Jump to content

யாழ் இணையம் 18ஆவது அகவை


Recommended Posts

yarl18.png

மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 17ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2016) 18ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 

எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். கூட்டுமுயற்சியினால் கடந்த காலத்தில் ஒரு சில விடயங்களை தாயக மக்களை நோக்கிச் செய்திருந்தோம். எதிர் காலத்திலும் எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம்.  அந்த வகையில் யாழ் இணையத்துக்கு கிடைக்கப்பெறும் ஒரு சில விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் பணம் தாயக மக்களுக்கான திட்டங்களில் இணைக்கப்படும்.

"நாமார்க்கும் குடியல்லோம்" 

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.