Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

குழந்தைகளுக்கு ஆம்லெட் செய்யும் போது துருவிய கேரட், வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கு மெலிதாக துருவிய பீட்ரூட் சேர்த்து திருப்பி போட்டு வேக வைத்து கொடுங்கள். ருசி வித்தியாசமாக இருக்கும்.

13138830_516603851861607_297303682714412

 

 

 

 

 

முட்டை பிட்சா

Pizza.jpg

வீட்டிலேயே பிட்சா செய்ய தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு முட்டை பிட்சாவை எப்படி எளிய முறையில் வீட்டி­லேயே செய்வதென்று கொடுக்கப்­பட்­டுள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.


சரி, இப்போது அந்த முட்டை பிட்சாவின் செய்முறையைப் பார்ப­்­­போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்­களுடன் பகிர்ந்து கொள்­ளுங்­கள்.

தேவை­யான பொருட்கள்:


பிட்சா பேஸ் -    – 1
எண்ணெய்     -– 1 தே.க
வெங்­காயம்     -– 1 (நறுக்­கி­யது)
தக்­காளி    – -1 (நறுக்­கி­யது)
பூண்டு -    – 2 பற்கள் (நறுக்­கி­யது)
முட்டை -         –1 (வேக வைத்­தது)
தக்­காளி கெட்சப்     –- 3 மே.க
உப்பு -             – தே.அ.
சில்லி ப்ளேக்ஸ் / மிளகாய் தூள் - 
                –1 தே.க
உலர்ந்த கற்­பூ­ர­வள்ளி இலைகள் -      
                – 1 தே.க
சீஸ்             –- தே. அ. (துரு­வி­யது)

செய்­முறை: 
முதலில் ஒரு பாத்­தி­ரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்­ததும், வெங்­காயம், தக்­காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்­கவும்

.
பின் அதில் தக்­காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்­பூ­ர­வள்ளி இலை­களைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.


பின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்­கும்­ப­டி­யான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்­கிய கல­வையை பரப்பி வைத்து, முட்­டை­களை நீள­மாக நான்கு துண்­டு­க­ளாக்கி வைக்க வேண்டும்.


பிறகு அதன் மேல் சிறிது நறுக்­கிய வெங்­காயம், தக்­கா­ளியைத் தூவி விட வேண்டும்.பின் துரு­விய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்­பூ­ர­வள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 1 நிமிடம் அல்­லது தவா என்றால் மூடி வைத்து குறை­வான தீயில் 2 நிமிடம் வேக வைத்து து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி.

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

p47.jpg

கோடை விடுமுறைகளில், குழந்தைகளுக்கு ஏற்ற விதவிதமான ஸ்நாக்ஸ் ரெசிப்பிக்கள்



நியூட்ரிஷியஸ் க்ரன்சி

தேவையானவை:
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 கோதுமை மாவு - கால் கப்
 கம்பு மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
 இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - 2 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை - 2 டேபிள்ஸ்பூன்
 வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

p47a.jpg

செய்முறை:
பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்்கு பிசைந்து உருட்டிக்கொள்ளவும். மாவை விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டு, எண்ணெயை சூடாக்கி மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

 



சாக்கோ ஆல்மண்ட் ரோல்

தேவையானவை:
 இனிப்பு பிஸ்கட் - 10
 உப்பு இல்லாத வெண்ணெய் - அரை கப்
 சர்க்கரை - அரை கப்
 பால் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 வெனிலா எசன்ஸ் - 3 சொட்டு
 பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு -
4 டேபிள்ஸ்பூன்
 கோக்கோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
 துருவிய தேங்காய் - தேவையான அளவு
 சாக்லேட் சாஸ் - தேவையான அளவு

p47b.jpg

செய்முறை:
பிஸ்கட்டை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து பாதியளவுக்கு உருகியதும் சர்க்கரை, பால், கோக்கோ பவுடர், வெனிலா எசன்ஸ், உப்பு சேர்த்து சாஸ் பதத்துக்கு கிளறவும். இனி அடுப்பில் இருந்து இறக்கி, பிஸ்கட் கலவையில் சேர்த்து விரல் நீளத்துக்கு படத்தில் காட்டியுள்ளது போல வடிவமாக்கி கொள்ளவும். அப்படியே பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் தேங்காய்த்துருவல்  மேல் புரட்டி எடுத்து ஃப்ரிட்ஜில் ரெண்டு மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு வெளியே எடுத்து சாக்லேட் சாஸுடன் பரிமாறவும்.

 

 



சிப் அண்ட் க்ரீமி டிப்

சிப் செய்ய:
 மஞ்சள் நிற மக்காச்சோள மாவு - அரை கப்
 ராகி மாவு - அரை கப்
 கோதுமை மாவு - கால் கப்
 கொரக்கொரப்பாக அரைத்த ஓமம் - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 தண்ணீர் - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

க்ரீமி டிப் செய்ய:
 துருவிய கேரட் - கால் கப்
 புராசஸ்டு சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் இறுத்த தயிர் - அரை கப்
 ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய குடமிளகாய் -
ஒரு டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -
கால் டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -
ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p47c.jpg

செய்முறை:
சிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். மாவை ஊற விட தேவையில்லை. பிறகு மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சின்ன பூரிகளாக திரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
க்ரீமி டிப் செய்ய, கெட்டியான தயிரை ஒரு மெல்லிய துணியில் சேர்த்து ஒரு முடிச்சு போட்டு எங்காவது தொங்க விடுங்கள். கீழே ஒரு ப்ளேட்டை வைத்து விடுங்கள்.

தயிரில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வழிந்து, கெட்டியான மிருதுவான தயிர் கிடைக்கும். இதுதான் தண்ணீர் இறுத்த தயிர். இந்தத் தயிரில் க்ரீமி டிப் செய்ய கொடுத்த மற்ற அனைத்தையும் கலந்து மிருதுவாக கிளறி பொரித்த சிப்பை க்ரீமில் தொட்டு சாப்பிட்டால் யம்மியாக இருக்கும்.

குறிப்பு:
படத்தில் காட்டியுள்ளது போல பூரி வெந்து கொண்டிருக்கும் போது இடுக்கியால் இரண்டு புறமும் மடித்து விடவும்.

 



பொட்டேட்டோ லாலிபாப்

தேவையானவை:
 உருளைக்கிழங்கு - 3
 துருவிய கேரட் - கால் கப்
 பிரெட் ஸ்லைஸ் - 1
 இஞ்சி-பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை - ஒரு சிட்டிகை
 சீஸ் க்யூப் - 10
 பிரெட் ஸ்டிக் - தேவையான அளவு
 எண்ணெய், உப்பு- தேவையான அளவு

p47d.jpg

செய்முறை:
பிரெட் ஸ்டிக் என்பது பிரெட்டினாலான விரல் நீள வடிவம். பேக்கரிகளில் கிடைக்கும். கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்தெடுத்து பிழிந்து உதிரியாக்கி கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு கலவை, துருவிய கேரட், இஞ்சி-பச்சைமிளகாய் விழுது, உதிர்த்த பிரெட்  பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இதை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவே சிறிய பள்ளம் செய்து அதில் ஒரு சீஸ் கியூப் மற்றும் பள்ளத்தின் முனையில் பிரெட் ஸ்டிக்கை வைத்து படத்தில் காட்டியிருப்பது போல மூடவும். இப்படி உருட்டி வைத்த அத்தனை மாவுகளின் உள்ளேயும் சீஸ் கியூப் மற்றும் பிரெட் ஸ்டிக்கை வைத்து மூடவும்.
இனி தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு பொட்டேட்டோ லாலிபாப்பை இருபுறமும் சுட்டெடுக்கவும். இதற்கு எதாவது ஒரு கார சட்னி சைட் டிஷ்ஷாக வைத்து பரிமாறலாம்.

 



ஸ்வீட் பனானா ரோல்

தேவையானவை:
 சப்பாத்தி - 4
 மேங்கோ ஜாம் - 2 டேபிள்ஸ்பூன்
 பழுத்த வாழைப்பழம் - 2
 பழுப்புச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் - தலா
2 டீஸ்பூன்
 சாக்லேட் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

p47e.jpg

செய்முறை:
பழுப்புச் சர்க்கரையை தூளாக்கி, அதில் வாழைப்பழத்தை புரட்டி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து வாழைப்பழத்தை சில நிமிடம் சுட்டு எடுக்கவும். சுட்டு எடுத்த வாழைப்பழத்தின் மேல் ஃப்ரெஷ் க்ரீமை தடவி அதன் மேல் மேங்கோ ஜாமை தடவவும். இனி சப்பாத்தியின் நடுவில் வாழைப்பழத்தை வைத்து ரோல் செய்து மேலே சாக்லேட் சாஸ் ஊற்றிப் பரிமாறவும்.

 



நூடுல்ஸ் கட்லெட்

தேவையானவை:
 வேக வைத்த நூடுல்ஸ் - 2 கப்
 3 நிற குடமிளகாய் - தலா 1
 வேக வைத்து மசித்த
உருளைக்கிழங்கு - 2
 பொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மிளகுத்தூள்- அரை டீஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய
வெங்காயத்தாள் - 1 கட்டு
 பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் - தலா 1 டேபிள்ஸ்பூன்
 செஷ்வான் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு

p54.jpg

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். இத்துடன் செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு வெந்த நூடூல்ஸை சேர்த்து மிருதுவாக கிளறி, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடவும். கைப்பொறுக்கும் சூட்டில் படத்தில் காட்டியுள்ளது போல கட்லெட் வடிவத்துக்கு உருண்டை பிடித்து ஆற விடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை சேர்த்து இருபுறமும் சுட்டெடுத்து எடுத்து சாஸோடு பரிமாறவும்.

 



பிரெட் ஸ்விஸ் ரோல்

தேவையானவை:
 ஸ்வீட் பிரெட் - 10 ஸ்லைஸ்
 ஸ்ட்ராபெர்ரி ஜாம் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மாங்கோ ஜாம் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சாக்லேட் ஸ்பிரெட் - ஒரு டேபிள்ஸ்பூன்

i55.jpg

செய்முறை:
பிரெட்டின் பிரவுன் நிற ஓரங்களை நீக்கிவிட்டு, சப்பாத்தி கட்டையால் பிரெட்டை அழுத்தி ரோல் செய்யவும். ஒவ்வொரு பிரெட்டிலும் ஒவ்வொரு விதமான ஜாம், சாக்லேட் ஸ்பிரெட் தடவி, துண்டுகளாக்கி படத்தில் காட்டியிருப்பது போல சுருட்டி வைத்து பரிமாறினால் அத்தனையும் நொடியில் காலியாகும்.

