Jump to content

அதிசயக்குழந்தை


Recommended Posts

அதிசய குழந்தை அவன் ...
ஆசான் நான் ...
என்னைவிட அவனே முன்னுக்கு " அ "
நான் "ஆ "

இந்த குழந்தை இப்படியெல்லாம் ....
பேசுமா....?  சிந்திக்குமா ...?
நம்ப முடியவில்லை என்போர் ...
இந்த கவிதையை மூடிவிட்டு 
போகலாம் ....!!!

இந்த குழந்தை என்னதான் 
சொல்லப்போகிறது என்பதை ...
பார்க்க விரும்புவோர் ....
பொறுமையோடு காத்திருந்து ....
தொடராக வரும் வசனக்கவிதையை ....
பாருங்கள் .....!!!

அதிசயக்குழந்தை ....
எப்படி இருப்பான் ...?

ஆசான் நேரான சிந்தனையில் ...
பேசினால் அவன் எதிர் சிந்தனையில் 
பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில் 
பேசினால் அவன் நேர் நித்தனையில் ...
பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!!

ஆன்மீகம் பேசுவான் 
அரசியில் பேசுவான் 
இல்லறம் பேசுவான் 
எல்லாமே பேசுவான் 

இலக்கண தமிழில் உரைப்பான் 
இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும் 
பேசுவான் ....
கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ...
இனிப்பான பொய்களையும் சொல்வான் ...
மொத்தத்தில் அதிசய குழந்தை 
இடையிடையே அதிர்ச்சியை ....
தருவான் என்பது மட்டும் உண்மை ....!!!

^
அதிசயக்குழந்தை 
   வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

அதிசயக்குழந்தை - பூதம் 
-------
ஒட்டு துணிகூட இல்லாமல் ...
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ....
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ....
விளையாடிகொண்டிருந்தான் ....
அதிசயக்குழந்தை .......

டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ...
எதற்கு என்று கேட்டான் அவன் ....!!!

மண்ணுக்குள் விளையாடுகிறாயே ....
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ...
என்றேன் ....

நீங்க மட்டும் அழுகில்லையோ...?
என்றான் அவன் - மேலும் சொன்னான் ....

ஆசானுக்கு  நான் சொல்வதா ...?
ஊழ்வினை உடம்பே அழுக்குதான் ....
பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!!

மனத்தின் அழுக்கை நீக்க 
கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் ....
உடலின் அழுக்கை நீக்கவும் ...
தண்ணீரால் கழுவுகிறீர்கள் ....
கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க ..
உள்ளத்தை துளைக்கும்  சொல்லை ...
காற்றோடு கலக்கிறீங்க ....
உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ...
அசுத்தமாக்கும் போது 
நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும் 
உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....?

என்றான் - அதியக்குழந்தை.....!!!

போதும் போதும் உன் வியாக்கியானம் ..
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ...
அதட்டினேன் .....

விழுந்து விழுத்து சிரித்தான் ....

ஏனடா சிரிகிறாய்....?

இயலாமையின் இறுதி கருவியே ....
அதிகாரம் என்றான் ...!

திகைத்து நின்றேன் ....!!!

தன் பகுத்தறிவால் விடைதராமல் ....
பட்ட தடியை தூக்கி நியாயம் தேடும் ...
ஆசானே - உம்மில் குற்றமில்லை ....
" ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது "
என்பதுபோல் உங்கள் புத்தக படிப்பு 
எனக்கு சரிவராது என்றான் 

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - உணவு 
-----
சாப்பிடாயா என்று கேட்டேன் ....
சாப்பிடேன் என்றான் .....
அதிசய குழ்ந்தை  .......!!!

என்ன சாப்பிட்டாய் ....?

என்ன சாப்பிடாய் என்று கேட்காமல் ....
எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள் ...
என்று சொன்னான் .....!!!

எப்படி சாப்பிட்டாய் ....?

அடித்து பறித்து சாப்பிட்டேன் ....

நீ அத்தனை கொடூரமானவனா ...?

நான் மட்டுமல்ல நீங்களும் ....
அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் .....!!!

தன் இனத்தை பெருக்க வந்தத ....
தன் உணர்வை வெளிப்படுத்த வந்த ....
அத்தனை உயிரினத்தையும் ....
நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை ....
பறித்துதானே - சாப்பிடுகிறோம் .....!!!

