Jump to content

முப்பரிமாணத்தில் பேஸ்புக் டைம்லைன்


Recommended Posts

முப்பரிமாணத்தில் பேஸ்புக் டைம்லைன்

facebook_2343337h.jpg
 

சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ கில் முப்பரிமாணத்தில் ‘டைம் லைன்’களை கண்டுகளிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளத்தில் முன்னணி யில் இருக்கும் ‘பேஸ்புக்’ நிறுவனம் அவ்வப்போது பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த முறை ‘டைம்லைனில்’ பதிவாகும் புகைப்படங்கள், தகவல்களை தத்ரூபமாக கண்டு களிப்பதற்காக முப்பரிமாண (3 டி) தொடு திரை தொழில்நுட்பத்தை விரைவில் புகுத்த முடிவு செய் துள்ளது.

முதல்கட்டமாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் நுகர்வோர்களுக்கு இந்த புதிய தொழில்நுட்ப வசதி கிடைக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து ‘பேஸ்புக்’ செய்திதொடர்பாளர் கூறும்போது, ‘‘எங்களது செயலியில் (ஆப்) முப்பரிமாண தொடு திரையை அறிமுகம் செய்து வைப்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

இதன் மூலம் பேஸ்புக்கில் விருப்பமானவற்றை தொட்டு அதை முப்பரிமாண வடிவத்தில் பயன்பாட்டாளர்கள் கண்டுகளிக்க முடியும்’’ என்றார்.

முப்பரிமாண தொடு திரை வசதி ஆரம்பத்தில் சிறிய அளவில் வழங்கப்பட்டு, பின்னர் படிப்படி யாக அனைத்து பயன்பாட்டாளர் களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் ‘பேஸ்புக்’ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/article8147731.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.