Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்

 

உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது மிக சுலபம். இதை மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

 
மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்
 
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 200 கிராம்
பிரட் - 6
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சாட் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3
சோள மாவு - 2 டீஸ்பூன்
சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

CA728CEC-B7CB-4E17-8F9D-9E90A0674375_L_s

செய்முறை :

* பிரட்டை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து விடவும்.

* கேரட், உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்துக் கொள்ளவும்.

* இஞ்சி தோலை உரித்து விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மைய இடித்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, கேரட், இடித்து வைத்த இஞ்சி மசாலா, சீரகப் பொடி, சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

* நன்கு பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையில் ஊற வைத்த பிரட்டை தண்ணீர் பிழிந்து விட்டு சேர்த்து கார்ன் ஃபிளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

* பிறகு உருளைக்கிழங்கு மாவை பந்து போல் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக தேய்த்து பிடித்துக் கொள்ளவும்.

* அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் உருண்டையாக பிடித்து வைத்த உருளைக்கிழங்கு உருண்டையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* பொரித்த உருளைக்கிழங்கில் லாலிபாப் ஸ்டிக்கை சொருகி வைத்து பரிமாறவும்.

* சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி!
Link to comment
Share on other sites

சூப்பரான சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா

 

சில்லி முட்டை மசாலா சிறிது கிரேவி போல் இருப்பதால் மசாலாவின் சுவை தான் தனி சிறப்பு. இந்த ரெசிபியை செய்வது மிக சுலபம். இந்த முட்டை மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்..

 
 
 
 
சூப்பரான சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா
 
தேவையான பொருட்கள் :

வேக வைத்த முட்டை - 2
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கிராம்பு, பூண்டு - 2
உப்பு - சுவைக்கேற்ப
சோயா சாஸ் -  1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
புளிக்கரைசல் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

9A014AF4-F50D-4A84-90C8-244DC4C75A3E_L_s

செய்முறை :

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் இட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.

* அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு இட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

* இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.

* சில்லி முட்டை மசாலா ரெடி!

* சில்லி முட்டை மசாலாவை சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் அல்லது ரொட்டி, பராத்தா உடன் சேர்த்து சாப்பிடலாம்.
Link to comment
Share on other sites

மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா

 

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, அவல் சேர்த்து போண்டா செய்து கொடுக்கலாம். இந்த அவல் போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா
 
தேவையான பொருட்கள் :

தட்டை அவல் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - ஒன்று,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3,
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 200 கிராம்,
உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு.

67AA7E43-96AA-4383-920F-2BEF74F16138_L_s

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.

* வெங்காயம்,  ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

* கடாயை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை போண்டா சைஸில் உருட்டி, சூடான எண்ணெயில், போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.

* சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா ரெடி.
Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கு விருப்பமான இறால் ஃப்ரைடு ரைஸ்

 

இன்று சிக்கனைக் கொண்டு ஃப்ரைடு ரைஸ் செய்கிறோமோ, அதேப் போன்று இறாலைக் கொண்டு எப்படி ஃப்ரைடு ரைஸ் செய்வதென்று விரிவாக பார்க்கலாம்.

 
 
குழந்தைகளுக்கு விருப்பமான இறால் ஃப்ரைடு ரைஸ்
 
தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
இறால் - 250 கிராம் (சிறியது)
கேரட் - 3
பீன்ஸ் - 10
குடமிளகாய் - 1
வெங்காயத்தாள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - சிறிது

201703291246068134_prawn-fried-rice._L_s

செய்முறை:

* கேரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7-8 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியில் வெங்காயத் தாள் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய, பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள காய்கறிகளைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி, வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

* கடைசியாக அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி இறக்கினால், சுவையான இறால் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!!
Link to comment
Share on other sites

உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இன்று உடனே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் - 10
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு

201703291527278841_Gooseberry-pickle._L_

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

* சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

* நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக பிசறி விடவும்.

* வெறும் கடாயில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

* அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

* சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

* இது 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன்

 

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
குழந்தைகளுக்கான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன்
 
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 3,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயத்தாள் - சிறிதளவு
சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன்,
பச்சரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

மஞ்சூரியன் கிரேவிக்கு:

கறிவேப்பிலை - சிறிது,
சின்ன வெங்காயம்  - 50 கிராம்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.



செய்முறை:

* சின்ன வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி அரைவேக்காடு பதத்துக்கு வேகவைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், பச்சரிசி மாவுடன் மிளகுத்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவாகக் கரைக்கவும்.

* இந்த மாவில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்துப் புரட்டவும்.

* அடுத்து வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு புரட்டி வதக்கவும்.

* கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும்.