குறிப்பு:
சாக்லேட் ஸ்பிரெட் என்பது சாக்லேட் சுவை கொண்ட பேஸ்ட். இதை பிரெட்டின் மீது தடவி சாப்பிடுவார்கள். டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்.

 



ஸ்பைஸி சைனீஸ் பேபிஃகார்ன்

தேவையானவை:
 பேபிகார்ன் - 15
 பொடியாக நறுக்கிய பூண்டு - 8 பல்
 பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
 பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2
 ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
 சில்லி கார்லிக் சாஸ் - ஒரு டீஸ்பூன்
 வெள்ளை எள் - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு

ஊற வைக்க:
 அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p56.jpg

செய்முறை:
பேபி கார்னை உப்பு சேர்க்காமல் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து தண்ணீர் வடித்து நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஊற வைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சிறிது தண்ணீர் விட்டு கலந்து பேஸ்ட் போலாக்கி, அதில் வெந்த பேபிகார்னை புரட்டி எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள் மற்றும் எல்லா சாஸ்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக் கிளறவும். கலவை ஒரு கொதி வந்ததும் பேபிகார்ன் கலவையை சேர்த்து புரட்டி எடுத்து, பரிமாறும் போது மேலே எள், வெங்காய்த்தாள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

 



சைனீஸ் பேல்

தேவையானவை:
 பொரித்த நூடுல்ஸ் - ஒரு கப்
 வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
 கேரட் - ஒன்று
 குடமிளகாய் - ஒன்று
 முட்டைகோஸ் - கால் கப்
 பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்
 உப்பு - தேவையான அளவு
 சில்லிஃப்ளேக்ஸ் - அரை டீஸ்பூன்
 துருவிய பச்சை மாங்காய் - கால் கப்
 கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
 தக்காளி சாஸ்- ஒரு டேபிள்ஸ்பூன்

p57.jpg

செய்முறை:
உருளைக்கிழங்கை க்யூப்பாகவும், கேரட், குடமிளகாய், முட்டைகோஸை நீளவாக்கிலும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். நூடுல்ஸ் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் காய்களுடன் சேர்த்து, கலந்து நூடுல்ஸை கடைசியாகச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

 



ஸ்வீட் பானிபூரி

தேவையானவை:
 மினி பூரி - தேவையான அளவு
 லட்டு - 5
 பால் - தேவையான அளவு
 ரோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்
 சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 பிஸ்தா - 10
 குங்குமப்பூ- 2 சிட்டிகை
 இடித்த ஏலக்காய்- 4
 நறுக்கிய பிஸ்தா-10
 நறுக்கிய பாதாம் பருப்பு- 10
 சர்க்கரை- தேவையான அளவு

p58.jpg

செய்முறை:
 பாலை சுண்ட காய்ச்சிவிட்டு, அதில் சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய், பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி ஆறவிடவும். இதுதான் பாதாம் பால் பூரியில் துளையிட்டு இதில் லட்டை தூளாக்கிச் சேர்த்து, மேலே ரோஸ் சிரப், சாக்லேட் சாஸ், பிஸ்தா சேர்த்து பாதாம் பாலோடு பரிமாறவும். மினி பூரியை பாதாம் பாலில் டிப் செய்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

Link to comment
Share on other sites

கேரட் தயிர் பச்சடி

13102769_518370861684906_101534665032043


தேவையானவை:
துருவிய கேரட் - 1 கப்
புளிப்பில்லாத தயிர் - அரை கப்
பச்சைமிளகாய் - 1
மல்லித்தழை - சிறிது
உப்பு - தே.அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
பச்சை மிளகாய், மல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் துருவிய கேரட், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும். வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து தயிர் பச்சடியில் ஊற்றவும்.

 

 

கறிவேப்பிலை சாதம்

தேவையானவை:
 உப்பு சேர்த்து வடித்த பச்சரிசி சாதம் - அரை கிலோ
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
 சின்ன வெங்காயம் - 10
 பச்சைமிளகாய் - 2
 மிளகு - அரை டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பூண்டு - 5 பல்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p10.jpg

தாளிக்க:
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுந்து - கால் டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். வடித்த பச்சரிசி சாதத்தில் கலவையைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவிக்கிறீங்கள், பொரிக்கிறீங்கள், மொத்தத்தில் கலக்குறீங்கள் நவீனன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

மரக்கறி சான்ட்விச்

12802728_547790868732660_284679503750184

தேவையான பொருட்கள்

ரொட்டித்துண்டுகள் - 20
கரட் - 100g
காலிபிளவர் - 100g
போஞ்சி - 100g
முட்டைக்கோஸ் - 100g
உருளைக்கிழங்கு - 250g
பச்சை மிளகாய் ( நறுக்கியது ) - 5
இஞ்சி ( நறுக்கியது) -25g
பெரிய வெங்காயம் - 150g
வெண்ணெய் , எண்ணெய் , உப்பு - தேவையான அளவு

செய்முறை

கரட் ,காலிபிளவர் ,போஞ்சி ,முட்டைக்கோஸ் என்பவற்றை சுத்தம் செய்து சிறிய அளவில் வெட்டி உப்பு சேர்த்து அவிக்கவும்.

உருளைக்கிழங்கை நன்கு அவித்து தோல் உரித்து நன்கு மசிக்கவும் .

பெரிய வெங்காயம் , பச்சை மிளகாயை சிறிது சிறிதாக வெட்டவும்.

எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை கிளறவும் .

பின்பு அவித்த காய்கறிகளையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும் .

கூட்டு ரெடி

ரொட்டியின் ஒருபுறம் மட்டும் வெண்ணெய் தடவி , அதன் மேல் கூட்டு வைத்து இன்னொரு ரொட்டி மீது வெண்ணெய் தடவி சேர்த்து பரிமாறுங்கள் .
மரக்கறி சான்ட்விச் தயார் .

 

உருளைக்கிழங்கு மசாலா

13177050_570734109771669_480127504004780

 

தேவையான பொருட்கள்

சின்ன உருளைகிழங்கு – பத்து
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
தனியா தூள் – மூன்று டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எலுமிச்சை சாறு – கால் டீஸ்பூன்
எண்ணெய் – நான்கு டீஸ்பூன்

செய்முறை

உருளைகிழங்கை வேகவைத்து கொள்ளவும்.

பிறகு தோலுரித்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு, தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருளைகிழங்கு மசாலாவை போட்டு சிம்மில் வைத்து கிரிஸ்பியாக பொரித்து எடுக்கவும்.

Link to comment
Share on other sites

கேக் ரெசிப்பிக்கள்

“வீட்டிலேயே கேக் செய்யலாம்னா, இது அவ்வளவு ஈஸி இல்லையே! ரெசிப்பி ரொம்ப சிக்கலாச்சே... ஒழுங்காக வரலைனா எல்லாம் வீணாகப் போயிடுமே’ என்றெல்லாம் யோசித்து, பலரும் வீட்டில் கேக் செய்வதே இல்லை. ஆனால், ‘‘கேக் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி...” என உற்சாகமாகச் சொல்வதோடு, வெரைட்டியான கேக் ரெசிப்பிக்களையும் தருகிறார், சென்னையைச் சேர்ந்த ஹாரதி.

ஸ்ட்ராபெர்ரி கேக்

தேவையானவை:
 மைதா - 225 கிராம்
 வெண்ணெய் - 225 கிராம்
 ஐஸிங் சர்க்கரை - 225 கிராம்
 முட்டை - 4
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
 உப்பு - அரை டீஸ்பூன்

p109a.jpg

செய்முறை:
மைக்ரோ வேவ் அவனை 15 நிமிடங்களுக்கு
180 டிகிரியில் பிரீஹீட் செய்யவும். மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மூன்றையும் சேர்த்துக் கலந்து சலித்து வைக்கவும். 9 இன்ச் உள்ள பேக்கிங் பேனில் சிறிதளவு வெண்ணெய் தடவி கிரீஸ் செய்யவும். ஒரு பாத்திரத்தில் மீதமிருக்கும் வெண்ணெயையும் ஐஸிங் சர்க்கரையையும் சேர்த்து, மிருதுவாகவும் நுரை வரும்வரையிலும் நன்றாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் முட்டைகளை உடைத்துச் சேர்த்து நல்ல கலவையாக வரும்வரை அடிக்கவும். வெனிலா எசன்ஸை சேர்த்துக் கலக்கவும். இனி, மைதா கலவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கலக்கவும்.

பிறகு வெண்ணெய் தடவிய கிரீஸ் கேக் பேனில் மைதா கலவையை ஊற்றி, கரண்டியால் சமன் செய்யவும். அப்படியே அவனுக்கு மாற்றி மூடி, 20 முதல் 25 நிமிடங்கள் வரை 180 டிகிரியில் பேக் செய்யவும். 25 நிமிடங்களுக்கு பிறகு அவனை திறந்து டூத்பிக்கை கேக்கின் நடுவே குத்திப் பார்த்தால், குச்சியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக வெளியே வர வேண்டும். அவனை அணைத்து கேக்கை வெளியே எடுத்து ஆறவிடவும்.

இதற்கு ஐஸிங் செய்யும் முறை:

தேவையானவை:
 குளிர வைக்கப்பட்ட க்ரீம் (விப்பிங் க்ரீம்) - 500 மில்லி
 ஸ்ட்ராபெர்ரி பழம் - 10
 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
க்ரீமை ஒரு பவுலில் சேர்த்து முட்டை அடிக்கும் கரண்டியால் 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்றாக அடித்துக் கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரி பழங்களை கையால் பிசைந்து பொடியாக நறுக்கி ஒரு பவுலில் சர்க்கரையுடன் சேர்த்து, 15 நிமிடங்களுக்கு தனியாக வைத்திருக்கவும். அடித்த க்ரீமில் 200 கிராம் அளவு எடுத்து, ஸ்ட்ராபெர்ரி கலவையில் சேர்க்கவும்.

அலங்கரிக்கும் முறை:
ஆறிய கேக்கின் மீது அடித்து வைத்த ப்ளெயின் க்ரீமை எல்லா புறங்களிலும் படுமாறு நன்கு பரப்பி விடவும். இனி, படத்தில் காட்டியுள்ளது போல கேக்கின் நடுவில் ஸ்ட்ராபெர்ரி-க்ரீம் கலவையை ஊற்றி, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்ட்ரா பெர்ரி வைத்து டெக்கரேட் செய்து பரிமாறவும். கேக்கை சுற்றி டாட்ஸ் போல க்ரீமில் வைக்க வேண்டும் என்றால், கூடுதலாக வைப்பிங் க்ரீம், சர்க்கரை, நசுக்கிய ஸ்ட்ராபெர்ரியை ஒன்றாக நன்கு அடித்து கலந்து பைப்பிங் பேக்கில் கலவையை ஊற்றவும். இதன் பிறகு, கேக்கை சுற்றி மேலே மற்றும் கீழே டாட்ஸ் வைக்கவும்.