மாங்காய் தேங்காய் என்று ....
அவை முதுமை அடைய முன்னரே ....
அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம் .....

குடியோடு குடித்தனமாய் தூங்கும் ...
ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே ....
கண்ணி வைத்து கொலை செய்து ....
சாப்பிடுகிறோம் ......

கூட்டம் கூட்டமாய் பார்க்கும் ....
பறவைகள் - சாரை சாரையாய் ...
அலைந்து திரியும் மீன்கள் ....
அத்தனைக்கும் வலைபோட்டு ....
வாழ்வுரிமையை  சாப்பிடுகிறோம் ....!!!

எல்லாமே இறைவன் எமக்கே ....
படைத்தவன் என்று இறைவனை ....
பிணையாக வைத்து அத்தனையின் ....
வாழ்வுரிமையைசாப்பிடுகிறோம் ....!!!

கேட்டால் அதுதான் உணவுசங்கிலி ....
என்று ஒரு கோட்பாட்டையும் 
வைத்திருக்கிறோம் - சொல்லுங்கள் ....!!!

ஆசானே ....!!!!

சமைத்து சாப்பிட்டோமா ....?
சண்டையிட்டு - மனசமரசத்துடன் 
சாப்பிட்டோமா ....?

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - உறக்கம் 
--------
ஏய் 
குழந்தாய் நேரமாகி விட்டது
உறங்கவில்லையா ....?

உறக்கம் என்றால் என்ன ....?
நானே சொல்கிறேன் ஆசானே ....!!!

மூளை ஓய்வெடுப்பது உறக்கம் ....
மூளை செயல் இழப்பது மரணம் ....
கண்ணை மூடுவது உறக்கமில்லை....
கண் மூடுவது என்பது சாதாரண ...
விடயமும் இல்லை மிக கடின வேலை....!!!

அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் ...?

வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் ...
கடினமில்லை .இரண்டு இமையும் 
இணைத்தால் போது அது கண் மூடல் ...
என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் ....
தவறு கண்மூடினால் ஒன்றுமே ....
தெரியாமல் இருப்பது மட்டுமல்ல ....
ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே ....
உண்மை கண் மூடல் .....!!!

புருவத்தின் மத்தியில் நினைவை 
கொண்டுவந்து கண்மூடி உள்ளே ...
பாருங்கள் உங்களை நீங்கள் ....
அறிவீர்கள் உங்களின் அத்துணை ...
குணமும் படமாய் ஓடும் .....
என்று அந்த படமெல்லாம் ஓடி ...
கலைத்து வெறும் திரை கண் முன் ...
வருகிறதோ அன்றே நீங்கள் ....
உண்மையான கண் மூடல் 
அனுபவத்தை பெற்றுள்ளீர்கள் ....

வாழ்நாளில் என்றொ ஒரு நாள் ...
இப்படி கண்மூடிபாருங்கள் ....
சொர்க்கம் தெரியும் என்றான் ......!!!  

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 04

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - பெயர் 
---
ஏய் குழந்தாய்....
உன் பெயரென்ன ....?

அதிசயகுழந்தை....!!!

இது ஒரு பெயரா ...?

அப்போ சொல்லுங்கள் ...
ஆசானே..... 
பெயர் என்றால் என்ன ...?

நீ தான் 
வியாக்கியான வித்தகன்- சொல் ...!!!

அஃறிணையில் பிறந்த மனிதனை ...
" உயர்திணை" யாக்குவது  ...
தான் பெயர் என்றான் ....!!!

புரியவில்லை என்றேன்....

விளக்கினான் இப்படி .....

நாய் ஓடியது (அஃறிணை)
பறவை பறக்கிறது (அஃறிணை)
கண்ணன் ஓடினான் (உயர்திணை)

இப்போது புரிகிறதா என்றான் ....?

புரிகிறது ஆனால் புரியல்ல ....

மேலும் சொன்னான் .....

மனிதன் பிறக்கும் போதும் ....
இறந்தபின்னும் அஃறிணை....!!!

இதோ என் விளக்கம் ....

