Jump to content

தமிழினியின் நூல் போர்க்குற்றங்களை மறுதலிக்கின்றது! சிங்கள ஊடகம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

thamilini_book.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினியின் சுயசரிதை நூல் இராணுவத்தினர் மீதான போர்க்குற்றங்களை மறுதலிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.

குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணி பொறுப்பாளர் தமிழினியின் நூல் இறுதிப் போர் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக விடுதலைப் புலிகள் பொதுமக்கள் மத்தியில் பீரங்கிகளை நிலைநிறுத்தி இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான பதில் தாக்குதல்களின் போது பொதுமக்களும் காயமடைந்ததாக தமிழினி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக இறுதிப் போர் குறித்து மேலும் பல தகவல்கள் தமிழினியின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலம் இராணுவத்தினர் மீதான போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மறுத்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது ஐ.நா. விசாரணைக்குழு என்பன இதனை ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகத்துக்கு உரிய விடயமாகும்.

ஏனெனில் இதற்கு முன்னரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச் செல்வனின் மனைவியும் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று வலியுறுத்தி இருந்தார்.

எனினும் அவரின் கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவோ, செவிமடுக்கவோ இல்லை என்றும் குறித்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/show-RUmuyDRbSXmx5F.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் கில்லாடி... அவனுக்கு வழிகாட்ட எங்களில் சிலது கில்லாடிக்கு கில்லாடிகள். :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இதைத்தான் எதிர்பார்த்தேன். இது தமிழினி எழுதியதா? அல்லது சிங்களத்தின் புலனாய்வாளர்கள் எழுதியதா என்பது இப்போது விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியின் கணவர் என்பவர் முன்னாள் ஒட்டுக்குழு ஆளும் இன்னாள் சொறீலங்கா சிங்களத்துக்கு வேண்டிய ஆளுமாமே. அவரின் அணுசரனையுடன் தான் எல்லாம் அரங்கேறுகிறது.

அண்ணர் லண்டனில இருந்தே பிழைக்க வழியில்லாமல்.. ஊருக்கு போய் இறந்த மனைவியின் பெயரால் புத்தகம் வெளியிட்டு பிழைப்பு நடத்த வேண்டிய நிலை..... என்றால் யோசிக்க வேண்டிய பல விடயங்கள் இந்த நூல் வெளியீட்டின் பின்னால் நடந்துள்ளது. நடக்க உள்ளது.

இங்கு அதுக்கு சிலர் வக்காளத்து வேற. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயக்குமாரின் தந்தை புலிகளின் தண்டனைக்கு உள்ளானவர்.இதற்கு பின்னாலான ஜெயக்குமாரின் அரசியலை புரிந்து கொள்வது இலகுவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது ஐ.நா. விசாரணைக்குழு என்பன இதனை ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகத்துக்கு உரிய விடயமாகும்.

ஏனெனில் இதற்கு முன்னரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச் செல்வனின் மனைவியும் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று வலியுறுத்தி இருந்தார்.

எனினும் அவரின் கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவோ, செவிமடுக்கவோ இல்லை என்றும் குறித்த கட்டுரையில் தொடர்ந்தும்

சிங்கள ஊடகத்துக்கு இருக்கும் சிற்றறிவு கூட, சில தமிழர்கு இல்லை.

புலிகள் மக்கள் மத்தியில் இருந்து பீரங்கியடித்தது ஊருக்கே தெரியும். இதை தமிழினி சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அப்படி அடித்திருந்தாலும் ஒரு அரசு மக்களிருக்கிறார்கள் என்று தெரிந்தே மறுபீரங்கி சூட்டு நடத்தியமையே போர்குற்றம். ஐ நா அறிக்கை இதை ஐயம் திரிபுறச் சொல்லியுளது.

புலிகள் செய்த போர்குற்றத்தை ஒப்புக் கொண்டால் அரசின் குற்றம் மறைந்து விடும் என்பது, புலிவாலுகள், புலியை வெள்ளை அடிப்பதற்கு சொல்லும் பேய்கதை.

தமிழ் பொது சனத்துக்கு எதிராக புலியும், அரசும் குற்றமிழைத்தனர். புலி அழிந்து விட்டது. கூடவே அது ஒரு அரசல்ல ( non state agent). ஆனால் இலங்கை அரசு இன்றுமிருக்கிறது, கூடவே ஒரு அரசு எனும் வகையில் அதன் பொறுப்புக் கூறல் அதிகம்.

எனவே போர்குற்ற விசாரணையில் பொறுப்பு கூறி, தக்க இழப்பீடாக ஒரு அரசியல் தீர்வை வைக்க வேண்டியது அரசின் கடமை.

இதுதான் அறிவார்ந்த முறையில் எம் உரிமை அரசியலை முன்நகர்த்தும் வழியாய் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழினியின் புத்தகத்திற்கு ஜெயகுமாரனின் தந்தை புலிகளால் தண்டனை பெற்றதற்கும் என்ன சம்பந்தம் .

புலிகள் அழியவேண்டும் என்று பலரும் விரும்பியதற்கு ஒரு காரணம் வாய் கூசாமல்  மற்றவரில் சுமத்தும் அபாண்டமும் ஒன்று .

இன்றும் அவர்கள் அதை விட்டபாடில்லை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, arjun said:

தமிழினியின் புத்தகத்திற்கு ஜெயகுமாரனின் தந்தை புலிகளால் தண்டனை பெற்றதற்கும் என்ன சம்பந்தம் .

புலிகள் அழியவேண்டும் என்று பலரும் விரும்பியதற்கு ஒரு காரணம் வாய் கூசாமல்  மற்றவரில் சுமத்தும் அபாண்டமும் ஒன்று .

