Jump to content

சீமானை எச்சரிக்கும் கிறிஸ்தவ அமைப்பு போஸ்டரால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு!


Recommended Posts

சீமானை எச்சரிக்கும் கிறிஸ்தவ அமைப்பு போஸ்டரால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

 

seeman%20350.jpgராமேஸ்வரம்: கிறிஸ்தவர்களை இழிவாக பேசியதாக, சீமானை கண்டித்து ராமேஸ்வரத்தில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,  கிறிஸ்தவ மதம் குறித்தும், அவர்களது புனித நூலான புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு குறித்தும் விமர்சனம் செய்து பேசியது, தற்போது 'வாட்ஸ் அப்'பில் வைரக பரவி வரும் நிலையில்,  சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சீமானின் பேச்சுக்கு எதிராக ராமேஸ்வரம் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சீமானின் உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் குதிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.

தற்போது ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் போஸ்டரில், ''பணந்தின்னி சீமானே மன்னிப்பு கேள்...

கிறிஸ்தவ மக்களின் புனித நூலான பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுகளை கேவலப்படுத்தியும், கிறிஸ்தவத்தின் அடிப்படை புனித ஆத்மார்த்த தத்துவமான 'திவ்ய நற்கருணை' உட்கொள்வதை 'பணந்தின்னி கிறிஸ்தவர்கள்' என இழிவுபடுத்தி பேசிவரும் தமிழ் உணர்வுகளை பணத்திற்காக அடகு வைக்கும் போலித்தமிழன் பகல் குடிகாரன் சீமானை காவல்துறையே.. தமிழக அரசே... கைது செய்" போன்ற வாசகங்களுடன் ராமேஸ்வரம் தீவு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளன.

poster%201%281%29.jpg

இந்நிலையில், இது குறித்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் நிர்வாகி போஸ்கோ நம்மிடம் கூறும்போது, ''கிறிஸ்தவ மதம் குறித்து விமர்சனம் செய்துள்ள சீமானின் செயல் மன்னிக்க முடியாதது. 3 ஆண்டுகளுக்கு முன்பே சீமான் இப்படி பேசி இருந்தாலும், அது இப்போதுதான் வெளியாகி உள்ளது. கிறிஸ்தவ மதத்தினரை அவமதிக்கும் சீமானின் இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்.

இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அப்படி பெறவில்லை என்றால், நாங்கள் அடுத்தக்கட்டமாக சீமான் உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோம்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/59405-christian-organizations-condemns-seeman.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களிடம் உள்ள வறுமை.. படிப்பறிவின்மையை பயன்படுத்தி.. மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ அமைப்புக்கள் மற்றும் இஸ்லாம் அமைப்புக்களை எல்லாம் தடை செய்யனும். மத வெறிக்கு.. போலி மதப் பிரசங்கங்களுக்கு.. மத மூட நம்பிக்கைகளில் பிழைப்பை ஓட்டுவதற்கு முடிவு கட்டாமல்.. ஒரு ஆரோக்கியமான அறிவு மயப்படுத்திய தமிழ் சமூகத்தை உருவாக்க முடியாது. அந்தப் பணியையும் நாம் தமிழர் அமைப்பு ஒருங்கே செய்வது அவசியம்.

ஒரு பழமையில் மூட நம்பிக்கையில் அறியாமையில் ஏழ்மையில்..கிடக்கும் சமூகத்திடம் மாற்றம் என்பதை தேடும் போது இப்படி ஆயிரம் சுவரொட்டிக்கள் முளைக்கும். அவற்றை எல்லாம் கடந்தால் தான் விரும்பும் சமூக மாற்றத்தை உண்டு பண்ண முடியும். உதுகளுக்கு அடிபணிந்தால்.. அந்த மக்களுக்கு தடைகளில் இருந்து விடிவே இல்லை. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 வருடங்களுக்குப்பின் விழித்திருக்கிறார்கள் என்றால் இதற்குள் ஏதோ அரசியல் இருப்பது போல்த்தான் தெரிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரம் காய்க்கத் தொடங்கினால் கல்லெறி விழுவது வழைமை தானே.