சாக்லேட் கப் கேக்

தேவையானவை
 மைதா மாவு - ஒன்றே முக்கால் கப்
 பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
 கோகோ பவுடர் - முக்கால் கப்
 உப்பு - அரை டீஸ்பூன்
 வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 ஐஸிங் சர்க்கரை - ஒன்றரை கப்
 முட்டை - 2
 வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
 பால் - அரை கப்
 மஃபின் கேக் லைனர், மோல்ட் - தேவையான அளவு
 சாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு

p109b.jpg

செய்முறை:
அவனை 180 டிகிரியில் 15 நிமிடம் பிரீஹீட் செய்யவும். மஃபின் கேக் மோல்டின் உள்ளே இதன் லைனர்களை வைக்கவும். மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்துக்கொள்ளவும். பெரிய பவுலில் வெண்ணெய், ஐஸிங் சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும். இதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கலக்கவும். இதில் சிறிது மைதா மாவுக் கலவை, சிறிது பால் என்கிற ரீதியில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிருதுவாக நன்கு கலக்கவும். கட்டிகள் விழக்கூடாது. பிறகு மோல்டின் உள்ளே இருக்கும் லைனரின் உள்ளே இக்கலவையை ஊற்றி, பேக்கிங் அவனில் 180 டிகிரியில் 15 முதல் 17 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்து எடுக்கவும். சாக்லேட்டின் மேல் சாக்லேட் சிப்ஸ் தூவி அலங்கரிக்கவும்.

பார்ட்டி ஸ்பெஷல்

சாக்லேட் கேக் இன் மினி ஜார்

தேவையானவை:
 சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக் - 100 கிராம்
 விப்பிங் க்ரீம் - 100 கிராம் (நன்கு அடித்துக் கொள்ளவும்)
 செர்ரிப் பழங்கள் - 10
 சிறிய கண்ணாடி பாட்டில் - ஒன்று

p109c.jpg

செய்முறை:
கண்ணாடி பாட்டிலை சுத்தம் செய்து (ஈரமில்லாமல்), நன்கு துடைத்து எடுத்துக்கொள்ளவும். ஸ்பாஞ்ச் கேக்கை பாட்டிலின் உள்ளே, படத்தில் காட்டியுள்ளது போல வைக்கவும். இதன் மேலே கொஞ்சம் விப்பிங் க்ரீம், பிறகு நன்கு நசுக்கிய பாதி செர்ரி பழங்கள், மீண்டும் ஸ்பாஞ்ச் கேக் என்று படத்தில் காட்டியுள்ளது போல ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கவும். இனி பாட்டிலை மூடி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். நன்கு குளிர்ந்ததும் எடுத்துப் பரிமாறலாம்.

குறிப்பு:
சிறிய ஜாம் பாட்டில்களைக் கூட உபயோகிக்கலாம். உள் அலங்காரத்தை நம் விருப்பத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். பார்ட்டிகளில் பரிமாறவும், பரிசு கொடுக்கவும் வித்தியாசமாக இருக்கும் இந்த கேக்.

சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக்

தேவையானவை
 மைதா - 175 கிராம்
 கோகோ பவுடர் - 50 கிராம்
 முட்டை - 3
 பால் - 3 டேபிள்ஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 வெண்ணெய் - 100 கிராம்
 ஐஸிங் சர்க்கரை - 300 கிராம்
 சூடான தண்ணீர் -
  6 டேபிள்ஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 பட்டர் பேப்பர் - 2

p109d.jpg

செய்முறை:
அவனை 180 டிகிரியில்
20 நிமிடங்கள் பிரீஹீட் செய்யவும். 9 இன்ச் கேக் பேனில் உள்ளே பட்டர் பேப்பர் விரித்து வைக்கவும். மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர், உப்பு மூன்றையும் கலந்து ஒன்றாக சலித்துக்கொள்ளவும். ஒரு பவுலில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து மிருதுவாக நுரை பொங்கி வரும் வரை முட்டை அடிக்கும் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கவும். இத்துடன் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்துச் சேர்த்து அடிக்கவும். பிறகு, மைதா, பால் என ஒன்றன் ஒன்றாக சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவாக கட்டி விழாமல் கலக்கவும். இதை கேக் மோல்டில் ஊற்றவும். இனி, மோல்டை அவனில் வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் 180 டிகிரியில் பேக் செய்து எடுத்துப் பரிமாறவும். 

சாக்லேட் பட்டர் க்ரீம் செய்யும் முறை

தேவையானவை:
 வெண்ணெய் - 40 கிராம்
 ஐஸிங் சர்க்கரை - ஒன்றரை கப்
 உப்பு - ஒரு சிட்டிகை
 பால் - 2 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

செய்முறை
வெண்ணெய், சர்க்கரை, உப்பு, வெனிலா எசன்ஸை ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து, மிருதுவாக நுரை பொங்கி வரும் வரை நன்கு அடிக்கவும். இத்துடன் பாலையும் சேர்த்து, கலந்து கேக்கின் மேல் பரப்பிவிட்டு, சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு பரிமாறவும்.

குறிப்பு:
கேக்கின் மீது விபிங் க்ரீமை வைத்துப் பரிமாறலாம்.

எக்லெஸ் வெனிலா கப் கேக்

தேவையானவை
 மைதா - இரண்டரை கப்
 பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 ஐஸிங் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
 கண்டென்ஸ்டு மில்க் - 300 மில்லி
 தண்ணீர் - ஒரு கப்
 வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
 உருக்கிய வெண்ணெய் - அரை கப்
 கப் கேக் மோல்ட் - ஒன்று
 லைனர் - தேவையான அளவு

p109e.jpg

செய்முறை:
கப் கேக் மோல்டின் உள்ளே லைனர்களை வைக்கவும். மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு என எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளவும். அவனை 180 டிகிரியில் 20 நிமிடம் பிரீஹீட் செய்துகொள்ளவும். தண்ணீர், கண்டென்ஸ்டு மில்க், வினிகர், ஐஸிங் சர்க்கரை், உருக்கிய வெண்ணெய், வெனிலா எசன்ஸ் என எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். சலித்து வைத்திருக்கும் மாவை வெண்ணெய் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டிகள் விழாமல் நன்கு கலக்கவும். இனி மோல்டின் உள்ளே இருக்கும் லைனரின் உள்ளே கலவையை ஊற்றவும். அவனின் உள்ளே
மோல்டை வைத்து மூடி, 20 முதல்
25 நிமிடங்களுக்கு 180 டிகிரியில் பேக் செய்யவும். டூத்பிக்கால் கேக்கின் நடுவே குத்தி பார்த்தால், குச்சியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும்.

ஐஸிங் செய்யும் முறை:

தேவையானவை
 ஐஸிங் சர்க்கரை - ஒரு கப்
 ஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
 ஐஸிங் சர்க்கரையை ஆரஞ்சு ஜூஸில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
 ஆறவைத்த கேக்கின் மேல் அப்படியே பூசலாம் அல்லது தெளித்துவிடலாம்.

கிட்ஸ் ஃபேவரைட்

கேக் பாப்ஸ்

தேவையானவை:
 சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக் - 100 கிராம்
 சாக்லேட் கனாஷ் ஃப்ராஸ்டிங் - 50 கிராம்
 உருக்கிய டார்க் சாக்லேட் - 50 கிராம்
 லாலிபாப் குச்சிகள் - தேவையான அளவு

p109f.jpg

செய்முறை:
சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக்கை நன்கு உதிர்த்துக்கொள்ளவும். அதனுடன் சாக்லேட் கனாஷை (இதன் செய்முறை ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளது) சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக (நெல்லிக்காய் அளவு) உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை லாலி பாப் குச்சிகளில் பிடித்து வைக்கவும். லாலிபாப்களை 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பிறகு அவற்றை எடுத்து, உருக்கிய டார்க் சாக்லேட்டில், ஒவ்வொன்றாக முக்கி எடுத்து, மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர விடவும். குழந்தைகளுக்கு இந்த கேக் பாப்ஸைக் கொடுத்துப் பாருங்கள்... குஷியோ குஷிதான்!

சாக்லேட் கனாஷ் ஃப்ராஸ்டிங் செய்முறை

தேவையானவை:
 ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி
 டார்க் சாக்லேட் - 100 கிராம்
 வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஃப்ரெஷ் க்ரீம், டார்க் சாக்லேட், வெண்ணெய் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து, அடுப்பில் வைத்து ‘க்ரீம்’ போல வரும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு அதை 2 மணி நேரம் ஆறவிட்டு எடுத்துக் கொள்ளவும் இதுதான் கனாஷ். இதனை கப் கேக்குகளின் மேலே கூட ஊற்றி மெழுகி விடலாம். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு செட் ஆனதும் எடுத்துப் பரிமாறவும்.

கேக்ஸ்... டிப்ஸ்...!

வீட்டில் கேக் செய்யும்போது, எப்போதுமே ரெசிப்பியில் சொல்லியுள்ளதைத் தவறாமல் பின்பற்றவும்.

அவனை பிரீஹீட் செய்வது மிக முக்கியம்.

ஒவ்வொரு முறை கேக் செய்யும்போதும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு டூத் பிக் குச்சியை கேக்கில் குத்திப் பார்த்து, அந்தக் குச்சியில் கேக் ஒட்டிக்கொள்ளாமல் சுத்தமாக வருகிறதா என்று பார்த்துவிட்டுத்தான் எடுக்கவேண்டும்.

கேக்கின் மேல் ஐஸிங் செய்வதற்கு முன், கேக் நன்கு ஆறவேண்டும்.

கேக் செய்வதற்கு, உப்பு சேர்த்த வெண்ணெய் உபயோகிப்பதாக இருந்தால், தேவையான பொருட்களில் உப்பைத் தவிர்க்கவும்.

மைக்ரோவேவ் அவனில் பேக் செய்வதாக இருந்தால், ‘கன்வென்ஷன்’ முறையிலேயே செய்யவும்.

p109g.jpg

ஓவன் இல்லாதவர்களும் கேக் செய்யலாம்!