இன்றும் அவர்கள் அதை விட்டபாடில்லை . 

புலி என்றாலே நீங்கள் அடிக்கடி உதிர்க்கும் உலக அரசியலே உங்களுக்கு மறந்துவிடும்.ஜெயக்குமாரனின் மனைவி  தான் தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா மன்ற விசாரணை அறிக்கைகள் இரண்டிலும் விடுதலைப் புலிகள் மக்கள் மீது பீரங்கிகளால் தாக்கினர்.. அல்லது மக்கள் மத்தியில் இருந்து பீரங்கிகளால் தாக்கினர் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் இறுதி வரை களத்தில் நின்ற வைத்தியர்களும் சரி ஐ நா பணியார்களும் சரி இப்படி ஒரு குற்றச்சாட்டை சுயாதீனமாக முன் வைக்கவும் இல்லை.

ஐநா புலிகள் மீது வைத்த குற்றச்சாட்டு என்பது மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போக அனுமதிக்கவில்லை என்பது. போன மக்களை காப்பாற்ற வக்கில்லாமல் ஐநாவே கையாலாகத்தனமாக நடந்து கொண்டது பற்றி அறிக்கைகளில் ஒரு குறிப்பும் இல்லை. அங்கு புலிகள் எதிரியிடம் மக்களை கையளிக்க எதிர்பார்க்கும் ஐநா தான் அதில் அளிக்க வேண்டிய பங்களிப்பை மறந்து போனது வேடிக்கை.

இதே ஐநா யாழ்ப்பாண இடம்பெயர்வின் போது பல உதவிகளை நல்கியது மட்டுமன்றி அப்போதைய ஐநா தலைவர் பூட்டோஸ் பூட்டோஸ் காலி வெளிப்படையாக சிறீலங்கா அரசு மீது குற்றம் சுமத்தி.. உடனடி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதே சூழல் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த போது ஐநா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது.. ஒரு மனித குலத்திற்கு எதிரான செயலும் கூட.

இன்னொரு குற்றச்சாட்டு.. விடுதலைப்புலிகள்.. இராணுவக் கட்டுப்பாட்டை நோக்கிப் போன மக்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் என்பது. இதுவும் சுயாதீனமாக உறுதிப்படுத்தக் கூடியதாக இல்லை. மக்களே தாங்கள் இராணுவத்திடம் இருந்து தப்ப இப்படி புலிகள் மீது அபாண்டப் பழி போடுவது ஒன்றும் புதிதல்ல. 

இன்னொரு குற்றச்சாட்டு கட்டாய ஆட்சேர்ப்பு என்பது. இது தொடர்பாக புலிகள் சமாதான காலத்திலேயே முன்னறிவுப்புச் செய்த வேளை... இன்று மனித உரிமை பேசுபவர்கள் அப்போ என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தார்கள். புலிகளை அப்பவே கண்டித்து அதனை நிறுத்தக் கோரி இருக்கலாம். அதற்கு மாற்றீடுகள் குறித்து பேசி இருக்கலாம். 

சொறீலங்கா அரச படைகளும் அரசும் மேற்கொண்ட இன அழிப்பு.. போர்க்குற்றம்.. மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் அத்தனையும் ஆதாரங்களோடு ஏன் ஐநா பணியாளர்கள் சிலரே சமர்ப்பித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையிலானது. பன்னாட்டு சமூகமும் இதற்கான ஆதாரங்களைக் கையளித்துள்ள நிலையில்...

தமிழினி என்ற ஒரு முன்னாள் போராளியின் பெயரால்.. சிங்கள அரச ஆதரவாளர்களும்.. உளவாளிகளும்.. முன்னாள் புலி... மற்றும் தமிழ் மக்கள் விரோத சக்திகளும் இன்று நடந்த மானுடப் பேரிடரை மூடிமறைக்க முயல்வது என்பது அவர்கள் இன அழிப்பு.. போர்க்குற்றம் தொடர்பில் கொண்டுள்ள அச்சத்தையே இனங்காட்டுகிறது. இதுவே அவர்களை குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்த போதுமாகவும் உள்ளது. tw_blush:

Link to comment
Share on other sites

7 hours ago, nedukkalapoovan said:

சிங்கம் இந்த முறை விக்கிபீடியாவை சரியா வாசிக்கவில்லை போலுள்ளது. போர்நிறுத்த காலத்தில் செய்யப்பட்டது வீட்டுக்கு ஒருவர் என்கின்ற ரீதியில் நடைபெற்ற கட்டாய ஆட்சேர்ப்பு. அந்த நேரத்தில் எத்தனை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை அண்ணர் அறிய விரும்பவில்லை போலுள்ளது.  இறுதி காலங்களில் அது துவக்கு தூக்க கூடிய அனைவரும் ஒரு நாள் பயிற்சியோடு கொலைவெறியோடு வரும் ராணுவத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட அளவில் மோசமானது.  

