Jump to content

சினிமா எடுத்துப் பார்


Recommended Posts

சினிமா எடுத்துப் பார் 46: எந்த நாடும் சிங்கப்பூர் தான்

எஸ்பி.முத்துராமன்

 
 
sridevi_2740189f.jpg
 

‘ப்ரியா’ படப்பிடிப்பின்போது ஒரு சீனக்காரரான மினி லாரி ஓட்டு நரிடம் ‘‘மலை உச்சியில் இருந்து விமானம் புறப்படுவதைப் படம் பிடிக்க வேண்டும்; அதைப் போன்ற இடத்தை உங்களால் காட்ட முடியுமா?’’ என்று கேட் டோம். தன்னுடைய மினி லாரியில் என் னையும் ஒளிப்பதிவாளர் பாபுவையும் ஏற்றிக்கொண்டு அந்த ஓட்டுநர் புறப்பட்டார்.

அந்த மினி லாரியை மலை மேல் அவர் இஷ்டத்துக்கு ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டே இருந்தார் அந்த சீனக்காரர். நாங்கள் சொன்னதை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்கிற எண்ணம் ஒருகட்டத்தில் எங் களுக்கு உண்டானது. இன்னும் ஒரு சுற்று மலை மேல் ஏறியது மினி லாரி. அந்தச் சீனக்காரர் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ‘‘இங்கே வாங்க… வாங்க…’’ என்று கையை அசைத்தார்.

அவர் அழைத்துச் சென்று காட்டிய மலை உச்சியில் இருந்து கீழே ஏர்போர்ட் தெளிவாகத் தெரிந்தது. அங்கே ஒரு விமானம் டேக் ஆஃப் ஆவதற்குத் தயாராக இருந்தது. ஒரு இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இருக்க வேண்டிய பார்வை கோணம் மினி லாரி ஓட்டுநருக்கு இருக்கிறதே என்று நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் ஆச்சர்யப்பட்டோம். பாபு உற்சாகத்தோடு விமானம் ‘டேக் ஆஃப்’ ஆவதை படமாக்கினார்.

நாங்கள் நினைத்த காட்சியைப் படமாக்கி முடித்தோம். அந்த சமயத்தில் எங்களுக்கு கடும் பசி. காலையில் சோப்ரா மாஸ்டர் தயாரித்துக் கொடுத்த பிரெட் மட்டும்தான் சாப்பிட்டிருந்தோம். நானாவது பசியைத் தாங்கிக் கொள் வேன். பாபு சாருக்கு மயக்கமே வந்து விட்டது. அதைக் கவனித்தார் சீன ஓட்டுநர். மினி லாரியை நோக்கி ஓடிய அவர், கையில் ஒரு பீங்கான் பாத்திரத்தோடு திரும்பி வந்தார்.

அதில் இருந்த நூடுல்ஸை எங் களிடம் கொடுத்து ‘‘சாப்பிடுங்க… சாப் பிடுங்க…’’ என்று கையால் பேசினார். பாபு சார் சுத்த சைவர். சீனக்காரர் கொண்டுவந்தது அசைவ நூடுல்ஸாகத் தான் இருக்கும் என்று பாபு சார் நினைத் தார். அதையும் புரிந்து கொண்ட சீனக் காரர் ‘‘இது வெஜ்… வெஜ்’’ என்று காய்கறிகளை எடுத்துக் காட்டினார்.

சீனக்கார ஓட்டுநரையும் எங்களு டன் சேர்ந்து சாப்பிடச் சொன்னோம். பீங்கான் பாத்திரத்தில் இருந்த நூடுல்ஸை மூன்று பேரும் கையால் எடுத்துச் சாப்பிட்டபோது இனம்புரியா மல் மூவரின் கண்களும் கலங்கியிருந் தன. ஜாதி, மதம், இனம், நாடு என்கிறோம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டை என்கிறோம். எதுவும் கிடைக்காத மலை உச்சியில் அந்த கொடும் பசி நேரத்தில் அங்கே நாங்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டபோது அப்படி எது வுமே தெரியவில்லை. ‘ஒரே உலகம்… ஒரே மனித இனம்’ என்ற மனிதநேய ஒருமைப்பாடே எங்களுக்குத் தெரிந்தது.

இந்த விதை நம் எல்லோர் மனதிலும் விழ வேண்டும். வெளிநாட்டுக்குச் சென்று படம் மட்டுமே எடுத்து வரவில்லை. இப்படி நல்ல கலாச்சார விஷயங்களையும் கற்று வந்தோம். பழைய நினைவுகள் மனதில் வட்டமிடும்போது எல்லாம் தீவிரவாதம் இல்லாத ஒருமைப்பாடான உலகத்தை என்றைக்கு நாம் உருவாக்கப் போகிறோம் என்கிற கவலை மனசுக்குள் மண்டுகிறது.

தேங்காய் சீனிவாசன் ஒரு குழுவை படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு அழைத்து வந்திருப்பதைப் போல ‘ப்ரியா’ படக் காட்சிகளை எடுத்தோம். அவர் அழைத்து வந்தவர்கள் ஏதாவது தவறு செய்தால், ‘‘உங்க பாஸ்போர்ட் என் கையில’’ என்று அடிக்கடி விரட்டுவார். இதை கன்டினியூடி வசனமாக படம் முழுக்க வைத்திருந்தோம். நிஜத்தில் எங்கள் யூனிட்டில் யாராவது தப்பு பண்ணினாலும், ‘‘உன் பாஸ்போர்ட் என் கையில’’ என்று மிரட்டுகிற அளவுக்கு அந்த டயலாக் ரீச் ஆனது. படம் ரிலீஸானப் பிறகு மக்களும் அந்த டயலாக்கை சொல்ல ஆரம்பித்தார்கள்.

சிங்கப்பூர் சுதந்திர தின விழாவில் ஸ்ரீதேவியைக் கடத்திச் செல்வது போன்ற காட்சியைப் பற்றி முன்பே கூறியிருந் தேன். அப்படி கடத்தப்பட்ட ஸ்ரீதேவி அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் கட்டிப் போடப்பட்டிருப்பார். ரஜினி அவரைத் தேடி பல இடங்களிலும் அலைந்துவிட்டு ஸ்ரீதேவி இருக்கும் இடத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிடுவார். ஆனால், அடுக்கடுக் காக இருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங் களின் நெருக்கத்தில் ஸ்ரீதேவி இருக்கும் இடத்தை துல்லியமாக அவரால் கண்டு பிடிக்க முடியாது. அப்போதுதான் ரஜினி ‘‘ஓ… ப்ரியா… ப்ரியா’’ என்ற பாடலைப் பாடி ஸ்ரீதேவியைக் கண்டுபிடிப்பார். ரஜினி, ஸ்ரீதேவியைத் தேடும் காட்சியை இசைஞானி இளையராஜா இசையிலேயே பரபரப்பாக கொண்டு வந்திருப்பார். அதுதான் ராஜா!

ஆகமொத்தம் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் மூன்று நாடுகளிலும் தேடித் தேடி வசீகரமான இடங்களை, பூங்காக் களை கண்டறிந்து அங்கெல்லாம் படம் பிடித்து வந்தோம். நாங்கள் படம்பிடித்து வந்ததை எடிட்டர் விட்டல் மிக அழகாக எடிட் செய்து கோர்வையாக்கினார். அன்னப் பறவை எப்படி தண்ணீரை நீக்கிவிட்டுப் பாலை மட்டும் அருந்துமோ அதைப் போல, ஒரு சிற்பி பாறையின் வேண்டாதப் பகுதிகளை நீக்கி சிலையைச் செதுக்குவதைப் போல… அழகான காட்சிகளை எல்லாம் தொகுத்து சிறப் பான படமாக கொடுத்தார் விட்டல் சார்.

இவ்வளவு நன்றாக வந்திருக்கும் படத்தை ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவரிடம் சென்று என் விருப்பதைத் தெரிவித்தேன். ‘‘ஓ… தாராளமா பார்க்கிறேனே...’’ என்று கூறி படம் பார்த்தார். ‘‘மூன்று நாடுகள், ஆடல் பாடல், கருத்து, கதை, அழகான இடங்கள் என்று சிறப்பாக படமாக்கியிருக்கிறீர்கள். எத்தனை நாட்கள் படம் பிடித்தீர்கள் முத்துராமன்?’’ என்று கேட் டார். நான் ‘‘26 நாட்களில் படமாக்கினோம்’’ என்றேன்.

‘‘அந்த நாட்டில் உள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கவே எனக்கு அத்தனை நாட் கள் ஆகுமே. இவ்வளவு குறுகிய நாட்களில் படமாக்கியதே சாதனைதான்!’’ என்று எங்கள் குழுவை மனந்திறந்து அவர் பாராட்டினார். படத்தின் 100-வது நாள் விழாவில் அவரே தலைமை வகித்து எங்களுக்கு விருதுகளைக் கொடுத்தார். ஏவி.எம் பல்கலைக்கழகத்தில் பயின்ற எனக்கு அவரது பாராட்டையும், விருதை யும் ஒரு துணைவேந்தர் கொடுத்த பட்டமாகவே கருதுகிறேன்.

அந்த நாடுகளில் எங்களுக்கு உதவியாக பாஸ்கர், தேவி மணியன், பாலா, யாஷின், ஹாங்காங் அண்ணாமலை, அபிராமி ஆகியோர் இருந்தனர். அவர் கள் செய்த உதவிகளை மறக்கவே முடி யாது. இன்றைக்கும் அவர்கள் என்னோடு நட்புடன் இருக்கிறார்கள்.

கடந்த மாதம் சிங்கப்பூருக்குச் சென்ற போது ‘2030-ல் சிங்கப்பூர்’ என்கிற ஒரு கண்காட்சி நடந்துகொண்டிருந்தது. அதற்காக அவர்கள் திட்டமிட்ட செயல் பாடுகளின் மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. 2030-ம் ஆண்டு சிங்கப்பூரை இப்போதே பார்ப்பதுபோல் அந்தக் கண்காட்சி மிளிர்ந்தது. திட்டமிட்ட திட்டத்தை அப்படியே நடைமுறைப் படுத்துவதால்தான் இவை எல்லாம் அங்கே சாத்தியப்படுகிறது. திட்டமிட்ட படி செயல்பட்டால் எந்த நாட்டையும் சிங்கப்பூராக்க முடியும். நம் நாட்டையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

அந்த அரசு நாட்டையும், மக்களையும் நினைக்கிறது. நாம் ‘நாட்டையும், மக் களையும்’ நினைப்பதைவிட தன்னைப் பற்றியும், தன் வளர்ச்சியைப் பற்றியும் மட்டுமே நினைத்தால் எப்படி நாடும், மக்களும் முன்னேற முடியும்? இதோ தேர்தல் வரப் போகிறது. நான் மக்க ளிடம் கேட்டுக்கொள்ளும் விஷயம்: நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றி யும் நினைப்பவர்களை, செயல்படுவர் களைத் தேர்ந்தெடுங்கள்.

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’

என்கிற குறளின்படி ஓட்டுப் போடுங்கள் என் பதைத்தான்.

அடுத்த வாரம் என்ன எழுதப் போகி றேன் என்கிறீர்களா? நான் இன்னும் சிங்கப் பூர் மனநிலையில் இருந்து வெளியே வரவே இல்லையே. எனக்கு இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். இந்தியச் சூழலுக்கு வந்துவிடுகிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்...

 

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-46-எந்த-நாடும்-சிங்கப்பூர்-தான்/article8247751.ece

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply

சினிமா எடுத்துப் பார் 47: ‘ஆறிலிருந்து அறுபது வரை’ உருவான விதம்

எஸ்.பி.முத்துராமன்

 
 
spmuthu_2749180f.jpg
 

சிங்கப்பூர், மலேசியாவில் 15 நாட்கள் ‘ப்ரியா’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பி னோம். இங்கே வந்ததும் அந்த நாடு களைப் போல நம் நாடு இல்லையே என்ற ஏக்கம் தொடர்ந்தது. அந்த ஏக்கத்தோடு நான் இயக்கிய சோகமான படத்தைப் பற்றிச் சொல்கிறேன். அது பஞ்சு அருணாசலம் எழுதி, தயாரித்த ‘ஆறிலிருந்து அறுபது வரை’.

ஒரு குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தால் என்னென்னப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என் பதை அடிப்படையாக வைத்து பஞ்சு அருணாச்சலம் ஒரு கதையை உருவாக்கி யிருந்தார். அந்தப் படத்தில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைப்போம் என்றார்.

‘‘கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடிக்கும் ரஜினிக்கு, இந்த ‘அழுகாச்சி’ கதை சரிபட்டு வருமா?’’ என்று பலரும் கேட்டனர். ‘‘சரியா வரும்’’ என்று கூறிய பஞ்சு, அந்தக் கதையை ரஜினியிடம் சொன்னார். ‘‘நல்ல எமோஷனல் சப் ஜெக்ட். வித்தியாசமா இருக்கு. கண் டிப்பா செய்வோம்’’ என்றார் ரஜினி.

‘ஆறிலிருந்து அறுபது வரை’ படப் பிடிப்பு தொடங்கியது. ரஜினி குடும்பத் தின் மூத்த மகனாக நடித்தார். எல்.ஐ.சி. நரசிம்மன், சக்ரவர்த்தி இருவரும் தம்பி களாக நடித்தனர். மனைவியாக ‘படாபட்’ ஜெயலட்சுமி. தங்கையாக ஜெயா மற்றும் கல்பனா, பத்மஸ்ரீ. ரஜினியின் காதலி யாக சங்கீதா. அப்போது ‘எம்.ஜி.ஆர்’ சங்கீதா, ‘சிவாஜி’சங்கீதா என்று இரண்டு சங்கீதாக்கள் இருந்தனர். இந்தப் படத்தில் நடித்தவர் ‘எம்.ஜி.ஆர்’ சங்கீதா.

‘‘தம்பி, தங்கைக்கு இவ்வளவு செய்த பிறகும் அவர்கள் எதிர்த்துப் பேசுறாங்களே. இப்படியெல்லாம் ரியல் வாழ்க்கையில் நடக்குமா?’’ என்று ரஜினிக்கு சின்ன நெருடல். எப்போதும் கதை, வசனம், காட்சி அனைத்தையும் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு நடிக் கும் ரஜினி ‘இதில் என்னமோ லாஜிக் இடிக்குதே’ என்று என்னோடு விவாதித் தார். இதைப் பார்த்த ‘படாபட்’ ஜெய லட்சுமி, ‘‘முதலில் நீங்க ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்தபிறகு என்னை நடிக்க கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு வெளியே போய் உட்கார்ந்துவிட்டார். அந்த அளவுக்கு எங்கள் விவாதம் இருந் தது. ஆம், ஆரோக்கியமான விவாதம்!

பஞ்சு அருணாச்சலம் அவர்களை படப்பிடிப்புக்கு வரச் சொல்லி, ரஜினியின் சந்தேகத்தை அவரிடம் கூறினேன். ரஜினியிடம் பஞ்சு ‘‘முதலில் 5 ஆயிரம் அடிகள் ஷூட் செய்வோம். அதை எடிட் செய்து போட்டுப் பார்ப்போம். உங்களுக் குப் பிடிக்கலைன்னா, வேற சப்ஜெக்ட்டுக் குப் போய்டுவோம்’’ என்றார். அதை கேட்ட ரஜினி, ‘‘ஓ.கே. சார்… நீங்க சொன் னதுபோலவே போட்டுப் பார்த்துட்டு முடிவெடுப்போம்’’ என்றார். அதே போலவே ரஜினிக்கு போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்த்த ரஜினி, ‘‘அருமையா வந்திருக்கு. எனக்கும் நல்ல பேர் கிடைக்கும்’’ என்றார். தொடர்ந்தது படப்பிடிப்பு.

ஒரு காட்சியில் ரஜினியின் குழந்தை பசியில் அழும். பால் பவுடர் காலி. டப்பா வில் கடைசியாக ஒட்டியிருக்கும் பால் பவுடரில் தண்ணீரைக் கலக்கி குழந்தைக்கு ஊட்டுவார், ‘படாபட்’ ஜெயலட்சுமி. அந்தச் சுவை பிடிக்காமல் குழந்தை அதை குடிக்காது. அந்தக் குழந்தையின் அழுகையைப் பார்த்து தியேட்டரே அழுதது. இப்படி பல காட்சிகள் ரசிகர்கள் மனதில் இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்தியது.

படத்தில் ரஜினிக்கு நண்பராக சோ நடித்திருந்தார். இப்படம் ரஜினி, சோ நட்பை பலப்படுத்திவிட்டது. சோ சட்ட வல்லுநர், பிசினஸ் மேனேஜ்மெண்ட் ஆலோசகர், பத்திரிகையாளர், அரசியல் வாதி, கதாசிரியர், நடிகர், இயக்குநர் என்று பல துறை வித்தகர். அதிக படங்களில் நடிக்க சோ ஒப்புக்கொள்ள மாட்டார். நான் இயக்கும் படங்கள் என்றால் மறுப்பு கூறாமல் நடிக்க வரு வார். காரணம், அவரது வேலையைப் புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல படப்பிடிப்பை நடத்தி அவரை அனுப்பி விடுவேன். ‘‘துக்ளக் பத்திரிகையின் பக்கங்களை முடிக்கும் நாள்ல என்னை சீக்கிரம் அனுப்பிடணும்’’ என்பார். அதே போல அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரம் எடுத்து முடித்து அவரை அனுப்பி வைப்போம்.

சோ என் மேல் தனிப் பிரியமும், மரியாதையும் வைத்திருப்பவர். பல விழா மேடைகளிலும், தொலைக் காட்சிகளிலும் அதை கூறியிருக்கிறார். சுப.வீரபாண்டியன் என் தம்பி என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். சோ அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்பவர்களில் என் தம்பியும் ஒருவர். இன்று வரைக்கும் ‘சுப.வீரபாண்டியன் இப்படி பேசுகிறாரே’ என்று ஒரு வார்த்தைக் கூட சோ என்னிடம் கேட் டதே இல்லை. உடல்நிலை சரியில்லாத அவரைச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. அவர் மீண்டும் நலம்பெற்று இயல்பான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று இந்த நேரத் தில் நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம். அவர் இல்லாத தேர்தல்களம் களை கட்டுமா?

‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் ‘படாபட்’ ஜெயலட்சுமியை ரஜினி திருமணம் செய்துகொள்வதற்கு முன், சங்கீதாவை காதலிப்பார். அந்தச் சூழலில் ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இசைஞானி இளையராஜாவின் வெற்றிப் பாடல் களில் இதுவும் ஒன்று. நாங்கள் எடுத் ததோ பட்ஜெட் படம். நானும், ஒளிப்பதி வாளர் பாபுவும் பேசிக்கொண்டு, சின்ன இடத்துக்குள் பிரம்மாண்டமாகத் தெரியும் ஒரு செட் அமைத்து லைட்டிங், பில்டர் எல்லாம் வைத்து அந்தப் பாடலை பிரம்மாண்டமாகக் காட்சியாக்கினோம். அந்த சோகப் படத்துக்கு மிகப் பெரிய ரிலீஃப் ஆக அந்தப் பாடல் அமைந்தது.

அந்தப் படத்தில், தன் வாழ்வில் அனுபவித்த விஷயங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பிப்பார் ரஜினி. நண்பர் சோ கொடுத்த உற்சாகத்தில் பெரிய எழுத்தாளராவார். வறுமைநிலை மாறி உயர்ந்த இடத்தை அடைவார். அந்த நேரத்தில் பிரிந்துபோன தம்பிகள், தங்கை மீண்டும் வருவார்கள். ஒரு ஈஸி சேரில் ஆடியபடி அவர்களைப் பார்ப்பார். ‘வசதி, வாய்ப்பு என்று வாழ்க்கை வந்த பிறகுதானே திரும்பி வருகிறீர்கள்’ என்பதைப் போல் பார்வையும், கேலிச் சிரிப்பும் இருக்கும். வசனமே கிடையாது. அப்படி ஒரு முகபாவம். அடுத்த நிமிடம் கைத்தடி கீழே விழும். ஈஸி சேர் அசைவது நிற்கும். உயிரும் பிரியும். அதுதான், ‘ஆறிலிருந்து அறுபது வரை’. அந்தப் படத்தின் நடிப்புக்காக ரஜினிக்கும், இயக்கத்துக்காக எனக்கும் முதல்வர் எம்.ஜி.ஆர் விருது கொடுத்தார்.

இப்படத்தின் எல்லா புகழும் பஞ்சு அருணாச்சலத்துக்கே சேரும். பஞ்சு அவர்கள் ‘அன்னக்கிளி’ மூலம் இளையராஜாவை இசையமைப்பாள ராக அறிமுகப்படுத்தினார். இன் றைக்கு இசைஞானி இளையராஜா 1,000 படங்களுக்கு இசையமைத்து விட்டார். வாழ்த்துவோம். இந்த ஊக்கத் தின் மூலம் இன்னும் 1,000 படங்களுக்கு இளையராஜா இசையமைக்கட்டும்.

ரஜினிக்காக இளையராஜா உருவாக்கினார் ஒரு ‘ரஜினி கீதம்’. எந்தப் படத்தில்… என்ன பாடல் அது? அடுத்த வாரம் சொல்கிறேனே…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-47-ஆறிலிருந்து-அறுபது-வரை-உருவான-விதம்/article8274945.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 48: ரஜினி விக் வைத்து நடித்த ஒரே படம்!

எஸ்பி.முத்துராமன்

 
 
 
  • rajini_2759159g.jpg
     
  • rajini1_2759158g.jpg
     

சென்ற வாரம் ‘ரஜினி கீதம் என்ற பாட்டு இடம்பெற்ற படம் எது?’ என்று கேட்டிருந்தேன். அது 8 வருட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். தயாரித்த ‘முரட்டுக்காளை’. இந்தப் படத்தை நான் இயக்குவதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.

ஒருநாள் நானும் ரஜினியும் வெளிப் புறப் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏவி.எம் ஸ்டுடியோவில் போட்டிருந்த செட்டில் படப்பிடிப்பை நடத்த வந்தோம். வரும்போது ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரின் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் அதனை மேற் பார்வை செய்துகொண்டிருந்தார். அதை பார்த்த நான் ரஜினியிடம், ‘‘செட்டியார் ஸ்டுடியோவில்தான் இருக்கிறார். பார்க்க லாமா?’’ என்று கேட்டேன். ‘‘பார்ப்போம் சார்… பார்ப்போம் சார்’’ என்று துடிப்புடன் சொன்னார். அவரைக் கூட்டிக் கொண்டு செட்டியார் அருகில் சென்று இருவரும் வணக்கம் சொன்னோம்.

செட்டியார் ரஜினியை பார்த்து, ‘‘நீங்க நடித்த படங்களைப் பார்த்தேன். நல்லா நடிக்கிறீங்க. ரொம்ப பெரிய நடிகராக வாங்க’’ என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்து பலித்தது. நாங்கள் அப்பச்சியிடம், ‘‘உள்ளே ஷூட்டிங் இருக்கு. நாங்க புறப்படுகிறோம்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டோம். அப்பச்சி, ‘‘முத்துராமா! கமலையும் ரஜினியும் வைத்து ‘ஆடு புலி ஆட்டம்’னு படம் பண்றே. அதே மாதிரி ஏவி.எம்-க்கும் கமலையும் ரஜினியையும் வைச்சு ஒரு படம் பண்ணு’’ என்றார். பூரித்துப் போய்விட்டேன். ‘‘அப்பச்சி… எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. நிச்சயம் பண்றேன்’’ என்று நன்றியோடு கூறி விட்டு, ஷூட்டிங் போனோம்.

இதையடுத்து ஒரு மாதத்துக்குள் ஏவி.எம் அவர்கள் இயற்கை எய்திவிட் டார். திரையுலகத்துக்கே வழிகாட்டி யாக இருந்த ஏவி.எம் மறைந்தது எல்லோருக்கும் பெரிய இழப்பு. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை’என்ற பழமொழிப்படி செட்டியார் சொன்ன வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் ஏவி.எம்.சரவணன் சார் என்னை அழைத்தார். ‘‘அப்பச்சி சொன்னதை மறந்துட்டீங்களா? நானும் என் சகோதரர்களும் சேர்ந்து ரஜினியை யும் கமலையும் வைச்சு படம் எடுக் கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம்’’ என்றார். மீண்டும் மகிழ்ச்சி.

அந்த செய்தியை ரஜினி அவர்களிடத் தில் சொன்னேன். அவர், ‘‘ஏவி.எம் குளோப்புக்குக் கீழே நின்னு, இந்த ஸ்டுடி யோவுக்கு எப்போ படம் பண்ணு வோம்னு ஏங்கியிருக்கேன். நான் ரொம்ப சந்தோஷத்தோட ஒப்புக்கிறேன். ஏற்பாடு பண்ணுங்க’’ என்றார். எங்க குழந்தையும் இன்றைய உலக நாயகனு மான கமலிடம் போய், ஏவி.எம் படம் பற்றிச் சொன்னேன். ‘‘சார்... சார்…’’ என்று சொன்னார். அதில் ஒரு தயக்கம் தெரிந்தது. ‘‘என்ன கமல் ஏன் தயங்குறே? விஷயத்தை சொல்லு’’ என்றதும், ‘‘சார், நானும் ரஜினியும் ஒண்ணாச் சேர்ந்து படம் பண்ண வேண்டாம்னு நினைக் கிறேன். ரஜினியை வெச்சி ஒரு படம் பண்ணுங்க. என்னை வெச்சி ஒரு படம் பண்ணுங்க’’என்றார். சரவணன் சாரிடம் போய் சொன்னேன். ‘‘அப்போ… முதல்ல ரஜினியை வெச்சி படம் பண்ணலாம். அதுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்க’’ என்றார்.

வழக்கம்போல எங்கள் குழுவின் கதாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்களி டம் கேட்டோம். அவர், ‘வித்தியாசமான கிராமச் சூழ்நிலையில் நடக்கிற கதை ஒண்ணு வெச்சிருக்கேன்’’ என்றார். எல் லோரும் கேட்டோம். ரஜினியும் கேட்டார். ரஜினிக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு பஞ்சு அவர்கள் திரைக்கதை - வசனம் எழுத, ஸ்க்ரிப்ட் தயாரானது. ஏவி.எம் மெய்யப்ப செட்டியார் காலத்தில் இருந்து கதை முழுவதும் தயாரான பிறகுதான் படத்தின் தொடக்க விழாவை வைப்பார் கள். ஏவி.எம் நிறுவனம் எப்போதும் தொடக்க விழாவை ஆடம்பரமாக கொண் டாட மாட்டார்கள். தொடக்க விழாவைப் பற்றி ஏவி.எம் லெட்டர் பேடில் எழுதி கடிதம் அனுப்புவார்கள். இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், இப்போ தைய தொடக்க விழாக்களைப் பார்த்து அசந்துபோகிறேன். ஒரு அழைப்பிதழின் மதிப்பு ஆயிரம் ரூபாய். சென்னை முழுக்க போஸ்டர் , பேனர் மற்றும் விழா நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்த பல பல லட்ச ரூபாய். படம் எடுப்பதற்கான தொகையில் பல பல லட்சங்களை இதற்கே செலவு செய்துவிட்டால் பட் ஜெட்டில் துண்டு விழாதா? ஏவி.எம்மின் இலக்கணப்படியே ‘முரட்டுக் காளை’ தொடக்க விழா ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் களுக்கு தலையில் விவசாயியை போல் விக் வைத்து, ஒரு வேட்டி, ஒரு பனியன், ஒரு துண்டு என அவரை கிராமத்து ஆளாக்கினோம். படம் முழுக்க அவர் விக் வைத்து நடித்த ஒரே படம் ‘முரட்டுக் காளை’தான். படத்தின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி ‘முரட்டுக்காளை’யாகவே ரஜினி நடித்தார்.

படத்தின் வெற்றிக்கு இதன் கதா பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர் வும் ஒரு காரணம். இந்தப் படத்தின் கதாநாயகி ரதி. அழகோ அழகு. ஆனால், அவருக்குத் தமிழ் தெரியாது. அவ ருக்கு துணை இயக்குநர் லட்சுமி நாரா யணனும், நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனும் தமிழ் சொல்லிக் கொடுத் ததே ஒரு வேடிக்கை. இப்படத்தில் ரஜினிக்கு சகோதரர்கள் நாலு பேர். எங்கள் குழுவின் ஆஸ்தான நகைச் சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் இதில் ரஜினிக்கு முதல் தம்பி. அவருடைய தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, அவருடைய தாய் ஒய்.ஜி.பி.ராஷ்மி, ஒய்.ஜி.மகேந்திர னின் மனைவி சுதா ஆகியோர் கலைக்காக வும், கல்விக்காகவும் தங்களையே அர்ப் பணித்துக் கொண்டவர்கள். அவர்களால் நாடக உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர் கள், நடிகைகள் ஏராளம். அவர்களுக்கு இங்கே நாம் நன்றி சொல்வோம்.

படத்தில் ரஜினிக்கு இரண்டாவது தம்பி ராஜப்பா, மூணாவது தம்பி ராமு, நாலாவது தம்பி அர்ஜூனன். இந்தக் கதாபாத்திர தேர்வில் ரஜினிக்கு சமமான முக்கியத்துவம் கொண்டதாக ஒரு கதாபாத்திரம்... யாரைப் போடுவது என்று தலையைப் பிய்த்துக் கொண்டோம். ஒரு வழியாக ஒரு நடிகர் எங்களுக்கு பிடிபட்டு விட்டார். அவரிடம் எப்படி கேட்பது?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-48-ரஜினி-விக்-வைத்து-நடித்த-ஒரே-படம்/article8303534.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 49: ரஜினிக்கு சமமான நடிகர்!

எஸ்பி.முத்துராமன்

 
 
  • ‘முரட்டுக்காளை’ படத்தில் (1980) ரஜினி ஜெய்சங்கர்.
    ‘முரட்டுக்காளை’ படத்தில் (1980) ரஜினி ஜெய்சங்கர்.
  • மனைவி முத்துலட்சுமி, குழந்தைகளுடன் சுருளிராஜன்
    மனைவி முத்துலட்சுமி, குழந்தைகளுடன் சுருளிராஜன்
  • ‘முரட்டுக்காளை’ படத்தில் ஜெய்சங்கருடன் சுருளிராஜன்.
    ‘முரட்டுக்காளை’ படத்தில் ஜெய்சங்கருடன் சுருளிராஜன்.

ஏவி.எம்மின் ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிக்கு சமமான ஒரு நடிகரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நானும், பஞ்சு அருணாசலம் அவர்களும் நினைத்தோம். இருவரும் மனதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தும் விட்டோம். ஆனால், அந்த சமமான கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம். அதுக்கு நாங்கள் நினைத்தவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். அவர் அப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, எங்களின் பல படங்களில் கதாநாயகனாக நடித் தவர்.

‘முரட்டுக்காளை’படத்தில் ரஜினிக்கு எதிராக நடிக்க வேண்டிய வில்லன் பாத் திரம். எப்படி அதை ஜெய்சங்கரிடம் கேட் பது என்று நானும், பஞ்சு அவர்களும் தயங்கினோம்.

விஷயத்தை சரவணன் சாரிடம் போய் சொன்னதும், ‘‘என்ன முத்து ராமன்? நம்ம ஜெய்சங்கர்... அவரிடம் நான் பேசுறேன்’’ என்று ஜெய்சங்கருக்கு போன் போட்டார். ‘‘இதோ 10 நிமிஷத்துல அங்கே வர்றேன்’’ என்று சொன்ன ஜெய், அது போலவே ஸ்டுடியோவுக்கு வந்தார். எப்போது ஜெய் உள்ளே வந்தாலும் ‘ஹாய்… ஹாய்…’ என்று சொல்லிக்கொண்டேதான் நுழைவார். ஜெய் இருக்கும் இடத்தில் ‘ஹாய்… ஹாய்… ஹாய்’தான்.

‘‘என்ன விஷயம் சார்? அடடே, பஞ்சு சார், முத்துராமன் சார்… நீங்க எல்லாரும் இருக்கீங்களே?’’ என்றார். உடனே சரவணன் சார், ‘‘முரட்டுக் காளைனு ஒரு படம் எடுக்கப் போறோம். ரஜினி சார்தான் ஹீரோ. அவருக்கு சரி சமமான வில்லன் ரோல். அந்தக் கதாபாத்திரத்துக்கு உங்களை நடிக்க வைக்கலாம்னு நினைக்கிறோம். ஹீரோவா நடிச்சிட்டிருக்கிற உங்களை எப்படி கேக்குறதுன்னு முத்துராமனும், பஞ்சுவும் ரொம்ப யோசிக்கிறாங்க. நம்ம ஜெய். நான் கேட்கிறேன்னு தான் உங்களை வரச் சொன்னேன். கட்டாயம் இல்லை. நீங்க விரும்பினா பண்ணுங்க. இல்லைன்னா எந்த வருத்த மும் இல்லை. ரெண்டு நாள் டைம் எடுத் துக்கங்க’’ என்றார். ஐந்து நிமிஷம் யோசித்த ஜெய், ‘‘நான் நடிக்கிறேன் சார்’’ என்றார். அவரிடம் சரவணன் சார், ‘‘யோசிச்சு சொல்லுங்க ஜெய்’’ என்றார். அதற்கு ஜெய்சங்கர், ‘‘நீங்க, பஞ்சு சார், முத்துராமன் சார் எல்லாம் எனக்குக் கெடுதல் பண்ணப் போறதில்லை. நிச்ச யம் எனக்கு அது நன்மையாத்தான் இருக் கும். கண்டிப்பா நடிக்கிறேன்’’ என்றார்.