* சூப்பரான ஆலு மஞ்சூரியன் ரெடி.
Link to comment
Share on other sites

நெல்லிக்காய் ரெசிப்பி

 

111p1.jpg 

நெல்லிக்காய் புலாவ்
 நெல்லிக்காய் ரசம்
 நெல்லிக்காய் கொத்சு
 ஹனி நெல்லி
 நெல்லிக்காய் பச்சடி
 நெல்லிக்காய் தொக்கு
 நெல்லிக்காய் ஜாம்
 நெல்லி-கொத்தமல்லி மோர்
 நெல்லி சூப்
 நெல்லிக்காய் மரப்பா

111p2.jpg

ல்வேறு சத்துகளையும் மருத்துவக் குணங்களையும் கொண்ட பெரிய நெல்லிக்காயில்... நாவுக்கு ருசியான, விதவிதமான ரெசிப்பிகளை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் சுதா செல்வகுமார். சமைத்து, ருசித்து, பரிமாறி மகிழுங்கள்; ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

111p3.jpg

நெல்லிக்காய் புலாவ்

தேவையானவை:

 பாஸ்மதி அரிசி - ஒரு கப்
 நெல்லிக்காய் - 15
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப)
 கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
 வறுத்த வேர்க்கடலை, உளுந்துப்பொடி –  தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 பட்டை - அரை அங்குலத்துண்டு
 கிராம்பு - 2
 அன்னாசிப்பூ -  ஒன்று
 நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு,  நீரை வடித்துவிட்டு  வெறும் வாணலியில் வறுக்கவும். இரண்டு கப் தண்ணீர்  சேர்த்து பொலபொலவென்று சாதமாக வடிக்கவும்.  பாதி நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கித் துருவவும், மீதி நெல்லிக்காய்களைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி... கடுகு,  சீரகம், வேர்க்கடலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து... பச்சை மிளகாய் விழுது, நெல்லிக்காய்த் துருவல், உப்பு, நெல்லிக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், உளுந்துப்பொடி  சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு;

முழு வெள்ளை உளுந்தை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொண்டால் உளுந்துப் பொடி ரெடி.


111p4.jpg

நெல்லிக்காய் ரசம்

தேவையானவை:

 நெல்லிக்காய் - 4
 துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 வெந்தயம் – கால் டீஸ்பூன்
 பூண்டு – 2 பல்
 காய்ந்த மிளகாய் -  2
 மிளகு – ஒரு டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை 
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய், துவரம்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கிவிட்டு, வேகவைத்ததை மசிக்கவும். மிக்ஸியில் சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதனுடன்  மசித்த நெல்லி - பருப்பு விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  ஒரு கொதிவிட்டு இறக்கவும்.  கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


111p5.jpg

நெல்லிக்காய் கொத்சு

தேவையானவை:

 நெல்லிக்காய் -  10
 சின்ன வெங்காயம் - கால் கப்
 மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை
 தனியா, கடலைப்பருப்பு, சீரகம், கடுகு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி –  தலா ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 4
 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய், உப்பு -   தேவையான அளவு

செய்முறை: நெல்லிக்காயைத் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். ஆறிய பின் கொட்டையை நீக்கி சுளையை மசிக்கவும்.  நெல்லிக்காய் வேகவைத்த நீரை தனியாக எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு  எண்ணெய்விட்டு சூடானதும் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுக்கவும். ஆறிய பின் ஒன்றாக சேர்த்துப் பொடித்தால் கொத்சு பொடி தயார். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு நெல்லிக்காய் விழுது, நெல்லிக்காய் வேகவைத்த நீர்  ஊற்றி  ஒரு கொதிவிடவும். பிறகு சாம்பார் பொடி, மஞ்சள்தூள் போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் கொத்சு பொடி, வெந்தயப்பொடி தூவி இறக்கவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையால் அலங்கரித்துப் பரிமாறவும்.


111p6.jpg

ஹனி நெல்லி

தேவையானவை:

 நெல்லிக்காய் – கால் கிலோ
 தேன் - அரை கிலோ
 குங்குமப்பூ – ஒரு சிட்டிகை (விரும்பினால்)

செய்முறை: நெல்லிக்காயைச் சுத்தமான நீரில் அரை மணி நேரம் போட்டுவைக்கவும். பிறகு எடுத்து ஈரம் போக துடைக்கவும். வெயிலில் நன்கு காயவைக்கவும். தேனில் பாதியளவை கண்ணாடி ஜாரில் ஊற்றவும். அதன் மீது நெல்லிக்காயைப் போடவும். பிறகு மீதமுள்ள தேனை மேலே ஊற்றவும். கண்ணாடி ஜாரை  சுத்தமான வெள்ளைத் துணியால் மூடவும். வெயில் படும் இடத்தில் இரண்டு நாள்கள் வைக்கவும். பிறகு, வெள்ளைத் துணியை எடுத்துவிட்டு மூடி போட்டு இறுக்கமாக மூடவும். ஜாரைக் குலுக்கவும். பிறகு, மீண்டும் வெயில் படும் இடத்தில் ஒரு நாள் வைக்கவும். நெல்லியில் தேன் இறங்கி, ஊறிவிடும். (விருப்பப்பட்டால் மேலே குங்குமப்பூ சேர்க்கலாம்).

குறிப்பு;

பாட்டிலில் நெல்லி - தேனை முக்கால்வாசி நிரப்பினால் போதும். தேன் ஊற ஊற நெல்லி பெரிதாகும். முழுவதும் தேன் - நெல்லி நிரப்பினால் அடுத்த இரு தினங்களில் நிரம்பி வழியும். நெல்லிக்காயின் கொட்டையை எடுத்துவிட்டு நறுக்கியும் தேனில் ஊறவைக்கலாம்.


111p7.jpg

நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை:

 நெல்லிக்காய் - 2
 பச்சை மிளகாய் - 2
 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
 தயிர் - ஒரு கப்
 கடுகு -  அரை டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு
 
செய்முறை: நெல்லிக்காயைத் துருவவும்.  சிறிதளவு நெல்லித் துருவலை தனியாக எடுத்து வைக்கவும். நெல்லிக்காய்த் துருவல், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய்,  உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைக்கவும். வாணலியில்  சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, இஞ்சித் துருவல் தாளித்து நெல்லிக்காய் விழுதில் சேர்க்கவும்.  பரிமாறும் முன் தயிருடன் கலந்து தனியாக எடுத்துவைத்த சிறிதளவு நெல்லித் துருவலை மேலே தூவி பரிமாறவும்.