அலே லூயா கூட்டம் ரொம்ப பணக்கார கூட்டம்.சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து கூட்டம் எப்போதோ தொடங்கிவிட்டது 
கிறிஸ்தவ சீமானே !
உன்னை சிறையில் அடைப்போம் என்று 


இவர்களுக்கு இப்பதான் ஜெபம் முடிஞ்சு 
வெளியில் வந்திருக்கிறார்கள் போல் !

Link to comment
Share on other sites

சீமான் என்று ஒருவர் இருக்கின்றார் என்று இவர்களுக்கு தெரிந்ததே பெரியவிடயம் 

Link to comment
Share on other sites

இதபார்ரா.. சீமானின் இயற்பெயர் சைமன் என்றார்கள். இப்ப அந்த சைமன் கிறீஸ்தவர்களுக்கு எதிரியா? உங்க அக்கபோருக்கு ஒரு அளவேயில்லையா?! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, arjun said:

சீமான் என்று ஒருவர் இருக்கின்றார் என்று இவர்களுக்கு தெரிந்ததே பெரியவிடயம் 

 கருத்துப்பஞ்சம் அகோரமாக தாண்டவமாடுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்காந்து யோசிப்பாங்களோ ?

3 வருசத்துக்கு பிறகு?

கொஞ்ச நாள் இந்துத்துவா எதிர்த்தார்கள். முருகன் முப்பாட்டன் என்றவுடன் அவர்கள் அடங்க, புதிய கூட்டம்.

இவர்களை கவனிக்காமல் விடுவது தான், சீமான் செய்வது... செய்ய வேண்டியதும்..

20 hours ago, குமாரசாமி said:

 கருத்துப்பஞ்சம் அகோரமாக தாண்டவமாடுகின்றது.

கண்ணை மூடி, உலகம் இருட்டு  என்று எண்ணுவது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஒக்காந்து யோசிப்பாங்களோ ?

3 வருசத்துக்கு பிறகு?

கொஞ்ச நாள் இந்துத்துவா எதிர்த்தார்கள். முருகன் முப்பாட்டன் என்றவுடன் அவர்கள் அடங்க, புதிய கூட்டம்.

இவர்களை கவனிக்காமல் விடுவது தான், சீமான் செய்வது... செய்ய வேண்டியதும்..

கண்ணை மூடி, உலகம் இருட்டு  என்று எண்ணுவது...

கவலையை விடுங்கள் யேசு என் கொப்பாட்டன் எண்டு சீமான் இன்னொரு பல்டி அடிச்சாப் போச்சு.

பெரியார், திராவிடம், இலங்கைப் பெண்ணை மணம், கடவுள் மறுப்பு இப்படி சீமான் அடிக்காத பல்டிகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கவலையை விடுங்கள் யேசு என் கொப்பாட்டன் எண்டு சீமான் இன்னொரு பல்டி அடிச்சாப் போச்சு.

பெரியார், திராவிடம், இலங்கைப் பெண்ணை மணம், கடவுள் மறுப்பு இப்படி சீமான் அடிக்காத பல்டிகளா?

ஆகா, வந்துடாரையா, வந்துடாரு!!

இன்னைக்கு முழுக்க இங்கின தான் போல, தல லீவோ? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்காக  அவன் உரிமைக்காக போராடுற தமிழன் எல்லாம் 100% தூய்மையா இருக்கனுமாம் என்று சிலதுங்க சொல்லித் திரியுதுங்க. அது பிரபாகரன் சரி.. சீமான் சரி. ஆனால் தமிழனை தமிழ்நாட்டை முழுப் பொய்யன்களும்.. ஊழல் பெருச்சாளிகளும் ஆளும் போது இதுங்க வாழாமல் தான் கிடந்தன.