உடனே ரஜினிக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். ‘‘ஜெய் வில்லன் ரோலுக்கு ஒப்புக்கொண்டாரா? என் காலத்திலேயே ஹீரோவா நடிக்கிற வராச்சே’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்ட ரஜினி மேலும் தொடர்ந்து சொன்னார்: ‘‘சரவணன் சார்கிட்ட சொல்லுங்க. விளம் பரத்துல எனக்கு எவ்வளவு முக்கியத் துவம் கொடுக்குறாங்களோ, அதே முக்கியத்துவத்தை ஜெய்சங்கர் சாருக் கும் கொடுக்கணும். அதே போல, நீங் களும் பஞ்சு சாரும் வில்லன் அடிவாங்குற மாதிரி சீன்களை வைக்காம, ரெண்டு பேருக்கும் சமமா டஃப்பான சீன்களை வைக்கணும்.’’ என்றார்.

அவர் சொன்னதைப் போல, ‘முரட்டுக் காளை’போஸ்டர், ஸ்டில்ஸ் எல்லாவற்றிலும் குளோஸ்-அப்ல ரஜினி யும், ஜெய்சங்கரும் சேர்த்தே போஸ் கொடுக்கிற மாதிரி இருக்கும். ரஜினியும், ஜெய் சாரும் வரும் எல்லா காட்சிகளுமே பவர்ஃபுல் காட்சிகளா இருக்கும். சண்டை, நடிப்புன்னு ரஜினியும், ஜெய் சங்கரும் பெரிய அளவுல பின்னி எடுத் தாங்க. இருவரும் மோதும் கிளை மாக்ஸ் காட்சியில்கூட ரஜினியிடம் தோற்றுப் போகாமல் ஜெய் தானே சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொள்வதைப் போல காட்சி வைத்தோம். அந்தப் படம் வெற்றிப்படமானதும், நிறைய வில்லன் வேஷங்கள், குணச் சித்திர வேடங்கள் ஜெய்க்கு வந்தன. அப்போது ஜெய் சொன்னார், ‘‘முரட்டுக் காளை படத்தில் நடிக்கிற வரைக்கும் நான் சம்பாதித்தது எல்லாம் சம்பாத்தி யம். அந்தப் படத்துக்கு பிறகு சம்பாதித் தது எல்லாம் ஏவி.எம் எனக்குக் கொடுத்த போனஸ்.’’

அந்தப் படத்தில் வில்லன் ஜெய் சங்கருக்கு உதவியாளராக சுருளிராஜன் நடித்தார். படத்தில் ஜெய்சங்கருடைய பரம்பரையின் மேல் உள்ள கோபத்தால், பழி வாங்கும் எண்ணத்தோடு ஜெய் கூடவே இருந்து அவருக்கு குழி தோண்டு வார் சுருளிராஜன். இது படம் பார்க்கும் மக்களுக்குத் தெரியும். ஜெய்க்குத் தெரியாது. அப்படி காட்சியை அமைத்ததால் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்தன. சுருளியின் நடிப்பில் சுறுசுறுப்பும் காட்ட முடிந்தது.

சுருளிராஜன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. குணச்சித்திர நடிகரும் ஆவார். சின்ன வசனம் பேசுவதில்கூட கைதட்டல் வாங்கிவிடுவார். ‘பத்துக் குள்ள ஒரு நம்பர் சொல்லு?’ என்று கேட்டால். ‘ஒம்ம்போது’ன்னு அவரது குரலில் சொல்லி கைத் தட்டலை அள்ளி விடுவார். அந்த மாதிரி ‘முரட்டுக் காளை’ படத்தில் ஜெய்க்கு நல்லது செய்ற மாதிரி கெட்டது செய்யும் இடங்க ளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எங்களது பல படங்களில் நடித்தவர் சுருளிராஜன். எங்கள் குழுவில் ஒருவராகத்தான் அவர் இருந்தார். எப்படியோ அவரிடம் மது அருந்தும் கெட்டபழக்கம் ஒட்டிக் கொண்டது.

எவ்வளவோ நாங்கள் எடுத்துச்சொல்லியும் அவரால் அதை விடவே முடியவில்லை. ஒரு நாள் எங்கள் படப்பிடிப்பிலேயே மயங்கி விழுந்தார். நான்தான் டாக்டர் வீரபத்திரனிடம் கூட்டிக் கொண்டுபோனேன். ‘‘இனி மதுவை தொட்டால் மரணம்தான்’’ என்று டாக்டர் எச்சரித்தார். இரண்டு, மூன்று மாதம் சிகிச்சை செய்தோம். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஒரு நல்ல கலைஞனை மது குடித்துவிட்டது. ‘மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு’ என்று எழுதி வைத்துவிட்டு நாம் மதுவை தாராளமாக விற்கிறோம். மது குடிப்பவர்கள் ப்ளீஸ்... சுரு ளியை நினைத்துக் கொண்டாவது மது குடிப்பதை நிறுத்துங்கள். நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் நல்லது!

சுருளிராஜன் அவர்களின் மனைவி முத்துலட்சுமியைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும். கணவன் இறந்த தும் முடங்கிப்போய் மூலையில் உட்காராமல், சுருளி சேர்த்த புகழுக்கு பலம் சேர்க்கும் வகையில் தங்கள் மகன்கள் சண்முகவேலன், குமரவேலன், செந்தில்வேலன் மூவரையும் வளர்த்து, நன்கு படிக்க வைத்து, இன்றைக்கு அவர்கள் நல்ல உத்தியோகத்தில் பணி யாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதில் செந்தில்வேலன் திரைத் துறையில் கிராஃபிக்ஸ் பணிகளில் வளர்ந்துகொண் டிருக்கிறார். இதைப் பார்ப்பதற்கு சுருளி ராஜன் இல்லையென்றாலும் அந்தக் குடும்பம் தலைநிமிர்ந்து வெற்றி பெற்றதற்கு அவரது மனைவி முத்து லட்சுமியும், மகன்களும்தான் காரணம்.

முத்துலட்சுமி அவர்கள் சரவணன் சாரிடமும், என்னிடமும் அடிக்கடி சில ஆலோசனைகளைக் கேட்டுக்கொள் வார். அந்த ஆலோசனைகளைச் செயல் படுத்தி அவர் தனது குடும்பத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு வந்ததைப் பார்க்கும்போது சரவணன் சாருக்கும், எனக்கும் மிகுந்த திருப்தி. மார்ச்-8 மகளிர் தினத்தில் முத்துலட்சுமி சுருளிராஜனுக்கு எங்கள் பாராட்டுக்கள்!

‘முரட்டுக் காளை’ கதை முழுவதும் கிராமத்தில் நடப்பது. சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கதையில் கிராமம் ஒரு முக்கிய கதாபாத்திரம். தமிழகத்தில் நல்ல ஒரு கிராமம் எங்கே இருக்கிறது என்று தேடி அலைந்தோம். அது எங்கே இருந்தது?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-49-ரஜினிக்கு-சமமான-நடிகர்/article8330885.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 50: ரஜினி காளையை அடக்கினாரா?

எஸ்பி.முத்துராமன்

 
  • ரேக்ளா பந்தயத்தில் ரஜினி
    ரேக்ளா பந்தயத்தில் ரஜினி
  • காளையுடன் ரஜினி
    காளையுடன் ரஜினி
  • ‘முரட்டுக்காளை’ (1980) படத்தில் ரஜினி, ரத்தி, ஒய்.ஜி. மகேந்திரன்
    ‘முரட்டுக்காளை’ (1980) படத்தில் ரஜினி, ரத்தி, ஒய்.ஜி. மகேந்திரன்

முரட்டுக்காளை’ படத்தில் கிரா மத்தை ஒரு முக்கிய கதா பாத்திரமாக்க நினைத்தோம். அதற்காக ஒரே இடத்தில் வயல், வரப்பு, காடு, மலை, நதி ஆகியவைச் சேர்ந்த மாதிரி லொக்கேஷன் தேவைப்பட்டது. அப்போதுதான் பொள்ளாச்சியைச் சுற்றி யுள்ள பகுதியில் கிராமம் சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளையும் படம்பிடிப்பதற்கு ஏற்ற இடங்கள் இருப்பதை அறிந்தோம். அங்கு போய் பார்த்தபோது 25 கி.மீ. தொலைவுக்குள்ளேயே வயல், நதி, புல்வெளி, மலை, காடு எல்லாமும் இருந் தது.

அங்கே போனதும் சமத்துவபுரம் ஜமீன்தார் குடும்பத்தார், பெரிய வானவ ராயர், சின்ன வானவராயர், அவர்களு டைய பணியாளர்கள், ஊத்துக்குளி ஜமீன் அங்குசாமி, பொள்ளாச்சி கிருபாகரன், திரையரங்க அதிபர் கோபாலகிருஷ் ணன், வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த சிவாஜியின் நண்பர் முத்துமாணிக்கம், குப்புசாமி, டிரைவர் சிவராமன் (இவர் தான் லொக்கேஷன் வழிகாட்டி) உள் ளிட்ட பல நண்பர்களும் ஏவி.எம் படத்துக் காக முழு மனதோடு உதவி செய்தார்கள்.

பொள்ளாச்சி லொக்கேஷனில் எடுக் கப்பட்ட முதல் படம் ‘முரட்டுக்காளை’. அப்போது அங்கு தங்குவதற்கு வசதி யான ஹோட்டல்கள் இல்லை. அதனால் ஜமீன்தார் வீட்டிலேயே ரஜினியை தங்க வைத்தோம். அவர்கள் சந்தோஷத்தோடு விருந்தோம்பல் செய்தார்கள். மற்ற நடிகர்களை பொள்ளாச்சியில் இருந்த இரண்டு ஹோட்டல்களில் தங்க வைத்தோம்.

நானும், கேமராமேன் பாபுவும் அரசினர் தங்கும் விடுதியில் தங்கினோம். மற்ற குழுவினர் திருமண மண்டபத்தில் தங்கினார்கள். இன்றைக்கு பொள்ளாச்சி அதிக படப்பிடிப்பு நடக்கிற ஷூட்டிங் நகரமாக மாறிவிட்டது. அன் றைக்கு இரண்டே ஹோட்டல்கள்தான். இன்றைக்கு பல பெரிய ஹோட்டல்கள். இதற்கு ஏவி.எம் எடுத்த ‘முரட்டுக்காளை’ படம்தான் காரணம்.

படத்தில் ரஜினியும் அவரது சகோதரர் களும் தனியாக வாழும் சூழலில் கதா நாயகி ரதி அவர்களிடத்தில் வந்து சேர் கிறார். ரஜினி சகோதரர்களின் அப்பாவித் தனம் அவருக்கு ரொம்ப பிடித்துப்போகி றது. சகோதரர்களுக்கும் அவரை பிடித் துப்போகிறது. மூத்த சகோதரர் ரஜினி, ரதியைப் பார்க்கும் பார்வையில் வித்தி யாசம் தெரியும். உடனே ரதி பாட, ரஜினியின் சகோதரர்கள் பின்னணியில் பணியாற்ற, ‘எந்தப் பூவிலும் வாசமுண்டு… எந்த பாட்டிலும் ராகம் உண்டு...’ என பாடல் இசைக்கும்.

அதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் பசுமை நிறைந்த வயல்கள் சூழ்ந்த இடம். காற்றில் வயல்களில் இருந்த நாற்றுகள் நடனம் ஆடும். அந்த நாற்று நடனத்தை படம்பிடித்து ரதி நடனத் தோடு சேர்த்துக்கொண்டோம். அந்தப் பாடல் காட்சியில் அப்படியொரு பசுமைப் படர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த அழகை மேலும் அழகு படுத்தியவர் ஒளிப்பதிவாளர் பாபு.

கிராமப்புறங்களில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தில் கலந்துகொண்டு ரஜினி வெற்றி பெறுகிற மாதிரி ஒரு காட்சி. அந்த ரேக்ளா பந்தயத்தைப் பற்றி விசாரித்தபோது, அந்தப் பகுதி யில் ரேக்ளா பந்தயத்துக்கே சின்ன வானவராயர் அத்தாரிட்டி என்றார்கள். வானவராயரைப் போய் சந்தித்தோம். ‘அந்தப் பொறுப்பை என்கிட்ட விட்டுடுங்க. நான் பார்த்துக்குறேன்’என்று அவர் சந்தோஷப்பட்டார். பக்கத்து கிராமங்களில் எல்லாம் ‘பொள்ளாச்சி யில் ரேக்ளா பந்தயம் நடைபெறவுள் ளது’ என்று தண்டோரா போட்டு விளம்பரம் செய்துவிட்டார். அவர் சொன்ன தேதியில் ரேக்ளா வண்டிகளும், மாடுகளும் வந்து குவிந்துவிட்டன. ரேக்ளா பந்தயத்தில் ரஜினி பங்கேற்க, அவரை துரத்திக்கொண்டு பல ரேக்ளா வண்டிகள் பின் தொடர்வதைப் பல கோணங்களில் படம்பிடித்தோம். திடீ ரென்று ஒளிப்பதிவாளர் பாபு சாருக்கு ஓர் ஐடியா.

‘‘ரேக்ளா வண்டியின் அடியில் கேமராவை கட்டி வைத்து ஷூட் செய்தால், வண்டியின் இரண்டு சக்கரங்களும் உருள்வதும் முன்னால் போகிற வண்டிகள் வேகமாக ஓடுவது மாக ஷாட் த்ரில் ஆக இருக்கும்’’ என்றார். அவர் சொன்ன மாதிரி கேமராவை ரேக்ளா வண்டியின் அடிப் பாகத்தில் கட்ட, அவுட்டோர் யூனிட்காரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சென்னையில் இருந்த ஏவி.எம்.சரவணன் சாரிடம் இந்த விஷயத்தைச் சொன்னோம். அவர், அவுட்டோர் யூனிட் முதலாளியிடம் பேசி ‘கேமராவுக்கு எதாவது ஆச்சுன்னா, அதுக்கு நாங்க பொறுப்பேத்துக்குறோம்’ என்று உறுதிகொடுத்து அனுமதி வாங் கிக் கொடுத்தார். ரேக்ளா வண்டியின் அடிப்பாகத்தில் கேமராவை கட்டி வைத்து ஷூட்டிங் எடுத்தோம். படத்தில் அந்த ரேக்ளா சேஸ் அவ்வளவு விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

‘முரட்டுக்காளை’ படத்தில் பண்ணை யார் ஜெய்சங்கருக்கும் விவசாயி ரஜினிக் கும் எப்போதும் போராட்டம்தான். ஏழைகளுக்கு ஆபத்து சமயங்களில் பணம் கொடுத்து உதவுவதைப் போல பணத்தைக் கொடுத்து, அவர்களுடைய நிலங்களை அபகரித்துவிடுவார் ஜெய் சங்கர். அதைப் போலவே ரஜினியின் நிலத்தையும் அபகரிக்க பல முயற்சி களை செய்வார். ஆனால், ஜெய்சங்கரு டைய பணக்காரத் திமிர் ரஜினியிடம் எடுபடாது.

மஞ்சு விரட்டு என்பது பழமை யான ஒரு வீர விளையாட்டு. ‘முரட்டுக் காளை’யில் ரஜினி மாட்டை வீரத்துடன் அடக்குவது போன்று காட்சி அமைத்திருந் தார் பஞ்சு அருணாசலம். மஞ்சு விரட்டு மாட்டை அடக்குகிற வீரனுக்கு பெண்ணை திருமணம் செய்துகொடுப் பது என்பது அந்த வீரத்துக்குக் கொடுக்கும் விருது. இந்த மஞ்சு விரட்டு இன்றைக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, வாடிவாசல், சிராவயல் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. அந்த ஊர்களுக்குப் போய்ப் பார்த்தோம்.

மஞ்சு விரட்டு முடிந்துவிட்டது என்றும், அடுத்த மாதம் பாகனேரியில் நடக்கும் என்றும் சொன்னார்கள். பாகனேரிக்குப் போனோம். அங்கு காங்கிரஸ் தியாகி உ.சுப்ரமணியம், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திருஞானம், உ. பில்லப்பன், கிருஷ்ணவேணி தியேட் டர் தியாகராஜன் போன்றவர் களைச் சந்தித்தோம். ‘‘மஞ்சுவிரட்டை படம் எடுக்க எல்லா உதவிகளும் செய்து தருகிறோம்’’ என்றார்கள். ‘‘எங்க ஊர்ல ஏவி.எம். ஷூட்டிங் நடக்குறது எங்களுக்கு பெருமை. ரஜினி வருவது எங்க ஊருக்கே பெருமை’’ என்று மகிழ்ந்து போனார்கள். அவர்களுடைய செட்டிநாட்டு விருந்தோம்பலை இன்றைக்கும் நாங்கள் மறக்கவில்லை.

மஞ்சு விரட்டை படம் பிடிக்கத் தயாரா னோம். தாரை தப்பட்டை முழங்க கொட்டடியில் இருந்து காளைகளைத் திறந்துவிட்டார்கள். ஆக்ரோஷத்தோடு காளைகள் திடலுக்கு ஓடி வந்தன. அதனை வீரர்கள் மரித்து, அடக்குவதற் குப் போராடினார்கள். சில காளைகள் வீரர்களின் வயிற்றில் குத்த, அவர்கள் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். சில இளைஞர்களை காளைகள் பந்தாடின. இந்தக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் பாபு சாருடன் இணைந்து கேசவன் மற்றும் பிரசாத்தும் ஆளுக்கொரு கேமரா மூலம் படம்பிடித்தனர். எந்த நேரத்திலும், எதுவும் நடக்கலாம் என்ற சூழலில் ரஜினியை களத்தில் இறக்கினோம். சீறிப் பாயும் காளைகளோடு ரஜினியும் சீறிப் பாய்ந்தார்.

ரஜினி காளையை அடக்கினாரா? காளை ரஜினியைக் குத்தியதா?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-50-ரஜினி-காளையை-அடக்கினாரா/article8360258.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 51: ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

எஸ்பி.முத்துராமன்

 
 
  • ‘முரட்டுக்காளை’ படத்தில் ஜெய்சங்கர், சுமலதா, ரஜினி (1980)
    ‘முரட்டுக்காளை’ படத்தில் ஜெய்சங்கர், சுமலதா, ரஜினி (1980)
  • ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடல் காட்சியில் ரஜினி...
    ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடல் காட்சியில் ரஜினி...
  • rajini11_2785705g.jpg
     

‘முரட்டுக்காளை’ படத்தில் முக்கிய மான களம் மஞ்சு விரட்டு. அந்தப் போட்டியில் கலந்துகொண்டு ரஜினி வெற்றி பெற்றால்தான் ஊரில் நிஜமான முரட்டுக்காளை என்ற பெயர் அவருக்குக் கிடைக்கும். மஞ்சுவிரட்டுக் களத்தில் இறங்கிய ரஜினி முரட்டுக் காளையோடு போராடினார். அவரை காளை குத்திவிடுமோ என்கிற பயம் எங் களுக்கு.

ஆனால், ரஜினியோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் களத்தில் இறங்கி காளையோடு மல்லுக் கட்டினார். அந்தச் சண்டைக் காட்சியில் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் கூடவே பாதுகாப்பாக இருந்து படப் பிடிப்பைப் பரபரப்பாக்கினார். நாங்கள் நினைத்தது போல் காளையோடு ரஜினி மோதும் சண்டைக் காட்சி த்ரில்லாகவே அமைந்தது.

ரஜினி களத்தில் காளையோடு மோதும் குளோஸ்அப் காட்சிகளை, சென்னையில் உள்ள ஏவி.எம் பள்ளி விளையாட்டு மைதானத்தில் எடுத்தோம். ஒரிஜினல் மஞ்சுவிரட்டுக் களத்தில் எப்படி படமாக்கினோமோ, அதே போல அங்கும் காளைகளை வைத்து காட்சியை எடுத்தோம். இரண்டு இடங்களையும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு எடிட்டர் விட்டல் மேட்ச் செய்து கொடுத் தார். மஞ்சுவிரட்டில் காளையோடு மோதி ஜெயிக்கும் ரஜினி, அந்தக் காளையின் கொம்பில் கட்டப்பட்டத் துணியை அவிழ்த்து, தலைப் பாகையாகக் கட்டிக் கொள்வார். அதைப் பார்க்கும் ஊர் மக்கள் ரஜினியைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

அப்போதுதான் ‘பொது வாக எம்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ என்கிற பாட்டு ஒலிக்கும். இளையராஜா இயல்பாகவே கிராமியப் பாடல்களை சிறப்பாக அமைப்பார். அவர் கிராமத்தில் பிறந்தவர் என்பதால் இந்தப் பாட்டை இன்னும் ஒருபடி மேலே போய், பெண்கள் குலவை இடுவதை எல்லாம் சேர்த்து அதை வெற்றிப் பாடலாக்கினார். அந்தப் பாட்டை பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதினார். இப்போது ரஜினி அவர்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி வாழ்கிறாரோ, அதெல்லாம் அப்போதே வார்த்தைகளில் கொண்டுவந்திருந்தார் பஞ்சு. ரஜினி ரசிகர்களால் அந்தப் பாடல் இன்றும் கொண்டாடப்படுகிறது. அவர்களுடைய விழாக்களில் எல்லாம் இந்தப் பாட்டு ‘ரஜினி கீதமாக’ ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தென்காசி அருகே ஓடும் ரயிலில் ஒரு சண்டைக் காட்சியை எடுக்கும் வேலையில் இறங்கினோம். விசாரித்த போது அந்த ரயில்வே டிராக்கில் காலை யில் ஒரு ரயில் போகும், மாலையில் ஒரு ரயில் திரும்பும் என்று கேள்விப்பட்டோம். இடைப்பட்ட நேரத்தில் ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஷூட் பண்ணலாம் எனத் திட்டமிடப்பட்டது. பொதுவாக சண்டை காட்சிக்கு என்று ஒரு பட்ஜெட் ஒதுக்கிக்கொள்வது வழக்கம். ஷூட்டிங் நடத்தும் இடத்தை பார்த்தபோது, கண்டிப்பாக பட்ஜெட்டில் மூணு, நான்கு லட்சம் அதிகம் செலவாகும் என்று தெரிந்தது.

சென்னைக்கு வந்து ஏவி.எம். சரவணன் சாரிடம், ‘‘அந்தக் காட்சியைப் படமாக்கணும்னா மூன்று நாட்கள் ரயிலை வாடகைக்கு எடுக்கணும். ஃபிலிம்மை நம்ம கண்ட்ரோல்ல வைத்து ஷூட் செய்ய முடியாது. அங்கே சென்று பார்த்ததில் கண்டிப்பா ஆறு முதல் ஏழு லட்சம் வரைக்கும் செலவாகும். உங்க பட்ஜெட்டுக்கு அது தாங்குமா? நீங்கதான் யோசித்து சொல்லணும்’’ என்றேன். அதற்கு சரவணன் சார், ‘‘மூன்று லட்சம் கூடுதலா செலவானா மேனேஜ் பண்ணிக்கலாம் முத்துராமன். ஆனா, எடுக்கப்போற ரயில் ஃபைட் மாதிரி தமிழ் படங்கள்ல இதுவரைக்கும் வரலைன்னு சொல்ற அளவுக்கு உங் களால எடுக்க முடியும்னா, பரவா யில்லை’’ என்றார்.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு படப் பிடிப்புக்கு அனுமதி பெற்று கிளம்பி னோம். ஓடும் ரயிலிலேயே பல காட்சிகள் எடுக்கப்பட்டன. பாலத்துக்கு மேல் ரயில் போகும்போது ஃபைட் சீன்களை எடுக்கும்போது, கொஞ்சம் மிஸ் ஆனாலும் பாலத்தில் இருந்து கீழே விழ வேண்டியதுதான். அதனாலேயே பல காட்சிகளை டூப் போட்டு எடுக்கலாம் என்று ஜூடோ ரத்தினம் திட்டமிட்டி ருந்தார்.

‘‘டூப் போட்டு எடுத்தா, லாங் ஷாட் வெச்சிடுவீங்க. சீன்ல ஒரு ஈர்ப்பு இருக்காது. நானே ஃபைட் பண்றேன்’’ என்று சொல்லி, டூப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை ரஜினி. ‘‘ரிஸ்க் ஆகிடும்… சார்’’ என மறுத்தோம். ‘‘எனக்கு ரிஸ்க் ஆகிடும்னு சொல்றீங்களே. எனக்கு டூப் போட்டு நடிக்கிறவரும் உயிருள்ள மனுஷன்தானே. அவருக்கு மட்டும் ரிஸ்க் இல்லையா?’’ என்று ரஜினி எங் களோடு விவாதம் செய்து, கடைசியில் அவரே அந்த ரயில் சண்டை காட்சிகளில் ஒரிஜினலாக நடித்தார். அந்த சண்டைக் காட்சி பெரிய அளவில் பெயர் வாங்கி யது. ஆங்கிலப் படங்களுக்கு இணை யாக பேசப்பட்டது அந்தக் காட்சி. ‘முரட்டுக்காளை’ படத்தோட ரயில் சண்டை மாதிரி இருக்கணும்’னு அடுத் தடுத்து பல இயக்குநர்கள் உதாரணம் சொல்ல ஆரம்பிச்சாங்க. தங்களோட படங்களுக்கு அதே லொக்கேஷனில் படப்பிடிப்பும் நடத்தினாங்க.

ஒளிப்பதிவாளர் பாபுவும், அவரது உதவியாளர்களும் ஒளிப்பதிவாளர் சோமுவும் தங்கள் உயிரைக் கொடுத்து அந்தக் காட்சிகளை எடுத்தார்கள். சோமு, கேமராவை எந்த இடத்திலும் ‘வாக்குவம் பேஸ்’ துணைக்கொண்டு பொருத்திவிடுவார். பல்லி போல் ஒட்டிக்கொள்ளும் வாக்குவம் பேஸில், கேமராவை வைத்து ரயில் இன்ஜின் முன், கேரேஜ் பக்கத்தில், ஏன், ரயிலுக்கு அடியிலும் பொருத்தினார். எல்லா ஷாட்டுகளும் த்ரில்லாக அமைந்தன. அந்தக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு பெற்றன. எங்கள் குழுவின் திட்டமிடலும் ரொம்ப உபயோகமாக இருந்தது. குறிப்பாக ஜூடோ ரத்தினம், அவரு டைய உதவியாளர் விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், முஸ்தபா, விக்கி, ராமு, பட்டுசாமி, ரவி போன்றவர்கள் எல்லாம் காரணம். அன்றைக்கு ஜூடோ ரத்தினத்திடம் உதவியாளர்களாக இருந்த அவர்கள் எல்லாம் இன்றைக்கு சண்டை இயக்குநர்கள். இந்தப் பாராட்டு முழுதும் ஜூடோ ரத்தினத்தையே போய்ச் சேரும்.

படத்தில் ஜெய்சங்கரின் தங்கை சுமலதாவுக்கு, ஹீரோ ரஜினியின் மீது காதல். ரஜினியைத் தன் பக்கம் இழுக்க அவரையே சுற்றிச் சுற்றி வருவார். அப்போது சுமலதா, ‘மாமன் மச்சான் ஹே… நீ தானோ… ஆசை வச்சா ஏன் ஆகாதோ’ என்று பாடிக் கொண்டு வருவார். இந்தப் பாட்டைக் கேட்டு ரஜினி, சுமலதாவிடம் இருந்து தப்பிக்க காடு, மலையெல்லாம் ஓடுவார். தங்கையின் காதல் விஷயம் ஜெய்சங்கருக்குத் தெரிந்ததும் ஒரு காட்சி வைக்க திட்டமிட்டோம்.

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-51-ஒரு-போட்டியின்னு-வந்துவிட்டா-சிங்கம்/article8388769.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 52: சண்டையில் தெரிந்த அன்பு!

 

 
 
  • ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிகாந்த், சுமலதா.
    ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிகாந்த், சுமலதா.
  • மகனின் சிலையுடன் ஜி.சீனிவாசன், புலியூர் சரோஜா.
    மகனின் சிலையுடன் ஜி.சீனிவாசன், புலியூர் சரோஜா.
  • மகன் சத்யாவுடன் புலியூர் சரோஜா, ஜி.சீனிவாசன்.
    மகன் சத்யாவுடன் புலியூர் சரோஜா, ஜி.சீனிவாசன்.
  • சுமலதா, அம்பரிஷ்.
    சுமலதா, அம்பரிஷ்.
  • ஒற்றைக் கொம்பு காளையுடன் சாந்தாராம்.
    ஒற்றைக் கொம்பு காளையுடன் சாந்தாராம்.

‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினியைத் தன் காதல் வலையில் விழ வைக்க நினைத்து அவரைச் சுற்றி வரும் சுமலதாவின் காதல் விஷயம் சுருளிராஜனுக்கு தெரிந்துவிடும். ரஜினிக்கும், சுமலதாவுக் கும் திருமணம் முடிந்தால் முழு சொத்தையும் நாம் அபகரித்து விடலாம் என்று ஜெய்சங்கருக்கு சுருளி ஐடியா கொடுப்பார். சுமலதாவின் தோழிகள் ‘‘நீ ரஜினியைத் திருமணம் செய்தாலும் அவர் தனது தம்பிங்களுக்குத்தான் முதலிடம் கொடுப்பார்’’ என்பார்கள். அதற்கு சுமலதா ‘‘கல்யாணம் ஆனதும் அவர் களைப் பிரித்துவிடுவேன்’’ என்பார். தங்கைக்கு மாப்பிள்ளை கேட்டு ஜெய்சங்கர் வரும்போது ரஜினி மறுத்து விடுவதனால் இருவருக்கும் இடையே உள்ள பகை மேலும் அதிகரிக்கும். தன் கல்யாண விஷயத்தில் அண்ணன் தலையிட்டு கெடுத்துவிட்டதாக சுமலதாவும் வருத்தப்படுவார்.

மாடர்ன் வசதிகளோடு ஸ்பெஷல் எஃபெக்ட், ஆப்டிக்கல் சிஸ்டம் எல்லாம் இல்லாத காலகட்டம் அது. அப்போதெல்லாம் இதை முறையாக செய்யத் தெரிந்த ஆப்டிக்கல் கேமராமேன் பிரசாத் ஸ்டுடியோவில் பணியாற்றிய மதன் மோகன். எங்களுக்கு டெக்னிக்லாக எந்த சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்டுத்தான் தீர்த்துக்கொள்வோம். அவருடைய மனைவி ரூபா மோகன். குடும்பத்துக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். அவர்களுக்கு நாலு மகள்கள். ஒரு மகன். அவர்களில் ஒருவர்தான் சுமலதா. அவருக்கு ரேணுகா, ரோகிணி, கிருஷ்ணப்ரியா என்று மூன்று சகோதரிகள். ராஜேந்திர பிரசாத் என்கிற தம்பி. இவர்களில் ரோகிணியை சிறந்த புகைப்படக் கலைஞர் ‘ஸ்டில்ஸ்’ ரவி திருமணம் செய்துகொண்டார்.

‘முரட்டுக் காளை’யில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சுமலதா எங்கள் ‘ப்ரியா’ படத்தில் நடித்த அம்பரிஷை திருமணம் செய்துகொண்டார். கன்னட சினிமா உலகில் பெரிய நடிகராக வளர்ந்து, பின் அரசியலில் இறங்கி எம்.பி, மந்திரி என்று இன்றைக்கு மிக உயரத்தை அடைந்த அரசியல்வாதியின் மனைவியாக சுமலதா இருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. அம்பரிஷ் வயலின் மேதை சவுடையாவின் பேரன் என்பது குறிப்பிட வேண்டிய செய்தி.

‘முரட்டுக்காளை’ படத்தில் ஒரு ஒத்தக் கொம்பு மாடு வரும். அதோடு சேர்ந்து நடித்தவர் சாந்தாராம். அவர் கன்னடத்தில் சிறந்த நடிகர். படத்தில் அவருக்கு சங்கிலின்னு பேரு. பார்க்கும்போதே முறைப்பாக இருப்பார். அந்த ஒத்தக் கொம்பு மாட்டையும், இவரையும் சேர்த்து பார்க்கும்போது ஏதோ தப்பு செய்யப் போகிறார் என்ற பாவனை தெரியும்.

படத்தில் கதாநாயகி ரத்தி மீது ஜெய்சங்கருக்கு ஆசை வரும். அவரிடம் தவறாக நடந்துகொள்ளும் முயற்சியிலும் இறங்குவார். ஒருவழியாக ரத்தி அவரிடம் இருந்து தப்பித்து நடந்ததை அப்பா ஜி.சீனிவாசனிடம் சொல்வார். அவருக்குக் கடுமையான கோபம் வந்து ஜெய்சங்கரோடு மோதுவார். அதன் விளைவு சீனிவாசனை அடியாள் சங்கிலி மடக்குவார். சீனிவாசனுக்கும், சங்கிலிக்கும் சண்டை. நீங்க சண்டை போட வேண்டும் என்றதும் சீனிவாசன் பயந்துவிட்டார். நாங்கள் அவருக்கு தைரியமூட்டி ‘‘உங்களால் முடியும். மாஸ்டர் சொல்லும்படி செய்யுங்கள்’’ என்றோம். அருமையாக சண்டை போட்டார். நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். அதனால் சண்டையை முகபாவங்கள் மூலமே வெளிப்படுத்தி பேர் வாங்கினார். காட்சி சிறப்பாக அமைந்தது.