111p8.jpg

நெல்லிக்காய் தொக்கு

தேவையானவை:

 நெல்லிக்காய் துண்டுகள் - 2 கப் (கொட்டையை நீக்கவும்)
 கடுகு, மஞ்சள்தூள் - தலா  அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
 வறுத்து அரைத்த   வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் –  ஒரு சிட்டிகை
 நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: நெல்லித் துண்டுகளை ஆவியில் வேகவிடவும். ஆறிய பின் சுளைகளாக உதிர்க்கவும். மிக்ஸியில் நெல்லி சுளைகளைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி... கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து,  நெல்லி விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். நன்கு வெந்து சுருள வரும்போது வெந்தயப்பொடி தூவி இறக்கவும். ஈரம் இல்லாத, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இது நீண்ட நாள்கள் நன்றாக இருக்கும்.


111p9.jpg

நெல்லிக்காய் ஜாம்

தேவையானவை:

 நெல்லிக்காய் – அரை கிலோ
 சர்க்கரை (பொடித்தது) - 2 கப்
 சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா டீஸ்பூன்
 ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை

செய்முறை: நெல்லிக்காயை ஆவியில் வேகவிடவும். ஆறிய பின் கொட்டையை நீக்கி  நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுது, பொடித்த சர்க்கரையை வாணலியில் சேர்த்துக் கிளறவும்.  நன்கு சுருண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், ஃபுட் கலர் சேர்த்துக் கிளறி இறக்கவும். 

குறிப்பு;

சர்க்கரைக்குப் பதிலாக வெல்லப்பாகு பயன்படுத்தியும் செய்யலாம்.


111p10.jpg

நெல்லி - கொத்தமல்லி மோர்

தேவையானவை:

 நெல்லிக்காய் - 5
 மோர் - 3 கப்
 இஞ்சித் துருவல், ஓமம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 பச்சை மிளகாய் - 2
 கடுகு - அரை டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: ஒரு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் ஓமம், இஞ்சித் துருவல், சிறிதளவு கொத்தமல்லித்தழை, சீரகம், பச்சை மிளகாய் ஒன்று, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். மோருடன் அரைத்த விழுதைக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மோரில் சேர்க்கவும். மீதமுள்ள கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.


111p11.jpg

நெல்லி சூப்

தேவையானவை:

 நெல்லிக்காய் - 2
 வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள், பாசிப்பருப்பு, வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
 கிராம்பு - 2
 பட்டைத்தூள் - அரை டீஸ்பூன்
 வெள்ளை வெங்காயத் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு -  தேவையான அளவு

செய்முறை: நெல்லிக்காய், பாசிப்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவைத்து ஆறிய பின் மசிக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு, சூடானதும், வெங்காயம், கிராம்பு, பட்டைத்தூள் சேர்த்து வதக்கி...  நெல்லி விழுது, தேவையான அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.


111p12.jpg

நெல்லிக்காய் மரப்பா

தேவையானவை:

 நெல்லிக்காய் - ஒரு கிலோ
 சர்க்கரை - அரை கிலோ
 ஏலக்காய்த்தூள், மிளகுத்தூள்
 கறுப்பு உப்பு - தலா ஒரு டீஸ்பூன்
 பூரா சர்க்கரை - கால் கப்

செய்முறை: இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் நெல்லிக்காயைப் போட்டு பத்து நிமிடங்கள் வேகவைக்கவும்.  பிறகு, கொட்டைகளை நீக்கி சுளைகளாக  உதிர்த்துக்கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் நெல்லி சுளைகள், சர்க்கரை சேர்த்து இரண்டு நாள்கள் மூடி வைக்கவும். நெல்லிக்காயில் சர்க்கரையின் இனிப்பு அதில் இறங்கி இருக்கும். சர்க்கரை தண்ணீரை வடிகட்டவும். இதை பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு இரண்டு நாட்கள் உலர்த்தவும்.  நன்கு உலர, உலர நெல்லி  கடினமாகும். பிறகு இதனுடன் பூரா சர்க்கரை, மிளகுத்தூள், கறுப்பு உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.  காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். நெல்லி மரப்பாவை ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.

குறிப்பு:

பூரா சர்க்கரை  செய்ய:  ஒரு கப் சர்க்கரைக்கு 5 டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டு திக்கான பாகு காய்ச்சவும். இதில் அரை டீஸ்பூன் நெய் விடவும். இறக்கிவைத்து ஆறவிடவும், இந்த சர்க்கரைப் பாகு கட்டியை மிக்ஸியில் நைஸாக பொடித்துக்கொள்ளவும். இதுதான் பூரா சர்க்கரை.

Link to comment
Share on other sites

புத்துணர்ச்சி தரும் மாதுளை சப்போட்டா சாலட்

 

 
 

வெயில் நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். இந்த வகையில் இன்று மாதுளை சப்போட்டா சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
புத்துணர்ச்சி தரும் மாதுளை சப்போட்டா சாலட்
 
தேவையான பொருட்கள் :

மாதுளை முத்துக்கள் - 2 கப்,
சப்போட்டா - 3,
ஆப்பிள் - 2 துண்டுகள்,
லெமன் சாறு - அரை ஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்.
201703311046226197_Sapota-Pomegranate-Sa

செய்முறை:

* சப்போட்டாவின் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

* ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த சப்போட்டா விழுது, பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடைசியாக தேன், லெமன் சாறு கலந்து பரிமாறவும்.