தாயகம் தொடர்பில் புலம்பெயர் விசிலடிச்சான்குஞ்சுகள் எவ்வளவு தூரம் கனவுலகில் வாழ்கிறார்கள் என்பதற்கு மேலிருக்கும் பதிவு ஒரு உதாரணம். 

https://en.wikipedia.org/wiki/Report_of_the_Secretary-General%27s_Panel_of_Experts_on_Accountability_in_Sri_Lanka

Specific findings of the panel:[37][38]

  • The Sri Lankan military used large-scale and widespread shelling causing large numbers of civilian deaths. This constituted persecution of the population of the Vanni.
  • The Tamil Tigers kept hostage 330,000 civilians who were fleeing the shelling and trapped in an ever decreasing area.
  • The Sri Lankan government tried to intimidate and silence the media and other critics of the war using a variety of threats and actions, including the use of white vans to abduct and to make people disappear.
  • The Sri Lankan military shelled on large scale the three Safe Zones where it had encouraged the civilian population to concentrate. It did this even after saying it would cease using heavy weapons.
  • The Sri Lankan military shelled the UN hub, food distribution lines and Red Cross ships coming to rescue the wounded and their relatives. It did this despite having intelligence as well as notifications by the UN, Red Cross and others.
  • Most of the civilian casualties were caused by Sri Lankan military shelling.
  • The Sri Lankan military systematically shelled hospitals on the frontlines. All hospitals in the Vanni were hit by mortars and artillery, sometimes repeatedly, despite the Sri Lankan military knowing their locations.
  • The Sri Lankan government systematically deprived civilians in the conflict zone of humanitarian aid, in the form of food and medical supplies, adding to their suffering. The government deliberately underestimated the number of civilians in order to deprive them of humanitarian aid.
  • Tens of thousands of civilians were killed between January and May 2009. Many died anonymously in the final days.
  • The Sri Lankan government subjected the civilians who managed to escape the conflict zone to further deprivation and suffering.
  • Screening for Tamil Tigers took place without any transparency or external scrutiny. Some of those separated by the screening were summarily executed whilst women were raped. Others simply disappeared.
  • All IDPs were detained in closed overcrowded camps where they were deprived of their basic rights. The conditions in the camps resulted in many unnecessary deaths.
  • There were interrogations and torture in the camps. Suspected Tamil Tigers were taken to other facilities where they faced further abuse.
  • The Tamil Tigers refused to allow civilians to leave the conflict zone and kept them as hostages. The civilians were sometimes used as human shields.
  • The Tamil Tigers forcibly recruited members during whole civil war but this intensified during the final stages of the war. Some of the recruits were young as 14.
  • The Tamil Tigers forced civilians to dig trenches, risking making them look like combatants.
  • The Tamil Tigers kept on fighting even when it became clear they had lost in order to save the lives of its leaders. This futile prolonging of the conflict resulted many civilians dying unnecessarily.
  • The Tamil Tigers shot at point blank any civilian trying to leave the conflict zone.
  • The Tamil Tigers fired artillery from near civilians. They also stored military equipment near civilians and civilian structures such as hospitals.
  • The Tamil Tigers carried out suicide attacks against civilians outside the conflict zone even during the final stages of the civil war.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அண்ணனுக்கு //near//... க்கும் //among// //amongst// க்கும்... //அருகில்//  க்கும்.. //மத்தியில்// க்கும் வித்தியாசம் தெரியல்ல. தமிழும் சரியா வரல்ல.. ஆங்கிலமும் அப்படி. tw_blush:

மேலும் மக்களுக்கு அருகில் இருந்து சொறீலங்கா இராணுவமும் தான் தாக்குதல் நடத்தினது. யாழ் கோட்டை காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை அது நிகழுது. புலிகள் மீதான இந்த.. அருகில் இருந்தான குற்றச்சாட்டு சொறீலங்கா இராணுவத்திற்கு இன்னும் பலமாகப் பொருந்தும். அது வேற கதை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தெனாலி said:
10 hours ago, nedukkalapoovan said:

சிங்கம் இந்த முறை விக்கிபீடியாவை சரியா வாசிக்கவில்லை போலுள்ளது. போர்நிறுத்த காலத்தில் செய்யப்பட்டது வீட்டுக்கு ஒருவர் என்கின்ற ரீதியில் நடைபெற்ற கட்டாய ஆட்சேர்ப்பு. அந்த நேரத்தில் எத்தனை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை அண்ணர் அறிய விரும்பவில்லை போலுள்ளது.  இறுதி காலங்களில் அது துவக்கு தூக்க கூடிய அனைவரும் ஒரு நாள் பயிற்சியோடு கொலைவெறியோடு வரும் ராணுவத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட அளவில் மோசமானது.  

தாயகம் தொடர்பில் புலம்பெயர் விசிலடிச்சான்குஞ்சுகள் எவ்வளவு தூரம் கனவுலகில் வாழ்கிறார்கள் என்பதற்கு மேலிருக்கும் பதிவு ஒரு உதாரணம். 

வீட்டுக்கு ஒருவர் போராட வா என்று புலிகள் மட்டும் கேட்கவில்லை. போராட வந்த எல்லாரும் தான் கேட்டவை. சிங்கள இராணுவமும் தான் ஓட ஓடப் பிடிச்சு சண்டையில் விட்டது. அது கூட அடிப்படை மனித உரிமை மீறலாகும். எங்கட ஆக்கள் போராட வீட்டுக்கு ஒருவரை அனுப்பவில்லை.. மாறாக போடா போ என்றிட்டு..  வெளிநாட்டுக்கு அகதியாக வீட்டுக்கு இருவரை அனுப்பினர். அதனாலும் தான் நாம் தோற்றோம். இதை எல்லாம் சுலபமா மறந்திருப்பமே. tw_blush:

ஐநா பார்வையில் புலிகள் செய்தது தப்புன்னா.. ஓட ஓட பிடிச்சு சண்டைக்கு அனுப்பிய சொறீலங்கா இராணுவத்தின் செயலும் கூட தண்டனைக்குரிய குற்றம். ஊர்காவல் படை என்று சிவியன்களிடம் ஆயுதத்தைக் கொடுத்து சண்டையில் விட்டதும் குற்றமாகும். 

