஸ்புக் பதிவில் தெளிவுபடுத்தும் போது, “ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 என்பது உலகம் முழுதும் பார்க்கக் கூடிய ஒரு சேனல். உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் பார்வையாளர்களைச் சென்றடையவது இது. வங்கதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

எனவே ஒரு ஒளிபரப்பு என்பது நடுநிலையுடன், புறவயமாக பாரபட்சமின்றி நிகழ்வுகளை வர்ணிப்பது அவசியம். எனவே வர்ணனையை இந்திய கிரிக்கெட் வீரர்கள் மையமாக எடுத்துச் சென்றால் மற்ற அணி வீரர்களையும் அதே நேசத்துடன் பார்க்கும் மற்ற நாட்டு ரசிகர்களின் கிரிக்கெட் ரசனைக்கு நியாயம் செய்வதாகாது. உதாரணமாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருந்தால் வங்கதேசத்தில் உள்ள பார்வையாளர்களுக்கு நாம் பின்னடைவு ஏற்படுத்துவதாகவே பொருள்” என்று வங்கதேச போட்டி முடிந்தவுடன் அவர் எழுதியிருந்தார்.

ஆனால், தற்போது இவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான முக்கிய நிகழ்வாகக் கூறப்படும் விதர்பா கிரிக்கெட் சங்க அதிகாரியுடனான வாக்குவாதம் குறித்து ஹர்ஷா போக்ளே கூறும்போது, இந்தி வர்ணனையாளர்களுக்கான இடமும் ஆங்கில வர்ணனையாளர்களுக்கான இடமும் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் இருமொழிகளிலும் வர்ணனை செய்ய வேண்டியவர்கள் ஏகப்பட்ட படிகளை இறங்கி ஏற வேண்டிய நிலை இருந்தது. இதனை எதிர்த்தேன் என்றார்.

இந்த விவகாரம் பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கலாம் இதனையடுத்தே ஹர்ஷா போக்ளே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடக வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. “நாக்பூர் சம்பவம்தான் காரணம் என்றாலும், அதில் கூட என் தரப்பை ஒருவரும் கேட்கவில்லையே” என்கிறார் போக்ளே.

பொதுவாகவே பிசிசிஐ, இந்திய வீரர்களை புகழ்ந்து பேசும் வர்ணனையாளர்களையே அதிகம் விரும்பும் என்பது ஒன்றும் புதிதான செய்தியல்ல.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87/article8461617.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் - குஜராத் இன்று மோதல்

 

 
raina_miller_2809914f.jpg
 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று மொஹாலியில் நடக்கும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் குஜராத் லயன்ஸ் அணி மோதுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் களம் இறங்கும் பஞ்சாப் அணி, தங்கள் வெற்றிக்கு கேப்டன் மில்லரையே பெரிதும் நம்பியுள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், மனன் வோராவும் களம் இறங்குவார்கள் என்று கருதப்படுகிறது.

அதிரடியில் கலக்கும் மில்லருடன் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், முரளி விஜய் ஆகியோர் கைகோர்த்தால் நல்ல ஸ்கோரை எட்டலாம் என்பது அந்த அணியின் நம்பிக்கை. பந்துவீச்சை பொறுத்தவரை வேகப்பந்தில் ஜான்சன், கெயில் அபாட் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல், மேக்ஸ்வெல் ஆகியோரையும் அந்த அணி சார்ந்துள்ளது. சர்வதேச போட்டிகளில் அணியை வழிநடத்திய அனுபவம் இல்லாத மில்லர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருப்பது அதன் பலவீனமாக கருதப்படுகிறது.

மறுபுறத்தில் புதிதாக உருவாகியுள்ள குஜராத் லயன்ஸ் அணி, புனே அணியைப் போன்று தங்கள் முதல் ஆட்டத்திலேயே வெற்றிபெற்று முத்திரை பதிக்கும் எண்ணத்துடன் களம் இறங்குகிறது. அந்த அணியில் கேப்டன் ரெய்னா, மெக்கல்லம், பிஞ்ச், பிராவோ, ரவீந்திர ஜடேஜா என்று நட்சத்திர வீரர்கள் பலர் வரிசைகட்டி நிற்கிறார்கள். பேட்டிங்கில் வலிமையாக உள்ள அந்த அணிக்கு பலவீனமாக இருப்பது பந்துவீச்சுதான். வேகப்பந்து வீச்சில் டேல் ஸ்டெயினைத் தவிர நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. சுழற்பந்து வீச்சிலும் அமித் மிஸ்ராவைத் தவிர சர்வதேச போட்டிகளில் அனுபவமுள்ள வீரர்கள் யாரும் இல்லாதது அந்த அணிக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

இரு அணிகளும் வெற்றிக் கணக்குடன் இந்த ஐபிஎல் தொடரை தொடங்கும் எண்ணத் துடன் இருப்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8460556.ece

Link to comment
Share on other sites

அஸ்வினை சரியாகப் பயன்படுத்தாதது ஏன்? - தோனி விளக்கம்

 

 
 
மொபைல் போன் விளம்பர தூதரானார் தோனி. | படம்: பிடிஐ.
மொபைல் போன் விளம்பர தூதரானார் தோனி. | படம்: பிடிஐ.

உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்தே அஸ்வினை முழுமையாக தோனி பயன்படுத்துவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நேற்று ஐபிஎல் முதல் போட்டியில் ஒரேயொரு ஓவரை மட்டும் கொடுத்து விட்டு பிறகு ‘கட்’ செய்தது பற்றி தோனி விளக்கம் அளித்துள்ளார்.

லாவா மொபைல் போன் பிராண்டின் விளம்பரத் தூதராக தோனி அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் அவர் இது பற்றி கூறியதாவது:

"நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். நிறைய சூழ்நிலைகளில் அஸ்வின் என்னைக் காப்பாற்றியிருக்கிறார். முதல் 6 ஓவர்களாக இருந்தாலும், அல்லது இறுதி ‘ஸ்லாக்’ ஓவர்களாக இருந்தாலும், அஸ்வின் எந்த நேரத்திலுமே சிறப்பாக வீசக்கூடியவர்தான்.

இது உத்தியை வெளிப்படுத்துவது அல்லது மறைப்பது போன்ற ஒரு விஷயமே. அஸ்வின் ஒரு முதிர்ச்சியான பவுலர், எந்த நேரத்திலும் அவரால் வீச முடியும். மும்பை இந்தியன்ஸ் சில விக்கெட்டுகளை தொடக்கத்தில் பறிகொடுத்தவுடனேயே நடுவரிசை மற்றும் கீழ்-நடுவரிசை வீரர்களிடையே கடும் அழுத்தம் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும்.

மும்பை இந்தியன்ஸ் 30/4 என்று தடுமாறிக் கொண்டிருக்கும் போது அறிமுக லெக்ஸ்பின்னர் முருகன் அஸ்வினைக் கொண்டு வர சரியான நேரம் இதுவே என்று நினைத்தேன். நீங்கள் போட்டியைப் பார்க்கும் போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் இவர் அதிகம் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசாதவர் என்று. ஆனால் அவருக்கும் அழுத்தம் இருந்தது.

எனவே மும்பையின் இந்த நிலையில் முருகன் அஸ்வினைக் கொண்டு வந்து அவரது 4 ஓவர்களை முடித்து விட்டால், நீண்ட கால தெரிவாக விக்கெட் வீழ்த்தும் ஒரு வீச்சாளராக அவர் உருப்பெறுவது எனக்கு அவசியமாகப் பட்டது. எனவே அவருக்கு 4 ஓவர்களை இந்தத் தருணத்தில் கொடுத்து முடித்து விட்டால், 2வது 3-வது ஆட்டங்களில் அவருக்கு இது கூடுதல் தன்னம்பிக்கை அளிக்கும்.

அவருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையே இது. ஆனால் அதே வேளையில் எதிர்முனையிலிருந்து நாங்கள் நெருக்குதல் கொடுத்தோம், ரஜத் பாட்டியா அருமையாக வீசினார் (1/10), சூழ்நிலையை அவர் நன்றாகப் பயன்படுத்தினார், இதுதான் காரணம்.

அதன் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ஓவர் வீசினார், அதன் பிறகே நான் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் நல்ல தெரிவு என்று நினைத்தேன்.

இவ்வாறு கூறினார் தோனி.

முன்னதாக, பேட்டியை தொடங்கும் முன்பே தோனி நிபந்தனை விதித்தார்: நீங்கள் கேட்கும் கேள்வியின் தரத்தைப் பொறுத்து அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிக கேள்விகளுக்கு விடையளிப்பேன். அப்படி தரம் இல்லையெனில் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க மாட்டேன்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8457985.ece

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.  ஆரம்ப விழாவில் பிராவோவின் அசத்தல்

 

ஐ.பி.எல்.  9 ஆவது சீசனின் நேற்று இடம்பெற்ற  ஆரம்ப விழாவில் சம்பியன் பாடலுக்கு  பிராவோ நடனமாடி அசத்தியுள்ளார்.

12961515_10153571291233634_1448313829391

முன்னதாக நேற்று மாலை 7.30 மணிக்கு ஐ.பி. எல். கோலாகல ஆரம்பவிழா  இடம்பெற்றது.

இதில், பொலிவுட் நட்சத்திரங்கள் கத்ரீனா கைப்,  ரன்வீர் சிங் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன.

ஐ.பி.எல். 9 ஆவது சீசனின் முதல் போட்டி இன்று  9 ஆம்  திகதி மும்பையில்  இடம்பெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

12932914_10153571123893634_8437512763132

11140332_10153571124123634_6087336719515

12933098_10153571124268634_7533508980673

12928303_10153571124963634_5373788486007

8375_10153571290938634_72293399567553718

12961515_10153571291233634_1448313829391

12974478_10153571291383634_2990844253366

12919811_10153571291918634_1616039994287

12932765_10153571292038634_1114029592197

IPL.jpg

http://www.virakesari.lk/article/5046

 

Link to comment
Share on other sites

பெங்களூருவை சமாளிக்குமா சன் ரைசர்ஸ் ஐதராபாத்

 
 
பயிற்சியில் ஈடுபட்ட பெங்களூரு அணி வீரர்கள்.
பயிற்சியில் ஈடுபட்ட பெங்களூரு அணி வீரர்கள்.

ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை சோனி இஎஸ்பிஎன் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பெங்களூரு அணி இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. 2009 மற்றும் 2011-ல் இறுதிப்போட்டி வரை சென்று பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இம்முறை கேப்டன் கோலி நல்ல பார்மில் உள்ளதால் அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது.

டி 20 உலகக் கோப்பையில் 273 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற கோலியின் அணியில் கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகிய அதிரடி வீரர்களும் உள்ளனர். இந்த பேட்டிங் கூட்டணி எந்தவகை பந்து வீச்சையும் விளாசும் தன்மை கொண்டதாக விளங்கக்கூடும்.

ரூ.9.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வாட்சன் ஆல்ரவுண்டராக அசத்தக்கூடும் என கருதப்படுகிறது. இளம் வீரரான சர்ப்ராஸ் கான், விக்கெட் கீப்பர் டிரெவிஸ் ஹெட், ஸ்டூவர் பின்னி, மந்தீப் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவர்கள். ரிச்சர்ட்சன், ஹர்ஸால் படேல், நாத் அரவிந்த், வருண் ஆரோன் ஆகியோரை கொண்ட வேகப்பந்து வீச்சு கூட்டணி உள்ளது.

சுழற்பந்து வீச்சாளரான சாமு வேல் பத்ரி தோள்பட்டை காயத் தால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கவில்லை. டி 20 உலகக் கோப்பை சாம்பியான அவர் விளையாடாதது அணிக்கு சற்று பலவீனம் தான்.

பத்ரி விளையாடாத நிலையில் யுவேந்திரா சாஹல், பர்வேஸ் ரசூலை நம்பியே சுழற்பந்து வீச்சு உள்ளது. யுவேந்திரா 2015 சீசனில் 15 விக்கெட்டும், 2014 சீசனில் 14 விக்கெட்டும் கைப்பற்றி யுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 2013ல் பிளே ஆப் சுற்றை எட்டிப்பார்த்துள்ளது. இம்முறை கேப்டன் டேவிட் வார்னர், அனுபவ வீரர் ஆஷிஸ் நெஹ்ரா பலம் சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி 20 உலகக் கோப்பையில் காயம் அடைந்த யுவராஜ் சிங் இருவாரங்களுக்கு பிறகு களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி வீரரான அவரது இழப்பு அணிக்கு சற்று பலவீனம் தான். எனினும் மோர்கன், வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் நெஹ்ராவுடன், டிரென்ட் பவுல்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் கரண் சர்மா நெருக்கடி தரக்கூடும். தீபக் ஹூடா, பிபுல் சர்மா, திருமலா ஷெட்டி சுமன் ஆகியோர் பகுதி நேர பந்து வீச்சாளர்களாக செயல்படும் திறன் கொண்டவர்கள்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/article8464534.ece

 

Link to comment
Share on other sites

கிரிக்கெட் வீரர்கள் என்னைப் பற்றி புகார் அளிக்கவில்லை என நம்புகிறேன்: ஹர்ஷா போக்ளே

 

ஹர்ஷா போக்ளே. | படம்: பிடிஐ.
ஹர்ஷா போக்ளே. | படம்: பிடிஐ.

ஐபிஎல் வர்ணனையிலிருந்து நீக்கப்பட்ட ஹர்ஷா போக்ளே, நிச்சயம் தனது நீக்கத்துக்கு வீரர்கள் காரணமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் ஹர்ஷா போக்ளே பதிவிட்டதாவது:

ஏன் நான் ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையில் இல்லை என்பது எனக்கு இன்னமும் கூட தெரியவில்லை. என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. என்னைப் பிடிக்கவில்லை என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

கவனிக்க விரும்பும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரிடமும் நாம் எல்லாவற்றிலும் ஒத்துப் போக முடியாது என்பதைக் கூறிவிடுவேன். ஆனால் அவர்கள் நன்றாக ஆட வேண்டும் என்பதை உண்மையில் விரும்புபவன் நான். நான் அவர்கள் ரன் எடுப்பதையோ, விக்கெட் எடுப்பதையோ, கேட்ச் பிடிப்பதையோ தடுக்க முடியாது.

அதனைச் செய்வது அவர்கள் வேலை. அவர்கள் களத்தில் என்ன செய்தார்கள், அல்லது என்ன செய்யவில்லை என்பதை எடுத்துக் கூறுவது என் வேலை. எங்களது பாதைகள் பாராட்டுதல்களாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிறைந்தவையே. ஒருவர் பல்கலைக் கழக மட்ட கிரிக்கெட் வீரரானாலும் சரி அல்லது சிறந்த வீரர்களில் ஒருவரானாலும் சரி வேலையின் இயல்பு இதுதான். எனது மிகப்பெரிய விமர்சனம் என்னவெனில், நான் விமர்சனத்தை போதுமான அளவு செய்வதில்லை என்பதே.

இவ்வாறு கூறியுள்ளார் ஹர்ஷா போக்ளே.

