Jump to content

மறக்கப்பட்ட நடிகர்கள்


Recommended Posts

மறக்கப்பட்ட நடிகர்கள்: 1 - நடிகர் திலகம் கன்னத்தில் ஒரு பளார்!- பி.வி. நரசிம்ம பாரதி

 

 
 
 
 
  • ‘திரும்பி பார்’ படத்தில் பண்டரிபாய், சிவாஜி, நரசிம்ம பாரதி
    ‘திரும்பி பார்’ படத்தில் பண்டரிபாய், சிவாஜி, நரசிம்ம பாரதி
  • ‘மதன மோகினி’ படத்தில் சி.ஆர்.ராஜகுமாரி, நரசிம்ம பாரதி
    ‘மதன மோகினி’ படத்தில் சி.ஆர்.ராஜகுமாரி, நரசிம்ம பாரதி
  • சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் ‘பொன்முடி’ படத்துக்காக அமைக்கபட்ட கடற்கரை செட்டில் டூயட் காட்சியை படமாக்குகிறார் எல்லீஸ் ஆர். டங்கன்
    சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் ‘பொன்முடி’ படத்துக்காக அமைக்கபட்ட கடற்கரை செட்டில் டூயட் காட்சியை படமாக்குகிறார் எல்லீஸ் ஆர். டங்கன்

சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்-சிவாஜி கூட்டணியில் வெளியான மற்றொரு திராவிட சினிமா ‘திரும்பிப்பார்’(1953). புராணக் கதையான ‘அகலிகை’யைத் தழுவி, அதைச் சமகாலத்தின் சமூக, அரசியல் நையாண்டிக் கதையாக்கினார் கலைஞர். ‘பராசக்தி’யில் கதையின் நாயகனாக நடித்த சிவாஜி, ‘திரும்பிப்பார்’ படத்தில் வில்லனாக நடித்தார்.

வில்லன் என்றால் மிக மோசமான, முழுமையான வில்லன். பெண் பித்தர் கதாபாத்திரம். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஒருவர். அவர் அந்தப் படத்தின் கதாநாயகன் பி.வி. நரசிம்ம பாரதி. நாயகன் என்றால் ‘பொன்முடி’, ‘என் தங்கை’, ‘மாப்பிள்ளை’, ‘ மதன மோகினி’ என வரிசையாக வெற்றிகளைக் கொடுத்துவந்த நாயகன். மார்டன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரத்துக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். எல்லீஸ் ஆர். டங்கன் விரும்பித் தேர்ந்தெடுத்த ஹீரோ.

நானொரு சிங்கம்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ குறுங்காவியத்தை நாடகமாக நடத்திக்கொண்டிருந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். பாரதிதாசனுடன் நல்ல நட்புகொண்டிருந்த மார்டன் தியேட்டர் சுந்தரம் அதைப் படமாகத் தயாரிக்க விரும்பினார். பாரதிதாசனே கதை, வசனம் எழுதிக் கொடுத்தாலும் கதைக்கு மட்டும் பெயர் போட்டால் போதும் என்று கூறிவிட்டார். இயக்குநராக எல்லீஸ் ஆர். டங்கனை அமர்த்தினார் சுந்தரம். திரைக்கதையைப் படித்த டங்கன், தனக்கு அழகான கதாநாயகன் தேவை என்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.வி. நரசிம்மபாரதி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான நடிகர்களை ஸ்டூடியோவில் திரட்டி வரிசையாக நிற்கவைத்தார் சுந்தரம். டங்கன் ஒவ்வொருவரையும் கூர்ந்து நோட்டமிட்டபடியே நரசிம்ம பாரதியின் அருகில் வந்து நின்றார். நரசிம்ம பாரதியைப் பார்த்து “யார் நீ?” என்றார் ஆங்கிலத்தில். அதற்கு “நானொரு சிங்கம்” என்று கம்பீரமாக ஆங்கிலத்தில் பதில் சொன்னார் நரசிம்ம பாரதி. “சிங்கத்தால் காதல் வசனம் பேச முடியுமா?” என்று டங்கன் கேட்க, “காதல் வசனம் பேசும்போது நான் ஜோடியைப் பிரியாத பொன்மான்” என்றார் நரசிம்ம பாரதி. “இவர்தான் என் ஹீரோ” என்றார் டங்கன்.

‘பொன்முடி’யின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் வண்டி வண்டியாக மணலைக் கொட்டி பிரம்மாண்ட கடற்கரை செட்டை உருவாக்கினார் தயாரிப்பாளர் சுந்தரம். அதில் நாயகன் நரசிம்ம பாரதி, நாயகி மாதூரி தேவி இருவரும் மணலில் ஓய்வாகப் படுத்திருந்தபடியே டூயட் பாடி காதல் செய்யும் பாடல் காட்சியை நெருக்கமாகப் படமாக்கினார் டங்கன். படம் வெளியாகி பெரும் பரபரப்பையும் பதைபதைப்பையும் உருவாக்கியது. “ஒரு வெள்ளைக்கார இயக்குநர், மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ளதுபோல காதல் காட்சிகளைப் படமாக்கி தமிழ்க் கலாச்சாரத்தைக் கெடுக்கிறார்” என்று கண்டனக் குரல்கள் எழுந்தன. பல பத்திரிகைகள் காதலர்களின் நெருக்கத்தைப் படமாக்கிய விதம் ‘அபசாரம்’ எனக் கண்டித்தன. ஆனால் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. “நரசிம்ம பாரதியும் மாதூரி தேவியும் நிஜக் காதலர்கள் போலவே நடித்திருக்கிறார்கள்” என்ற பாராட்டு மழையும் கண்டனத்துக்கு நடுவே கொட்டியது. நரசிம்ம பாரதி மாதுரிதேவியை இணைத்துக் கிசுகிசுக்களும் கிளம்பின. படத்தின் நாயகன் நரசிம்ம பாரதி பெண்கள் விரும்பும் நடிகராக மாறினார்.

நடிகர் திலகத்துடன் மட்டுமல்ல எம்.ஜி.ஆர்., கலைஞர், என்.டி.ராமாராவ் ஆகிய மூன்று முதல்வர்களோடும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரோடும், மாதுரிதேவி, ஜமுனா, பண்டரிபாய் போன்ற அன்றைய முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்துப் புகழ்பெற்ற நரசிம்ம பாரதி மதுரையின் மைந்தர். 9 படங்களில் கதாநாயகனாகவும் 15 படங்களில் இணை, துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தாலும் மறக்கப்பட்ட நடிகர்களில் ஒருவர்.

பெயருடன் ஒட்டிக்கொண்ட பாரதி

பட்டுநெசவு செய்யும் ஏழை சௌராஷ்ட்ரா குடும்பத்தில் வெங்கடாஜலபதி ஐயர் - பாக்கியலட்சுமி தம்பதிக்கு 24 - 03 1923-ல் பிறந்தார். அதே நாளில், நரசிம்மன் பிறந்து ஒரு மணிநேரம் கழித்து, பக்கத்து வீட்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் தமிழ்த் திரையிசையில் பிற்காலத்தில் தன் கம்பீரக் குரலால் கோட்டை கட்டிய டி.எம். சௌந்தர்ராஜன். பால்யம் முதலே நரசிம்மனும் சௌந்தர்ராஜனும் நண்பர்கள். மதுரை சௌராஷ்ட்ரா தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 11 வயது நரசிம்மனை வள்ளிக்குன்றம் ஜமீன்தார் ‘பாய்ஸ்’ கம்பெனி நாடகக் குழுவில் சேர்த்துவிட்டார் அவருடைய தந்தையார். நரசிம்மனின் அழகைக் கண்ட ஜமீன்தார் 12 வயது முதல் அவரைச் சிறுமி வேடங்களில் நடிக்கவைத்தார். நரசிம்மனுக்கு ஜமீன்தார் ஓய்வுகொடுக்கும் நாட்களில் மாலை 5 மணிக்கெல்லாம் காணாமல் போய்விடுவார். எங்கே போகிறார் என்று யாருக்கும் தெரியாது. அது மவுனப் படங்கள் வந்துகொண்டிருந்த காலம். மதுரை தெற்குமாசி வீதியில் திருமலை நாயக்கர் மன்னரின் இசை மன்றமாக இருந்து பள்ளிக்கூடமாக மாறிய ‘நவபத் கானா’ மண்டபத்தை அடுத்து அமைக்கப்பட்டிருந்த ‘டெண்டு கொட்டகையில்’ மவுனப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன. என்றாலும் நாடகங்களுக்குத்தான் மவுசு.

பாய்ஸ் கம்பெனி அப்போது ‘பதி பக்தி’ என்ற சௌராஷ்ட்ரா நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தது. சரஸ்வதியாக நடித்தவர் கடும் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டார். அப்போது கொஞ்சமும் யோசிக்காமல் நரசிம்மனைக் கூப்பிட்டார் ஜமீன்தார். ஆனால் ஆளைக் காணோம். நரசிம்மனை அழைத்துவரக் கணக்குப் பிள்ளை மிதி வண்டியில் பறந்தார். வீட்டிலும் ஆள் இல்லை. தெருவில் விளையாடிக்கொண்டிருந்த டி.எம். சௌந்தர்ராஜனிடம் “உன் சினேகிதன் எங்கே?” என்று கணக்குப் பிள்ளை கேட்க, யோசிக்காமல் “டெண்டு கொட்டாய்” என்று சௌராஷ்ட்ர மொழியில் பதிலளித்தார் சிறுவனாக இருந்த சௌந்தர்ராஜன். நிம்மதிப் பெருமூச்சுடன் டிக்கெட் வாங்கிக்கொண்டு கொட்டகைக்குள் நுழைந்த கணக்குப் பிள்ளைக்கு நரசிம்மனின் பிசிறில்லாத பிஞ்சுக்குரல் காதுகளில் வந்து விழுந்தது. அங்கே திரையில் ஓடிக்கொண்டிருந்த மவுனப் படத்தின் காட்சிகளுக்கு வர்ணனை செய்துகொண்டிருந்தார் நரசிம்மன்.

கணக்குப் பிள்ளை ஆச்சரியப்பட்டுப்போனார்! நாடகத்தில் வேஷம் கட்டாத நாட்களில் நரசிம்மனுக்கு விரும்பமான வேலை மவுனப் படங்களுக்கு வர்ணனை செய்து இரண்டனா சம்பாதிப்பதுதான். வாத்தியார் அழைக்கிறார் என்றதும் பதறியடித்து ஓடிவந்த நரசிம்மனை, அன்றைய நாடகத்தில் சரஸ்வதி வேடம் போடச் சொன்னார். வாத்தியாரின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? சரஸ்வதியாக (பாரதி) வேடம் போட்டு நரசிம்மன் நடித்ததைப் பார்த்த ஊரின் தலைக்கட்டுகளும் தனவந்தர்களும் “சரஸ்வதியின் வேடத்தில் சிறப்பாக நடித்த நரசிம்மனுக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை அதே மேடையில் கொடுத்தார்கள். அன்றுமுதல் பி. வி. நரசிம்மன், நரசிம்ம பாரதியானார்.