சும்மா விலாவாரியா எல்லாத்தையும் புலிகள் மீது சொல்லிக் கொள்ளலாம். ஒரு விசாரணைன்னு வந்தால் தெரியும்... புலிகள் மீது வைத்த ஐநாவின் குற்றச்சாட்டுக்கள் பல அது இன்று பாராட்டித் திரியும் சொறீலங்கா மீதும் அதன் மீதும் வந்து இன்னும் பலமான ஆதரத்தோடு அமையுமுன்னு. அதுதான் ஐநா வும் வெட்டி ஆடி.. விசாரணையை இழுத்தடித்து.. தானும் தன்னைச் சார்ந்தோரையும் பாதுக்காக விளைகிறது.

இந்த வெளிப்படை உண்மை தெரியாமல்.. தான்... எம்மிலும் சிலர். tw_blush:

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

சரி புலிகள் தவறு செய்தவை தான் , ஆனால் தமிழ் மக்களில் எத்தனை வீதமானவர்கள் புலிகளை கூண்டில் ஏற்றி தண்டனை கிடுக்க வேண்டும் என்று கூறுவார்கள்?? எவரும் இல்லை , இதில் நான் தமிழ் மக்கள் என்று கூறும் போது ஒட்டுக் குழுக்கழும் இன துரோகிகளும் உள்ளடக்கமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தெனாலி said:

சிங்கம் இந்த முறை விக்கிபீடியாவை சரியா வாசிக்கவில்லை போலுள்ளது. போர்நிறுத்த காலத்தில் செய்யப்பட்டது வீட்டுக்கு ஒருவர் என்கின்ற ரீதியில் நடைபெற்ற கட்டாய ஆட்சேர்ப்பு. அந்த நேரத்தில் எத்தனை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை அண்ணர் அறிய விரும்பவில்லை போலுள்ளது.  இறுதி காலங்களில் அது துவக்கு தூக்க கூடிய அனைவரும் ஒரு நாள் பயிற்சியோடு கொலைவெறியோடு வரும் ராணுவத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட அளவில் மோசமானது.  

தாயகம் தொடர்பில் புலம்பெயர் விசிலடிச்சான்குஞ்சுகள் எவ்வளவு தூரம் கனவுலகில் வாழ்கிறார்கள் என்பதற்கு மேலிருக்கும் பதிவு ஒரு உதாரணம். 

https://en.wikipedia.org/wiki/Report_of_the_Secretary-General%27s_Panel_of_Experts_on_Accountability_in_Sri_Lanka

Specific findings of the panel:[37][38]

  • The Sri Lankan military used large-scale and widespread shelling causing large numbers of civilian deaths. This constituted persecution of the population of the Vanni.
  • The Tamil Tigers kept hostage 330,000 civilians who were fleeing the shelling and trapped in an ever decreasing area.
  • The Sri Lankan government tried to intimidate and silence the media and other critics of the war using a variety of threats and actions, including the use of white vans to abduct and to make people disappear.
  • The Sri Lankan military shelled on large scale the three Safe Zones where it had encouraged the civilian population to concentrate. It did this even after saying it would cease using heavy weapons.
  • The Sri Lankan military shelled the UN hub, food distribution lines and Red Cross ships coming to rescue the wounded and their relatives. It did this despite having intelligence as well as notifications by the UN, Red Cross and others.
  • Most of the civilian casualties were caused by Sri Lankan military shelling.
  • The Sri Lankan military systematically shelled hospitals on the frontlines. All hospitals in the Vanni were hit by mortars and artillery, sometimes repeatedly, despite the Sri Lankan military knowing their locations.
  • The Sri Lankan government systematically deprived civilians in the conflict zone of humanitarian aid, in the form of food and medical supplies, adding to their suffering. The government deliberately underestimated the number of civilians in order to deprive them of humanitarian aid.
  • Tens of thousands of civilians were killed between January and May 2009. Many died anonymously in the final days.
  • The Sri Lankan government subjected the civilians who managed to escape the conflict zone to further deprivation and suffering.
  • Screening for Tamil Tigers took place without any transparency or external scrutiny. Some of those separated by the screening were summarily executed whilst women were raped. Others simply disappeared.
  • All IDPs were detained in closed overcrowded camps where they were deprived of their basic rights. The conditions in the camps resulted in many unnecessary deaths.
  • There were interrogations and torture in the camps. Suspected Tamil Tigers were taken to other facilities where they faced further abuse.
  • The Tamil Tigers refused to allow civilians to leave the conflict zone and kept them as hostages. The civilians were sometimes used as human shields.
  • The Tamil Tigers forcibly recruited members during whole civil war but this intensified during the final stages of the war. Some of the recruits were young as 14.
  • The Tamil Tigers forced civilians to dig trenches, risking making them look like combatants.
  • The Tamil Tigers kept on fighting even when it became clear they had lost in order to save the lives of its leaders. This futile prolonging of the conflict resulted many civilians dying unnecessarily.
  • The Tamil Tigers shot at point blank any civilian trying to leave the conflict zone.
  • The Tamil Tigers fired artillery from near civilians. They also stored military equipment near civilians and civilian structures such as hospitals.
  • The Tamil Tigers carried out suicide attacks against civilians outside the conflict zone even during the final stages of the civil war.

தெனாலி,

எங்கள் விக்கிபீடியா வேங்கைக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கீழே பாத்தீர்களா, near, amongst எண்டு எக்கில ஹேர் புடுங்கிறார். இதனால்தான் நான் பதிலே சொல்லாமல் கடந்துபோனேன்.

ஐநா அறிக்கையை வாசித்து கிரகிக்க கூடிய ஆக்களுக்கு நாம் சொல்வது விளங்கி இருக்கும்.

Near =அருகில், மிகவும் குறுகிய ஒரு யுத்த பிரதேசத்தில் மக்கள் அருகில் ஆட்டிலெறியை, ராணுவ தளபாடங்களை புலிகள் வைத்திருந்து சண்டையிட்டனர் என்கிறது ஐநா.