வீட்டில் ‘கேக் அவன்’ இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் குக்கரிலேயே கேக் செய்யலாம்.

குக்கரில் செய்யும்போது, கேஸ்கட் மற்றும் வெயிட் தேவையில்லை.

குக்கரின் அடிபாகத்தில் 2 இன்ச் அளவுக்கு சுத்தமான மணலை நிரப்பிக்கொள்ளவும்.

கேக் பாத்திரத்தை அதில் வைக்கும் முன்னர், மணல் நிரப்பிய குக்கரை அடுப்பின் மேல் வைத்து, நடுத்தரமான தீயில் 20 நிமிடம் பிரீஹீட்டிங் செய்யவும்.

கேக் பாத்திரத்தை வைத்த பிறகு, வெயிட், கேஸ்கட் எதுவும் போடாமல் மூடிவைக்கவும்.

கேக் வேகுவதற்கு, அவனுக்கான நேரத்தை விட, சிறிது அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும்.
 சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, குக்கரைத் திறந்து, டூத் பிக்கால் குத்திப் பார்த்த பிறகு, வெந்ததை உறுதி செய்யவும்.

குக்கரை இறக்கி, கேக்கை எடுத்து ஆறவிட்டபின், விருப்பம் போல அலங்கரித்துப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

ஊறுகாய் ரெசிப்பிக்கள்

* பூண்டு ஊறுகாய்
தக்காளி ஊறுகாய்
மாங்காய் தொக்கு
ஆவக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
வெங்காய ஊறுகாய்
திராட்சை ஊறுகாய்

p59.jpg

வெயில் காலத்துக்கே உரிய இன்ஸ்டன்ட் ஊறுகாய் ரெசிப்பிக்களை நமக்காக வழங்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வித்யா பாரதி

பூண்டு ஊறுகாய்

தேவையானவை:
 பூண்டு - 200 கிராம்
 மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
 மஞ்சள்தூள்- 1 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
 கடுகுப் பொடி - 1 டீஸ்பூன்
 வெந்தயப் பொடி - 1 டீஸ்பூன்
 வினிகர் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கடுகு - சிறிதளவு
 நல்லெண்ணெய் - கால் கப்

p59a.jpg

செய்முறை:
பூண்டுகளை தோல் உரித்து இட்லிப் தட்டில் வேக வைத்துக்கொள்ளவும். பிறகு வெளியே எடுத்து சுத்தமான துணியில் வைத்து ஒரு மணி நேரம் ஆறவிடவும். ஒரு கண்ணாடி பவுலில் ஆறிய பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கடுகுப்பொடி, வெந்தயப்பொடி, வினிகர் ஊற்றி லேசாக ஸ்பூனால் லேசாக கிளறி விடவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து பூண்டு கலவையில் ஊற்றி மூடிவிடவும். கால் மணிநேரம் கழித்து மீண்டும் திறந்து பூண்டு உடைந்து விடாமல் மெதுவாகக் கிளறிவிடவும். பூண்டு கலவையில் நன்கு ஊறியதும் கைபடாமல் எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:
ஊறுகாய்களையும் ஜாடியின் வாயில் மெல்லிய துணியால் கட்டி, 10 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்துப் பயன்படுத்தலாம். ஒரு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஊறுகாய்களை 2 மாதம் ஒரு தடவையாவது வெயிலில் இதே போல வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

தக்காளி ஊறுகாய்

தேவையானவை:
 பழுத்த தக்காளி - அரை கிலோ
 புளி - பெரிய எலுமிச்சை அளவு
 நல்லெண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 காஷ்மீரீ மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
 வெந்தயப் பொடி - அரை டீஸ்பூன்
 கடுகுப் பொடி - 1 டீஸ்பூன்
 வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்

p59b.jpg

செய்முறை:
புளியை வெறும் வாணலியில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கி கொள்ளவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் விடாமல் பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட், புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். பிறகு, பெருங்காயத்தூள், உப்பு, காஷ்மீரீ மிளகாய்த்தூள், வெந்தயப் பொடி, கடுகுப் பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இறுதியாக வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கி, கைபடாமல் ஒரு ஜாடியில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.

மாங்காய் தொக்கு

தேவையானவை:
 புளிப்பான உருண்டை மாங்காய் - 3
 கிளிமூக்கு மாங்காய் - 1
 வெந்தயப் பொடி - 2 டீஸ்பூன்
 கடுகுப் பொடி - 2 டீஸ்பூன்
 எண்ணெய் - கால் கப்
 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
 பெருங்காயத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p59c.jpg

செய்முறை:
மாங்காய்களை நன்கு கழுவி தோலோடு பொடியாக நறுக்கி உப்பு போட்டு ஒரு ஜாடியில் சேர்த்து ஆறு மணிநேரம் வெயிலில் வைத்து ஊறவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெந்தயப் பொடி, கடுகுப் பொடி, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் கழித்து தாளித்ததை சூடாக மாங்காய் உள்ள ஜாடியில் ஊற்றவும் நன்றாக கிளறிவிட்டு ஊறியதும் கைபடாமல் பயன்படுத்தவும்.

ஆவக்காய் ஊறுகாய்

தேவையானவை:
 புளிப்பில்லா மாங்காய் - 6
 கடுகுப் பொடி - 100 கிராம்
 மிளகாய்த்தூள் - 100 கிராம்
 உப்பு - 100 கிராம்
 நல்லெண்ணெய் - 200 கிராம்
 பொடியாக நறுக்கிய பூண்டு - 15 பல்
 வெந்தயம் - ஒன்றறை டீஸ்பூன்

p59d.jpg

செய்முறை:
மாங்காயை கழுவி நீக்கி சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக, அதாவது ஒரு மாங்காயை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொட்டைகளை நீக்கி விடவும்.ஒரு பவுலில் கடுகுப் பொடி, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளவும். இத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து எண்ணெய் ஊற்றி பேஸ்ட் போன்று கெட்டியாக கையால் பிசைந்து கொள்ளவும்.  இதை நறுக்கிய மாங்காய்கள் மீது தடவி ஒரு ஜாடியில் எடுத்து வைத்து 8 மணிநேரம் ஊறவிடவும். பின் தினமும் கைபடாமல் கரண்டியால் ஊறுகாய்களை கிளறிவிட்டு பிறகு சுத்தமான ஈரம் இல்லாத பாத்திரத்தில் எடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:
இந்த ஊறுகாயில் மட்டும் கையால் பிசையலாம். ஊறுகாய் கெடாது. ஆனால், ஊறுகாய் ஊறும் போதோ அல்லது ஊறிய பிறகோ கை வைக்க கூடாது. இந்த வகை மாஙகாய்களை கடைகளில் ஆவக்காய் மாங்காய் என்று கேட்டு வாங்குவார்கள்.

நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையானவை:
 முழு நெல்லிக்காய் - அரை கிலோ
 மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 150 மில்லி
 பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்
 வெந்தயப் பொடி - 1 டீஸ்பூன்

p59e.jpg

செய்முறை:
நெல்லிக்காயை குக்கரில் வேகவைத்து கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு சுத்தமான துணியில் பரப்பி அரை மணி நேரம் வெயிலில் காயவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்த நெல்லிக்காய்களைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி சேர்த்து கிளறி மசாலா வாசனை போனதும் இறக்கி பாட்டிலில் கைபடாமல் சேர்த்து பரிமாறவும்.

வெங்காய ஊறுகாய்

தேவையானவை:
 புளி - எலுமிச்சை அளவு
 பெரிய வெங்காயம் - அரை கிலோ
 வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
 வெந்தயப ்பொடி- ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள்- ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

p599.jpg

செய்முறை:
வெங்காயத்தை நீளமாக நறுக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் புளியைச் சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் புளி பேஸ்ட், வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் சுருண்டு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.

திராட்சை ஊறுகாய்

தேவையானவை:
 விதை இல்லாத கருப்பு திராட்சை -
750 கிராம்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
 பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்
 பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
 நல்லெண்ணெய் - தேவையான அளவு
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கடுகுப் பொடி - - இரு டீஸ்பூன்
 வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு டீஸ்பூன்

p59f1.jpg

செய்முறை:
திராட்சையை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிடவும். அதே வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும். இத்துடன் திராட்சை சேர்த்து தண்ணீர் வற்றி சுருண்டு வரும் வரை வதக்கவும். பிறகு  உப்பு, ஆறவைத்த பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், உப்பு, கடுகுப் பொடி, வெந்தயப் பொடி சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனதும் இறக்கிப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

நான் வேற இப்பதான் மிளகு சாதத்ததில நிக்கிறன். உதுக்கு வர ரொம்ப நாளாகிடும், அதுக்குள்ளே நீங்க எங்கயோ போய்விடுவீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊறுகாய் அயிட்டங்கள் மிகவும் பிடித்திருக்கு....! மாங்காய்த் தெக்கும், ஆவக்காய் ஊற்காயும் சுப்பராய் இருக்கும்...!  tw_blush:

Link to comment
Share on other sites

முட்டை ரெசிப்பிக்கள்

* முட்டை பனீர் பொடிமாஸ்
* முட்டை பெப்பர் வறுவல்
* முட்டைப் பணியாரம்
முட்டை - 85
முட்டை - வெஜ் ஆம்லெட்
முட்டை பஜ்ஜி
*   முட்டை குருமா
முட்டை உருளை கட்லெட்

p77.jpg

குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளில் முட்டைக்கு முக்கிய இடமுண்டு. அத்தகைய முட்டையில் பல வெரைட்டி ரெசிப்பிக்களைச் செய்து காட்டியிருக்கிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் நளினா.