சீமான்  எதையும் ஒளிக்கவில்லையே. தான் கருணாநிதியை கூட ஒரு காலத்தில் ஆதரித்தேன்.. காங்கிரஸ் விசிறி என்று பகிரங்கமாகத்தானே சொல்கிறார். அந்தப் பக்குவம்.. போதும் சீமான் திறமையான ஒரு மக்கள் தலைமைத்துவத்தை வழங்க..!tw_blush:

பெரியார் என்கிற கன்னட இராமசாமியின் சில கருத்துக்களை ஆதரிக்கலாமே தவிர.. பெரியார் தமிழனுக்கு தலைவனும் அல்ல தந்தையும்  அல்ல. தலைவன் பிரபாகரனே என்று நாம் தமிழர் முழங்குவது தான் இஞ்ச சிலருக்கு ரெம்ப கடுப்பெடுக்க காரணம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டாரு பிரபாவின் செத்தவீட்டில் பந்தம் பிடிச்ச பேரன்.

பிரபா தன்னலமற்ற, கொள்கை உறுதியுடைய, ஊழல் கறை படியாத மனிதர் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

ஆனால் சீமான் ஒரு முன்னுக்குப் பின் முரணாக கதைக்கும் மொக்கிடாசு. மட்டுமில்லாமல் ராமதாசு திருமா போன்றோரே தம் சாதிக்காக பேசினரே தவிர மற்றைய சாதியை தூற்றி அரசியல் செய்யவில்லை.

பிரபாவோடு நாம் சீமானை ஒப்பிடுவதில்லை. அது மடைத்தனம். சேகுவாராவோடு வீரவண்சவை ஒப்பிடுவதைப் போல்.

அவர்தான் தன்னை பிரபாவின் தம்பி என்று சொல்லித்திரியுறார்.

நாமு,

மக்கள் சேவையில் லீவு ஏது? கால நேரம் பாக்காமல் எழுத வேண்டியான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் பிரபாவை திட்டிச் சாகடிச்சு செத்த வீடும் செய்துவிட்டு.. இப்போ சீமானை திட்ட பிரபாவை...  முடியல்ல.

இதுங்க தாங்க குத்துக்கரணம் அடிப்பதை மற்றவர்கள் மீது சூடி மகிழ்கின்றன.

சீமான் சாதியக் கட்டமைப்பை எதிர்க்க.. மக்கள் மத்தியில்.. அதன் விரிவாக்கம் எவ்வளவு இருக்கென்று இனங்காட்ட வேண்டியது அவசியம். அதற்காக அவர் மக்கள் உணரப் பேசும் சில பேச்சுக்களை வைச்சு.. சீமான் சாதிவெறி பேசுறார் என்பது கேவலமான பிற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடு. 

இதுங்க திட்ட என்று ஆரம்பிச்சிட்டா முன்னப் பின்ன எழுதினதுகளை எல்லாம் மறந்து திட்டுவதே குறியாக இருக்குங்கள் போல. 

எப்படி இதுங்க எல்லாம் சமூகத்தில வாழுதுங்களோ. :rolleyes:tw_blush:

 

8 minutes ago, goshan_che said:

பிரபா தன்னலமற்ற, கொள்கை உறுதியுடைய, ஊழல் கறை படியாத மனிதர் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

இதையே நாளைக்கு வந்து கேளுங்க.. பிரபா ஒரு சுயநலவாதி.. பயங்கரவாதி.. இரத்தக்கறை படிந்த மனிதர்.. என்பதில் யாருக்கும் சந்தேகம் வேணாம் என்று எழுதித் தள்ளுங்க. இதுங்களை விட சீமான்.. கோடி மடங்கு மேல். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் பிரபா பற்றி நான் இதையேதான் எப்பவும் எழுதி வந்துள்ளேன்.