அந்த ஜி.சீனிவாசன் நான் இயக்கிய பல படங்களில் நடித்திருக்கிறார். எங்கள் குழுவின் நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்தன்று நானும், என் குழுவினரும் வாழ்த்தச் சென்றோம். மணக்கோலத்தில் அமர்ந்திருந்த புலியூர் சரோஜா, எங்களைப் பார்த்ததும் வரவேற்க ஓடி வந்துவிட்டார். ‘‘என்ன புலி, நீ மணப் பொண்ணு. இப்படி வரலாமா?’’ என்றதும் ‘‘ முக்கியமான நீங்க எல்லாம் வரும்போது நான் எப்படி உட்கார்ந்திருக்க முடியும்’’ என்று கூறி எங்களை அமர வைத்துவிட்டு, மணமேடையில் போய் உட்கார்ந்தார். திருமணம் சிறப்பாக முடிந்தது. நான் இருவரிடமும் கேட்டேன். ‘‘உங்கள்ல யாரு முதல்ல காதலை சொன்னது?’’ உடனே புலி ‘‘அவர்தான் சொன்னார்’’ என்று சொல்ல, உடனே சீனிவாசன், ‘‘இவதான் என்னைச் சுற்றி சுற்றி வந்து காதலைச் சொல்லாமச் சொன்னா’’ என்றார். இருவரும் ‘‘நீ.. தான்.. நீங்கதான்’’ என்று சண்டை போட்டுக்கொண்டார்கள். இந்த சண்டையிலே அன்பு தெரிந்தது.

புலியூர் சரோஜா செட்டில் இருந்தால் அங்கே ஒரே கலகலப்பாக இருக்கும். சிரிப்போ சிரிப்பு. வாழ்க்கை முழுவதும் சிரித்துக்கொண்டிருந்தவருக்கு அப்படி ஒரு பெரிய துக்கம்! அவர்களுக்கு ஒரே பையன் சத்யா. அவனுக்கு 24 வயது இருக்கும்போது, ஒரு கார் விபத்தில் தஞ்சாவூரில் இறந்துவிட்டான். வெளியூர் ஷூட்டிங்கில் இருந்த எனக்கு தகவல் வந்து தஞ்சாவூருக்கு துக்கம் விசாரிக்க போனேன். புலி சுய நினைவே இல்லாமல் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் இருந்தார். டாக்டர் என்னிடம், ‘‘இன்னும் சில மணி நேரத்துல அவங்களுக்கு உணர்வு வரலைன்னா, கோமா நிலைக்குப் போய்டுவாங்க’’என்றார். அவர் பக்கத்துல போய், ‘’ புலி.. புலி.. நான் முத்துராமன் வந்திருக்கேன்’’என்று சொன்னேன். என் குரலைக் கேட்டதும் புலியின் முகத்தில் ஒரு சலனம். அதைப் பார்த்த டாக்டர், ‘‘உங்க குரலை கேட்ட பிறகுதான் இந்த அசைவே வந்திருக்கு. நீங்க பக்கத்திலேயே இருங்க. 10 நிமிஷத்துக்கு ஒரு முறை அவங்களைக் கூப்பிடுங்க’’ என்று சொன்னார்.

நானும் சரி என்று ஒப்புக்கொண்டு திரும்பத் திரும்ப ‘‘புலி.. முத்துராமன் வந்திருக்கேன்.. வந்திருக்கேன்’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அவ ரோட நினைவு கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பியது. என்னைப் பார்த்ததும், ‘‘நம்ம சத்யா போய்ட்டான் சார்’’ என்று துக்கம் பொங்க கத்தினார். இப்போ நினைச்சாலும் எனக்கு உடம்பு சிலிர்க்குது. அன்னைக்கு புலியூர் சரோஜா நினைவு திரும்புவதற்கு என்னோட குரல் பயன் பட்டது என்று நினைக்கும்போது, எந்த அளவுக்கு நாங்கள் பாசத்தோடு இருந் திருக்கிறோம் என்பது புரியும். நாங்கள் யாரும் டெக்னீஷியன்களாக மட்டும் பழக வில்லை. குடும்பமாகத்தான் பழகினோம்.

அன்று பெற்றோரோடு சிரித்துக் கொண்டிருந்த சத்யா, அந்த பெற்றோர் உருவாக்கிய பள்ளியில் இன்று சிலையாக இருக்கிறான். அவன் பெற்றோர் கல்விச் சேவையை அவனது பிறந்தநாள் வாழ்த்தாக அர்ப்பணிப்போம். இந்த மனநிலையோடு இந்த வாரத்துக்கான நினைவுகளை முடித்துக்கொள்கிறேன்...

- இன்னும் படம் பார்ப்போம்…

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 53: உழைத்து சாப்பிட்டால் சொர்க்கம்; உட்கார்ந்து சாப்பிட்டால் நரகம்!

 

 
 
spm_2803100f.jpg
 

‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினியும் ஜெய்சங்கரும் மோதும் கிளை மாக்ஸ் சண்டை காட்சிக்கு முன் ரஜினியும், ரதியும் மாறுவேடத்தில் குழுவினருடன் வந்து, ஜெய்யின் பிறந்த நாளில் நடனம் ஆடுவார்கள். நடனம் முடிந்ததும் இருவரும் வேடத்தைக் கலைப்பார்கள். அதைப் பார்த்து ஜெய் ஆத்திரமடைவார். ஜெய், ரஜினி இரு வருக்கும் பெரிய சண்டை நடக்கும். ஹீரோ - வில்லன் சண்டைக் காட்சிதான். ஆனால், ஜெய்சங்கர் வில்லனாக நடித்த தனால் இருவருக்கும் சம முக்கியத்துவம் தந்து சண்டைக் காட்சியை வித்தியாச மாக உருவாக்கி இருந்தார் ஜூடோ ரத்தினம்.

சண்டையின் முடிவில் ஜெய் தோற்றுவிடுவார். அப்போது இன்ஸ் பெக்டர் அசோகன், ஜெய்சங்கரை கைது செய்ய முற்படும்போது ஜெய் இன்ஸ் பெக்டரின் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுவார். வில்லன் வேடத்திலும் ஜெய்சங்கருக்கு கவுரவமான முடிவைக் கொடுத்தோம். படம் தமிழகமெங்கும் வெற்றிக்கொடி நாட்டியது.

கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் அது. படத்தைத் திரும்பவும் பார்த்தேன். எப்படியெல்லாம் எடுத்திருக்கிறோம் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எட்டு ஆண்டு கள் இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம்.குமரன், ஏவி.எம்.சரவணன், ஏவி.எம்.பாலசுப்ரமணியன் மூவரும் தயாரித்து ஏவி.எம் பேனரில் வெளிவந்த படம் ‘முரட்டுக் காளை’. என் தாய் வீடான ஏவி.எம்முக்கு நான் இயக்கிய முதல் படமும் ‘முரட்டுக்காளை’தான். அந்தப் படம் 100 நாள் கொண்டாடியது எனக்கும், என் குழுவுக்கும் கிடைத்த பெருமை.

spm1_2803098a.jpg

ஏவி.எம் நிறுவனத்துக்குப் படங்கள் இயக்கிக் கொண்டிருந்தபோதே பஞ்சு அருணாசலம், மணி ஐயர், அண்ணன் அருளாளர் ஆர்.எம்.வி அவர்களுக்கும் படங்களை இயக்கினேன். நாடகங்கள் மூலமாக எனக்குப் பழக்கமான நண்பர் நடராஜன் அவர்கள், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் என்னைப் பார்க்க விரும்புவதாக அழைத்துச் சென்றார். பாலசந்தர் அவர்கள் என்னிடம், ‘‘நான் கவிதாலயா என்ற ஒரு படக் கம்பெனியை ஆரம்பித்திருக்கிறேன். அதில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தப் படத்தை நீங்கள் இயக்க வேண் டும்’’ என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி. கே.பாலசந்தர் எங்களுக்கெல்லாம் பிதாமகன், வழிகாட்டி. அவருடைய நாடகங்களையும், படங்களையும் பார்த்து பரவசப்பட்டவன் நான். அவர் படத்தை நான் இயக்குவதா என்று அவரைப் பார்த்தேன்.

பாலசந்தர் சார், ‘‘ரஜினியை வைத்து கமர்ஷியல் படங்களை நீதான் பண் ணிட்டிருக்கே. அதுக்காகத்தான் உன்னை தேர்ந்தெடுத்தேன்’’ என்றார். நான் ‘சார்’ என்று தயங்கினேன். ‘‘உன் தயக்கம் எனக்குப் புரியுது. நீ ஏவி.எம்முக்கும், பஞ்சு அருணாசலத்துக்கும் படம் இயக்குற மாதிரியே என் கம்பெனிக்கும் சுதந்திரமா பண்ணலாம். எதுலேயும் என் தலையீடு இருக்காது. சப்ஜெக்ட்டை மட்டும் நான் கரெக்ட் செய்து தருகிறேன். ஷூட்டிங் பக்கம் வரவே மாட்டேன். படம் முடிஞ்சப் பிறகு என்னிடம் படத்தை போட்டுக் காட்டு, அது போதும்’’ என்றார். எவ்வளவு பெருந்தன்மை! அவ்வளவு பெரிய இயக்குநர் எனக்கு வாய்ப்புக் கொடுத்ததை இப்போதும் பெருமை யாக எண்ணுகிறேன்.

அந்தப் படம் ‘நெற்றிக்கண்’. அப்பா, மகன் இரண்டு வேடத்தில் ரஜினி நடித் தார். அப்பாவுக்கு மனைவியாக லட்சுமி. மகனுக்கு காதலியாக மேனகா. அப்பா வுக்குச் செயலாளராக சரிதா. தங்கையாக விஜயசாந்தி. அவர் அந்தப் படத்தில்தான் அறிமுக மானார். சரத்பாபு, கவுண்டமணி இப்படி பலரும் நடித்தார்கள். ‘நெற்றிக்கண்’ கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் விசு. வசனங்களில் குறும்புகள் உருண்டோடும்.

கதை விவாதங்கள் நடக்கும்போது பாலசந்தர் மிகவும் ஈடுபாட்டோடு இருப் பார். அந்த இடத்தில் யாரும் மற்ற விஷ யங்கள் பேசுவதை அனுமதிக்க மாட்டார். தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்த நடராஜன் அவர்களைக் கேட்டு அப்போது போன் வரும். உடனே ‘‘அப்புறம் கூப்பிடச் சொல்லுங்க’’ என்று பாலசந்தர் சத்தம் போடுவார். அவரோடு இருக்கும் அந்த இரண்டு மணி நேரம் அவர் சிறந்த படைப் பாளி என்பதை எங்களுக்குக் காட்டும்.

நடைமுறையில் எப்போதும் மகன் தான் தப்பு பண்ணுவான்; அப்பா திருத்து வார். ஆனால். இந்தக் கதையில் அப்பா தப்பு பண்ணுவார். மகன் திருத்துவான். ரஜினி ஏற்ற அந்த அப்பா வேடம் ஒரு ஜாலி மைனர் பாத்திரம். மன்மத லீலைகளின் உச்சகட்டம். அதனை தன் நடிப்பின் பலவிதமான ஸ்டைல்களில் வெளிப்படுத்தினார் ரஜினி. அது மக்களுக்கு மிகவும் பிடித்துப்போய், பாராட்டப்பெற்றது. மகன் ரஜினி மிகவும் அப்பாவி. பொறுமை, நிதானமாக அப்பாவை திருத்த முயற்சிப்பார். இரு வேடத்தில் ரஜினி நடித்ததால் ஒளிப்பதிவாளர் பாபு, மிட்சல் கேமராவை வைத்து மாஸ்க் மூலமாக படமாக்கினார். இப்போது இருப்பது போல அப்போது கிராபிக்ஸ், குரோமோ போன்ற வசதிகள் எல்லாம் இல்லை. பாபுவின் திறமை வெளிப்பட்டது.

அப்பா ரஜினிக்காக டிரைவர் கவுண்டமணி ஒரு பெண்ணை அழைத் துக்கொண்டு வருவார். அந்தப் பெண் ‘‘ஐயாவுக்கு சின்ன வீடு இருக்கா?’’ என்று கேட்பார். அதுக்கு கவுண்டமணி, ‘‘சின்ன வீடா? ஒரு முனிசிபாலிட்டியே இருக்கு’’ என்று சொல்வார். அதுதான் அப்பாவின் கதாபாத்திரம். மனைவி லட்சுமி ஒரு விஷயத்தில் பொய் சொல்லிவிடுவார். உண்மையை வரவழைப்பதற்காக அப்பா ரஜினி அவரை அறைந்து அறைந்து விசாரிப்பார். இருவரின் நடிப்பும் உச்சத்தில் இருக்கும். லட்சுமி எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கக்கூடிய சிறந்த குணச்சித்திர நடிகை. அவரை நான் நடிப்பில் ‘பிசாசு’ என்றே கூறுவேன்.

நாளைக்கு பொழுது விடிந்தால் எனக்கு வயது 82. என் குடும்பத் துக்காகவும், எனக்காகவுமே வாழ்ந்த என் மனைவி கமலா இறந்த பிறகு என் பிறந்த நாளை நான் கொண்டாடுவது இல்லை. ஒவ்வொரு பிறந்த நாளி லும் சென்னையில் இல்லாமல் வெளியூருக்குச் சென்றுவிடுவேன். அதைப் போலவே இந்த முறையும் நான் வெளியூர் வந்துவிட்டேன். என்னை மனதார வாழ்த்துங்கள். உங்கள் வாழ்த்து எனக்கு ஊக்கத்தைத் தரும்!

பிறந்த தேதிப்படி எனக்கு வயது 82. உடல் பலத்தின்படி எனக்கு வயது 52. மனசுப்படி எனக்கு வயது 32. உங்களை எல்லாம் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் வழியே சந்தித்து மகிழ்வதால் எனக்கு வயது 22. வயது மனதை பொறுத்ததே தவிர, வருஷத்தைப் பொறுத்தது இல்லை.

இன்றைக்கும் எனக்கு நேரம் போதவில்லை. கம்பன் விழா, கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக் கட்டளை நடத்தும் கவியரசர் விழா, செவாலியே சிவாஜிகணேசன் அறக் கட்டளை வழங்கும் மாணவர்களுக்கான நிதியுதவி, உரத்த சிந்தனை நிகழ்ச்சிகள், நாட்டிய விழாக்கள், கல்லூரிகளிலும், பள்ளி களிலும் மாணவர்களைச் சந்தித்து விழிப்புணர்வை உண்டாக்குவது... இப்படி நேரத்தைப் பயனுள்ள நேரமாக்கிக் கொண்டிருக்கிறேன். என் கடமை பணி செய்து கிடப்பதே!

உழைத்து சாப்பிட்டால் சொர்க்கம். உட்கார்ந்து சாப்பிட்டால் நரகம். இதுவே என் பிறந்தநாள் செய்தி! அடுத்த வாரம் சந்திப்போம்.

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-53-உழைத்து-சாப்பிட்டால்-சொர்க்கம்-உட்கார்ந்து-சாப்பிட்டால்-நரகம்/article8440870.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 54: தீப்பந்தத்தால் அடிபடும் ரஜினி!

 
  • rajini11_2812425g.jpg
     
  • rajini1_2812424g.jpg
     
  • rajini_2812423g.jpg
     
  • rajini111_2812418g.jpg
     

‘கவிதாலயா’ தயாரித்த ‘நெற்றிக் கண்’ படத்தின் கதையும் கல கலப்பு, அப்பா ரஜினி கதா பாத்திரமும் கலகலப்பு. அதனால் படப் படிப்பு நடந்த செட்டே கலகலப்பு! அந்த அளவுக்கு சுவையாகவும், சுவா ரஸ்யமாகவும் படப்பிடிப்பு நடந்தது.

படத்தின் தயாரிப்பு நிர்வாகி நடராஜன் படப்பிடிப்புக்கு வருவார். எள்ளு என்றால் எண்ணெயையே தருவது மாதிரி எங்களுக்கு என்னெல்லாம் தேவையோ, அதை நாங்கள் கேட்பதற்கு முன்னாலேயே செய்து முடித்திருப்பார். ‘‘செலவைப் பற்றி கவலைப்படாம எடுங்க. ஏவி.எம் நிறுவனத்துக்கு எப்படி படம் எடுப்பீங்களோ? அந்த அளவுக்கு கிராண்டா செலவு பண்ணி எடுங்கன்னு பாலசந்தர் சார் சொல்லி அனுப்பினார்’’ என்பார். பாலசந்தர் சாரும் நடராஜனும் தந்த சுதந்திரம்தான் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க எங்களுக்கு உதவியது.

ஊட்டியில் எடுக்கப்பட்ட பாடல்தான் ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’. மெல்லிசையால் அழகு சேர்ந்திருப்பார் இளையராஜா. கவியரசு கண்ண தாசன் தன் தமிழால் கிரீடம் சூட்டியிருப்பார். படத்தில் மகன் ரஜினி, தனது காதலி மேனகாவுடன் சேர்ந்து பாடி மகிழ்வதைப் பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். ரஜினி, மேனகா இருவரும் கையில் எழுதி காட்டிக்கொள்வது போல காட்சி. அதன் பின் இருவரும் பாடுகிற அந்தப் பாட்டு.. படப்பிடிப்பின்போது மேனாகவுக்கு ‘‘இந்த எக்ஸ்பிரஷனை இப்படி செய், அப்படி செய்’’ என்று அவரது அம்மா ஆலோசனை கொடுத் துக்கொண்டே இருப்பார். சில நாயகிகளின் அம்மாக்கள் நன்றாக வரவேண்டிய காட்சியை ஏதாவது சொல்லிக்கொடுத்து கெடுத்துவிடு வார்கள். சிலர்தான் நடிப்பை மேலும் மெருகேற்றுவது போல உற்சாகப்படுத்துவார்கள். மேனகாவின் அம்மா உற்சாகப்படுத்துகிற டைப்!

இப்போது மேனகாவினுடைய மகள் கீர்த்தி சுரேஷும் நடிக்க வந்திருக்கிறார். அவருடைய அம்மா மேனகா உற்சாகப்படுத்துகிற அம்மாவாக இருக்கட்டும். வாழ்த்துகள்!

அப்பா ரஜினி பெரிய பிசினஸ்மேன். ஒரு கான்ட்ராக்ட்டில் சரத்பாபுவிடம் கையெ ழுத்து வாங்கி வரச் சொல்லி ஒரு பணியாளரை அனுப்புவார். அவரோ கையெழுத்து வாங்க முடியா மல் திரும்பி வருவார். ‘‘போய் கையெழுத்து வாங்கிட்டு வான்னு அனுப்பினா, இல்லைன்னு வந்து சொல்றதுக்கா உன்னை வேலைக்கு வச்சிருக்கேன்’’ன்னு திட்டிவிட்டு, அவரே கையெழுத்து வாங்க புறப்படுவார். கட் பண்ணினால், சரத்பாபு முன்னால் ஒரு பெண் நடனம் ஆடியபடியே கையெழுத்து வாங்கி விடுவார். இந்த ஏற்பாட்டை செய்ததே அப்பா ரஜினிதான். அவருக்குத்தான் பெண்கள் விஷயத்தில் ராசி உண்டே.

ரஜினியின் மகள் விஜயசாந்தியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருப்பார்கள். மாப்பிள்ளை பையன் சரத்பாபு. அப்பா ரஜினிக்கு உடம்பெல்லாம் நடுங்கும். அந்தச் சூழலை புரிந்து கொண்டு மகன் ரஜினியும், சரிதாவும் பாடும் பாடல், ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு.. மாமனுக்கோ காமன் மனசு’. கதையின் சூழலுக்கு பாட்டெழுது வதில் அரசர் அல்லவா நம் கவியரசர்! அந்தப் பாட்டில் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அப்பா ரஜினி வெளிப்படுத்தும் நடிப்பு கை தட்டி ரசிக்கும்படியாக அமைந்தது.

தமிழ் படங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்ற விஜயசாந்தி ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்தபோது ‘தென்றல்’, தெலுங்குப் படங்களில் விஸ்வரூபமெடுத்தபோது ‘புயல்’. அவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது எங்களுக்கெல்லாம் பெருமை!

சரத்பாபு, நான் இயக்கிய பல படங்களில் நடித் தவர். எங்கள் குழுவில் ஒருவர். அன்பு, கோபம் என எல்லா பாத்திரங்களுக்கும் பொருத்தமாக நடிக் கும் சிறந்த நடிகர். ‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினி யோடு அவர் நடித்தது வித்தியாசமாக இருந்தது.

‘கவிதாலயா’ நிறுவனம் தொடங்கி தயாரித்த முதல் திரைப்படம் ‘நெற்றிக்கண்’. கே.பாலசந்தர் சாரின் படங்கள், ‘அகர முதல எழுத்தெல் லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்ற திருக்குற ளோடு... திருவள்ளுவர் சிலை திரும்பும் தோற்றத் துடன்தான் ஆரம்பிக்கும். அந்த திருவள்ளுவர் சின் னத்தோடு உருவான கவிதாலயாவின் முதல் படத்தை நான் இயக்கியது எனக்குப் பெருமை.

60 ஆண்டுகளுக்கு முன் தேவகோட்டை ‘தே பிரித்தோ’ உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கும் போது, ஆண்டுவிழாவில் டாக்டர் மு.வரதராசனார் வந்து பேசினார். ‘ஒரு நாளைக்கு ஒரு குறளையாவது படிக்க வேண்டும். கூட்டங்களில் பேசும்போது ஒரு குறளையாவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதன்படி அன்றே என் நன்றியுரையில் பள்ளியின் லட்சிய குறளான ‘உண்மையைக் கடைபிடி’ என்ற லட்சியத்தை வலியுறுத்தும்,

‘உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்’

என்ற குறளை சொன்னேன். அன்று தொடங்கி கடந்த 60 ஆண்டுகளாக நான் பேசும் கூட்டங்களில் குறள் சொல்லி வருகிறேன். குறளை சொல்லும் நான் குறளை சின்னமாகக் கொண்ட கவிதாலயாவின் இயக்குநரானேன். இது எனக்கு கிடைத்த பெருமையிலும் பெருமை!

நடிகை சரிதா எந்த மாதிரி பாத்திரம் கொடுத் தாலும் அதைப் பக்குவமாக நடித்து பெயர் வாங்கும் அபார திறமை கொண்டவர். எனக்குப் பிடித்த நடிகைகளில் அவரும் ஒருவர். ‘‘நீங்கள் நடிக்கும்போது உங்கள் கன்னத்தில் குழி விழுவது, நடிப்பை மேலும் கூட்டிக் காட்டுகிறது’’ என்பேன். ‘‘போங்க சார்..’’ என்று கூறுவார். கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை செய்யும் திறமை அவரிடம் இருந்தது. அப்படி இல்லையென்றால் பாலசந்தர் சாரின் அத்தனை படங்களில் நடித்திருக்க முடியாது. ‘நெற்றிக்கண்’ கதையின் திருப்பமும் அவர்தான்.

இப்படத்தில் அப்பா ரஜினியின் டிரைவராக கவுண்டமணி வருவார். நகைச்சுவையைத் தாண்டி சீரியஸாகவும் நடித்து மிரட்டியிருப்பார். இன் னொரு உண்மையைச் சொல்லணும்னா, செந்தில் இல்லாமல் சோலோவாக இந்தப் படத்தில் கவுண்டமணி ஸ்கோர் பண்ணினார்.

ஒருநாள் கே.பாலசந்தர் என்னிடம், ‘‘உன்னோட படத்துல வர்ற சண்டை காட்சி வித்தியாசமா இருக்கு. நீ சண்டை காட்சியை ஷூட் பண்ணும் போது நான் பார்க்க வரணும்’’ என்று கேட்டார். ‘‘தாராளமா வாங்க சார். வர்ற புதன்கிழமை குன்றத்தூர்ல நைட் ஷூட்டிங். ரஜினியும், வில்லன்களும் மோதுற காட்சி’’என்றேன்.

பாலசந்தர் சார், ‘‘நான் அங்க வந்து தொந்தரவு எல்லாம் பண்ண மாட்டேன். ஒரு ரசிகனா வந்து வேடிக்கை மட்டும்தான் பார்ப்பேன்’’ என்றார். சொன்ன மாதிரியே பாலசந்தர் சார் ஷூட்டிங் பார்க்க வந்தார். ரஜினியை நான்கு வில்லன்கள் தீப்பந்தத்தோடு அடிக்க நெருங்குவார்கள். ஒரு கட்டத்தில் ரஜினி தனக்குப் பின்னால் இருக்கும் தடுப்பைக் கடந்து போக முடியாத நிலையில் சிக்கிக்கொள்வார். அந்தச் சூழலில் ரஜினியின் முகத்தில் நாலு வில்லன்களும் சேர்ந்து தீப்பந்தத் தால் அடிப்பார்கள். அப்போது ‘‘கட்.. கட்’’ எனப் பின்னால் இருந்து ஒரு குரல். திரும்பி பார்த்தால், பாலசந்தர் சார். ‘ஷூட்டிங்ல தலையிடவே மாட் டேன்னு சொன்னவர், இப்படி கட்… கட் என்று சொல்லி தலையிடுறாரே’ என்று எனக்கு அதிர்ச்சி!

அடுத்து அங்கே என்ன நடந்தது?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-54-தீப்பந்தத்தால்-அடிபடும்-ரஜினி/article8470479.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 55: ‘குடும்பம் ஒரு கதம்பம்’

எஸ்பி.முத்துராமன்

 

  • இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருடன் எஸ்பி.முத்துராமன்.
    இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருடன் எஸ்பி.முத்துராமன்.
  • ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் பிரதாப் போத்தன், சாமிக்கண்ணு, சுஹாசினி, எஸ்.வி.சேகர் (1981).
    ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் பிரதாப் போத்தன், சாமிக்கண்ணு, சுஹாசினி, எஸ்.வி.சேகர் (1981).

கட்… கட்…’’ என்று சொன்ன பாலசந்தர் சார் ரஜினியை நோக்கி ஓடி வந்தார். அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘‘என்னப்பா... முகத்துல தீ எதுவும் பட்டுச்சாப்பா…’’ என்று அதிர்ச்சியோடு கேட்டார். திரும்பி என்னைப் பார்த்து, ‘‘என்ன முத்துராமன்… இப்படி பண்ணிட்டீங்க? நாலு பேர் சேர்ந்து ரஜினி முகத்துல தீ பந்தத்தால அடிக்கிற மாதிரியா ஷாட் வைப்பீங்க. இந்த ஃபைட்டும் வேணாம் ஒண்ணும் வேணாம். எனக்கு ரஜினிதான் வேணும்!’ என்றார்.

ரஜினிக்கு ஏதாவது ஆகிடுமோ என்ற பதற்றத்தில்தான் ‘கட்’சொல்லியிருக்கார் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

நான் பாலசந்தர் சாரிடம், ‘‘இல்லை சார்… ஒண்ணும் ஆகாது. பாதுகாப்போடதான் ஷூட் பண்றோம். அவர் மேல சின்ன காயம்கூட படாது. ஜூடோ ரத்தினம் மாஸ்டர் அதை சரியா பிளான் பண்ணி வெச்சிருக்கார்’’ என்றேன். ரஜினியும் பாலசந்தர் சாரிடம் ‘‘பயப் பட வேண்டாம் சார். பாதுகாப்பா பண்ணுவாங்க’’ என்றார். ‘‘இல்லப்பா.. எனக்கு பயமா இருக்கு!’’ என்று தள்ளிப் போய் அமர்ந்துகொண்டார். அப்போது தயாரிப்பு நிர்வாகி நடராஜன், ‘‘பாலசந்தர் சார் எமோஷனல் பார்ட்டி. இங்கே இருந்தார்னா… இந்தச் சண்டைக் காட்சியை எடுக்கவே விடமாட்டார். நான் அவரை அழைச்சுக் கிட்டு போய்டுறேன். நீங்க வேலையைக் கவனிங்க’’ என்று சொல்லி பாலசந்தர் சாரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

போகும்போது பாலசந்தர் சார் என்னிடம், ‘‘முத்துராமன்… ரஜினியை ஜாக்கிரதையா பார்த்துக்க… ஜாக்கிரதையா பார்த்துக்க’’ என்று பதற்றத்துடன் சொல்லிவிட்டுப் போனார். அவர் போனதும் நாங்கள் அந்தக் காட்சியைத் தொடர்ந்து படமாக்கி முடித்தோம். பாலசந்தர் சார் ஏன் தன் படங்களில் சண்டைக் காட்சிகள் வைக்கவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா?

‘நெற்றிக்கண்’ படத்தைத் தொடங்குவதற்கு முன்பே பாலசந்தர் சார் ‘‘முத்துராமன், ரஜினியின் ஒட்டுமொத்த நடிப்பையும் கொண்டுவரணும்; அதுவும் ரஜினியோட அப்பா கேரக்டர்ல அவரோட நடிப்பு சிறப்பா இருக்கணும்’’ என்று சொல்லியிருந்தார். படம் முடிந்து பாலசந்தர் சாருக்கு படத்தை போட்டுக் காட்டினேன். ‘‘சூப்பர் ஸ்டார் ரஜினி, சூப்பரா பண்ணியிருக்கார். அப்பா கேரக்டர் நடிப்பு சூப்பரோ சூப்பர்…’’ என்றார். அந்தப் பாராட்டு எங்களுக்கு கிடைத்த விருது. நகைச்சுவை கலந்து மைனராக நடித்த ரஜினியின் அப்பா கேரக்டர் நடிப்பு இன்றைக்கு பார்த்தாலும் பிரமிப்பூட்டும். ‘பீடி… குடி… லேடி… இல்லாதவன் பேடி!’ன்னு ரஜினி பஞ்ச் வசனம் பேசுவார். அந்த இடத்துக்கு தியேட்டரில் அப்படி ஒரு கிளாப்ஸ். அது மாதிரி பல இடங்களுக்கும் கைதட்டல். அதனாலேயே ‘நெற்றிக்கண்’ கவிதாலயாவின் ‘வெற்றிக் கண்’ ஆனது.

spm11_2821158a.jpg

‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினிகாந்த் (1981).

நான் சினிமாவில் பழகியவர்களில் முக்கியமான புள்ளிகளில் ஒருவர் மணி ஐயர். விநியோகஸ்தர், நிதி, தயாரிப்பு ஆலோசகர் என்று சினிமாவின் பல துறைகளிலும் பங்குபெற்றவர். நான் இயக்கிய, ‘கனிமுத்து பாப்பா’ முதல் என்னோடு பழகி வந்தார். மோரீஸ்மைனர் காரை வைத்துக்கொண்டு சினிமா வட்டாரத்தையே வலம் வந்து, ‘சினிமா உலகில் எங்கே, என்ன நடக்குது?’ என்பதை விரல்நுனியில் வைத்திருப்பார். அவர் ஒருமுறை, ‘‘படம் பண்ணணும் சார். அதை நீங்கதான் டைரக்ட் செய்யணும்’’னு சொன்னார். ‘‘இப்போ நான் இயக்கிக்கொண்டு இருக்கும் படங்களை எல்லாம் முடிச்சிட்டு… உங்க படத்தை பண்ணுவோம் சார்’’ என்று சொல்லியிருந்தேன்.

நான் சொல்லியிருந்தபடியே அந்தப் படங்கள் எல்லாம் முடிந்ததும், மணி ஐயருக்காக சப்ஜெக்ட் யோசிக்க ஆரம்பிச்சோம். அப்போது மணி ஐயர் என்னிடம் வந்து, ‘‘விசு சாரோட ‘குடும்பம் ஒரு கதம்பம்’னு ஒரு நாடகம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. நீங்களும் அதை ஒருதடவை பாருங்க. அந்தக் கதையை வாங்கி படம் பண்ணிடுவோம்’’ என்றார். விசு சாரோட நாடகங்கள் எப்போதும் பிரமாதமாக இருக்கும். ராஜா அண்ணாமலை மன்றத்தில், பாலசந்தர் சாரோட நாடகங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் போர்டு போட்டது விசு சார் நாடகத்துக்குத்தான். நகைச்சுவை, சென்டிமென்ட் எல்லாம் சேர்ந்து அவரது நாடகம் குடும்பப் பாங்கா இருக்கும். ஆனா, அவர்கிட்ட எப்போ கேட்டாலும் ‘‘அந்தக் கதையை சினிமாவுக்கு கொடுத்துட்டேனே’’ன்னுதான் சொல்வார் என்று மணி ஐயர்கிட்ட சொன்னேன். அவர், ‘‘நான் விஷயத்தை விசு சார்கிட்டே பேசிட்டேன். நீங்க வந்து நாடகத்தை பாருங்க’’ன்னு அழைச்சுட்டுப் போனார். நாடகம் பார்த்தேன். ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. விசு சார்தான் அந்த நாடகத்தில் நாயகன். அவரையே சினிமாவிலும் நடிக்க வைப்பது என்று முடிவெடுத்தோம். புதியவரை நடிக்க வைத்தால் எப்போதும் ஒரு எதிர்ப்பு வரும். அதையெல்லாம் மீறி அந்த பாத்திரத்தில் விசுதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

ஒரு வீட்டுக்குள் நாலு குடித்தனம் இருக்கிற மாதிரி கதை. படத்தில் விசு, கமலா காமேஷ், எஸ்.வி.சேகர், பிரதாப் போத்தன், சுஹாசினி, சுமலதா, கிஷ்மு, ரங்கா, நித்யா, சாமிக்கண்ணு, ஓமக்குச்சி இப்படி நிறையப் பேர் நடித்தார்கள். கற்பகம் ஸ்டுடியோவில்தான் நாங்கள் எதிர்பார்த்தது மாதிரி அப்படி ஒரு வீடு எங்களுக்கு அமைந்தது. அந்த வீட்டை நான்கு போர்ஷன்களாக்கி படப்பிடிப்பைத் தொடங்கினோம். இதனால் செட்டுப் போடும் செலவு மிச்சம்.

