Jump to content

கொலைக்களம்


Recommended Posts

எங்களை வரிசையாக நிற்க சொன்னார்கள்.

சேறு பூசிய எங்கள் உடம்பில் இடுப்பிற்கு கீழே மறைப்பதற்கான உள்ளாடையை தவிர எதுவுமே இல்லை. எந்த திசையை நோக்கி நிற்கிறோம் என்று கூட தெரியாமல் கண்கள் கட்டப்பட்டிருந்தன. வெறும் கால்களால் தடவியதில் நாங்கள் ஒரு சேற்று பகுதி நிறைந்த புற்தரையில் நிற்பதை உணர்ந்தேன்.

எங்களுக்கான வரிசைக்குப் பின்னே பெண்களை கண்கள் கட்டிய நிலையில் வரிசைப்படுத்தி இருந்தார்கள். அவர்களின் பரிதவிப்பான குரல்களும் அடுத்த நிலை தெரியாத தவிப்பும் அவர்களின் குரல்களில் ஒலித்தது மட்டும் காதுகளில் கேட்டு கொண்டிருந்தது.

எங்களை வரிசைபடுத்தியவர்கள் யாரோ ஒருவரின் கட்டளைக்காக காத்திருப்பது மட்டும் புரிந்தது. அது அவர்களின் பொறுப்பாளனாகவோ அல்லது அவர்களின் தலைவனாக கூட இருக்கலாம்.

தமிழில் தான் பேசினார்கள். சிலவேளைகளில் புரிந்தும் சில வேளைகளில் புரியாமலும் இருந்தது.

எனக்கு தெரிந்த நண்பர்களின் பெயர்களை அழைத்து, அழைப்பு பதிவை ஏற்படுத்தியதில் பெரும்பாலும் என் நண்பர்கள் அனைவரும் அந்த வரிசையில் இருந்தோம் என்பதை உணர்ந்து கொண்டோம்.

ஏதோ விபரீதம் நடக்கப்போவதை மட்டும் எங்கள் மனங்கள் அடித்து சொல்லியது. எது நடந்தாலும் நடக்கட்டும் இது தான் எங்கள் விதி என்று மனதை சாந்திபடுத்த முயன்று ஒவ்வொரு முறையும் தோற்று கொண்டே இருந்தேன்.

இப்போது கூட ஒரு முறை மோதி பார்த்தால் என்ன என்று என் ஆழ்மனம் கட்டளையிட்டு கொண்டிருந்தது. 

யாருடன் மோதுவது. எங்களை வரிசைபடுத்தியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. எந்த திசையில் ஓடுவது என்று கூட தெரியவில்லை. நாங்கள் மோதுவதற்கு பிந்திவிட்டோம்.

திடீர் சலசலப்பு. அவர்களின் பொறுப்பாளர் வந்திருக்கவேண்டும்.

அவரின் கட்டளை எங்களுக்கு கேட்கவில்லை. இருந்தும் பெண்களின் கூக்குரலில் இருந்து கட்டளை பிறப்பிக்கபட்டுவிட்டது என்று புரிந்து கொண்டோம்.

பெண்கள் கத்தி கொண்டு ஓடுவது எங்களுக்கு தெளிவாக கேட்டது. எந்த வெடிபொருளின் சத்தமும் கேட்கவில்லை.

 

 

 

 

 

பின்னொரு நாளில் பெண் நண்பிகள் சொல்லித்தான் தெரியும். அவர்களின் கண்கட்டுகளை அவிழ்த்து அரை நிர்வாணமான எங்களை நேரடியாக பார்த்தால் பகிடிவதையில் இருந்து அவர்களை விடுவிப்பதாக பொறுப்பாளரினால் (மூத்த வகுப்பு தலைவனால்) அவர்களுக்கு கட்டளை வழங்கபட்டிருந்தது.

சில பெண்கள் அப்படி பார்த்து பகிடிவதையில் இருந்து விடுதலையும் பெற்றிருந்தார்கள்.

 

- மொரட்டுவை பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற பகிடிவதை அனுபவத்தில் இருந்து 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் பல்கலைக் கழகத்துக்குப் போகவில்லை...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கம்பஸ் கதை இல்லை......விசயம் வேறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்கள் அப்படி பார்த்து பகிடிவதையில் இருந்து விடுதலையும் பெற்றிருந்தார்கள்.

 

முற்போக்கு சிந்தணையுள்ள பெண்கள் ....பகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசயம் குசா அண்ணெய் என்ட காதுக்குள்ள சொல்லுங்கோ!...சம்பவத்தை கதையாக எழுதிய விதம் எனக்குப் பிடிக்கவில்ல்லை

Link to comment
Share on other sites

கருத்திட்ட பச்சையிட்ட உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.