Amongst = மத்தியில். எனவே புலிகள் மக்கள் மத்தியில் இருந்து சண்டையிடவில்லை என்கிறார் அண்ணர்.

அந்த குறுகிய நிலப்பரப்பில், மக்களுக்கு அருகில் நிற்பதுக்கும், மக்கள் மத்தியில் நிற்பதுக்கும் ஒரு வேறுபாடுமில்லையே? முட்டையில் மயிர் புடுங்குவது என்பது இதைத்தான்.

இவரிடம் தான் சொன்ன பிழையான தகவலை ஏற்கும் நேர்மையை, எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.

ஒரு திரியில் விஜயனை, அசோகன் நாடு கடத்தினான் என்று ஒரு historical bombshell ஐ போட்டுப் போனார்.

விஜயனை விட 150 வருடம் பிற்பட்டவன் அசோகன் என்பதை சுட்டிக் காட்டினேன். ஒரு சத்தமும் இல்லை. அட்லீஸ் தன் தவறை ஒத்துக் கொண்டு ஒரு சிறுபதிவு? இல்லை.

இப்படி பட்ட கருத்து நேர்மையற்ற அரைகுறை விக்கிபீடியா வேங்கைள்தானாம் இவ்வினத்தில் இனப்பற்றாளர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்திற்கும்  மனிதனுக்கும் பிறப்பெடுத்த.. சிங்கள போலி இதிகாசங்களை எல்லாம் நாங்கள் வரலாறாக ஏற்றுக் கொள்வதில்லை. விஜனின் வரவுக் காலம் சந்தேகத்திற்குரிய ஒன்று. எந்தவித ஆய்வு ஆராய்ச்சிகளும் சான்றுகளும் இல்லாத சிங்கள இதிகாசமான மகாவம்சத்தில் விஜனின் வரவு சொல்லப்பட்ட காரணங்கள்.. அதன் பின் உருவாக்கப்பட்ட கதைகள்... எல்லாமே ஆதார அடிப்படைகள் அற்றவை. பின்னைய வரலாற்றை கோர்ப்பித்து உருவாக்கப்பட்ட ஒரு போலி இதிகாசமே மகாவம்சம். 

இங்கு எடுத்தாளப்பட்ட விடயம்.. 1000 பேருக்கு மனித தண்டனை அளிக்க முனையும் சிங்களம்.. அதன் இதிகாச புராண அடிப்படையிலாவது.. அந்த மனித வலுவை பயன்படுத்த முனையலாமே.. மரண தண்டனைகளுக்குப் பதில் கடும் உழைப்புடன் கூடிய ஆயுள் தண்டனை வழங்கலாம் என்பது தான்.

இங்கு சிலர்.. விஜனின் வரலாற்றை.. ஏதோ அகழ்வாராய்ச்சிகள் மூலம் நிறுவியவர்கள் கணக்கில் சுண்ணாம்புப் பாறை.. சுவட்டுப்பாறை என்று சிங்களவனின் போலிகளுக்கு வலுவூட்ட விளைகிறார்கள்.

நாங்க ஆதார அடிப்படைகளற்ற புனைவுகளை இட்டு.. நம்பாத ஒன்றைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அதற்கான தேவையும் நேரமும் கூட எம்மிடம் இல்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2016 at 2:37 PM, goshan_che said:

புலிகள் மக்கள் மத்தியில் இருந்து பீரங்கியடித்தது ஊருக்கே தெரியும். இதை தமிழினி சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அப்படி அடித்திருந்தாலும் ஒரு அரசு மக்களிருக்கிறார்கள் என்று தெரிந்தே மறுபீரங்கி சூட்டு நடத்தியமையே போர்குற்றம். ஐ நா அறிக்கை இதை ஐயம் திரிபுறச் சொல்லியுளது.

புலிகள்தான் பயங்கரவாதிகள் ஆயிற்றே அவர்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக  ஒரு பொறுப்புள்ள அரசு மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை புலிகள் மூற்றாக அழியவேண்டும்  என்று கண்மூடித்தனமாக பீரங்கித்தாக்குதலை நடத்துவதை ஐநா எப்படிச் சகித்துக் கொண்டது.. எந;த எந்த நாடுகள் ஐநாவின் வாயை மூடின?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா அம்மையார்.. நவாலி தேவாலயம் மீதான இனப்படுகொலையை நடத்தி விட்டு அன்று சொன்னது.. நவாலி தேவாலயத்துக்கு அருகில் இருந்து புலிகள் தாக்கினார்கள் என்று.

இன்று சொல்வது அந்தச் சம்பவத்திற்கு இராணுவத்தினரே பொறுப்பென்று. 

இப்படித்தான் உள்ளதை உள்ளபடி ஆதாரங்களோடு விசாரித்தால் எல்லாம் வெளிக்கும்.

அருகில் என்பதற்கு... பல இடைவெளிகள் தூரமுள்ளது. மக்கள் மத்தியில் என்பதற்கு இருக்கும் இடைவெளியை விட.

யாழ் கோட்டை இராணுவம் முகாம் கூட யாழ் நகருக்கு அருகில் தான். அங்கிருந்து தான் சிங்கள இராணுவம் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றது. யாழ் மத்திய கல்லூரி மாணவனான விபுலாந்தனையும் கொன்றது. இன்று வரை அவற்றுக்கு ஒரு நீதியும் இல்லை.

ஐநா என்ன யாருமே அவற்றை இட்டு அக்கறையும் காட்டியதில்லை.

எல்லாம் முறைப்படி விசாரித்தால் வெளிக்கும். புலிகளா.. சிங்கள அரச பயங்கரவாதப் படைகளா.. பெரும் போரியல் குற்றங்களையும்.. இனப்படுகொலைகளையும்.. மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் இழைத்தார்கள் என்பது.

