Jump to content

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....


Recommended Posts

ஆப்­கா­னிஸ்தான் மற்றும் சிம்­பாப்வே அணிகள் வெற்­றி

 

இந்­தி­யாவில் நேற்று ஆரம்­ப­மான 6ஆவது இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்­டி­களில் ஆப்­கா­னிஸ்தான் மற்றும் சிம்­பாப்வே அணிகள் வெற்­றி­பெற்­றன.

நேற்­றைய முதல் போட்­டியில் மோதிய சிம்­பாப்வே மற்றும் ஹொங்கொங் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்­வேயின் சிபான்டா 59 ஓட்­டங்­க­ளையும், சிகும்­புரா ஆட்­ட­மி­ழக்­காமல் 30 ஓட்­டங்­க­ளையும் எடுக்க, நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 158 ஓட்­டங்­களை சேர்த்­தது.

பின்னர் 159 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கிய ஹொங்கொங் அணியால் நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 144 ஓட்­டங்­களை மட்­டுமே எடுக்க முடிந்­தது. இதனால் சிம்­பாப்வே அணி 14 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது.

நேற்­றைய இரண்­டா­வது போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் மற்றும் ஸ்கொட்­லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆப்கான், 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 170 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் மொஹமட் 61 ஓட்­டங்­களைப் பெற்றார்.

பதி­லுக்கு ஆடிய ஸ்கொட்­லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

http://www.virakesari.lk/article/3985

Link to comment
Share on other sites

  • Replies 357
  • Created
  • Last Reply

இந்தியாவே பட்டம் வெல்லும்: கிரிக்கெட் நட்சத்திரங்கள் கருத்து

 

 
 
ka_2767731f.jpg
 

கங்குலி:

இறுதிப்போட்டிக்கு இன்னும் அதிக தொலைவு உள்ளது. ஆசிய கோப்பை மற்றும் அதற்கு முந்தைய தொடர்களில் விளையாடியது போன்று இந்தியா விளையாடும் பட்சத்தில் நிச்சயம் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. இந்திய அணி நல்ல பார்முடன் இந்த தொடரில் நுழைகிறது.

வாசிம் அக்ரம்:

இந்தியா, கோப்பை வெல்ல வாய்ப்புள்ளது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அணியை வழக்கம் போல் கணிக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை இது புதிய தொடர், புதிய ஆட்டம். ஆசிய கோப்பையில் நடந்தவற்றை மறந்துவிட்டு, உலக கோப்பை தொடரை அனுபவித்து ஆடவேண்டும். தர்மசாலாவில் இரு அணிகள் மோதும் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கபில்தேவ்:

இந்திய அணி சம பலத்துடன் உள்ளது. இது மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கும். பொதுவாக நான், எந்த அணி கோப்பையை வெல்லும் என கருத்து கூறுவது கிடையாது. ஆனால் இந்த முறை இந்திய அணியை கூறுவேன். அவர்கள் சிறந்த முறையில் தயாராகி உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். தற்போதைய சூழ்நிலையில் தோனிக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை.

இன்சமாம்:

கோப்பையை வெல்லும் அணிகளில் இந்தியா முதன்மையாக உள்ளது. பாகிஸ்தான் அணி போதுமான வகையில் ஊக்கப்படுத்தப்படவில்லை. இந்திய அணி சிறந்த கேப்டனை கொண்டுள்ளது. ஆஸி. அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரை இழந்த நிலையில் அதன் பிறகு இந்திய அணி மறுபிரவேசம் செய்து வெற்றிகளை பெற்றது. பல்வேறு அணிகள் இதுபோன்று செயல்பட்டது கிடையாது. இந்தியாவை தவிர தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.

