Jump to content

பொங்கல்


Recommended Posts

பச்சரிசி பால் பொங்கல்
Paal Pongal Recipe: Pongal Special

 பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சர்க்கரை பொங்கலடன், கார பொங்கலும் செய்யலாம். அதிலும் பச்சரிசி கொண்டு பால் பொங்கல் செய்து, பொங்கல் புளிக்குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு பால் பொங்கல் எப்படி செய்வதென்று தெரியாதா?

அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். சரி, இப்போது பச்சரிசி பால் பொங்கலை எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பொங்கலன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

  தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பாசிப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - சிறிது (நெய்யில் வறுத்தது)

பால் - 2 கப்

தண்ணீர் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரிசியை நீரில் நன்கு கழுவி, பெரிய குக்கரில் போட்டு, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து, 1 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனதும், குக்கரை திறந்து, மீதமுள்ள பாலை ஊற்றி கரண்டியால் மசித்து விட வேண்டும்.

பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

பிறகு அதில் தேங்காய், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால், பச்சரிசி பால் பொங்கல் ரெடி!!! இந்த பொங்கலை பொங்கல் புளிக் குழம்புடன் சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

சர்க்கரைப் பொங்கல்

 

 
sarkkarai_2692198f.jpg
 

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப்

பாசிப் பருப்பு - கால் கப்

வெல்லம் - ஒரு கப்

பனங்கல்கண்டு - அரை கப்

பால், தேங்காய்ப் பால் - தலா அரை கப்

முந்திரி, திராட்சை - 15

நெய் - கால் கப்

ஏலக்காய் - 8

குங்குமப்பூ, ஜாதிக்காய்ப் பொடி - சிறிதளவு

பச்சை கற்பூரம் - சிறு துளி

எப்படிச் செய்வது?

அரிசி, பாசிப் பருப்பைத் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு மூடி தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுங்கள். பாலுடன் நான்கரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். அரிசி, பருப்பைக் களைந்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேகவிடுங்கள். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து அதில் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அதனுடன் பொடி செய்த வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து, தளதளவென்று கொதிக்கும்போது இறக்கிவையுங்கள்.

நெய்யில் முந்திரி, திராட்சையைத் தனியாக வறுத்து, பொங்கலில் சேருங்கள். பிறகு ஜாதிக்காய்ப் பொடியை நெய்யில் வறுத்துச் சேருங்கள். ஏலக்காய், பச்சை கற்பூரத்தைப் பொடித்து சேருங்கள். குங்குமப்பூவை சிறுதளவு பாலில் கரைத்து சேருங்கள். மீதமுள்ள நெய்யைக் கொட்டிக் கிளறுங்கள். பொங்கல் இறக்கும்போது சற்று தளதளவென்று இருக்கும். ஆறியதும் சரியாகிவிடும்.

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article8092143.ece

Link to comment
Share on other sites

தைப் பொங்கலுக்கு உதவியாய் இருக்கும் ...... நன்றி சகோ!

ரதி இந்த முறை தைப்பொங்கலுக்கு இந்த முறையைப் பார்த்து சர்க்கரைப் பொங்கல் செய்யுங்கோ

வெல்லம்/சர்க்கரைக்குப் பதிலாக brown sugar போடலாம்.... 

Link to comment
Share on other sites

பொங்கல் படையல்: பாரம்பரியம் பகரும் ஏழு காய் குழம்பு

 

 
 
ezu_kai_2692196f.jpg
 

என்னென்ன தேவை?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரி, உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்

மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்

அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) - தலா அரை கப்

துவரம் பருப்பு - அரை கப்

மைசூர் பருப்பு- 6 டீஸ்பூன்

புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

எண்ணை - 6 டேபிள் ஸ்பூன்

நெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க

பெருங்காயம் - 1 துண்டு

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன்

தனியா - 6 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10 முதல் 15

மிளகு - 2 டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

துருவிய தேங்காய் - அரை கப்

தாளிக்க

கடுகு - 4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

நிலக்கடலை - 4 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பு, மைசூர் பருப்பை தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயில் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரையுங்கள். புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரையுங்கள். பூசணி, பரங்கி, கத்திரி, வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து, வடிகட்டுங்கள்.

புளிக் கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரி துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.

நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதித்ததும் இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளியுங்கள். இதில் சாம்பார் பொடி சேர்க்கக் கூடாது. விருப்பப்பட்டால் சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். காரம் அதிகம் விரும்புபவர்கள் மிளகாய் வற்றலை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதில் சேர்ப்பதில்லை. மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக் குழம்பு தயார்.

நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாக இருக்கும். மீதியான குழம்பில் மறுநாள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கிச் சேர்த்து கொதிக்கவிட்டுச் சாப்பிட மிக சுவையாக இருக்கும். இதனை எரித்த குழம்பு என்றும் சொல்வதுண்டு.

இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8092112.ece

Link to comment
Share on other sites

சர்க்கரை பொங்கல்

1937061_474761776045815_8772963954198294

 

தேவையானவை:
புதிய பச்சரிசி-200 கிராம்
தண்ணீர் - 3 டம்ளர்
வெல்லம்- 200 கிராம்
தேங்காய்த்துருவல்- கால் கப்
முந்திரிப்பருப்பு, திரட்சை- தலா 10
நெய்- 4 டீஸ்பூன்
ஏலக்காய்-1

செய்முறை:
பச்சரிசியை முதல்முறை நன்றாகக் கழுவவும். இரண்டாவது முறை கழுவும் தண்ணீரில், அரிசி வேக வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை வடிகட்டி, பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கிவரும் போது, அரிசியைச் சேர்த்து தீயைக் குறைத்து வேக விடவும். அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, திரட்சை , ஏலக்காய் மற்றும் தேங்காய்த்துருவலை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:
வெல்லத்தில் கல், மண் இருந்தால் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரிசியோடு சேர்க்கவும். பொங்கல் அதிக தண்ணீரை இழுக்கும் என்பதால், கவலை வேண்டாம்.

 

பொங்கல் சாதம்

12401960_474761326045860_409206857795458

தேவையானவை:
பச்சரிசி- 200 கிராம்
தண்ணீர்- 4 டம்ளர்

செய்முறை:
பச்சரிசியை ஒரு முறை கழுவவும். இரண்டாவது முறை கழுவும்போது கொடுக்கப்பட்ட 4 டம்ளர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அரிசியில் ஊற்றி கழுவவும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வடிகட்டி பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கி வரும்போது தீயைக் குறைத்து அரிசியைச் சேர்த்து வேக விடவும். அரிசி வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு- தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டியால் சிறிது தண்ணீரை எடுத்துவிடவும். தேவையென்றால் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • 11 months later...

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

கல்கண்டு - 400 கிராம்
பச்சரிசி - 500 கிராம்
பால் - 1 லிட்டர்
முந்திரி - 10௦
திராட்சை - 10௦
நெய் - 200 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை :

* கல்கண்டை பொடித்து கொள்ளவும்.

* பச்சரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

* பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவும்.

* இடையிடையே நெய்யை சேர்க்கவும்.

* பிறகு அதில் பொடித்த கல்கண்டை சேர்க்கவும்.

* கல்கண்டு கரைந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் ஊற்றி நன்கு கலந்து இறக்கி 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

* சூப்பரான கல்கண்டு பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

சத்தான சுவையான காய்கறி பொங்கல்

பொங்கலில் காய்கறிகளை சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இன்று சுவையான காய்கறி பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சத்தான சுவையான காய்கறி பொங்கல்
 
தேவையான பொருட்கள்  :

பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
காய்கறி (பொடியாக நறுக்கியது) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப

தாளிக்க :

மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :

* அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.

* வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்த பின் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கிய பின் காய்கறிக்கலவையைச் சேருங்கள்.

*. அடுத்து அதில் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். 2 நிமிடம் வதக்கி காய்கள் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.

* கமகம காய்கறிப்பொங்கல் தயார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்

பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க....

 
பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் - 1 கப்
பச்சரிசி - 1 கப்
பால் - 3 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - அரை கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
உலர் திராட்சை - 1 தேவைக்கு
பாதாம் - 10 (விருப்பப்பட்டால்)
பிஸ்தா - 10 டீஸ்பூன்(விருப்பப்பட்டால்)

செய்முறை :

* அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

* அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

* மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

* பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

* பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

* மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

* அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

* அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

* எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

* முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறவும்.

* பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.

* சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

குறிப்பு  :

* கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

* நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

சர்க்கரை நோயாளிகள் இந்த கோதுமை ரவை பொங்கலை சாப்பிடலாம். பொங்கலுக்கு சூப்பரான கோதுமை ரவை இனிப்பு பொங்கலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - ஒன்றரை கப்
நெய் - கால் கப்
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்  

செய்முறை :

* வாணலியில் கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

* வறுத்த ரவை, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* குக்கரை திறந்து, வெந்த ரவை மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வடிகட்டிய வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும். இடை இடையே சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

* கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும்.

* ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

* சூப்பரான கோதுமை ரவா இனிப்பு பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்

பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான்.

 
 
 
 
பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்
 
தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1  
கத்திரிக்காய் - 3
மாங்காய் - 1
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
அவரைக்காய் - 3
பீன்ஸ் - 2  
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
துவரம் பருப்பு - 200 கிராம்
புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
குழம்பு மிளகாய் தூள்/சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் அரைத்த விழுது - கால் கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :

* காய்கறிகள், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை சமமான அளவில் வெட்டிக்கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனவுடன் பருப்பை கடைந்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

* குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அதில் புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும்.

* இப்போது சுவையான பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் ரெடி!!!

http://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2017/01/13105411/1061922/pongal-special-kadamba-sambar.vpf

Link to comment
Share on other sites

மில்லெட் ஸ்வீட் பொங்கல்

தேவையானவை:

 குதிரைவாலி அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 தூளாக்கிய வெல்லம் - அரை கப் (தலை தட்டியது)
 நெய் - தேவையான அளவு
 ஏலக்காய் - 1
 கிராம்பு - 1
 முந்திரி - 6

p9a.jpg

செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துகொள்ளவும். பிறகு, கழுவிய குதிரைவாலி அரிசியை, பருப்போடுச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில் வரை வேகவிடவும்.

அரிசி நன்கு வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலக்கவும். ஒருவேளை வெல்லத்தில் கற்கள் இருப்பதாக தோன்றினால் கரையவிட்டு வடிகட்டி, வெந்த அரிசி-பருப்பு கலவையில் சேர்க்கலாம்.

நெய்யில் முந்திரி, ஏலக்காய், கிராம்பைச் சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும். சிறிது நெய், ஏலக்காய்த்தூளை பொங்கலில் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

 

சாமை பொங்கல்

தேவையானவை:

 சாமை அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 இஞ்சி - அரை இஞ்ச் நீளமுள்ளது
(தட்டி வைக்கவும்)
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 தண்ணீர் - 2 கப்

தாளிக்க:
 நெய் - 2 டீஸ்பூன்
 மிளகு - 1 டீஸ்பூன்
 சீரகம் - முக்கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

p9b.jpg

செய்முறை:

அடுப்பில் சிறிய குக்கரை வைத்து நெய் விட்டு உருகியதும் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாக உடைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, கழுவிய சாமையைச் சேர்த்து கிளறவும். இத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு சூடானதும் குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். பிரஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து கலவையை மசித்துவிட்டு இறக்கி பரிமாறவும்.

 

வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 பால் - முக்கால் கப்
 தண்ணீர் - இரண்டரை அல்லது 3 கப்
 உப்பு - ஒரு சிட்டிகை

p9c.jpg

செய்முறை:

பால் மற்றும் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும். அரிசியைக் கழுவி பாலோடு சேர்த்து வேகவிடவும். தீயை மிதமாக்கவும். அரிசி நன்கு மிருதுவாக வெந்ததும், கரண்டியால் நன்கு மசித்துவிடவும். இந்தப் பதத்தில் உப்பைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். பிறகு பரிமாறினால் சுவை அள்ளும்.

 

 

கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்

தேவையானவை:

கோதுமை ரவை - அரை கப்
 வெல்லம் - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
 தண்ணீர் - ஒன்றரை கப் + கால் கப்
 நெய் - 2 டீஸ்பூன் + சிறிது
 முந்திரி - சிறிதளவு

p9h.jpg

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை நிறம் மாற வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே பாத்திரத்தில் ரவையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு, அதே பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, வறுத்த ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து மூடிப்போட்டு மிதமான தீயில் வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கப் தண்ணீர், வெல்லம் சேர்த்து கரையவிட்டு, அப்படியே வெந்து கொண்டிருக்கும் ரவை கலவையில் கலக்கவும். வெல்லக்கரைசலை ரவை உறிஞ்சியதும், 1 டீஸ்பூன் நெய் விட்டு கலக்கவும். பொங்கலில் இருந்து நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் கலந்து கிளறி இறக்கி பரிமாறவும்.

 

 

Link to comment
Share on other sites

  • 11 months later...

இது ஃப்யூஷன் பொங்கல்!