திரையுலகுக்கு டி.எம். சௌந்தர்ராஜனை அறிமுகப்படுத்திய நரசிம்ம பாரதி, என்.டி. ராமராவுக்கே ஒருகட்டத்தில் போட்டியாக மாறினார். அவரது சூடும் சுவையுமான திரையுலகப் பயணத்தின் நிறைவுப் பகுதி அடுத்த வாரம்.

par111_2724960a.jpg

பி.வி. நரசிம்ம பாரதி

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/article8197604.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மறக்கப்பட்ட நடிகர்கள் 2: முதல் ஆக்‌ஷன் கதாநாயகி! - கே. டி. ருக்மணி

 

 
 
  • rukmani_2_2743209g.jpg
     
  • ‘மேனகா’ படத்தில் டி.கே. சண்முகம், கே.டி. ருக்மணி | படங்கள் உதவி: ஞானம்
    ‘மேனகா’ படத்தில் டி.கே. சண்முகம், கே.டி. ருக்மணி | படங்கள் உதவி: ஞானம்

ரசிகர் ஒருவரிடமிருந்து முதல்முதலாக வந்திருந்தது அந்த மடல். அம்மா தனபாக்கியம் கையில் கொடுத்த கடிதத்தை, ஆசையுடன் வாங்கி வாசித்தார் கே.டி. ருக்மணி. மனசெல்லாம் மகிழ்ச்சியின் மலர்த் தோட்டம்!

‘மதிப்பு மிக்க ருக்மணி் அவர்களுக்கு நமஸ்காரம். நான் உங்கள் தீவிர ரசிகன். ‘மேனகா’ படப்பிடிப்பில் உங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். “இதோ பாருங்கள்… மின்னல் கொடி கே.டி. ருக்மணியின் விலைமதிப்பற்ற ஆட்டோகிராஃப்” என்று ஆசையுடன் என் தகப்பனாரிடம் காட்டினேன். அவ்வளவுதான்… “சினிமாக்காரியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்ததோடு, வெட்கமில்லாமல் வீட்டிற்கு வந்து எங்கிட்டேயே அதைப் பெருமையாக வேறு காட்டுகிறாயா...?’ என்று சொல்லி என்னை அடித்ததோடு உடனே அதைத் தபாலில் திருப்பி அனுப்பச் சொல்லிவிட்டார்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் ஆட்டோகிராஃபைத் திருப்பி அனுப்பினாலும் நான் என்றும் உங்கள் ரசிகமணிதான். அதை என் தகப்பனாராலும் மாற்ற முடியாது. இப்படிக்கு உங்கள் ரசிகன்.”

கடிதத்தைப் படித்து முடித்ததும் ருக்மணிக்கு அவமானமும் பெருமையும் மாறிமாறி உள்ளத்தை அழுத்தின. ‘சினிமாவில் நடிப்பது அத்தனை இழிவானதா...? அதிலும் இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக, ‘பாரிஸ் பியூட்டி’ என்று வர்ணிக்கப்படும் தன்னை ஒரு தந்தை எப்படி தரக்குறைவாக நினைக்கலாம்? இவர்கள் இன்னும் எத்தனை காலம் பெண்களைக் கட்டுப்பெட்டிகளாகவே பார்த்துக்கொண்டிருப்பார்கள்?’ அவரது மனக்குரல் சுள்ளென்று மூளையை உசுப்ப, அந்தக் கடிதத்தைக் கிழித்துப்போட்டார் ருக்மணி.

பத்து வயதில் ருக்மணிக்குக் கலைப்பித்து ஆரம்பித்தது அம்மாவிடமிருந்து. தாயோடு விடாப்பிடியாக நாடகம் பார்க்கத் தவறாமல் சென்றார். மேடையில் ஆடப்பட்ட நாட்டியங்கள் ருக்மணியையும் அறியாமல் அவருக்குள் குதிபோட்டன. மறுநாள் அவற்றை அப்படியே ஆடிக் காண்பித்தார். வீடு வியப்பில் ஆழ்ந்தது.

ஊமைப் படங்கள் உருவாகத் தொடங்கியிருந்த காலகட்டம். ருக்மணி சினிமா நடிகை ஆனார். அவரது முதல் மவுனச் சித்திரம் ‘பேயும் பெண்மணியும்’. டைரக்டர் ஆர். பிரகாசம் அவருக்கு வழங்கிய முதல் வெளிச்சம். அடுத்து இம்பீரியல் ஸ்டுடியோவின் ‘பாமா விஜயம்’. படம் வெளியான நான்காவது நாளில் ருக்மணிக்கு வெள்ளிக் குத்துவிளக்கு பரிசாகக் கிடைத்தது. ‘டெவில் அண்ட் தி டான்சர்’ என்கிற ஆங்கில சினிமாவிலும் ருக்மணி நடித்தார். ராஜா சாண்டோ இயக்கிய ‘விப்ரநாராயணா’, மற்றும் சி.வி. ராமனின் இயக்கத்தில் ‘விஷ்ணு லீலா’ ஆகிய மவுனச் சித்திரங்களிலும் ருக்மணி தோன்றினார்.

rukmani_2_2743209a.jpg

முதல் ஆக்‌ஷன் நாயகி!

“சண்டைப் படம் ஒன்று எடுக்கப்போகிறோம். நீங்கள் ஆண் உடையில் வர வேண்டும். அதோடு துப்பாக்கி சுடுதல், நீந்துதல், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், கத்திச்சண்டை செய்தல், சிகரெட் பிடித்தல், குதிரைச் சவாரி என ஆண்மகன் செய்யும் அத்தனையும் செய்ய வேண்டும்” என்றார் இயக்குநர். கே.டி. ருக்மணி கொஞ்சம் தயங்கினாலும் ஆர்வமாகக் கேட்டார். “போயும் போயும் ஆண் பிள்ளை உடையிலா நடிப்பது?”

“அதிலென்ன தவறு? வீரமான பெண் ஆணுக்கு இணையானவள்தானே?” என்று இயக்குநருடன் வீடு தேடி வந்த பட முதலாளிகள் உசுப்பேற்ற “பட ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள். இந்தாருங்கள் நீங்கள் கேட்கும் தொகை” என ருக்மணியின் தாயாரைப் பணத்தால் அர்ச்சித்தார்கள்.

அப்படியும் ருக்மணிக்கு உடன்பாடு இல்லை. இயக்குநர் பட்டியலிடும் வித்தைகளைத் தன்னால் செய்ய முடியுமா? ஏதாவது இசகுபிசகாகி அடிபட்டுவிட்டால் அப்புறம் யார் நடிக்கக் கூப்பிடுவார்கள்?” ருக்மணி அரைமனதுடன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அம்மா பணத்தை எண்ணி பீரோவில் வைத்துப் பூட்டினார். ருக்மணி ‘முடியவே முடியாது’ என்று அடம் பிடித்தார். டைரக்டர் கே. சுப்ரமணியம் உள்ளிட்ட ஜாம்பவான்கள் ருக்மணியை ரொம்பவும் வற்புறுத்தினார்கள்.

சர்க்கஸ் அழகியும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுமான நாடியா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தி ஸ்டண்ட் சினிமாவை ருக்மணிக்காகத் திரையிட்டுக் காட்டினார்கள். ருக்மணியின் அச்சம் அகலப் பத்து நாட்கள் ஆயின. ஒரு வழியாகத் தமிழின் முதல் முழு நீள ஆக்‌ஷன் சினிமா ‘மின்னல் கொடி’ ஒளிபெறத் தொடங்கியது. “யோகம் வரும் நேரத்தில் தைரியமும் வரும் என்பார்கள். அந்த மாதிரி அசட்டுத் துணிச்சல் எனக்கும் வந்துவிட்டது” என்று பட பூஜையில் பேட்டியளித்தார் ருக்மணி. என்றாலும் அவர் மனதுக்குள் அச்சம் இன்னும் இருக்கவே செய்தது. அவர் பயந்ததுபோலவே குதிரைச் சவாரி செய்யும்போது கீழே விழுந்து பலத்த அடி. உடனே சுதாரித்துக்கொள்ள இயலாதவாறு மாதக் கணக்கில் படுத்த படுக்கையில் கிடந்தார்.

“அவள் இனிமேல் நடிக்க மாட்டாள். தயவுசெய்து விட்டுவிடுங்கள்” என்ற அன்னையின் வேண்டுகோள் வீணாயிற்று. “என் மகள் ஒழுங்காக முழு சினிமாவையும் நடித்துக்கொடுப்பாள் என்று காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள். கை நீட்டிப் பணமும் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது ருக்மணியால் முடியாது என்று சொன்னால், உங்களின் மைனர் பெண்ணுக்குப் பதிலாக நீங்கள் வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போங்கள்” என டைரக்டர் அமர்நாத்திடம் இருந்து மிரட்டல் வந்தது. மெல்ல ருக்மணியின் உடல் தேறியது. ‘மின்னல் கொடி’ மறுபடியும் கேமராவில் படர்ந்தது.

கதாநாயகிகளின் அன்றைய நிலை

கே.டி. ருக்மணியிடம் முதல் ஆக்‌ஷன் பட அனுபவம் பற்றிக் கேட்டார் நிருபர். “பம்பாயில ‘மின்னல் கொடி’ ஷுட்டிங். கேரள ராஜாவின் பங்களா உச்சியிலிருந்து குதிக்க வேண்டும். கால்களில் கனத்த பூட்ஸ்கள் வேறு. அப்பப்பா போதும் போதும் என்றாகிவிட்டது. அந்த கணத்தோடு தொலைந்தேன் என்றே நினைத்தேன். நல்ல நேரம். எனக்கு ஒன்றும் நேரவில்லை. என் நடிப்பு பல படங்களில் தொடர்ந்தது” என்று கூறினார் ‘மின்னல் கொடி’ ருக்மணி. தமிழ் சினிமாவில் கதாநாயகியொருவர் முதல்முறையாக இரட்டை ஜடை போட்டுக்கொண்டு வந்து நடித்த முதல் படமும் அதுவாக இருந்தது.

மின்னல்கொடியைத் தொடர்ந்து ஆக்‌ஷன் ஹீரோயின் வாய்ப்புகள் அவரைத் துரத்தின. கே.டி. ருக்மணி தமிழ் சினிமாவின் முதல் ‘ஆக்‌ஷன் ஹீரோயின்’ என்ற அழியாப் புகழைப் பெற்றார். விஜயலலிதா, ஜோதிலட்சுமி, விஜயசாந்தி, அனுஷ்கா ஆகியோருக்கு அவரே முன் மாதிரி.

கே.டி.ருக்மணி தன் முத்திரையை அழுந்தப் பதித்த மற்ற படங்களில் ‘தூக்குத் தூக்கி’, ‘மனோகரா’, ‘மேனகா’, ‘சாமூண்டீஸ்வரி’, ‘ஜெயக்கொடி’, ‘பஸ்மாசர மோகினி’, ‘வீரரமணி’, ‘சாந்தா’, ‘திருமங்கை ஆழ்வார்’ ஆகியவை அடங்கும்.