ட்விட்டரில் போக்ளேயை சுமார் 3.5 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதனால் சமூக ஊடகங்களில் ஹர்ஷா போக்ளேவுக்கு ஆதரவு குவிந்து வருகின்றன.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87/article8466564.ece

Link to comment
Share on other sites

300 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பிராவோ

 

Comments     InBravo300IPL.jpg

 

  இடம்பெற்று வரும் இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் குஜராத் லயன்ஸ் அணி சார்பாக விளையாடி வரும் டுவைன் பிராவோ, கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணிக்கெதிராக கடந்த திங்கட்கிழமை (11) பங்கேற்ற போட்டியில், இருபதுக்கு-20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

மேற்படி போட்டியில் டேவிட் மில்லரின் விக்கெட்டினை கைப்பற்றியபோதே டுவைன் பிராவோ, இருபதுக்கு-20 போட்டிகளில் தனது 300ஆவது விக்கெட்டினை கைப்பற்றிருந்தார்.

 

  இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக முரளி விஜய் 42, மனன் வொஹ்ரா 38, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் குஜராத் லயன்ஸ் அணி சார்பாக டுவைன் பிராவோ 4, இரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

  பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆரோன் பின்ஞ் 74 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதுவரை, 292 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ள டுவைன் பிராவோ, இப்போட்டியுடன் சேர்த்து 302 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

http://tamil.wisdensrilanka.lk/article/3328

Link to comment
Share on other sites

ஐபிஎல்: பவர் பேட்டிங்கினால் ராயல் சாலஞ்சர்ஸ் வெற்றி

 

மிகப்பெரிய கூட்டணி அமைத்த டிவில்லியர்ஸ், விராட் கோலி. | படம்: பிடிஐ.
மிகப்பெரிய கூட்டணி அமைத்த டிவில்லியர்ஸ், விராட் கோலி. | படம்: பிடிஐ.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தங்களுடைய பவர் பேட்டிங்கினால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் விராட் கோலி தனது அருமையான டி20 பார்மைத் தொடர, டிவில்லியர்ஸ் 7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என்று பவர் ஹிட்டிங்கில் ஈடுபட கடைசியில் சர்பராஸ் கான் 10 பந்துகளில் 35 ரன்களையும், வாட்சன் 8 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 19 ரன்களையும் விளாச 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது பெங்களூரு. தொடக்கத்தில் நன்றாக வீசிய புவனேஷ் குமார் 4 ஓவர்களில் 55 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நெஹ்ரா 2.1 ஓவர்களில் காயமடைந்து வெளியேறினார்.

வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான் மட்டுமே சன் ரைசர்ஸ் அணியில் நன்றாக வீசி 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விராட் கோலி, டிவில்லியர்ஸ் மிகப்பெரிய கூட்டணி:

பரபரப்பாக எதிர்பார்த்த கிறிஸ் கெயில் புவனேஷ் குமார் பந்தில் பவுல்டு ஆகி வெளியேற ஆட்டம் டிவில்லியர்ஸ், விராட் கோலி கைக்கு மாறியது. கிறிஸ் கெயில் ஒன்றுமில்லாத பந்தில் பவுல்டு ஆனார். அவ்வளவுதான் கெயில் அவுட் ஆனதையே கோலியும் டிவில்லியர்ஸும் மறக்கடித்து விட்டனர். இருவரும் இணைந்து 87 பந்துகளில் 157 ரன்களை விளாசினர். இருவரும் மரியாதை போன்று யாருக்காவது அளித்தார்கள் என்றால் அது அறிமுக ஐபிஎல் போட்டியில் ஆடும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவர்களிலேயே. இவரும் தனது கட்டர்களால் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இவரது 2 ஓவர்கள் முடிந்தவுடன் கோலியும், டிவில்லியர்ஸும் சாத்துமுறைக்குத் திரும்பினர்.

ஹென்ரிக்ஸ், கரண் சர்மா, ஆஷிஷ் ரெட்டி, புவனேஷ் குமார் என்று ஒருவரும் ஏ.பி.டி., விராட் கோலி ஆகியோரின் விரைவு கதியில் சுழற்றப்பட்ட மட்டைக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கோலி 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 75 ரன்கள் எடுத்து 16-வது ஓவரில் புவனேஷ் குமாரிடம் ஆட்டமிழந்தார்.

டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 82 ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானிடம் ஆட்டமிழந்தார். ஷேன் வாட்சன் கரண் சர்மாவை தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் விளாசினார். சர்பராஸ் கான் முழுதும் புதிது புதிதான ஷாட்களை ஆடினார், துடுப்பு ஸ்வீப், அதையே எதிர்திசையில் ரிவர்ஸ் துடுப்பு ஸ்வீப் என்று அவர் அசத்தினார், இதனால் கடைசி 10 ஓவர்களில் 139 ரன்களை விளாசி 227 ரன்களை எட்டியது ராயல் சாலஞ்சர்ஸ்.

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியில் டேவிட் வார்னர் வாணவேடிக்கைக் காட்டினார். 5 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் அவர் 25 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவண் 8 ரன்களில் காஷ்மீர் ஆஃப் ஸ்பின்னர் பர்வேஸ் ரசூலிடம் பவுல்டு ஆனார். ஆனால் வார்னர் அதிரடியில் 8 ஓவர்களில் 83 ரன்களை எடுத்திருந்தது சன் ரைசர்ஸ்.