* மாதுளை சப்போட்டா சாலட் ரெடி.

* வித்தியாசமான இந்த சாலட், வெயில் நேரத்தில் உடலுக்கு மிகவும் நல்லது.
Link to comment
Share on other sites

சூப்பரான சைடு டிஷ் புதினா இறால் மசாலா

 

சப்பாத்தி, சாதம், புலாவ், பூரிக்கு தொட்டு கொள்ள இந்த புதினா இறால் மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான சைடு டிஷ் புதினா இறால் மசாலா
 
தேவையான பொருட்கள் :

இறால் - 200 கிராம்
புதினா - 1 சிறிய கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
பூண்டு - 5 பற்கள்
பச்சை மிளகாய் - 1-2
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 100 மி.லி
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்

201704011057385467_Prawn-green-Masala._L

செய்முறை :

* இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும்.

* புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இன்னொரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

* இப்போது ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 10 நிமிடம் வேக வைக்கவும்.

* அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.

* இப்போது சுவையான புதினா இறால் மசாலா தயார்!

* இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
Link to comment
Share on other sites

சூப்பரான சத்து நிறைந்த குதிரைவாலி தயிர் சாதம்

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான சத்து நிறைந்த குதிரைவாலி தயிர் சாதம்
 
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி - 1 கப்
நீர் - 3 கப்
தயிர் - 1/2 கப்
பால் - 2 கப்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

201704011309122628_kuthiraivali-curd-ric

செய்முறை :

* கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

* வேக வைத்த சாதத்தில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பின் பெருங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து, கிளறி வைத்த சதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

* சூப்பரான சத்து நிறைந்த குதிரைவாலி தயிர் சாதம் ரெடி.
Link to comment
Share on other sites

சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரி

 

இன்று இரவு ஸ்பெஷலாக வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளதா? சரி அப்படியானால் உருளைக்கிழங்கு மசாலா பூரி செய்து சாப்பிடுங்கள்.

 
 
 
 
சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரி
 
தேவையான பொருட்கள் :

கடலை மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
தயிர் - அரை கப்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
ஓமம் - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

201704031522368094_Potato-Masala-Puri._L
 
செய்முறை  :

* உருளைக்கிழங்கை வேகவைத்து மிக்சியில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, உப்பு, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், ஓமம், சீரகம், கரம்மசாலா தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

* இந்த மாவுடன் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவாக பிசைந்து அரை மணிநேரம் ஊற விடவும்.

* பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டையளவு மாவை எடுத்து தேய்த்து பூரியாக திரட்டவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த மாவை போட்டு பூரியை பொரித்து எடுக்கவும்.

* சுவையான உருளைக்கிழங்கு மசாலா பூரி தயார்.

* இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை.
Link to comment
Share on other sites

சைவ பிரியர்களுக்கான காளான் சாதம்

சைவ உணவாளர்களுக்கு காளான் ஒரு அருமையான உணவுப் பொருள். அத்தகைய காளானைக் கொண்டு மதியம் உணவு செய்ய நினைத்தால், காளான சாதம் செய்யுங்கள்.

 
சைவ பிரியர்களுக்கான காளான் சாதம்
 
தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1 ஸ்பூன்
காளான் - 200 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

201704061254306917_mushroom-rice._L_styv

செய்முறை:

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் தீயை குறைவில் வைத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் காளானை போட்டு கிளறி, மிளகு தூள், சிறிது தண்ணீர் ஊற்றி, காளானை வேக வைக்க வேண்டும்.

* காளான் நன்கு வெந்து, தண்ணீர் சுண்டியதும், அதில் சாதத்தைப் போட்டு கிளறி, அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைக்கவும்.

* அடுத்து கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி பரிமாறவும்.

* சுவையான காளான் சாதம் ரெடி!!!
Link to comment
Share on other sites

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகை வைத்து ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்
 
தேவையான பொருள்கள் :

முழு ராகி - 1 கப் or ராகி மாவு 1 ½ கப்
பச்சரிசி - 1/2 கப்
இட்லி அரிசி - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/ 4 கப்
அவல் - 1/2 கப்
உளுந்து - 1/4 கப்
உப்பு - சிறிது

201704070916065129_ragi-appam._L_styvpf.

செய்முறை :

* ஊற வைத்த பச்சரிசி, இட்லி அரிசி, தேங்காய் துருவல், அவல், முழு ராகி or ராகி மாவு ஆகியவற்றை முதல் நாளே அரைத்துக் கொள்ளுங்கள். முழு ராகி இல்லாவிடில், ராகி மாவை அரிசி உடன் சேர்த்து அரைத்து புளிக்க வைக்க வேண்டும். அரிசி மற்ற பொருகள் அரைத்த பின் ராகி மாவாக தான் இருக்கிறது கலந்து விடலாம் என்று நினைக்காமல், மிக்ஸியில் அரிசி உடன் ராகி மாவு போட்டு அரைக்க வேண்டும்.

* அடுத்த நாள் காலையில், தண்ணீர் விட்டுத் தோசை மாவு போலக் கரைத்துக் கொள்ளுங்கள்.