நாற்பதுகளின் தொடக்கத்திலேயே ஆக்‌ஷன் ஹீரோயின் ஆகிவிட்டாலும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகளின் நிலை எப்படியிருந்தது? ருக்மணியே சொல்கிறார்: “எந்த வசதியும் இல்லாத காலம். மேக் அப் போட்டுக்கொள்ளக்கூடத் தெரியாது. அதற்கென யாரும் இருக்க மாட்டார்கள். நாங்களேதான் போட்டுக்கொள்வோம். அது அழகாகவும் இருக்காது. கடைசி வரையில் ஒரு நாள் கூட நான் பிறரிடம் ஒப்பனை செய்துகொண்டது கிடையாது. விதவிதமான ஆடை அணிகலன்கள், எதுவும் தர மாட்டார்கள்.

ஒரே சேலையை அணிந்து படம் முழுக்க நடிப்போம். இருபது ரூபாய்க்குத் தரமான விலையுயர்ந்த புடவைகள் கிடைக்கும். பட அதிபர்கள் அதை வாங்கிக் கொடுக்கவும் யோசிப்பார்கள்.

‘வாங்க. உட்காருங்க’ என்ற வசனத்தை மெதுவாகப் பேசினால் முகத்தில் மகிழ்ச்சியைக் காட்ட முடியும். ஆனால் அது சரியாக ஒலிப்பதிவு ஆகாது. உரத்த குரலில் ஓங்கிச் சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும். பீச்சில் கடல் அலைகளின் ஒலி கேட்காமல் படமெடுக்கப் பத்து நாட்கள் ஆகும். டைரக்டர் வைத்ததே சட்டம். நடிகைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பு மரியாதை கிடைக்காது. என்னதான் வளர்ந்த ஹீரோயின் என்றாலும் ‘ருக்மணிக்கு எதற்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் எனக் கேட்டு, நானூறு ரூபாய்க்கு வேறு ஒருத்தியைத் தயார் செய்வார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் நான் ‘மின்னல்கொடி’ ஆனேன்” என்ற கே.டி.ருக்மணியின் பூர்விகமும் குடும்பப் பின்னணியும் பதிவாகாமலேயே போய்விட்டன.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/article8256908.ece

Link to comment
Share on other sites

மறக்கப்பட்ட நடிகர்கள் 3: தென்னகம் கொண்டாடிய திறமை! - குசலகுமாரி

 

 
 
  • ‘யார் பிள்ளை?’ படத்தில் நடனக் கலைஞர் அம்பிகாவுடன்.. - ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ படத்தில் ஸ்ரீராமுடன்.
    ‘யார் பிள்ளை?’ படத்தில் நடனக் கலைஞர் அம்பிகாவுடன்.. - ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ படத்தில் ஸ்ரீராமுடன்.
  • ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் அன்று - குசலகுமாரி இன்று
    ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் அன்று - குசலகுமாரி இன்று

தமிழ் சினிமாவை பராசக்திக்கு முன், பராசக்திக்குப் பின் எனப் பகுத்துப் பார்க்கலாம். நடிகர் திலகம் சிவாஜியின் அறிமுகம், திராவிட இயக்கத்துக்கு வலிமை சேர்த்த திரைப்படம் எனப் பல பெருமைகள் அதற்கு உண்டு.

அந்தப் படத்தின் முதல் காட்சி டி.டி குசலகுமாரியின் எழிலார்ந்த குளோஸ்-அப் முகத்துடன்தான் தொடங்கும். 'வாழ்க வாழ்கவே… வளமாய் எமது திராவிட நாடு வாழ்க வாழ்க வாழ்கவே' என்ற பாடலுக்கு விழிகளை அழகாய் உருட்டி, கச்சிதமாய் அபிநயங்கள் பிடித்தபடி குசலகுமாரி ஆடும் பரத நாட்டியம் ரசிகர்களைக் கட்டிப்போட்டது.

நாற்பதுகள் தொடங்கி அறுபதுகள் வரை இருபதாண்டு காலம் தனி நடனங்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பரத நாட்டியத்துக்கு சினிமாவில் வரவேற்பு இருந்தது. பின்னணிப் பாடகர்களின் வரவால் சொந்தக் குரலில் பாடத் தெரிந்தால்தான் சினிமாவில் நிலைக்கலாம் என்ற நிலவரம் மாறியது. அழகுடன் அற்புதமாக நடனமாடத் தெரிந்தால் கதாநாயகி ஆகும் அதிர்ஷ்டம் தேடி வரத் தொடங்கியது.

அதிலும் வழுவூர் ராமையா பிள்ளையின் மாணவிகள் என்றால் தனி மவுசும் மரியாதையும். அவரிடம் நடனம் கற்ற லலிதா, பத்மினி, ராகினி, குசலகுமாரி, குமாரி கமலா, ஈ.வி. சரோஜா, சாயி சுப்புலட்சுமி, எல். விஜயலட்சுமி என்று பல பெண்கள் திரைப்பட நடனங்களில் தோன்றி, பின்னாளில் முன்னணி நட்சத்திரங்களாக மின்னினார்கள்.

கதாநாயகிகளுக்குக் குவியும் கூட்டத்தைப் போலவே இவர்களது நடனங்களைப் பார்க்கத் திரையரங்கு வரும் லட்சக் கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். குசலகுமாரி ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் நடனமாடி, பிரபலமான நடன நட்சத்திரமாகப் புகழ்பெற்ற பிறகே கதாநாயகியாக உயர்ந்தார். அதற்கும் முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக சுமார் நூறு படங்களில் நடித்தவர்.

தஞ்சையிலிருந்து சென்னைக்கு

டி.டி. குசலகுமாரியின் பெயரில் இருக்கும் முதல் டி. தஞ்சாவூரைக் குறிக்கிறது. இரண்டாவது டி. அவரது அம்மா தமயந்தியைக் குறிக்கிறது. ‘விகட யோகி’ உட்பட அவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். 06.12.1937-ல் தஞ்சையில் பிறந்து வளர்ந்த குசலகுமாரிக்கு மூன்று வயதிலேயே அறிமுகமானது பரதக் கலை. ஐந்து வயதாக இருக்கும்போது சென்னையில் குடியேறியது அவரது குடும்பம்.

சென்னை வித்யோதயா தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே 6 வயது சிறுமியான குசலகுமாரிக்கு சினிமா வாய்ப்பு வந்துவிட்டது. டி.ஆர்.ரகுநாத் இளங்கோவன் இணைந்து இயக்கிய ‘மகாமாயா’ 1944-ல் வெளியானது. பி.யு. சின்னப்பா பி. கண்ணாம்பா இணைந்து நடித்து வெளியான இந்தப் படத்தில் இவர்களது மகளாக நடித்து ‘யார் இந்தக் குழந்தை?” என்று கேட்க வைத்தார் குசலகுமாரி. அந்தப் படத்தில் ‘பேபி டி.டி. குசலாம்பாள்’ என்று டைட்டில் போடப்பட்டாலும் பின்னாளில் அவர் நடன மங்கையாக அறிமுகமானபோது அவரது பெயருடன் தன் பெயரின் பாதியைப் பாசமுடன் இணைத்தவர் டி.ஆர். ராஜகுமாரி.

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்று கொண்டாடப்படும் டி.ஆர். ராஜகுமாரி குசலகுமாரியின் அத்தை. அத்தையை விடச் சிறப்பாக நடனமாடத் தெரிந்தவர், அழகான பொலிவான தோற்றம், கவர்ந்து ஈர்க்கும் புன்னகை, சொன்ன நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வந்துவிடுவது, குசலகுமாரி நடனமாடிய படங்களின் தொடர் வெற்றி என்று அழகும் அதிர்ஷ்டமும் அவரைப் பிரபல நட்சத்திரமாக்கியது.

குசலகுமாரி எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஜெமினி படநிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துக்கொண்டிருந்த ‘சந்திரலேகா’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் டி.ஆர். ராஜகுமாரி. பள்ளி விடுமுறையில் அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு அத்தை ராஜகுமாரியுடன் கிளம்பிவிடுவார் குசலகுமாரி. சந்திரலேகா செட்டில் குசலகுமாரியைக் கண்ட பட அதிபர் எஸ்.எஸ்.வாசன் அப்படியே அவரது முகத்தை மனதில் இருத்திக்கொண்டார். பிறகு பிறகு ஜெமினி பட நிறுவனம் ‘அவ்வையார்’ படத்தைத் தொடங்கியபோது குமாரி அவ்வையாராக நடிக்க குசலகுமாரியைத் தேர்வு செய்தார்.

அந்தப் படம் வெளியாகி வெற்றிபெறும் முன்பே ‘பாரசக்தி’ படம் குசலகுமாரியைப் புகழடையச் செய்துவிட்டது. பாரசக்தியைத் தொடந்து சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யில் சிவாஜியைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஏழைப் பெண் ‘சொக்கி’யாகத் துடிப்பான நடிப்பைத் தந்து ரசிகர்களைக் கவர்ந்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் 16 வயதில் கதாநாயகியாக உயர்ந்த குசலகுமாரியின் நடிப்புக்கும் நடனத்துக்கும் கிடைத்த வரவேற்பு கொஞ்சநஞ்சமல்ல. ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இடம்பெற்ற போட்டி நடனத்தில் குமாரி கமலாவுடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

கேரளமும் ஆந்திரமும் கொண்டாடிய கலைஞர்

கூண்டுக்கிளியைத் தொடந்து ‘கள்வனின் காதலி’ படத்தில் சிவாஜிக்குத் தங்கையாக நடித்தார் குசலகுமாரி. அடுத்து வெளியான ‘நீதிபதி’ படத்தில் கே.ஆர். ராமசாமியின் தங்கையாக நடித்தார். படம் முழுவதும் வரும் கதாபாத்திரங்கள் என்றாலும் பிரபல கதாநாயகர்களுக்குத் தங்கையாக நடித்துவிட்டால் கதாநாயகி வாய்ப்பு எட்டாக்கனியாக மாறிவிடும் என்ற எழுதப்படாத சட்டம் குசலகுமாரியையும் பாதித்தது.

ஆனால், தெலுங்கில் என்.டி.ராமராவ், ரங்காராவ் நடித்த ‘ராஜூபேடா’ படத்தில் அறிமுகமான குசலகுமாரியை அங்கே ‘குசலகுமாரிகாரு’ என்று கொண்டாட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். அந்தப் படம் அங்கே சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற, தெலுங்கில் வரிசையாக நடிக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க அழைக்கப்பட்டார். ஆனால், ஏற்கெனவே பல தெலுங்குப் படங்களை அவர் ஒப்புக்கொண்டுவிட்டதால் அதில் தன்னால் நடிக்க முடியாமல் போனதை இந்த 79 வயதிலும் பசுமையுடன் நினைவுகூர்கிறார்.

“ சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரையுமே அண்ணே அண்ணே என்றுதான் அன்போடு அழைப்பேன். அவர்களும் என் மீது உடன்பிறந்த தங்கைபோல் பாசத்தைக் கொட்டுவார்கள். ஆனால், கூண்டுக்கிளிக்குப் பிறகு எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தும் என்னால் நடிக்க முடியாமல் போனது எனக்குப் பெரிய இழப்புதான்” என்று கூறும் குசலகுமாரி கேரள ரசிகர்களின் மனதிலும் பெரும் புகழுடன் இடம் பிடித்திருக்கிறார்.