முட்டை பனீர் பொடிமாஸ்

தேவையானவை:
 முட்டை - 3
 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பச்சைமிளகாய் - ஒன்று (கீறியது)
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 பனீர் - 50 கிராம் (உதிர்த்தது)
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

p77a.jpg

செய்முறை:
முட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து அது பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் உதிர்த்து வைத்துள்ள பனீர், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையைச் சேர்த்து, முட்டை பொடி பொடியாக ஆகும் வரை அடிபிடிக்காமல் கிளறி கடைசியில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

முட்டை பெப்பர் வறுவல்

தேவையானவை:
 முட்டை - 2 (வேக வைத்தது)
 பெரிய வெங்காயம்  - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p77vb.jpg

செய்முறை:
வேகவைத்த முட்டையை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சிறிது வதங்கியவுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் தெளித்துக் கிளறவும். இதில் நறுக்கி வைத்துள்ள முட்டைத் துண்டுகளைச் சேர்த்து மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் தூவி முட்டை உடையாமல் திருப்பி விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

முட்டைப் பணியாரம்

தேவையானவை:
 முட்டை - 2
 பெரிய வெங்காயம் - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
 பச்சைமிளகாய் - 2
(பொடியாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 இட்லி மாவு - 2 கரண்டி
 எண்ணெய் - தேவையான அளவு
 கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

p77c.jpg

செய்முறை:
ஒரு பவுலில் இட்லி மாவுடன் உடைத்த முட்டை, பெரிய வெங்காயம், மஞ்சள்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளித்து இட்லி மாவில் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் கால்வாசி அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இனி, கலந்து வைத்துள்ள இட்லி முட்டை மாவுக் கலவையை ஒவ்வொரு பணியாரக் குழியிலும் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் ஒரு குச்சியால் பணியாரத்தைத் திருப்பிவிட்டு மறுபக்கமும் வேகவைத்து சூடாக எடுத்துப் பரிமாறவும்.

முட்டை - 85

தேவையானவை:
 முட்டை - 2
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் -  ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 அரிசி மாவு - அரை டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைப் பழம் - கால் மூடி
(சாறு எடுக்கவும்)
 கொத்தமல்லித்தழை, புதினா இலை - இரண்டும் சேர்த்து ஒரு பிடி விழுது
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

p77d.jpg

செய்முறை:
ஒரு பவுலில் முட்டை, மஞ்சள்தூள், சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். குழிவான கிண்ணத்தில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை இத்துடன் சேர்த்து இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும். ஆறியவுடன் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, கரம் மசாலாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது சிறிது உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா, எலுமிச்சைச் சாறு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் வேகவைத்த முட்டைத் துண்டுகளை முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

முட்டை - வெஜ் ஆம்லெட்

தேவையானவை:
 முட்டை - 3
 பெரிய வெங்காயம் - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
 கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கறிவேப்பிலை -
ஒரு சிறிய பவுல் அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
(பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

p77e.jpg

செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் பொடியாக நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் காய்கறிகள் வேகும் அளவுக்கு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றவும். இதில் வதக்கியவற்றைச் சேர்த்து, மிளகுத்தூள் தூவி நன்கு அடித்துக் கலக்கவும். இனி, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

முட்டை பஜ்ஜி

தேவையானவை:
 முட்டை - 6
 கடலை மாவு - கால் கிலோ
 அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

p77f.jpg

செய்முறை:
முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி-பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். இனி, வேகவைத்த முட்டை ஒவ்வொன்றையும் நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியவற்றை பஜ்ஜி மாவுக் கலவையில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பஜ்ஜியாகப் பொரித்தெடுக்கவும்.

முட்டை குருமா

தேவையானவை:
 முட்டை - 3
 பெரிய வெங்காயம் - 2
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 இஞ்சி - ஒரு சிறிய துண்டு
 பூண்டு - 8
 பச்சைமிளகாய் - 2
 தேங்காய் - அரை மூடி
(துருவிக் கொள்ளவும்)
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

p77g.jpg

செய்முறை:
முட்டையை அவித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நிறம் மாறி பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு சோம்பு மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்து கலக்கவும். இதில் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கவும். கலவை நன்கு கொதி வந்ததும் அவித்த முட்டையை லேசாக கீறிவிட்டு சேர்க்கவும். பிறகு, ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

முட்டை உருளை கட்லெட்

தேவையானவை:
 முட்டை - 4
 உருளைக்கிழங்கு - கால் கிலோ
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) -
அரை டேபிள்ஸ்பூன்
 உப்பு, எண்ணெய் -
தேவையான அளவு
 பெரிய வெங்காயம் - ஒன்று
 ரஸ்க் தூள் - 3 டேபிள்ஸ்பூன்

p77gh.jpg

செய்முறை:
மூன்று முட்டைகளை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியா, ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கி  இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். வேகவைத்த முட்டைகளை கட்லெட் வடிவத்தில் நீள் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். இனி முட்டைகளின் மீது வதக்கிய மசாலாக்களைத் தடவி வெள்ளைக்கருவில் முக்கியெடுத்து ரஸ்க் தூளில் புரட்டி வைக்கவும் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டைத் துண்டுகளைச் சேர்த்து இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுத்துப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் கேழ்வரகு மாவை சமைத்து சாப்பிட்டால் உடம்பு குறையும் என்று ரதிக்கு ஒரு நண்பி சொன்னார். எனக்கு தானியங்கள் பற்றிய அறிவு இல்லை.கேழ்வரகு என்று அடித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் ராகி என்று வந்தது. அதை ஒரு மாதிரி தமிழ்க் கடையில் வாங்கி வந்து விட்டேன். அந்த மாவில் புட்டு,களி,ரொட்டி,கூழ் ஆகியன செய்யலாம் என்று இருக்குது.இந்த மாவில் எப்படி புட்டு அவிப்பது சாதரண அரிசி மாவில் அவிப்பது மாதிரியா?...கூழ்,களி என்பன எப்படிச் செய்வது என யாராவது செய்முறை தந்து உதவ முடியுமா?...குரக்கன் மாவும்,கேழ்வரகு மாவும் ஒன்றா என்ட சந்தேகத்தையும் தீர்த்து வைக்கவும்.

Link to comment
Share on other sites

11 minutes ago, ரதி said:

ஒவ்வொரு நாளும் கேழ்வரகு மாவை சமைத்து சாப்பிட்டால் உடம்பு குறையும் என்று ரதிக்கு ஒரு நண்பி சொன்னார். எனக்கு தானியங்கள் பற்றிய அறிவு இல்லை.கேழ்வரகு என்று அடித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் ராகி என்று வந்தது. அதை ஒரு மாதிரி தமிழ்க் கடையில் வாங்கி வந்து விட்டேன். அந்த மாவில் புட்டு,களி,ரொட்டி,கூழ் ஆகியன செய்யலாம் என்று இருக்குது.இந்த மாவில் எப்படி புட்டு அவிப்பது சாதரண அரிசி மாவில் அவிப்பது மாதிரியா?...கூழ்,களி என்பன எப்படிச் செய்வது என யாராவது செய்முறை தந்து உதவ முடியுமா?...குரக்கன் மாவும்,கேழ்வரகு மாவும் ஒன்றா என்ட சந்தேகத்தையும் தீர்த்து வைக்கவும்.

 

 

 

http://www.yarl.com/forum3/search/?type=all&q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81

‘கேப்பங்கஞ்சி’

ராகி கூழ் (கேப்பங்கஞ்சி) Ragi porridge

ராகி கூழ் வீடுகளில் மட்டுமன்றி வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களிலும் தயாரித்து விநியோகிக்கப்படுவது. இது மிகவும் சத்தான உணவு. இது 2 வயது குழந்தை முதல் வயதானவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

முதலில் ராகி மாவு தயாரிக்க…

ஒரு கிலோ ராகியை, நன்கு களைந்து தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு, மெல்லிய துணியை விரித்து, வெயிலில் நன்கு உலர்த்தவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்ததும், குருணைஇல்லாமல் நன்றாக அரைத்து, ஆறவைத்து, சலித்து டப்பாகளில் வைத்து பயன்படுத்தலாம்.

img_7353.jpg?w=455&h=303

இப்போதெல்லாம் ராகி மாவு கடைகைளில் 500 கி ,1 கிலோ பொட்டலங்களாக கிடைக்கிறது.அதை வாங்கியும் கூழ் தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 ஆழாக்கு

தண்ணீர் – 3 + 1 ஆழாக்கு

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 3 ஆழாக்கு தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 1 ஆழாக்கு தண்ணீரில் மாவை கட்டியில்லாமல் கரைக்கவும். அடுப்பின் தணலை குறைத்து கரைத்த மாவை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கட்டிதட்டாமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். நன்கு கெட்டியாக வந்தபின் இறக்கவும். ஆறியபின் தயிர் கலந்து  மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான உணவும் கூட.

குரக்கன்மா வேறு கேழ்வரகு மா வேறு இரண்டும் ஒன்று அல்ல.

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை ரெசிப்பி


கறிவேப்பிலை சாதம்

தேவையானவை:
 உப்பு சேர்த்து வடித்த பச்சரிசி சாதம் - அரை கிலோ
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
 சின்ன வெங்காயம் - 10
 பச்சைமிளகாய் - 2
 மிளகு - அரை டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பூண்டு - 5 பல்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p10.jpg

தாளிக்க:
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுந்து - கால் டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். வடித்த பச்சரிசி சாதத்தில் கலவையைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

கறிவேப்பிலைத் துவையல்

தேவையானவை:
 கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
 சின்ன வெங்காயம் - 10
 காய்ந்த மிளகாய் - 5
 பூண்டு - 5 பல்
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 எண்ணெய் -  தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

p10a.jpg

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் வதக்கிய அனைத்தையும் சேர்த்து கூடவே புளி, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். தோசை, இட்லிக்கு அருமையான சைட் டிஷ்.

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை :
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 பூண்டு - 10 பல்
 தேங்காய் - அரை முடி (துருவிக் கொள்ளவும்)
 மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுந்து - கால் டீஸ்பூன்
 குண்டு மிளகாய் - 3
 உப்பு - தேவையான அளவு

p10b.jpg

செய்முறை:
புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். பிறகு இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து  வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, குண்டு மிளகாய் சேர்த்துத் தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை இத்துடன் ஊற்றி கொதிக்கவிட்டு பச்சை வாசனை போனதும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:
தக்காளி வேண்டுமென நினைப்பவர்கள் வதக்கும் போது சேர்த்து வதக்கிப் பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை அடை

தேவையானவை:
 பச்சரிசி - 5 டேபிள்ஸ்பூன்
 துவரம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
 பாசிப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
 கடலைப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
 உளுந்து - 3 டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 4
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
 பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p10c.jpg

செய்முறை :
பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் உளுந்தை அரை மணிநேரம் ஒன்றாக ஊறவைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீர் வடித்து கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் மற்றும் பூண்டுப்பல் அரைத்த மாவுடன் கலந்து வைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை அடைகளாக வார்த்து எடுத்துப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

காலிஃபிளவர் வறுவலை முறுகலாகச் செய்வது எப்படி?