அவர் ஒரு தன்னலமற்ற, கொள்கை உறுதியுடைய, ஊழல் கறை படியாத மனிதர் அதேவேளையில் முரட்டுப்பிடிவாதி, சமயோசிதம் அற்றவர், மனிதாபிமானம் அற்ற, பயங்கரவாதக் கொடுங்கோலன்.

என் முன்னைய பதிவுகளில் இதுக்கு மாறாய் இருக்கும் உதாரணத்தை காட்டுங்கள் யாழை விட்டே போய்விடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அவர் ஒரு தன்னலமற்ற, கொள்கை உறுதியுடைய, ஊழல் கறை படியாத மனிதர் அதேவேளையில் முரட்டுப்பிடிவாதி, சமயோசிதம் அற்றவர், மனிதாபிமானம் அற்ற, பயங்கரவாதக் கொடுங்கோலன்.

ஏன் இவ்வளவு யுத்தம் நடக்கேக்கையும் எப்படி பிள்ளை பெத்தவர் என்றதில என்ன தொக்கு நிற்குதுங்கோ.. ஓ...முரட்டுப்பிடிவாதி என்பதோ. முடியல்லடா சாமி.

தன்னலம் அற்றவர்.. பயங்கரவாதக் கொடுங்கோலன்.. (தன்னலம் அற்றவன் எதுக்கு கொடுங்கோலனா இருக்கனும்.. இல்ல கொடுங்கோலன் எதுக்கு தன்னலம் அற்று இருக்கனும். கொடுங்கோலன் என்பதே தன்னலம் சார்ந்தவன் என்று தானே அர்த்தம். மக்களே உங்களுக்கு ஏதாச்சும் விளங்குது.)

கொள்கை உறுதி உடையவர் .. சமயோசிதம் அற்றவர்... ( கொள்கையில் உறுதின்னு நிக்கிறவனுக்கு நிமிசத்துக்கு நிமிசம் மாற என்ன இருக்கு.. இல்ல சமயோசிதம் அற்றவனுக்கு எதுக்கு கொள்கை உறுதி... மக்களே உங்களுக்கு ஏதாச்சும் விளங்குது...)

ஊழல் கறை படியாத மனிதர் .. மனிதாபிமானம் அற்றவர் ( எவ்வளவோ மனிதாபிமானம் அற்றவனுக்கு எதுக்கு ஊழலை மட்டும் செய்யக் கூடாதுன்னு அப்படி ஒரு வெறுப்பு ஊழல் மீது.. மனிதனையே வெறுக்கிறவன்... ஊழலை செய்யாமல் எதுக்கு வெறுக்கனும்.. அது கூட எல்லோ வாழ்ந்திருக்கனும்.. மக்களே உங்களுக்கு ஏதாச்சும் விளங்குது..)

இதில.. நான் எங்க அப்படி எழுதினன் என்று ஒரு கேள்வி வேற...??!  தமிழ் பாலர் வகுப்புத் தாண்டல்லைப் போல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னலம் அற்றவர் - தனக்கோ தன் குடும்பத்துக்கோ என போராடத்தை பயன்படுத்தாதவர்.

கொடுங்கோலன் - தான் கொண்ட முடிவே சரி என்று, மாற்றுக்கருத்தை அழித்து ஆழ்பவர்.

தனலமற்ற பல கொடுங்கோலரை உலகு சந்தித்துளது. ஸ்டாலின். கஸ்ரோ

கொள்கை உறுதி - தமிழ் ஈழமே ஒரே தீர்வு

சமயோசிதம் இல்லாமை - இந்தியா ஈழத்தை எதிர்ப்பது விளங்கியும் இந்தியாவையும் மீறி ஈழம் காணலாம் என எண்ணியமை.

ஊழல் அற்றவர் - பெருந்தொகை பணத்தை உலகம் பூராவும் இருந்து வாங்கி, கேள்விக்கு இடமின்றி அதை இயக்கத்துக்கும் அதன் நோக்கங்களுக்குமே செலவழித்தார்.