சுஹாசினி நாயகியாக வளர்ந்து வந்த நேரம். ஐந்து தேசிய விருதுகள் வாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்றைக்கும் சிறந்த நடிகைகளில் ஒருவர். அவர் இந்தப் படத்தில் உணர்ச்சிபூர்வமான கதாநாயகியாக நடித்தார். அவருக்குக் கணவராக எஸ்.வி.சேகர். இதில் எஸ்.வி.சேகருக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். எமோஷனலாக நடித்தார். பிரதாப் போத்தன் தன் பெரிய கண்களேலேயே நடித்துவிடுவார். சுமலதா எங்களுடைய ‘முரட்டுக்காளை’படத்தில் சிறப்பாக நடித்தவர். கிஷ்மு, ரங்கா, கமலா காமேஷ், நித்யா இவர்கள் எல்லாம் விசுவின் நாடக அணியினர். ஆகவே, நடிப்புக்கு எந்தக் குறையும் இல்லை.

அந்தக் காலத்தில் நாடகங்கள் நடக்கும்போது நாடகக் குழுக்கள் தங்குவதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் ‘கம்பெனி வீடு’ என்ற ஒன்று வைத்திருப்பார்கள். அதைப் போல ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் நடித்த எல்லோரும் தங்களுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டால் கூட அங்கேயே இருந்து உரையாடிக் கொண்டிருப்பார்கள். அதனால் இயக்குநரான எனக்குப் பல சவுகர்யங்கள். அது என்ன?

இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-55-குடும்பம்-ஒரு-கதம்பம்/article8497534.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 56: பன்முக நாயகன் விசு

 
  • மனைவி மற்றும் மகள்களுடன் இயக்குநர் விசு
    மனைவி மற்றும் மகள்களுடன் இயக்குநர் விசு
  • குடும்பம் ஒரு கதம்பம்’ பட வெற்றிவிழாவில் இராம.வீரப்பனிடம் விருது பெறும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்
    குடும்பம் ஒரு கதம்பம்’ பட வெற்றிவிழாவில் இராம.வீரப்பனிடம் விருது பெறும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்
  • ’குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் சுஹாசினி, எஸ்.வி.சேகர்
    ’குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் சுஹாசினி, எஸ்.வி.சேகர்
  • ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் வடிவுக்கரசி, ரஜினிகாந்த், விசு
    ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் வடிவுக்கரசி, ரஜினிகாந்த், விசு

நான் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படப்பிடிப் பின்போது அதில் நடித்த நடிகர் கள் எல்லாம் நாங்கள் படப்பிடிப்புக்காக பிடித்திருந்த வீட்டிலேயே தங்கியிருந்ததில் இயக்குநருக்கு என்ன சவுகர்யம் என்றால், ஒரு காட்சியை சீக்கிரம் முடித்துவிட்டால் அடுத்த காட்சியை எடுக்க அந்த நடிகர்களைக் கூப்பிட்டு எடுத்துவிடுவேன். அதுமட்டுமின்றி, நாங்கள் படம்பிடிக்கும் காட்சி களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நடிகர்கள், தாங்கள் நடிக்கும்போது நடிப்பை மெருகேற்றிக் கொள்வார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் மணி ஐயரின் மகன்கள் கே.வி.சீனிவாசன், சிவா இருவரும் இன்று சினிமாவில் தனித் தன்மையோடு செயல்பட்டு வருகிறார் கள். சீனிவாசன் தயாரிப்பு துறையில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து ஆலோசனைகள் கொடுப்பவராக உயர்ந்திருக்கிறார். மற்றொரு மகன் சிவா, சிறந்த ஒளிப் பதிவாளராக பயணிக்கிறார். இவர்கள் மணி ஐயரின் வாரிசாகவே உருவாகி இருக்கிறார்கள்.

‘குடும்பம் ஒரு கதம்பம்’ குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். 100 நாட்கள் ஓடியது. வெற்றி விழாவுக்கு தலைமை ஏற்ற அண்ணன் அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், ‘‘ஏவி.எம் நிறுவனத்தின் ‘முரட்டுக்காளை’ மாதிரி பிரம்மாண்டமான படமும் எடுக்கிறார். இதுமாதிரி குறைந்த பட்ஜெட்டிலும் பட மும் எடுத்து வெற்றி பெற வைக்கிறார். இரண்டு விதமான படங்களையும் எடுக் கும் மனப் பக்குவத்தை பெற்றிருக் கிறார், இயக்குநர் முத்துராமன்’’ என்று என்னை வாழ்த்தினார்.

விசுவும், நானும் பாலச்சந்தர் தயாரித்த ‘நெற்றிக்கண்’ படத்தின் மூலம் இணைந்தோம். ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமாகி திரைப்பட நடிகராக பெயர் பெற்றார் விசு. இதைத் தொடர்ந்து பல படங்களில் திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் என்று புகழ் பெற்றார். நான் இயக்கிய ‘ஊருக்கு உபதேசம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மிஸ்டர் பாரத்’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கவும் செய்தார். எங்கள் குழுவில் அவரும் ஒருவர் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

இன்றைக்கு ‘குடும்பம் ஒரு கதம்பம்’ விசு என்ற பெயரோடு, ‘அரட்டை அரங்கம்’ விசு என்ற பெயரும் வந்துவிட்டது. சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சி வழியே விசு சார் மக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து 13 ஆண்டுகள் அந்த நிகழ்ச்சியை வழங் கியவர், இதையடுத்து ஜெயா டி.வி-யில் ‘மக்கள் அரங்கம்’ என்ற பெயரில் ஆறரை ஆண்டுகள் நடத்தியிருக்கிறார். ஒரு மனிதர் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் மக்களையும், மக்கள் சார்ந்தப் பிரச்சினை களையும் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது என்பது பெரிய வேலை. அதை ஈடுபாட்டோடு செய்தது, படைப் பாளி விசுவுக்கு சமூகத்தின் மேல் உள்ள அக்கறையையே வெளிப்படுத்தியது. சமீபத்தில்கூட, ‘கொஞ்சம் யோசிப்போம்’ என்ற பெயரில் ஒரு நாடகம் போட்டார். அது இன்றைக்கு நிலவும் சமூகம், அரசியல் பிரச்சினைகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட நாடகம். சுறுசுறுப்புக்குப் பெயர் போன விசுவால் சும்மாவே இருக்க முடியாது.

அவர் நடத்திய ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்கும் வாய்ப்பை பெற்று, இன்றைக்கு நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். விசுவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா என்ற பெண்ணை, இன்றைக்கு தேசிய அளவில் கவனத்தை பெற்றிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அரட்டை அரங்கத் தில் கலந்துகொண்ட திருப்பூரைச் சேர்ந்த விசாலாட்சி என்ற பெண் இன்றைக்கு அந்த ஊரின் மேயராக இருக்கிறார்.

நாடகம், சினிமா என்று தனக்கென ஒரு கொடியை உயர்த்தி பிடித்திருக்கும் விசுவும், நானும் ஒரே குடும்பமாக பழகி வருகிறோம். விசுவின் மனைவி உமா. கணவனுக்குப் பின்னால் இருக்கிற மனைவி அல்ல; எந்நாளும் பக்கபலமாக பக்கத்தில் நிற்கும் பெண்மணி. அதற்கு நன்றி சொல்லும் விதமாகத்தான் விசு தன் படங்களில் நாயகி பெயரை உமா என்றே வைத்தார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா, கல்பனா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இந்த மகள்கள்தான் அவர்களுக்கு ‘மகன்’கள். அவர்களுக்கு வந்த மருமகன்களும் ‘மகன்’கள்தான். இப்படி அமைவதெல்லாம் ஒரு வரம்!

கடந்த 40 ஆண்டுகளாக கலாச் சாரம், கல்வி, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் ஈரோடு ராமலிங்கத்தின் ‘கவிதாலயம்’ அமைப்பினர் சமீபத்தில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து கவுரவித்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு விசு சார், ஒரு வாழ்த்து அனுப்பியிருந்தார். அதில், ‘எழுத்திலும், எண்ணத்திலும், செயலிலும் எனக்கு வழிகாட்டி எஸ்பி.எம். ஒரே காலகட்டத்தில் இன்றைய சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் இரண்டு மடிகளில் சுமந்தவர். அதே காலத் தில் பல படங்களில் என்னை முதுகில் வைத்து சுமந்தவர். பர்பெக்ட் ஜென்டில் மேன். அவரை வாழ்த்தி வணங்குவோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏவி.எம் நிறுவனத்தின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் சிறந்த முறையில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதற் காக விசு அவர்களுக்கு பேசிய சம் பளத்தைவிட அதிகமாக பணம் கொடுத் தார், ஏவி.எம்.சரவணன் சார். மகிழ்ச்சி யோடு பெற்றுக்கொண்ட விசு, ‘‘ஏவி.எம் நிறுவனத்தில் ஒரு படம் இயக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்’’ என்றார். அதற்கு சரவணன் சார், ‘‘நீங்க இப்போது ஒரே நேரத்தில் மூணு, நாலு படங்கள் பண் றீங்க. நம்ம நிறுவனத்தோட படத்துல மட்டும் கவனம் செலுத்துற சூழல் அமையும்போது சொல்லுங்க’’ என்றார்.

அதேபோல அந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு விசு அவர்கள், சரவணன் சாரிடம், ‘‘இப்போது தயாராக இருக்கிறேன். கதையும் இருக்கிறது’’ என்றார். அந்தக் கதையை சரவணன் சார் கேட்டார்கள். அவருக்கு பிடித்து விட்டது.

‘‘இந்தக் கதையில் எல்லாம் இருக் கிறது. நகைச்சுவை மட்டும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்’’ என்று சரவணன் சார் சொல்ல, விசு சார் ‘‘இல்லை சார்... எல்லா காட்சிகளையும் எழுதி முடிச்சிட்டேன். இனிமே சேர்க் கிறது கஷ்டம்’’ என்றார். அதற்கு சரவணன் சார், ‘‘ஒரு வாரம் டைம் எடுத் துக்கோங்க. காமெடி டிராக்கை சேர்த் துட்டு வந்து சொல்லுங்க’’ என்றார்.

ஒரு வாரம் கழித்து விசு வந்தார். என்ன கொண்டு வந்தார்?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-56-பன்முக-நாயகன்-விசு/article8554751.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 57: ‘கம்முன்னு கெட’!

 

  • ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் மனோரமா, கிஷ்மு.
    ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் மனோரமா, கிஷ்மு.
  • ’சம்சாரம் ஒகா சதாரங்கம்’ தெலுங்கு படத்தில் சவுகார் ஜானகி, கொல்லபுடி மாருதி ராவ்.
    ’சம்சாரம் ஒகா சதாரங்கம்’ தெலுங்கு படத்தில் சவுகார் ஜானகி, கொல்லபுடி மாருதி ராவ்.
  • ‘சம்சாரம் அது மின்சாரம்’ வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆரிடம் இருந்து வெள்ளி கோப்பை பெறும் இயக்குநர் விசு.
    ‘சம்சாரம் அது மின்சாரம்’ வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆரிடம் இருந்து வெள்ளி கோப்பை பெறும் இயக்குநர் விசு.

ஏவி.எம்.சரவணன் சார் அவர்களை ஒரு வாரம் கழித்து வந்து சந்தித்தார் விசு. அப்போது, ‘‘நீங்க சொன்ன மாதிரியே கதையில் நகைச் சுவை டிராக்கை சேர்த்துவிட்டேன். மனோரமாவை வைத்து அந்த டிராக்கை யோசிக்க சொன்னீங்க. அப்படியே கதையை எழுதியிருக்கிறேன். இனி, மனோரமாவை கதையில் இருந்து எடுத்துவிடுங்கன்னு சொன்னாக்கூட எடுக்க முடியாது. மற்ற கதாபாத்திரங்களோடு அவர் அப்படி ஒன்றிவிட்டார்’’ என்றார் விசு.

சரவணன் சார், “மனோரமாவை வைத்து எழுதிய டிராக்கை சொல்லுங்க’’ என்றார். விசு சொன்னதும் அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டது. அந்தப் படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்.’

படத்தில் மனோரமாவுக்கு நல்ல ரோல். அவர் வரும் பெரும்பாலான காட்சிகளில், ‘கம்முன்னு கெட’ன்னு ஒரு வார்த்தை தெறிக்கும். அது ரொம்ப பாப்புலர் ஆச்சு. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் ‘கம்முன்னு கெட’ ன்னு சொல்லிக் கொண்டே வருவார்கள். கதை கூட்டுக் குடும்பம் பற்றியது. கதையின் முடிவில் எப்பவுமே கூட்டுக் குடும்பமா இருக்க முடியலைன்னாலும் நல்ல நாட்கள், விஷேச நாட்கள் சேர்ந்து இருக்கிற மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கலாம்னு விசு சொல்லு வார். அதுதான் கிளைமாக்ஸ். ‘அது சரியா இருக்குமா?’ என்ற சந்தேகம் எனக்கும், பாலு சாருக்கும் வந்தது. ஆனால், ஏவி.எம்.சரவணன் சார் மட்டும், நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று உறுதியாக இருந்தார். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகளும் பாராட்டினர். அப்போதே படம் வெற்றி என்பது உறுதியானது.

என்னைத்தான் எல்லோரும் மினிமம் கேரண்டி டைரக்டர், பட்ஜெட்டில் படம் எடுக்கிற டைரக்டர்னு சொல்வாங்க. ‘திருப்பதிக்கே லட்டா!’ என்று என்னை முந்திக் கொண்டு டைரக்டர் விசு அவர்கள் முழு படத்தையும் 35 நாட்களில் எடுத்தார். அதேபோல் ஒரு படத்துக்கு குறைந்தது 50,000 அடி ஃபிலிம் ரோல் தேவைப்படும். இந்தப் படத்தை விசு சார், 34,000 அடியிலேயே எடுத்துவிட்டார். இது நான் எடுப்பதைவிட குறைவு. ‘என்னாலும் பட்ஜெட்டில் படம் எடுக்க முடியும்’ என்று விசு நிரூபித்த படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்.’

இந்தப் படத்ததுக்கு மத்திய அரசின் தங்கப்பதக்கம் கிடைத்தது. தங்கப் பதக்கம் வாங்கிய முதல் தமிழ்ப் படம் இது. அந்தப் பெருமையை ஏவி.எம் நிறுவனத்துக்கு பெற்றுத் தந்தவர் விசு.

இந்தப் படத்தை தெலுங்கில் இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இங்கே விசு நடித்த ரோலில் அங்கே கொல்லபுடி மாருதி ராவ் நடித்தார். விசு, சுவையாக இப்படத்தை தமிழில் எடுத்திருந்ததால் என்னால் தெலுங்கில் சுலபமாக எடுக்க முடிந்தது. படத்துக்குப் பெயர் ‘சம்சாரம் ஒகா சதாரங்கம்.’

தெலுங்கில் மனோரமா ரோலுக்கு யாரை போடுவது என்று பெரிய விவாதமே நடந்தது. முடிவில் சரவணன் சார், ‘‘சவுகார் ஜானகியை நடிக்க வைக்கலாம். அவருக்கு படத்தை போட்டுக் காட்டுங்கள்’’ என்றார். நான் தமிழ் படத்தை போட்டுக் காட்டினேன். படத்தை பார்த்துவிட்டு, ‘‘என்னால் மனோரமா அளவுக்கு நடிக்க முடியு மான்னு தெரியல. ஆனால், நீங்களும், சரவணன் சாரும் சொல்றதுனால நடிக்க ஒப்புக்குறேன்’ன்னு சொல்லி நடித்தார். ஆச்சி மனோரமாவின் நடிப்புக்கு துளியும் குறையாத நடிப்பை சவுகார் ஜானகி வெளிப்படுத்தினார். தமிழில் மனோரமா பேசிய, ‘கம்முன்னு கெட’ ங்கிற வார்த்தைக்கு இணையான தெலுங்கு வார்த்தையை வசனகர்த்தா கணேஷ் பாத்ருவால் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் அதற்கு சமமான ஒரு வார்த்தையை சவுகார் அவர்கள் ஒப்புக்கொண்டு மனோரமா ஸ்டைலில் சொன்னார்கள். அந்தப் படம் ஆந்திராவில் 100 நாட்கள் ஓடியது. அதுக்கு காரணம் விசுவின் படைப்புதான்.

அடுத்து நான் இயக்கிய படம் சத்யா மூவீஸின் ‘ராணுவ வீரன்.’ படத்தின் தயாரிப்பாளர் அரசியல், நாடகம், சினிமா, ஆன்மிகம், இலக்கியம் எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்கும் அண்ணன் அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள். எம்.ஜி.ஆர் அவர்களை நடிக்க வைத்து அதிக படங்கள் எடுத்த ‘சத்யா மூவீஸ்’ நிறுவனத்துக்கு நான் படம் இயக்குகிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருந்தது.

அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் காரைக்குடியில் என்னுடைய தந்தையார் இராம.சுப்பையா அவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவரது நிறுவனத்தில் நான் படம் இயக்குவதை அவர் என் தந்தைக்குச் செய்த நன்றியாகவே நினைக்கிறேன். எந்த வேலையை செய்தாலும் அதில் மிக கவனமாக இருப்பதுடன், அந்த வேலை தரமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஆர்.எம்.வீ. எதையுமே மிகச் சரியாகவும், தரமாகவும் செயல் வடிவம் கொடுக்கும் ஏவி.எம் செட்டியார் அவர்களிடம் நான் வேலை கற்றுக்கொண்டவன். என்னாலயே, ஆர்.எம்.வி அவர்களைத் திருப்தி செய்ய முடியாது. ஆர்.எம்.வீ அவர்கள் நாடக அனுபவம் உள்ளவர் என்பதால், கதை ஞானமும் அவருக்கு உண்டு. கதை விவாதங்களில் சூடு பறக்கும் பல கேள்விகளை அடுக்குவார். அவருக்கு வரும் யோசனைகளை பகிர்ந்துகொள்வார்.

‘சத்யா மூவீஸ்’ கதை இலாகா பிரிவில் அப் போது ஜெகதீசன், ராதா வீரண்ணன், கிருஷ்ணா, தமிழழகன் ஆகியோர் இருந்தனர். நான் அந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அண்ணன் ஆர்.எம்.வீ அவர்கள் அமைச்சராக இருந்தார். ‘கதை விவாதத்துக்கு 6 மணிக்கு வந்துடுறேன்’ என்று சொல்வார். நாங்கள் தயாராக இருப்போம். மணி எட்டாகும். ஒன்பதாகும். அவரிடம் இருந்து போன் வரும். ‘‘கொஞ்சம் டைம் ஆகும். நீங்கள்லாம் சாப்பிட்டு ரெடியா இருங்க. நான் வந்துடுறேன்’’ என்று சொல்வார். நாங்க ரெடியாக இருப்போம். கடைசியில் 11 மணிக்கு வந்து சேர்வார். அந்த நேரத்திலும் கொஞ்சமும் சோர்வே இல்லாமல், கதை விவாவதத்துக்குள் படு சுறுசுறுப்பாகிவிடுவார்.

‘ராணுவ வீரன்’ படம் நக்சலைட் தீவிரவாதிகளைப் பற்றிய கதை. படத்தில் ராணுவ வீரராக தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நக்சலைட்டாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் நடித்தார்கள். ரஜினி, ‘அகிம்சைதான் சரியான வழி. தீவிரவாதம் கூடாது’ என்று வலியுறுத்தும் கதாபாத்திரம். சிரஞ்சீவி அதுக்கு நேர். தீவிரவாதத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தீவிரமாக நடித்தார். படம் பார்த்தவர்கள் ரஜினி ரோலில் சிரஞ்சீவியும், சிரஞ்சீவி ரோலில் ரஜினியும் நடித்திருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

வெளிப்புற படப்பிடிப்புகள் தமிழகத்தில் பல இடங்களிலும் நடந்தது. பொள்ளாச்சியில் நடக்கும்போது படக்குழுவினருக்கு உதவி செய்வதற்காகா ‘நெகமம்’ கந்தசாமி எங்களோடு வந்திருந்தார். டாப் சிலிப் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்தது. அழகான பசுமையான இடம். சுற்றிலும் மலை. நடுநடுவில் காடுகள். இருட்ட ஆரம்பித்தால் மிருகங்கள் வந்துவிடும். அதனால் இருட்டுவதற்குள் எல்லோரும் வெளியே வந்துவிட வேண்டும். ஒருநாள் யூனிட்டில் பத்து பேர் வந்து சேரவில்லை. அவர்களை அழைத்து வர எந்த டிரைவருக்கும் தைரியமில்லை. ‘நெகமம்’ கந்தசாமி இதைப் பார்த்ததும் ஒரு ஜீப்பை எடுத்துக்கொண்டு அந்த 10 பேர்களை அழைத்துவர அந்த இருட்டில் புறப்பட்டார். ‘நெகமம்’ கந்தசாமி ஆட்களை அழைத்து வந்தாரா? மிருகங்களிடம் மாட்டிக்கொண்டாரா?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-57-கம்முன்னு-கெட/article8584231.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 58: அருளாளர் ஆர்.எம்.வீ.!

எஸ்பி.முத்துராமன்

 

 
  • ‘ராணுவ வீரன்’ (1981) படத்தில் ரஜினிகாந்த், தேவி
    ‘ராணுவ வீரன்’ (1981) படத்தில் ரஜினிகாந்த், தேவி
  • சிரஞ்சீவி | ‘சத்யஜோதி’ தியாகராஜன்
    சிரஞ்சீவி | ‘சத்யஜோதி’ தியாகராஜன்
  • ‘போக்கிரி ராஜா’ பாடல் கம்போஸிங்கில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இயக்குநர் எஸ்பி.முத்துராமன், உதவி இயக்குநர் வி.எஸ்.சண்முகம்.
    ‘போக்கிரி ராஜா’ பாடல் கம்போஸிங்கில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இயக்குநர் எஸ்பி.முத்துராமன், உதவி இயக்குநர் வி.எஸ்.சண்முகம்.

நான் படப்பிடிப்பில் உதவிக்காக இருந்த ‘நெகமம்’ கந்தசாமி காட்டில் மாட்டிக் கொண்ட யூனிட் ஆட்களை மீட்டுக் கொண்டு வருவதற்குள் எங்களுக்கு உயிர் போய் உயிர் வந்துவிட்டது. வரும் வழியில் காட்டு எருமை ஜீப்பை துரத்த, அதுக்கு போக்கு காட்டிவிட்டு ‘நெகமம்’ கந்தசாமி மலை இடுக்குகளிலும், பள்ளத் திலும் வண்டியை ஓட்டி வந்திருக்கிறார். ஒருவழியாக எல்லோரும் பத்திரமாக வந்தபிறகுதான் எங்களுக்கு நிம்மதி வந்தது. சினிமா எடுத்துப் பார் என்பதற்கு ஏற்ப, இப்படி படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலும் திரில்லான விஷயங்கள் நடக்கும்.

நாமக்கல் பகுதியில் சில நாட்கள் தங்கி படப்பிடிப்பை நடத்தினோம். வழக்கம்போல யூனிட் ஆட்கள், நான், கேமராமேன் பாபு உள்ளிட்ட எல்லோரும் ஒரு இடத்தில் தங்கிக்கொண்டோம். ரஜினிக்கு, கொஞ்சம் பிரைவஸியாக இருக்கட்டுமே என்று ஊரைவிட்டு கொஞ்சம் தள்ளியிருந்த ஒரு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனியே இருக்கும் அவ ருக்கு உதவியாக ஒப்பனைக் கலைஞர் முத்தப்பாவை அனுப்பியிருந்தோம்.

அடுத்த நாள் படப்பிடிப்புக்கான ஆயத்த வேலைகளை முடித்தபோது ஒரு யோசனை. ரஜினி தங்கியுள்ள விடுதிக்குச் சென்று அவரை பார்த்து விட்டு வருவோம் என்று தோன்றியது. என்னோடு மூர்த்தி, நாகப்பன் இருவரும் வந்தார்கள். விடுதிக்குச் சென்று கதவை தட்டினோம். ரஜினி கதவை திறந்தார்.

‘‘எங்கே முத்தப்பா?’’ என்று ரஜினி யிடம் கேட்டோம்.

‘‘உள்ளே வாங்க” என்று அழைத் துச் சென்றார் ரஜினி. முத்தப்பா, பலமான குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த தூக்கத் தில் இருந்தார். ரஜினி எங்களைப் பார்த்து, ‘‘நீங்க என்னை பார்த்துக்க முத்தப்பாவை அனுப்புனீங்க. நான்தான் இப்போ முத்தப்பாவை பார்த்துக் கிறேன்’’ என்று சிரித்தார். மறுநாள் படமாக்கவிருந்த காட்சிகள் பற்றிப் பேசிவிட்டு திரும்பினோம்.

படத்தின் தயாரிப்பாளர் அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அப்போது அமைச்சராக இருந்தார். தீவிர அரசியல் பணியிலும் கவனம் செலுத்தி வந்ததால், தன் மகள் செல்வியின் கணவரும், தனது மாப்பிள்ளையுமான தியாகராஜன் அவர்களை படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக நியமித்திருந்தார்.

தியாகராஜன் அமெரிக்கா சென்று எம்.பி.ஏ பட்டம் பெற்று வந்தவர். நாங்கள் சொல்லும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை கேட்டுக்கொள்வார். வெளிநாட்டு கம்பெனிகளைப் போல அதை குறிப்பெடுத்துக்கொண்டு, அடுத்த நாள் டைப் செய்து கொண்டுவருவார். உதவி இயக்குநர்கள், தயா ரிப்பு நிர்வாகி எல்லோரு டைய கையிலும் ஒவ்வொரு பேப்பரை கொடுப்பார். வேலை முடிய முடிய… டிக் அடித்துக்கொண்டே வருவார். அதுவே எங் களுக்கு பாதி பளுவை குறைத்தது. ஷூட்டிங்கில் எங்களிடம் வேலை வாங்கும் அதேநேரத்தில் அவரும் முழுமையாக தயாரிப்பு நிர்வாக வேலைகளை கற்றுக்கொண்டார்.

அந்த சுறுசுறுப்பு, நிர்வாகத் திறமைதான் இன்றைக்கு அவரது ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ கம்பெனி படத் தயாரிப்பில் முன்னிலையில் நிற்கிறது. தற்போது அஜித், தனுஷ் என்று முன்னணி நடிகர்களை வைத்து மிகப் பெரிய படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். மாமாவுக்கு ஏற்ற மாப்பிள்ளை. வெற்றி மாப்பிள்ளை. பாராட்டுகிறேன்!

‘ராணுவ வீரன்’ பட கிளைமாக்ஸை கதகளி நாட்டியத்தை வைத்து எடுக்கலாம் என்று ஆர்.எம்.வீ அவர்கள் சொன்னார் கள். அந்த நாட்டியத்தில் புகழ்பெற்ற நடராஜன் சகுந்தலா தம்பதிகளை நடனம் ஆட வைத்து அதை ரஜினி, தேவி இருவரையும் பார்க்கச் சொல்லி, பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

சென்னைக்கு அருகே உள்ள திருநீர்மலை கோயிலில் படப்பிடிப்பு. ஆயிரம் பேர் சூழ்ந்து நிற்க திருவிழா ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தோம். அப்போது அங்கே ஆர்.எம்.வீரப்பன் வந்தார்.

மலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘‘முத்துராமன்... மலைக்கு மேல் கோயி லில் படப்பிடிப்பை நடத்துறீங்க.மலை யைச் சுற்றி லைட்டிங் அமைக் கலையா?’’ என்று கேட்டார். ‘‘சார்.. அதுக்கு செலவு அதிகம் ஆகும்’’ என்றேன்.

‘‘என்ன முத்து ராமன்... அங்கும் லைட்டிங் போட் டால்தானே. கோயில் மலை மேல் இருப்பது தெரியும்!’’ என்று சொன்னார். உடனடியாக லைட் டிங் ஏற்பாடு செய்து படப்பிடிப்பை நடத்தி னோம். மலை மேலும் அழகாக ஒளிர்ந்தது. ஆனால், செலவும் அதிக மானது. தரத்துக்காக செலவு செய்யும் தயா ரிப்பாளர் ஆர்.எம்.வீ.

அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் நாடக உலகை நன்கு அறிந்தவர். எல்லா நேரத்திலும் நாடகக் கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர். நாடகம்தான் அவருக்கு தாய்வீடு. என்னை அழைத்து, ‘‘முத்து ராமன்... நாடக கலைஞர்களோட ஒரு லிஸ்ட் வரும். அவர்களையும் இந்த திரு விழா காட்சி யில் பயன்படுத்துங்க. அவங் களுக்கு வேஷம் மட்டும்னு இல்லாம, வச னம் பேசுற விதமாவும் பயன்படுத்துங்க. அதுக்கு ஏற்ற மாதிரி சம்பளமும் கொடுக்கலாம்’’ என்றார். தான் வளர்ந்த பிறகும் நாடகக் கலைஞர்களுக்கு உதவியவர், அதனால் உயர்ந்தவர்.

‘ராணுவ வீரன்’ படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன். சத்யா மூவீஸின் சமஸ்தான இசை யமைப்பாளர். கதை, திரைக்கதை ஜெகதீசன். வசனம் கிருஷ்ணா. பாடல் களை கவிஞர்கள் வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம் மூவரும் எழுதினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்தார்கள். இவர்களுக்கு நடிப்பில் ஈடுகொடுத்து நடித்தார், தேவி.

நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் தலைமையில் ஏவி.எம் அவர்களின் முழு ஆதரவோடு நன்கு இயங்கியது சென்னை கம்பன் கழகம். இஸ்மாயில் ஐயா காலத்துக்குப் பிறகு ஆர்.எம்.வீரப்பன் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ‘‘கம்பன் கழக வேலைகளை ஒருங் கிணைக்க சரியான நபர் வேண்டும். அதற்கு எனக்கு முத்து ராமனை கொடுத் தால் நன்றாக இருக்கும்!’’ என்று ஏவி.எம்.சரவ ணன் சாரிடம் ஆர்.எம்.வீ அவர் கள் கேட்க, சரவணன் சார் என்னை ஆர்.எம்.வீ அவர்களிடம் அனுப்பினார்.

நான் ஆர்.எம்.வீ அவர்களை சந்தித்து, ‘‘இது இலக்கியவாதிகள் சூழ்ந்திருக்கும் இடம். இங்கு எனக்கு என்ன வேலை?’’ என்று தயங்கினேன். ஆர்.எம்.வீ, ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ இருந்தா எனக்கு உதவியாக இருக்கும்’’ என்று கூறி என்னை செயற்குழு உறுப்பினராக நியமித்துவிட்டார். அதுதான் ஆர்.எம்.வீ.

கடந்த 13 ஆண்டு காலமாக கம்பன் விழாவில் மேடை அலங்காரம் உள்ளிட்ட சில முக்கிய வேலைகளை என்னிடம் ஒப்படைக்கிறார்கள். ஓவியர் பாஸ்கர்தாஸ், பூக்கடை சாரங்கன், அவர் மகன் ரமேஷ், குமாரவேல் போன்றவர்கள் பெரும் உதவியாக இருந்து வருகிறார்கள். கம்பன் விழாவில் மூன்று நாட்கள் மக்கள் நிறைந்திருக்கும்போதே கம்பன் கவிதைகளை ஓவியமாக்கி அரங்கத்தை மாற்றி வித்தியாசப்படுத்துவோம். எப்போதும் நல்லப் பணிகள் செய்கிற நேரத்தை நல்ல நேரமாக கருதுவேன். அதைப் போல், கம்பன் கழகப் பணிகள் செய்யும்போது அதை நல்ல நேரமாக நினைக்கிறேன். இந்த இலக்கிய வட்டத்துக்குள் என்னை சேர்த்துக்கொண்ட ஆர்.எம்.வீ, ஏவி.எம். சரவணன் சார், கம்பன் கழகத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து ஏவி.எம் தயாரிப்பில் ‘போக்கிரி ராஜா’ படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் ஒரிஜினல் ‘சொத்தலுன்னாரு ஜாக்ரத’ என்ற தெலுங்கு படம். அதில் கிருஷ்ணா, தேவி, கவிதா ஆகியோர் நடித்தனர். அந்தப் படத்தை ரஜினியை பார்க்கச் சொன்னோம்.

அவர் ‘அந்தப் படத்தை நான் பார்த் துட்டேன் சார்’’ என்றார். அதற்கு ஏவி.எம்.சரவணன் சார், ‘‘பொதுவா பார்த்திருப்பீங்க. நாம அந்தப் படத்தை தமிழ்ல எடுக்கலாமாங்கிற எண் ணத்தோட பாருங்க’’ என்றார். அதற்கும் ரஜினி ஒப்புக்கொண்டார். இரவு 10 மணிக்கு ஏவி.எம் ஸ்டுடியோவில் உள்ள தியேட்டரில் ரஜினி படம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ரஜினி படம் பார்க்க வரவில்லை. ஏன்?

- இன்னும் படம் பார்ப்போம்….

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-58-அருளாளர்-ஆர்எம்வீ/article8614510.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சினிமா எடுத்துப் பார் 59: பயமறியாத ரஜினி!

