கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 9, 2016 (edited) இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி @ கடத்தல்காரன் கையில் பணம் வன அதிகாரிகள் பாராமுகம் ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம் @ காடழிப்பு ஆற்று நீர் ஆவியானது புலம்பெயரும் அகதியானது கொக்கு @ Edited March 9, 2016 by கவிப்புயல் இனியவன் Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 10, 2016 குடும்ப தலைவர் மரணம் ஒன்பது பிள்ளைகளும் ஓலம் கருத்தடை செய்த நாய் சாபம் சட்டம் ஒரு இருட்டறை கருவறை இருட்டறை சிசு மர்மக்கொலை வியர்வை சிந்தாமல் வேண்டாம் வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் ஊதியம் கண் வரைதல் ஓவிய போட்டி முதல் பரிசு பெற்றான் மாணவன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொட்டிக்குள் இலை குவிகிறது தூய்மையானது சாப்பாட்டுக்கடை ஏழை வயிறு நிரம்பியது பூமி உருண்டை அதுதான் சிறிதாக இருக்கிறது தொட்டிக்குள் மீன் வெற்றி கிடைக்குவரை கட்சி மீது விசுவாசமாய் இரு தேர்தல் ராஜ தந்திரம் 1 Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 12, 2016 வானத்தில் கருமேக கூட்டம் வெறுப்போடு பார்கிறார் நடைபாதை வியாபாரி @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 11 Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 12, 2016 வெற்றியை காட்டும் இருவிரல்கள் தலை குனியும் மற்றைய விரல்கள் விரல் நடுவில் சிகரட் @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 12 நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும் நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு கலக்கத்தோடு இருக்கும் மரம் @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 13 Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 12, 2016 கொளுத்தி எரியும் வெய்யில் தாகம் தீர்க்கும் பாதசாரிகள் இளநீர் வியாபாரில் வியர்வை மழை @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 14 Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 13, 2016 தெருவின் உடல் குளிர்மையானது தாகத்தோடு காத்திருகிறது குடம் குடிநீர் வண்டி @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 15 @ வாழ்க்கை நெளிவும் சுழிவும் ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது நதிகள் @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 16 @ சாதிகள் வேறுபட்டவை கூட்டு குடும்பமாய் வாழ்கிறார்கள் பூமாலை @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 17 Share this post Link to post Share on other sites
கீர்த்தி 3 Report post Posted March 14, 2016 On 10. März 2016 at 10:25 AM, கவிப்புயல் இனியவன் said: குடும்ப தலைவர் மரணம் ஒன்பது பிள்ளைகளும் ஓலம் கருத்தடை செய்த நாய் சாபம் சட்டம் ஒரு இருட்டறை கருவறை இருட்டறை சிசு மர்மக்கொலை வியர்வை சிந்தாமல் வேண்டாம் வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் ஊதியம் கண் வரைதல் ஓவிய போட்டி முதல் பரிசு பெற்றான் மாணவன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொட்டிக்குள் இலை குவிகிறது தூய்மையானது சாப்பாட்டுக்கடை ஏழை வயிறு நிரம்பியது பூமி உருண்டை அதுதான் சிறிதாக இருக்கிறது தொட்டிக்குள் மீன் வெற்றி கிடைக்குவரை கட்சி மீது விசுவாசமாய் இரு தேர்தல் ராஜ தந்திரம் சிந்திக்க வைக்கும் கவிதை. 1 Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 14, 2016 5 hours ago, கீர்த்தி said: சிந்திக்க வைக்கும் கவிதை. நன்றி நன்றி Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 17, 2016 இயற்கை கொடுத்தது பால் வடிவில் நஞ்சுப்பொருள் கள்ளிச்செடி ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் Share this post Link to post Share on other sites
கீர்த்தி 3 Report post Posted March 17, 2016 5 hours ago, கவிப்புயல் இனியவன் said: இயற்கை கொடுத்தது பால் வடிவில் நஞ்சுப்பொருள் கள்ளிச்செடி உண்மைதான் .. நல்லாருக்கு .. தொடர்ந்து எழுதுங்கள் .😀 1 Share this post Link to post Share on other sites
suvy 4,192 Report post Posted March 18, 2016 புயல், வீசும் கவிதைகள் மணம் வீசுது தென்றலாய்....!! தொடருங்கள்...! 1 Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 21, 2016 On 3/18/2016 at 2:06 AM, suvy said: புயல், வீசும் கவிதைகள் மணம் வீசுது தென்றலாய்....!! தொடருங்கள்...! மிக்க நன்றி நன்றி ரசனையுடன் கருதுரத்தமைக்கு நன்றி On 3/17/2016 at 1:50 AM, கீர்த்தி said: உண்மைதான் .. நல்லாருக்கு .. தொடர்ந்து எழுதுங்கள் .