Jump to content

எலக்ட்ரானிக் சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்!


Recommended Posts

எலக்ட்ரானிக் சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

 

Electronic%20cigarette%20smartphone300.jநியூயார்க்: எலக்ட்ரானிக் சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.

ஜூபிடர் ஐ.ஓ. 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளிவரகிறது. இந்த போனில் எலக்ட்ரானிக் சிகரெட்டை பொருத்துவதற்கு தனியாக ஜேக் உள்ளது. இரண்டு பேட்டரிகளை கொண்ட இந்த போனில் ஒரு பேட்டரி போனிற்காகவும், மற்றொரு பேட்டரி எலக்ட்ரானிக் சிகரெட்டிற்காகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

எலக்ட்ரானிக் சிகரெட்டுக்காக காபி, புதினா, சாக்லெட் என பல ருசிகளில் தனியாக திரவ கேட்ரிஜ்ஜுக்களும் உள்ளன. இந்த கேட்ரிஜைக் கொண்டு 800 முறை புகைப்பிடிக்க முடியும்.

மேலும், புகை பிடிப்பதை குறைப்பதற்காக 'வேப்' என்னும் அப்ளிகேஷனும் தரப்பட்டுள்ளது. அந்த அப்ளிகேஷன் எத்தனை முறை புகை பிடித்திருக்கிறோம் என்பதை கணக்கிட்டு நமக்கு எச்சரிக்கை செய்யும்.

3ஜி இண்டர் நெட் வசதியுடன் கூடிய போன் ரூ.20 ஆயிரத்திற்கும், 4ஜி வசதியுடன் கூடிய போன் ரூ.33 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே, இந்த எலக்ட்ரானிக் சிகரெட்டால் கதிர்வீச்சு பாதிப்புளை உண்டாக்குமா என்பது குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனுக்கு அமெரிக்க மத்திய தகவல்தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

http://www.vikatan.com/news/information-technology/57542-electronic-cigarette-with-smartphone.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.