இதுவே இங்கு பேசு பொருள். தமிழினியின் நூல் என்று வெளியிடப்பட்ட அந்த ஒன்று.. சிங்களவனின் தேவைக்காகப் புனையப்பட்ட ஒன்று.  :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தெனாலி,

எங்கள் விக்கிபீடியா வேங்கைக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கீழே பாத்தீர்களா, near, amongst எண்டு எக்கில ஹேர் புடுங்கிறார். இதனால்தான் நான் பதிலே சொல்லாமல் கடந்துபோனேன்.

ஐநா அறிக்கையை வாசித்து கிரகிக்க கூடிய ஆக்களுக்கு நாம் சொல்வது விளங்கி இருக்கும்.

Near =அருகில், மிகவும் குறுகிய ஒரு யுத்த பிரதேசத்தில் மக்கள் அருகில் ஆட்டிலெறியை, ராணுவ தளபாடங்களை புலிகள் வைத்திருந்து சண்டையிட்டனர் என்கிறது ஐநா.

Amongst = மத்தியில். எனவே புலிகள் மக்கள் மத்தியில் இருந்து சண்டையிடவில்லை என்கிறார் அண்ணர்.

அந்த குறுகிய நிலப்பரப்பில், மக்களுக்கு அருகில் நிற்பதுக்கும், மக்கள் மத்தியில் நிற்பதுக்கும் ஒரு வேறுபாடுமில்லையே? முட்டையில் மயிர் புடுங்குவது என்பது இதைத்தான்.

இவரிடம் தான் சொன்ன பிழையான தகவலை ஏற்கும் நேர்மையை, எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.

ஒரு திரியில் விஜயனை, அசோகன் நாடு கடத்தினான் என்று ஒரு historical bombshell ஐ போட்டுப் போனார்.

விஜயனை விட 150 வருடம் பிற்பட்டவன் அசோகன் என்பதை சுட்டிக் காட்டினேன். ஒரு சத்தமும் இல்லை. அட்லீஸ் தன் தவறை ஒத்துக் கொண்டு ஒரு சிறுபதிவு? இல்லை.

இப்படி பட்ட கருத்து நேர்மையற்ற அரைகுறை விக்கிபீடியா வேங்கைள்தானாம் இவ்வினத்தில் இனப்பற்றாளர்கள்.

தெனாலி,

நான் மேலே கோடிட்ட கருத்து, மீளவும் ஒருமுறை தொடர்ந்து வந்த பதில்களால் நிறுவப் பட்டுள்ளது.

இப்படியானவர்களுடன் கருத்தாடுவதில் ஒரு பயனுமில்லை. வடிவேலுவின் "என்ன கையப் பிடிச்சி இழுத்தியா" காமெடி மாதிரித்தான் இதுவும்.

1 hour ago, புலவர் said:

புலிகள்தான் பயங்கரவாதிகள் ஆயிற்றே அவர்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக  ஒரு பொறுப்புள்ள அரசு மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை புலிகள் மூற்றாக அழியவேண்டும்  என்று கண்மூடித்தனமாக பீரங்கித்தாக்குதலை நடத்துவதை ஐநா எப்படிச் சகித்துக் கொண்டது.. எந;த எந்த நாடுகள் ஐநாவின் வாயை மூடின?

இதென்ன இந்திராகாந்தி செத்துட்டாரா என்று இப்ப வந்து கேக்கியள்?

எல்லா நாடுகளும் சேர்ந்து, அரசின் போர்குற்றத்தை, புலிகளை அழிக்க வேண்டும் என்பதற்க்காய் சகித்துக்கொண்டார்கள். இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈயூ, யூகே, யூஎஸ், கனடா, அவுஸ், எல்லோரும் சேர்ந்தே ஐநாவின் வாயை அடைத்தார்கள்.

அப்போ அவர்கள் மீதும் போர் குற்ற விசாரணை கோருவீர்களே? குட் லக். ?

வல்லான் வகுத்ததே சட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

தெனாலி,

நான் மேலே கோடிட்ட கருத்து, மீளவும் ஒருமுறை தொடர்ந்து வந்த பதில்களால் நிறுவப் பட்டுள்ளது.

இப்படியானவர்களுடன் கருத்தாடுவதில் ஒரு பயனுமில்லை. வடிவேலுவின் "என்ன கையப் பிடிச்சி இழுத்தியா" காமெடி மாதிரித்தான் இதுவும்.

இதென்ன இந்திராகாந்தி செத்துட்டாரா என்று இப்ப வந்து கேக்கியள்?

எல்லா நாடுகளும் சேர்ந்து, அரசின் போர்குற்றத்தை, புலிகளை அழிக்க வேண்டும் என்பதற்க்காய் சகித்துக்கொண்டார்கள். இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈயூ, யூகே, யூஎஸ், கனடா, அவுஸ், எல்லோரும் சேர்ந்தே ஐநாவின் வாயை அடைத்தார்கள்.

அப்போ அவர்கள் மீதும் போர் குற்ற விசாரணை கோருவீர்களே? குட் லக். ?

வல்லான் வகுத்ததே சட்டம்.

வல்லான் வகுத்ததே சட்டம் என்பதற்காக சிறிலங்காவின் இன அழிப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

வல்லான் வகுத்ததே சட்டம் என்பதற்காக சிறிலங்காவின் இன அழிப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களா?

நாம் இனவழிப்புக்கு உள்ளானவர்கள் - நாம் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நிச்சயமாக இல்லை.

ஆனால் எமது இலக்கு என்ன? இன அழிப்பை நிறுவுவதா? எமக்கான அரசியல் தீர்வை பெறுவதா?