அங்கே பிரேம் நசீர் ஜோடியாக இவர் நடித்த ‘சீதா’ 200 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். அடுத்து இவர் நடித்த ‘மரியக்குட்டி’ ஜனாதிபதி விருதை வென்ற படம். கலைமாமணி, கலைச்செல்வம் விருதுகளால் கவுரவம் செய்யப்பட்ட செல்வி குசலகுமாரி தற்போது சென்னை நந்தனத்தில் தனது ஒரே தம்பி டி.டி. சேகருடன் வசித்துவருகிறார். “அவ்வையார் படத்தில் குமாரி அவ்வையாகத் திருமண மறுப்புக் காட்சியில் நடித்தது என் மனதில் இன்னும் நீங்காத காவியமாக இடம்பெற்றது.

அதனால்தானோ என்னவோ எனக்குத் திருமணம் மீது நாட்டமே இல்லாமல் போய்விட்டது. என் தம்பி சேகரின் குடுப்பம்தான் எனது குடும்பம். அவனை வளர்த்து ஆளாக்குவதிலேயே என் வாழ்க்கையைச் செலவிட்டேன். என் தம்பியும் என் மீது தாயைப் போல் பாசம் கொண்டவன்” என்று நெகிழ்ந்துபோகிறார் குசலகுமாரி.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/article8339997.ece

Link to comment
Share on other sites

மறக்கப்பட்ட நடிகர்கள் 4: இருபெரும் நடிகர்களின் ஒரே தேர்வு! - ஓ.ஏ.கே. தேவர் 2

 

 
 
  • ‘ராமு’
    ‘ராமு’
  • மனைவி ‘ஜெமினி’ செல்லமுடன்...
    மனைவி ‘ஜெமினி’ செல்லமுடன்...
  • ‘பறக்கும் பாவை’
    ‘பறக்கும் பாவை’

மேற்கத்திய கௌபாய் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவில் கௌபாய் ஜுரம் பரவிய 70-களின் காலகட்டம். கௌபாய் கதாநாயகனுக்கான இடத்தை மொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டவர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்’ எனப் புகழப்பட்ட ஜெய்சங்கர். கௌபாய் கதாநாயகனுக்கு சரியான சவாலாக அமையும் வில்லன் கிடைக்காவிட்டால், இந்த வகைப் படங்களுக்கே மவுசு கிடைத்திருக்காது. அந்தச் சவாலான இடத்தை நிரப்பியவர் ஓ.ஏ.கே. தேவர். ஜெய்சங்கரின் ‘கங்கா’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவர்களில் ஒருவராக வந்து “அந்தக் கடவுளுக்கே நாங்க பயப்பட மாட்டோம்” என்று பகுத்தறிவு வசனம் பேசி நடித்தவர், கலைவாணர் மீது கொண்ட ஈடுபாட்டால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கௌபாய் படங்களில் ஜெய்சங்கருக்கு உச்சமாக அமைந்த படம் ‘சி.ஐ.டி சங்கர்’. படம் தொடங்கியதும் வில்லனின் நிழல் உருவத்தையும் அந்த மிரட்டலான குரலையும் கண்டு மிரள ஆரம்பித்த ரசிகர்கள், யாரந்த வில்லன் என்று முகத்தைத் தேட ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்த காட்சிகளில் பார்த்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தவர்களை அந்தக் குரல் மட்டுமே மிரட்டிக்கொண்டிருக்கும். படத்தின் இறுதிக் கட்டக் காட்சியில் வில்லனாகத் தோன்றினார் ஓ.ஏ.கே.தேவர். மிகவும் பிரபலமான தனது குரலை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட முடியாத அளவுக்கு மாற்றிப் பேசிக் கதிகலங்க வைத்தார்.

அப்படிப்பட்டவர் ‘பூக்காரி’, ‘பட்டத்து ராணி’, ‘கங்கா கௌரி’ ‘நீயும் நானும்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ உட்பட பல படங்களில் வில்லன் அல்லாத மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தன் மீது படிந்த வில்லன் பிம்பத்தை மறக்கச்செய்தார். ‘சாது மிரண்டால்’ படத்தின் முதல் பாதி முழுவதும் ஆறு தோற்றங்களில் வரும் தேவர், இரண்டாம் பாதி முழுவதும் உறைந்த விழிகளோடு பிணமாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

சமூகப் படங்களில் சாதனைகள் படைத்த கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் எல்லாப் படங்களிலும் இவர் தவறாமல் இடம்பெற்றுவிடுவார். கே.எஸ்.ஜி.யின் ‘குறத்தி மகன்’ படத்தில் கருத்து சொல்லும் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு அல்ல; தேவருக்குத்தான். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் விபீஷணனாக நடித்துக் கண் கலங்கவைத்தவர், அதே ஆண்டில் வெளியான ‘விக்கிரமாதித்தியன்’ படத்தில் கதிகலங்க வைக்கும் மந்திரவாதியாக நடித்திருப்பார். எல்லா ஒப்பனைகளும் ஆடைகளும் பொருந்தக்கூடிய தோற்றம் கொண்ட கலைஞராக ஓ.ஏ.கே. தேவர் விளங்கினார்.

சிவாஜிக்கே சவால்

வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் உட்பட சிவாஜி மன்றம் நடத்திவந்த புகழ்பெற்ற நாடகங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்துவந்தவர் ஓ.ஏ.கே. தேவர். சிவாஜியுடன் நாடகங்களில் நடிக்கும்போது அடுத்த காட்சிக்கான ஆடையை மாற்ற மேடைக்குப் பின்புறமிருக்கும் ஒப்பனை அறைக்குச் செல்ல மாட்டாராம் சிவாஜி. மேடையின் பக்கவாட்டில் இருக்கும் மறைவான இடத்தில் நின்று தேவரின் நடிப்பைக் கவனித்துக்கொண்டே இருப்பாராம். “ஓ.ஏ.கே. கிட்ட கவனமா இருக்கனும்; எக்ஸ்ட்ரா டயாலாக் போட்டுக் கைதட்டல் வாங்கிடுவான். அடுத்த சீன்ல அதைவிட அதிகமா க்ளைப்ஸ் வாங்கணும்” என்று சிவாஜி பதற்றமடைவர் என குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறார் வானொலியாளர் கூத்தபிரான்.

தலைமுறைகளைக் கடந்து இன்றும் கொண்டாடப்படும் ‘கர்ணன்’ படத்தில், கனக மகாராஜாவாக நடித்திருப்பார் ஓ.ஏ.கே. தேவர். தனது மருமகனான கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்று தெரிந்ததும் கோபம் தலைக்கேறி, கர்ணனைக் கேலி செய்து புறக்கணிக்கும் காட்சியில் சிவாஜியுடன் போட்டிபோட்டு நடித்திருப்பார். சிவாஜியைத் திட்டுவதுபோல் உள்ள கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று சிவாஜியிடமே கேட்டிருக்கிறார் இயக்குநர் பி.ஆர். பந்துலு. “ஓ.ஏ.கே தேவரைத் தவிர அந்த வேடத்தில் வேறு யாரைப் போட்டாலும் எடுபடாது” என சிவாஜி சொல்லியிருக்கிறார்.

விட்டுக்கொடுத்த எஸ்.எஸ்.ஆர்.

ஓ.ஏ.கே. தேவர் தனது குரு சக்தி வி. கிருஷ்ணசாமி எழுதிய ‘வீரபாண்டிய கட்டப்போம்மன் நாடகத்தில் சிவாஜியைப் போலவே வீரபாண்டிய கட்டப்பொம்மன், வெள்ளையத் தேவன், உமைத்துரை ஆகிய எல்லா முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படமாகத் தயாரானபோது அதில் தேவருக்கு வேடம் இல்லை. உமைத்துரை வேடத்தை எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு ஒதுக்கியிருந்தனர். அவரும் ஏற்றுக்கொண்டார். படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று எஸ்.எஸ்.ஆர். கேட்க, அதில் ஓ.ஏ.கே. தேவருக்கு இடமில்லை என்றதும் கோபமாகிவிட்டார். “என் கேரக்டரை அவருக்கு கொடுங்க. அவர் இல்லாமல் வீரபாண்டிய கட்டப் பொம்மனா?” என்று தனது கதாபாத்திரத்தை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.

இளையராஜாவுக்கு நாடக வாய்ப்பு

எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் ஓ.ஏ.கே. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ உட்பட பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தினார். சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இளையராஜா.

ஆனால் வாய்ப்பு அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய தயாரிப்பன ‘மாசற்ற மனம்' நாடகத்தைத் திருச்சியில் அரங்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன். பாவலர் சகோதர்களின் இசையை கம்யூனிஸ்ட் மேடைகளில் கேட்டிருந்த தேவர், உடனே சம்மதம் தெரிவித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.

இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.

எம்.ஜி.ஆர். கண்ட ஆதித்த கரிகாலன்

எம்.ஜி. ஆருடன் ‘பறக்கும் பாவை’, ‘விக்ரமாதித்தியன்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தாய்க்குப் பின் தாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் தேவர். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரே தயாரித்து, நடித்து, இயக்குவதாகத் திட்டமிடப்பட்டபோது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தானே ஏற்க விரும்பியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதேபோல் குந்தவையாக வைஜெயந்திமாலா, அருண்மொழி வர்மனாக ஜெமினி கணேசன், வானதியாக பத்மினி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஆட்களைத் தேர்வு செய்தவர் ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரத்துக்குத் தன்னைத் தேர்வு செய்திருந்ததை ஓ. ஏ. கே. தேவர் தன் நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார்.

மார்டன் தியேட்டரில் பணியாற்றும்போதே கலைஞர் மு.கருணாநிதி மீது தோழமை கொண்ட தேவர், கலைவாணரின் மறைவுக்குப் பிறகு அவருடன் மேலும் நெருக்கமானார். கலைஞர் கதை, வசனம் எழுதி வெற்றிபெற்ற ‘குறவஞ்சி’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்தார். 1972 ல் தனது 48-வது வயதில் மறைந்த ஓ.ஏ.கே. தேவர், கடைசி வரை திமுகவின் மேடைகளில் பிரச்சார நட்சத்திரமாகவும் விளங்கினார். எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி கண்டாலும் எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த நட்பை மாற்றிக்கொள்ளவில்லை. தேவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த முதலில் வந்தவர் எம்.ஜி.ஆர்.