எஸ்பி.முத்துராமன்

 

 
  • ‘போக்கிரி ராஜா’ படத்தில் ரஜினிகாந்த், ராதிகா
    ‘போக்கிரி ராஜா’ படத்தில் ரஜினிகாந்த், ராதிகா
  • ‘போக்கிரி ராஜா’ (1982) படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி | முத்துராமன்
    ‘போக்கிரி ராஜா’ (1982) படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி | முத்துராமன்
  • வேன் மீது கேமரா வைத்து ’போக்கிரி ராஜா’ படப்பிடிப்பு.
    வேன் மீது கேமரா வைத்து ’போக்கிரி ராஜா’ படப்பிடிப்பு.
  • விழா ஒன்றில் கண்ணதாசனுடன் எம்.ஜி.ஆர்.
    விழா ஒன்றில் கண்ணதாசனுடன் எம்.ஜி.ஆர்.

படம் பார்க்க ரஜினி ஏன் வர வில்லை என்று அவர் வீட்டுக்கு போன் செய்தோம். ‘‘வீட்டை விட்டு அவர் புறப்பட்டுவிட்டாரே’’ என்றார்கள். அவரின் காருக்காக எதிர்பார்த்து காத்திருந் தோம். ஒரு ஸ்கூட்டர் வந்தது. அந்த ஸ்கூட் டரில் வந்தவர் ரஜினிகாந்த். ‘‘ஏன் ஸ்கூட் டர்ல வந்தீங்க, அதுவும் இரவு நேரத்துல. சொல்லியிருந்தா கார் அனுப்பியிருப்போம்ல?’’ என்றேன்.

உடனே ரஜினி ‘‘சார்… எனக்கு கார், ஸ்கூட்டர் எல்லாமே ஒண்ணுதான். ஸ்கூட்டர் ஓட்டுற பழக்கம் டச் விட்டுப் போயிடக் கூடாதுல்ல!’’ என்று சிரித்துவிட்டு, ‘‘வாங்க... வாங்க படம் பார்ப்போம்’’ என்றார். அந்த விஷயம் சரவணன் சாருக்குத் தெரிந்துவிட்டது. அவர் என்னை கூப்பிட்டு, ‘‘ரஜினி இனி மேல் ஸ்கூட்டர்ல வரக் கூடாதுன்னு சொல் லுங்க. போறப்ப கார்ல கொண்டுபோய் விட்டுடுங்க. ஸ்கூட்டரை ஒரு பையனை ஓட்டிட்டு போகச் சொல்லுங்க’’ என்றார்.

படம் பார்த்து முடித்த ரஜினி, ‘‘இந்தப் படத்தை தமிழ்ல செய்யலாம். இதில் ரெண்டு ரோல் இருக்கு. ரெண்டும் வித்தியாசமா இருக்கு. நான் நடிக்கிற துக்கு நல்ல வாய்ப்பு. சரவணன் சார்கிட்ட சொல்லிடுங்க’’ என்று சொல்லிக் கொண்டே ஸ்கூட்டரை எடுக்கப் போனார். நாங்கள் உடனே ‘‘நீங்க ஸ்கூட்டர்ல போகக் கூடாது. கார்லதான் போகணும்னு சரவணன் சார் சொல்லியிருக்கார். நீங்க கார்ல போங்க. ஸ்கூட்டரை ஒரு பையன்கிட்ட கொடுத்தனுப்புறோம்’’ என்று சொன்னோம். அதுக்கு அவர் ‘‘ஸ்கூட்டர்ல வந்த நான் ஸ்கூட்டர்லதான் போவேன்’’ என்று புறப்பட்டுவிட்டார். அவருக்காக ஏற்பாடு செய்திருந்த கார் டிரைவரிடம் அவருடைய ஸ்கூட்டருக்குப் பின்னாலேயே அந்த காரை ஓட்டிச் சென்று, அவர் வீட்டுக்குக்குள்ளே போனதும் திரும்பி வாங்க என்று சொல்லி அனுப்பி வைத் தோம். டிரைவர் திரும்பி வந்து ‘‘ரஜினி வீட்டுக்குள் போய்விட்டார்’’ என்று சொன்ன பிறகுதான் சரவணன் சார் உறங்க போனார். பயமறியாத குழந்தையைப் போல... பயமறியாத ரஜினி!

‘போக்கிரி ராஜா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்கள். ஒருவர் போக்கிரி; இன்னொருவர் ராஜா. போக்கிரிக்கு ‘போக்கிரி’ மாதிரியான நாயகி ரோலில் ராதிகா; ராஜாவுக்கு ‘ராணி’ மாதிரியான நாயகி ரோலில் ஸ்ரீதேவி. மூவரும் நடிப்பிலே கலக்கோ கலக்கு என்று கலக்கினார்கள்.

திருத்தணி அருகே ஒரு மலையில் புல்கள் வளர்ந்த பசுமையான இடத்தை ‘போக்கிரிக்கு போக்கிரி ராஜா’ என்ற பாடலை படமாக்க தேர்ந்தெடுத்தோம். போக்கிரித்தனம் செய்யும் ரஜினிக்கு இணையாக ராதிகாவும் போக்கிரித் தனமாக ஆடி நடிக்க வேண் டும். ராதிகாவிடம் கேரக்டர் பற்றி சொன்னபோது, ‘‘நீ இந்த கேரக்டருக்கு உங்க அப்பா எம்.ஆர்.ராதாவை மனதில் வைத்துக்கொண்டு நடித்தால்போதும்’’ என்று சொன்னேன். அவரும், ‘‘ஓ.கே. சார். அப்படியே நடிக்கிறேன்’’ என்றார். அப்படியே அருமையாக நடித்தார். அந்தப் பாடலுக்கு புலியூர் சரோஜா நடனம் அமைத்தார். அவரும் நடனத்தில் ஒரு அசத்தல் போக்கிரி யாச்சே… ஆகவே, அந்தப் பாடலில் மூவ்மென்ட்ஸ் எல்லாமே ரஃப் ஆக அமைந்திருக்கும். ரஜினி, ராதிகா, புலியூர் சரோஜா ஆகிய மூன்று பேர்களும் மக்களை மிரட்டிய நடனம் அது.

இப்போது இருப்பதுபோல் அகேலா கிரேன் எல்லாம் அப்போது கிடையாது. உயரத்தில் டாப் ஷாட் வைப்பது என்றால் ஷூட்டிங் வேன் மீதுதான் வைப்போம். சில சமயங்களில் வேனை ஓட வைத்து ஃபாலோ ஷாட் எடுப்போம். அதெல்லாம் மனித முயற்சி.

ஒரு இடத்தில் ராதிகாவை தூக்கிக் கொண்டு ரஜினி ஆடுவதுபோல நடனக் காட்சி. அதை புலியூர் சரோஜா ஆடிக் காட்டியதும், கொஞ்சம்கூட யோசிக்கா மல் ரஜினி, ராதிகாவை தோள் மீது தூக்கிக்கொண்டு ஆட ஆரம்பித்துவிட்டார். அப்போது கால் ஸ்லிப் ஆகி ரஜினிக்கு முட்டியில் அடிப்பட்டு ரத்தம் வடிந்தது. ராதிகாவுக்கும் காயம் ஏற்பட் து. அதையெல்லாம் பொருட்படுத் தாமல் ரஜினி அந்த நடனக் காட்சி யில் நடித்து முடித்துவிட்டுத்தான் அமர்ந்தார்.

அதே படத்தில் ‘விடிய விடிய சொல்லித் தருவேன்’ என்ற மென்மை யான ஒரு பாடல். இந்தப் பாடலுக்கு ரஜினியும், ஸ்ரீதேவியும் மென்மையாக நடனம் ஆடினார்கள். இந்தப் பாடலுக்கு ஆர்ட் டைரக்டர் சலம் அவர்கள் பூக் களால் பிரம்மாண்டமாக செட் அமைத்திருந்தார். இதற்காக தினந்தோறும் இரண்டு லாரிகளில் பெங்களூரில் இருந்து பூக்கள் வந்தன. காட்சி அழகாக அமைய வேண்டுமானால் செலவும் அதிகமாகத்தானே ஆகும்!

படத்தில் இந்த இரண்டு பாடல்களுக் கும் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு பாடல். ரஜினி குடித்துவிட்டுப் பாடுவது போல் சூழல். அந்தப் பாடலை கவியரசு கண்ணதாசன் எழுதினார். ‘கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு/ மனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு’என்ற இந்த தத்துவப் பாடலில் ரஜினியின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது. இந்த மூன்று பாடல்களுக்கும் வித்தியாசமான இசையை அமைத்திருந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஏவி.எம் தயாரிப்பிலும், நான் இயக்கிய பல படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் நவரச திலகம் முத்துராமன். ‘போக்கிரி ராஜா’ படத்தில் ரஜினிக்கு வில்லன் இவர்தான். இவர்கள் இருவரும் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஆந்திராவில் படமாக்கினோம். அப்போது முத்துராமன் என்னிடம் வந்து, ‘‘ஊட்டியில் ஒரு படம் ஷூட்டிங் இருக்கு. அங்கே போயிட்டு சென்னைக்கு வர் றேன். அங்கே சந்திப்போம்’’ என்று கூறி புறப்பட்டார். சென்னை வந்த எங் களுக்கு முத்துராமன் இறந்த சோகச் செய்திதான் கிடைத்தது.

என்னுடைய முதல் படமான ‘கனிமுத்து பாப்பா’ முதல் பல படங்களில் என் இயக்கத்தில் நடித்தவர் முத்துராமன். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருப்பதால் சில சமயங்களில் அவருக்கு அனுப்பிய கடிதங்கள் எனக்கு வந்துவிடும். எனக்கு அனுப்பிய கடிதங்கள் அவருக்குப் போய்விடும். அதேபோல் போன் அழைப்புகளிலும் இப்படி நடக்கும். இதில் ‘குறும்பான’ விஷயங்கள் என்று உங்களிடத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென் றால், இரண்டு பேரும் சுத்தமானவர்கள்! அவர் வளர்ச்சியில் நானும், என் வளர்ச்சியில் அவரும் துணையாக இருந்தோம். அந்த துணை போய்விட்டதே என்ற துக்கம் என்றும் என் இதயத்தை விட்டுப்போகாது. இந்த துக்கம் மறைவதற்கு முன் ‘பட்ட காலிலே படும்’ என்பதைப் போல் இன்னொரு துக்கம். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அமெரிக்காவில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. ஒரே நேரத்தில் திரையுலகம் இரண்டு பெரும் இழப்பை சந்தித்தது. நாங்கள் மட்டுமா அழுதோம்? உலகமே அழுதது.

கவியரசருடைய புகழுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. திரையிசைப் பாடல்களில் தமிழ் இலக்கிய சாற்றைக் கலந்து கொடுத்த கவியரசர் கண்ணதாசனின் புகழுடலைப் பார்த்த மக்கள் அழுத அழுகை இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது. அவர் உடலைப் பார்த்து ‘‘அண்ணே… அண்ணே… ’’ என்று அழுதேன். ‘‘தம்பி... தம்பி!’’ என்று பாசத்தோடு கூப்பிட்ட அவர் இதழ்கள் மூடிக் கிடந்தன. அந்த மவுனம் என் கண்களை இறுக்கமாக்கியது. என் வாழ்க்கையில் ‘முதல் முதலாளி’ அவர்தானே!

கவியரசரை தமிழகத்தின் அரசவை கவிஞராக்கி அழகு பார்த்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அஞ்சலி செலுத்த வந்தார். கண்ணதாசன் உடலைப் பார்த்து தன் வருத்தத்தை வழிந்தோடும் கண்ணீர் மூலம் காணிக்கையாக்கினார். கவிதைத் தாயின் தலைமகன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. சிறுகூடற்பட்டி சிகரத்தின் உடலை சுமந்து நகர்ந்த அந்த இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர் அவர்களும் நடந்து வந்தார். சன் தியேட் டருக்கு அருகே இறுதி ஊர்வலம் வரும்போது எம்.ஜி.ஆரைப் பார்த்ததும் மக்களின் விசில் சத்தமும், கைத்தட்டலும் அதிகமானது. அதைக் கண்ட எம்.ஜி.ஆர் திடுக்கிட்டு போனார். பிறகு..?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-59-பயமறியாத-ரஜினி/article8644644.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமா எடுத்துப் பார் 60: புதுமை விரும்பி பார்த்திபன்!

எஸ்பி.முத்துராமன்

 

  • ’எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா
    ’எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா
  • ’புதுக்கவிதை’ படத்தில் சுகுமாரியுடன் ரஜினி, ஜோதி
    ’புதுக்கவிதை’ படத்தில் சுகுமாரியுடன் ரஜினி, ஜோதி
  • ‘புதுக்கவிதை’ (1982) படத்தில் ரஜினிகாந்த், ஜோதி
    ‘புதுக்கவிதை’ (1982) படத்தில் ரஜினிகாந்த், ஜோதி

நான் கவியரசு கண்ணதாசன் அவர்களின் உடலை சுமந்து நகர்ந்த அந்த இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர் அவர் களும் நடந்து வந்தார். சன் தியேட்ட ருக்கு அருகே இறுதி ஊர்வலம் வரும் போது எம்.ஜி.ஆரைப் பார்த்ததும் மக்களின் விசில் சத்தமும், கைத்தட்டலும் அதிகமானது. அதைக் கண்ட எம்.ஜி.ஆர் திடுக்கிட்டு போனார். கவியர சர் ஊர்வலத்தில் மக்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று வருத்தப்பட் டார். கவியரசரை இழந்த சோகத்தில் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் முகத்தில் இன்னும் சோகம் படர்ந்தது. அருகில் இருந்தவர்களிடம், ‘‘இது கவிஞருக்கு மரியாதையாக இருக்காது. நான் காரிலேயே வந்து இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்’’ என்று சொல்லி விட்டு செயலாளரைக் கூப்பிட்டு காரை வரவழைத்து புறப்பட்டார்.

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சாதனையாளர்களின் இறுதி ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டால் விசில் அடிப்பதும், கை தட்டுவதும் மறைந்தவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்காது. அங்கே வந்து கை தட்டி, ஆரவாரம் செய் யும்போது அந்தத் துக்க நிகழ்ச்சி கேள்விக் குறியாகிவிடுகிறது. இதுவரை அப்படி நடந்திருந்தாலும், இனிமேலாவது அப் படி செய்யவேண்டாம் என்பதை இங்கே நான் வேண்டுகோளாக வைக்கிறேன்.

கண்ணதாசன் அவர்களின் இரங்கல் கூட்டத்துக்கு வந்திருந்த எம்.ஜி.ஆர் பேசும்போது, ‘‘காரைக்குடியில் கண்ண தாசனுக்கு மணிமண்டபம் உருவாக்கப் படும்’’ என்ற செய்தியை பதிவுசெய்தார். அவருக்குப் பிறகு முதல்வராக வந்த கலைஞர் அவர்களால் கண்ணதாசன் மணிமண்டபம் அங்கே கட்டப்பட்டது. அவரது ஆட்சிக்கு அடுத்து முதல்வ ராக வந்த செல்வி ஜெயலலிதா அவர் களால் அந்த மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. கவியரசரின் மணி மண்டபம் உருவாவதில் மூன்று முத லமைச்சர்கள் பங்களிப்பும் இருந்தது. எல்லாவற்றிலும் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்? அரசியலில் ஒற்றுமை இருக்கும். இருக்க வேண்டும் என்பது நம் ஆசை!

அடுத்து, கவிதாலயா தயாரித்த ‘புதுக்கவிதை’ படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினோம். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு பணக்கார பெண்ணுக்கும், ஏழைப் பையனுக்கும் இடையே நடக்கும் காதல் கதை. நாயகன் ரஜினிகாந்த், நாயகி ஜோதி. படத்தில் முதலாளியம்மாவாக சுகுமாரி நடித்தார். எந்த மாதிரி கதா பாத்திரம் என்றாலும் மிரட்டலாக நடிக்கக் கூடியவர் சுகுமாரி. படத்தில் அவரும் ரஜினியும் முரட்டுத்தனமாக மோதும் காட்சிகள் சிறப்பாக அமைந்தன. அந்தக் கதைக்கு ஏற்ற மாதிரி இசைஞானி இளையராஜா அவர்களின் இசையும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ‘வா வா வசந்தமே’, ‘வெள்ளைப்புறா ஒன்று’ ஆகிய பாடல்கள் படத்துக்கு மேலும் மெருகூட்டின.

மூணாறு பகுதியில் மிகப் பெரிய ஏரி ஒன்று இருந்தது. காலையில் சூரியன் உதயமாகும்போது தண்ணீரின் மேற்புறம் முழுவதும் பனிப் புகை மூட்டம் படர்ந்து இருக்கும். சூரியன் மேலே வரவர கொஞ்சம் கொஞ்சமாக அந்த புகை மூட்டம் தண்ணீரின் மேல் கலைந்துபோகும். இந்த கண்கொள்ளாக் காட்சியைப் படமாக்க அதிகாலை 4 மணிக்கெல்லாம் அங்கே இருந்தால்தான் அதனை படமாக்க முடியும். ரஜினியிடம் இரவு சாப்பிடும்போது விஷயத்தை சொன்னேன். ‘‘காட்சி சிறப்பா இருக் கும்னா.. வாங்க சார் இப்பவே அங்கு போய் படுத்துக்குவோம்’’ என்று ஆர்வத் தோடு சொன்னார். உழைப்பதற்கு எப்போதும் தயக்கமே காட்டாதவர். திட்டமிட்டபடி அதிகாலை 4 மணிக்கு அங்கே யூனிட்டோடு போய் சேர்ந்தோம். அங்கே அப்படி ஒரு கடுங்குளிர். அதை தாங்கிக்கொண்டு ஒட்டுமொத்த யூனிட்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டோம்.

அந்த அதிகாலை நேரத்தில் திடீரென ஒரு பரபரப்பான சத்தம் கேட்டது. குளிர் தாங்கமுடியாமல் அங்கே வேலை செய்துகொண்டிருந்த உதவி இயக்குநர் வி.ஏ.துரை மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அவரை அருகில் இருந்த ஜென ரேட்டர் வேனுக்கு தூக்கிக்கொண்டு போய் வெப்ப கதகதப்பில் வைத்து கை, கால்களை தேய்த்துவிட்டு இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தோம். அந்த உதவி இயக்குநர் வி.ஏ.துரைதான் பின்னாளில் ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ போன்ற படங்களைத் தயாரித்தவர்.

rajini111_2876994a.jpg

‘புதுக்கவிதை’ படத்தில் ரஜினி மோட்டார் சைக்கிளில் ரயிலை துரத்து வதுபோல ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ரயில் டிராக்கும், சாலையும் அருகருகே இருக்கும் இடம் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து அரக் கோணம் செல்லும் வழியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையையொட்டி ஒரு ரயில் டிராக் செல்வது தெரிய வந்தது. அங்கு படப்பிடிப்பை ஆரம் பித்தோம். ரயிலில் கேமராவை வைத்து ரஜினி ரயிலை துரத்துவதை படமாக்கினோம். கேமராவுக்கு நேராக ரஜினி இருந்தால்தான் காட்சி சரியாக அமையும். ரயில் போகும் வேகத்துக்கு இணையாக, கொஞ்சமும் பிசகாமல் ரஜினி மோட்டார் சைக்கிளை ஓட்டி னார்.. காட்சி ரொம்ப சிறப்பாக அமைந்தது.

ரயிலில் ஒரு புதுமணத் தம்பதி ஒருவரையொருவர் செல்லமாக கொஞ் சிக்கொண்டே வருவதுபோல காட்சி. இளம் தம்பதி வேடத்துக்கு ஜோடியை தேடிக்கொண்டிருந்தோம். அப்போது தான் மூர்த்தி என்ற இளைஞனின் ஞாபகம் எனக்கு வந்தது. அவர் ரொம்ப நாட்களாகவே என்னிடம், ‘‘உங்க படத்துல வேலை பார்க்கணும். அவுட் டோர் ஷூட்டிங்னாலும் என்னை அழைச்சுட்டுப் போங்க சார்’’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அவ ருக்கு அந்த ரோலை கொடுக்கலாம் என்ற யோசனை அப்போது எனக்கு வந்தது. அவரிடம் விஷயத்தை சொன்னதும், மகிழ்ச்சியோடு அந்த சிறிய கதா பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த மூர்த்திதான் இன்றைக்கு மிகவும் பாப்புலராக இருக்கும் நடிகர், இயக்கு நர் பார்த்திபன் அவர்கள். பின்னர் அவர் உதவி இயக்குநராகி ‘புதியபாதை’ போன்ற புதுமையான படங்களை இயக்கினார். என் இயக்கத்தில், தாணு அவர்கள் தயாரித்த ‘தையல்காரன்’ படத்தில் நாயகனாகவும் நடித்தார்.. ஒரு விழாவில் பரிசு கொடுப்பதாக இருந்தாலும், ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக இருந்தாலும் தனக்கென ஒரு பாணி, பேச்சு மொழி என்று வித்தியாசமாக செய்து அசத்துவார். புதுமை விரும்பி பார்த் திபன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

காமெடி, கமர்ஷியல் என்று கலக்கும் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ போன்ற சென்டிமென்ட் கதைகளைக் கொடுப் பதில் தனி ஈடுபாடு. அந்த வரிசையில் நாங்கள் எடுத்தப் படம், ‘எங்கேயோ கேட்ட குரல்’.

கிராமத்துப் பின்னணி. ரஜினி, அம்பிகா, ராதா, டெல்லிகணேஷ், கமலா காமேஷ், குழந்தை மீனா ஆகியோர் நடித்தனர். கிராமத்து விவசாயியாக வித்தியாசமான ரோலில் நடித்தார் ரஜினி. அவரை எப்போதும் வெறுக்கும் மனைவியாக அம்பிகா நடித்தார். திருமணத்துக்குப் பிறகு மனைவி கணவனை மதித்து வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய படம். மன்னிப்பதுதான் மனித இயல்பில் மிகப் பெரிய குணம் என்பதையும் அந்தப் படம் வழியே சொன்னோம். வித்தியாசமான முறையில் அந்தப் படத்தை எடுத்து ரிலீஸ் செய்தோம்.

இந்தப் படம் ரிலீஸான அதே நாளில் என் இயக்கத்தில் இன்னொரு படமும் ரிலீஸானது. அந்தப் படத்தைப் பற்றிய சுவையான தகவலை அடுத்த வாராம் சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-60-புதுமை-விரும்பி-பார்த்திபன்/article8676654.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 61: ஈகோ இல்லாத கமல், ரஜினி

எஸ்பி.முத்துராமன்

 

 
  • ’எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா (1982)
    ’எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா (1982)
  • கமல்ஹாசன், எஸ்பி.முத்துராமன், ரஜினிகாந்த்
    கமல்ஹாசன், எஸ்பி.முத்துராமன், ரஜினிகாந்த்
  • எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம்
    எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம்

பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படம் ரிலீஸான அன்றே, ஏவி.எம் தயாரித்து உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘சகலகலாவல்லன்’ படமும் ரிலீஸானது. என் இயக்கத்தில் உருவான இரண்டு படங்களும் வெவ்வேறு விதமான கதைக்களம் கொண்டவை. முழுக்க முழுக்க உணர்ச்சிகரமான கதை அம்சத்தோடு வெளிவந்த படம் ‘எங்கேயோ கேட்ட குரல்’. கதையும் கமர்ஷியலும் கலந்து வெளியான படம் ‘சகலகலா வல்லவன்’.

‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் ரஜினி, அம்பிகா நடிப்பில் மனதில் என்றைக்கும் நிற்கக்கூடிய வகையில், ஆழமான காட்சிகள் கண்ணீரை வரவழைத்தன. அதற்கு முற்றிலும் வித்தியாசமாக குதூகலப் பாடல்களும், கலகலப்பும், சண்டைகளும் கலந்த படமாக வந்தது ‘சகலகலா வல்லவன்’. இரண்டு படங்களும் 1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸானது.

ஏவி.எம்.குமரன் சார் அவர்கள் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு, ‘‘டைரக்டர் கார்டை எடுத்துவிட்டு இரண்டு படங்களையும் போட்டுக் காட்டினால் நிச்சயம் இது ஒரே இயக்குநர் இயக்கிய படம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இரண்டும் மாறுபட்டு இருக்கிறது. நீங்கள் இரண்டு படங்களை இரண்டு விதமாக எடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். இதுதான் உங்களுக்கான சாதனை’’ என்றார். அன்று ஏவி.எம்.குமரன் சார் சொன்ன வார்த்தைகள், ‘பத்ம’ விருதுகளுக்கு ஈடாக என் தாய்வீடான ஏவி.எம் தந்த விருதாகவே நினைக்கிறேன்.

cinema_4_insert_2886171a.jpg

ஏவி.எம்.குமரன்

இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல; என் ஒட்டுமொத்த குழுவுக்கும் சொந்த மான வெற்றி. குறிப்பாக இதில் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு மிகுதியான பாராட்டுகள் போய் சேர வேண்டும். இரண்டு வித்தியாசமான கதைகளையும் வெவ்வேறு கோணங்களில் அற்புதமாக உருவாக்கிய படைப்பாளி அவர்தான்.

என்னிடம், ‘‘கமலையும் ரஜினியையும் வைத்து பல படங்களை எப்படி இயக்கினீர்கள்?’’ என்று எல்லோரும் கேட்பார்கள். இன்றும் போகும் இடங்களில் எல்லாம் இந்தக் கேள்வி என்னைத் தொடர்கிறது.

ஒரு கதை தேர்வானதும், மாதத்தில் 10 நாட்களை ரஜினியிடமும், 10 நாட்களை கமலிடமும் கால்ஷீட்டாக வாங்கிக் கொள்வோம். 1-ம் தேதி முதல் 10 ம் தேதி வரை கமலிடம் வாங்கிக் கொண்டால், அடுத்து 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரைக்கும் ரஜினியிடம் கால்ஸீட் வாங்கிக் கொள்வோம். முதல் 10 நாட்கள் கமல் படப்பிடிப்பு முடிந்து ரஜினி படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கும்.

சில சமயம் படப் பிடிப்பில் ஒரு காட்சியை விளக்கும் போது ரஜினியை பார்த்து, ‘‘கமல் இப்படி வேண்டாம். அப்படி பண்ணுங்க?’’ என்று சொல்வேன். உடனே, ரஜினி ‘‘முத்துராமன் சார்… என்னதான் இருந்தாலும் உங்கக் குழந்தையைத் தானே நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்க’’ என்பார் சிரித்துக்கொண்டே. ‘‘இல்லை ரஜினி… கமலோடு ஷூட்டிங்ல 10 நாட்கள் கூடவே இருந்ததால, அதே நினைவுல உன்னை கமல்னு கூப்பிட்டுட்டேன்’’ என்று சொல்வேன். அவர், அவரது ஸ்டைலில் சிரிப்பார்.

ரஜினி ஷூட்டிங் முடிந்து, அடுத்த 10 நாட்கள் கமல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும். அப் போது கமலிடம், ‘‘இப்படி பண்ணினா நல்லா இருக்கும் ரஜினி’’ என்பேன். உடனே கமல், ‘‘பார்த்தீங்களா... வளர்த்த பிள்ளையை மறந்துட்டீங்க. வந்த பிள்ளையை ஞாபகம் வெச்சிருக்கீங்க!’’ என்பார். ‘‘இல்லை கமல். 10 நாட்கள் ரஜினியோடவே ஷூட்டிங்ல இருந்ததால அப்படி கூப்பிட்டேன். எனக்கு நீங்கள் இருவருமே இரண்டு கண்கள். உங்களை எப்படி மறப்பேன்” என்று அன்புடன் சொன்னதும், இருவருமே மகிழ்வார்கள்.

ரஜினி, கமல் இருவரது குணமும் வித்தியாசமானது. கமல் எப்போதும் எதையும் வித்தியாசமாக செய்ய வேண் டும் என்று விரும்புவார். அவருக்கு ‘சகலகலா வல்லவன்’ மாதிரி கமர்ஷியல் படத்தில் நடிப்பதைவிட, புஷ்பா தங்க துரையின் கதையை ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ என்று படம் எடுத் தோமே... அதே மாதிரி படங்கள் பண்ணு வதில்தான் அவருக்கு ஆர்வம். மக்கள் விரும்புகிறார்கள் என்று வியாபார பார் முலாவில் படம் எடுக்காமல், வித்தியாச மான படங்களை எடுத்து மக்களின் ரசனையை மாற்றவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.

அதுதான் கமலின் கொள்கை. அந்த நாட்களில் டெல்லி, கோவா என்று திரைப்பட விழாக்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார். எங்களுக்கு உலக படங்கள் பார்க்கும் பழக்கத்தை உருவாக்கி யவர் கமல்தான். கமல் சினி மாவை ஆராய்ச்சி செய்பவர். அதனால்தான் கமல் சினிமாவில் ‘விஞ்ஞானி’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘படம் சிறப்பாக அமைய வேண்டும். அதுவும் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக அது இருக்க வேண்டும்’ என்று நினைப்பார். ஒரு தடவைக்கு நான்கு முறை ஒரு காட்சியைப் பற்றி சொல்லச் சொல்லி வசனத்தை படித்துப் பார்த்து உள்வாங் கிக் கொள்வார். அந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்வார். எங்கே யாவது லாஜிக் இடித்தால், ‘‘இந்த இடம் ஒரு மாதிரியா இருக்கே. பஞ்சு அண்ணனைக் கூப்பிடுங்க’’ என்பார். அவர் வந்து தெளிவுபடுத்திய பிறகு தான் படப்பிடிப்புக்கு வருவார். அதனால்தான் ரஜினிகாந்தை நான் ‘மெய் ஞானி’ என்பேன்.

நான், கமல், ரஜினி மூவரும் படப் பிடிப்பில் சண்டை போட்டுக்கொண்டது கூட உண்டு. படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட தர்க்க வாதங்களைத்தான் அப்படிச் சொல் கிறேன். கடைசியில் படத்துக்கு எது ஏற்ற தாக இருக்குமோ அதை எங்களுக்குள் பேசி முடிவு செய்து, ஏகமனதாக ஏற்றுக் கொள்வோம். கன்வின்ஸ் பண்ணணும் அல்லது கன்வின்ஸ் ஆகணும். அதா வது, நமது கருத்தை பிறரை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். அல்லது அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், அதை ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் என் கொள்கை.

ஒரு காட்சியில், ‘‘இந்த இடத்தில் இந்த பன்ச் வசனத்தைப் பேசுகிறேனே’’ என்று ரஜினி சொல்வார். ‘‘இந்த இடம் உணர்ச்சிகரமான காட்சி. இங்கு அந்த பன்ச் வசனத்தை சொன்னால் மக்கள் கைதட்டிவிடுவார்கள். உணர்ச்சி உடைந்து போகும்’’ என்று சொல்வேன். அதை ரஜினி ஒப்புக்கொள்வார். அடுத்து, நகைச்சுவை காட்சி வரும் இடத்தில் ரஜினியிடம், ‘‘நீ ஏற்கெனவே சொன்ன அந்த பன்ச் வசனத்தை இந்தக் காட்சியில் சேர்த்துக்கோ’’ என்று சொல் வேன். உடனே ரஜினி, ‘‘ஆமாம் சார். இந்த இடத்துல அந்த பன்ச் வசனத்தைச் சொன்னா ரொம்ப கரெக்டா இருக் கும்’’ என்று சேர்த்துக்கொள்வார்.

எல்லாவற்றையும் வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று விரும்புவார் கமல்ஹாசன். அவரிடம், ‘‘இது சென்டிமென்ட் காட்சி. இந்த இடத்தில் வித்தியாசமா சொன்னா சென்டிமென்ட் ஒர்க்-அவுட் ஆகாது’’ என்று சொல்வேன். எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக ஏற்றுக்கொள்வார். எங்களுக்குள் எப்போதுமே ஈகோ இருந்ததே இல்லை.

சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கெல்லாம் என் அனுபவத்தில் சொல்கிறேன். ‘ஈகோ இல்லாமல் விட்டுக்கொடுத்து போகும் இடத்தில்தான் வெற்றி நிகழும். அதனால்தான் என்னால் ஒரே நேரத்தில் ரஜினியையும் கமலையும் வைத்து அதிக படங்களை இயக்க முடிந்தது!’

‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் தவறு செய்துவிடும் அம்பிகாவை ரஜினிகாந்த் மன்னிக்கிற காட்சியும், அப்போது அவர் பேசும் வசனங்களும் மக்களின் மனதை தொட்டன. அதே சமயம், ‘சகலகலா வல்லவன்’ படம் கலகலப்பாக அமைந்தது. இரண்டு படங்களையும் மக்கள் கொண்டாடி வரவேற்றார்கள். ‘எங்கேயோ கேட்ட குரல்’ 100 நாட்கள் ஓடியது. ‘சகலகலா வல்லவன்’ வெள்ளிவிழா கொண்டாடியது.

‘சினிமாவில் கதைக்காக நடிகரா? நடிகருக்காக கதையா?’ என்று வாச கர்கள் உங்களுக்குள் பட்டிமன்றம் நடத்திப் பாருங்கள். அதற்கான என் தீர்ப்பை நான் அடுத்த வாரம் சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-61-ஈகோ-இல்லாத-கமல்-ரஜினி/article8705019.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 62: கதைக்காக நடிகர்!

