Jump to content

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் முதலமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
vikki_visit_valikamam_016.jpg

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேவரன் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இன்று மாலை 4 மணியளவில் முதலமைச்சர் மேற்படி பகுதிகளை பார்வையிட்டதுடன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறீமோகனன் மற்றும் முன்னாள் வலி, வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் ஆகியோருடனும் மீள்குடியேறியுள்ள மக்களிடமும் தேவைகள் மற்றும் மேலும் மீள்குடியேற்றப்படவேண்டிய பகுதிகளின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

குறிப்பாக ஆட்சிமாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கடந்த 29ம் திகதி விடுவிக்கப்பட்ட 468 ஏக்கர் நிலப்பகுதியில் வறுத்தலை விளான், தையிட்டி, பளை வீமன்காமம் வடக்கு, தெற்கு பகுதிகளை பார்வையிட்டிருந்தார்.

இதன்போது மீள்குடியேறியுள்ள தமக்கான வீட்டு திட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மக்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை,  மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண சபைக்குரிய வீதிகள் மற்றும் காணி பிணக்குகள், வீட்டுத்திட்டம், வைத்திய வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை பெற்றுக்கொடுக்குமாறு பிரதேச செயலர் சிவமோகனன் கோரிக்கை விடுத்துள்ளார்.

vikki_visit_valikamam_002.jpg

vikki_visit_valikamam_003.jpg

vikki_visit_valikamam_004.jpg

vikki_visit_valikamam_006.jpg

vikki_visit_valikamam_007.jpg

vikki_visit_valikamam_008.jpg

vikki_visit_valikamam_009.jpg

vikki_visit_valikamam_010.jpg

vikki_visit_valikamam_011.jpg

vikki_visit_valikamam_013.jpg

vikki_visit_valikamam_014.jpg

vikki_visit_valikamam_015.jpg

இரண்டாம் இணைப்பு

விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் யாழ்.அரசாங்க அதிபர்

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தேவைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டிள்ளார்.

கடந்த 29ம் திகதி வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 468 ஏக்கர் பொதுமக்களின் நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில் மாவட்டச் செயலரின் பணிப்பிற்கமைய வீதிகள் துப்புரவு செய்யும் பணிகள், மற்றும் காணிகளை அடையாளம் காணும் பணிகள், மீள்குடியேறும் மக்களுக்கான குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இவற்றை மாவட்டச் செயலர் பார்வையிட்டுள்ளதுடன் மீள்குடியேற்றத்திற்கு வந்துள்ள மக்களின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

vethanayakan_002.jpg

vethanayakan_003.jpg

vethanayakan_004.jpg

vethanayakan_005.jpg

vethanayakan_006.jpg

vethanayakan_007.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஓசியில் நன்றாகப் பலகாரம் சுடுவார் போன்றிருக்கின்றதே!  செயல்வீரர்கள் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் முதலமைச்சர்

 

நல்லவிடயம்

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.