அசாருதீன்:

இந்திய அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயம், மற்றும் நெருக்கடியும் இருக்காது. சுழல் ஆடுகளங்கள் இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும். மேலும் உச்ச கட்ட பார்மில் உள்ளனர். இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8330287.ece

Link to comment
Share on other sites

உலகக்கிண்ண போட்டிகளில் தென் ஆபிரிக்க வீரர் ஆரோன் பங்கேற்கலாம்

March 09, 2016

சர்வதேச கிரிக்கட் சபையின் விதிமுறைகளை மீறி பந்து வீசுவதாக தடை விதிக்கப்பட்ட தென் ஆபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பாங்ஹைசோ பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

south-africa-new-zealand-aaron-phangiso-grant-elliott-bowls_3421267

தென் ஆபிரிக்க உள்ளூர் போட்டியில் பங்கேற்றிருந்த ஆரோனின் பந்து வீச்சு சர்வதேச கிரிக்கட் விதிமுறைகளை மீறியிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டது. அதனையடுத்து பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆரோனிற்கு உள்ளூர் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தென் ஆபிரிக்க கிரிக்கட் சபை தடை விதித்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் பந்து வீச்சு பரிசோதனையை மேற்கொண்ட ஆரோனின் பந்து வீச்சு விதிமுறைகளுக்கு அமைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆரோன் பாங்ஹைசோ உலகக்கிண்ண போட்டிகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=10399&cat=2

Link to comment
Share on other sites

தர்மசலாவிலிருந்து கொல்கத்தாவுக்கு இடம் மாறியது இந்தியா - பாக். உலகக் கோப்பைப் போட்டி

 

 கொல்கத்தா: இமாச்சலப் பிரதேச அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறிவிட்டதைத் தொடர்ந்து தரம்சலாவில் நடத்தத் திட்டமிட்டிருந்த இந்தியாவுக்கு எதிரான டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியை கொல்கத்தாவுக்கு ஐசிசி மாற்றியுள்ளது. மார்ச் 19ம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு தர முடியாது என்று இமாச்சலப் பிரதேச அரசு கூறி விட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றுமாறு ஐசிசிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து தற்போது போட்டி இடம் மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இன்று காலை நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் 8 ஓட்டங்களால் வெற்றி
 
Bangladesh 153/7 (20/20 ov)
Netherlands 145/7 (20/20 ov)
Bangladesh won by 8 runs
Link to comment
Share on other sites

இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ஓமான் 2 விக்கெட்களால் வெற்றி..

Ireland 154/5 (20/20 ov)
Oman 157/8 (19.4/20 ov)
 
Link to comment
Share on other sites

`பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்'

 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெற உள்ள டி 20 போட்டிகள், கொல்கத்தாவில் நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

160309172200_cricket_pakistan_512x288_ge
 பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக நேற்று இந்தியா சென்றிருந்த பாகிஸ்தான் குழு ஒன்று அது பற்றிய அறிக்கை ஒன்றை தமது உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது

முன்னர் அந்தப் போட்டிகள் இந்த மாதம் 19ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் அணியினருக்கு அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி அங்கு செல்வதில் தாமதமாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுக்களை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.

பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக நேற்று இந்தியா சென்றிருந்த பாகிஸ்தான் குழு ஒன்று அது பற்றிய அறிக்கை ஒன்றை தமது உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது என முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

160309172324_cricket_pakistan_512x288_ap  ஹிமாச்சலப் பிரதேசத்தின் வடக்குப் பகுதி மாநிலமான தரம்சாலாவில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு உள்ளுரில் கடும் எதிர்ப்புகள்

பாகிஸ்தான் எல்லையில் உள்ள பத்தான்கோட் விமானப் படை தளத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட படையினரில் சிலர் ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் வடபகுதி மாநிலமான தரம்சாலாவில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு உள்ளுரில் கடும் எதிர்ப்புகள் இருந்ததாகவும் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாதிகளே காரணம் என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக உள்ளுரில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் உள்ளதாக தெரிவித்த தமர்சாலா முதல்வர் அவர்களுக்கு பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிப்பதற்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடக்கவிருந்த குறித்த போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160309_india_pakistan_cricket

Link to comment
Share on other sites

லசித் மலிங்கவின் காயம் இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாக அமைந்துள்ளது - பயிற்றுவிப்பாளர் கிரஹாம்போர்ட்

1
லசித் மலிங்கவின் காயம் இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாக அமைந்துள்ளது - பயிற்றுவிப்பாளர் கிரஹாம்போர்ட்



லசித் மலிங்கவின் காயம் இருபதுக்கு 20 உலககிண்ண கோப்பை போட்டிகளிற்கான அணியில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம்போர்ட் தெரிவித்துள்ளார்.


