Jump to content

'என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!' - 'நீயா நானா' நமீதா!


Recommended Posts

'என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!' - 'நீயா நானா' நமீதா!

''சொல்லுங்க நீங்க யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்.... கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார ’நீயா நானா’ விவாதத்தில் உருவான ஸ்டார்..! 
 

nami_vc1.jpg

’’பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர்ச்சியா இருந்துருக்கு. ஆனா, இனிமே எல்லாம் இப்படித்தான்!’’

அந்த ஷோவில் என்ன நடந்துச்சு... முழுசா சொல்லுங்க?

’’என் ப்ரோ மாலினி ஜீவரத்தினம், ஷோவுக்கு முதல் நாள்தான் ’நீயா நானா’வில் கலந்துக்கணும்னு வரச் சொன்னாங்க. அதனால அவசரமா கிளம்பிப் போனேன். அங்கு போனதுல இருந்தே என்னை எல்லாரும் ஒரு மாதிரிதான் பார்த்துட்டு இருந்தாங்க. என் ஹேர் ஸ்டைல், டிரெஸ்லாம் சிலருக்கு உறுத்திருக்கலாம் போல. நான் நடுவுல உட்கார்ந்திருந்தேன். அதனால எதிர்ல யார் பேசினாலும் கவனிக்க வேண்டியிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பிச்சதுல இருந்தே கடுப்பாக இருந்துச்சு. பாய்ஸுக்கு என்ன பாட்டு வேணும்னு கேட்டதுக்கு ’இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சி போச்சுடா’னு சொல்றதுல இருந்து,  பெண்கள் மீது வார்த்தை தாக்குதல் மேற்கொள்ளும் பாடல்களையே சொல்லிட்டு இருந்தாங்க. ’கிளப்புள மப்புல...’ பாட்டை யார் பாடினாலும் எனக்குப் பிடிக்காது.

ஒருவர் அந்தப் பாட்டை ஃபீல் பண்ணி பாடினார். அதுதான் கோபத்தை தூண்டி விட்ருச்சு.  அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும். ’பெண்கள் ஏன் காஞ்சிப்பட்டை கட்டாமல் கர்ச்சீப் Namitha%20Neeya%20Naana.jpgகட்டுகிறார்கள்’னு ஒரு வரி. நான் கேக்குறேன்... அந்தப் பாட்டை பாடி ஆடுன ஹிப்ஹாப் ஆதி என்ன வேட்டி கட்டிட்டா ஆடுனார்?  தமிழ்நாட்டுல கிட்டதட்ட 90 சதவிகித யங்ஸ்டர்ஸ் எங்கே வேட்டி கட்டுறாங்க? ஷார்ட்ஸ் போட்டுட்டுதான் சுத்துறாங்க. அதைப் பத்திலாம் ஏன் யாரும் சமூக அக்கறையோட கேள்வி கேட்கலை. இந்தக் கோபத்தைதான் அன்னைக்கு ஷோவில் காமிச்சேன்!”

வேட்டி, சேலை விஷயத்தில் நீங்க சொல்றது சரி. ஆனா, ஆண்கள் மது அருந்தினால் பெண்களும் அருந்தணுங்றது கட்டாயமா?

’’ஆண்கள் குடிக்கிறதால நானும் குடிப்பேன்னு சொல்லலை. ஆண்கள் சோறு சாப்பிடுறாங்க... அதனாலதான் பெண்களும் சோறு சாப்பிடுறாங்கனு சொல்ற மாதிரி எதையும் பொதுப்படையா பார்க்க முடியாதுதான். ஆனா, பெண்களுக்கும் ஆண்களுக்கு இருக்கும் அதே வலி, வேதனை உணர்வுகளுடன் இருக்கும் உடல் அமைப்புதான். அவங்களும்  மனுஷிதான். ஒரு பெண்ணுக்குத் தோணும்போது குடிக்கலாம்ங்றதுல எந்தத் தப்பும் இல்லைங்றதுதான் என் பார்வை. அதே சமயம் அது ஒவ்வொருவர் தனிநபர் விருப்பு, வெறுப்பு சார்ந்தது. ஒரு பெண்ணை மது குடிக்க கட்டாயப்படுத்துறது எவ்வளவு தப்போ, அதே அளவு தப்புதான் மது அருந்தும் ஒரு பெண்ணை விமர்சிப்பதும். 