13244883_521227528065906_823798980170087

காலிஃபிளவரை பெரிய பூக்களாகப் பிரித்தெடுத்து புழுக்கள் இல்லாமல் நன்கு கழுவவும். பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்துவரும் போது காலிஃபிளவரைச் சேர்த்து உடனே அடுப்பை அணைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, தண்ணீரை வடிகட்டவும்.
ஒரு கிண்ணத்தில் மைதா மாவுடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து கெட்டியான தோசை மாவு பக்குவத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் உலர்ந்த ரொட்டித்தூளை வைத்துக் கொள்ளவும். காலிஃபிளவரை மைதா மாவுக் கலவையில் முக்கியெடுத்து, பிரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சூடான தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

 

 

 

 

கீழக்கரை மீன் குழம்பு

13260169_521208388067820_374164872872743

தேவையானவை :
வஞ்சர மீன் - அரை கிலோ
புளி - பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
பச்சைமிளகாய் - 4
தக்காளி - ஒன்று
பூண்டு - 100 கிராம்
தேங்காய் - ஒன்றில் பாதி (துருவிக்கொள்ளவும் )
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தில் பாதியை எடுத்து தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். மீனை சுத்தம் செய்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து மீதமுள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இதில் பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகுத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள கலவையை இத்துடன் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, இத்துடன் ஊற்றிக் கொதிக்கவிடவும். மீனைச் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைத்து மீன் வெந்ததும் இறக்கி மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

 

புளி சாதம்

தேவையானவை:
 புளி - இரண்டு எலுமிச்சை அளவு (சிறியது)
 வேர்க்கடலை - கால் கப்
 கறிவேப்பிலை - கால் கப்
 நல்லெண்ணெய் - கால் கப்
 கடுகு - 2 டீஸ்பூன்
 வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 உப்பு போட்டு வடித்த சாதம் - 4 கப்

வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க:
 மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகு - 2 டீஸ்பூன்
 கடலைப்பருப்பு -
2 டேபிள்ஸ்பூன்
 
எண்ணெயில் வறுத்து பொடிக்க:
 வெந்தயம் - அரை டிஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 10
 பெருங்காயம் - 1 டீஸ்பூன்
 கறுப்பு எள் - 2 டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - சிறிதளவு

p24a.jpg

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, வெறும் வாணலியில் வறுக்க கொடுத்துள்ளவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து பொடித்து வைத்து கொள்ளவும். இதில் இருந்து ஒரு டேபிள்ஸ்பூன் பொடியை தனியாக எடுத்து வைக்கவும். இனி, எண்ணெய் சேர்த்து வறுத்து பொடிக்க வேண்டியதை எல்லாம் தனித்தனியாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், காய்ந்த மிளகாய், வேர்க்கடலை என, ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துத் தாளிக்கவும். வெல்லம் மற்றும் புளிக்கரைசலை இத்துடன் சேர்த்துக் கொதிக்க விடவும். வறுத்தரைத்த இரண்டு பொடி வகைகளையும் புளிக்கரைசலில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தளதளவென்று கொதிக்க விடவும். புளிக்கரைசல் நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் நன்கு ஆறிய சாதத்தில் கலந்து கிளறவும். இனி, ஏற்கெனவே எடுத்து வைத்த ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்த பொடி மற்றும் கறிவேப்பிலையை சாதத்தில் தூவிப் பரிமாறவும்.

வாழைக்காய் சிப்ஸ்

தேவையானவை:
 முற்றிய
வாழைக்காய் - ஒன்று
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

p24b.jpg

செய்முறை:
வாழைக்காயின் மேல் தோலை சீவி நீக்கி விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எண்ணெயின் மேலாக பிடித்துக் கொண்டு வாழைக்காயை படபடவென்று சீவி விடவும். வாழைக்காய் வெந்து மொறுமொறு என்று ஆகும். அப்போது தேவையான உப்பு, மஞ்சள்தூள் கலந்த தண்ணீரில் இருந்து ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரை சூடான எண்ணெயில் ஊற்றவும். வாழைக்காய் எண்ணெயில் இருக்கும் போதே, ஊற்ற வேண்டும். எண்ணெய் புஸுபுஸுவென்று பொங்கி வரும். பயப்படத் தேவையில்லை. எண்ணெயில் தண்ணீரைத் தெளிக்கக் கூடாது. இனி வாழைக்காயை எடுத்தால் கடைகளில் கிடைப்பது போல மஞ்சள் நிறத்தில் மொறுமொறு என்று சிப்ஸ் கிடைக்கும்.

குறிப்பு:
சிப்ஸ் செய்யும் போது எண்ணெய் மிகவும் சூடாக இல்லாமலும், அதே நேரம் புகையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் சிப்ஸின் சுவைக்கு அடித்தளம்.

குடமிளகாய் மாங்காய் சாதம்

தேவையானவை:
 குடமிளகாய் - 2 கப்
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு போட்டு வடித்த சாதம் - 2 கப்
 கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:
 எண்ணெய் - கால் கப்
 கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு (அ)
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்

p24c.jpg

செய்முறை:
அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதை எல்லாம் சேர்த்துத் தாளித்து மாங்காயைச் சேர்த்து வதக்கவும். மாங்காய் அரைவேக்காடு வெந்ததும், உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் குடமிளகாயைச் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் கிரன்சியாக இருக்க வேண்டும். இத்துடன் ரெடியாக இருக்கும் ஆறிய வடித்த சாதத்தை கலக்கவும். இறுதியாக, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
மாங்காயைத் துருவினால் குழந்தைகள் எளிதாக சாப்பிடுவார்கள் என்றால் துருவிக் கொள்ளவும்.

பூரி மாவு

தேவையானவை:
 மைதா மாவு - கால் கிலோ
 கருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 சூடான எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பரந்த தாம்பாளத்தில் மைதா, உப்பு, கருஞ்சீரகம் சேர்த்து சூடான எண்ணெய் விட்டு பிசையவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை பூரிக்கு பிசைவது போல பிசைந்து, அரை மணி நேரம் மாவை மூடி ஊற வைக்கவும். மாவை அதிக நேரம் ஊறவிட்டாலும், மாவு தளர்வாக இருந்தாலும், பூரி பயணங்களின் போது சாப்பிட ஜவ்வு போலாகி விடும்.

பூரணம் செய்ய:
 கசகசா - 50 கிராம்
 உப்பு - தேவையான அளவு
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - சிறிதளவு

p24d.jpg

செய்முறை:
கசகசாவை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். அடுப்பில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அரைத்த விழுது, உப்பு, கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும். இனி பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி  ஒவ்வொரு உருண்டையின் உள்ளேயும் பூரணத்தை சிறிது வைத்து மூடி வட்டமாகத், தேய்க்கவும். பூரியை மீடியம் சைஸில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். காலை டிபன் உப்பு காரத்துடன் கூடிய ஸ்நாக்ஸ், என எதற்கும் அப்படியே சாப்பிட அருமையாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள என்று தனியாக ‘சைட் டிஷ்’ எதுவும் தேவைப்படாது.

டோக்ளா சாண்ட்விச்

மாவு தயார் செய்ய:
 கடலைப்பருப்பு - அரை கப்
 உளுத்தம்பருப்பு - அரை கப்
 பயத்தம்பருப்பு - ஒரு கப்
 பச்சரிசி குருணை - 2 கப்
 புளித்த தயிர் - ஒரு கப்
 இஞ்சி-பச்சைமிளகாய் பேஸ்ட் -
2 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பச்சரிசிக் குருணையை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு வகைகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு வகைகளை எல்லாம் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சரிசிக் குருணையை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இனி அரைத்த பருப்பு மற்றும் பச்சரிசிக் குருணையை ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தயிர், இஞ்சி-பச்சைமிளகாய் பேஸ்ட், பெருங்காயத்தூள் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து மாவில் சேர்த்துக் கலக்கவும். இனி, மாவை இட்லி அவிப்பது போல அவித்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து மாவில் கொட்டவும். வெந்த டோக்ளாவை சைட் டிஷ் இல்லாமல் கூட அப்படியே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

p24e.jpg

பச்சைமிளகாய்-கொத்தமல்லித்தழை சட்னி

தேவையானவை:
 பச்சைமிளகாய்- 3
 இஞ்சி - ஒரு துண்டு
 பொட்டுக்கடலை - அரை கப்
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - ஒரு கப்

செய்முறை:
எல்லா பொருட்களையும் மிக்ஸியில் ஒன்றாக சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். தாளிக்கத் தேவையில்லை. இனி டோக்ளாவை படத்தில் காட்டியிருப்பது போல துண்டுகள் போட்டு நடுவில் பச்சைமிளகாய் கொத்தமல்லித்தழை சட்னியை தடவி பரிமறவும்.
 
குறிப்பு:
டோக்ளாவை பெரும்பாலும், கடலைமாவில்தான் செய்வார்கள். அப்படியில்லாமல் பருப்பு வகைகளைக் கொண்டு இங்கே செய்யப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

இட்லி ரெசிப்பிக்கள்

 

* இட்லி-65
* இட்லி ஃப்ரைஸ்
* இட்லி மஞ்சூரியன்
ஓட்ஸ் ரவா இட்லி
இட்லி பர்கர்
சோள மாவு இட்லி
கீரை ஸ்டஃப்டு இட்லி
சில்லி இட்லி
இட்லி இன் ஹாட் கார்லிக் சாஸ்
இட்லி சோம் சோம்
ட்ரை கலர் இட்லி
ஸ்வீட் இட்லி

p31.jpg

கோயம்புத்தூர் டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையின் உதவிப் பேராசிரியரான மு.வெங்கடேஸ்வரன், நமக்காக இட்லி ரெசிப்பிக்களை வழங்கியிருக்கிறார்.

இட்லி-65

தேவையானவை:
 இட்லி - 5
 காஷ்மீரி மிளகாய்த்தூள் - 10 கிராம்
 கார்ன்ஃப்ளார் மாவு - 25 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது - 10 கிராம்
 கறிவேப்பிலை - 15 இலை
 மைதா மாவு - 40 கிராம்
 சீரகத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 ஓமப்பொடி - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - 100 மில்லி
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைப் பழம் - ஒன்றில் பாதி
 பெரிய வெங்காயத் துண்டுகள் - அலங்கரிக்க

p31a.jpg

செய்முறை:
ஒவ்வொரு இட்லியையும் தலா ஆறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, சீரகத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமப்பொடி, இஞ்சி-பூண்டு விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையில் இட்லித் துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையைத் தனியாக பொரித்தெடுக்கவும். இனி, பொரித்த இட்லித் துண்டுகளின் மேலே கறிவேப்பிலையைத் தூவி எலுமிச்சை மற்றும் வட்டமாக நறுக்கிய வெங்காய்த்துண்டுகளுடன் பரிமாறவும்.