ஆனால் வார்னர், நமன் ஓஜா, ஹென்ரிக்ஸ், தீபக் ஹுடா ஆகியோர் 17 பந்துகள் இடைவெளியில் வெளியேறினர். யஜுவேந்திர சாஹல் இதில் 2 விக்கெட்டுகளையும், மில்ன, வாட்சன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். கடைசியில் மோர்கன், ஆஷிஷ் ரெட்டி, கரன் சர்மா ஆக்ரோஷம் காண்பித்தும் ஆர்.சி.பி. அணி நிர்ணயித்த இலக்கு சன் ரைசர்ஸுக்கு மிக அதிகமாகப் போய்விட்டது. ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8471322.ece?homepage=true

Link to comment
Share on other sites

10 பந்துகளில் 35 ரன்கள் குவித்து சாதனை: சர்பிராஸ் கானுக்கு வார்னர், வாட்சன் பாராட்டு

 
 
சர்பிராஸ் கான்
சர்பிராஸ் கான்

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 10 பந்துகளில் 35 ரன்களைக் குவித்த இந்திய வீரர் சர்பிராஸ் கானுக்கு ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை விளாசியது. அந்த அணியில் விராட் கோலி 75 ரன்களையும், டிவில்லியர்ஸ் 82 ரன்களையும் நொறுக்கித் தள்ளினர். குறிப்பாக அந்த அணிக்காக ஆடிய 18 வய தான இளம் இந்திய வீரர் சர்பிராஸ் கான் 10 பந்துகளை மட்டுமே சந்தித்து 35 ரன்களைக் குவித்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும்.

இதைத்தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 25 பந்துகளில் 58 ரன்களை எடுத்தபோதிலும் மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 45 ரன்களில் தோற்றது. இப்போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் வாட்சன், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட் களைக் கைப்பற்றினர். 82 ரன்களைக் குவித்த டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த போட்டியைப் பற்றி பெங்களூரு அணிக்காக ஆடிய ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்பிராஸ் கானின் ஆட்டம் என்னை பிரமிக்க வைத்தது. அவர் எல்லா விதமான ஷாட்களையும் சிறப்பாக ஆடுகிறார். இதற்காக அவர் கடுமையாக பயிற்சி பெற்றிருப்பது அவரது ஆட்டத்தை பார்க்கும்போதே தெரிகிறது.

ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோலி, கிறிஸ் கெய்ல் ஆகியோருடன் சேர்ந்து ஆடுவது சிறந்த அனுபவமாக உள்ளது. அதிலும் இன்றைய தினம் டிவில்லியர்சின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த தொடரின் மூலம் கிறிஸ் கெய்லுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு வாட்சன் கூறினார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:

இப்போட்டியில் கோலியும், டிவில்லியர்சும் சிறப்பாக ஆடினர். இருப்பினும் சர்பிராஸ் கானின் அதிரடி ஆட்டம்தான் அந்த அணி கடைசி ஓவர்களில் அதிக ரன்களைக் குவிக்க உதவியது. அவரது துடிப்பான பேட்டிங்கால் பெங்களூரு அணி கடைசி 4 ஓவர்களில் 63 ரன்களைக் குவித்தது. நானும் அந்த நேரத்தில் பந்துவீச்சாளருக்கு உரிய ஆலோசனைகளை வழங்காமல் தவறு செய்துவிட்டேன்.

இவ்வாறு வார்னர் கூறினார்.

இப்போட்டியின்போது காயம் அடைந்ததால் அடுத்த 2 போட்டி களில் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இதைத் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/10-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-35-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8475125.ece

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்: 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் வெற்றி

ஐ.பி.எல்: 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் வெற்றி

 

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 5 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை சேர்த்தது.

கொல்கத்தா அணியில் கவுதம் கம்பீர் அதிகபட்சமாக 52 பந்துகளில் 64 ஓட்டங்களை சேர்த்தார்.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாடியது.

மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும், பார்த்தீவ் பட்டேலும் சிறப்பான தொடக்கம் தந்தனர். 4.5 ஓவர்களில் அந்த அணி 50 ஓட்டங்களை எட்டியது. 5.5 ஓவர்களில் 53 ஓட்டங்களை எடுத்திருந்த போது பார்த்தீ பட்டேல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதியில் மும்பை அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.

ரோகித் சர்மா 54 பந்துகளில் 84 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர் அணியை தோற்கடித்தது.
Link to comment
Share on other sites

தண்ணீர் பஞ்சத்தால் ஐ.பி.எல். போட்டிகள் மகாராஷ்டிராவில் இருந்து மாற்றம்

April 14, 2016

மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் ஏப்ரல் 30ம் தேதிக்கு பின் அங்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்த மும்பை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் நீர் கிடைக்காமல் பலர் வேதனையடைந்துள்ளனர்.

 

பஞ்சம் காரணமாக குடிக்க மற்றும் குளிக்கக்கூட நீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். அதேவேளையில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு பல லட்சம் லிட்டர் நீர் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன. எனவே, மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம்,ஏப்ரல் 30 வரை ஐபிஎல் போட்டிகள் மஹாராஷ்டிராவில் நடைபெறலாம். அதன்பிறகு வேறு மையங்களுக்கு மாற்றப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 13 போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

http://www.onlineuthayan.com/sports/?p=12171&cat=2

Link to comment
Share on other sites

சாதனை படைத்த கம்பீர்

April 14, 2016

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தலைவர் கவுதம் கம்பீர் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்த 5வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

M_Id_384691_Gautam_Gambhir

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் தலைவர் கவுதம் கம்பீர் 52 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு 27வது அரை சதமாக அமைந்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக அரை சதம் அடித்திருந்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் முறியடித்தார்.