மது குடிப்பதும், புகை பிடிப்பதும் உடல் நிலைக்குக் கேடுனு எனக்குத் தெரியும். நான் அதைச் செய்ய மாட்டேன். ஆனா, அதே சமயம் ஆண்கள் மது அருந்தினால் அது சமூக வெளியில் ஏற்றுக் கொள்ளப்படுவதும் பெண்கள் குடிப்பதைப் பற்றி பேசினாலே ’குய்யோ முய்யோ’னு கத்துறதும் சமூகத்தின் இறுகிய ஆணாதிக்கச் சிந்தனையைதான் வெளிப்படுத்துது. அது மட்டுமில்லாமல், இங்கே ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தால் பெண்களுக்கு கல்வி நிலையங்களின் ஆதரவு இருக்குனு அபத்தமா பேசினாங்க. அதுதான் எனக்கும் புரியலை. இது எவ்வளவு பெரிய பொய்? பெண்களுக்கு எப்போ எந்த கல்வி நிலையத்தின் ஆதரவு கிடைச்சிருக்கு. கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்கொள்கிற அடக்குமுறை அவளோட தோழிக்கே தெரியாது. பொதுவெளியில் பெண்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பாங்கனு நம்புறது மூடநம்பிக்கை. என் விஷயத்துலயே என்னலாம் நடந்துச்சுனு பார்த்தீங்கள்ல!’’

ஆமா... மீம்ஸ், கமெண்ட்னு வரம்பு மீறி விமர்சிச்சாங்களே... அதையெல்லாம் எப்படி எடுத்துக்கிட்டீங்க?

’’அதெல்லாம் எதிர்பார்க்கலை. ஆனா, கண்டுக்கலை. பல மீம்கள் மிக மோசமா இருந்துச்சு.  சில ஃபேஸ்புக் பேஜ், வீடியோக்களை என் அக்கா புகார் கொடுத்து எடுக்க வைச்சாங்க. பல பின்னூட்டங்களில் என்னை நான்கு பேர் சேர்ந்து வலுக்கட்டாய உடலுறவு கொள்ளணும்னுலாம் எழுதியிருந்தாங்க. அவங்களை நினைச்சு பரிதாபமாத்தான் இருந்துச்சு. ஒரு பொண்ணை பழி வாங்க பாலியல் வன்புணர்வு பண்ணணும்னு நினைக்கிற உளவியலில் இருந்து பெண்கள் உடல் மீதான அடக்குமுறை தொடங்குது. உடலுறவைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவங்ககிட்ட என்ன பேசி என்ன ஆகப் போகுதுனுதான் தோணுது. ஒரு நடிகைக்கு விருது தரப்படும்போது, அவரது நடிப்பைப் பற்றி விமர்சிக்காமல், அவரது அழகை விமர்சிப்பவர்கள் பலர். அதன் மூலம் அவர்களின் மன வக்கிரத்தையே நாம் புரிந்து கொள்ள முடியும். என்னைப் பத்தின  பின்னூட்டங்களும் மீம்ஸ்களும் அவங்களைப் பத்தி நிறைய உணர்த்தியிருக்கு. நேர்ல பேசுறப்போ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு வக்கிரமா பேசுறவங்ககிட்ட நான் ஏன் மல்லுக்கட்டணும். இவங்களுக்கு நடுவுல சில நல்ல மீம்ஸ்களும் பாராட்டுகளும் எனக்குக் கிடைச்சது. அதுதான் பெரிய சந்தோஷம்!’’

neeyaa%20naana%20nameetha(1).jpg

அம்மா, அப்பா, உறவினர்கள், நண்பர்களின் ரியாக் ஷன் என்ன?

’’அம்மா, அப்பா, இருவரின் நண்பர்களும் ‘நல்லா நறுக்குனு கேட்டம்மா’னு பாராட்டினாங்க. ‘ஒரு பையன் மாதிரி வளர்த்துட்டோம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, உன்னை ஒடுக்கும் சமூகத்துக்கு எதிரா நீ கேள்வி கேட்டப்ப, உன்னை சரியாதான் வளர்த்திருக்கேன் தோணுது’னு பூரிப்பா சொன்னார். மத்தபடி ஃப்ரெண்ட்ஸ்லாம் வாழ்த்தினாங்க. அவங்களுக்கு நான் இப்படி பேசுறதுலாம் புதுசு இல்லை. நான் எப்பவும் அவங்ககிட்ட பேசுறதை டி.வில பேசியிருக்கேன்... அவ்வளவுதான். ஆனா, நிகழ்ச்சி ஒளிபரப்பானதுல இருந்து குவியும் வாழ்த்துக்கள், திட்டுக்களால் ஓவர்நைட்டில் எனக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுத்துட்டாங்க. எங்கெல்லாமோ இருந்து வேலைக்கான அழைப்பு வருது. தேங்க்ஸ் ஃப்ரெண்ட்ஸ்!”’

- ரமணி மோகனகிருஷ்ணன்

http://www.vikatan.com/news/coverstory/58390-interview-with-neeyaa-naanaa-nametha.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.