இட்லி ஃப்ரைஸ்

தேவையானவை:
 இட்லி - 5
 உப்பு - தேவையான அளவு
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 100 மில்லி

பூண்டு சாஸ் தயாரிக்க:
 பெரிய வெங்காயம் - 20 கிராம்
 பூண்டு - 10 கிராம்
 தக்காளி சாஸ் - 50 கிராம்
 எண்ணெய் - 10 மில்லி
 செலரி இலைகள் - 5 கிராம்

p31b.jpg

செய்முறை:
இட்லிகளை நீளவாக்கில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். காய்ந்த எண்ணெயில் இட்லியைப் பொன்னிறமாகப் பொரித்து அதன்மீது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து புடைத்து வைத்துக் கொள்ளவும்.

பூண்டு சாஸ் செய்ய:
வெங்காயம், பூண்டு, செலரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடனாதும், வெங்காயம், பூண்டு, செலரி இலைகள் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி சாஸை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால், பூண்டு சாஸ் தயார். இட்லி ஃப்ரைஸை பூண்டு சாஸ் உடன் பரிமாறவும்.


இட்லி மஞ்சூரியன்

தேவையானவை:
 இட்லி - 6
 எண்ணெய் - 100 மில்லி
 இஞ்சி - 5 கிராம்
 பூண்டு - 5 கிராம்
 பெரிய வெங்காயம் - 30 கிராம்
 பச்சைமிளகாய் - 7
 வெங்காயத்தாள் - 5
 செலரி இலைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தக்காளி சாஸ் - 20 மில்லி
 சோயா சாஸ் - 10 மில்லி
 ரெட் சில்லி சாஸ் - 10 மில்லி
 தண்ணீர் - 30 மில்லி
 உப்பு - தேவையான அளவு

ஊற வைக்க:
 மைதா மாவு - 50 கிராம்
 கார்ன்ஃபிளார் மாவு - 20 கிராம்
 உப்பு - அரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

p31c.jpg

செய்முறை:
ஊற வைக்கக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு இட்லியை தலா ஆறு துண்டுகளாக்கி, இதை மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இனி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், வெங்காயத்தாள், செலரி இலைகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், செலரி சேர்த்து வதக்கவும். இத்துடன் தக்காளி சாஸ், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, பொரித்த இட்லிகளைச் சேர்த்து இட்லி உடையாதவாறு கிளறவும். தண்ணீர் வற்றி கலவை நன்கு வெந்ததும் இதன்மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்களைத் தூவி இறக்கவும். இட்லி மஞ்சூரியனை ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.


ஓட்ஸ் ரவா இட்லி

தேவையானவை:
 ரவை - 500 கிராம்
 ஓட்ஸ் - 200 கிராம்
 அவல் - 50 கிராம்
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
 முந்திரி - 15
 கொத்தமல்லித்தழை - 20 கிராம்
 துருவிய கேரட் - 50 கிராம்
 உப்பு - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 சோடா உப்பு (ஆப்பசோடா) - ஒரு டீஸ்பூன்
 தண்ணீர் - 250 மில்லி லிட்டர்

p31d.jpg

செய்முறை:
அவலை நன்றாகக் கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் ரவையை நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும். ஊற வைத்த அவல், ஓட்ஸ், வறுத்து வைத்திருக்கும் ரவை, பொன்னிறமாக வறுத்த பருப்புகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு, சோடா உப்பு (ஆப்பசோடா), துருவிய கேரட், மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கி, இட்லித் தட்டில் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். இட்லியுடன் தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியைச் சேர்த்து பரிமாறவும்.


இட்லி பர்கர்

தேவையானவை:
 இட்லி - 5
 வெண்ணெய் - 10 மில்லி
 புதினா சட்னி - 100 கிராம்
 கேரட் - 50 கிராம்
 வெள்ளரிக்காய் - 50 கிராம்
 தக்காளி - 50 கிராம்
 பெரிய வெங்காயம் - 50 கிராம்

கட்லெட் செய்ய:
 உருளைக்கிழங்கு - 150 கிராம்
 கேரட் - 30 கிராம்
 பச்சைப்பட்டாணி - 30 கிராம்
 பெரிய வெங்காயம் - 30 கிராம்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - இரண்டு கொத்து
 எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
 பிரட் தூள் - 50 கிராம்
 முட்டை வெள்ளைக்கரு - ஒரு முட்டை
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 உப்பு - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிள்காய் - 2 (பொடியாக நறுக்கியது)
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

p31e.jpg

கட்லட் செய்முறை:
உருளைக்கிழங்கிகை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், பச்சைப்பட்டாணி, கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர் சேர்க்காமல் நன்கு வதக்கி இறக்கவும். பிறகு இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறி சூடு ஆறுவதற்கு முன்பு சிறிய உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இதை கையில் வைத்து லேசாக அழுத்தி தட்டையாக்கிக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையையும் முட்டையின் வெள்ளைக்கருவில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

செய்முறை:
வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், தக்காளியை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். இட்லியை குறுக்காக நறுக்கி இரண்டாக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, இட்லியை பொன்னிறமாக இருபுறமும் புரட்டி எடுத்து அடுப்பை அணைக்கவும். இட்லிகளின் நடுவே புதினா சட்னியைத் தடவி அதன்மீது கேரட், வெள்ளரிக்காய், தக்காளியை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, அவற்றின் மேல் ஒரு கட்லெட்டை வைக்கவும். இறுதியாக ஏற்கெனவே கட் செய்து வைத்திருக்கும் இட்லியின் மேல் பாகத்தை வைத்தால், இட்லி பர்கர் தயார். தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி உடன் இட்லி பர்கரை பரிமாறவும்.


சோள மாவு இட்லி

தேவையானவை:
 கார்ன் ஃப்ளார் மாவு - 500 கிராம்
 தயிர் - 500 மில்லி
 எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 15
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 பச்சைமிளகாய் - 4
 கொத்தமல்லித்தழை - இரண்டு கொத்து
 இஞ்சி - ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 உப்பு - ஒரு டீஸ்பூன்
 சோடா உப்பு (ஆப்பசோடா) - ஒரு டீஸ்பூன்
 தண்ணீர் - 100 மில்லி

p31f.jpg

செய்முறை:
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். கார்ன்ஃப்ளார் மாவை தனியாக நிறம் மாறாமல் வதக்கி இதனுடன் வதக்கியவற்றைச் சேர்த்து பிசிறவும். இத்துடன் தயிர், உப்பு, சோடா உப்பு (ஆப்பசோடா), கொத்தமல்லித்தழை, தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி, ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். இட்லித் தட்டில் ஊற வைத்த மாவை ஊற்றி, ஆவியில் வேக வைக்கவும். கொத்தமல்லிச்சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் இதனை பரிமாறவும்.


கீரை ஸ்டஃப்டு இட்லி

தேவையானவை:
 இட்லி மாவு - ஒரு கிலோ
(உப்பு கலந்தது)
 பாலக்கீரை - ஒரு கட்டு
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பச்சைமிளகாய் - 3
 பூண்டு - 5 பல்
 பெரிய வெங்காயம் - 20 கிலோ
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - அரை டீஸ்பூன்

p31g.jpg

செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை நன்றாக கழுவிக் பொடியாக நறுக்கி, கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிய பின் நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து கீரையில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை வேகவிட்டு இறக்கவும். பின்னர் கீரைக் கலவையை மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும். இட்லித் தட்டில் கால்வாசி இட்லி மாவு, அதன் மேல் அரைத்த கீரை கலவையை ஊற்றி மீண்டும் சிறிதளவு இட்லி மாவை ஊற்றவும். ஆவியில் வேகவைத்தெடுக்கவும். ஸ்டஃப்டு இட்லியை காரசட்னியுடன் பரிமாறவும்.


சில்லி இட்லி

தேவையானவை:
 இட்லி - 5
 எண்ணெய் - 100 மில்லி
  (பொரிக்க)
 இஞ்சி - 5 கிராம்
 பூண்டு - 5 கிராம்
 பச்சைமிளகாய் - 6
 செலரி இலைகள் - 5 கிராம்
 பெரிய வெங்காயம் - 30 கிராம்
 குடமிளகாய் - 30 கிராம்
 ரெட் சில்லி சாஸ் - 10 மில்லி
 வெங்காயத்தாள் - 20 கிராம்
 சோயா சாஸ் - 10 மில்லி
 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் - 50 மில்லி

கலக்க:
 மைதா மாவு - 50 கிராம்
 கார்ன்ஃப்ளார் மாவு - 20 கிராம்
 உப்பு - அரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

p31h.jpg

செய்முறை:
மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு இட்லியை தலா ஆறு துண்டுகளாக்கி கரைத்த மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இஞ்சி, பூண்டு, செலரி இலைகள், வெங்காயத்தாள் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயை சதுரமாகவும், பச்சைமிளகாயை இரண்டு துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், செலரி இலை சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் சதுரமாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி, ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்றாகக் கலக்கி இதனுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கலவை ஒரு கொதிவந்ததும் பொரித்த இட்லியைச் சேர்த்து இட்லி உடையாதவாறு வதக்கி, தண்ணீர் வற்றும் வரை வேகவிட்டு இறக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி, சில்லி இட்லியைப் பரிமாறவும்.


இட்லி இன் ஹாட் கார்லிக் சாஸ்

தேவையானவை:
 இட்லி - 5
 எண்ணெய் - 100 மில்லி

பொரிக்க:
 மைதா மாவு - 50 கிராம்
 கார்ன்ஃப்ளார் மாவு - 20 கிராம்
 உப்பு - அரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

சாஸ் செய்ய:
 பூண்டு - 10 பல்
 பெரிய வெங்காயம் - 1 (30 கிராம்)
 செலரி இலை - 5 கிராம்
 எண்ணெய் - மூன்று டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு டீஸ்பூன்
 வினிகர் - ஒரு டீஸ்பூன்
 ரெட் சில்லி சாஸ் - 5 மில்லி
 தக்காளி சாஸ் - 15 மில்லி
 குடமிளகாய் - 50 கிராம்
 கார்ன்ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெஜிடபிள் ஸ்டாக் - 60 மில்லி
 தண்ணீர் - 10 மில்லி

p31i.jpg

செய்முறை:
ஒரு பவுலில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, மிளகுத்தூள், சோயாசாஸ், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு இட்லியை தலா ஆறு துண்டுகளாக நறுக்கி, அதை கரைத்து வைத்த மாவினுள் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெங்காயம், பூண்டு, செலரி இலைகள், குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கார்ன்ஃப்ளார் மாவில் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு, வெங்காயம், செலரிகள், குடமிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் ரெட் சில்லி சாஸ், தக்காளி சாஸ், வினிகர், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இந்தக் கலவையுடன் வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்துக் கலக்கி ஒரு கொதி வரும்வரை வேகவிடவும். இத்துடன் தண்ணீரில் கரைத்து வைத்திருக்கும் கார்ன்ஃப்ளார் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கலவை கெட்டியாகாதவாறு கலக்கிக் கொண்டே இருக்கவும். கலவை சாஸ் பதத்துக்கு கெட்டியாகும் போது பொரித்த இட்லிகளை சாஸில் சேர்த்து அவை உடையாதவாறு நன்றாகக் கலக்கி, சாஸ் இட்லியில் முழுமையாக சேர்த்து, ட்ரையாகும் வரை வதக்கி இறக்கவும்.