 

 
 
  • கமலுடன் சில்க் ஸ்மிதா.
    கமலுடன் சில்க் ஸ்மிதா.
  • ‘கட்டை வண்டி கட்டை வண்டி’ பாடல் காட்சி
    ‘கட்டை வண்டி கட்டை வண்டி’ பாடல் காட்சி
  • ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் காட்சியில் கமல்
    ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் காட்சியில் கமல்
  • ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல்ஹாசன், அம்பிகா (1982)
    ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல்ஹாசன், அம்பிகா (1982)

நான் கதைக்காக நடிகர்களா? நடிகர் களுக்காக கதையா என்று கேட் டால், ‘கதைக்காக நடிகர் என்பது தான் சரியான இலக்கணம்’ என்பதே என் கருத்து. ஆனால், கால வளர்ச்சியில் நடிகர்களுக்காக கதையையும் தேர்ந்தெடுக்கிறோம். அந்த வகையில் நடனம், சண்டை, காதல், நடிப்பு இப்படி கமலுக்கு என்னவெல்லாம் வரும் என்பதை மனதில் வைத்து அண்ணன் பஞ்சு அருணாசலம் எழுதிய கதைதான் ‘சகலகலா வல்லவன்’.

படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி கமல் என்ற கலைஞன் ஒரு சகலகலா வல்லவன் என்பதை நிரூபிப்பதற்காக ஏவி.எம் எடுத்த படம். கமலும் அதை நிரூபித்தார். படத்தின் இடைவேளை வரை கமல் கிராமத்து விவசாயியாக வருவார். அதன் பிறகுஅவருக்கு நகரத்து கெட்டப். இரண்டையும் வித்தியாசமாக செய்து தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அம்பிகா இதில் பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார். கிராமத்தில் குடுமியோடு இருக்கும் கமலை பார்த்து கலாட்டா செய்து அம்பிகா பாடும் கேலி பாடல்தான் ‘கட்டை வண்டி... கட்டை வண்டி’. இன்னொரு சமயத்தில் ‘டிட் பார் டாட்’ என்று சொல்வோமே... அது மாதிரி கமல்கிட்ட, அம்பிகா மாட்டிக் கொள்வார். அப்போது கமல், அம்பிகாவை பார்த்து அதே ‘கட்டை வண்டி’ பாடலை கேலி செய்து பாடுவார். கமல் ஆட்டத்தில் அம்பிகா குளோஸ். காவியக் கவிஞர் வாலி அவர்கள் இந்தப் பாடலின் சிறப்பான வரிகளை எழுதியிருப்பார்.

அப்போது கவர்ச்சி நடனம் என்றால் டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா போன்ற நடிகைகளை ஒப்பந்தம் செய்வோம். கமலோடு, சில்க் ஆடும் ‘நேத்து ராத்திரி யம்மா’ பாடலையும் கவிஞர் வாலி அவர்கள்தான் எழுதினார். இப்படிப் பட்ட பாடல்கள் கவிஞருக்கு கைவந்த கலை.

சூழலுக்குத் தகுந்த மாதிரி பாடகர் களை குரலை உயர்த்தி, தாழ்த்தி பாட வைத்து இசையமைப்பாளர் இளைய ராஜா இந்தப் பாடலை உருவாக்கினார். அதற்குள் ஒரு விரகதாபம் இருக்கும். இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தது, புலியூர் சரோஜா. பாட்டில் பாவம் இருந் தால் நடனத்தில் விடுவாரா..! கமலும், சில்க்கும் விட்ட பெருமூச்சு தமிழக மக்களை மூச்சடைக்க வைத்தது.

‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமலும், அம்பிகாவும் கணவனும், மனைவியுமாக நிலவு வெளிச்சத்தில் பாடுவது மாதிரி அமைந்த காட்சி ‘நிலா காயுது… நேரம் நல்ல நேரம்’ என்ற பாட்டு. வீட்டுத் தோட்டத்தில் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்க நிலா வெளிச்சத்தில் ஒரு கயிற்று கட்டிலில் இருவரும் கட்டி அணைத்துக்கொண்டு காதல் செய்வார்கள். அந்தப் பாடலில் இளையராஜா அவர் கள் முணுமுணுப்பு, முனகல் எல்லாம் வைத்திருப்பார். ஒளிப் பதிவாளர் பாபு அந்த நிலவுக் காட்சியை தத்ரூபமாக ஒளிப் பதிவு செய்திருப்பார். அந்தப் பாடலை எடுத்த பிறகு எடிட் செய்து, போட்டுப் பார்த்தோம். கமல், அம்பிகா இருவரது பாவனைகளையும் பார்த்த வர்கள் ‘‘இந்த முழு பாடலையும் சென் சாரில் வெட்டிவிடுவார்கள்’’ என்றார் கள். அதற்கு நான், ‘‘நிச்சயமாக சென்சாரில் கட் ஆகாது. அவர்கள் எந்த இடத்தில் ‘கட்’ சொல்வார்களோ அந்த இடத்தில் எல்லாம் நான் பூவையும், செடியையும் காட்டித்தான் படமாக்கியுள்ளேன். கமல், அம்பிகா இருவருடைய முக பாவனைகளைக் காட்டவில்லை. அதனால் நிச்சயம் இந்தப் பாட்டு சென்சார் அதிகாரிகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ளும்’’ என்று உறுதியாக சொன்னேன். அது மாதிரியே அக்காட்சி தப்பித்துக் கொண்டது.

‘சகலகலா வல்லவன்’ வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கும் மக்கள் மனதில் பதிந்துள்ள பாடல் ‘ஹேப்பி நியூ இயர்… இளமை இதோ.. இதோ!’ எல்லா புத்தாண்டுகளிலும் முதல்நாள் வானொலியிலும், தொலைக் காட்சிகளிலும், இணையதளங்களிலும் ஓடுகிற பாட்டு: ஹேப்பி நியூ இயர்! இசைஞானி இளையராஜா இசைப் பெருமைக்கு ‘ஹேப்பி நியூ இயர்’ பாட்டு என்றும் சரித்திரம் படைக்கும் ஒரு களஞ்சியம்.

அந்தப் பாட்டின் படப்பிடிப்புக்கு முன் சரவணன் சார் என்னிடம், ‘‘முத்து ராமன்... பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு. எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. பெரிய செட்டா போட்டு அந்த டான்ஸை எடுங்க’’ என்றார். எப்போதுமே நான் செட் போடுவதற்கு முன்னால் நமக்கு பொருத்தமான செட் எதுவும் ஸ்டுடியோவுக்குள்ள இருக்கா? என்று ஒருமுறை சுற்றிப் பார்ப்பேன். அப்படி நானும் கலை இயக்குநர் சலமும், கேமராமேன் பாபுவும் ஸ்டுடியோவுக்குள் இருந்த செட்டுகளைப் பார்த்தோம்.

ஒரு ஃப்ளோரில் கன்னட படத்துக் காக ராஜ தர்பார் வடிவில் ஒரு அரண் மனை செட் இருந்தது. அது ஒரு சரித் திர படத்துக்காக போடப்பட்டது. எங் களுக்குத் தேவை ஹோட்டல் பின்னணி. ‘எப்படி இந்த அரண்மனை செட்டை பயன்படுத்த முடியும்’ என்று நானும், பாபுவும் யோசித்துக்கொண்டிருந்தோம். கலை இயக்குநர் சலம், ‘‘அந்த செட்டை பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி வித் தியாசமா நான் மாத்துறேன்’’ன்னு சொன் னார். அந்த விஷயத்தை சரவணன் சாரிடம் கொண்டுபோனோம்.

சலம் அவர்கள், ‘‘என் மீது நம்பிக்கை வைத்து அனுமதி கொடுங்க. நான் மாற்றிக் காட்டுறேன்’’ என்று சரவணன் சாரிடம் சொன்னார். அவர் ஒப்புக்கொண்டார். அந்த அரண்மனை செட்டை மாற்றி, அதுக்குள்ளேயே 5 செட்டுகள் இருப்பது போல அமைத்து, ஹோட் டலைப் பின்னணியாக வைத்து விளக்கு அலங்காரங்களை எல்லாம் வண்ணமயமாக செய்து அசத்திவிட்டார். கன்னட செட் என்பது மறைந்து, ஏவி.எம் போட்ட பிரம்மாண்டமான ஹோட்டல் செட் என்றாகிவிட்டது. இதற்கு காரணம் ஆர்ட் டைரக்டர் சலம்.

‘ஹேப்பி நியூ இயர்’ பாட்டில் கமல் மோட்டர் சைக்கிளில் வந்தபடி நடனம் ஆடுவது, ஸ்கேட்டிங்கில் சுழன்றுவந்து நடனம் ஆடுவது, நடனக் குழுவினரோடு பல கோணங்களில் நடனம் ஆடுவது போன்று கமலின் நடனத் திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டு வந் தோம். ஹைதராபாத் போய் ஒரு பெரிய ‘சாண்டிலியர்’ வாங்கி வந்து அந்த செட்டின் நடுவில் கட்டியிருந் தோம். அதில் கமல் தொங்கிக் கொண்டு நடனம் ஆடி வருகிற காட்சியைப் பல கோணங்களில், பல ஷாட்டுகளில் எடுக்க நாங்கள் முடிவு செய்திருந்தோம். அப்போது கமல் என்னிடம் வந்து, ‘‘நான் சாண்டிலியரில் தொங்கிக்கொண்டு நடனம் ஆடும் காட்சியை பல ஷாட்டுகளில், கட் செய்து கட் செய்து எடுத்தால் சரியாக அமையாது. அதை ஒரே ஷாட்டில் எடுத்தால் விறுவிறுப்பாக இருக்கும்’’ என்றார். அவர் கூறியபடி ஒரே ஷாட்டில் அந்தக் காட்சியை எடுத்தோம். அவரது நடனம் மிக அருமையாக அமைந்தது. தியேட்டரில் மக்களின் கைத் தட்டலும் ஆர்ப்பரிக்கிற மாதிரி அமைந்தது.

கமல் எதையும் ஆராய்ந்து நுணுக்கமாகத்தான் சொல்வார். இந்தக் கைத் தட்டலை அவருக்குரியதாக்கு கிறேன். அதைப் போல இந்தப் பாட்டில் முக்கியமான ஒரு ஷாட்டை கடைசியாக எடுக்கலாம் என்று விட்டு வைத்திருந்தேன். ‘‘அந்த ஷட்டை எப்போ எடுக்கப் போறீங்க?’’ என்று கமல கேட்டுக்கொண்டே இருந்தார். அந்த ஷாட் என்ன என்பதை வரும் வாரம் சொல்கிறேனே.

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-62-கதைக்காக-நடிகர்/article8731601.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 63: ‘சகல கலா வல்லவன்’ கமல்!

எஸ்பி.முத்துராமன்

 
 
  • ஏவி.எம்.சரவணன், திருலோகசந்தர். | ‘சகல கலா வல்லவன்’ கமல்.
    ஏவி.எம்.சரவணன், திருலோகசந்தர். | ‘சகல கலா வல்லவன்’ கமல்.
  • ‘எங்க மாமா’ படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா.
    ‘எங்க மாமா’ படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா.
  • எஸ்பி.முத்துராமன், ஏ.சி.திருலோகசந்தர்.
    எஸ்பி.முத்துராமன், ஏ.சி.திருலோகசந்தர்.

கமல் அந்த காட்சியைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தார். கமல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வருகிற அந்தக் காட்சி, த்ரில்லாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். அப்படி கமல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வந்தால் காயம் பட்டுவிடுமே என்று, அவருக்கு ஒரு டூப்பையும் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். அந்தக் காட்சியைக் கடைசியாகத்தான் எடுக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்த கமல் ‘‘நீங்க டூப் போட்டு எடுக்கப் போறது எனக்குத் தெரிஞ்சுட்டு. அப்படி டூப் போட்டால் லாங் ஷாட்டில்தான் எடுப்பீங்க. அது த்ரில்லாக இருக்காது. நானே உடைச் சுட்டு வந்தால்தான் த்ரில்லாக இருக்கும். நானே கண்ணாடியை உடைச்சுட்டு வர்றேன். ஒண்ணும் ஆகாது. பயப் படாதீங்க’’ என்றார். ஆனால் நான் அரை மனதோடுதான் அதை ஒப்புக் கொண்டேன்.

கடைசி காட்சியாக ‘‘கமல்... ஜாக்கிரதை... ஜாக்கிரதை’’ என்று அவரை எச்சரித்துதான் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வரச் சொன்னேன். கமல் இளமையின் துடிப்போடு கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஷாட் ஓ.கே. ஆனால், அவர் முகத்தில் ரத்தம். ‘‘கமல்… கமல்…’’ என்று கத்திக் கொண்டே அவரருகே ஓடினேன். ‘‘ஒண்ணுமில்ல சார்... ஒண்ணுமில்ல சார்…’’ என்று என்னை மீறி ஓடிவிட்டார் அவர். போய்ப் பார்த்தால் கமல் காரில் புறப்பட்டுவிட்டார்.

நாங்கள் இன்னொரு காரில் அவர் பின்னாலேயே போனோம். அவர் விஜயா ஹாஸ்பிடலுக்குப் போனார். மருத்துவர் கமலுக்கு முதல் உதவி செய்துவிட்டு, ‘‘காயம் ஆழமா இருக்கு. நான் தையல் போட்டா முகத்துல தழும்பு தெரியும். ஆகவே, பிளாஸ்டிக் சர்ஜன் மாதங்கி ராமகிருஷ்ணன்கிட்டே போய் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்குங்க’’ன்னு சொல்லிவிட்டார். கமல் எங்களைப் பார்த்து, ‘‘ஒண்ணும் பயப்படாதீங்க... நான் பார்த்துக்கிறேன்’’ன்னு சொல்லிச் சென்று, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அதனால்தான் முகத்தில் தழும்பு தெரியவில்லை. ஆனால், கமல் உடம்பில் தழும்பு இல்லாத இடமே இல்லை. துணிந்து செய்து அடிபடுவார். இது அவர் விரும்பி ஏற்றுக்கொள்கிற வீரத் தழும்புகள்!

கிளைமாக்ஸ் காட்சியில் வீடு பற்றி எரியும்போது அதில் மாட்டிக்கொண்ட வர்களை கமல் சண்டைப் போட்டுக் கொண்டே காப்பாற்றுவது மாதிரி காட்சி. ஃபயர் இன்ஜின், சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் என்று பாதுகாப்போடு படப்பிடிப்பைத் தொடங்கினேன். நான்கு பக்கங்களிலும் நான்கு கேமராக்களை கேமராமேன் பாபு வைத்திருந்தார். நெருப்புப் படர்ந்து சூழ்ந்திருக்கும் இடத்தை நோக்கி சென்ற கமலை,கொஞ்ச நேரத்துக்குப் பிறகு காணவில்லை. ‘‘கமல்… கமல்…’’ என்று கத்தினோம். நெருப்பு எங்கும் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. அப்போது கமல், ‘‘நீங்க வெச்சிருக்குற நாலு கேமரா ஆங்கிள்லேயும் நான் நெருப்புல தவிக்கிற மாதிரி பாய்ச்சல் காட்டிக்கிட்டிருக்கேன். பயப்படாதீங்க!’’ என்று அவரது குரல் கேட்டது. கமல் ஒரு நடிகர் மட்டும் அல்ல; இயக்குநர். கேமரா கோணங்கள் பற்றியும் அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் நடித்த நெருப்புக் காட்சியைப் படமாக பார்த்தபோது மிகவும் த்ரில்லாகவே இருந்தது. ஆக மொத்தத்தில் கமலை ‘சகல கலா வல்லவன்’ என்று சொன்னதை, சரிதான் என்று மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். படம் வெற்றிக்கொடி நாட்டியது. இந்த சம்பவத்தை மகிழ்ச்சியோடு எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் துக்கமான செய்தி ஒன்று வந்து என்னை துயரத்தில் ஆழ்த்தியது.

என் குருநாதர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள் நான்கு மாத காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து மாரடைப்பால் கடந்த வாரம் மரணம் அடைந்துவிட்டார்.

ஏவி.எம்.ஸ்டுடியோவில் ஏவி.எம்.குமரன் சாருடைய விருப்பப்படி பிரகாஷ்ராவ், ஏ.பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர்களிடம் நான் உதவி இயக்குநராக வேலை செய்துகொண்டி ருந்தபோது ஏவி.எம்.சரவணன் சார் என்னை அழைத்து, ‘‘வீரத்திருமகன்’ படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கப் போகிறார். நீங்கள் இனிமேல் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றுங்கள்’’ என்றவர், என் கையைப் பிடித்து திருலோகசந்தர் அவர்களிடம் கொடுத்து, ‘‘இவர் எல்லா வகையிலும் உங்களுக்குத் துணையாக இருப்பார்’’ என்று ஒப் படைத்தார்.

1962-ல் வெளியான ‘வீரத்திருமகன்’ படத்தில் இருந்து அண்ணன் சிவாஜி கணேசனும், செல்வி ஜெயலலிதா அவர்களும் நடித்த ‘எங்க மாமா’ படம் வரை திருலோகசந்தர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அவர்தான் எனக்கு குரு! என் படங்களை நீங்கள் பார்த்தால், அது ஏ.சி.டி பாணி படமாக இருப்பதற்கு அதுதான் காரணம்.

1962-ல் இருந்து இதோ இந்த 2016 வரை குருவும் சிஷ்யனாகத்தான் தொடர்ந்து நேசத்துடன் பழகி வந்தோம். குரு - சிஷ்யனுக்கு எடுத்துக்காட்டாக ஏ.சி.டி-யையும் என்னையும் சொல்ல லாம். அதைப் போல் சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக ஏ.சி.டி-யையும், ஏவி.எம்.சரவணன் சாரையும் சொல்லலாம். சரவணன் சாரும், ஏ.சி.டி-யும் ஒருநாள்கூட சந்திக்காமல் இருக்க மாட்டார்கள். அப்படி சந்திக்க முடியவில்லை என் றால் தொலைபேசியில் பேசிக்கொள்வார் கள். இருவருக்கும் தனியாகவே தொலைபேசி இருந்தது.

ஏ.வி.எம்-மில், ‘வீரத்திருமகன்’ (இதில் சச்சுவை ஏ.சி.டி அறிமுகம் செய்தார்), தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ‘நானும் ஒரு பெண்’, தமிழ், தெலுங்கு மொழிகளில் ‘ராமு’, ‘காக்கும் கரங்கள்’(இதில் சிவகுமாரை ஏ.சி.டி அறிமுகம் செய்தார்), அடுத்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ‘அன்பே வா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஏவி.எம்-மில் இருந்து ஏ.சி.டி வெளியே சென்று அண்ணன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து 20 படங்களுக்கு மேல் இயக்கினார். ‘தெய்வமகன்’, ‘பாபு’, ‘இருமலர்கள்’, ‘பாரத விலாஸ்’ போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. மொத்தம் 65 படங்களை இயக்கியுள்ளார். அதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆண்டுக்கு ஒருமுறை ஏவி.எம்.சரவணன் சார் நண்பர்களை எல்லாம் இணைத்து ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு கலந்துரையாடல் நடத்துவார். நிகழ்ச்சி முழுதும் மலரும் நினைவுகளாக அமைந்திருக்கும். இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதற்கு காரணம் ஏ.சி.டி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்திருந்ததுதான். சரவணன் சார் தினந்தோறும் அவரைப் பார்க்கச் சென்று, அவர் வீட்டில் செய்த ஏ.சி.டி-க்குப் பிடித்த சூப், வெஜிடேரியன் கேக் போன்றவைகளைக் கொடுத்து கவனித்துக்கொண்டார். அவரை நானும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சென்று பார்த்து வந்தேன். ஒருநாள், ‘‘முத்துராமா... எல்லார் வீட்டு நல்லது கெட்டதுக்கெல்லாம் மறக்காம போயிடுவே... என்னையும் வந்து தூக்கிப் போட்டுடு’’ என்றார் என் குருநாதர். அதைக் கேட்டு நான் துடித்துப் போய்விட்டேன். ‘‘சார் உங்களுக்கு ஒண்ணும் ஆகாது சார்... ஒண்ணும் ஆகாது சார்…’’ன்னு ஆறுதல் சொன்னேன். சரவணன் சார் மருத்துவர்களைப் பார்த்து ‘‘ஏ.சி.டி அவர்களுக்கு வலியும், வேதனையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்…’’ என்று கேட்டுக்கொண்டார்.

spm_2904080a.jpg

எங்கள் எண்ணங்களையெல்லாம் மீறி ஜூன் 15-ம் தேதி பிற்பகல் ஏ.சி.டி அவர்கள் இயற்கை எய்து விட்டார். அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் செய்தித்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களை அனுப்பி, மாலை வைத்து மரியாதை செய்ய சொல்லியிருந்தார். அத்துடன் ஏ.சி.டி அவர்களைப் பற்றி சிறப்பாக எழுதி, தன் ஆழ்ந்த இரங்களை செய்தியாக வெளியிட்டு பெருமை சேர்த்தார்கள். இது ஏ.சி.டி-க்கு கிடைத்த அரசு மரியாதை.

மாண்புமிகு முதலமைச்சர் அவர் களுக்கு ஏவி.எம்.சரவணன் சார் சார்பி லும், என் சார்பிலும், எனது குடும்பத் தார் சார்பிலும் நன்றியைத் தெரிவித் துக்கொள்கிறோம். 16-ம் தேதி மாலை பெசண்ட் நகரில் ஏ.சி.டி-யின் இறுதி சடங்குகள் நடந்தன. ‘‘முத்துராமா... என்னை தூக்கிப் போட்டுடு’’ என்று சொன்ன ஏ.சி.டி-யின் வார்த்தையைத் துக்கத்தோடு நிறைவேற்றி, அவரது புகழுடம்பை நெருப்பில் தகனம் செய்துவிட்டு சரவணன் சாரோடு எல்லோரும் திரும்பினோம்.

ஏ.சி.டி அவர்கள் இப்போது இந்த பூவுலகில் உடலால் இல்லையென் றாலும், அவர் சாதித்த சாதனைகள் எல் லோர் உள்ளத்திலும் உணர்வுபூர்வமாக என்றைக்கும் நிலைத்திருக்கும்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.’

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-63-சகல-கலா-வல்லவன்-கமல்/article8759636.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 64: சில்க் ஸ்மிதா ஏன் வரவில்லை?

எஸ்பி.முத்துராமன்

 
 
  • ‘பாயும் புலி படத்தில் சில்க் ஸ்மிதா, ரஜினிகாந்த்.
    ‘பாயும் புலி படத்தில் சில்க் ஸ்மிதா, ரஜினிகாந்த்.
  • ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ பாடல் காட்சியில் ரஜினி, ராதா.
    ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ பாடல் காட்சியில் ரஜினி, ராதா.
  • ஜெய்சங்கருடன் ரஜினி மோதுவது ‘பாயும் புலி’ (1983) படத்தில்.
    ஜெய்சங்கருடன் ரஜினி மோதுவது ‘பாயும் புலி’ (1983) படத்தில்.
  • ஜெய்சங்கர், பாலாஜி, ரஜினிகாந்த்.
    ஜெய்சங்கர், பாலாஜி, ரஜினிகாந்த்.

திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களைப் பிரிந்த துக்கத்தில் இருந்து இன்னும் எங்களால் மீள முடியவில்லை. பயணங்கள், பல்வேறு பணிகள் என்று நான் இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நினைவுகளில் இருந்து மீண்டுவர முயற்சிக்கிறேன். ஏவி.எம்.சரவணன் சார் அவர்கள் முழுமையாக அந்தத் துக்கத்தில் இருந்து மீளவில்லை என்பது அவர் முகத்தில் தெரிகிறது. காலம்தான் அவர் மனத் துயரை ஆற்ற வேண்டும்.

சென்ற வாரம் கமலின் ‘சகலகலா வல்லவன்’ படத்தைப் பற்றி சொல்லியிருந்தேன். இந்த வாரம் ‘பாயும்புலி’ ரஜினி பற்றி சொல்லப் போகிறேன். ரஜினியின் நடிப்பு வேகம் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஒரு விழாவில் ரஜினி பேசும்போது, ‘‘சிவாஜிகணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர். எந்த கதாபத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வார். கமலுக்கு மேக்கப் விஷயத்தில் இருந்து டெக்னிக்கல் விஷயம் வரை அத்துப்படி.

அவைகளை வைத்து நடிப்பில் வித்தியாசம் காட்டிவிடுவார். இந்த ரெண்டு பேருக்கும் நடுவில் நான் எப்படி பேர் வாங்க முடியும்? அவர்களிடம் இருந்து வித்தியாசப்பட நடிப்பில் வேகம், தனி ஸ்டைல் இதையெல்லாம் சேர்த்துக்கொண்டேன். அது மக்களுக்கு பிடித்துப்போனது. அதனால்தான் ரசிகர் மத்தியில் நிலையாக நிற்க முடிகிறது’’என்றார். அதை முழுமையாக நிரூபிப்பதற்காக எடுத்த படம்தான் ஏவி.எம்மின் ‘பாயும்புலி’.

எங்கள் படங்களில் பொதுவாக கதைக்கு மத்தியில் சண்டைக் காட்சிகள் இடம்பெறும். ‘பாயும்புலி’ படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு மத்தியில்தான் கதையே இருந்தது.

ரஜினியோடு மோத சரியான வில்லன் வேண்டுமே? தேடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் கராத்தே கலையில் பல விருதுகளைப் பெற்று புகழ்பெற்றிருந்தார், கராத்தே மணி. அவரிடம் கேட்டோம்.

‘‘ரஜினி ஹீரோ. நீங்கள் வில்லன். முழு படமும் கராத்தே, ஆயுதம் என்று சண்டையாகவே இருக்கும்’’ என்று கூறினோம். ‘சரி’ என்று அவரும் ஒப்புக்கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு கராத்தே மணியிடம் இருந்து போன் வந்தது. ‘‘ரஜினியோடு சேர்ந்து நடிக்கப் போறோம்னு சந்தோஷத்துலதான் சரின்னு சொன்னேன். ஊர்ல கராத்தே மணின்னு ஒரு இமேஜோட இருக்கேன். ரஜினியோட ஃபைட் பண்ணி தோத்துட்டா, ‘கராத்தே மணி தோத்துட்டாரு’ன்னு மக்கள் சொல்வாங்க. கஷ்டப்பட்டு சேர்த்து வெச்சிருக்குற பேருக்கு இழுக்கு வந்துடும்னு தோணுது. தயவுசெஞ்சு என்னை மன்னிச்சுடுங்க!’’ என்றார். அவர் சொன்னதிலும் நியாயம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொண்டோம்.

அடுத்து யாரைப் போடலாம்? எங்களுக்கு ஜெய்சங்கர் ஞாபகம் வந்தது. அவரை வில்லனாக்கிட வேண்டியதுதான்னு முடிவெடுத்தோம். சொல்லி அனுப்பியதும் ஸ்டுடியோவுக்கு வந்தார். வரும்போதே, ‘‘ ஹாய்.. ஹாய்… என்ன சரவணன் சார், கராத்தே மணி நடிக்க மறுத்துட்டாரா?’’ன்னு கேட்டுக்கொண்டே வந்தார். சினிமாவில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் அவருக்குத் தெரியாமல் இருக்காது. அவருடைய நண்பர் குழாம் அந்த அளவுக்குப் பெரிது. பத்திரிகைகாரர்களுக்குக் கூட தெரியாத பல விஷயங்களை ஜெய்சங்கர் தெரிந்து வைத்திருப்பார். விஷயத்தை சொன்னோம். ‘‘நான் நடிக்கிறேன்’’ன்னு ஒப்புக்கொண்டார். ரஜினிக்கும் ஜெய்க்கும் வைத்த சண்டைக் காட்சிகள் பயங்கர ஆக்ரோஷமாக அமைந்தன.

சண்டைக் காட்சியை அடுத்து அந்தப் படத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தவை பாடல் காட்சிகள். ரஜினியும், ராதாவும் மழையில் நனைந்துகொண்டு பாடும் ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ பாடலை படமாக்கிய விதம் ரொம்பவும் வித்தியாசமாக அமைந்தது. மழைப் பாடல் என்றதும், சரவணன் சார் எங்களை அழைத்து, “வழக்கமான மழைப் பாட்டு மாதிரி எடுக்காதீங்க.

நான் சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். கேமராவில் இருந்து மழைத் துளிகள் விழுகிற மாதிரி படமாக்கியிருந்தனர். அதே மாதிரி எடுக்க முயற்சி பண்ணுங்க’’ என்றார். ஒளிப்பதிவாளர் பாபு அப்போது முதலே மூளையை கசக்கிக் கொண்டு திட்டமிட ஆரம்பித்தார். செட்டுக்குள் மழைக்கான குழாய்களை உயரத்தில் கட்டினோம். அதற்கு மேல் கோடாவை கட்டி, அதில் கேமரா பொருத்தினோம். கேமரா லென்ஸில் இருந்து மழை கொட்டுவதுபோல் அமைந்தது. ஒளிப்பதிவாளர் பாபுவின் திறமை மின்னல்போல் பளிச்சிட்டது.

கமர்ஷியல் படமாச்சே. கவர்ச்சி நடனம் இல்லையென்றால் எப்படி? சில்க் ஸ்மிதா, ரஜினி ஜோடி சேர்ந்து ஆடும் ‘ஆடி மாசம் காத்தடிக்க’ பாடல் காட்சியை அமைத்தோம். இதன் நடன அமைப்பு புலியூர் சரோஜா. சரியாக நடனம் ஆடுகிற வரை விட மாட்டார். ரஜினியும், சில்க்கும் ஆர்வத்தோடு ஆடினார்கள்.

ஊட்டியில் ரஜினியும், ஜெய்யும் கராத்தே கற்றுக்கொள்ளும் பள்ளி. அதன் தலைவராக குரு அந்தஸ்த்தில் நடிக்க தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜியை அணுகியபோது ‘‘நான் நடிக்கிறதை விட்டுட்டேனே’’என்றார். ரஜினிக்கும், ஜெய்சங்கருக்கும் குருவாக நடிக்க நீங்கதான் சரியாக இருக்கும் என்று கூறி ஏவி.எம்.சரவணன் சார் சம்மதிக்க வைத்தார்.

ஊட்டியில் லவ்டேல் என்னும் இடத்தில் உள்ள பள்ளியின் வெளிப்புறத்தில் கராத்தே பயிற்சி பெறுவதை சூரியன் உதயமாகும்போது எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்தோம். விஷயத்தை பாலாஜி சாரிடம் சொன்னதும், ‘‘ஊட்டி குளிர்ல, அதிகாலை 5 மணிக்கு கேமரா வைத்து ஷூட் பண்ணப் போறீயா? முதல்ல எல்லாரும் எழுந்திருச்சு வர்றாங்களான்னு பாரு…’’ என்று கிண்டலடித்தார். அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் ரஜினி உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் படப்பிடிப்பில் இருந்தனர். எல்லோருமே பாலாஜி சாருக்காக காத்திருந்தோம். அடுத்த சில நிமிடங்களில் பாலாஜி வந்தார். எல்லோரும் ரெடியாக இருந்ததை பார்த்ததும் அசந்துபோய்விட்டார். ‘‘இவ்வளவு நாளா நான்தான் எல்லாரையும் சத்தம்போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கரெக்ட்டா அழைச்சுட்டு வருவேன்னு நினைச்சேன். இப்போதான் தெரியுது. ஏவி.எம்… ஏவி.எம்தான்!’’ என்றார்.

ஷூட்டிங்ல வேலை சரியா நடக்கலைன்னா, சின்னப்பா தேவரை அடுத்து அதிகம் ஷூட்டிங் ஸ்பாட்ல திட்டுறது பாலாஜி சார்தான். என்ன, சின்னப்பா தேவர் தமிழில் திட்டுவார். பாலாஜி இங்கிலீஷ்ல திட்டுவார். ரெண்டு திட்டுகளுக்கும் ‘ஏ’ சான்றிதழ்தான் கொடுக்கணும்.

‘பாயும்புலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. ரஜினியும், ஜெய்சங்கரும் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு சண்டைப் போடுவார்கள். கல் குவாரிப் பகுதிக்கு வரும் படத்தின் நாயகி ராதாவும், சில்க் ஸ்மிதாவும் ஜெய்யிடம் இருந்து தப்பிப்பதற்காக கல் குவாரியில் லிஃப்ட் போல் பயன்படும் ஒரு இரும்புக் கூண்டில் ஏறிவிடுவார்கள். இவர்கள் ஏறிய ஆட்டத்தில் கூண்டு குவாரிக்கு நடுவில் உயரத்தில் போய் நின்றுவிடும். ரஜினியும், ஜெய்யும் சண்டைப் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இருவரது எடை காரணமாக, அந்தக் கூண்டின் ஒரு பக்கத்து கம்பி அறுந்துவிட்டது. பயத்தில் ராதா, ‘‘நான் சாகப் போறேன்... சாகப் போறேன்’’ என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அதற்கு சில்க் ஸ்மிதா, ‘‘ இதுக்கு போய் ஏன் கத்துறே? அறுந்து விழுந்தா விழட்டுமே. உயிர்தானே போகும்’’ என்று தைரியமாக இருந்தார். சில்க் ஸ்மிதாவுக்கு அப்படி ஒரு துணிச்சல். ரஜினி, ஜெய்யை அடித்துப் போட்டுவிட்டு இருவரையும் மிகவும் கஷ்டப்பட்டுக் காப்பாற்றுவார்.

ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்களைப் பற்றி, ‘என்றும் சினிமா’ என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கினோம். அதில் ஏவி.எம்மில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், கலைஞர்கள் எல்லோரையும் அழைத்து செட்டியார் பற்றியக் கருத்துகளைப் பேட்டி எடுத்தோம். சுமார் 200 பேர் பங்குபெற்றனர். ஏவி.எம் படங்களில் நிறைய நடித்திருந்த சில்க் ஸ்மிதாவையும் பேட்டி கொடுக்க வரச் சொல்லுங்க என்று தயாரிப்பு நிர்வாகி நாகப்பனிடம் சொன்னேன்.