மனிதாபிமானமற்றவர் - தலைவர்கள் தப்பு செய்தார்கள் என்பதற்காக சொந்த இன வேறு இயக்கப் போராளிகளை சாவடித்தார். சிலர் செய்த தவறுக்கு முஸ்லீம்களை இனச்சுத்தீகரித்தார். பஸ்சுக்கும் கோவிலுக்கும் குண்டுவைத்தார் (காரணம் ஏதாயினும்).

Black and white ஆக பார்த்து மேலோட்டமாய் நுனிப்புல் மேய இது dentistry இல்லை. அரசியல். ஆழமான பார்வை வேண்டும்.

இல்லாட்டி விளங்காதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

தன்னலம் அற்றவர் - தனக்கோ தன் குடும்பத்துக்கோ என போராடத்தை பயன்படுத்தாதவர்.

கொடுங்கோலன் - தான் கொண்ட முடிவே சரி என்று, மாற்றுக்கருத்தை அழித்து ஆழ்பவர்.

தனலமற்ற பல கொடுங்கோலரை உலகு சந்தித்துளது. ஸ்டாலின். கஸ்ரோ

கொள்கை உறுதி - தமிழ் ஈழமே ஒரே தீர்வு

சமயோசிதம் இல்லாமை - இந்தியா ஈழத்தை எதிர்ப்பது விளங்கியும் இந்தியாவையும் மீறி ஈழம் காணலாம் என எண்ணியமை.

ஊழல் அற்றவர் - பெருந்தொகை பணத்தை உலகம் பூராவும் இருந்து வாங்கி, கேள்விக்கு இடமின்றி அதை இயக்கத்துக்கும் அதன் நோக்கங்களுக்குமே செலவழித்தார்.

மனிதாபிமானமற்றவர் - தலைவர்கள் தப்பு செய்தார்கள் என்பதற்காக சொந்த இன வேறு இயக்கப் போராளிகளை சாவடித்தார். சிலர் செய்த தவறுக்கு முஸ்லீம்களை இனச்சுத்தீகரித்தார். பஸ்சுக்கும் கோவிலுக்கும் குண்டுவைத்தார் (காரணம் ஏதாயினும்).

Black and white ஆக பார்த்து மேலோட்டமாய் நுனிப்புல் மேய இது dentistry இல்லை. அரசியல். ஆழமான பார்வை வேண்டும்.

இல்லாட்டி விளங்காதுதான்.

கொடுங்கோலன் என்பது அடாவடியாக நாட்டை ஆள்பவன். மக்களை துன்புறுத்துபவன். பிரபாகரன் மக்களால் நேசிக்கப்பட்டார். மாற்றுக்கருத்து என்பது காட்டிக்கொடுப்பாளர்களின் கருத்து என்றால்.. அமெரிக்காவிலும் அதற்கு விச ஊசிதான். அந்தவகையில் பிரபா செய்தது மக்கள் மனம் நேசித்த ஆட்சி. செங்கோண்மை தழுவியது எனலாம்.

தன்னலமற்ற.. அதே நேரம் அதை பிறரிடமும் மக்களுக்காக எதிர்பார்த்த தலைவன். ஏமாற்றங்களை மக்களுக்கு அளித்த சுயநலக்காரர்களை அழிக்கனுன்னு அவரா அல்ல.. மக்களே நினைத்த போது அதனை செய்ய வேண்டிய கட்டாயம் அரசனுக்கு.

யாரிடமும் தனக்காக காசு வாங்கல்ல. நாட்டுக்காக வாங்கியதை நாட்டுக்காக செலவு செய்தார். நாட்டை மதித்தவர்களை நம்பி சேமிக்கச் சொன்னார்.