அகிலா விமல்

 

9p1_1514531030.jpg

பொங்கல் என்றால் பண்டிகை... பொங்கல் என்றால்   இனிக்கும் சர்க்கரைப் பொங்கல்... பொங்கல் என்றால் நெய் சொட்டும் வெண் பொங்கல், பால் பொங்கல்... இவ்வளவுதான் நினைவுக்கு வருகிறதா?

இனி... ஸ்வீட் கார்ன், வரகரசி, மஷ்ரூம், சாக்லேட், பைனாப்பிள், பனீர், பீட்ரூட் போன்றவற்றோடும் பொங்கல் ருசிக்கும்; மணக்கும். இப்படி வித விதமான ஃப்யூஷன் பொங்கல் ரெசிப்பிகளை வீட்டிலேயே செய்யும் வகையில் அழகிய படங்களுடன் வழங்கியிருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் அகிலா விமல்.

9p2_1514531055.jpg

கேக் பிரியர்களுக்குப் பிடித்த ரெட் வெல்வெட் டைப்பிலும் உண்டு ஒரு சிறப்புப் பொங்கல்.  இசையில் மட்டுமல்ல... உணவிலும் இனி ஃப்யூஷன் கொண்டாட்டம்தான்!

9p3_1514531463.jpg

ஸ்வீட் கார்ன் - வரகரிசி மசாலா பொங்கல்

தேவையானவை:

 வரகரிசி - ஒரு கப்
 பாசிப்பருப்பு - கால் கப்
 ஸ்வீட் கார்ன் முத்துகள் - முக்கால் கப்
 வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்  - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடியளவு
 தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு வரகரிசி, பாசிப்பருப்பைச் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர், ஸ்வீட் கார்ன், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பாதியளவு வெந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடிப் போட்டு மிதமான தீயில் மீண்டும் வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு, நெய் சேர்த்துக் கிளறி, சூடாக வெள்ளரி அல்லது வெங்காயத் தயிர் பச்சடியோடு பரிமாறவும். சுவையான இந்தப் பொங்கலைச் சாமை அரிசியிலும் செய்யலாம்!


9p4_1514531477.jpg

மஷ்ரூம் அண்டு ரோஸ்ட் வெஜ் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 வெஜ் ஸ்டாக் - 2 கப்
 தண்ணீர் - 2 கப்
 பொடியாக நறுக்கிய பட்டன் மஷ்ரூம் - 2 கப்
 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு -  4 பல் (பொடியாக நறுக்கவும்)
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கேரட் -  ஒன்று (வட்டமாக நறுக்கவும்)
 குடமிளகாய் (மஞ்சள், சிவப்பு) - தலா ஒன்று (சதுரத் துண்டுகளாக்கவும்)
 கடைந்த பாலேடு அல்லது ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் வெண்ணெய், 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு காயவைத்து வெங்காயம், பூண்டு, மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெஜ் ஸ்டாக், தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அரிசி சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வேகவிட்டு இறக்கவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கேரட், குடமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெந்த பொங்கலுடன் வதக்கிய காய்கறிகள்,  கடைந்த பாலேடு,  மிளகுத்தூள் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும். புளிப்பு சுவை வேண்டுமானால் ஒரு டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.


9p5_1514531495.jpg

வொயிட் சாக்லேட் அண்டு மிக்ஸ்டு பெர்ரீஸ் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தண்ணீர், பால் - தலா ஒன்றரை கப்
 சர்க்கரை - அரை கப்
 குக்கிங் வொயிட் சாக்லேட் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
 உலர்ந்த பெர்ரி பழங்கள் - ஒரு கைப்பிடியளவு
 சாக்லேட் துருவல் (அலங்கரிக்க) - சிறிதளவு
 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

சிறிதளவு பெர்ரி பழங்களைத் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கி அரிசியைச் சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் பால், தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். பிறகு சர்க்கரை, உப்பு, பெர்ரி பழங்கள், நறுக்கிய சாக்லேட் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மேலே வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும். அதன் மேலே சிறிதளவு பெர்ரீஸ்,  சாக்லேட் துருவல் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

பெர்ரி பழங்களுக்குப் பதிலாகப் பேரீச்சை, உலர்திராட்சை, விருப்பமான நட்ஸ் சேர்க்கலாம்.