* ஆப்பச் சட்டியை அடுப்பில் வைக்கவும். ஒரு கரண்டி மாவை எடுத்து, அதில் ஊற்றவும். சட்டியை இரு புறமும் பிடித்துக் கொண்டு, ஒரு சுற்றுச் சுற்றினால், அதன் மத்தியில் ஊற்றப்பட்டிருக்கும் மாவு, நடுவில் கனமாகவும், ஓரங்களில் மென்மையாகவும் படியும். உடனே சட்டியை மூடி, அளவாகத் தீயை எரிய விட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆப்பம் வெந்தவுடன் எடுக்கவும்.

* தேங்காய்ப் பாலுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து, ஆப்பத்தில் ஊற்றிச் சாப்பிடவும்.

* தேங்காய்ப் பாலுக்குப் பதிலாகக் கருப்பு சுண்டல் குருமா சேர்த்துக் சாப்பிட நன்றாக இருக்கிறது

* ராகி ஆப்பம் தேங்காய் பால் உடன் சாப்பிடுவதை விட கருப்பு கொண்டக்கடலை குருமா சாப்பிட அருமையாக இருக்கிறது.
Link to comment
Share on other sites

சூப்பரான வெந்தய மசாலா சாதம்

ஆந்திராவில் இந்த வெந்தய மசாலா சாதம் மிகவும் பிரபலம். ஸ்பைசியாக சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.

 
சூப்பரான வெந்தய மசாலா சாதம்
 
தேவையான பொருட்கள் :

அரிசி - 300 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 15
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

201704081259392026_Fenugreek-spiced-rice

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

* தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும்.

* அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.

* பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வெந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும்.

* இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

* இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும்.

* கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

* சூப்பரான வெந்தய மசாலா சாதம் ரெடி.
Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கு விருப்பமான காரமான காளான் மஞ்சூரியன்

சைனீஸ் உணவுகளிலேயே மஞ்சூரியன் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது காளானை வைத்து மஞ்சூரியனை எப்படி சுவையான ருசியில் செய்வதென்று பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான காரமான காளான் மஞ்சூரியன்
 
தேவையான பொருட்கள் :

பட்டன் காளான் - 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 4-5 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201704081515166638_mushroom-manchurian._

செய்முறை:

* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

* காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.

* ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* கழுவி தனியாக வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு போட்டு சிறிது வதக்கிய பின்னர் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.

* இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி!!!
Link to comment
Share on other sites

மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா

 

மாலையில் காபி, டீயுடன் சூடாக ஏதாவது சாப்பிட விரும்பினால் முட்டை போண்டா செய்து சாப்பிடலாம். இன்று இந்த முட்டை போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா
 
தேவையான பொருட்கள் :

முட்டை - 6 (வேக வைத்தது)
கடலை மாவு - 1 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

201704101527241217_egg-bonda._L_styvpf.g

செய்முறை:

* முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து வைக்கவும்.

* ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* அதேப் போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும்.

* இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா ரெடி!!!
Link to comment
Share on other sites

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி

 

தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காயை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும். இன்று சர்ச்சரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி
 
தேவையான பொருட்கள் :

கோவக்காய் - 1 கப்
தக்காளி - 3
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை  - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
கரம் மசாலா தூள் - சிறிதளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்)
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 பத்தை

201704121039487748_kovakkai._L_styvpf.gi

செய்முறை :

* கோவக்காயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சிறிதளவு உப்பு போட்டு கோவக்காயை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

* வடிகட்டிய அதே சுடுதண்ணீரில் தக்காளியை போட்டு வேக வைத்து தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த கோவக்காயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

* அதே கடாயில் சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்ததும் அரைத்த தக்காளி சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகுமாறு 3 நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் வறுத்த கோவக்காயை தக்காளியில் போட்டு தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும்.

* அடுத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, கரம் மசாலா தூள் போட்டு சப்ஜி திக்கான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

* சூப்பரான கோவக்காய்  சப்ஜி ரெடி!
Link to comment
Share on other sites

பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி

 

இட்லி மற்றும் தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் வடகறி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. இன்று இந்த வடகறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி
 
தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய - 2
உப்பு - தேவையான அளவு

கிரேவிக்கு...

வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் பால் - 1 கப்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

201704121517295475_vada-kari12._L_styvpf

செய்முறை:

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* கடலைப் பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆறியதும் துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி வதக்கவும்.

* அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

* நன்றாக கொதிக்கும் போது தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

* திக்கான பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள வடைகளை போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

* சூப்பரான சைடு டிஷ் வடைகறி ரெடி!!!
Link to comment
Share on other sites

சித்திரை ஸ்பெஷல் ரெசிப்பி

 

7p1.jpg

 கல்கண்டு சாதம்7p2.jpg
 கேரட் ரைஸ்
 பாசிப்பயறு மசியல்
 பீன்ஸ் பொரியல்
 மைசூர் ரசம்
 தட்டப்பருப்பு போண்டா
 வெஜிடபிள் உருண்டைக் குழம்பு
 சேப்பங்கிழங்கு வறுவல்
 நீர்பூசணிக் கூட்டு
 மாங்காய் - வேப்பம்பூ பச்சடி
 எலுமிச்சைத் தொக்கு
 முக்கனிப் பாயசம்

புத்துணர்வு பிறக்கும்... கோடை கொண்டாட்டம் தொடங்கும்... சித்திரை என்றாலே சிறப்புதானே? தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவின் பல மாநிலங்களில் சித்திரைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இந்நன்னாளில் ரசித்து ருசித்து மகிழும் வகையில் தலைவாழை விருந்து ரெசிப்பிகளை அளிக்கிறார் கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்.