லசித் மலிங்கவின் காயம் இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாக அமைந்துள்ளது எனவும் இது  துரதிஸ்டவசமானது எனவும் தெரிவித்த அவர் லசித் மலிங்க போட்டிகளை வென்றுதரக்கூடியவர், அற்புதமான வீரர் எனத் தெரிவித்தார்.


மேலும் உத்திகளின் அடிப்படையிலும் அவர் மிகச்சிறந்தவர், துரதிஸ்டவசமான காயமே உண்மையான காரணம், எங்களிற்கு தேவையான தருணத்தில் அவர் பந்து வீசுவதற்கு தயாரான நிலையில்  காணப்படுவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் எனவும் போhட் தெரிவித்துள்ளார்.


காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள லசித் மலிங்க அணியில் இடம்பெற்றுள்ள போதிலும், இலங்கை அணியினருடன் புதன்கிழமை இந்தியா செல்லாதது குறிப்பிடத்தக்கது.


அதேவேளை  லசித் மலிங்க ஊசிகளை பயன்படுத்துகின்றார் எனவும் மூன்று விசேட மருத்துவர்கள் குழு அவரிற்கு சிகிச்சையளித்து வருகின்றது எனவும்,  இலங்கை அணி தனது முதலாவது போட்டியை விளையாடுவதற்கு முன்னர், அவரின் நிலை குறித்து முடிவெடுக்கப்படும் எனவும்  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129869/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

பங்­க­ளாதேஷ்,ஓமான் அணிகள் வெற்­றி­

இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் தகுதிச் சுற்றுப் போட்­டியில் நேற்று விளை­யா­டிய நெதர்­லாந்து அணியை 8 ஓட்ட­ங்­களால் வீழ்த்தி பங்­களாதேஷ் அணி வெற்­றி­பெற்­றது.

இந்­தி­யாவில் 6ஆவது இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இதில் தகுதி காண் போட்­டிகள் தற்­போது நடை­பெற்­று­வ­ரு­கி­ன் றன. இதில் நேற்று நடை­பெற்ற முதல் போட்­டியில் பங்­க­ளாதேஷ் மற்றும் நெதர்­லாந்து அணிகள் மோதின.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 153 ஓட்­டங்­களைப் பெற்­றது. இதில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்­கிய தமீம் இக்பால் இறு­தி­வரை களத்தில் நின்று 83 ஓட்­டங்­களை விளா­சினார்.

154 என்ற வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய நெதர்­லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 145 ஓட்­டங்­களைப் பெற்று 8 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

ஓமான் அணிக்­கெ­தி­ராக நேற்று நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய அயர்­லாந்து அணி 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 154 ஒட்­டங்­களைப் பெற்­றது. இதில் வில்சன் 38 ஓட்­டங்­களை விளா­சினார்.

வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய ஓமான் அணி 19.4 ஓவர்­களில் வெற்றி இலக்கை அடைந்­தது. 3 பந்­து­க­ளுக்கு 3 ஓட்­டங்கள் தேவை என்ற நிலையில், விக்கெட் காப்­பா­ளரின் கால்­க­ளுக்­கி­டையில் பந்து பவுண்­ட­ரிக்கு செல்ல இக்­கட்­டான போட்டியில் ஓமான் அணி வெற்றிபெற்றது.

http://www.virakesari.lk/article/4026

Link to comment
Share on other sites

t20 உலகக் கிண்ணம் - இன்றைய போட்டிகளின் விபரம்

 

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூர், தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த 8ம் திகதி ‘பி’ பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்களில் சிம்பாப்வே 14 ஓட்டங்களால் ஆங்காங்கையும், ஆப்கானிஸ்தான் 14 ஓட்டங்களால் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன.

நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு போட்டி ஒன்றில் பங்களாதேஷில் 8 ஓட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஓமன் இரண்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை அதிர்ச்சிகரமாக வென்றது.