குழந்தை அழுகிறது  (அஃறிணை)
பிணம் எரிகிறது  (அஃறிணை)
கண்ணன் அழுகிறான் ( உயர் திணை )

இப்போ பாருங்கள் ஆசானே ....
அஃறிணை பிறந்த மனிதன் ....
அஃறிணை இறக்கிறான் ....
இந்த இடைப்பட்ட காலத்தில் ....
மனிதனை உயர்திணையாக்கும்....
ஒரு மொழிக்கருவியே - பெயர் ....!!!

என்று மனிதனுக்கு பெயர் ....
சூட்ட படுகிறதோ -அன்றே அவன் ....
உயர் திணையில்.... 

அழைக்கப்படுகிறான் ....!!!
மனிதனின் வாழ்க்கை காலத்தை ....
உயர் தினையாக்குவதே -பெயர் ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 05
 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - கை
----
கை தட்டி ஆரவாரமாக ....
இருந்தான் அதிசயக்குழந்தை.....
என்ன அத்துணை மகிழ்ச்சியோ ....?
ஆசான் அதிகாரத்தில் கேட்டேன் ....!!!

எனக்கு ....
கை கூப்புவது பிடிக்காது .......
கை தட்டுவதே பிடிக்கும் என்றான் ....
கை தட்டி பாருங்கள் -ஓசை மட்டும் ....
வருவதில்லை .ஓயஷ்சும் (காந்த சக்தி )
கிடைக்கும் என்றான் .....!!!

எல்லா மனித நரம்புகளும் ....
கையுடன் தொடர்புபடும் ....
கை தட்டினால் அனைத்து ....
மன அழுத்தமும் பறந்துவிடும் ....
தனித்து நின்று கை தட்டினால் ....
பித்தன் என்கிறார்கள் .....
கூட்டத்தோடு தட்டினால் ...
" பிரார்த்தனை" என்கிறார்கள் ....!!!

இன்னும் ஒன்றை கேளுங்கள்   .....!!!

கைகளை கொண்டு ....
போராடுங்கள் என்றது 
மாக்சிஷம்....!
கைகளை ஆயுதமாக்கியது .....
பாசிஷம்.......!
இருகோட்பாடும் தோற்றுவிட்டது... 
முதலாளிதுவத்திடம் .....!!!
இங்கு அலங்கார ஆடையுடன் ....
கை கூப்பியவன் ,கை குலுக்கியவன் ....
உலகினிலே நிமிர்த்து நிற்கிறான்  .....
எனக்கு கை கூப்பும் கொள்கை ....
பிடிக்காது ..............!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 06

   

 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - வீடு 
------
எப்போதுமே ....
தெருகில் நிற்கிறாயே ....
உனக்கு வீடே இல்லையா ...?
குழந்தாய் ...?

எனக்கு சிறையில் ...
இருப்பது பிடிக்காது ...
என்றான் சட்டென்று ...!!!

வீட்டையேன் ...
சிறை என்கிறாய் ...?
அது பாதுகாப்பான ...
இடமல்லவா ....?
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் இருந்து ....
பாதுகாக்கிறதே.....
அது எப்படி சிறை ....?

ஆசானே ....
வாழ்நாள் முழுதும் ...
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் பேராடி ...
வாழும் மிருகத்துக்கு ...
எங்கே வீடு ....?

குழந்தாய் ....
அவை இவற்றிலிருந்து ....
வாழ்வதற்கான திறனில் ...
படைக்கப்பட்டுள்ளன ....
அவற்றுக்கு வீடு ......
தேவையில்லை ...!!!

அப்போ பலவீனமாக ....
படைக்கப்பட்ட மனிதனுக்கே ...
வீடு தேவைப்படுகிறது ....
அப்படிதானே ஆசானே ...?
பலவீனமாய் படைக்கபட்ட ...
மனிதனே இயற்கையை ....
அழித்தும் வாழ்கிறான் ....
எல்லா விடயத்திலும் ...
இருந்து வெளியில் வாருங்கள் ....
ஆசானே சுதந்திரமாய் ....
வாழ்வோம் .....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 07
 

 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை -எழுத்து 
----------------
அழகான வர்ணம் பூசிய .....
ஒரு வீட்டின் வெளிப்புற ....
சுவரில் அதியக்குழந்தை....
கிறுக்கி விளையாடி....
கொண்டிருந்தான்.......!!!