9p6_1514531521.jpg

ட்ராபிக்கல் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - 2/3 கப்
 பால் - 2 கப்
 தண்ணீர் - 2 கப்
 க்ரீமி தேங்காய்ப்பால் - ஒரு கப்
 பைனாப்பிள் துண்டுகள் - கால் கப்
 கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
 சர்க்கரை – அரை கப்

அலங்கரிக்க:

 வறுத்த தேங்காய்த் துருவல், செர்ரி – சிறிதளவு 

செய்முறை:

குக்கரில் பச்சரிசியுடன் பால், தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு நன்கு மசிக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால், சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், பைனாப்பிள் துண்டுகள் சேர்த்துச் சூடாக்கி கலவைக் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். மேலே தேங்காய்த்துருவல் தூவி, செர்ரி பழங்களைப் பதித்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

ஒரு கப் சூடான பாலில் அரை கப் தேங்காய்த் துருவல் சேர்த்து, கால் மணி நேரம் ஊறவைத்து அரைத்துப் பால் எடுத்தால் ஃக்ரீமி தேங்காய்ப் பால் ரெடி. பைனாப்பிள் துண்டுகள் லேசாகப் புளிப்பு அல்லது கசப்புச் சுவையில் இருந்தால், சிறிது நேரம் சர்க்கரை தண்ணீரில் ஊறவைத்து உபயோகிக்கலாம்.


9p7_1514531539.jpg

பெஸ்டோ - பனீர் பொங்கல்

தேவையானவை - பொங்கல் செய்ய:

 பச்சரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 1/8 கப்
 வெஜிடபிள் ஸ்டாக் (அ) தண்ணீர் - 4 கப்
 பனீர் - 100 கிராம் (சிறிய துண்டுகளாக்கவும்)

பெஸ்டோ செய்ய:

 கொத்தமல்லித்தழை - 2 கப்
 முந்திரி குருணை - அரை கப்
 எண்ணெய் – கால் கப்
 பச்சை மிளகாய் - ஒன்று (நடுத்தர அளவு)
 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் -  அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியுடன் பருப்பு சேர்த்துக் கழுவவும். அதனுடன் வெஜ் ஸ்டாக் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு பனீர் துண்டுகளை அடுக்கி இருபுறமும்  டோஸ்ட் செய்து எடுக்கவும். வெறும் வாணலியில் முந்திரி குருணையைச் சேர்த்து வறுத்து எடுத்து, பெஸ்டோ செய்ய கொடுத்துள்ள மற்ற பொருள்களுடன் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வெந்த பொங்கலுடன் பனீர் துண்டுகள், அரைத்த விழுது சேர்த்துச் சூடாக்கி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.


9p8_1514531557.jpg

ரெட் வெல்வெட் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - முக்கால் கப்
 வெங்காயம் -  ஒன்று (மெல்லியதாக நறுக்கவும்)
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பீட்ரூட் - ஒன்று (தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்கவும்)
 பச்சை மிளகாய் – பாதி
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

அலங்கரிக்க:

 வடிகட்டிய கெட்டித்தயிர் - ஒரு கப்
 மிளகுத்தூள், பொடித்த முந்திரி - சிறிதளவு
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  - சிறிதளவு

செய்முறை:

குக்கரில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் பீட்ரூட், உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் பீட்ரூட்டைத் தனியாக எடுத்து நைஸாக அரைத்து எடுக்கவும். அதே தண்ணீரில் பச்சரிசியைச் சேர்த்து, குக்கரில் போட்டு மிதமான தீயில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

பிறகு சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவும். ஆவி அடங்கியபின் குக்கரைத் திறந்து அரைத்த பீட்ரூட் விழுது, பொடித்த முந்திரி சேர்த்து சுருள கிளறி இறக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் ஆறியதும் கெட்டித்தயிர் சேர்த்து மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை, முந்திரி தூவிப் பரிமாறவும்.


9p9_1514531574.jpg

சால்டட் கேரமல் பொங்கல்

தேவையானவை:

சால்டட் கேரமல் செய்ய:

 சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் - தலா ஒரு கப்
 வெனிலா எசென்ஸ், உப்பு - தலா அரை டீஸ்பூன்

பொங்கல் செய்ய:

 பச்சரிசி - அரை கப்
 பால், தண்ணீர் - தலா ஒரு கப்

செய்முறை:

அரிசியுடன் பால், தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சிறிது நேரத்தில்  சர்க்கரை இளகி, தேன் கலரில் வரும்.  பிறகு சிறிது சிறிதாக க்ரீமை சேர்த்துக் கிளறி, கலவை கெட்டியாக வரும்போது இறக்கவும். அதனுடன் உப்பு, வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதுவே சால்டட் கேரமல். வெந்த பொங்கலுடன் கேரமல் சேர்த்துக் கலந்து சூடாக்கி, இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். இளம் சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: பால் சர்க்கரை பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கு சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் விருப்பமான பால் சர்க்கரை பொங்கலை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.