மூதூர்.. கிண்ணியா.. நிலாவெளி.. கல்முனை.. என்று தமிழர்கள் வெட்டியும் சுட்டும் முஸ்லீம்களால் கொல்லப்பட்டு.. அந்த ஊர்கள் எல்லாம் இன சுத்திகரிப்புக்கு ஆளான போது..  வடக்கிலும் அதே நிலையை தோற்றுவிக்க விரும்பிய சக்திகளின்நோக்கத்தை முறியடிக்க தற்காலிகமாக வெளியேற்றமாக.. முஸ்லீம் - தமிழ் மக்களின் உறவை நீண்ட கால ஒழுங்கில்.. பாதுக்காக்க எடுத்த நடவடிக்கை. இதற்கு 2002 இல் ஒப்பந்தமும் போட்டு முஸ்லிம் மக்களுக்கு நிகழ்ந்த மன உளைச்சலுக்கு மன்னிப்பும் கேட்டவர். ஆனால்.. கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் ஒரு அல்லாவும் இன்று வரை மன்னிப்பும் கேட்டதில்லை. அந்த மக்களின் மீள்குடியேற்றமும் நிகழவில்லை. எது இனசுத்திகரிப்பு. எது மனிதாபிமானம். யார் மனிதாபிமானி.

இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்பது போல.. இருண்ட..இரண்டு கண்ணால்.. பிரபாகரனை பார்ப்பதை விடுத்து நிஜத்தின் பால்.. யதார்த்தத்தின் பால் பார்த்தால்.. அவனே உலகம் போற்றத் தக்க நல்ல மக்கள் தலைவன். அநியாயமாக காட்டிக்கொடுப்பாளர்களும் நாட்டின் துரோகிகளும் எதிரிகளும் வல்லாதிக்க சக்திகளும் முஸ்லிம் மதவெறியர்களும் அவரைப் பயங்கரவாதியாக்கிவிட்டனர். இதுதான் உண்மை.

உண்மையை உணர பங்குவமான சிந்தனை அவசியம். அது சில மூடர்களுக்கு எப்பவும் இருப்பதில்லை.tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஜனை கோஸ்டிகள்தான் தம் சூரியத்தேவனை ஒரே கண்ணால் பார்க்கும், துதிக்கும், அவரின் ஒவ்வொரு அசைவயும் அதிசயம் என்றும், பாட்டெழுதும். முருகன் என்றும் புகழும்.

நான் இரெண்டு கண்கொண்டு பார்பவனாயே, man with a critical eye, இருந்து விட்டுப் போகிறேன்.

Ignorance they say is bliss. உங்கள் ஆனந்தப் பரவசத்தை அறிவால் குழப்பி விடாதீர்கள். ரொம்ப கெட்டியாய் பிடித்துக்கொள்ளுங்கள் உங்கள் அறிவிலிமையை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருண்ட உலகில் இருந்து உலகம் தட்டை என்ற போது நம்பிய காலம் மலையேறி விட்டது. இது பகுத்தாயும் அறிவியல் ஆதிக்கம் உள்ள காலம். பிரபாகரனின் செயலும் சொல்லும் பகுப்பாய்வுக்குரியவையே தவிர தனிமனிதர்களின் தனிப்பட்ட குணம்.. காழ்புணர்வு.. இருண்ட கண் பார்த்துச் சொல்வதெல்லாம் ஆய்வு கிடையாது. 

நாங்கள் பேசுவது ஆதாரம் ஆய்வோடு. அது அறிவின் பாற்பட்டது. தன் இருண்ட பார்வைக்குள் உலகம் தட்டை என்று நம்பும் மனிதரிடத்தில் அறிவும் அறிவிலியாகவே எப்போதும் இருக்கும். அதற்காக பிரபாகரன் எனும் இலட்சிய வீரனை.. பூமி தட்டை எனும் கூட்டம் திட்டித் தீர்க்கப் பார்த்துக் கொண்டிருக்க அறிவியல் உலகம் இடமளிக்காது. 

கிளம்புங்க.. இருண்ட கண் பிற்போக்கு கூடாரங்களே. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.