பலமுறை அவர் முயற்சி செய்தும் சில்க் கிடைக்கவில்லை என்று சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு திருமண நிகழ்ச்சி ஒன்றில் சில்க் ஸ்மிதாவை பார்த்தேன். ‘‘என்ன சில்க். எப்போ போன் பண்ணாலும் ஊர்ல இல்லைன்னு சொல்றாங்க. செட்டியாரைப் பற்றி பேட்டி கொடுக்குறதுல என்ன பிரச்சினை?’’ என்று கேட்டேன். ‘‘சத்தியமா எனக்குத் தெரியவே தெரியாது சார். யாரும் என்கிட்ட இந்த விஷயத்தைப் பத்தி சொல்லலை. ரெண்டு நாள்ல நான் வந்து பேட்டிக் கொடுக்கிறேன்’’என்று சொன்னார். ஆனால் சொன்னபடி சில்க் வரவில்லை. ஏன் என்பதை வரும் வாரம் சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-64-சில்க்-ஸ்மிதா-ஏன்-வரவில்லை/article8787675.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 65: இளையராஜா பாடல்!

எஸ்பி.முத்துராமன்

 

 
 
  • ’அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினிகாந்த்
    ’அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினிகாந்த்
  • ஸ்ரீதேவி
    ஸ்ரீதேவி
  • ‘அடுத்த வாரிசு’ (1983) படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி
    ‘அடுத்த வாரிசு’ (1983) படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி

சில்க் ஸ்மிதா பேட்டிக்கான ஏற்பாடு ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தது. அவர் வர வில்லை, ஆனால் ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தி எங்களை மட்டுமல்லா மல் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சில்க் ஸ்மிதா தற் கொலை செய்துகொண்டார் என்ற செய்தி தான் அது! இரண்டு நாட்களுக்கு முன் பார்த்து பேசிவிட்டு வந்தேன். ‘ஏன், இந்தப் பொண்ணு இப்படி பண்ணிக் கிட்டாங்க?’ என்று விசாரித்தபோது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். ஒரு மாலையை வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குப் போய் பார்த்தேன். சில்க் ஸ்மிதா தூங்கிக்கொண்டிருப்பது மாதிரியே இருந்தார்.

‘பாயும் புலி’ படப்பிடிப்பின் போது தைரியமாக காட்சி அளித்த சில்க், தற்கொலை முடிவுக்கு சென்றதை என்னால் ஜீரணிக்க முடிய வில்லை. அவருக்குள் ஏற்பட்ட போராட்டமும், மன இறுக்கமும்தான் அந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது என்பதை நினைத்தபோது பரிதாபமாக இருந்தது. திரையுலகில் அவ்வளவு வேகமாக வளர்ந்து வந்த பெண், அந்த வேகத்தோடு வேகமாக இந்த உலகைவிட்டுப் போய்விட்டார்.

சில்க் மட்டுமல்ல; இன்றைக்கு கலையுலகைச் சேர்ந்த பல பேர் மன இறுக்கத்தால் இந்த மாதிரி முடிவை எடுக்கிறார்கள். அதேபோல நாட்டிலும் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அதுவும் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை, கணவன், மனைவி, பிள்ளைகள் குடும்பத்தோடு தற்கொலை, சமீபத்தில் காவல்துறை அதிகாரி விஷ்ணுப்ரியா தற்கொலை, தன்னை ஆபாச படமாக ஒட்டுவேலை செய்து வெளியிட்டதில் மனம் உடைந்த வினுபிரியா தற்கொலை... இப்படி ஒவ்வொரு நாளும் செய்தி வரும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

நாம் கோழைகள் இல்லை. எதையும் சவாலாக எடுத்துக்கொண்டு எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க வேண்டியவர்கள். வாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம். கஷ்டமே வாழ்க்கையாக இருக்கக் கூடாது. தனியாக உயிரை உண்டாக்க முடியாத நமக்கு, உயிரை அழிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? தயவுசெய்து யாரும் தற்கொலை எண்ணத்துக்கு ஆளாக வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

கன்னடத்தில் துவாரகேஷ் என்ற ஒரு நடிகர். அவர் மிகப் பெரிய தயாரிப் பாளரும்கூட. தொடர்ந்து அங்கே சில படங்கள் எடுத்து நஷ்டத்தில் இருந்தார். அந்த நஷ்டத்தில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க விரும்பினார். ரஜினி, நான், தயாரிப்பாளர் துவாரகேஷ் மூவரும் சந்தித்தோம். அந்த நேரத்தில் ரஜினி தொடர்ந்து சமூகப் படங்களாக நடித்துக்கொண்டிருந்தார். அதில் இருந்து வித்தியாசம் இருக்கட்டும் என்று ‘செமி ஃபோக்லோர் சப்ஜெக்ட்’ படமாக எடுக்கத் திட்டமிட்டோம். அப்படி உருவான படம்தான் ‘அடுத்த வாரிசு’. படத்தில் ரஜினி ஹீரோ. நாயகி ஸ்ரீதேவி. ரஜினி, ஸ்ரீதேவி இருவரும் சேர்ந்து நடித்த இளவரசன், இளவரசி கெட்டப் காட்சிகள் மிகவும் அழகாக அமைந்தன.

முதல் நாள் படப்பிடிப்பு ‘ஆசை நூறு வகை’ பாட்டு. ரஜினியும், டிஸ்கோ சாந்தியும் சேர்ந்து ஆடும் காட்சியைப் படமாக்கும் வேலையில் இறங்கினோம். அந்தப் பாடலை தயாரிப்பாளர் துவார கேஷ் கேட்டுவிட்டு, ‘‘பாட்டு ஸ்லோவாக இருக்கிற மாதிரி தெரியுதே?’’ என்று ஃபீல் பண்ணினார். ‘‘இளையராஜா பாடல் அது. முதன்முறை கேட்கும்போது அப்படி தெரியும். இரண்டாவது முறை கேட்டால் இனிமையாக இருக்கும். மூன்றாவது முறை கேட்கும்போது சூப்பர் ஹிட் லிஸ்ட்ல இருக்கும்’’ என்று நானும், ரஜினியும் சொன்னோம். துவாரகேஷ் அரைகுறை மனதோடு, ‘‘உங்களுக்கெல்லாம் ஓ.கே என்றால் எனக்கு ஓ.கே!’’ என்றார். பாட்டை பட மாக்கி முடித்து பார்த்ததும் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. படம் ரிலீஸானதும் அந்தப் பாட்டும், நடனமும் சூப்பரோ சூப்பர் ஹிட்! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போது அந்தப் பாட்டை ரீமிக்ஸ் செய்கிறார்கள். அதுதான் இளையராஜா! அந்தப் பாடலுக்கு ரஜினி, டிஸ்கோ சாந்தி இருவரும் வித்தியாசமான நடனம் ஆடினார்கள். நடனம் புலியூர் சரோஜா.

‘காவிரியே கவிக்குயிலே’ என்ற பாடல். இந்தப் பாட்டை ஜெய்ப்பூரில் எடுக்கத் திட்டமிட்டு நானும், கேமராமேன் பாபுவும் லொக்கேஷன் பார்ப்பதற்காகச் சென்றுவந்தோம். எப்போதுமே இது மாதிரி இடங்களில் படமாக்குவதற்கு முன்பு அங்கே சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வருவது நாங்கள் வழக்கமாக வைத்திருந்தோம்.

ரஜினி, ஸ்ரீதேவி இருவருக்குமான ஜோடிப் பாடல் அது. ஜெய்ப்பூர் மாளிகை யில் பாடல் படப்பிடிப்பு. மிகப் பெரிய ஏரிக்கு நடுவே மாளிகை. ஏரிக் கரையில் இருந்து படகு வழியே அந்த அரண் மனைக்கு ரஜினியும், ஸ்ரீதேவியும் செல் வதுபோல பாடலின் ஆரம்பம் தொடங் கும். அப்போது ரஜினி, ‘‘கேமராவை எங்கே வைத்து ஷூட் பண்ணப் போறீங்க?’’ன்னு கேட்டார். இந்த ஷாட் எப்படி எடுக்கப் போகிறோம்னு நான் சொல்ல மாட்டேன். படப்பிடிப்பு முடிந் ததும் காட்டுறேன். அப்புறம் பாருங்க என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். அவரும் சிரித்துக்கொண்டே ஷாட்டுக்கு ரெடியானார்.

அந்த மாளிகைக்குள் ஒவ்வோர் இடங்களில் ஷூட் பண்ணுவதற்கும் ஒவ்வொரு தொகை நிர்ணயத்திருந்தனர். ஹால் என்றால் அதற்கு ஒரு தொகை. வராண்டா என்றால் அதற்கு ஒரு தொகை. மொட்டை மாடி என்றால் அதற்கு ஒரு தொகை என்று பிரித்து வைத்திருந்தனர். தயாரிப்பாளர் துவார கேஷ், ‘‘படம் நல்லா வரணும். எங்கே வேணும்னாலும் ஷூட் பண்ணுங்க’’ என்றார். அவர் அளித்த சுதந்திரம் எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும், பொறுப்பையும் கொடுத்தது.

பாடலை படமாக்கி முடித்தோம். படகில் போகும் காட்சியை ரஜினிக்கு போட்டுக் காட்டினோம். பார்த்தார். ‘‘எப்படி சார் இது? முழு ஏரியையும், மாளிகையையும் இவ்ளோ உயரத்துல இருந்து காட்டியிருக்கீங்க? ’’ என்று ஆச்சரியத்தோடு கேட்டார். ‘‘ஏரியின் மற்றொரு கரையில் உயரமான ஒரு பாழடைந்த கட்டிடம் இருக்கிறது. அதில் இருந்துதான் இந்தக் காட்சியை படமாக்கி னோம். நானும், பாபு சாரும் லொக் கேஷன் பார்க்க வந்தபோதே இந்த ஷாட்டை அந்த பழைய கட்டிடத்தின் உயரத்தில் இருந்து எடுப்பது என்று முடிவு செய்துவிட்டோம்” என்று சொன்னேன். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் பயங்கர கிளாப்ஸ். அந்த ஷாட் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்டது என்று பலரும் கூறினார்கள். சரியான திட்டமிடல் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இது ஓர் உதாரணம்!

ஜெய்ப்பூர் படப்பிடிப்பை முடித்து விட்டு விமானத்தில் டெல்லி வந்து, அங்கே இருந்து சென்னை வர திட்டம். டெல்லிக்கு வரும் வழியில் இடையே கஜுராஹோ ஏர்போர்ட்டில் விமானம் தரை இறங்கும் சமயத்தில் தன் நிலைப் பாட்டை இழந்து தடதடவென சத்தம் வந்தது. விமானத்தில் ரஜினியின் குடும் பம், ஸ்ரீதேவியின் குடும்பம், துவாரகேஷ் குடும்பம், படக் குழுவினர் உட்பட பலரும் இருந்தோம். விமானம் இங்கும், அங்கும் அலைவதை உணர்ந்தோம். மரண பயம் வந்தது. அந்த நேரத்தில் ரஜினி என்ன செய்தார்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-65-இளையராஜா-பாடல்/article8815143.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 66: போதையில் இருக்கும் கமல்!

எஸ்பி.முத்துராமன்

 

 
movies_2930380f.jpg
 

கஜுராஹோ ஏர்போர்ட்டில் விமானம் தரை இறங்கப்போகும்போது, தன் நிலைப்பாட்டை இழந்து இங்கும் அங்கும் அலைமோதி பறப்பதை உணர்ந் தோம். மரண பயம் வந்தது. அந்த நேரத் தில் ரஜினி, ‘‘பயப்படாதீங்க. எல்லோரும் தியானம் பண்ணுங்க... ஒண்ணும் ஆகாது!’’ என்று தைரியப்படுத்தினார். அதனால்தான் அவர் மெய்ஞானி. அடுத்த சில நிமிடங்களில் விமானம் ஓடு பாதையில் தரை இறங்கியது. விமானத் தில் இருந்து வெளியே வந்ததும், ஏர்போர்ட் அதிகாரிகளை சந்தித்து, ‘‘என்ன ஃபைலட் இப்படி ஓட்டுகிறார்?’’ என்று சத்தம் போட்டோம். அவர்கள், ‘‘நீங்கள் வந்தது பெரிய ரக விமானம். ஏர்போர்ட் ஓடுபாதையின் நீளம் குறை வாக உள்ளது. சில பைலட் சரியாக இறக்கிவிடுவார்கள். சிலர் தடுமாற்றத் தில் சிக்குவார்கள். இந்த ஃபைலட்டை திட்டாதீர்கள்’’ என்றார்கள். உயிர் பயம் என்றால் என்னவென்று எங்களுக்கு காட்டிய பயணம் அது. எப்படியோ பெரிய விபத்தில் இருந்து எல்லோரும் தப்பித்ததில் ஒரு மகிழ்ச்சி.

படத்தில் வில்லன் செந்தாமரை.ரஜினியை எப்படியாவது விரட்டிவிட்டு அவருடைய பொசிஷனைக் கையில் எடுத்துக்கொள்ள முனைப்போடு இருப்பார். ஒரு காட்சியில் ரஜினியை செந்தாமரை சவுக்கால் அடிப்பார். படம் ரிலீஸானப் பிறகு செந்தாமரை ஒரு நிகழ்ச்சிக்கு போனபோது ரசிகர்கள், ‘‘எங்கள் தலைவனை எப்படி அடிக் கலாம்?’’என்று சூழ்ந்துகொண்டனர். செந்தாமரை, ‘‘நானும், ரஜினியும் நல்ல நண்பர்கள். அது நடிப்புதான். வில்லன் இருந்தால்தானே ரஜினியை ஹீரோ என்று சொல்ல முடியும். அவரை உயரத்துக்கு தூக்கிவிடத்தான் நாங்கள் எல்லாம் வில்லனாக நடிக்கிறோம்!’’ என்று சொல்லி தப்பித்து வந்தாராம். செந்தாமரை எங்கள் குழுவில் ஒருவர் மட்டுமல்ல; நண்பர் குழாமிலும் ஒருவர். பார்ப்பதற்கு கடுமையாக இருப்பார். பழகுவதில் கனிவாக இருப்பார். அவர் மனைவி கவுசல்யா செந்தாமரையும் ஒரு குணச்சித்திர நடிகை. தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

‘அடுத்த வாரிசு’ படத்தைத் தயாரித்த துவாரகேஷ் கன்னடத்தில் ஒரு படம் எடுத்தார். அது அங்கே மிகப் பெரிய வெற்றி. ரஜினி அந்தப் படத்தை பெங்களூ ரில் துவாரகேஷுக்குத் தெரியாமல் பார்க்க ஆசைப்பட்டார். அவர் எப்படி படத்தை பார்த்தார் தெரியுமா? பர்தா அணிந்துகொண்டு தியேட்டருக்குப் போய் மக்களுக்குத் தெரியாமல் அந்தப் படத்தைப் பார்த்தார். படம் மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம்தான் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் எடுத்த பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’. அந்த ‘லக..லக..லக…’ ரஜினி நடிப்பையும், ஜோதிகாவின் நடிப்பையும் யாரும் மறக்க முடியாது.

ஏவி.எம். தயாரித்து கமல் நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலுக்கு இரண்டு கதாபாத்திரங்கள். ஒரு கமல் நல்லவர். ஒரு கமல் போதைக்கு அடிமையானவர். அந்தக் காலத்தில் இப்போது உள்ள குரோமோ கீ, கிராஃபிக்ஸ் இதெல்லாம் இல்லை. ஒளிப்பதிவாளர் தன் திறமையால் கேமராவில் மாஸ்க் பண்ணி ஒவ்வொரு கதாபாத்திரமாக எடுக்க வேண்டும். சின்னத் தவறு நடந்துவிட்டாலும் நடுவில் கோடு தெரிந்துவிடும். ஒளிப்பதி வாளர் பாபு இரட்டை வேடப் படங்களை எடுப்பதில் திறமைசாலி. ஒரு கமலுக்கு ராதா, இன்னொரு கமலுக்கு சுலக்ஷனா ஜோடி. ஏவி.எம்மின் ‘குழந்தையும் தெய்வ மும்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஜமுனா அம்மா வேடத்தில் நடித்தார். அவர் சிறந்த குணச்சித்திர நடிகை.

movieskamal_2930382a.png -

சும்மா நிக்காதீங்க...’ பாடல் காட்சியில் கமல், சுலக் ஷனா

movieskamal1_2930383a.png- ‘

நானாக நானில்லை தாயே...’ பாடல் காட்சியில் ஜமுனா, கமல்ஹாசன்

 

இப்படத்தில் கமல் எப்போதும் போதையிலேயே இருப்பார். போதை யில் நடன நடிகைகளோடு ‘வானம் கீழே வந்தால் என்ன.. பூமி மேலே போனால் என்ன’ என்று பாடிக்கொண்டே கமல் நடனம் ஆடுவார். கமலுடன் சேர்ந்து கேமராவும் போதையில் ஆடியது. பல விதமான டிரிக் ஷாட்டுகள் எடுக்கப்பட் டன. கமல் மேலே பறப்பது, பறந்தபடி கீழே வந்து பெண்களுடன் ஆடுவது, பூமி மேல் நின்றாடுவது, அப்படியே வான வெளியில் பறப்பது என, எந்தவிதமான கிராபிக்ஸும் இல்லாமல் ஒளிப்பதி வாளர் பாபு மேனுவலாக அந்தக் காட்சி களை எடுத்தார். கமல் அந்தப் பாட்டு நன்கு வருவதற்காக 17 நாட்கள் பணியாற்றி னார். அதற்கு மேலும் கால்ஷீட் தருவதற்கும் தயாராக இருந்தார்.

இப்படத்தில் சுலக்‌ஷனா கமலை காதலிப்பார். ஆனால் கமல் பிடியே கொடுக்க மாட்டார். அப்போது சுலக்‌ஷனா ‘‘சும்மா நிக்காதீங்க… நான் சொல்லும் படி வைக்காதீங்க’ என்று பாட்டுப் பாடி கலக்குவார். விஜயா கார்டனில் எடுக் கப்பட்ட அந்தப் பாடல் பெரிய பாப்புலர் ஆனது. போதைக்கு அடிமையான கமலை வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவிடம் ஒப்படைப்பார்கள். அம்மா போதைக் கமலை மனிதனாக மாற்று வார். அப்போது கமல், ‘நானாக நானில்லை தாயே’ என்று பாடுவார். அந்தப் பாட்டும் இசையும், இருவரின் நடிப்பும் பார்ப்பவர் மனதை கலங்க வைத்தது.

படத்துக்கு கிளைமேக்ஸ் இன்னும் பெரிய அளவில் அமைய வேண்டும் என்று பலவிதமாக யோசித்தோம். அப்போது ‘இதயம் பேசுகிறது’ ஆசிரியர் மணியன் சார், சரவணன் சாரை பார்க்க வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது, ‘நான் ‘தில் ஹா ஹீரா’ன்னு ஹிந்தியில ஒரு படம் எடுத்தேன். அதன் கிளைமேக்ஸுக்கு பல லட்ச ரூபாய் செலவழித்தேன்.

ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. அந்த கிளைமேக்ஸை நீங்கள் பயன்படுத் திக்கொள்ள முடியுமா?’’ என்று கேட்டார். அதற்கு சரவணன் சார், ‘‘எல்லோருக்கும் அந்த ஹிந்தி கிளைமேக்ஸைப் போட் டுப் காட்டுங்கள். முத்துராமன் சரியாக வரும் என்று கூறினால் மேலே பேசுவோம்’’ என்றார்.

எல்லோரும் கிளைமேக்ஸைப் பார்த் தோம். மிக பிரம்மாண்டமாக நிறையப் பணம் செலவழித்து ஹெலிகாப்டர் எல்லாம் வைத்து எடுத்திருந்தார்கள். சரவணன் சாரிடம் பலரும் பலவிதமாக சொன்னார்கள். சரவணன் சார் என்னிடம், ‘‘நீங்க சொல்லுங்க?’’ என்றார். ‘‘நானும், எடிட்டர் விட்டல் சாரும், ஒளிப்பதிவாளர் பாபுவும் இன்னொரு தடவை பார்த்துட்டு உங்களுக்கு முடிவு சொல்றோம்’’ என்று சொன்னேன். அதைப் போல நாங்கள் படம் பார்த்தோம்.

‘‘அந்தப் படத்திலும் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் இருப்பதுபோலவே வில்லன்கள் கூட் டம். அவர்களைப் போராடி ஜெயிக்கும் கதாநாயகன். ஹிந்திப் படத்தில் இருந்த ஹெலிகாப்டர் சேஸ், வில்லன்கள் ஹெலிகாப்டரைச் சுடும்போது, அது வெடித்து சிதறுகிற காட்சி உள்ளிட்ட லாங் ஷாட்டுகளை எல்லாம் நாம் எடுத் துக்கொள்ளலாம். அந்த லாங் ஷாட்டு களுக்கு மேட்ச் பண்ணி கமல், வில்லன் கள் கூட்டங்களை க்ளோஷ்அப்பில் எடுத்துக்கொண்டால் கிளைமேக்ஸை பிரம்மாண்டமாக ஆக்கிவிடலாம்!’’ என்று சரவணன் சாரிடம் சொன்னோம். சரவணன் சார், ‘‘ரிஸ்க் எடுக்காதீங்க. ஜாக்கிரதையா பண்ணுங்க’’ என்றார். அவர் கூறிய எச்சரிக்கையோடு மும்பைக்குச் சென்று ஹிந்திப் படம் எடுத்த இடங்களிலேயே மேட்ச் செய்து கமலையும் மற்ற நடிகர்களையும் க்ளோஸ்அப் ஷாட்களில் எடுத்தோம்.

அந்த கிளைமேக்ஸின் உச்சகட்டத் தில் கமல், ஹெலிகாப்டரில் போய் வில்லன்களுடைய கார்கள் மீது மோதுவது போல காட்சி. அந்த ஷாட்டை எடுப்பதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ஹெலிகாப்டர் வரவில்லை. அன்றைக்கு இரவே நாங்கள் எல்லோரும் சென்னைக்கு புறப்பட வேண்டும். சரவணன் சாருடைய மகன் எம்.எஸ்.குகன் அவர்கள் படப்பிடிப்பு வேலைகளைக் கவனிக்க எங்களோடு வந்திருந்தார்கள். நிலைமையைப் புரிந்துகொண்ட குகன் அவர்கள் ஒரு முடிவோடு புறப்பட்டு போனார்.

 

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-66-போதையில்-இருக்கும்-கமல்/article8843290.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமா எடுத்துப் பார் 67: கமலின் வெற்றியில் இன்னொரு மைல்கல்!

எஸ்பி.முத்துராமன்

 

 
 
 
  • ’நான் மகான் அல்ல’ படத்தில் ரஜினிகாந்த்.
    ’நான் மகான் அல்ல’ படத்தில் ரஜினிகாந்த்.
  • ’தூங்காதே தம்பி தூங்காதே’ பட ஹெலிஹாப்டர் காட்சியில் கமல்ஹாசன்.
    ’தூங்காதே தம்பி தூங்காதே’ பட ஹெலிஹாப்டர் காட்சியில் கமல்ஹாசன்.
  • ‘தூங்காதே தம்பி தூங்காதே’ (1983) பட வெற்றி விழாவில் ஆர்.எம்.வீ-யிடம் விருது பெறுகிறார் கமல்ஹாசன். அருகில் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்.
    ‘தூங்காதே தம்பி தூங்காதே’ (1983) பட வெற்றி விழாவில் ஆர்.எம்.வீ-யிடம் விருது பெறுகிறார் கமல்ஹாசன். அருகில் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்.

ஹெலிகாப்டரைக் கொண்டு வருகிற ஒரு முடிவோடு எம்.எஸ்.குகன் அவர்கள் புறப்பட்டுப் போனார். அவர் புறப்பட் டுப் போனதும் நான், ‘‘குகன் அவர் கள் இளரத்தம். சூட்டோடு புறப்பட்டிருக் கிறார். வரும்போது ஹெலிகாப்டரில் தான் வந்து இறங்குவார்’’ என்று சொன் னேன். நான் சொன்னபடியே குகன் அவர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி னார். நாங்கள் எல்லோரும் கைதட்டி வர வேற்றோம். குகன் அவர்கள் ஏவி.எம்மின் பேரன். ஏவி.எம்.சரவணன் சாரின் மகன் என்பதை நிரூபித்தார். ஹெலிகாப்டரில் கமலை வைத்து எடுக்க வேண்டிய ஷாட்டு களை எல்லாம் எடுத்து முடித்துவிட்டு, திட்டமிட்டபடி சென்னைக்குப் புறப்பட் டோம். சென்னைக்கு வந்ததும் எடிட்டர் விட்டல் சாரிடம் பம்பாயில் எடுத்த ஷாட் விஷயங்களைப் பற்றி எல்லாம் விளக்கி சொன்னோம்.

நாங்கள் பம்பாயில் எடுத்த ஷாட்டுகளையும், ஹிந்தி படத்தில் இருந்த லாங் ஷாட்டுகளையும் சரியாக மேட்ச் செய்து எடிட் செய்தார். அதைப் பார்த்ததும் எல்லோரும் அசந்து விட்டோம். விட்டல் சாரின் எடிட்டிங் திறமைக்கு அந்தக் காட்சியே சாட்சியாக அமைந்தது. படம் ரிலீஸானதும் கிளை மாக்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழ் படத்தைப் பார்த்தவர்கள் ஒரிஜினல் ஹிந்தி படத்தைப் பார்த்தபோது ‘தூங் காதே தம்பி தூங்காதே’ கிளைமாக்ஸை அப்படியே ஹிந்தியில் தூக்கி வைத்து விட்டார்கள் என்று பேசினார்கள். இது தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கிடைத்த பாராட்டு!

படத்தில் கமலை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பல குதிரை வீரர்கள் வந்து சூழ்ந்துவிடுவார்கள். அவர்களிடம் இருந்து கமல் தப்பிக்கும்படியாக காட்சி அமைத்திருந்தோம். குதிரை சண்டைக்கு பம்பாயில் ஃபைட்டிங் மாஸ்டர் பப்பு வர்மா மிகவும் திறமைசாலி. அவர்கள் குடும்பமே குதிரை சண்டைக்கு பெயர் போனது. அந்த பப்புவர்மா யார் தெரியுமா? ஹிந்தியில் பெரிய கதாநாயகன் அஜய்தேவ்கானின் தந்தை. அவரைத் தொடர்புகொண்டு ஒப் பந்தம் செய்தோம். பம்பா யில் படப்பிடிப்பு.

கமல் அந்தக் குதிரை வீரர்களை எதிர்கொள் வார். கையில் கிடைத்த மரக் கட் டையை எடுத்துக்கொண்டு ஓடிவரும் குதிரையின் காலில் அடிப்பார். குதிரையும், வீரனும் தலைக்குப்புற விழுவார்கள். பப்புவர்மா கமல் எப்படி அடிக்க வேண்டும் என்பதையும், குதிரை எந்த இடத்தில் விழும் என்பதையும் சரியாக சொல்வார். அதற்கு தகுந்த மாதிரி கேமரா கோணங்களை வைத்து எடுத்தோம். மிகவும் த்ரில்லாக இருந்தது. பப்புவர்மாவுக்கு ஒரு பெரிய ‘ஜே’ போட்டோம். ஏவி.எம்மின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படம் கமலின் வெற்றியில் இன்னொரு மைல்கல்! வெள்ளிவிழா கொண்டாடிய படம்.

கே.பாலசந்தர் சாரின் ‘கவிதாலயா’ நிறுவனத்துக்காக ரஜினியை வைத்து ஒரு அரசியல் கலந்த படத்தை எடுத் தோம். அரசியலில் ஊழல் செய்பவர் களை காந்திய வழியில் ரஜினி திருத்த முயற் சிப்பார். அவர் கள் திருந்தா மல் ரஜி னிக்கு பல விதத்திலும் தொல்லை களைக் கொடுப் பார்கள். இவர் களுக்கு காந் திய வழியில் மிதவாதத்தில் சொன்னால் புரி யாது என்று, சுபாஷ் சந்திரபோஸின் தீவிர வாத வழியில் ஆயு தம் எடுப்பார். அதற்காக இந்தப் படத்துக்கு ‘நான் காந்தியல்ல’ என்று பெயர் வைத்தோம். காந்தி பெயரை வைக்கக்கூடாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டுக்கே போக விரும்பாத நான், கோர்ட் படிகளை ஏறினேன். அந்த கோர்ட்டில் ஏழைகள் படுகிற கஷ்டங்களைப் பார்த்தபோது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்க தாமதம் ஏற்படுவதில் ஏழைகள் தங்கள் சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டு தெருவுக்கு வந்துவிடுகிறார்கள் என் பதை காணும்போது கண் கலங்கியது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க ஒரே வழி கோர்ட் படி ஏறாமல் இருப்பதுதான்.

விசாரணையில் ‘நான் காந்தியல்ல’ என்று பெயர் வைக்கக்கூடாது என்று தீர்ப்பாயிற்று. அதனால் ‘நான் மகான் அல்ல’ என்று பெயரை மாற்றி வைத் தோம். தவறு செய்யும் அரசியல்வாதி களை ரஜினியால் அமைதியாகவும் திருத்த முடியவில்லை. ஆயுதம் எடுத்தும் திருத்த முடிய வில்லை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர் கள் ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடி யாது’ என்று எழுதி யதைப் போல் அவர் களாக திருந்தாவிட்டால் அரசியலில் மாற்றம் ஏற் படாது என்பதுதான் இன் றைய சூழ்நிலை. இந்த நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படு கிறேன்: உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினியின் ‘கபாலி’ படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்!

கமல் நடித்து ‘கவிதாலயா’ தயாரித்த படம் ‘எனக்குள் ஒருவன்’ ஒருவனுக்கு சென்ற பிறவியின் ஞாபகங்கள் வந்து அவனை பாடாய் படுத்துவதுதான் கதை. அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கமலின் வாழ்க்கையில் அடிக்கடி மயக்கம் வந்து, முற்பிறவியின் நினைவு கள் வந்துவிடும். அந்தப் பிறவியில் வரக் கூடிய கதாபாத்திரம் ஒரு ‘நேபாளி’. கமலுக்கு வித்தியாசமான மேக்கப் போடு வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால், அந்த நேபாளி கதாபாத்திரத் துக்காக தன் கண்களை எல்லாம் இழுத்து ஒட்டிக்கொண்டு அசல் நேபாளியாகவே மேக்கப்பில் காட்சி அளித்தார்.

கமலுக்கும், சத்யராஜுக்கும் டார்ஜிலிங்கில் உயரமான இரண்டு மலைகளை இணைப்பதற்கான ‘ரோப்’களில் போகிற விஞ்ச்சில் ஒரு சண்டை காட்சி வைத்தோம். ஒரு விஞ்ச்சில் கமல்ஹாசன், இன்னொரு விஞ்ச்சில் சத்யராஜ் வர… ஒரு இடத் தில் கமல் விஞ்ச்சை சத்யராஜ் பிடித்து ஏறி, கமலோடு சண்டை செய்து அவரை பள்ளத்தில் தள்ள வேண்டும்.

a_2939170a.jpg

‘‘இது ரொம்ப ரிஸ்க்கான ஃபைட், கவனம் தேவை’’ என்பதை விளக்கிச் சொன்னோம். இதை கேட்ட சத்யராஜ், ‘‘இந்த விஞ்ச்ல எல்லாம் ரிஸ்க் எடுத்து என்னால் சண்டை செய்ய முடியாது. டூப் போட்டு எடுத்துடுங்க. அதுக்கு மேட்ச் செய்து என்னை க்ளோஸ் அப்ல எடுத்துடுங்க. என்னை ஆளை விடுங்க சார்’’ என்றார்.

கமலை அழைத்து ‘‘ உங்க ரெண்டு பேருக்குமே டூப் போட்டு விஞ்ச் ஷாட்டுகளை எடுத்துடுறேன். அப்புறம் உனக்கும் சத்யராஜுக்கும் மேட்ச் செய்து க்ளோஸ் அப் எடுத்துக்கிறேன்’’ என்று சொன்னேன். கமலும் ‘‘சரி சார்!’’ என்று ஒப்புக்கொண்டார்.

மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் டூப் ஷாட்ஸ் எடுக்கும்போது, ‘‘டூப்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு செய்துகொடுங்கள்’’ என்று எச்சரித்து அவர்களை விஞ்ச்களுக்கு போகச் சொன்னோம். இரண்டு, மூன்று கேமராக்களை வைத்து, ‘‘ஷாட் ரெடி!’’ என்று சுப்பராயனுக்கு கொடி அசைத்து காட்டியதும் விஞ்ச் புறப்பட்டது. விஞ்ச், கேமராவை நெருங்கி வர வர…. அதில் டூப் வருவதற்கு பதிலாக கமலே தொங்கிக்கொண்டு வந்தார். எங்கள் உடம்பெல்லாம் ஆடிப்போய் விட்டது. கீழே விழுந்தால் எலும்பு கூட தேறாது.

அந்த நேரத்தில் விஞ்சை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் 700 அடிக்கு மேல் விஞ்ச் அந்தரத்தில் நின்றுவிடும். ஒன்றும் புரியாமல் நான் நின்றேன். அடுத்து நடந்ததை அடுத்த வாரம் சொல்கிறேன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-67-கமலின்-வெற்றியில்-இன்னொரு-மைல்கல்/article8874295.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமா எடுத்துப் பார் 68: அதிக தழும்புகள் பெற்ற கதாநாயகன்!