தற்போது குஜராத் அணியின் தலைவராக இருக்கும் சுரேஷ் ரெய்னா 26 அரை சதம் அடித்துள்ளார். ஐதராபாத் அணித்தலைவர் டேவிட் வார்னர், மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா ஆகியோரும் தலா 26 அரை சதம் எடுத்துள்ளனர்.

அதேசமயம் ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா (133 போட்டி, 3719 ஓட்டங்கள்) முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ரோஹித் சர்மா (130 போட்டி, 3476 ஓட்டங்கள்), 3வது இடத்தில் கம்பீர் (119 போட்டி, 3235 ஓட்டங்கள்) உள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=12167&cat=2

Link to comment
Share on other sites

ஐபிஎல்: புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ்  வெற்றி

புனே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்
 
குஜராத் அணி 18 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது
Link to comment
Share on other sites

IPL அழகிகளுக்கு வழங்கப்படும் ஊதிய விபரம்

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடன அழகிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென நடன அழகிகளை ஒப்பந்தம் செய்திருப்பர். அவர்கள் தங்களது அசத்தலான நடனங்களால் ரசிகர்களை உற்சாகப்படுத்துவர்.

ipl-cheerleaders4

இதில் உள்ளூரை விட வெளிநாட்டு நடன அழகிகளுக்கே ஊதியம் சற்று அதிகமாக வழங்கப்படுகிறது. அணிகளை பொறுத்து இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் வேறுபடுகிறது. ஒரு போட்டிக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை இவர்கள் ஊதியமாக பெறுகின்றனர். தவிர, அவர்களின் அணி வெற்றி பெற்றுவிட்டால் அவர்களுக்கு சம்பளம் தவிர போனஸ் கிடைக்கும்.

அதேபோல் போட்டோ சூட், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தனிப்பட்ட முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. கொல்கத்தா அணியின் நடன அழகிகளுக்கு இந்த சீசனில் 10 மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது, ஒரு போட்டிக்கு ரூ.12 ஆயிரம், போனஸாக ரூ. 3 ஆயிரம், மற்ற நிகழ்ச்சிகளுக்குரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதேபோல் பெங்களூர் அணியின் நடன அழகிகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.10 ஆயிரமும், மும்பை அணியின் அழகிகளுக்கு ரூ.8 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்கள் ஒரு சீசனில் குறைந்தது 14 போட்டிகளில் பங்கேற்று ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிப்பர். சிலப் போட்டிகளில் இந்திய நடன அழகிகளும் பங்கேற்பர். அவர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.5000- 6000 ஊதியமாக வழங்கப்படுகிறது.

http://www.onlineuthayan.com/sports/?p=12160

Link to comment
Share on other sites

10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்: புனே அணியின் டு பிளெஸிஸ் ஆதங்கம்

 

 
படம்: பிடிஐ.
படம்: பிடிஐ.

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 6-வது போட்டியில் தோனி தலைமை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ரெய்னா தலைமை குஜராத் லயன்ஸ் வீழ்த்தியது.

இந்தப் போட்டி குறித்து கூறிய புனே அணியின் ஃபா டுபிளெசிஸ் ‘10 ரன்கள் தங்கள் அணி குறைவாகப் பெற்றதாக’ ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

முதலில் பேட் செய்த புனே அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. டுபிளெஸிஸ்தான் அதிகபட்சமாக 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 69 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய குஜராத் லயன்ஸ் அணி ஏரோன் பிஞ்ச் (50), மெக்கல்லம் (49) ஆகியோரின் காட்டடி தர்பாரில் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மீண்டும் தமிழக லெக்ஸ்பின்னர் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களையும் வீசினார் 26 ரன்கள் கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

ஆர்.பி.சிங், இசாந்த் சர்மாவின் தொடக்க ஓவர்களில் 4 நான்குகள் 2 சிக்சர்கள் என்றவுடனேயே பவர் பிளேயின் கடைசி ஓவரி முருகன் அஸ்வினிடம் கொடுத்தார் தோனி, ஆனால் ஏரோன் பிஞ்ச் அவருக்கு காட்டுக் காட்டென்று காட்டி 4 பவுண்டரிகளை விளாச அந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது. பிறகு சிக்கன வீச்சாளர் ரஜத் பாட்டியாவை லாங் ஆன் மே;ல் 2 சிக்சர்கள் அடித்து ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் குஜராத் லயன்ஸ் 8.3 ஓவர்களில் 85 என்று அதிரடி தொடக்கம் கண்டது.

மெக்கல்லமும் மோசமான பவுலிங்கை பிரித்தார். ரவிச்சந்திரன் அஸ்வினின் யார்க்கரில் மெக்கல்லம் பந்து சரியாக சிக்காமல் கிரீஸுக்கு வெளியே தடுமாற வழக்கமான ஸ்டம்பிங்கைக் கோட்டை விட்டார் தோனி. மெக்கல்லம் ஆட்டம் இழந்த பிறகு ரெய்னா, பிராவோ வெற்றியை உறுதி செய்ய குஜராத் லயன்ஸ் வென்றது.

