Jump to content

கடல் வழிக்கால்வாய்


Recommended Posts

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
.........இயற்கையோடு ஓட்டபந்தையம் .......

^^^^^^^^^^^^^^^^^

எனக்கும் இயற்கைக்கும் ....
ஓட்டப்பந்தையம் ......
எல்லை கோட்டை தொடுவதில் ....
கடும் போட்டி ......!!!

போட்டியின் தொடக்கமே ....
இயற்கை முன்னணி பெற்றது ....
சற்று என்னை திரும்பி பார்த்து ....
உன்னை படைத்த என்னோடு ....
உனக்கு போட்டியா ...?
தோல்வியை ஒப்புக்கொள் ...
நான் விலகி விடுகிறேன் .....!!!

நான் விடவில்லை ....
என் முழு முயற்சியையும் .....
பயன்படுத்தி இயற்கையை ....
சற்று முந்திக்கொண்டேன் .....
நானும் சளைத்தவனில்லை ....
திரும்பி பார்த்து சொன்னேன் ....
படைத்தது நீயாக இருக்கலாம் ....
உனக்கு படைக்கத்தான்தெரியும் ....
முயற்சிக்க தெரியாது .....!!!

இன்னும் நீ ஒன்பது கோள்...!
உன்னால் பெரிதாகவும் முடியல்ல ....
சிறிதாகவும் முடியல்ல .வேகத்தை ...
கூட நீ இன்னும் மாற்றல்ல என்றேன்...
இயற்கை மௌனமானது ....!!!

திடீரென எங்களின் பின்னான் ....
பலத்த காற்று வீச இயற்கை ....
வேகமாக முன்னேறியது -நான்...? 
பஞ்சல்ல -மனிதன் -காற்றோடு ...
போக முடியாது ......!!!

இயற்கை என்னை ஏளனமாக ....
பார்த்தது - புரிகிறதா என்பலம் ...?
அதேநேரத்தில் மீண்டும் ஒரு ....
பலத்த காற்று இப்போ எங்களுக்கு ....
முன்னாள் வீசியது -இயற்கை ...
எனக்கு பின்னால் சென்றுவிட்டது .....!!!

ஏய் இயற்கையே ...
உனக்கு ஆக்கவும் அழிக்கவும் ...
முடியும் - சொந்த முயற்சியால் .....
மீள முடியாது . மனிதனால் தான் ....
மீள உருவாக்கும் திறன் இருக்கிறது ....!!!

எல்லை கோட்டில் .....
இயற்கை சொன்னது ....
மனிதா நீ கூறிய 
அனைத்தையும் -நான் 
ஏற்கிறேன் -ஆனால் 
இருவருக்கும் தோற்றங்கள் ....
வேறுபடலாம் ஆனால் இருவரும் ...
இயற்கையே .......!!!

நீயும் நானும் பயணிக்கும் 
கால்வாய்கள் வேறுபடுகின்றன ....
சங்கமம் கடல் ஒன்றே தான் ....!!!

&
கடல் வழிக்கால்வாய் 
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......

^^^^^^^^^

என் விஞ்ஞான அறிவை ....
பயன்படுத்தி இறைவனோடு ...
பேசுவதற்கு  தொலைபேசியை ...
கண்டு பிடித்தேன் - பலமுறை ...
முயற்சித்தேன் மறுமுனையில் ...
யாருமில்லை ......!!!

நீங்கள் அழைக்கும் நபர் 
வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ...
சற்று நேரத்தின் பின் தொடர்பு ...
கொள்ளவும் என்று கூட ....
மறுமுனையில் இருந்து வரவில்லை ....
இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!!!

என்ன ஆச்சரியம் ....
ஒருநாள் மறுமுனையில் இறைவன் .....
யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ...
நீதான் பேசுகிறாய் என்றார் இறைவன் ....
எத்தனை உண்மையான வசனம் அது ....!!!

இறைவா தயவு செய்து ...
இணைப்பை துண்டித்துவிடாதே....
உன்னிடம் நிறைய கேள்வி இருக்கு ....
நீ துண்டிக்கும் வரையும் நான் ...
துண்டிக்கபடமாட்டேன் என்றார் ...
இறைவன் ......!!!
எத்தனை உண்மையான வசனம் அது ....!!!

