Jump to content

கூகுள் போட்டோஸில் புகைப்படத் தொகுப்பு


Recommended Posts

Barack Obama

இணையத் தேடல்பொறி கூகுள், புதிய பயனுள்ள இற்றைப்படுத்தலை கூகுள் போட்டோஸ் சேவையில் கடந்த 22.03.2016 செவ்வாய்கிழமை அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

மேற்படி சேவையின் மூலம், நிகழ்வொன்றினையடுத்தோ அல்லது பயணமொன்றினையடுத்தோ பயனரின் சார்பில் தானாகவே புகைப்பட தொகுப்பு (Album) ஒன்று உருவாக்கப்படும். உருவாக்கப்படும் மேற்படி தொகுப்பில் (Album), உங்களது சிறந்த புகைப்படங்களின் தொகுப்புடன், நீங்கள் எங்கு சென்றவர்கள் என்று ஞாபகப்படுத்தும் முகமாக, எவ்வளவு தூரம் நீங்கள் பயணித்தீர்கள் அல்லது நீங்கள் எங்கு பயணித்தீர்கள் என்ற தகவல்களும் காணப்படும். இந்தப் புதிய வசதியை, “smarter albums” என கூகுள் பெயரிட்டுள்ளது.

இந்த வசதி பற்றி உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். ஏனெனில், கூகுள் போட்டோஸ், முன்னர் வழங்கிய “Assistant” என்ற தெரிவை ஒத்ததே இதுவாகும். Assistant தெரிவின் மூலம், உயிரூட்டும் GIF போன்ற புகைப்படங்களை உருவாக்க முடிந்ததுடன் photo montage, கதை (Stories) களையும் உருவாக்க முடிந்திருந்தது. இந்நிலையில், புதிய அல்பம் ஆனது கதைகளையே (Stories) பிரதீயீடு செய்கிறது. இதேவேளை, தொகுப்பு (Album) உருவாக்கப்பட்டவுடன், அதை பயனர்களுக்கு கூகுள் பரிந்துரைக்கும். அதன்போது, பயனர்கள் அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும். உதாரணமாக, தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் கீழ் குறிப்புக்களை இட்டுக் கொள்ளலாம். மேற்கூறிய இற்றைப்படுத்தலானது, அன்ட்ரொயிட் மற்றும் ஜஓஎஸ்( iOS) இயங்குதளத்திலும் வெளியாகியுள்ளது.

http://www.nanilam.com/?p=8888

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.