இந்த தோல்வி குறித்து புனே அணியின் டு பிளெசிஸ் கூறும்போது, “இன்னும் கூடுதலாக 10 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். போதுமான ரன்கள் இல்லை. கடைசியில் விக்கெட்டுகளை இழந்தோம். விரைவில் ரன் குவிப்பில் ஈடுபடும் தரமான வீரர்கள் எங்கள் அணியில் இருந்தும் எங்கள் விருப்பத்துக்கு இணங்க ரன்களைக் குவிக்க முடியவில்லை.

குஜராத் அணியில் பந்தின் வேகத்தைக் குறைத்து வீசும் திறமை கொண்ட வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல கட்டர்களை வீசினர், சரியான இடத்திலும் வீசினர். ஸ்பின்னர்களும் துல்லியமாக வீச எங்களால் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனது.

இந்த பிட்சில் சரியான இடத்தில் பந்தை இறக்க முடிந்தால் பேட்ஸ்மென்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் எங்களால் அவ்வாறு வீச முடியவில்லை.

நாங்கள் புதிய அணி எனவே பேட்டிங், பவுலிங் என்று சரியான அணிச்சேர்க்கையை இனிமேல் களமிறக்குவோம்.

நாங்கள் பேட் செய்யும் போது முதல் 10 ஒவர்கள் நன்றாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு பிட்ச் மந்தமானது, தாக்குதல் ஆட்டம் ஆடமுடியவில்லை.

இரு அணிகளுமே நன்றாக பேட் செய்தனர், அவர்களுக்கு இலக்கு என்னவென்று தெரிந்துள்ளதே வித்தியாசத்தை ஏற்படுத்தியது” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/10-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8479060.ece

Link to comment
Share on other sites

வெற்றிக்கணக்கை தொடங்குவது யார்?- டெல்லி - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

 
 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதுடெல்லியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. தங்கள் முதல் போட்டியில் தோற்ற இந்த இரு அணிகளும் இன்று வெற்றிக் கணக்கை தொடங்குவதில் தீவிரமாக உள்ளன.

கடந்த ஐபிஎல் போட்டித்தொடரில் மிக மோசமாக ஆடிய டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இந்த ஆண்டாவது வெற்றிகரமாக ஐபிஎல்லை தொடங்கவேண்டும் என்ற ஆசையில் இருந்தன. ஆனால் துரதிருஷ்டவசமாக டெல்லி அணி கொல்கத்தாவிடமும், பஞ்சாப் அணி குஜராத்திடமும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற லட்சியத்துடன் அந்த அணிகள் இன்று களம் இறங்குகின்றன.

ஏமாற்றிய பிரத்வெயிட்

ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் புதிய உற்சாகம் பெற்றுள்ள டெல்லி அணி, பேட்டிங்குக்கு டி காக்கையும், சஞ்சு சாம்சனையுமே பெரிதும் நம்பியுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டியின் நாயகனான பிரத்வெயிட் அந்த அணியில் இருந்தாலும் கடந்த போட்டியில் அவர் பெரிதாக எதுவும் சாதிக்காமல் ஏமாற்றிவிட்டார். இந்த சூழலில் மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், நெகி போன்ற உள்ளூர் ஆட்டக்காரர்கள் கைகொடுத்தால்தான் ஏதாவது சாதிக்க முடியும் என்ற நிலையில் அந்த அணி உள்ளது.

பஞ்சாப் அணியைப் பொறுத்த வரை டேவிட் மில்லர் - மேக்ஸ்வெல் கூட்டணியையே அந்த அணி பெரிதும் சார்ந்துள்ளது. கடந்த போட்டியில் சொதப்பிய அவர்கள், இன்றைய போட்டில் விஸ்வரூபம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் டெல்லி உள்ளது.

மில்லர், மேக்ஸ்வெல் ஆகியோர் கடந்த போட்டியில் சொதப்பியபோதிலும் முரளி விஜய், வோரா ஆகியோர் சிறப்பாக ஆடியது டெல்லிக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. இந்த நால்வரும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் பஞ்சாப்பை எதிர்த்து நிற்பது டெல்லி அணிக்கு சற்று சிரமமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article8478425.ece

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.,டுவென்டி-20 கிரிக்கெட் : டில்லி அணி அசத்தல் வெற்றி
 

புதுடில்லி: பஞ்சாப் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் குயின்டன் அரை சதம் விளாச, டில்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்தியாவில், 9வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் புனே, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ஜாகிர் தலைமையிலான டில்லி அணி, டேவிட் மில்லர் வழிநடத்தும் பஞ்சாப் அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜாகிர் கான் 'பவுலிங்' செய்தார்.

 

மிஸ்ரா அசத்தல்:பஞ்சாப் அணிக்கு முரளி விஜய் (1) ஏமாற்றினார். வோரா 32 ரன்கள் எடுத்தார். மிஸ்ரா 'சுழலில்' ஷான் மார்ஷ் (13), கேப்டன் மில்லர் (9), மேக்ஸ்வெல் (0) சிக்கினர். மோகித் சர்மா 15, மிட்சல் ஜான்சன் 4 ரன்கள் எடுத்தனர். முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்தது. பிரதீப் சகு (18), சந்தீப் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் அதிகபட்சமாக மிஸ்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

குயின்டன் அரை சதம்:எளிய இலக்கை துரத்திய டில்லி அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் (3) சொதப்பினார். பின் இணைந்த குயின்டன், சாம்சன் ஜோடி பொறுப்புடன் செயல்பட்டது. சாம்சன் 33 ரன்கள் எடுத்தார். குயின்டன் அரை சதம் அடித்தார். முடிவில், டில்லி அணி 13.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குயின்டன் (59), பவான் நேகி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1502345

Link to comment
Share on other sites

நூறாவது போட்டியில் ஆட்டநாயகன்: அசத்தல் அமித் மிஷ்ரா!