டேய் 
சுவரை அசிங்க படுத்தாதே....
என்று கொஞ்சம் கோபத்தோடு ...
ஆசான் என்ற போர்வையில் ....
அவனை அதட்டினேன் ....!!!

சிரித்த படியே .....
சொன்னான் - ஆசானே ....
நீங்கள் தானே சுவர் இருந்தால் .....
சித்திரம் வரையலாம் என்றீர்கள் ....
நான் அதைதானே செய்கிறேன் ...!!!

குழந்தாய் ...
அந்த சுவர் என்றது ....
உடம்பை குறிக்குமடா....
ஆரோக்கியம் இருந்தாலே ....
சாதிக்கலாம் என்பதாகும் .....!!!

ஆசானே ....
உடம்பும் ஒரு கலவைதானே ....
அது இருக்கட்டும் ஆசானே ....

உணர்வுகளின் ஓசை மொழி ....
ஓசையின் பரிமாணம் பாஷை....
பாசையின் அலங்காக வடிவம் ....
எழுத்து - எழுத்தின் " கரு"  கிறுக்கல் ...
அதேயே  செய்தேன் ஆசானே ....
கிறுக்கியது தவறு இல்லை ....
உங்களுக்கு புதிய சுவர் ...
என்பதுதானே கவலை ....
மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 08

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிசயக் குழந்தை மொழியில் அழகிய எழுத்துகள்! வாழ்த்துகள்!

 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - எண்ணம்
------------
எண்ணும் எழுத்தும் ....
கண்ணெனத்தகும் ....!!!

அதிசய குழந்தை 
வாய்க்குள் உச்சரித்து ...
கொண்டிருந்தான் ...!!!

என்னடா 
புது பழமொழியோ ...?

இல்லை ஆசானே ....
எதுவுமே புதியது இல்லை ....
எல்லாமே முன்னோர் சொன்ன ....
பொதுமை மொழிகள் ....
அதிலிருந்தே இனிமேல் ...
எல்லோரும் எடுக்க வேண்டும் ....
இது எனது இது நான் சொன்னது ....
என்று யாரும் உரிமை ....
கொண்டாடுவதில் பயனில்லை ...!!!

எண்ணமே ஒருவனின் உருவம் ....
எண்ணமே ஒருவனின் வாழ்க்கை....
எண்ணமே ஒருவனின்முடிவும் ....

அடுத்து சொன்னான் குழந்தை ......

சொர்க்கமும் நகரமும் ....
ஒருவனுடைய எண்ணமே .....
துயில் எழும்பும் போது ....
நல்ல சிந்தனையுடன் எழுபவன் ....
அன்று முழுதும் சொர்க்கத்தில் ....
வாழ்கிறான் ......!!!

நேற்றைய பகையை ...
முன்னைய இழப்பை ....
பொறாமையை துயில் ....
எழும்போது நினைப்பவன்
அன்று முழுதும் நரகத்தில் ....
வாழ்கிறான் ......!!!

குப்பத்தில் இருப்பவனை ...
கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ...
இருப்பவனை குப்பத்துக்கும் ....
மாற்றுவது தலையெழுத்தல்ல ....
அவரவர் எண்ணமே எண்ணமே....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 09

On 2/10/2016 at 7:49 PM, seyon yazhvaendhan said:

அதிசயக் குழந்தை மொழியில் அழகிய எழுத்துகள்! வாழ்த்துகள்!

 

மிக்க நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை -வறுமை 
*******
வீதியில் 
நின்ற வறிய வயோதிபர்....
வீதியில் வந்த பணக்காரனை .... 
உதவி கேட்டார் - அவர் பணம் ....
கொடுக்கவில்லை - கோபமடைந்த ...
வயோதிபர் வாய்க்கு வந்தபடி ....
திட்டினார் ....!!!

இதை 
அவதானித்த அதிசய குழந்தை .....
வயோதிபரிடம் என்ன தாத்தா ...
என்று ஆரம்பித்ததும் ....
அவர் மேலும் திட்டினார் .........!!!

பணம் 
படைத்தவர்கள் தீயவர்கள் .....
கயவர்கள் கள்வர் இரக்கம்...
அற்றவர்கள் நயவஞ்சகர்கள் ....
திட்டிக்கொண்டே போனார் ....
நிலை குலைந்த தாத்தாவுடன் ....
பேசி பயனில்லை என்றறிந்த ....
அதிசயக்குழந்தை விலகியது .....!!!