உன் படைப்பில் ஏன் இத்தனை ....
வேறுபாடுகள் - அறிவாளி ...
அறிவிலி - உயர்ந்தவன் தாழ்ந்தவன் ...
படித்தவன் படிக்காதவன் ....
இன்னும் இன்னும் எத்தனையோ ....
ஏன் இத்தனை வேறுபாடுகள் ....?

இறைவன் சிரித்துகொண்டு ...
சொன்னார் என் படைப்பில் ...
வேறுபாடு என்றும் இல்லை ...
உங்கள் எண்ணத்தாலும் ....
செயலாலும்தான் இத்தனை ...
வேறு பாடுகள் நீங்கள் தான் ...
வேறு படுத்தினீர்கள் 
வேறுபடுகிறீர்கள் என்றார் ....!!!

இப்போதும் பார் நீ கூட 
இறைவனோடு பேசுகிறாய் ...
என்று உன்னோடு ஆழ்மனதோடு ....
பேசுகிறாய் -கண்டு பிடித்துவிட்டாய் ....
கடலின் பாதையை  .....!!!
ஒன்றுமே சொல்லாமல் இறைவன் ...
போய் விட்டார் - மன்னிக்கவும் 
என்னுள் அடங்கிவிட்டார் .....!!!
எத்தனை உண்மையான வசனம் இது ....!!!
&
கடல் வழிக்கால்வாய் 
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
.........சிலுவை சுமக்கும் மனிதன்.......

^^^^^^^^^^^^^^^^^

மனிதனின் எல்லா செயல்களும் ....
சிலுவையாக மாறுகின்றன ....
எல்லா விளைவுகளும் ஆணியாக....
அறையப்படுகின்றன....!!!

குடும்பம் என்னும் உறவை ....
சிலுவையாய் சுமக்கிறான் ....
அன்பு என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

கல்வி, பதவி, என்னும் ....
சிலுவையை சுமக்கிறான் .....
அதிகாரம் என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

உழைப்பு, வருமானம் எனும் ...
சிலுவையாய் சுமக்கிறான் ....
விரத்தி நோய் என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

போட்டி வெற்றி என்னும் ....
சிலுவையாய் சுமக்கிறான் ....
பகைமை ,பொறாமை ,ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!!!

அத்தனை சுமைகளையும் ....
சுமக்கும் மனிதனுக்கு ....
விடுதலை ஒன்றே விடுதலை ....
ஓடும் புளியம்பழம் போல் ....
வாழ்வதே விடுதலை .....!!!

&
கடல் வழிக்கால்வாய் 
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
.........ஒரு மரணம் மறு ஜனனம்  .......

^^^^^^^^^^^^^^^^^

மழைத்துளி மரணமே ....
பயிரின் ஜனனம் ....
பயிரின் மரணமே ....
வாழ்க்கை ஜனனம் ....!!!

பூவின் மரணமே ....
காயின் ஜனனம் ....
காயின் மரணமே ....
கனியின் ஜனனம் ....!!!

சூரியனின் மரணமே ....
சந்திரனின் ஜனனம் ....
சந்திரனின் மரணமே ....
பகலின் ஜனனம் ....!!!

பழமையின் மரணமே ....
நவீனத்தின் ஜனனம் ....
நவீனத்தின் மரணமே ....
உலக அழிவின் ஜனனம் ....!!!

அறியாமையின் மரணமே .....
அகந்தையின் ஜனனம் ...
அகந்தையின் மரணமே .....
ஞானத்தின் ஜனனம் .....!!!

&
கடல் வழிக்கால்வாய் 
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
.........என்னை உணர்பவன் செல்வந்தன்  .......

^^^^^^^^^^^^^^^^^

நான் உங்கள் நீர் ....
பேசுகிறேன் .....
உலகின் தோற்றமும் ....
உலக முடிவும் ....
நானாக இருக்கிறேன் ....!!!

என் 
உடன் பிறப்புகளே ...
நிலம் காற்று நெருப்பு ஆகாயம் .....
என் குழந்தைகளே ....
நதி, அருவி,குளம் ,குட்டை ...
கிணறு ,ஓடை ,பள்ளம் ....!!!