இன்று ‘பி’ பிரிவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சிம்பாப்வே– ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற சிம்பாப்வே போராட வேண்டும். ஏனென்றால் ஆங்காங்குக்கு எதிராக அந்த அணி திணறியே வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணி தொடக்க ஆட்டத்தில் தோற்றதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதிலும் தோற்றால் அந்த அணி வெளியேற்றப்படும்.

இரு அணிகளும் 20க்கு இருபது போட்டியில் முதல் முறையாக மோதுகிறது.

இன்று நடைபெறும் 2–வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான்– ஆங்காங் அணிகள் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் வென்ற நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தான் இருக்கிறது. அந்த அணி சமீபத்தில் நடந்த ஆசியக் கிண்ண தகுதி சுற்றில் ஆங்காங்கை வீழ்த்தி இருந்தது. இதனால் 2–வது வெற்றி ஆர்வத்துடன் இருக்கிறது.

ஆங்காங் அணி இந்த ஆட்டத்தில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வெற்றிக்காக மிகவும் கடுமையாக போராடும். இரு அணிகளும் 5–வது முறையாக 20 ஒவரில் மோத உள்ளன. இதுவரை நடந்த 4 போட்டியில் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய ஆட்டங்களில் சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றால் இந்த இரண்டு அணியில் இருந்து ஒரு அணி முதன்மை சுற்றுக்கு முன்னேறும்.

இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சூப்பர்-10 சுற்றில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு வசதியாக பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று இரவு 07.30க்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், மேற்கிந்தி தீவுகளும் மோதுகின்றன. வெற்றி நடை போட்டு வரும் தோனி தலைமையிலான இந்திய அணி, தங்களை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள இந்த ஆட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும். காயத்தால் ஒதுங்கி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது உடல்தகுதியை பரிசோதிக்க இது அருமையான வாய்ப்பாகும்.

அத்துடன், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 07.30க்கு நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
Link to comment
Share on other sites

T20உலககோப்பை போட்டி: அதிர வைத்த கேட்சும், ஓமனின் நம்ப முடியாத வெற்றியும்!

 

உலக கோப்பை 20 ஓவர் தகுதி சுற்று கிரிக்கெட் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணி வீழ்த்தியது. கடைசி ஓவரில் 3 பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், விக்கெட் கீப்பர் பந்தை தனது கால் கீழே தவறி விட்டதால் பைஸில் ஓமன் அணி வெற்றி பெற்றது.
 

Oman-%20Ireland%20Playars.jpg

தர்மசாலாவில் இன்று இரவு நடந்த தகுதி சுற்றுப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில்சன் 38 ரன்னும், போர்டர்பீல்டு, ஸ்டெர்லிங் ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ஓமன் அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஹாவர் அலி 34 ரன்னும், மற்றொரு தொடக்க வீரர் மாக்சோட் 38 ரன்னும் எடுத்தனர். 7வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஆமீர் அலி 17 பந்தில் 32 ரன்கள் விளாசினார்.
 

Oman%20playars.jpg

கடைசி ஓவரில் 6 பந்தில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 19.4 ஓவரில் சொரின்சன் பந்து வீச அதை அன்சாரி அடிக்க முயன்றார். ஆனால், அவர் பந்தை அடிக்க முடியாமல் போக, பந்தை விக்கெட் கீப்பர் பிடிப்பார் என்று இருந்த நிலையில், அவர் தனது கால்கள் இடையே பந்தை விட்டதால், பைஸில் பவுண்டரி சென்றது. இதனால் ஓமன் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

Oman%20playar%20Maqsood.jpg

முன்னதாக, அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பால் ராபர்ட் ஸ்டெர்லிங் பவுண்டரிக்கு அடித்த பந்தை ஓமன் வீரர் மக்சூத் அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்து ரசிகர்களையும், களத்தில் இருந்த வீரர்களையும் அதிர வைத்தார்.
http://www.vikatan.com/news/sports/60316-wt20-qualifier-oman-ireland.art

Link to comment
Share on other sites

தலைமைப் பொறுப்புக்கு தாம் தயாராவதற்கான மனநிலையை கொண்டிருக்கவில்லை : அஞ்சலோ மெத்திவ்ஸ்

இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தலைமைப் பொறுப்புக்கு தாம் தயாராவதற்கான மனநிலையை கொண்டிருக்கவில்லை என அஞ்சலோ மெத்திவ்ஸ் தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்க உடற்தகுதி பிரச்சினை காரணமாக தலைமைப் பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், தலைமைப் பதவியை மறுக்க முடியாத நிலையில், அதனை ஏற்றுக்கொண்டதாகவும்,தாம் தலைமைப் பொறுப்பில் அனுபவத்தைக் கொண்டிருக்கின்ற போதும், தற்போது அந்த விடயம் சவால்மிக்கதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும். வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அணியை சிறந்த முறையில் வழிநடத்த தாம் எதிர்பார்ப்பதாகவும் லசித் மலிங்க தான் எங்கள் அணிக்கு இருக்கும் சிறந்த இருபதுக்கு20 போட்டிகளுக்கான வேகபந்து பந்துவீச்சாளராகும் அவரை முதல் போட்டியில் இருந்து அவரது முழு பங்களிப்பை பெற எத்தனித்துள்ளேன்  என்று மெத்திவ்ஸ் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/4058

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தான் வெற்றி

Hong Kong 116/6 (20/20 ov)
Afghanistan 119/4 (18/20 ov)
Afghanistan won by 6 wickets (with 12 balls remaining)

பயிற்சி போட்டியில் இந்தியா வெற்றி

India 185/6 (20/20 ov)
West Indies 140 (19.2/20 ov)
India won by 45 runs

பயிற்சி போட்டியில் நியூசீலாந்து  வெற்றி

New Zealand 226/4 (20/20 ov)
Sri Lanka 152/7 (20/20 ov)
New Zealand won by 74 runs
Link to comment
Share on other sites

தாங்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக லசித் மலிங்க தெரிவித்ததாக கபில விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தாங்கள் அவமானப்படுத்தப் பட்டுள்ளதாக லசித் மலிங்க தெரிவித்ததாக கபில விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்

 பங்களாதேசில் ஆசியகிண்ணப்போட்டிகள் இடம்பெற்ற வேளை தன்னை அழைக்காமல் அணியின் மூத்தவீரர்களுடன் விளையாட்டு துறையமைச்சரும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தலைவரும் ஆலோசனைகளை மேற்கொண்டதன் காரணமாக தான் அணித்தலைவர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக லசித் மலிங்க தெரிவித்ததாக முன்னாள் தெரிவுக்குழுவின் தலைவர் கபிலவிஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.


மேலும் இரவோடிரவாக தங்களது குழுவினர் அகற்றப்பட்டு அரவிந்த டி சில்வா தலைமையிலான குழுவினர்  நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் அவமானப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரவு 11 மணிக்கு தொலைபேசியில் அழைத்த அதிகாரியொருவர் தாங்கள் அகற்றப்பட்டுள்ளதை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129846/language/ta-IN/----.aspx

Link to comment
Share on other sites

உலக கோப்பைக்கு இவர்கள் புதுமுகங்கள்

 
ஜஸ்ப்ரிட் பும்ரா
ஜஸ்ப்ரிட் பும்ரா

இந்தியாவின் ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, பவன் நேகி ஆகியோர் முதல் முறையாக டி 20 உலக கோப்பையில் களமிறங்குகின் றனர். பும்ரா தனது ஸ்லிங் ஷாட் பந்து வீச்சு முறையால் அசத்தி வருகிறார். 22 வயதான அவரது வழக்கத்துக்கு மாறான பந்து வீச்சு முறை இந்திய அணிக்கு பலம் சேர்த்து வருகிறது.

பேட்டிங்கில் அதிரடி, பந்து வீச்சில் விரைவான செயல்பாடு ஆகியவற்றால் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். பவன் நேகி, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி உள்ளார். ஆசிய கோப்பையில் ஒரு ஆட்டத்தில் பங்கேற்ற அவர் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், பேட்டிங் கில் கடைசி கட்டத்தில் கைகொ டுக்கும் திறன் கொண்டவர். 3வது சுழற்பந்து வீச்சாளர் களமிறக்கப் பட்டால் இவரே தோனியின் முதல் தேர்வாக இருப்பார்.