இன அழிப்பு என்பது நிறுவப்படுவது கஸ்டம். அப்படியே நிறுவினாலும் அதில் நான் மேலே சொன்ன நாடுகள் எல்லாம் இழுபடும். குறிப்பாக இந்தியா, தனது கோடிக்குள் ஒரு இனப்படுகொலை நடக்க கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது நிறுவப்படும்.

அப்படி நடக்க அவர்கள் விடுவார்களா? ஒரு போதும்மில்லை.

போர்குற்றம் எனும் போது, அதில் இவர்களிடம் பெரிதாய் பொறுப்புக்கூறல் இராது. பிரச்சினை இலங்கை அரசோடும் புலியோடும் மட்டுப்படும்.

இதை பாவித்து ஒரு தீர்வை பெற முயற்சிப்பதே இப்போ நாம் செய்யக் கூடியது/வேண்டியது/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

=

எமக்கான அரசியல் தீர்வு சிங்களமக்களின் ஆதர‌வுடனும்,சிங்கள பா.உ களை அதிகம் கொண்ட பாராளுமன்றம் மூலம் தான் கிடைக்கும்.....சர்வதேசத்தின் ஆதர‌வுடன் ஒரு தீர்வு கிடைத்தாலும் அதை அதே பாராளுமன்றம் மூலம் ரத்து செய்யமுடியும்....நாம் இதை பலமுறை கண்டுள்ளோம்.....சிங்கள மக்களுக்கு என்னதான் அரசியல் வகுப்பு (சமஸ்டி,சம உரிமை,மாகாணசபைக்கு அதிகளவு அதிகாரங்களை கொடுத்தல் போன்றவை)எடுத்தாலும் அவ‌ர்கள் அப்பே ரட்ட கொள்கையிலிருந்து வெளிவரப்போவதில்லை....

சிறிலங்காவில் இனவழிப்பு நடைபெற்றது என்ற ஒரு வாசகம் ஐ.நா.சபையில் பதிவிடக்கூடாது என்றபடியால் தான் இன்று சிங்கள அரசியல் தலைவர்களும்,இந்தியாவும் அரசியல் தீர்வு என்று ப‌கிரங்கமாக மேடைகளில் பேசுகின்றனர்.அரசியல் தீர்வு மூலம் இனவழிப்பு நடைபெறவில்லை என்று நிறுவுதற்கு முயற்சி செய்கிறார்கள்....அதுதான் நட‌க்கும் ....ஆனால் அந்த அரசியல் தீர்வை பாராளுமன்றம்,உச்சநீதிமன்றம் போன்றவற்றால் இரண்டு மூன்று வருடங்களில் செயலற்றதாக்க முடியும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, putthan said:

=

எமக்கான அரசியல் தீர்வு சிங்களமக்களின் ஆதர‌வுடனும்,சிங்கள பா.உ களை அதிகம் கொண்ட பாராளுமன்றம் மூலம் தான் கிடைக்கும்.....சர்வதேசத்தின் ஆதர‌வுடன் ஒரு தீர்வு கிடைத்தாலும் அதை அதே பாராளுமன்றம் மூலம் ரத்து செய்யமுடியும்....நாம் இதை பலமுறை கண்டுள்ளோம்.....சிங்கள மக்களுக்கு என்னதான் அரசியல் வகுப்பு (சமஸ்டி,சம உரிமை,மாகாணசபைக்கு அதிகளவு அதிகாரங்களை கொடுத்தல் போன்றவை)எடுத்தாலும் அவ‌ர்கள் அப்பே ரட்ட கொள்கையிலிருந்து வெளிவரப்போவதில்லை....

சிறிலங்காவில் இனவழிப்பு நடைபெற்றது என்ற ஒரு வாசகம் ஐ.நா.சபையில் பதிவிடக்கூடாது என்றபடியால் தான் இன்று சிங்கள அரசியல் தலைவர்களும்,இந்தியாவும் அரசியல் தீர்வு என்று ப‌கிரங்கமாக மேடைகளில் பேசுகின்றனர்.அரசியல் தீர்வு மூலம் இனவழிப்பு நடைபெறவில்லை என்று நிறுவுதற்கு முயற்சி செய்கிறார்கள்....அதுதான் நட‌க்கும் ....ஆனால் அந்த அரசியல் தீர்வு பாராளுமன்றம்,உச்சநீதிமன்றம் போன்றவற்றால் இரண்டு மூன்று வருடங்களில் செயலற்றதாக்க முடியும்...

இதற்கு நீங்கள் காட்ட கூடிய இரண்டு உதாரணங்கள் உளன.

1) சோல்பெரியாப்பின் 29 ம் பிரிவை, 1வது குடியரசு யாப்பு அகற்றியது

2) தற்காலிக வடக்கு-கிழக்கு இணைப்பை உச்சநீதி மன்றம் அகற்றியது.

இதில் 1மாவது நடக்கும் போது, இலங்கை பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சனையாக இருக்கவில்லை. தவிரவும் "கோடீஸ்வரன்" வழக்கு மற்றும் மலையக மக்கள் வாக்குரிமை பறிப்பு, சிங்களம் மட்டும் சட்டங்கள் எடுத்து காட்டுவது போல, 29 ம் பிரிவு அமலில் இருந்த போதே தமிழருக்கு எதிரான செயல்கள் நடக்கவே செய்தன. 

2மாவது - சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி இணைக்கும் மட்டுமான ஒரு தற்காலிக ஏற்பாடு. இந்திய இலங்கை, ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொண்டு, முஸ்லீம்களின் வகிபாகத்தை ஏற்று அவர்களுக்குரிய பங்கை கொடுத்து, கிழக்கில் இருந்து விரட்டப்பட்ட தமிழரை ஓரளவுக்கு மீளகுடியமர்த்தி, பிரபா-அஸ்ரப் காலத்தில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தி, இதை நிரந்தரமாக்கியிருந்தால், இணைப்பை துண்டிப்பது, இலகுவில் முடிந்திராது.