7p3.jpg

கல்கண்டு சாதம்

தேவையானவை:

 பச்சரிசி, கல்கண்டு - தலா 200 கிராம்
 பால் - 200 மிலி (காய்ச்சி ஆறவைத்தது)
 முந்திரி, திராட்சை - தலா 10
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே வைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கல்கண்டை மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். குக்கரில் பச்சரிசியுடன் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும். ஆறியதும் குக்கரைத் திறந்து வெந்த சாதத்தை நன்கு மசிக்கவும். இதனுடன் பொடித்த கல்கண்டு, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:

பால் சேர்க்காமல் பச்சரிசியைக் குழைய வேகவைத்தும் செய்யலாம்.


7p4.jpg

கேரட் ரைஸ்

தேவையானவை:

 பாசுமதி அரிசி - கால் கிலோ
 தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
 கேரட் துருவல் - ஒரு கப்
 கேரட் துண்டுகள் - ஒரு கப்
 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பச்சைமிளகாய் - 3 (இரண்டாகக் கீறவும்)
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பட்டை, கிராம்பு - தலா 2
 ஏலக்காய் - ஒன்று
 பிரியாணி இலை - சிறிதளவு
 நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியைக் கழுவி, களைந்து வைக்கவும். கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். இதனுடன் கேரட் துருவல், கேரட் - தேங்காய்ப் பால், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதி வரும்போது அரிசியைச் சேர்த்து மூடி, இரண்டு விசில் விட்டு இறக்கவும்.

குறிப்பு:

ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் போதுமானது.


7p5.jpg

பாசிப்பயறு மசியல்

தேவையானவை:

 பாசிப்பயறு - 200 கிராம்
 பூண்டு - 6 பல் (ஒன்றிரண்டாகத் தட்டவும்)
 சின்ன வெங்காயம் - 15 (தோல் உரித்து வட்டமாக நறுக்கவும்)
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்)
 சீரகம் - அரை டீஸ்பூன்
 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 நெய் - 4 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் பச்சைப் பயறை லேசாக வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய்சேர்த்து... கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வெந்த பயறு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி மசிக்கவும்.


7p6.jpg

பீன்ஸ் பொரியல்

தேவையானவை:

 பீன்ஸ் - கால் கிலோ
 பாசிப்பருப்பு - 25 கிராம்
 காய்ந்த மிளகாய் - 2
 தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பீன்ஸைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். குக்கரில் பீன்ஸ், உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த காய் கலவையைச் சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கி, தேங்காய்த்துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.


7p7.jpg

மைசூர் ரசம்

தேவையானவை:

 தனியா (முழு மல்லி) - 3 டீஸ்பூன்
 துவரம்பருப்பு - 5 டீஸ்பூன்
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 புளி - எலுமிச்சை அளவு
 தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 துவரம்பருப்பு - 50 கிராம்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 வெல்லம் - சிறிதளவு
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 நெய் - 3 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் தனியா (முழு மல்லி), 5 டீஸ்பூன் துவரம்பருப்பு, மிளகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துப் பவுடராகப் பொடிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும்.
துவரம்பருப்பை வேகவைத்து எடுக்கவும். வாணலியில் புளிக்கரைசல், தக்காளி, உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த துவரம்பருப்பு, வறுத்து அரைத்தப் பொடி, வெல்லம் சேர்த்து நன்கு கொதிவந்ததும் இறக்கவும். மற்றொரு வாணலியில் நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லித்தழைத் தூவி அலங்கரிக்கவும்.


7p8.jpg

தட்டப்பருப்பு போண்டா

தேவையானவை:

 தட்டப்பருப்பு - 250 கிராம்
 பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்)
 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
 சீரகம் - 2 டீஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தோல் சீவி துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

தட்டப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சித் துருவல், தேங்காய்த்துருவல், சீரகம், உப்பு, அரைத்தப் பருப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 

குறிப்பு:

காராமணியில் இருந்து பெறுவதே தட்டப்பருப்பு.


7p9.jpg

வெஜிடபிள் உருண்டைக் குழம்பு

தேவையானவை:

 சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு - 7 பல் (தட்டவும்)
 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
 புளி - எலுமிச்சை அளவு
 மல்லித்தூள் (தனியாத்தூள் ) - 2 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - தேவையான அளவு
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

உருண்டைகள் செய்ய:

 கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம்
 கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 முட்டைக்கோஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
 சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு - 10 பல் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
 தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 சோம்பு - 2 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 3
 உப்பு - தேவையான அளவு

குழம்புக்கு அரைக்க:

 தேங்காய்த்துருவல் - ஒரு கப்
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 சின்ன வெங்காயம் - 10 (தோல் உரிக்கவும்)

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து  விழுதாக அரைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, ஊறிய பருப்பில் ஒரு கைப்பிடி தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, பின்னர் மீதமுள்ள பருப்பு, தேவையான உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அரைத்த விழுது, கேரட் துருவல், முட்டைகோஸ், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும்.

வாய் அகன்ற வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), புளிக்கரைசல், உப்பு, அரைத்த தேங்காய் கலவையைச் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு நான்கு உருண்டைகளை மட்டும் போட்டு, இரண்டு நிமிடங்கள் கழித்து நான்கு உருண்டைகள் சேர்த்து என எல்லா உருண்டைகளையும் சேர்த்து உருண்டைகள் நன்கு வெந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

உருண்டைகளை ஆவியில் வேகவைப்பதை விட குழம்பில் நேரடியாகப் போட்டால் மிருதுவாக இருக்கும்.