என்ன குழந்தாய் அதிகம் ...
ஜோசிக்கிறாய் என்று கேட்டேன்....?

ஆசானே .....
வறுமை என்பது ஒரு நோய் .....
நோய்க்கு நாம் மருந்தெடுத்து ....
மாற்றுகிறோமோ அதுபோல் ...
வறுமையையும் நாம் மாற்றலாம் ....
வறுமையோடு வாழ்பவன் நோயோடு ....
இறந்து விடக்கூடாது என்கிறேன் ....!!!

வறுமைக்கு காரணம் பணம் ....
படைத்தவர்கள் மோசமானவர்கள் ...
என்ற மன விரக்தியும் தாமும் ....
பணம் படித்தால் அவ்வாறே மாறி ....
விடுவோம் என்ற மனப்பயமுமே ....
ஒருவன் மீது வறுமை தொடரகாரணம் ....
வறுமையை நீக்கணும் என்றால் ....
பணம் படைத்தவரை மதிக்கணும் .....
அவன் எப்படி பணத்தை தேடினான் ...
என்று சிந்திக்கணும் இதை விட்டு ....
அவனில் குறைகாணும் மனிதர் ....
யாரும் பணம் படைத்தவனாக ....
வரவே முடியாது என்று ஒரு நீண்ட ...
கருத்தை சொன்னான் அதிசய குழந்தை ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 10

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
On 2/19/2016 at 0:53 PM, seyon yazhvaendhan said:

உண்மை உரைக்கும் சிந்தனை.

 

நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - முதுமை 
----------
பக்கத்து வீட்டில் தாத்தா ....
பேரனை திட்டியபடி இருந்தார் ....
தனது அனுபவத்தையெல்லாம் ....
அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் .....
பேரனோ காதில் விழுத்தாமல் ....
எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ...
கோபமடைந்த தாத்தா அடிக்க கை ....
ஓங்கினார்................................................. 
அப்போது அதிசய குழந்தை ....!!!

தாத்தா 
நிறுத்துங்க...  நிறுத்துங்க ....
உங்களுக்கு அறிவுரை செய்ய ...
நான் பெரும் அறிவானவன் இல்லை ...
என்றாலும் கூறதொடங்கினான்.....!!!

முதுமையில் எல்லோரும் -தம் ....
அனுபவத்தை அறிவாக நினைத்து ....
அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ...
அனுபவம் வேறு அறிவு வேறு .....!
உங்களது அனுபவம் மற்றவனுக்கு ....
தேவைப்படாது ,பொருத்தமற்றது ....
முதுமையில் அதை நீங்கள் பிறர் ....
மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!!

வயது கூடியவர்கள் அறிவாளிகள் ....
வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் ....
நாங்களே அனுபவசாலிகள் ...
உங்களுக்கு அனுபவம் போதாது ....
என்றெல்லாம் முதியோர் நினைப்பது ....
தப்பு தாத்தா தப்பு .....!!!

முதுமையின் ஒத்தகருத்து பொறுமை .....
தேவையற்றவற்றில்  தலையிடாமல் .....
தேவையானவற்றில் தலையிட்டு ....
எல்லோரும் எமக்கு மதிப்பு தரனும் ....
என்று நினைப்பது தப்பில்லை ....
எல்லாமே எனக்கு தான் தெரியும் ...
என்று நினைபப்து தப்பு தாத்தா ....!!!

அடிக்க கையோங்கிய தாத்தா .....
நிதானமானார் ...................................
அதிசய குழந்தையின் ....
அபாரத்தை அவர்களுக்கு தெரியாமல் ...
கேட்ட ஆசான் நானும் திகைத்தேன் ...
எனக்கும் முதுமை வயது தானே ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 11
 

Link to comment
Share on other sites

  • 1 month later...

அதிசயக்குழந்தை - ஆசை 
----------
உன் 
ஆசை என்ன என்று கேட்டேன் ...
அதிசயக்குழந்தையிடம்.....?

ஆசையில்லாமல் இருக்கவே ...
ஆசை என்றான் ஒரே வரியில் ....!!!