வங்கதேச அணியில் முஸ்டா பிஹூர் ரஹ்மானுக்கு இது முதல் உலக கோப்பை ஆகும். தனது மிதவேக பந்து வீச்சில் அதிக மாறுதல்களை கொண்டு எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் திறன் கொண்டவர். கடந்த ஆண்டு வங்கதேசத்திடம் ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழக்க முஸ்டாபிஹூர் ரஹ்மான் பந்து வீச்சு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. அணியில் உஸ்மான் ஹவாஜாவும் முதல் முறையாக உலக கோப்பையில் களம் காண்கிறார். 29 வயதான இடது கை பேட்ஸ்மேனான அவர் பிக் பாஷ் டி 20 தொடரில் 2 சதங்கள் விளாசி உள்ளார்.

இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்க் கும் இதுதான் முதல் உலக கோப்பை. கடந்த முறை காயத் தால் அவர் வாய்ப்பை தவற விட்டார். சமீபத்தில் தென் ஆப்பிரிக் காவுக்கு எதிரான டெஸ்டில் 163 பந்துகளில் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடாவுக்கு இது முதல் உலக கோப்பை. 20 வயதான அவர் 150 கி.மீ. வேகத்தை தொடும் அளவுக்கு பந்து வீசும் திறன் கொண்டவர். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டரும் முதல் முறையாக உலக கோப்பை தொடரை சந்திக்கிறார். மிக உயரமான அவர் பந்து வீச்சுடன், பேட்டிங்கிலும் கைகொடுக்கக்கூடியவர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8340481.ece

 

Link to comment
Share on other sites

இன்றைய காலை போட்டி ஒரு பந்து கூட வீசபடாத நிலையில் கைவிடபட்டது.

Netherlands
Oman
No result (abandoned with a toss)
236333.3.jpg

மாலை நடந்த போட்டி பங்களாதேஷ் 94/2 என்ற நிலையில் மழை வந்ததால் கைவிடப்பட்டது.

Bangladesh 94/2 (8/12 ov)
Ireland
No result
236395.3.jpg
Match umpires have a chat with the groundstaff as rain stops play, Bangladesh v Ireland, World T20 qualifier, Group A, Dharamsala, March 11, 2016 ©International Cricket Council
 
Link to comment
Share on other sites

12841228_1193376707348090_50130126684137

Link to comment
Share on other sites

பேட்டிங் வரிசையை எதிர்பாராமல் மாற்றுவோம்: எதிரணியினருக்கு ஆஸி. பயிற்சியாளர் எச்சரிக்கை

 
ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன். | படம்: ஏ.பி.
ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன். | படம்: ஏ.பி.

உலகக் கோப்பை டி20 போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இம்முறை கோப்பையைக் கைப்பற்றுவதில் முனைப்பு காட்டும் ஆஸ்திரேலிய அணியில் நிலையான டவுன் ஆர்டர் இல்லை என்று டேரன் லீ மேன் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி வீரர் டேவிட் வார்னரை நடுவரிசையில் களமிறக்கி அதில் வெற்றியும் கண்டது ஆஸ்திரேலியா, சமீபத்தில் முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்று வாகை சூடியது.

டேவிட் வார்னர் மொத்தம் 130 ரன்களுடன் தொடர் நாயகன் விருது பெற்றார். இந்நிலையில் வார்னர் 4-ம் நிலையில் எதிர்பாராத வெற்றியடைந்தது குறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் கூறும்போது, “மிடில் ஆர்டரில் வார்னர் ரன் குவிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த தொடரில் (உலகக்கோப்பை டி20) நாங்கள் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்துவோம். இது எங்களது பல சாதக நிலைகளில் ஒன்று. எப்படி பேட்டிங் ஆர்டரை மாற்றினாலும் சிறப்பாகச் செயல்படும் பேட்ஸ்மென்கள் உள்ளனர்.

15 வீரர்கள் கொண்ட அணியில் இப்போது 4 வீரர்களை உட்கார வைக்க வேண்டும் என்பது மிகக் கடினமான காரியமே, ஏனெனில் ஒவ்வொருவரும் பல்வேறு திறமைப் படைத்தவர்கள்.

கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையிலும் எங்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தது, ஒரு போட்டியில் வழக்கமான கேப்டன் இருந்தார், பிறகு ஜார்ஜ் பெய்லி, பிறகு கிளார்க் வந்தவுடன் பெய்லி ஆட முடியாமல் போனது.

இவையெல்லாம் ஒரு கடினமான முடிவே. ஆனால் எங்களிடம் ஒரு கூட்டு மன நிலை உள்ளது, வீரர்கள் இதனை புரிந்து கொள்பவர்களாகவே உள்ளனர். ஆனால் என்ன முடிவெடுத்தாலும் வீரர்களிடத்தில் அதனை தெளிவுபடுத்தி விட்டால் பிரச்சினை எழாது” என்றார்.

எனவே இதனை வழக்கமான ஆஸ்திரேலிய பாணி போட்டிக்கு முன்பான ‘உதார்’ பேச்சா அல்லது உண்மையில் எதிர்பாராத டவுன் ஆர்டரில் வீரர்களை மாற்றி இறக்கி எதிரணியினரின் திட்டங்களை முறியடிக்கும் உண்மையான திட்டமா என்பது தொடர் ஆரம்பித்தவுடன்தான் தெரியும்.

தோனிக்கு எதிர்மாறான நிலைப்பாடாகும் இது. தோனி மேன்மேலும் ஸ்திரத்தன்மையை நோக்கி பேசிக்கொண்டிருக்கையில், டேரன் லீ மேன் பரிசோதனை அதிரடி முயற்சிகளை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8342504.ece?homepage=true

Link to comment
Share on other sites

வெளியேறியது நெதர்லாந்து அணி

 
மழை காரணமாக தார்ப்பாயால் மூடப்பட்டுள்ள தர்மசாலா மைதானம்.
மழை காரணமாக தார்ப்பாயால் மூடப்பட்டுள்ள தர்மசாலா மைதானம்.

டி 20 உலக கோப்பையில் நேற்று தர்மசாலாவில் ஓமன்-நெதர்லாந்து அணிகள் இடையே நடைபெற இருந்த ஆட்டம் டாஸ் மட்டும் போடப்பட்டட நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஓமன் அணி தனது முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியிருந்தது.

அந்த அணி 3 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இரண்டாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் அந்த அணி சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இன்றைய ஆட்டங்கள்

ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான்

இடம்: நாக்பூர்

நேரம்: பிற்பகல் 3

ஹாங் காங் - ஸ்காட்லாந்து

இடம்: நாக்பூர்

நேரம்: இரவு 7.30

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8345112.ece

Link to comment
Share on other sites

t20 உலகக் கிண்ணம் - இன்றைய போட்டிகளின் விபரம்

 

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூர், தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த 8ம் திகதி ‘பி’ பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்களில் சிம்பாப்வே 14 ஓட்டங்களால் ஆங்காங்கையும், ஆப்கானிஸ்தான் 14 ஓட்டங்களால் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன.

நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு போட்டி ஒன்றில் பங்களாதேஷில் 8 ஓட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஓமன் இரண்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை அதிர்ச்சிகரமாக வென்றது.

இன்று ‘பி’ பிரிவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சிம்பாப்வே– ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற சிம்பாப்வே போராட வேண்டும். ஏனென்றால் ஆங்காங்குக்கு எதிராக அந்த அணி திணறியே வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணி தொடக்க ஆட்டத்தில் தோற்றதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதிலும் தோற்றால் அந்த அணி வெளியேற்றப்படும்.

இரு அணிகளும் 20க்கு இருபது போட்டியில் முதல் முறையாக மோதுகிறது.



இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சூப்பர்-10 சுற்றில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு வசதியாக பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று இரவு 07.30க்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், மேற்கிந்தி தீவுகளும் மோதுகின்றன. வெற்றி நடை போட்டு வரும் தோனி தலைமையிலான இந்திய அணி, தங்களை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள இந்த ஆட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும். காயத்தால் ஒதுங்கி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது உடல்தகுதியை பரிசோதிக்க இது அருமையான வாய்ப்பாகும்.

அத்துடன், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 07.30க்கு நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.