7p10.jpg

சேப்பங்கிழங்கு வறுவல்

தேவையானவை:

 சேப்பங்கிழங்கு - கால் கிலோ
 பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன்
 பூண்டு - 5 பல்
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 பட்டை - சிறிதளவு
 கிராம்பு - 2
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சேப்பங்கிழங்கை மண் போக கழுவி, குக்கரில் சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும். ஆறிய பின் தோல் உரித்து நீளவாக்கில் துண்டுகளாக்கவும். தேங்காய்த் துருவலுடன் சோம்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் சற்று கூடுதலாக எண்ணெய் சேர்த்து சேப்பங்கிழங்கைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதங்கி, பொரித்த சேப்பங்கிழங்கு சேர்த்துப் புரட்டி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


7p11.jpg

நீர்பூசணிக் கூட்டு

தேவையானவை:

 நீர்பூசணிக்காய் - ஒரு கீற்று (நறுக்கி வைக்கவும்)
 கடலைப்பருப்பு - 50 கிராம்
 பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - அரை கப்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை.
 தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் கடலைப்பருப்புடன் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும். தேங்காய்த்துருவலுடன், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, தண்ணீர் தெளித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பூசணிக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். காய் நன்கு வெந்தவுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு:

கூட்டு, அவியல் செய்யும்போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சுவை கூடும்.


7p12.jpg

மாங்காய் - வேப்பம்பூ பச்சடி

தேவையானவை:

 மாங்காய் - 2 (தோல், கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
 வேப்பம்பூ - 2 டீஸ்பூன்
 கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 வெல்லம் - சிறிதளவு
 காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளி வைக்கவும்)
 பெருங்காயத்தூள் - சிட்டிகை
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 நெய் - சிறிதளவு
 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

குக்கரில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு தண்ணீர் தெளித்து இரண்டு விசில் வரும் வரை  வேகவைத்து எடுக்கவும். ஆறிய பின் மசிக்கவும். வாணலியில் நெய் விட்டு வேப்பம்பூ சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் மசித்த மாங்காய், உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே நெய்யில் வறுத்த வேப்பம்பூ சேர்த்து இறக்கவும். 

குறிப்பு:

வேப்பம்பூவை நிறைய கிடைக்கும் சீஸனில் அதை நிழலில் காயவைத்து பக்குவப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். நாட்டு மருந்துக் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கும்.


7p13.jpg

எலுமிச்சைத் தொக்கு

தேவையானவை:

 எலுமிச்சைப் பழம் - 15
 கடுகு - 4 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - 150 மிலி
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு

செய்முறை:

எலுமிச்சைப் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, விதை நீக்கி, உப்பு சேர்த்து ஒரு ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு 10 நாட்கள் ஊறவிடவும். ஜாடியின் மேல் பகுதியை மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி வைக்கவும். தினமும் ஒருமுறை குலுக்கிவிடவும். 10 நாள்கள் கழித்து நன்கு ஊறியதும் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் வெந்தயத்தூள், மிளகாய்த்தூள், அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். எலுமிச்சைத் தொக்கு ரெடி.


7p14.jpg

முக்கனிப் பாயசம்

தேவையானவை:

 மாம்பழம் - 2 (தோல், கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும்)
 வாழைப்பழம் - 3 (தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்)
 பலாச்சுளை - 6 (கொட்டை எடுத்து பொடியாக நறுக்கவும்)
 வெல்லத்தூள் - தேவையான அளவு
 தேங்காய்த்துருவல் - ஒரு கப்
 ஏலக்காய் - 4
 முந்திரி - 10
 திராட்சை - 15
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை துண்டுகளில் சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதியுள்ள பழங்களை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து உருக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து, தனியாக எடுத்து வைத்த பழங்கள் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும் இறக்கி வடிகட்டவும். தேங்காய்த்துருவலுடன் ஏலக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்து கெட்டியான பால் எடுக்கவும். பிறகு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து, அரைத்த பழ விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். இதில் வெல்லக் கரைசல், தேங்காய்ப்பால் ஊற்றி, நன்கு கொதித்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் தனியாக எடுத்து வைத்த பழங்கள் சேர்க்கவும். இந்தக் கலவை நன்கு கொதிவந்ததும் இறக்கவும்.

Link to comment
Share on other sites

காரல் மீன் சொதி

sl5178.jpg

என்னென்ன தேவை?

காரல் மீன் - அரை கிலோ,
தேங்காய் - அரை மூடி,
பச்சை மிளகாய் - 3,
சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் - 1,
சின்ன வெங்காயம் - 5,
கறிவேப்பிலை,
உப்பு எண்ணெய் - தேவையான அளவு.

 

 

எப்படிச் செய்வது?

தேங்காயைத் துருவி, 2 முறை பால் எடுக்கவும். தேங்காய்ப்பாலுடன் சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சுத்தம் செய்த காரல் மீன் இவற்றுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.  நன்றாகக் கொதித்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை அதில் சேர்த்து இறக்க வேண்டும். எலுமிச்சம்பழத்தை ருசிக்கு ஏற்ப பிழியலாம். வடைச் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு மூன்றையும் சேர்த்துத் தாளித்து, சொதியில் ஊற்றினால் சுடச்சுட காரல் மீன் சொதி தயார். அப்புறமென்ன சோற்றில் ஊற்றிப் பிசைந்து ஒரு கட்டுக் கட்டினால்... காரல் மீனை பிட்டு உண்டால்.. அடடா... நாக்கை விட்டு ருசி போக நாளாகுமுங்க!