என்னப்பா சொல்கிறாய் ....?
ஆமா ஆசானே .....!!!

ஆசையே அனைத்து துன்பத்துக்கும் ....
மூல காரணி ......!!!
நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே ....
கோபம் ,,,,,,,,,,,,!!!
கோபத்தின் வெளிப்பாடே ....
கொடூரம் ...........!!!
கோபத்தை குறையுங்கள் .....
என்பது தவறு - ஆசையை ....
குறையுங்கள் என்பதே சரியானது .....!!!

பெண் ஆசை ....
நடத்தையை கெடுக்கும் ......
மண் ஆசை .....
நாட்டை கெடுக்கும் ......
பொன் ஆசை ......
பெண்ணையே கெடுக்கும் .......!!!

ஆசையை குறைப்பது எளிதல்ல ....
ஆசையை வரிசைப்படுத்துங்கள் ....
அந்த வரிசையில் இயலுமையை ....
பாருங்கள் நிறைவேறக்கூடிய ....
அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 12

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - இறக்கம் 
-------
அதிசயக்குழந்தை .....
ஏணியில் ஏறுவதும் ....
இறங்குவதுமாய் விளையாடிக்  ...
கொண்டிருந்தான் ....!!!

அந்தவழியால் வந்த நான் ....
என்னடா செய்கிறாய் என்று ....
கேட்டேன் .....!!!

ஏறுவதும் இறங்குவதுமாய் ....
இருக்கிறேன் தெரியவில்லையா ...?
என்றான் ....?

உனக்கு 
ஏற்றம் பிடிக்குமா .....?
இறக்கம் பிடிக்குமா ....?

எனக்கு இறக்கம் தான் ...
பிடிக்கும் ஆசானே ....
ஏன்டா உனக்கு எப்போதும் ....
எதிர் மறையாகதான் பிடிக்குமா ...?

இல்லை 
ஆசானே எதிர் மறையின் ...
நன்மையை உணரமாட்டேன் ..
என்கிறீர்களே ....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் ....
தோல்விகள் இல்லை ....
வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!!

மலை 
ஏறுபவன் இறங்கினால்-தான்
மலை ஏறியதின் சாதனை ...
தெரியவரும் .....!
பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான்
நீரின் மகிமை புரியும் ....!

அப்பில் பழம் கீழே விழுந்ததால் ...
நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் ....
வானத்து நீர் கீழே விழுந்தால் தான் ....
பூமி பசுமை அடைகிறது ....!
இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் ....
வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!!

இறக்கமும் வீழ்ச்சியும் .....
இழிவானவையல்ல எல்லா ....
செயல்களிலும் புரட்சிகரமானவை ...!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்


 

Link to comment
Share on other sites

அதிசயக்குழந்தை - அநாதை 
-----

அதிசயக்குழந்தையிடம் ....
உன் அப்பா பெயர் என்ன ...?
உன் அம்மா பெயர் என்ன ...?
உனக்கு உடன் பிறப்புக்கள் ...
எத்தனை பேர் .....?

எனக்கு யாருமே இல்லையே ...
என்றான் ....!!!

அப்போ நீ அநாதையா...?
என்று கேட்டேன்....
யாருமே இல்லை என்றுதானே ...
சொன்னேன் அநாதை ...
என்று சொன்னேனா  என்றான் ...!!!

என்ன உளறுகிறாய் ....?

சொல்ல தொடங்கினான் அவன் 
கருத்தை .....................!!!!!!!!!!!!

உங்கள் ....
அம்மா அப்பா இப்போ ....
இருகிறார்களா ....?
இல்லையே ....!!!

அப்போ நீங்கள் ...

அநாதையா ....? 
இல்லையே ....!!!

உங்கள் பெற்றோர் இறந்தவுடன் ...
உங்களுக்கென ஒரு குடும்பத்தை ...
அமைத்து மனைவி குழந்தை....
மாமனார் மாமியார் என்று ஒரு ...
உறவை வளர்த்தீர்களே......
உங்களை யாரும் அநாதை ..
என்று அழைத்தார்களா ....?

உங்களின் தவறு என்ன தெரியுமா ...?
நீங்கள் பிறரை காப்பாற்றுவதாக ....
நினைப்பதும் நீங்கள் இல்லையென்றால் ...
அவர்கள் அனாதையாகிவிடுவர் ....
என்ற உங்கள் தப்பான எண்ணமே ....!!!