தேவர் கடைசியாக நடித்த படங்கள் ‘வாழையடி வாழை’, ‘சிசுபாலன்’. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாக்தாத் பேரழகி’. தந்தையின் வழியில் நின்று திரை நடிப்பைத் தொடர்ந்துவருகிறார் அவரது மகன்களில் ஒருவரான ஓ.ஏ.கே. சுந்தர்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%93%E0%AE%8F%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2/article8450779.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

மறக்கப்பட்ட நடிகர்கள்: 5 - தமிழ்த் திரையின் வண்ணக்கிளி - பி.எஸ்.சரோஜா

 

 
 
  • வண்ணக்கிளி’ படத்தில் ஆர்.எஸ்.மனோகரனுடன்
    வண்ணக்கிளி’ படத்தில் ஆர்.எஸ்.மனோகரனுடன்
  • ஜீவித நவுக’ படத்தில் திக்குறிச்சி சுகுமாரனுடன்
    ஜீவித நவுக’ படத்தில் திக்குறிச்சி சுகுமாரனுடன்
  • கடைசி படம் - கூண்டுக்கிளி’ படத்தில் எம்.ஜி.ஆருடன்
    கடைசி படம் - கூண்டுக்கிளி’ படத்தில் எம்.ஜி.ஆருடன்

தமிழ் சினிமாவின் தந்தை என்றும் ‘தேசாபிமான இயக்குநர்’என்றும் கொண்டாடப்பட்ட கே.சுப்ரமணியம் பல புகழ்பெற்ற நட்சத்திரங்களை உருவாக்கியவர். அவரது ஆஸ்தான கதாநாயகியருள் ஒருவராக வளர்ந்தவர் பி.எஸ். சரோஜா. 1941-ல் வெளியான ‘மதன காமராஜன்’படத்தின் மூலம் நடன மங்கையாகத் திரையில் தோன்றிய சரோஜா, தொடர்ந்து பத்துக்கும் அதிகமான படங்களில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார். ஜுபிடர் நிறுவனம் தயாரித்த ‘மகா மாயா’ படத்தில் நடனமாடும்போது அந்தப் படத்தின் நடன இயக்குநர் பண்டிட் போலோ நாத்துடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாய் கனிந்து திருமணத்தில் முடிந்தது. சரோஜா இல்லத் தலைவியாய் மாறியிருந்த நிலையில்தான் இயக்குநர் கே.சுப்ரமணியம் முதல் கதாநாயகி வாய்ப்பினைத் தனது ‘விகட யோகி’படத்தில் சரோஜாவுக்கு வழங்கினார்.

சரோஜாவின் திறமை, வசீகரம் ஆகியவற்றை நன்குணர்ந்த சுப்ரமணியம், தனது ‘விசித்திர வனிதா' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் அளித்தார். அடுத்து 1949-ல் வெளியாகிப் பெரும்புகழ் பெற்ற ‘கீத காந்தி' படத்தில் பி.எஸ்.சரோஜாவை மீண்டும் கதாநாயகியாக்கினார். படத்தின் நாயகன் டி.ஆர். ராமச்சந்திரன். இந்தப் படத்தில் சரோஜா தனது கணவர் போலேநாத் ஷர்மாவுடன் இணைந்து ஆடிய நடனம் புகழ்பெற்றது. மனமொத்த தம்பதிகளாக வலம் வந்த இவர்களது வாழ்வில் விதி விளையாடியது. படப்பிடிப்புக்காக சேலம் நகருக்குக் கணவருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது சேலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் சரோஜாவின் கணவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். காயங்களுடன் உயிர்பிழைத்தார் சரோஜா. இந்த நேரத்தில் அவர் சிகிச்சைபெற்று வந்த மருத்துவமனைக்குச் சென்று அவரை அடிக்கடி நலம் விசாரித்து வந்தார்கள் டி.ஆர். ராஜகுமாரியும் அவரது சகோதரர் டி.ஆர். ராமண்ணாவும். கே. சுப்ரமணியத்தின் படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த டி.ஆர். ராமண்ணா, சரோஜா போலோநாத் தம்பதியுடன் தொடக்கம் முதலே நட்பு பாராட்டிவந்தவர்.

துணிவும் மனமாற்றமும்

பி.எஸ். சரோஜா சிறு வயதுமுதலே துடுக்கும் துணிச்சலும் நிறைந்த பெண்ணாக வளர்ந்தார். எதற்கும் யாருக்கும் அஞ்சாத குணம் அவரிடம் இருந்தது. ஆனால் கணவரை திடீரென்று இழந்து நின்றபோது இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்தார். சரோஜாவின் முடிவை அறிந்த ராமண்ணா, “திரையுலகில் நட்சத்திரமாகப் புகழ்பெறும் பாக்கியத்தைக் கடவுள் எல்லோருக்கும் தருவதில்லை” என்று எடுத்துக் கூறி சரோஜாவின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தார்.

விபத்திலிருந்து மீண்டு வந்து நடிப்பதை நிறுத்தியிருந்த சரோஜா, ராமண்ணாவின் அறிவுரையை ஏற்று மலையாளத் திரையுலகின் முதல் வெள்ளிவிழாக் காவியமாக அமைந்த ‘ஜீவித நவுகா’ திரைப்படத்தில் நடித்தார். மலையாளப் படவுலகின் முதல் சூப்பர் ஸ்டார் திக்குறிச்சி சுகுமாரன் நாயருடன் இந்தப் படத்தில் நடித்தார். தமிழ்ப் பாடல்கள் இடம்பெற்ற இந்த மலையாளப் படம், தமிழில் ‘பிச்சைக்காரி’ என்ற பெயரில் வெளியானது. நிஜ வாழ்வில் ஏற்பட்ட இழப்பின் வலி நீங்காத காலகட்டத்தில் இந்தப் படத்தில் சிறப்பான சோக நடிப்பைத் தந்து, தமிழ், மலையாள ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்டார். பிறகு தன் மீது பரிவுகாட்டிய திரையுலக நண்பர் டி.ஆர். ராமண்ணாவை மறுமணம் செய்துகொண்டார் சரோஜா.

பேரறிஞர் அண்ணாவின் கதை, வசனத்தில் கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் ஏ.வி.எம். தயாரித்த ‘ஓர் இரவு' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றுநடித்தார் சரோஜா. இந்த நேரத்தில் ‘லட்சுமி காந்தன்’ கொலை வழக்கில் சிக்கிச் சிறையில் வாடிய ஏழிசை வேந்தர் எம்.கே.டி. அந்த வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வந்ததும் படங்களைத் தயாரித்து நடித்துவந்தார். ஆனால் சிறை மீண்ட பிறகு அவர் நடித்த படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. அது மட்டுமல்ல, பாகவதருடன் நடிக்க அந்நாளின் கதாநாயகிகள் பலரும் அஞ்சினர். ஆனால் பி.எஸ். சரோஜா அஞ்சவில்லை.

எம்.கே.டி. நடிப்பில் 1952-ல் வெளியான ‘அமரகவி' என்ற படத்தில் அவருடன் துணிந்து நடித்தார் பி.எஸ்.சரோஜா. அந்தப் படத்தில் பாகவதர் பாடிய “யானைத் தந்தம்போலே பிறைநிலா வானிலே ஜோதியாய் வீசுதே” என்ற புகழ்பெற்ற பாடல்காட்சியில் அவருடன் தோன்றினார்.

இரு திலகங்களுடன் இணைந்து

டி.ஆர். மகாலிங்கம், திக்குறிச்சி, எம்.கே.டி என அந்நாளின் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக மிளிர்ந்த சரோஜா அவர்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக்கொண்ட எம்.ஜி.ஆர்., சிவாஜி என்கிற இரு பெரும் நடிகர்களோடும் நடித்தார்.எஸ்.எஸ்.ஆர். ஏ.பி.நாகராஜன், பிரேம்நசீர் எனத் திலங்களுக்கு இணையான புகழ்பெற்ற நடிகர்களுடன் நடிக்கவும் தவறவில்லை. எம்.ஜி.ஆருடன் ‘ஜெனோவா’ படத்தில் முதலில் ஜோடி சேர்ந்த சரோஜா அடுத்து ‘கூண்டுக்கிளி’ படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவியாகவும், சிவாஜியின் காதலியாகவும் நடித்தார். இருபெரும் திலகங்கள் இணைந்து நடித்த ஒரே படத்தின் நாயகி என்ற பெருமை சரோஜாவுக்குக் கிடைத்தது.

அந்தப் படத்தை இயக்கியவர் சரோஜாவின் கணவரான டி.ஆர். ராமண்ணா. கலைஞரின் கதை, வசனத்தில் கணவரின் இயக்கத்தில்,1957-ல் எம்.ஜி.ஆர் நடித்த படம் ‘புதுமைப்பித்தன்’. மூன்றாவது முறையாக எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்த சரோஜா, இந்தப் படத்துக்காக தனது கணவரின் அறிவுரையை ஏற்று வாள் சண்டை பயிற்சிபெற்று எம்.ஜி.ஆருடன் மோதும் காட்சியில் நன்றாக நடித்து அசத்தினார்.

தயாரிப்பு நிர்வாகி

கணவருடன் இணைந்து மூன்று தயாரிப்பு நிறுவனங்களைத் துணிவுடன் தொடங்கிய சரோஜா, அவற்றின் மூலம் ‘வாழப் பிறந்தவள்’, பெரிய இடத்துக்குப் பெண்’, ‘குலேபகாவலி’, ‘பாசம்’, `காத்தவராயன்’, ` கூண்டுக்கிளி’, ‘தங்கச் சுரங்கம்’ ‘புதுமைப் பெண்’ ‘அருணகிரிநாதர்’ என பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார். ‘அருணகிரிநாதர்’ படத்தில் அருணகிரியாராக வேடமேற்ற டி.எம்.சௌந்தரராஜனின் தங்கையாக நடித்து அசத்தினார்.

தாம் தயாரிக்கும் படங்களின் பண நிர்வாகத்தையும் பொறுப்புடன் கவனித்துக்கொண்ட இவர், தனது தயாரிப்பில் நடித்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, சரோஜாதேவி, ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களுக்கு வீடு தேடிச் சென்று அவர்களது ஊதியத்தை வழங்கிவருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

பி.எஸ்.வீரப்பா, நம்பியார், டி.எஸ். பாலையா, எம்.ஆர்.ராதா என்று அந்நாளின் புகழ்பெற்ற வில்லன் நடிகர்களுடன் நடித்திருக்கிறார் சரோஜா. நாடகவேந்தன் ஆர்.எஸ்.மனோகருக்கு ஜோடியாக நடித்த ‘வண்ணக்கிளி’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. முரடனான கணவனிடம் பெல்டால் அடிவாங்கி வன்கொடுமைக்கு ஆளாகும் கிராமத்துப் பெண்ணாக நடித்து பெரும்புகழ் பெற்றார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அடிக்கிற கை தான் அணைக்கும்', ‘சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா’ ஆகிய இரண்டு பாடல் காட்சிகளில் அவரது நடிப்பை அனைத்துப் பத்திரிகைகளும் பாராட்டித் தள்ளின.