Link to comment
Share on other sites

இறால் குழம்பு

 

 
 
iral_3142643f.jpg
 
 
 

என்னென்ன தேவை?

இறால் - முக்கால் கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

தக்காளி - 1

புளி - 50 கிராம்

குழம்பு பொடி - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

வெந்தயம் - கால் டீஸ்பூன்

பூண்டு - பல்

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்துத் தாளியுங்கள். பிறகு உரித்துவைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். சுத்தம் செய்து வைத்துள்ள இறால்களை அதில் போட்டு நன்றாக வதக்குங்கள். வதங்கியதும் குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் புளிக் கரைசலை ஊற்றி, சிறு தீயில் பத்து நிமிடம் கொதிக்கவையுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும் எண்ணெய் தனியாகப் பிரிந்துவரும். இதுவே சரியான பதம். அப்போது சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கிவையுங்கள்.

 

 

 

 

சுறாப்புட்டு

 
 
 
 
sura_3142641f.jpg
 
 
 

என்னென்ன தேவை?

சுறா மீன் - கால் கிலோ

வெங்காயம் - 2

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

கடுகு - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிதளவு

தனி மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சுறா மீனைச் சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். கொதித்ததும் தண்ணீரை வடிகட்டி ஆறவிடுங்கள். ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கிவிடுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் தோலுரித்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து அது உதிரி உதிரியாக வரும்வரை சிறு தீயில் வைத்துக் கிளறிவிடுங்கள். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் நாவூறும் சுறாப்புட்டு தயார். சாதத்தில் இந்த மசியலைப் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

சிம்பிளாக எளிய முறையில் ஏதேனும் வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், குடைமிளகாய் புலாவ் செய்து சாப்பிடுங்கள். இப்போது குடைமிளகாய் புலாவ் செய்முறையை பார்க்கலாம்.

 
ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்
 
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1/2 கப்
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1/4 கப்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பட்டை - 1/4 இன்ச்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

அரைப்பதற்கு...

பூண்டு - 3 பற்கள்
மிளகு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 5

201704171308177081_uitem._L_styvpf.gif

செய்முறை:

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

* மிக்ஸியில் பூண்டு, மிளகு, முந்தியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை போட்டு, உப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும். சாதத்தை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

201704171308177081_capsicum-pulao._L_sty

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தாளித்த பின் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின் அதில் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டவும்.

* அடுத்து உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான ஈஸியான குடைமிளகாய் புலாவ் ரெடி!!!
Link to comment
Share on other sites

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி

சத்தான கேழ்வரகை வைத்து வித்தியாசமான சத்தான உணவுகளை செய்யலாம். இன்று கேழ்வரகு சேமியாவை வைத்து சூப்பரான பிரியாணி செய்து எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

ராகி சேமியா - ஒரு கப்,
பச்சைப் பட்டாணி - 50 கிராம்,
பீன்ஸ் - 10
கேரட் - 1
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - சிறிதளவு
பட்டை - சிறிய துண்டு,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - ஒன்று,
பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 6 பல்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
ஏலக்காய் - 2,
நல்லெண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

201704191043532764_ragi-semiya-veg-birya

செய்முறை:

* வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சேமியாவை வெறும் கடாயில் போட்டு சிறிது வதக்கி கொள்ளவும்.

* வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

* காய்கறிகள் சற்று வதங்கியதும் இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள், உப்பு சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்).

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான ராகி சேமியா பிரியாணி ரெடி.
Link to comment
Share on other sites

சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா

 

காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம். இந்த சப்பாத்தி உப்புமா செய்முறையை பார்க்கலாம்.

 
சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா
 
தேவையான பொருட்கள் :

சப்பாத்தி - 4,
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப.மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க :

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு.
201704191256022144_chapati-upma._L_styvp

செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின், ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்..

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் 5 நிமிடம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா ரெடி.
Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் - சீஸ் பாஸ்தா

விடுமுறை நாட்களில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க ஆசைப்பட்டால், இத்தாலியன் ரெசிபியான சிக்கன் - சீஸ் பாஸ்தாவை செய்து கொடுக்கலாம்.

 
 
 
 
குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் - சீஸ் பாஸ்தா
 
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 1 கப்
பாஸ்தா - 250 கிராம்
பூண்டு - 8 பற்கள்
சீஸ் - 1/4 கப்
கிரீம் - 1/2 கப்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 3-4 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

201704201523159530_Chicken-cheese-pasta.

செய்முறை :

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும்.

* பூண்டை நன்றாக தட்டிக்கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், பூண்டு, சிக்கன் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து வாணலியை மூடி 15 நிமிடம் சிக்கன் துண்டுகளை வேக வைக்க வேண்டும்.

* ஒரு பௌலில் சோள மாவு, மற்றும் சிறிது பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* சிக்கன் வெந்ததும், அதில் கிரீம், சோள மாவு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, கலவை நன்கு கெட்டியாக வரும் வரை கைவிடாமல் கிளறி விட வேண்டும்

* கலவையானது கெட்டியானதும், அதில் மீதமுள்ள பாலை சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.

*  பின் அதில் சீஸ் போட்டு, தீயை குறைவில் வைத்து, சீஸை உருக வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் பாஸ்தாவில் ஒட்டுமாறு பிரட்டவும்.

* கடைசியாக மிளகு தூள், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

* சுவையான சிக்கன் பாஸ்தா ரெடி!!!
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.