நான் 
ஒரு அநாதை எனக்கு உதவுங்கள் ....
என்று சொல்பவர்கள் அநாதை ...
என்ற சொல்லை தம் ஆயுதமாய் ....
எடுத்து தம்மீது எல்லோரும் இரக்கப்பட...
பயன்படுத்தும் தந்திரம் .....
உழைத்து உண்பவனுக்கும் ...
நம்பிக்கை உள்ளவனுக்கும் ....
அநாதை சொல் அருவருப்பான ....
சொல்லாகும் ஆசானே என்றான் ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 7 months later...

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு 
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி 
தனியாக பேசி இன்பம் காணாமல் 
துணையாக பேசி இன்பம் காண்போம் வா 

&
காதல் வெண்பா 
கவிப்புயல் இனியவன் 

&

வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே 
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே 
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் 
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம் 

&
காதல் வெண்பா 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

 

 

மிக அருமையான வரிகள், வார்த்தையின் வளமை அழகூட்டுகிறது கவிக்கு. எனது வாழ்த்துக்கள் கவிஞரே.

 

 

Link to comment
Share on other sites

22 hours ago, மாறன் said:

 

 

மிக அருமையான வரிகள், வார்த்தையின் வளமை அழகூட்டுகிறது கவிக்கு. எனது வாழ்த்துக்கள் கவிஞரே.

 

 

மிக்க நன்றி நன்றி

Link to comment
Share on other sites

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் 
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் 
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!! 

அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ 
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! 

சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! 

விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? 

காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! 

& 
கவி நாட்டியரசர் இனியவன் 
காதல் வெண்பா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

காதல்.......
ஆனந்த கண்ணீரில்...
ஆரம்பித்து.......
ஆறுதல் கண்ணீரில்.....
முடிகிறது..........!!!

முகில்களுக்கிடையே....
காதல் விரிசல்.......
வானத்தின் கண்ணீர்......
மழை..........................!!!

நான்
வெங்காயம் இல்லை....
என்றாலும் உன்னை.....
பார்த்தவுடன் கண்ணீர்....
வருகிறது................!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 

Link to comment
Share on other sites

கண்ணீர் .....
காதலின் வலியின்.....
திரவம் ........
தண்ணீர் தான்.....
மருந்து...........!!!

முதலை கண்ணீரை.....
நிஜக்கண்ணீரென்று....
நம்பிவிட்டேன்.........!!!

காதலில் போடும்....
முடிச்சு திருமணத்தில்....
அவிழ்க்கபடுகிறது.........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம் 02
மற்றுமொரு காதல் கஸல்

Link to comment
Share on other sites

கண்கள் .....
சந்திக்கமுன் ....
யாவரும் .....
சந்தோசமாய் ....
இருந்தோம் .......!!!

நான் 
புகையிரதம் .....
நீ தண்டவாளம் .....
அனுமதித்தால்.....
பயணம் தொடரும் ....!!!

உயிர் கூட .....
இரட்டை வேடம் ....
போடுகிறது ......
இருந்தால் உயிர் ....
மறைந்தால் சாவு .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
மெல்லிய வலி கவிதை

உயிரை வதைப்பது .....
தண்டனை குற்றம் .....
உயிரே உனக்கு .....
தெரியுமா .............?

கண் இமைக்கும் ....
கணப்பொழுதில் ....
நடக்கும் விபத்து .....
காதல் .......................!!!

காதல் ....
இல்லாத இடத்திலும் .....
இருக்கும் ......
காதல் இல்லாத .....
இடமே இல்லை ...........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
மெல்லிய வலி கவிதை

Link to comment
Share on other sites

மெல்லிய .....
வலியால் பிரசவித்ததே ......
கஸல் கவிதை ..........!!!

கவிதையை .....
ரசிக்கிறாய் என்றால் .....
நீயும் என்னைப்போல் ....
வலியை சுமக்கிறாய் .....!!!

அவள் கண்ணில் ....
இப்போ தான் பட்டாள்......
இதய சேதவிபரம் ......
இன்னும் தெரியவில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
மெல்லிய வலி கவிதை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.