நான் 
மகிழ்ச்சியாய் இருந்தால் ... 
பருவ மழை ....
கோபமாய் இருந்தால் ....
சூறாவளி.....
வெறுப்படைந்தால் ...
சுனாமி ...................!!!

என் 
சகோதரி நிலம் போல் ....
நானும் ஒரு தனி உலகம் ....
அவள் மனிதன் ,மிருகம் ...
மரங்கள் .பறவை .ஊர்வன ...
என்பவற்றை படைத்து ...
காக்கிறாள் - நானும் ...
நீருலகத்தை படைத்து ....
காக்கிறேன் .....................!!!

என்னை பற்றி ....
கொஞ்சம் சொல்கிறேன் ...
அருவிதான் என் கூந்தல் ...
ஊற்றுதான் என் ஆத்மா ....
நதி என் வாழ்க்கை நெறி ....
கடல் என் கருப்பை .....
நீராவி தற்காலிக மரணம் ....!!!

நீர் பறவைகளுக்கு - நான் 
விளையாட்டு மைதானம் ....
மனிதனுக்கு வாழ்வாதாரம் ....
மிருகங்களுக்கு தாக சாந்தி ....!!!

மனிதா ....
வாழ்வாதாரமே நான்தான் ....
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் ...
கோபப்படுதுகிறாய்.....
என் வன்மை குணமே ....
பனிகட்டி அதனோடு சீண்டாதே ...
என் சகோதரி நிலத்தை ....
கோபப்படுத்தாதே.- புவியை ...
வெப்பமாக்காதே..........!!!

நான் உருகினால் ...
நீங்கள் அனைவரும் இல்லை ....
நான் இரக்கமானவள் 
என்னை உருக்கி விடாதீர் ......
உலகின் பெரும் செல்வம் ....
தண்ணீர் என்பதை எவன் ....
உணர்கிறானோ அவனே ....
செல்வந்தன் இது உறுதி ....!!!

================
கடல் வழிக்கால்வாய் 
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன்
=================
 

Link to comment
Share on other sites

  • 2 months later...

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
.........இருட்டு தான் அழகு  .......

^^^^^^^^^^^^^^^^^
எல்லோரும் வெளிசத்தை ....
பார்த்தே மகிழ்ச்சி அடைகிறோம் ......
காலையில் சூரிய ஒளி அழகு ....
மதிய சூரிய ஒளி இன்னுமொரு அழகு .....
அந்திவான சூரிய ஒளி அழகிலும் அழகு .....
இரவு நேர நட்ஷத்திரங்கள் அழகு ....!!!

ஆலயங்களில் தீப ஒளி அழகு ....
வீடுகளில் குத்து விளக்கு அழகு .....
திரை அரங்கில் வெள்ளி திரை அழகு ....
ஆளுக்காள் போட்டிபோடும் ....
அலங்கார விளக்குகளும் அழகு ...
செயற்கை மின் குமிழ்களும் அழகு .....!!!

வெளிசத்தில் அழகுதான் அதிகம் .....
இருளில் அழகும் அதிகம் .....
இருளில்தான் அறிவும் உதயம் .....
நாம் பிறக்கமுன் கருவறை இருள் ....
விதை முளைக்கமுன் விதை இருள் .....
கருவறையில் சாமி  இடமும் இருள் ....
கல்லறையும் இருள் தான் .....!!!

வெளிசத்தில் தான் வேறுபாடுகள் .....
வெளிசத்தில் பார்க்கும்போதே ....
குட்டை  நெட்டை வேறுபாடு .....
அழகு  அசிங்கம் வேறுபாடு ....
இத்தனை ஏற்றத்தாழ்வுகள் ....
இருளுக்கு எல்லாம் சமத்துவம்.....!
இருளில் மனிதனும் ஒன்றுதான் ....
இருளில்கதிரையும் ஒன்றுதான் ...
பறவையும்  மிருகமும் ஒன்றே.....
இருள் என்பதே சமத்துவம் தான் ....!!!

இருள் .........
இருப்பதாலேயே வெளிச்சம் ...
அழகு பெறுகிறது .....
அழகாக இருப்பதை விட ....
அழகாக்குபவையே  அழகு ....
ஆதலால் தான் இருள் அழகு ......!!!

&
கடல் வழிக்கால்வாய் 
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன்


 


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.