டி.ஆர். ராமண்ணாவுடன் மனமொத்த வாழ்வை வாழ்ந்த பி.எஸ். சரோஜாவுக்கு கலாராணி, சாந்தி ஆகிய இரண்டு மகள்களும் கணேஷ் என்ற மகனும் உள்ளனர். திரை நடிப்பு தவிர இவர் நேசித்துவந்த மற்றொன்று தோட்டக் கலை. தாம்பரம் அருகே 18 ஏக்கர் நிலத்தை வாங்கிய சரோஜா அதில், பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றைப் பயிர்செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தினார். தோட்டகலைக்காகப் பல பரிசுகளையும் பெற்றார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பல வண்ணங்களில் கதாபாத்திரங்களை ஏற்று முத்திரை பதித்த இவர், காலம் மறந்துவிட்ட வெற்றிக் கதாநாயகி.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE/article8624924.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மறக்கப்பட்ட நடிகர்கள் 6 - துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா

  • முத்து மண்டபம்
    முத்து மண்டபம்
  • இது சத்தியம்
    இது சத்தியம்
  • தெய்வத்திருமகள்
    தெய்வத்திருமகள்

“கண்ணா கண்ணா வாராய்… காதல் என்னைப் பாராய்…ஜாலம் பண்ணாதே இப்போ நீ எங்கே போறாய்” என்ற ஜிக்கியின் குரலில் அமைந்த புகழ்பெற்ற பாடலுக்கு ஒய்யாரமான அசைவுகளில் நடனம் ஆடிக்கொண்டு ‘மாயமனிதன்’(1958) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சந்திரகாந்தா. இந்தப் படத்தின் நாயகன், ஏவி.எம்.மின் ‘சம்சாரம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்ரீராம்.

இந்தப் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பிறகு நாயக நடிகராக உயர்ந்தார் அசோகன். ‘இன்விசிபிள் மேன்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி டி.பி. சுந்தரம் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகு நடனம், நடிப்பு இரண்டுக்காகவும் கொண்டாடப்படும் முன்னணி நட்சத்திரமாக சந்திரகாந்தா உயர்ந்தார்.

காவிரியின் மகள்

கீழத் தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயிலாடி என்ற கிராமம்தான் சந்திரகாந்தாவின் சொந்த ஊர். இந்த ஊரின் நிலக்கிழார் டி.என். குஞ்சிதபாதப் பிள்ளை, டி.ஆர். ராமாமிர்தம் தம்பதிக்கு ஏழு குழந்தைகள். அவர்களில் ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் சந்திரகாந்தா. திராவிட இயக்கத்தின் மீது தீவிரப் பிடிப்பு கொண்ட குடும்பம்.

சந்திரகாந்தாவின் அக்கா வத்சலாவை திருமணம் செய்துகொண்டவர் எஸ்.எஸ்.பி. லிங்கம் என்கிற வேதாசலம். இவர் அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர். அண்ணா, சென்னை வரும்போதெல்லாம் ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலையில் வசித்துவந்த வேதாசலம் வீட்டில்தான் தங்குவார்.

சிறு வயது முதலே நடனத்தில் சந்திரகாந்தாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. 9-ம் வகுப்பு படித்து முடித்திருந்த சந்திரகாந்தா, பள்ளி விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்தார். அப்போது சந்திரகாந்தாவும் அவரது அண்ணன் சண்முகசுந்தரமும் (`கரகாட்டக்காரன்’ புகழ்) அண்ணாவின் வாழ்த்துகளைப் பெற்று அவரது அன்புக்குரியவர்கள் ஆனார்கள்.

வேதாசலம் வீட்டில் அண்ணா தங்கியிருக்கும் தருணங்களில் அவரைக் காண அங்கே வருவார் ‘நடிப்பிசைப் புலவர்’ என்று நாடக ரசிகர்களால் அழைக்கப்பட்ட கே.ஆர். ராமசாமி. ‘கலைவாணர்’ என்.எஸ். கிருஷ்ணன் நினைவைப் போற்றும் வகையில் ‘கிருஷ்ணன் நாடக சபாவை 1943-ல் தொடங்கிய கே.ஆர்.ஆர், சமூக சீர்திருத்த நாடகங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தி, திராவிட இயக்கத்துக்கு வலு சேர்த்துவந்தார். இவரது நாடக சபாவுக்காகவே அண்ணா நாடகங்களை எழுதிவந்த காலம் அது.

ஒருமுறை வேதாசலம் வீட்டுக்கு அண்ணாவைக் காண வந்த கே.ஆர்.ஆர்., வீட்டின் ஓர் அறையில் நட்டுவாங்கம் செய்யும் சத்தம் ஒலிப்பதைக் கேட்டு, அந்த அறையில் நுழைந்தார். அங்கே 14 வயதுப் பருவப் பெண்ணாக லட்சுமிகாந்தத்தின் (இதுதான் சந்திரகாந்தாவின் இயற்பெயர்) துள்ளலான நடனத்தைக் கண்டார்.

வேற்று மனிதர் ஒருவர் வந்திருக்கிறார் என்று வெட்கப்பட்டு ஆட்டத்தை நிறுத்திவிடாமல் ஆடிக்கொண்டிருந்தார் சந்திரகாந்தா. நடனம் முடிந்ததும் குருவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வந்தவர், கே.ஆர்.ஆருக்கும் வணக்கம் செய்தார். ஆச்சரியப்பட்ட கே.ஆர்.ஆர்., “என்னைத் தெரியுமா?” என்று கேட்டார். “உங்களைத் தெரியாத பேதையா நான்?” என்று துடுக்காக பதில் சொன்ன அந்தக் கணத்தில் தனது நாடகத்துக்குக் கதாநாயகி கிடைத்துவிட்டதாக நினைத்தார் கே.ஆர்.ஆர்.

15 வயதில் தொடங்கி கே.ஆர்.ஆரின் பல பிரச்சார நாடகங்களில் நடித்துச் சிறந்த நாடக நடிகையாகப் புகழ்பெற்றார் லட்சுமிகாந்தம். ஒரு நாடகத்தில் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர் சந்திரா. அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்க வந்திருந்தார் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன்.

நாடகத்தின் முடிவில் “இந்த நாடகத்தில் சந்திராவாக மிகச் சிறப்பாக நடித்த காந்தம், நாடகக் கலைக்குக் கிடைத்த அரிய சொத்து” என்று பாராட்டினார். நெடுஞ்செழியன் பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து கே.ஆர்.ஆர்., லட்சுமிகாந்தத்துக்கு `சந்திரகாந்தா’ என்று பெயர் சூட்டினார். லட்சுமிகாந்தம் என்ற புகழ்பெற்ற மற்றொரு நடிகையும் இருந்ததால் பெயர் மாற்றம் சந்திரகாந்தாவுக்குக் கைகொடுத்தது.

நவரச நாயகி

முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைவது அபூர்வம் என்ற காலகட்டம் அது. அப்போது முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வெற்றிகொடுக்க விரும்பினார் ‘சிட்டாடல்’ என்ற புகழ்பெற்ற பட நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து இயக்கிய ஜோசப் தளியத். அந்தப் படம் ‘விஜயபுரி வீரன்’.

குழு நடனங்களில் டான்ஸராகப் புகழ்பெற்றிருந்த சி.எல். ஆனந்தனைக் கதாநாயகனாகவும் ஹேமலதா என்ற புதுமுகத்தைக் கதாநாயகியாகவும் அறிமுகம் செய்த தளியத், இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சந்திரகாந்தாவை ஒப்பந்தம் செய்தார். ஏ.சி. திருலோகச்சந்தர் திரைக்கதை எழுதியிருந்த இந்தப் படத்தில் சாந்தியாக நடித்து கதாநாயகியைவிடப் புகழ்பெற்றார் சந்திரகாந்தா.

அடுத்து கே.சங்கர் இயக்கத்தில் 1963-ல் வெளியான ‘இது சத்தியம்’படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர். படத்திலிருந்து விலகிக்கொள்ள அவருக்குப் பதிலாக அசோகன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை சந்திரகாந்தா. ரா.கி. ரங்கராஜன் வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக எழுதி புகழ்பெற்று பின் திரைப்படமான இந்தப் படத்துக்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.

“சரவணப் பொய்கையில் நீராடி உனைத் தந்தருள் என்றேன் முருகனிடம்” என்ற அந்தப் புகழ்பெற்ற பாடல் காட்சியில் ஆற்றில் குளித்தபடி நடித்தார் சந்திரகாந்தா. அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது இந்தப் படம் (இதே படத்தில் இடம்பெற்ற “சிங்கார மனசுக்குத் தேரைக்கட்டி, சின்னச் சின்ன இடையில் பூவைக்கட்டி” என்ற பாடலில் நடனமாடி, துணை நடிகையாக அறிமுகமான ஹேமமாலினி அடுத்த சில ஆண்டுகளில் இந்திப் பட உலகில் புகழ்பெற்ற கதாநாயகியானார்).

அடுத்த ஆண்டே ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இசைச் சித்திரமான ‘கலைக்கோயில்’ படத்தில் கதாநாயகியாக நடித்து மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி பெண் ரசிகர்களின் அன்பையும் பெற்றுக்கொண்டார் சந்திரகாந்தா.

சவாலும் துணிச்சலும்

சி.எல்.ஆனந்தன், அசோகன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர் ஆகியோர் மீண்டும் மீண்டும் சந்திரகாந்தாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த பிறகு எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிக்க அன்றைய கதாநாயகிகள் மறுத்தார்கள். ஆனால் சந்திரகாந்தா இதில் விதிவிலக்கான நட்சத்திரம் மட்டுமல்ல, சவாலான கதாபாத்திரங்களைத் தயங்காமல் ஏற்று நடித்ததால் ‘துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா’ என்றும் பெயரெடுத்தார்.

சிறந்த குரல்வளம், சிறந்த நடனத் திறமை, தரமான நடிப்பு ஆகியவற்றில் முத்திரை பதித்த அவரை நவரசத் திலகமாக உயர்த்தின அவர் ஏற்ற துணிச்சலான கதாபாத்திரங்கள். முத்துராமன் ஜோடியாக ‘முத்து மண்டபம்’படத்தில் அழகும் ஆபத்தும் இணைந்த பெண்ணாக, நாட்டியக் கலைஞர் குமுதவல்லி, நவயுக மங்கை கனகவல்லி ஆகிய இரண்டு பரிமாணங்களில் நடித்து ஆச்சரியப்பட வைத்தார்.

தன் திரைவாழ்வின் தொடக்கத்தில் இருந்த சந்திகாந்தா பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘பந்தபாசம்’(1962) படத்தில் சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டு திருமணத்துக்காக ஏங்கும் மாற்றுத் திறனாளிப் பெண்ணாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் இரக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டார்.

தேவர் தயாரித்து இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ படத்தில் மீண்டும் மாற்றுத் திறனாளியாக நடித்துக் கவர்ந்த சந்திரகாந்தா, ‘துளிசிமாடம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது உட்பட சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார்.

சிவகாமி கலை மன்றம்

புதிய கதாநாயகிகளின் படையெடுப்பு மிகுந்திருந்த 60-களின் இறுதியில் சினிமாவிலிருந்து முற்றாக விலகிய சந்திரகாந்தா, செங்கல்பட்டு நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு மணவாழ்வில் இணைந்தார்.