😀 மிக்க நன்றி நன்றி ரசனையுடன் கருதுரத்தமைக்கு நன்றி Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 21, 2016 தொண்டன் தீக்குளிப்பு தலைவர் சோகத்தில் மூழ்கினார் கட்சி ஒரு வாக்கினால் தோல்வி ^^^ காகித துண்டுக்கு ஆயிரம் பொற்காசுகள் வாக்கு சீட்டு விற்பனை ^^^ பொய்மையே வெல்லும் உண்மை சிறையில் அடைக்கப்படும் அரசியல் ^^^ அரசியல் ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன் Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 21, 2016 அருந்ததி பார்த்தவள் அருந்தி இறந்தாள் வரதட்சனை கொடுமை ^^^ வயிற்றில் சுமந்தவளால் கைகளால் சுமக்க முடியவில்லை புத்தகப்பை ^^^ வாழ்கையும் இழந்தாள் தொழிலையும் இழந்தாள் விதவை பூக்காரி ^^^ சமூக அவலக்ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன் Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 25, 2016 ஹைக்கூ கவிதை ----- சூரியன் உதயமாகிறான் கோழி சேவலின் வாயை மூடியது அருகில் இறைச்சி வியாபாரி ^ கவிப்புயல் இனியவன் Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted March 28, 2016 மூக்கை பொத்துகிறான் மனம் முழுக்க குப்பையுடன் சாக்கடை சிரிக்கிறது ^ஆன்மீக ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் வானத்து நீரை வடிகட்டி உள்ளே எடுக்கிறது ஓட்டை குடிசை ^ வறுமை ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் நச்சுகளை உள் வாங்கி அமிர்தத்தை வெளிவிடும் அற்புதம் பசுமை மரங்கள் ^ இயற்கை ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் ஆசீர் வாதம் பெற்றவள் ஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள் விதவை பெண் ^சமூக ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் சிவப்பாய் வெளியேறுகிறது வியர்வை வளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது ஊழியச்சுரண்டல் ^பொருளாதார ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted April 4, 2016 ஹைக்கூகவிதை ---- மிதிபட்டது போதும் அடிமை தனத்திலிருந்து விடுதலை ஒற்றை செருப்பு @ கவிநாட்டியரசர் கே இனியவன் Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted April 4, 2016 ஒரே இனத்துக்குள் கலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம் ஒற்றை செருப்பு @ கவிநாட்டியரசர் கே இனியவன் முதுமை வாழ்க்கை ஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை ஒற்றை செருப்பு @ கவிநாட்டியரசர் கே இனியவன் ஹைக்கூ கவிதை 1 Share this post Link to post Share on other sites
suvy 4,192 Report post Posted April 4, 2016 ஆடும் அலுமாரியை பிடித்து நிறுத்தும் ஒற்றைச் செருப்பு....! கையில் வந்து ரோமியோ கன்னத்தை முகர்ந்தது ஒற்றைச் செருப்பு....! 2 Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted April 4, 2016 பிறப்பில் இரட்டை பிறவிகள் கவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில் ஒற்றை செருப்பு @ கவிநாட்டியரசர் கே இனியவன் ஹைக்கூ கவிதை Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted April 4, 2016 ஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே ஒற்றையாக இருந்தாலோ தெருவில் வாழ்கை செருப்பின் வாழ்கை @ கவிநாட்டியரசர் கே இனியவன் ஹைக்கூ கவிதை Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted April 5, 2016 பஞ்ச பூத ஹைகூக்கள் --- கண்ணுக்கு தெரியாத மாயாவி மந்திரவாதியையும் வாழவைக்கிறது காற்று @ பகுத்தறிவை நிரூபித்தது உரசனின் மூலம் விரிசல் ஏற்படும் நெருப்பு @ எனக்கு கீழே பொன் எனக்கு மேலே விண் மண் @ விஞ்ஞானிகள் ஆராய்வார்கள் மெய்ஞானிகள் உணர்வார்கள் விண் @ உலகின் தோற்றக்காரணி உடலில் பெரும் காரணி நீர் @ கவி நாட்டியரசர் கே இனியவன் Share this post Link to post Share on other sites
Mayuran 174 Report post Posted April 6, 2016 (edited) அருமை. தொடருங்கள். Edited April 6, 2016 by Mayuran Share this post Link to post Share on other sites
புங்கையூரன் 3,329 Report post Posted April 6, 2016 (edited) 14 hours ago, கவிப்புயல் இனியவன் said: பஞ்ச பூத ஹைகூக்கள் --- கண்ணுக்கு தெரியாத மாயாவி மந்திரவாதியையும் வாழவைக்கிறது காற்று @ பகுத்தறிவை நிரூபித்தது உரசனின் மூலம் விரிசல் ஏற்படும் நெருப்பு @ எனக்கு கீழே பொன் எனக்கு மேலே விண் மண் @ விஞ்ஞானிகள் ஆராய்வார்கள் மெய்ஞானிகள் உணர்வார்கள் விண் @ உலகின் தோற்றக்காரணி உடலில் பெரும் காரணி நீர் @ கவி நாட்டியரசர் கே இனியவன் முகில்களைக் கலைத்து, ஓவியம் வரைகின்ற தூரிகை, காற்று! அடர் மரங்கள் எரிகையில், சிறு விதைகளின் முகிழ் திறக்கும், நெருப்பு! அரசனையும், ஆண்டியையும், ஆறடி நிலத்துக்குள் சமன் படுத்தும், மண்! நட்சத்திரங்களுக்கு, நடை பாவாடை விரிக்கும், விண்! இயற்கையின் களிப்பில், சிந்துகின்ற சிதறல்கள், நீர்! நானும் முயற்சித்தேன்...நன்றிகள் கவிப்புயல்! Edited April 6, 2016 by புங்கையூரன் 1 Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted April 6, 2016 5 hours ago, புங்கையூரன் said: முகில்களைக் கலைத்து, ஓவியம் வரைகின்ற தூரிகை, காற்று! அடர் மரங்கள் எரிகையில், சிறு விதைகளின் முகிழ் திறக்கும், நெருப்பு! அரசனையும், ஆண்டியையும், ஆறடி நிலத்துக்குள் சமன் படுத்தும், மண்! நட்சத்திரங்களுக்கு, நடை பாவாடை விரிக்கும், விண்! இயற்கையின் களிப்பில், சிந்துகின்ற சிதறல்கள், நீர்! நானும் முயற்சித்தேன்...நன்றிகள் கவிப்புயல்! அற்புதம் அற்புதம் இது முயற்சியல்ல அற்புத படைப்பு வாழ்த்துக்கள் 1 Share this post Link to post Share on other sites