இட்லி சோம் சோம் ( Idly chom chom)

தேவையானவை:
 இட்லி - 5
 சர்க்கரைப் பாகு - 50 மில்லி

ஸ்டஃப்பிங் செய்ய:
 கோவா - 150 கிராம் (பால்கோவா)
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
 குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
 சர்க்கரை - 50 கிராம்
 பிஸ்தா - 5

p31j.jpg

செய்முறை:
இட்லியை படத்தில் காட்டியுள்ளது போல துண்டுகளாக்கிக் கொள்ளவும். இனி நறுக்கிய இட்லியின் ஒரு துண்டின் அடிப்பகுதியில் சர்க்கரைப் பாகை தடவிக்கொள்ளவும். வாணலியை சூடாக்கி, கோவா, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து பத்து நிமிடம் கிளறி, கலவை பிசுபிசுத்தன்மைக்கு வந்ததும் இறக்கவும். சர்க்கரைப்பாகு தடவிய இட்லித் துண்டின் அதே இடத்தில் கோவா கலவையை தேய்த்து விடவும். இனி, மற்றொரு துண்டின் மீது சர்க்கரைப் பாகு, பொடியாக நறுக்கிய பிஸ்தாவைச் சேர்த்து படத்தில் காட்டியுள்ளது போல சேர்த்து சோம் சோமை பரிமாறவும்.


ட்ரை கலர் இட்லி

தேவையானவை:
 இட்லி மாவு - அரை கிலோ
  (உப்பு கலந்தது)
ஆரஞ்சு கலருக்கு:
 கேரட் - 1 (60 கிராம்)

பச்சை கலருக்கு:
 புதினா - 50 கிராம்
 கொத்துமல்லித்தழை -
  50 கிராம்
  பச்சைமிளகாய் - 2
 எலுமிச்சைச் சாறு -
  அரை பழம்

p31k.jpg

செய்முறை:
இட்லி மாவை உப்பு போட்டு கலக்கி மூன்று பவுலில் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளவும். கேரட்டை சிறிதளவு தண்ணீர் தெளித்து  ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து ஒரு பவுலில் கலந்து கொள்ளவும். புதினா, கொத்துமல்லித்தழை, பச்சைமிளகாய், ஒரு சிட்டிகை உப்பு, எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மற்றொரு பவுலில் இருக்கும் இட்லி மாவுடன் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். மூன்றாவது ஒரு பவுலில் இருக்கும் ப்ளைன் இட்லி மாவை அப்படியே வைத்திருக்கவும்.

இட்லித் தட்டில் ஒவ்வொரு குழியிலும் முதலில் ஆரஞ்சு நிற மாவை சிறிது ஊற்றி, அதன்மீது சிறிதளவு வெள்ளைநிற சாதாரண மாவையும், அதன்மீது சிறிதளவு பச்சைநிற மாவையும் ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வேகவைத்து எடுத்த இட்லியானது, தேசியக் கொடி போன்ற தோற்றத்தில் இருக்கும். ட்ரை கலர் இட்லியை காரச் சட்னி, தேங்காய்ச் சட்னியுடன் பரிமாவும்.


ஸ்வீட் இட்லி

தேவையானவை:
 ரவை - 200 கிராம்
 துருவிய தேங்காய் - 100 கிராம்
 அவல் - 200 கிராம்
 வெல்லம் (பொடித்தது) - 75 கிராம்
 காய்ச்சி ஆற வைத்த பால் - 25 கிராம்
 முந்திரி - 20 கிராம்
 திராட்சை - 20 கிராம்
 ஏலக்காய் (பொடித்தது) - 7
 உப்பு - தேவையான அளவு

p31l.jpg

செய்முறை:
அவலை நன்றாகக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அவலில் இருக்கும் தண்ணீரை வடித்து, இதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் ரவை, வெல்லம், பால், முந்திரி, திராட்சை, ஏலக்காய், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் மாவை இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். தேங்காய்ப்பாலுடன் ஸ்வீட் இட்லியை பரிமாறவும்.
குறிப்பு:
தேவைப்பட்டால் ரவையை நிறம் மாறாமல் வறுத்தும் பயன் படுத்தலாம்.

Link to comment
Share on other sites

மீன் வாழைக்காய்

13233095_521889034666422_456736189509399

தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று
சங்கரா மீன் - 250 கிராம்
தக்காளி விழுது - 4 பழங்கள்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
புளி - 10 கிராம்
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வாழைக்காயை மீடியம் சைஸில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்து, இஞ்சி விழுது, தக்காளி விழுது சேர்த்து வதக்கி சுருண்டு வந்ததும் கெட்டியாக கரைத்த புளிக்கரைசலை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை கொதித்ததும், எண்ணெயில் பொரித்த வாழைக்காய், மீனையும் கலவையில் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.

Link to comment
Share on other sites

முளைப்பயறு சலாட்

தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு  – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சாட் மசாலா பொடி – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.

p138a.jpg

செய்முறை: முளைகட்டிய பச்சைப் பயறை வேகவிடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங் காயம், தக்காளி, எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா பொடி, உப்பு கலந்து வைக்கவும். பரிமாறும்போது கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு கப் குரக்கன் மா, 2 கப் அரிசி மா, 2 கப் உழுந்தாமா, 2 கப் சோழன் மா, 1 கப் மைதா மா கலந்து புட்டு செய்து பார்த்தேன் நல்ல சுவை சத்துள்ள உணவு.

 

முட்டை பொரியலுடன் பிள்ளைகளுக்கு கொடுத்தேன், அடுத்து எப்ப செய்வீர்கள் என கேட்கின்றார்கள்

புட்டு மாவை food processor machine இலகுவாக அடிக்கலாம், மாவை அடித்தபின் முள் கரட்டியால் தேங்காய் பூவை தூவி கிளறுவது சுலபம்

 

FoodProcessor-FPM910-01_800x600.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரக்கன் மாவும் உளுத்தம் மாவும் நல்ல சத்தானவை. தனியாகச் செய்து குடுத்தால் பெரியாக்களே சாப்பிடப் பஞ்சிப் படுவினம். உங்களின் கலவை வலு திறம்...! tw_blush:

Link to comment
Share on other sites

வாழைப்பூ சைவ மீன் குழம்பு

தேவையானவை:
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 தக்காளி - ஒன்று
 கீறிய பச்சை மிளகாய் - 2
 புளி - 50 கிராம்
 பூண்டு - 10 பல்
 மீன் குழம்புத்தூள் - 3 டீஸ்பூன்
 தேங்காய் - அரை மூடி
 சோம்பு - 2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய்- தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

பொரிக்க:
 வாழைப்பூ - தேவையான அளவு
 கார்ன்ஃப்ளார் - ஒரு பங்கு
 மைதா - ஒரு பங்கு
 உப்பு - தேவையான அளவு
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (காரத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்)
 எண்ணெய் - தேவையான அளவு

மீன் குழம்பு மசாலாத்தூள் செய்ய:
 மல்லி (தனியா) - அரை கிலோ
 காய்ந்த மிளகாய் - 300 கிராம்
 மஞ்சள்தூள் - 25 கிராம்
 கடலைப்பருப்பு - 25 கிராம்
 துவரம்பருப்பு - 25 கிராம்
 வெந்தயம் - 10 கிராம்
 சீரகம், மிளகு - 25 கிராம்

p9j.jpg

செய்முறை :
பொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு வாழைப்பூவை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும். மீன்குழம்பு செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவி சோம்பு, சின்ன வெங்காயம் 10 சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கலக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய். தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு கலந்து வைத்துள்ள புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். குழம்பின் பச்சை வாசனை போனதும் பொரித்த வாழைப்பூவை இத்துடன் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக வாழைப் பூவை வறை செய்வதுதான் வழக்கம்....! ஆனால் மீன் குழம்பும் நல்லா இருக்கும் போல்தான் இருக்கு....! ஆபிரிக்கன் கடையில வாழைப் பூ வாங்கிவந்து செய்து பார்க்க வேண்டும்....!

  • Like 1
Link to comment
Share on other sites

மரவள்ளிக்கிழங்கு தோசை

தேவையானவை:
 இட்லி மாவு - 100 கிராம்
 மரவள்ளிக்கிழங்கு - 100 கிராம்
 பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3
 கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சின்ன வெங்காயம் - 50 கிராம்
 உப்பு - தேவையான அளவு
 கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 அரிசி மாவு  - 2 டேபிள்ஸ்பூன் (வரகரிசி மாவு)

p83d.jpg

செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அரிசி மாவையும் இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி இட்லி மாவில் சேர்த்து உப்பு போட்டு கலக்கி 2 மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு, மாவை கல்லில் ஊற்றி தோசையாக வார்த்தெடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு:
ஊற வைத்த அரிசி, உளுந்துடன், நறுக்கிய கிழங்கைச் சேர்த்து அரைத்து, புளிக்க வைத்தும் தோசையாக வார்க்கலாம். அரிசி மாவை சேர்த்தால் தோசை மொறு மொறுவென்று வரும்.

Link to comment
Share on other sites

வாழைப்பூ சப்பாத்தி

தேவையானவை:
 கோதுமை மாவு - கால் கிலோ
 பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்
  நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்
(ஒரு கைப்பிடி)
 சின்ன வெங்காயம் - 7
 பச்சைமிளகாய் - ஒன்று
 பூண்டு - 2 பல்
 சீரகம் - 2 சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 தயிர் - 2 டீஸ்பூன்

p9b.jpg

செய்முறை :
வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
வாழைப்பூ சீக்கிரத்தில் கறுத்துவிடும். எனவே, மாவு பிசைந்ததும் சப்பாத்தி போடுவது நல்லது.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.