இந்தத் தம்பதியின் ஒரே மகள் தீபா. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மென்பொருள் துறையில் பணியாற்றிவருகிறார். 1978-ல் மறைந்த சந்திரகாந்தா திரையிலிருந்து விலகியபின் ‘சிவகாமி கலை மன்றம்’ என்னும் நாடக மன்றத்தைத் தொடங்கி பல புகழ்பெற்ற நாடகங்களையும் நடத்தினார். இவற்றில் பல திரைப்படங்களாகியிருக்கின்றன.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மறக்கப்பட்ட-நடிகர்கள்-6-துணிச்சலின்-மறுபெயர்-சந்திரகாந்தா/article8713680.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

மறக்கப்பட்ட நடிகர்கள் 7: ஸ்ரீரஞ்சனி- அக்காவின் பெயரில் கலக்கிய தங்கை!

 
  • ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதாவுடன்
    ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதாவுடன்
  • பராசக்தி’ படத்தில் சிவாஜியுடன்
    பராசக்தி’ படத்தில் சிவாஜியுடன்
  • raththakannir_2933388g.jpg
     

ஒரு நடிகை எப்படிப்பட்ட பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கணுமே தவிர, எதிர்ப்புஉணர்வைக் காட்டக் கூடாது. திறமை இருக்குமானால் ஒரு நடிகைக்கு எந்த வேஷமும் நடிக்கக் கூடியதுதான். சிரமத்தைப் பாராமல் வசனத்தை மனப்பாடம் செய். போகப் போக நடிப்பது சுலபமாகிவிடும்.”

திமிறிக்கொண்டு வெளியேறத் துடித்த இளம் தெலுங்கு நடிகைக்கு, இதமாக எடுத்துச் சொல்லி நடிக்கவைக்க வேண்டிய பொறுப்பு இயக்குநர் பஞ்சுவுக்கு. கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையரில் ஒருவர். மு.கருணாநிதியின் உரையாடலைப் பார்த்துப் பயந்து, பேசக் கஷ்டப்பட்டு பராசக்தியில் சிவாஜியின் தங்கை ‘கல்யாணி’யாக நடிக்க மறுத்து விலக விரும்பினார் ஸ்ரீரஞ்சனி.

விலகிச் சென்றவர் விரும்பி வந்தார்

ஸ்ரீரஞ்சனி நடித்த வாஹினி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘வர விக்ரயம்’, ‘குணசுந்தரி கதா’ ஆகியவை ஆந்திராவில் பிரமாதமாக ஓடியவை. ‘எனக்கு அழுகை பிடிக்காது. ஆனால் நீங்கள் என் மனத்தைத் தொட்டுவிட்டீர்கள்!’ என்று ‘வரவிக்ரயம்’ படத்தில் அறிமுகமான பி. பானுமதியின் பாராட்டுதலைப் பெற்றிருந்தார் ஸ்ரீரஞ்சனி.

நடிக்கத் தெரிந்தவர். ஆயினும் கலைஞரின் கன்னித் தமிழ் உதடுகளில் ஒட்டாமல் ஓட்டம் பிடித்தது.

இரட்டை இயக்குநர்களின் கடின உழைப்பின் பலன், ஸ்ரீரஞ்சனி கொஞ்சம் கொஞ்சமாகக் கல்யாணியாகச் செதுக்கப்பட்டார்.

தொடர்ந்து அதே பராசக்தி படக் குழு. பி.ஏ. பெருமாளின் நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பு. கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். தோற்றத்திலேயே அச்சுறுத்தும் முரட்டு ஹீரோவுடன் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். முதல் நாள் ஷூட்டிங். ஸ்ரீரஞ்சனி நிஜமாகவே நடுநடுங்கினார்.

“என்னைப் பற்றி ஏதாவது சொல்லி சிலர் பயமுறுத்தி இருப்பாங்க. அதைக் கேட்டுட்டு நான் ஒரு ரோக்- அப்படின்னு டிசைட் பண்ணி இருப்பே இல்ல. உண்மையில் நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். நீ பயப்படாமே வொரி பண்ணிக்காமே ஃப்ரீயா நடி பொண்ணே” என்று சுந்தரத் தெலுங்கில் மனம் திறந்து பேசிய எம்.ஆர். ராதாவின் மனம் திறந்த பேச்சுக்குப் பிறகே அவருடைய மனைவியாக ‘ரத்தக் கண்ணீ’ரில் நடிக்கும் தைரியம் ஸ்ரீரஞ்சனிக்கு வந்தது.

எம்.ஜி.ஆர். - சிவாஜிக்கு இணை

1952-ல் பராசக்தி, 1954-ல் இல்லற ஜோதி, ரத்தக்கண்ணீர் என ஸ்ரீரஞ்சனி நடித்தவை பகுத்தறிவுப் பாசறை முத்திரைகளோடு இன்றும் பரபரப்பாகப் பேசப்படுபவை. சிவாஜி கணேசனின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்த இல்லற ஜோதி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. அடையாறு ஏரியில் எம்.ஜி.ஆருடன் படகில் டூயட் பாடி நடித்த படம் ‘குமாரி’. அது முகவரியற்றுப் போனது.

சார்லி சாப்ளின் நடித்துப் பெரும் வெற்றிபெற்றது சிட்டி லைட்ஸ். ஜெமினியின் தயாரிப்பாக அது ‘ராஜி என் கண்மணி’ என்ற தலைப்பில் தமிழுக்கு ஏற்ப உருமாறியது. டைட்டில் ரோலில் ஸ்ரீரஞ்சனிக்குக் கிடைத்த மிக அரிய சந்தர்ப்பம்.

‘மல்லிகைப்பூ ரோஜா... முல்லைப் பூ வேணுமா...

தொட்டாலே கை மணக்கும் பட்டான ரோஜா’

என்று பாடி நடிக்கும் பார்வையற்ற பூக்காரியாக ஸ்ரீரஞ்சனியை வாரி அணைத்துக்கொண்டனர் தமிழ் ரசிகர்கள்.

காதலிக்குக் கண் கிடைக்கக் காரணம் காதலன் நாயகன் டி.ஆர்.ராமசந்திரன். காதலியோ கண் மருத்துவரை மணந்துகொள்ள, ஏமாந்துபோவார். ராமச்சந்திரன் முதன்முதலில் முழு நீள குணச்சித்திர நடிகராக இந்தப் படத்தில் மாறியிருந்தார்.

‘ராஜி என் கண்மணி’

எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராஜி என் கண்மணி’ தோல்வியைச் சந்தித்தது.

“ஜெமினி ஸ்டுடியோ எனக்குக் கிட்டாத பொருளாகத் தோன்றியது. அதில் தயாராகும் ஒரு படத்துக்கு நான் ஹீரோயின் என்றவுடன் பெருமை பிடிபடவில்லை. ஜெமினிக்குள் நுழைந்து நானும் மேக்-அப் போட்டு கதாநாயகியாக நடித்ததை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதினேன். காரணம் ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’.

அதில் நடித்த வசுந்தரா தேவியின் தீவிர ரசிகை ஆனேன். வசுந்தரா தேவி ஒரு விதமாகப் பளபளக்கும் ஆடை அணிந்து, தோள்களைக் குலுக்கி ஆடிய நடனம் இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது. அவர்தான் எனக்கு சினிமா மீது மோகத்தை உண்டாக்கினார்.

‘ராஜி என் கண்மணி’யின் டைரக்டர் கே.ஜே. மகாதேவன். கல்கியின் ‘தியாக பூமி’ படக் கதாநாயகன். ஹாலிவுட் படங்களில் அலாதி மோகம் அவருக்கு. பல மேல் நாட்டுப் படங்களைப் பார்த்து, ஏதேதோ ஐடியாக்களைத் தமிழ்ப் படத்தில் புரியவைக்கப் பார்த்தார். ஆனால் ஜனங்களுக்குப் புரியவில்லை” என்று 1971-ல் பேட்டியளித்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

ஏமாற்றமும் ஏற்றமும்

‘விக்ரமாதித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடி என்று நம்பவைத்து, கடைசியில் வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் இணை சேர்ந்த ஏமாற்றமும் ஸ்ரீரஞ்சனிக்கு உண்டு. ஸ்ரீரஞ்சனியின் இயற்பெயர் மகாலட்சுமி. சினிமாவுக்காக அவரது அக்காவின் பெயரான ஸ்ரீரஞ்சனியைச் சூட்டிக்கொண்டார். அக்காவின் மீது அவ்வளவு பாசம். அவரது அக்கா சினிமாவில் நடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீரஞ்சனிக்கு ஏற்றம் தந்து கொண்டாடிய ஆந்திரத் திரையுலகம் என்ன காரணத்தாலோ அவரை ஜூனியர் ஸ்ரீரஞ்சனி என்றே அழைத்தது.

சினிமா நடிகைகள் செயற்கை வெளிச்சத்தில் கதறி அழுது, இன்னொரு குடும்பத்துக்காக மெழுகாகக் கரைந்து உருகி ஓடி ஒளி தருவது ஸ்ரீரஞ்சனிக்கும் நேர்ந்தது.

தன் அக்காவின் அகால மறைவுக்குப் பிறகு, அக்காவின் கணவர் நாகமணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் தவிர்க்க முடியாத பொறுப்பு ஸ்ரீரஞ்சனிக்கு. தொடர்ந்து அரிதாரம் பூச அதிக அவகாசம் அமையவில்லை.

வெற்றிகரமாக ஓடிய டி.ஆர். ராமண்ணாவின் ஓரிரு வண்ணச் சித்திரங்களில், ஸ்ரீரஞ்சனியை ஜெயலலிதாவின் அம்மா வேடத்தில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு வி.எஸ். ராகவனின் மனைவியாகவும் பிரமிளா, பி.ஆர். வரலட்சுமி, ஜெயசித்ரா ஆகிய அன்றைய அறிமுக நடிகைகளின் தாயாராகவும் பல படங்களில் நடித்த ஸ்ரீரஞ்சனிக்கு ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘வாழையடி வாழை’ திரைப்படத்தில் மனத்துக்கு நிறைவான வேடம் அளித்தார். அடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸின் வெற்றிப் படமான ‘பூக்காரி’யில் மு.க. முத்துவின் அன்னையாகத் தோன்றினார் ஸ்ரீரஞ்சனி.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மறக்கப்பட்ட-நடிகர்கள்-7-ஸ்ரீரஞ்சனி-அக்காவின்-பெயரில்-கலக்கிய-தங்கை/article8853031.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 9 months later...

மறக்கப்பட்ட நடிகர்கள் 10: டி.எஸ்.துரைராஜ் - நண்பனின் பாதையில் நகைச்சுவை விருந்து!

 

 
  • 1_2996374g.jpg
     
  • 2_2996375g.jpg
     
  • படங்கள் உதவி: ஞானம்
    படங்கள் உதவி: ஞானம்
  • 3_2996376g.jpg
     
 

எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ 1940-ல் வெளியானது. சகுந்தலையாக நடித்த எம்.எஸ்.எஸ், துஷ்யந்தனாக நடித்த ஜி.என். பாலசுப்ரமணியம் ஆகிய நட்சத்திரங்களின் வசீகரத்தோடு, விறுவிறுப்பான திரைக்கதை, மேக்கிங், எடிட்டிங், டங்கனின் இயக்கம், கல்கி சதாசிவத்தின் தயாரிப்பு எனப் பல காரணங்கள் இந்தப் படத்தின் வெற்றியின் பின்னால் இருந்தன. இவை தவிர இன்னுமொரு முக்கியக் காரணமும் உண்டு. அது பாமர ரசிகர்களை திரையரங்களுக்கு வரவழைத்த கலைவாணர் என்.எஸ்.கே. டி.எஸ்.துரைராஜ் ஜோடியின் “அடிப்பியோ… ங்கொப்பன் மவனே… சிங்கம்டா…” என்ற எவர்க்ரீன் காமெடி.