எஸ்பி.முத்துராமன்

 

 
 
 
  • kamal_2947937g.jpg
     
  • kamal1_2947936g.jpg
     

‘எனக்குள் ஒருவன்’ படத்தின் கிளை மாக்ஸ் காட்சியில் கேமராவை விஞ்ச் நெருங்கி வரவர டூப்புக்கு பதிலாக கமலே தொங்கிக்கொண்டு வருவது தெரிந்தது. அதை பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். ஒன்றும் புரியாமல் பதற்றத்தோடு நின்றேன். அந்த விஞ்ச் நாங்கள் நின்ற மலையில் வந்து நின்றது. நான் கமலை நோக்கி ஓடினேன்.

நான் திட்டுவேன் என்று தெரிந் ததும் கமல் என்னை நோக்கி ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு, ‘‘பதற்றப் படாதீங்க, சார். ஒண்ணுமில்ல. ஒண்ணு மில்ல!’’ என்று என்னை சமாதானப் படுத்தினார். கமலுக்கு இப்படி ரிஸ்க் எடுப்பது வாடிக்கையான ஒன்று. கமல் உடம்பில் அடிபடாத இடமே இல்லை. அவரை அதிக தழும்புகள் பெற்ற கதாநாயகன் என்று சரித்திரம் சொல்லும். சமீபத்தில்கூட மாடிப் படிகளில் இருந்து விழுந்து கால் முறிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் குணமடைய நாம் எல்லோரும் வாழ்த்துவோம். அந்த வளர்ந்த குழந்தையை ஏன் இப்படி ரிஸ்க் எடுக்குறே என்று திட்டவும் முடியாது, அடிக்கவும் முடியாது. அதுதான் கமலின் வீரம் - சுபாவம்!

நான் பதற்றத்தில் இருந்தாலும் ஒளிப்பதிவாளர் பாபு, விஞ்சில் கமல் தொங்கிவந்த பயங்கரமான காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்துவிட்டார். அதன்பிறகு சத்யராஜை க்ளோஸ் அப்பில் மேட்ச் செய்து அந்தக் காட்சி களை எடுத்து முடித்தோம். அந்தக் காட்சி மிகவும் த்ரில்லிங்காக அமைந்தது. இந்தப் படத்தில் சிறந்த நடன மங்கையாக இருந்த ஷோபனாவை கதாநாயகியாக அறிமுகம் செய்தோம். அவர் நடன மங்கை மட்டுமல்ல; சிறந்த நடிகையும் கூட என்பதை நிரூபித்தார். இன்றைக்கு சிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கும் சார்லியும் அந்தப் படத்தில்தான் அறிமுக மானார். இவர்களோடு பிரியாவும் நடித்தார்.

கமலும் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன் திறமையை காட்டியிருந்தார். நல்ல இசை, நல்ல பாட்டு, நல்ல சண்டைக் காட்சிகள், சிறந்த அரங்குகள், இந்தியாவின் இயற்கை நிறைந்த டார்ஜிலிங் இவ்வளவும் இருந் தும் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. எப்போதும் தோல்விக்கு என்ன காரணம் என்று சிந்திப்போம். அப் படி சிந்தித்ததில் முற்பிறவி, மறுபிறவி என்கிற கருவை மக்கள் ஜீரணிக்க வில்லை. ஜீரணிக்கிற மாதிரி நாங்கள் கொடுக்கவில்லை என்றும் சொல்லலாம்.

ஏவி.எம்

தயாரிப்பில் உருவான படம் ‘நல்லவனுக்கு நல்லவன்’. ரஜினி தான் நல்லவனுக்கு நல்லவன். ரஜினி முதல்பாதியில் தாதா. அந்த வேடத்தில் ரஜினி தாதாவாக தத்ரூபமாக நடித்திருந் தார். ஒரு கட்டத்தில் வில்லனின் குகைக்கே சென்று அவரை சந்திப்பார். அந்த வில்லன், ரஜினியை தாக்க பல நாய்களை அவர் மீது பாயவிடுவார். ரஜினி தைரியமாக நாய்களை சமாளிப் பார். ஒவ்வொரு நாயாக தூக்கி விசிறி யடிப்பார். நாய்கள், ரஜினியை கடித்து விடுமோ என்று பயந்தோம். ஆனால், ரஜினியின் வேகத்தில் நாய்கள் வெளியே போய் விழுந்தன. இப்படத்தின் மறுபாதி யில் ரஜினி ‘பணக்காரன்’. ரஜினி ஸ்டைல் நடிப்பை பார்த்து பணக்காரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு நடிப்பு.

தாதா அறிமுகத்தில் ரஜினி, கல்பனா ஐயரோடு ஒரு நடனம் ஆடுவார். அது ‘வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’ என்று கங்கை அமரன் எழுதிய பாட்டு. அந்தப் பாட்டு ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடப்பதைப் போல எடுத்தோம். இவர்கள் ஆடுகிற காட்சி 200 டி.வி-களில் தெரியும். இந்த செட்டப் அப்போது சென்னையில் இல்லை. அதற்காக குகன் அவர்கள் பம்பாய் சென்று டெக்னீஷியன்களோடு கலந்து பேசி செட்டில் 200 டி.விக்களை வைத்து ஷூட் பண்ணினோம். அப்போது அது மிகவும் புதுமையாக இருந்தது. அத்துடன் ரஜினிக்கும், கல்பனா ஐயருக்கும் உடையில் மின் விளக்கு அலங்காரம் செய்து ஆட வைத்தோம்.

இதற்கெல்லாம் மக்களின் கைதட்ட லும், ஆரவாரமும், ஒன்ஸ்மோர்... என்ற குரலும் தியேட்டர்களில் எதிரொலித்தன. ரஜினி ரசிகர்கள் அடித்த விசில் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தொழில் நுணுக்கப் ‘புதுமை’களை நாங்கள் அன்றே தொடங்கிவிட்டோம்.

என்றும் பதினாறாக தோன்றும் குணச்சித்திர நடிகை ராதிகா, ஒரு அநாதையாக ‘தாதா’ ரஜினி வீட்டில் வந்து அடைக்கலம் ஆவார். ராதிகாவின் ‘மென்மை’ ரஜினிக்கு பிடித்துவிடும். ரஜினியின் ‘வன்மை’ ராதிகாவுக்கு பிடித்துவிடும். அது காதலாக மாறும். ராதிகா, ‘தாதா’ ரஜினியை கொஞ்சம் கொஞ்சமாக மனிதநேயமுள்ள ரஜினி யாக மாற்றுவார். கவிப்பேரரசு வைர முத்து அவர்கள் இந்த சூழலின் அடிப் படையை வைத்து தன் வைர வரிகளால் எழுதிய பாட்டு, ‘உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே!’.

இந்தப் பாட்டை கேரளாவில் எடுக்க முடிவு செய்திருந்தோம். அங்கே பருவ மழை கொட்டுகிறது என்ற செய்தி வந்தது. நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் சென்னையைச் சுற்றி பல இடங்களைப் பார்த்து முட்டுக்காட்டை படப்பிடிப்புக் காக தேர்ந்தெடுத்தோம். சரவணன் சார், ‘‘பாட்டு நல்லா வந்திருக்கு. முட்டுக்காட் டுல எடுக்குறேன்னு சொல்றீங்களே?’’ என்று கேட்டார். அதற்கு நானும் பாபுவும், ‘‘கிட்டத்தட்ட கேரளா சூழல் இருக்கு. நல்ல முறையில எடுத்துடுவோம்!’’ என்று கூறி எடுத்தோம். அந்தக் காட்சி அவ்வளவு இயற்கையாக அமைந்தது. ரஜினி, ராதிகா நெருக்கம் என்றைக்கும் நம் கண்ணுக்குள் இருக்கும்.

ராதிகா, ரஜினியைப் பார்த்து ‘‘இனிமேல் எந்த சண்டை சச்சரவுக்கும் போகக் கூடாது. அடிதடியில் ஈடுபடக் கூடாது’’ என்று சத்தியம் வாங்கிக் கொள்வார். ஒருநாள் ரஜினி வேலை முடித்துவிட்டு வரும்போது பழைய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், “என்ன.. நீ நல்லவனாயிட்டியா?’’என்று வம்புக்கு இழுப்பார்கள். ரஜினி அமைதியாக அவர்களைத் தாண்டி போவார். ரஜினியை இழுத்து சொடுக்குப் போட்டு சொடுக்குப் போட்டு அடிப்பார்கள். அடிகளை வாங்கிக் கொண்டு காயங்களோடு வீட்டுக்கு வருவார்.

ராதிகாவின் தலையில் தான் வாங்கி வந்த மல்லிகைப் பூவை சூடப் போவார். அப்போது ராதிகா அடிபட்ட ரஜினியைப் பார்த்துவிட்டு, ‘என்ன ஆரம்பிச்சுட்டீங்களா? முகத்துல என்ன ரத்தக் காயம்?’’ என்று கேட்பார். அதற்கு ரஜினி நடந்ததைச் சொல்லி, ‘‘உன்கிட்ட சத்தியம் பண்ணினதால அடிக்காம வந்துட்டேன்!” என்று கூறுவார். ராதிகா, ‘வம்பு சண்டைக்கு நீங்க போகக்கூடாதுன்னு சொன்னேனே தவிர, உங்களை அடிச்சா வாங்கிட்டு வரச் சொல்லலை. போய் அவங்களுக்கு திருப்பி கொடுத்துட்டு வந்து என் தலையில பூவை வையுங்க!’’ என்பார். ரஜினி அந்த ரோஷத்தோடு போய் அந்தக்கூட்டத்தை சொடக்குப் போட்டு சொடக்குப் போட்டு நொறுக்கித் தள்ளுவார். வீட்டுக்கு வந்து ராதிகா தலையில் பூவை வைக்க மக்களின் கைதட்டல் வெற்றி முரசாக கொட்டும். அந்த மல்லிகைப் பூவின் மணம் மகள் துளசியாக மலரும்.

விசு அவர்கள் குடும்பத்துக்கு தலைவர். ரஜினிக்கு முதலாளி. நகைச் சுவை கலந்த நல்ல கதாபாத்திரம். ரஜினியின் நல்ல குணங்கள் விசுவுக்கு ரொம்ப பிடித்துப்போகும். விசு எவ் வளவு நல்லவரோ, அவ்வளவு கெட்ட வர்கள் அவரது குடும்பத்தினர். விசுவின் பையனாக யாரைப்போடுவது என்று யோசித்தோம். கதாநாயகர்களை வில்ல னாக போடுவது எங்களுக்கு ராசி. காதாநாயகன் கார்த்திக்கை வில்லனாக போடுவது என்று முடிவு செய்து அவரை அழைத்துப் பேசினோம். அவர் வில்லனாக நடிக்க மறுத்தார். அவரை எப்படி சம்மதிக்க வைத்தோம்?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-68-அதிக-தழும்புகள்-பெற்ற-கதாநாயகன்/article8905573.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 69: வில்லனாக நடிக்க மறுத்த கார்த்திக்!

எஸ்பி.முத்துராமன்

 

 
 
  • கார்த்திக், ரஜினிகாந்த்
    கார்த்திக், ரஜினிகாந்த்
  • ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ரஜினிகாந்த், கல்பனா அய்யர்
    ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ரஜினிகாந்த், கல்பனா அய்யர்
  • ‘நல்லவனுக்கு நல்லவன்’ (1984) படத்தில் துளசி, ரஜினிகாந்த், ராதிகா
    ‘நல்லவனுக்கு நல்லவன்’ (1984) படத்தில் துளசி, ரஜினிகாந்த், ராதிகா

நான் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ஒரு கதாநாயகனை வில்லனாக்கும் முடிவில் இருந்தோம். கார்த்திக் கிடம் கேட்டபோது, அவர் மறுத்துவிட் டார். கார்த்திக்கை சம்மதிக்க வைக்க ஒரே வழி ஏவி.எம்.சரவணன் சாரிடம், அவரைப் பேச வைப்பதுதான் என்ற முடி வுக்கு வந்தோம். சரவணன் சாரை சந்தித்து கார்த்திக் பேசினார்.

கார்த்திக்கிடம் சரவணன் சார், ‘‘இந் தப் படத்தில் வில்லனா நடிச்சா, அடுத்து ஹீரோவா நடிக்கும் வாய்ப்பு குறைஞ் சிடும். ‘வில்லன்’னு முத்திரை குத்திடு வாங்கன்னு பயப்படுறீங்க. அது சரிதான். நீங்க இதில் நடிங்க. நானே அடுத்து ஒரு படம் உங்களை ஹீரோவா வைத்து எடுக் கிறேன். அந்தப் படத்தை முத்துராமனே இயக்கட்டும்!’’ என்றார். ‘‘நிச்சயமா கொடுப்பீங்களா?’’ என்று திரும்பவும் கேட்டார் கார்த்திக். ‘‘ஏவி.எம்ல எதை யும் சொல்ல மாட்டோம். வாக்கு கொடுத் துட்டா நிச்சயம் அதிலிருந்து பின் வாங் கவே மாட்டோம்!’’ என்று உறுதியளித்தார் சரவணன் சார். ஒருவழியாக, வில்லனாக நடிக்க சம்மதித்தார் கார்த்திக்.

சரவணன் சார் வாக்குக் கொடுத்தபடி கார்த் திக்கை கதாநாயகனாக நடிக்க வைத்து ‘நல்லதம்பி’ என்ற படத்தை எடுத்தார்கள். ‘நல்லவ னுக்கு நல்லவன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடி துளசி. கார்த்திக் துளசிக்கு கார் டிரைவிங் கற்றுக் கொடுக்கும்போது இரு வருக்கும் பழக்கம் ஏற்படும். துளசிக்கு கார் டிரைவிங்கோடு காதலையும் சேர்த்து கற்றுக் கொடுத்துவிடுவார் கார்த்திக். அந்தக் காதலை இருவரும் கொண்டாடும் விதமாக ‘முத்தாடுதே முத்தாடுதே’ என்று ஒரு பாட்டு வைத்தோம். இருவருமே இள ரத்தம். பாடலிலும் இளமை ததும்பியது. அந்தப் பாடலுக்கு புலியூர் சரோஜா நடனம் அமைத்தார். நல்ல நடனம் ஆடக் கூடிய நடிகர், நடிகைகள் கிடைத்தால் அவர் விடுவாரா? படத்தில் அந்தப் பாட்டு அவ்வளவு சிறப்பாக அமைந்தது.

பொதுவாக கம்பெனி ஸ்டிரைக் என்றால் ஊழியர்கள் சிவப்பு கொடி பிடித்து, ‘முதலாளி ஒழிக’ என்று குரல் கொடுத்து தங்களுடைய ஆர்ப்பாட் டத்தை வெளிக்காட்டுவது வழக்கம். இதற்கு மாறாக ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் தொழிலாளர்கள் வெள்ளைக் கொடி பிடித்து வந்து, தங்களுடைய கோரிக்கையை முன் வைப்பார்கள். ‘‘எங் களை வாழ வைக்கும் முதலாளியிடம் எங்களுடைய கோரிக்கைகளை சமா தான முறையில் எடுத்து வைக்கிறோம். அதனால் முதலாளியை ஒழிக என்றும் சொல்ல மாட்டோம். வாழ்க என்றுதான் சொல்வோம். சமாதானம் பேச வந் திருப்பதால் வெள்ளைக் கொடி பிடித்து வந்திருக்கிறோம்!’’ என்று விளக்கம் சொல்வார்கள்.

இந்தக் காட்சியை அப்போது பல பத்திரிகைகளும் பாராட்டின. வித் தியாசமான காட்சியமைப்பு என்று மக்களும் ரசித்து மகிழ்ந்தனர். தொழிலாளி முதலாளி உறவுகள் சரி யாக இருந்தால்தான் அந்த நிறுவனம் ஒழுங்காக நடக்கும். அதுக்கு உதாரணம் ஏவி.எம்.ஸ்டுடியோ. தொழிலாளர் களுக்கு செட்டியார் செய்யாத உதவி களே இல்லை. நிலம் வாங்கிக் கொடுத் தார். அரசாங்கத்திடம் கடன் பெற்று வீடு கட்டிக் கொடுத்தார். தொழிலாளர் கள் வாழ்கிற பகுதியில் பள்ளிக்கூடங் கள் கட்டினார். ஹெல்த் சென்டர் திறந்தார். தொழிலாளர்கள் வீட்டு விஷேசத்துக் காகவே ‘மேனா’ திருமண மண்டபம் கட்டினார். தொழிலாளர்களுக்கும், அவ ருக்கும் இடையே அப்படி ஓர் உறவு இருந்தது.

அப்படிப்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் சில வெளியாட்கள் புகுந்தனர். ‘‘எவ்ளோ உழைக்கிறோம். எங்களுக்கு இவ்வளவுதான் சம்பளமா? இன்னும் கொடுக்கணும்!’’ என்று தொழிலாளர்களை தூண்டிவிட்டனர். ஒரு கட்டத்தில் தொழிலாளர்களைச் சேர்த் துக்கொண்டு வேலைநிறுத்தம் செய்ய வும் ஆரம்பித்தனர்.

ஏவி.எம் ஸ்டுடியோ வாசலில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு தினமும் கோஷம் போடத் தொடங்கினார்கள். செட்டியார் ஸ்டுடியோவை மூடிவிட்டார். மூன்று மாதங்கள் ஸ்டுடியோவில் எந்த வேலையும் நடக்கவில்லை. ஒரு கட்டத் தில் மெய்யப்ப செட்டியார் ஸ்டுடி யோவை பெங்களூருக்கு மாற்ற திட்டமிட் டார். அதன் ஆரம்பமாக சவுண்ட் டிபார்ட் மென்டை பெங்களூரு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்.

raj111_2957123a.jpg

ஏவி.மெய்யப்ப செட்டியார், ஏவி.எம்.சரவணன்

அப்போது நானும், ஏவி.எம்மில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த என்.எஸ். மணி அவர்களும் (பின்னாளில் இந்த மணி அவர்கள்தான் ‘புவனா ஒரு கேள் விக்குறி’ படத்தை தயாரித்தவர்) மெய் யப்ப செட்டியார் அவர்களைப் பார்த்து, ‘‘அப்புச்சி… இந்த முடிவுக்கு வராதீங்க? சமாதானமா பேசிப் பார்ப்போம். ஒரு வாரம் டைம் கொடுங்க!’’என்று சொன் னோம். அதுக்கு அவர் கோபத்தோடு, ‘‘மூணு மாசம் ஆச்சு. இவ்வளவு நாள் இல்லாம இனி என்ன சமாதானம்!’’னு கேட்டார். நாங்க பேசி பார்க்குறோம். ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க? என்று வேண்டிக்கொண்டோம். செட்டியார் அவர்கள் யோசித்துவிட்டு, ‘‘ஒரு வாரம்தான் பார்ப்பேன். சமாதானம் ஆகலைன்னா பெங்களூ ருக்கு மாத்திடுவேன்!’’ என்று முடிவாக சொன்னார். நானும், மணியும் மவுண்ட் ரோடு ராஜி பில்டிங்கில் இருந்து சைக் கிளில் ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு வந்தோம். அப்போதெல்லாம் சைக்கிள் பயணம்தான்.

தொழிலாளர்கள், ஸ்டுடியோவுக்கு முன் போடப்பட்ட குடிசையில் இருந்து கோஷங்கள் போட்டுக்கொண்டிருந் தனர். எங்களை ஸ்டுடியோவுக்குள் போக அனுமதிக்கவில்லை. அப்போது நானும், மணியும் அவர்களிடம், ‘‘ஸ்டுடியோவுக் குள்ள இருக்கிற தென்னை மரங்கள், செடிங்க எல்லாம் மூணு மாசம் தண்ணி ஊத்தாம வாடிப் போயிருக்கும். இனி மேலும் தண்ணி விடலைன்னா செத்துப் போய்டும். நாளைக்கு திரும்ப ஸ்டுடியோ திறக்கும்போது வெறிச்சோடி போயிருக் கும்!’’ என்று சொன்னோம்.

‘‘சரி போங்க!’’ என்று சொல்லி, உள்ளே போக அனுமதித்தார்கள். நாங்கள் உள்ளே போய் தண்ணி ஊத்திட்டிருந் தோம். அப்போ நாலு, ஐந்து தொழி லாளர்கள் மட்டும் உள்ளே வந்தார்கள். எங்களிடம் ‘‘ஏன் சார் செட்டியார் ஸ்டுடி யோவைத் திறக்கும் மூடில் இருக் காரா?’’ என்றார்கள். ‘‘நீங்க சரின்னு சொன்னா செட்டியாரிடம் பேசி, சமா தானமா ஒரு முடிவு எடுக்கலாம்!’’ என்று சொன்னோம். அதற்கு அவர்கள் ‘‘நீங்கள் சொல்வதும் சரிதான். எங்களில் சில பேர் தான் வம்பு செஞ்சுட்டு இருக்காங்க!’’ என்று பதிலளித்தார்கள். ‘‘சரி, வேலைக்கு வர விரும்புறவங்களை எல்லாம் அழைச் சுட்டு, நாளைக்கு ஏவி.எம் ஸ்கூல் கிரவுண் டுக்கு வந்துடுங்க. எல்லாரும் பேசி ஒரு முடிவு எடுப்போம்’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம். இந்த விஷயம் எப்படியோ வேலைநிறுத்தத்தைத் தூண்டிவிட்டவர்களுக்குத் தெரிந்து விட்டது.

நாங்கள் திரும்பும்போது எங்களைப் பிடித்துக்கொண்டு, ‘‘தொழிலாளர்கள் விஷயத்தில் தலையிட்டால் கொலையே விழும்’’ என்று சொல்லி எங்களிடம் சண்டையிட்டார்கள். அவர்களிடத்தில் ‘‘கடந்த மூணு மாசமா உங்கப் போராட் டத்தால் தொழிலாளர்கள் மட்டும் பாதிக் கப்படலை. அவங்களோட குடும்பமே கஷ்டப்படுறாங்க. ஆக, மொத்தத்துல எல்லாரும் பட்டினி கிடக்குறாங்க. இதுக்கெல்லாம் மாசா மாசம் பணம் கொடுக்கிறேன்னு சொல்லுங்க. இந்த விஷயத்துல நாங்க தலையிடலை!’’ என்று சொன்னோம். அதை பலர் சரியாக புரிந்துகொண்டார்கள். மறுநாள் எங்களை சந்தித்து, ‘‘செட்டியார் அவர்களைப் பார்க்க வருகிறோம்!’’ என்று ஒப்புக்கொண்டார்கள்.

அடுத்த நாள் மெய்யப்ப செட்டியார் அவர்களைப் பார்க்க தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு செட்டியார் வீட் டுக்கே போனோம். செட்டியாரிடம் விஷ யத்தை சொன்னோம். செட்டியார் வாச லுக்கு வந்து தொழிலாளர்களைப் பார்த் தார். தொழிலாளர்களும் செட்டியாரைப் பார்த்தார்கள். அந்த இடத்தில் ஒரே அமைதி நிலவியது. அடுத்து அங்கே என்ன நடந்தது?

- இன்னும் படம் பார்ப்போம்... |

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-69-வில்லனாக-நடிக்க-மறுத்த-கார்த்திக்/article8937072.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 70: பஞ்சு அருணாசலம்- எல்லாமுமாக வாழ்ந்தவர்!

எஸ்பி.முத்துராமன்

 

 
 
 
  • இளையராஜாவுடன் பஞ்சு அருணாசலம்
    இளையராஜாவுடன் பஞ்சு அருணாசலம்
  • எஸ்.பி. முத்துராமனுடன்..
    எஸ்.பி. முத்துராமனுடன்..

சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளோடு ஸ்டுடியோ முன்பு மூன்று மாதங்களாக ஸ்டி ரைக் நடத்திய தொழிலாளர்கள், எங்கள் வேண்டுகோளின்படி ஏவி.எம். செட்டியா ரைப் பார்க்க அவர் வீட்டு வாச­லில் வந்து நின்றனர். அப்போது அங்கே கூடியிருந்த தொழிலாளர்கள் செட்டியார் காலில் விழுந்து, ‘‘எங்களை மன்னிச் சுடுங்க அப்பச்சி. முதல்ல ஸ்டுடியோ வைத் திறங்க. நாங்க ஒழுங்கா வேலை பார்க்குறோம்!’’ என்றார்கள். அப்போது ஏவி.எம் செட்டியார் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, ‘‘எழுந்திருக்கப்பா, இனிமேல் யார் சொல்றதையும் கேட்காதீங்க. நம்ம ரெண்டு பேருக்கும் சம்பந்தப் பட்ட ஒரு குழுவை அமைப் போம். உங்களுக்கு என்ன பிரச் சினைன்னாலும் அந்தக் குழுவிடம் சொல்லுங்க. எந்தப் பிரச்சினைன்னாலும் உடனடியாத் தீர்வு காண்போம்!’’ என்றார். அவர் சொன்னதுபோலவே ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இருந்தேன். ஒருநாள் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘‘தொழிலாளர்களுக்கு என்ன தேவையோ அதை நிறுவனம் நிறைவேற்றிக் கொடுக்கும். நாமும் அதை சரியாக உணர்ந்து உழைக்க வேண்டும்’’ என்று சொன்னேன். அதை எல்லோரும் புரிந்துகொண்டு வேலை பார்த்தனர். ஸ்டிரைக் நடந்தது என்ப தற்கு எந்தச் சுவடும் தெரியாத அளவுக்கு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஏவி.எம். ஸ்டு டியோ இயல்பு நிலைக்கு மாறியது.

இந்த நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டுதான் ‘நல்ல வனுக்கு நல்லவன்’ படத்தில் தொழிலாளர் கள் வெள்ளைக் கொடி பிடித்துக் கொண்டே ஸ்டி ரைக் நடத்தும் காட் சியை வைத்தோம். அந்தக் காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.

‘நல்லவனுக்கு நல்ல வன்’ படத்துக்கு பலம் ரஜினி, ராதிகா காம் பினேஷன். இருவரும் ‘போக்கிரி ராஜா’ படத்தில் இணைந்து நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கியிருந்தார்கள். இந்தப் படத்தில் பணக்காரராக ரஜினி எப்படி பிரமாதப் படுத்தினாரோ, அதேபோல அவர் மனைவியாக அசத்தியிருப்பார், ராதிகா. ஒரு தம்பதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தினார்கள்.

மகள் துளசி, காதலிக்கிற விஷயம் அப்பா ரஜினிக்குத் தெரியும். ராதிகா எவ்வளவு சொல்லியும், துளசி அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால், துளசியின் காதலை ரஜினி எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் மகளின் காதல் விஷயத்தால் ரஜினி, ராதிகா இருவருக்கும் இடையே சண்டை வந்துவிடும். அந்தக் கட்டத்தில் ரஜினி மகளிடம், ‘‘ உன் காதலனை அழைத்து வா. நானும், உங்க அம்மாவும் நேர்ல பார்த்துடுறோம்!’’ என்பார். துளசி, தன் காதலனுடன் வீட்டுக்கு வருவார். அந்தக் காதலன் கார்த்திக். அவரைப் பார்த்ததும் ரஜினிக்கும், ராதிகாவுக்கும் பயங்கர அதிர்ச்சி. ரஜினி துளசியிடம், ‘‘அவன் கெட்டவன். இந்தக் காதல் வேண்டாம். உன்னோட வாழ்க்கை சரியா அமையாது’’ என்று சொல்லுவார். அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். கார்த்திக், ரஜினியை பழி வாங்க அவரது மகளை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பார். இதெல்லாம் துளசிக்குத் தெரியாது.

திடீரென ஒருநாள் துளசி, அப்பா ரஜினி, அம்மா ராதிகாவிடம் வந்து, ‘‘நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம். உங்ககிட்ட அனுமதி வாங்க வரலை. கல்யாணம் நடக்குற விஷ யத்தைச் சொல்றதுக்காக வந்தேன்!’’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். ‘என்ன இருந்தாலும் மகளாச்சே’ என்று ராதிகாவை ரஜினி அழைத்துக்கொண்டு மகளின் திருமணத்துக்குச் செல்வார். ஆனால், கார்த்திக் அவர்களை அவ மானப்படுத்தி விரட்டி அடிப்பார். மனம் ஒடிந்து இருவரும் அந்த இடத்தைவிட்டு வெளியேறுவார்கள். அந்த சூழலுக்கு ஏற்றபடி கவிஞர் நா.காமராசன், ‘‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’ என்ற பாடலை எழுதியிருப்பார். அதில் ரஜினி, ராதிகா நடிப்பு எல்லோர் மனதை யும் தொட்டது.

மகளின் திருமணத்துக்குப் பிறகு ராதிகா மிகவும் வேதனையோடு இருந் தார். ரஜினி அவரை தேற்ற எவ்வளவோ முயற்சிப்பார். அதில் இருந்து அவரால் மீண்டு வரவே முடியாது. அந்த சோகத்திலேயே மனைவி ராதிகா இறந்துவிடுவார். அந்த சோகமான சூழ்நிலையில் மீண்டும் ‘உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே’ என்ற பாடலை ஒலிக்கச் செய்தோம். ரஜினியின் சோக நடிப்பு உள்ளத்தைத் தொட்டது. எப்போதுமே மகிழ்ச்சியான சூழலில் இடம்பெற்றப் பாடலை, பின்னால் சோகமான பாடலாகப் பயன்படுத்தும்போது அது அழுத்தமாக மனதில் பதியும்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற இந்த சோக காட்சியை வாசகர்களுக்காக எழுதிக்கொண்டிருக்கும்போது என் வாழ்க்கையில் மிகப் பெரிய சோக நிகழ்ச்சி நடந்துவிட்டது. ஆம்! எங்கள் குழுவில் முக்கியமானவரான ‘பஞ்சு அருணாசலம் அவர்கள் காலமாகி விட்டார்’ என்ற செய்திதான் அது.

நானும், பஞ்சு அருணாசலம் அவர் களும் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள். உறவினர்கள். கவியரசு கண்ணதாசன் அவர்களின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணா சலம். நானும் அவரும் ஒரே கால கட்டத்தில் சென்னைக்கு வந்தோம். கவியரசரின் ’தென்றல்’ இதழில் நான் பணியாற்ற, கவியரசரின் நம்பிக்கைக்கு உகந்த உதவியாளராக பஞ்சு அருணாசலம் பணியாற்றினார்கள். எங்கள் இருவரையும் கவியரசர், ‘தம்பி.. தம்பி’ என்று அழைப்பார்கள். தம்பிகள் இருவரும் சினிமாவில் இணைந்தோம். இணைப் பிரியா கலைஞர்களானோம். நான் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அவர்கள்தான் திரைக்கதை, வச னம் எழுதினார்.

‘மயங்குகிறாள் ஒரு மாது’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘துணிவே துணை’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற படங்கள் எல்லாம் அதற்கு உதாரணம். அதைப் போல் அவர் தயாரித்த ‘பிரியா’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, குரு சிஷ்யன் போன்ற படங்களை நான் இயக்கினேன். இருவரின் கருத்துகளும் ஒருமித்து இருந்ததால் எங்களுக்குள் தகராறு என்ற பேச்சுக்கே இடமில்லை. ‘ஆனந்த விகடன்’ இதழில் அவர் எழுதுகிற ‘திரைத் தொண்டர்’ கட்டுரைகளில் அது புலப்படும்.

அவருடைய மனைவி மீனா அவர்களின் சமையலையும் விருந்தோம் பல் பண்பையும் சொல்லி முடியாது. அவ ருடைய மகன்கள் சண்முகம், பஞ்சு சுப்பு, மகள்கள் சித்ரா, கீதா அவ்வளவு பேரும் எல்லோரிடத்தும் பாசம் காட்டுபவர்கள். அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல் லப்போகிறோம் என்று தெரியவில்லை.

ரஜினி, கமல் ஆகியோருக்காக நிறைய திரைக்கதை எழுதியவர் மட்டுமல்ல; அவர்களிடம் உரிமை யோடு பல நல்ல விஷயங் களைச் சொல்லும் சிறந்த ஆலோ சகராகவும் வாழ்ந்தவர். பஞ்சு அவர்கள் காலமானது எங்களுக்கெல்லாம் பேரிழப்பாகும்.

அவர் அறிமுகப்படுத்திய எத்த னையோ நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறிப்பாக இசை ஞானி இளையராஜா போன்றவர்கள்… தங்கள் நன்றியைக் காட்ட பஞ்சு அவர்களுக்காக ’இரங்கட்பா’ பாடிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்பி.எம் யூனிட்டின் தூண் பஞ்சு அருணாசலம் அவர்கள். எங்களின் வெற்றியில் அவ ருக்கு பெரும்பங்கு உண்டு. எங்கள் யூனிட்டின் மொத்த குடும்பமும் அந்த நல்ல உள்ளத்துக்காக அழுது கொண்டிருக்கிறது.

பஞ்சு அருணாசலம் ஓர் எழுத்தாளர், கவிஞர், ரசிகனின் மனமறிந்த தயாரிப் பாளர். இப்படி எல்லாமுமாக வாழ்ந்த அவரை எப்படி மறக்கப் போகிறோம்? மறக்க மாட்டோம். அவர் எழுத்தும், நம்மோடு வாழ்ந்த வாழ்வும் என்றும் நம் மனதில் வாழும். கவியரசர் சொன்னதைப் போல் ‘பஞ்சு நிரந்தரமானவர்… அவ ருக்கு மரணமில்லை’ என்று நினைத் துக்கொள்வோம்!

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-70-பஞ்சு-அருணாசலம்-எல்லாமுமாக-வாழ்ந்தவர்/article8967770.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.