50, 100 போன்றவை என்றுமே நமக்கு ஸ்பெஷல். ஒரு படம் நூறு நாள் ஒடுவது, 50வது பிறந்தநாள், கிரிக்கெட்டில் செஞ்சுரி என இந்த எண்கள் என்றுமே மறக்க முடியாதவை. அதுபோலத்தான் ஒரு விளையாட்டு வீரருக்கு நூறாவது போட்டி என்பது. அப்படிப்பட்ட மறக்க முடியாத போட்டியில் பறக்க முடியாத சம்பவங்கள் நடந்தால்? அப்படி டபுள் சந்தோஷத்தில் திளைக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா. ஐ.பி.எல் தொடரில் தனது நூறாவது போட்டியில், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி பஞ்சாப் அணியை பந்தாடி ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

amithvc1.jpg



ஐ.பி.எல் வரலாற்றின் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் 33 வயதான லெக்-ஸ்பின்னர் மிஷ்ராவும் ஒருவர். ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முதலாக மூன்று ஹாட்-டிரிக் கைப்பற்றியவர் மிஷ்ரா தான். அதையும் மூன்று வேறு அணிகளுக்காக (டேர்டெவில்ஸ், டெக்கான், சன்ரைசர்ஸ்) வீழ்த்தியுள்ளது இன்னும் சிறப்பு. ஒட்டுமொத்த மந்துவீச்சாளர்களில் 112 விக்கெட்டுகளோடு, மலிங்காவிற்கு (98 போட்டிகள் – 143 விக்கெட்) அடுத்தபடியாக சாவ்லா, ஹர்பஜனோடு இணைந்து  இரண்டாம் இடத்தில் இருந்தார் மிஷ்ரா. சாவ்லா, ஹர்பஜன் ஆகியோர் தலா 113 போட்டிகள் எடுத்துக்கொண்டாலும், மிஷ்ரா அந்த இலக்கை அடைய வெறும் 99 போட்டிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார். தனது அபார சுழல் திறமையால், ஃப்லோட்டிங் பால், கூக்ளி என பல ஆயுதங்கள் பயன்படுத்தி விக்கெட்டுகள் வீழ்த்தும் இவர், தனது நூறாவது போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், அதிக விக்கெட் வீழ்த்திய ஸ்பின்னர் என்ற பெருமையைப் பெற்றதோடு தனது நூறாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு திளைத்தார் மிஷ்ரா.   

ஒன்பதாவது ஐ.பி.எல் தொடரின் 7வது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின. சுமாரான தொடங்கிய பஞ்சாபின் ஆட்டம், மிஷ்ரா பந்தை தொட்ட பிறகு பஞ்சரானது. நூறாவது போட்டியில் அவர் வீசிய முதல் பந்தே ஷான் மார்ஷ் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதன்பின்னர் மேக்ஸ்வெல், மில்லர் என இரு அதிரடி வீரர்களையும் அசால்டாய் வெளியேற்றினார். சில நேரம் தண்ணி காட்டிய வோஹ்ராவையும்(32 ரன்) பெவிலியனுக்கு அனுப்பி மேலும் பஞ்சாபை போட்டுத் தள்ளினார். கடைசி கட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் கொடுப்பதிலேயே கேப்டன் ஜாகிர் ஆர்வம் காட்டியதால், மிஷ்ராவால் மூன்று ஓவர் மட்டுமே பந்து வீச முடிந்தது. வீசிய அந்த மூன்று ஓவர்களில் 13 பந்துகளில் எதிரணி வீரர்களால் ரன் எடுக்க முடியவில்லை. வெறும் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுக்க, டி காக்(59), சஞ்சு சாம்சன்(33) ஆகியோரின் நிதான ஆட்டத்தால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் சரண்டர் ஆன டேர்டெவில்ஸ் மீண்டு வந்திருப்பது அவர்களுக்குப் புத்துணர்ச்சியளிக்கும். பஞ்சாப் அணி தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோற்றுள்ளது.

33 வயதானாலும் இன்னும் இளம் சுழற்பந்து வீச்சாளர் போலத் திறம்படவே செயல்படுகிறார் மிஷ்ரா. இந்த சிறந்த செயல்பாட்டை ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்திய அணிக்காகவும் காட்டினால் சர்வதேச அரங்கிலும் சில சாதனைகள் படைக்கலாம்!

http://www.vikatan.com/news/sports/62536-four-wicket-haul-by-leg-spinner-amit-mishra.art

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி
 
 
 

ஐதராபாத்: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கோல்கட்டா அணியும் ஐதராபாத் அணியும் மோதின. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கோல்கட்டா அணி 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய கோல்கட்டா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் ஆட்டமிழக்காமல் 90 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1502897

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.