ஆனால் இப்போ எங்களுக்கே புரிகிறது, வடக்கு-கிழக்கு இணைப்பு, என்பது முஸ்லீம்களின் பங்களிப்பின்றி சாத்தியமில்லை என்பது.

ஆனாலும் எல்லா தமிழர் ஆதரவு நகர்வுகளும் பின் வாபஸ் பெறப்பட்டன என்பதில்லை. வத்தலோ தொத்தலோ 13ம் திருத்தமும் அதுதந்த மாகாணசபையும் இன்னும் இருக்கிறது. குத்துயிரும் குலையுயிருமாய் என்றாலும் தமிழ் அரச கரும மொழியாய் இருக்கிறது.

60 களில் எந்த ஆட்சி அதிகாரமும் இல்லாமல், சிங்கள ஓன்லிக்கு முகம் கொடுத்து, தமிழ் மொழியே இலங்கையில் அழித்தொழிக்கப் பட்டுவிடுமோ? என்ற நிலையோடு ஒப்பிடும் போது, இது நிச்சயமாக ஒரு முன்னேற்றமே.

பெரும்பான்மைதுவம் என்பது ஜனநாயகம் அல்ல.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் விருப்புப்படி, சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட்ட, ஒரு நிர்வாக அமைப்பை நிறுவுதல்.

பெரும்பான்மைதுவம் என்பது -தனியே எண்ணிக்கையில் கூடியோர், தம்விருப்பை ஏனையோர் மீது திணிப்பது.

இலங்கையில் இதுவரை நடந்தது ஜனநாயகம் அல்ல, பெரும்பான்மைதுவம்.

தமிழர், ஓரினச்சேர்கையாளர், கிறீஸ்தவர், மாற்றுத்திறனாளிகள் என பல்வகைப்பட்ட சிறுபான்மைகள் வஞ்சிக்கப் பட்ட ஒரு ஆட்சிமுறையே அங்கு நிலவியது, நிலவி வருகிறது.

இந்த முறை அரசியலமைப்பு ஆக்கத்தில், இவ்வாறு பெரும்பான்மைதுவம் முன்னிலை பெறுவதை தடுக்கும் சில பொறிமுறைகளை உள்ளடக்கி, சர்வதேச ( குறிப்பாக இந்திய) மேற்பார்வையில், இவை மீளப்பெறாமையை உறுதிப் படுத்த முடியும்.

ஆயுதப்போராட்டம் தோற்றுப்போன நிலையில், இதை முயற்சி செய்து பார்ப்பதை தவிர, எமக்கு வேறு தெரிவுகள் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

நீங்கள் கூறிப்பிட்ட‌"மீளப்பெறாமை"என்பது மிகவும் முக்கியமானது ...இதற்கு யார் உத்தரவாதம் அழிப்பது....இதுதான் இன்று தமிழ்மக்களுக்கு பயம் தரும் ஒரு செயல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு உத்தரவாதம், அதிகாரபூர்வமாக வெளிநாடு ஒன்றில் இருந்து வந்தால், எதிர்காலத்தில் அந்த உத்தரவாதத்தை இலங்கை மீறினால், அந்த வெளிநாடு தலையிடலாம் என்றாகும்.

இதற்கு உண்மையில் தன்மானம் உள்ள எந்த நாடும் ஒத்துக்கொள்ளாது.  ஆனால் இலங்கை இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுளது. இனி அப்படி ஒரு முட்டாள்தனத்தை இலங்கை செய்யாது, அப்படி செய்யும் அவசியமும் அவர்களுக்கு இல்லை. தவிர தான் தவிர வேறு யாரும் இப்படி ஒரு வகிபாகம் எடுக்க இந்தியாவும் விடப்போவதில்லை.

என்னை பொறுத்த மட்டில் நாம் 2 வழிகளில் மீளப்பெறாமையை உறுதிப்படுத்தலாம்.

1) எந்த தீர்வுக்கும் அடிப்படை 87ம் ஆண்டு ஒப்பந்தம் என்பதின் மூலம், இந்தியாவுக்கு ஏலவே இருக்கும் உத்தரவாதி ஸ்தானத்தை உறுதிப்படுத்தி, இந்தியா மீது, தமிழகத்தின் ஆளுமையை சரிவரப் பயன்படுத்தி, மீளப்பெறாமையை உறுதி செய்தல்.

2) ஏற்படுத்த படும் அரசியலமைப்பில் மாகாணத்தின் அதிகாரங்கள், அதிகார வரம்புகள் கேள்விக்கு இடமின்றி வரையறுக்கப் படவேண்டும். பின் முதலமைச்சர்கள் மட்டும், பிரதமர்/ஜனாதிபதியின் கீழ் கூடும் ஒரு பாராளுமன்ற மேல் சபையை நிறுவலாம். இந்த சபையில் இருக்கும் ஒவ்வொருவரும் ஏற்றால் மட்டுமே மாகாணத்துக்கு பகிரப்பட்ட அதிகாரங்களை திரும்ப பெறமுடியும். நீதிமன்று இதில் தலையிட முடியாது என்று வரையறுக்கலாம்.

இப்படி பல இன்னொவேட்டிவ் முறைகளை கையாள முடியும்.

Link to comment
Share on other sites

37 minutes ago, goshan_che said:

ஜனநாயக முறைப்படி அந்த மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி மட்டுமே மீளப்பெற முடியும் என்று வைத்தால் இன்னும் நல்லது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.