கடலையொட்டிய நதியின் முகத்துவாரத்தில் இரண்டு தூண்டில்களைப் போட்டுவிட்டு மீனுக்காகக் காத்திருக்கிறார்கள் மீனவ நண்பர்களான என்.எஸ்.கே.யும் துரைராஜூம். இந்த இடைவெளியில் கடலோடி மக்களின் அன்றாடப் பாடுகளை இருவரும் லாவணியாகப் பாடி முடிக்க, மீன் சிக்கிவிடுகிறது. தூண்டில் மீன் யாருக்குச் சொந்தம் என்பதில் சண்டை. மீனைத் தூக்கிக்கொண்டு துரைராஜ் ஓட, அவரைத் துரத்திப்பிடிக்கும் என்.எஸ்.கே. அடிக்கக் கையை ஓங்குகிறார். அப்போது துரைராஜ் “ அடிப்பியோ… ங்கொப்பன் மவனே சிங்கம்டா” என்று வீரமாக மீசையை முறுக்குவார்.

இப்படிச் சொன்னதும் நிஜமாகவே என்.எஸ்.கே. அவரை அடிக்க, அடியை வாங்கிக்கொண்டு அதே வசனத்தைச் சுருதி குறைத்து முனகியபடியே மீண்டும் கூறி துரைராஜ் மீசையை முறுக்குவார். இப்போது மீண்டும் என்.எஸ்.கே. அடிக்க, ஒரு கட்டத்தில் அழுதுகொண்டே அந்த வசனத்தை மட்டும் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு துரைராஜ் கெத்து காட்டுவார். இப்படிப் பல படங்களில் தொடர்ந்த இந்த நகைச்சுவை ஜோடியின் அட்டகாசத்தை ரசிகர்கள் அன்று விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள்.

பல தலைமுறைகளுக்குப் பிறகு கவுண்டமணியிடம் செந்தில் வாங்கிய அடி, ‘வின்னர்’ படத்தில் தொடங்கி ‘போக்கிரி’ வரை ‘கைப்புள்ள’ வடிவேலு வாங்கிய அடி என எல்லாவற்றுக்குமே இந்த ஜோடி போட்டுக்கொடுத்த ‘அடி’தான் அஸ்திவாரம். அடிப்பதும் ஆபாச வசனமும்தான் நகைச்சுவை என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் அன்று என்.எஸ்.கே.- துரைராஜ் ஜோடியின் நகைச்சுவையில் யாரையும் பழித்துரைக்காத தூய்மை இருந்தது.

ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே. இல்லாத வெற்றிடத்தில் தனித்து நின்று தனது நகைச்சுவைப் பாதையை டி.எஸ்.துரைராஜ் அமைத்துக்கொண்டாலும் தனது நண்பர் என்.எஸ்.கே.யின் பாதையிலிருந்து விலகிவிடாமல் அவரது பாணியை இறுகப் பிடித்துக்கொண்டார். நடிப்பதிலும் பாடுவதிலும் அள்ளிக் கொடுப்பதிலும் கூட அவர் என்.எஸ்.கே.யின் இன்னொரு பிரதியாகவே சுமார் 20 ஆண்டுகள் தமிழ்த் திரையில் வலம்வந்தார்.

என்.எஸ்.கே.யின் நண்பர்

தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டைதான் டி.எஸ். துரைராஜின் சொந்த ஊர். ஒரு பொற்கொல்லர் குடும்பத்தில் ராஜா நாயுடு நாகலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். துரைராஜுக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார். திருமணமாகிச் சென்ற அக்காவுக்கு உதவியாக இருக்கட்டும் என்று மதுரைக்கு அனுப்பிவைத்தனர். தமிழ் நாடகக் கலையின் தாய்வீடாக இருந்த மதுரையில் அன்று சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு இயங்கிய தமிழ் நாடகக் குழுக்கள் புகழ்பெற்று விளங்கிய காலம்.

சிறுவயது முதலே நக்கலும் நையாண்டியுமாகப் பேசும் துரைராஜுக்கு இட்டுக்கட்டிப் பாட்டுப் பாடும் திறனும் இருந்தது. இதைக் கண்ட அவரது மைத்துனர், எம். கந்தசாமி முதலியார் நடத்திவந்த ’மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் சேர்த்துவிட்டார். 13 வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்த அவர், அங்கு வந்து சேர்ந்த எம்.ஜி. சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன், காளி. என். ரத்னம், என்.எஸ்.கே. ஆகியோருக்கு நண்பர் ஆனார்.

பிறகு, கலைவாணருடன் நெருங்கி நட்புகொண்டார். அவருடன் அதிக நாடகங்களில் நடித்தார். என்.எஸ்.கே.யுடன் துரைராஜும் சென்னைக்கு வர மாடர்ன் தியேட்டரில் கம்பெனி நடிகர்கள் ஆனார்கள். ஆனால் அடையாளம் பெறும் அளவுக்கு வேடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ’மேனகா’ படத்தில் கலைவாணருக்கே சினிமாவில் நடிக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது; என்றாலும் நண்பன் துரைராஜுக்காகவும் தொடர்ந்து முயன்றுவந்தார் கலைவாணர். ராஜா சாண்டோ இயக்கத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்துத் தயாரித்த ‘திருநீலகண்டர்’(1939) படத்தில் முதல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார் கலைவாணர்.

மிகப் பெரிய வெற்றிபெற்ற அந்தப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும் துரைராஜும் எரிந்த கட்சி எரியாத கட்சியாகப் பங்கு கொண்ட ‘லாவணி’ கச்சேரி மிகப் பெரிய ஹிட்டடித்தது. டி.எஸ். துரைராஜ் லாவணிப் பாடல் மூலம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டுவரும் கலைவாணரிடம் ‘அந்தக் கணபதிக்கு தொந்தி பெருத்த விதத்தைச் சபையிலே எடுத்துக் கூறு, கூறு!’ என்று துரைராஜ் வில்லங்கமான கேள்வியைக் கேட்க, அதற்குப் பதில் தர முடியாமல் திணறுவார் கலைவாணர். கடைசியில் வேறு வழியில்லாமல் ‘கொழுக்கட்டை தின்றதினால் அண்ணே அண்ணே! தொந்தி பெருத்தது அண்ணே அண்ணே’ என்று கூறி சமாளிப்பார்.

இந்தப் படத்துக்கு முன்பே வாசன் வெளியிட்ட 1939-ல் ‘சிரிக்காதே' என்ற முழு நீள நகைச்சுவை படத்திலும் அதே ஆண்டில் வெளியான ‘ரம்பையின் காதல்’ படத்திலும் டி.எஸ். துரைராஜ் நடித்திருந்தாலும் ‘திருநீலகண்டர்’, ‘சகுந்தலை’ படங்களுக்குப் பிறகு என்.எஸ்.கே. துரைராஜ் ஜோடி மிகவும் பிரபலமானது. இந்த நேரத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து தன்னைத் தேடி வந்த சுந்தரம் என்ற இளம் கவிஞனை ‘சக்தி நாடக சபா’வில் சேர்த்துவிட்டார் துரைராஜ். பிறகு ‘கலியுகம்’ என்ற தனது நாடகத்தில் அவரை நடிகராக்கி அழகுபார்த்தார். அவர்தான் பின்னாட்களில் பாட்டுக் கோட்டையாக உயர்ந்து நின்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

கைதும் தனிமையும்

கலைவாணர் இருந்தால் துரைராஜ் அந்தப் படத்தில் இருப்பார் என்ற நிலையை ‘லட்சுமி காந்தன்’ கொலைவழக்கு மாற்றியது. அந்த வழக்கில் கைதாகி 30 மாதங்கள் பாகவதருடன் கலைவாணர் சிறையில் இருக்க வேறு வழியில்லாமல் தனித்து நடிக்கத் தொடங்கினார் டி.எஸ். துரைராஜ். பாகவதர் சிறை சென்ற பிறகு எம்.ஜி.ஆரும் நாயகனாக எழுந்துவந்தார். எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன் என அந்நாளின் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ்பெற்ற டி.எஸ். துரைராஜ், தனது நண்பரின் வழியில் பலருக்கும் உதவும் உள்ளம் கொண்டவராக விளங்கினார்.

ஒல்லியான உடல்வாகுடன் திரையில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் பருத்த தோற்றத்துக்கு மாறிய துரைராஜ், தனது தோற்றத்துக்கு ஏற்ற நகைச்சுவை நடிப்புடன் குணசித்திர நடிகர், குறும்பு செய்யும் வில்லன் எனப் பல வேடங்களில் நடித்துப் பல பரிமாணங்களில் கவர்ந்தார். நகைச்சுவை நடிகர்களில் அதிகம் பொருளீட்டியவர் என புகழப்படும் துரைராஜ், சென்னையில் ராயப்பேட்டையில் பெசன்ட் சாலையில் மிகப் பெரிய மாளிகையைக் கட்டி வசித்தார். விலை உயர்ந்த கார்களை வைத்திருந்தார். விரல்களில் வைர மோதிரம் அணிந்தும் வலம் வந்தார்.

குதிரையின் வேகம்

புகழின் உச்சியில் இருந்தவருக்குக் குதிரைப் பந்தயம் மீது தீவிர வேட்கை உருவானது. திரை நடிப்பு, நாடக வருவாய் ஆகிவற்றின் மூலம் சம்பாதித்ததில் பெரும் பகுதியைக் குதிரைப் பந்தயங்களில் பணயம் வைத்தார். உயர்தரப் பந்தயக் குதிரைகளை வாங்கிப் பந்தயங்களில் ஓட விட்டார். ஆனால், குதிரைப் பந்தயம் அவரது திரைவாழ்வின் வேகத்தையும் செல்வத்தையும் குறைத்தது. இழந்த பொருளை மீட்க, பட நிறுவனம் தொடங்கிச் சில படங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் செய்தார். சாவித்திரி தங்கையாகவும் தான் அண்ணாகவும் நடித்து 1958-ல் வெளியான ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தைத் தயாரித்து இயக்கினார் துரைராஜ்.

அந்தப் படத்தில் தங்கைக்கு அறிவுரை சொல்லும்விதமாக ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே’ என்று திருச்சி லோகனாதன் குரலில் இவர் பாடுவதுபோல் அமைந்த பாடல் இன்றும் தமிழகத்தில் டி.எஸ். துரைராஜை நினைவுபடுத்தும் விதத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மறக்கப்பட்ட-நடிகர்கள்-10-டிஎஸ்துரைராஜ்-நண்பனின்-பாதையில்-நகைச்சுவை-விருந்து/article9064833.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.