 
 
பொங்கல் ஸ்பெஷல்: பால் சர்க்கரை பொங்கல்
 
தேவையான பொருட்கள் :
 
பச்சரிசி - 1 கப்
பால் - 4 கப்
தண்ணீர் - 4 கப்
வெல்லம் - 2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
திராட்சை - 10
 
201801091506095059_1_milkpongal._L_styvpf.jpg
 
செய்முறை :
 
வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
 
அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன், பச்சரிசியைக் களைந்து அலம்பி அதில் போடவும். அரிசியுடன் தண்ணீர் அதிகமாகவும் பாலைக் குறைவாகவும் சேர்க்கவும்.
 
அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலைச் சிறிது சிறிதாக சேர்க்கவும். அரிசி வெந்து நன்கு குழையும் வரை வேக விடவும்.
 
வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்துக் கரைந்ததும் வடிகட்டி, கொள்ளவும்.
 
அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை கரைசலை ஊற்றி தீயைக் குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போடவும்.
 
சூப்பரான பால் சர்க்கரை பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

 
அ-அ+

அவலில் பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். இன்று அவலை வைத்து எளிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
 
தேவையான பொருட்கள் :
 
அவல் - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
குங்குமப்பூ - சிறிது
பால் - 1/2 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 10
பச்சைப் பயறு - 1/4 கப்
திராட்சை - 10
 
201801121452234026_1_Aval._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
 
அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும் வரை வறுத்துக்கொள்ளவும்.
 
பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.
 
பின்பு கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும். அவல் சீக்கிரமே வெந்துவிடும். 
சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்கலில் சேர்த்துவிடவும்.
 
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் இறக்கி வடிகட்டி பொங்கலில் கொட்டிக் கிளறவும்.
 
ஏலக்காயைத் தட்டிப் போடவும்.
 
மற்றொரு வாணலில் நெய் விட்டு முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும் பரிமாறவும்.
 
அருமையான அவல் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com/

பொங்கல் ஸ்பெஷல்: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்

 
அ-அ+

கருப்பரிசி உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பொங்கல் பண்டிகைக்கு கருப்பரிசியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
பொங்கல் ஸ்பெஷல்: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்
 
தேவையான பொருட்கள் 
 
கருப்பரிசி - ஒரு கப்
உப்பு - துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)
வெல்லம் - ஒரு கப்
நெய் - தேவையான அளவு
பால் - 1/4 கப்
முந்திரி - 10
பாசிப்பருப்பு - 1/4 கப்
ஏலக்காய் - 1 
தேங்காய்ப் துருவல் - சிறிதளவு.
 
201801101512249534_1_blackricepongal._L_styvpf.jpg
 
செய்முறை
 
முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். 
 
வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
 
ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.
 
பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் நன்றாக கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.
 
நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும்.
 
பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, வெல்லம் கரைந்ததும், மண் - தூசு போக வடிகட்டிவிட்டு, பிறகு மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.
 
பிறகு தேங்காய் துருவல், பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.
 
நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் நன்றாக கிளறி இற‌க்கவும். 
 
இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.
Link to comment
Share on other sites

பொங்கல் குழம்பு

 
அ-அ+

பொங்கல் பண்டிகைக்கு ஏழு வகையான காய்கறிகளை (ஒற்றைப்படையில்) வைத்து குழம்பு செய்வது வழக்கம். இந்த குழப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
நாளைய ஸ்பெஷல் பொங்கல் குழம்பு
 
தேவையான பொருட்கள் :
 
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரிக்காய், உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்
மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) - தலா அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
மைசூர் பருப்பு - 6 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 6 தேவையான அளவு
நெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
வறுத்து அரைக்க 
 
பெருங்காயம் - 1 துண்டு
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 6 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
மிளகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்
 
தாளிக்க
 
கடுகு - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
நிலக்கடலை - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
 
201801131208159729_1_pongalkulambu._L_styvpf.jpg
 
செய்முறை :
 
துவரம் பருப்பு, மைசூர் பருப்பை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள். 
 
கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சேர்த்து சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரையுங்கள். 
 
புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொள்ளவும். 
 
பூசணி, பரங்கி, கத்திரிக்காய், வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து கொள்ளவும். 
 
புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு,  மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.
 
நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து குழம்பில் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக்குழம்பு தயார்.
 
இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.
 

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலோ பொங்கல்....எல்லா ஆயிட்டங்களும் அருமை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.