Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

வெள்ளாட்டில் சமைத்ததால் தான் ருசியாய் இருக்குமா?
 

ஓமக்கா !

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி

 
அ-அ+

சிறுதானியங்களில் சிறப்பு மிக்க சாமையில் கஞ்சி தயாரிப்பது எளிது. இதில் காய்கறிகள், மசாலா கலந்து செய்தால் சுவை இரட்டிப்பாகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி
 
தேவையான பொருட்கள்

சாமை - 50 கிராம்
பயத்தம் பருப்பு - 50 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
தேங்காய் பால்- 1 கப்
கேரட், பீன்ஸ் - கால் கப்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

தாளிக்க  :

பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு.

201805030958314628_1_samai-rice-vegetable-kanji._L_styvpf.jpg

செய்முறை :

சாமை அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

பயத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்..

வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அதில் பயத்தம் பருப்பு, சாமை, பாதியளவு மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கி விடவும்.

விசில் போனவுடன் மூடியை திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.

கடைசியாக எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் சேர்த்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி ரெடி.

https://www.maalaimalar.com

பால்சுறா குழம்பு

 
 
 
 
தாய்ப்பாலை அதிகரிக்கும் பால்சுறா குழம்பு
 
தேவையான பொருட்கள் :

பால் சுறா - 250 கிராம்
தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
புளி - ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு புளி அதிகம் தேவையில்லை)
பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
சுக்கு - ஒரு சிறிய துண்டு (அம்மியில் வைத்துத் தட்டவும்)
காய்ந்த மிளகாய் - ஒன்று  
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201805021507267268_1_paal-sura-curry._L_styvpf.jpg

செய்முறை :

புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்.

பூண்டைத் தட்டிக்கொள்ளவும்.

தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா), தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்.

நன்றாகக் கொதித்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளற வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

சூப்பரான பால்சுறா குழம்பு ரெடி.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎1‎/‎2018 at 1:48 AM, Nathamuni said:

ஓமக்கா !

???????????????????

முதல் எழுதின பதிலையும் பார்த்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

???????????????????

முதல் எழுதின பதிலையும் பார்த்தேன்

ஓமோம்... பாத்திட்டு ஒண்டும் சொல்லாமல் கமுக்கமாய்  போகிறியள் எண்டு தான்... திரும்பவும் கொஞ்சம் சத்தமாய் சொன்னனான்..

குளிர் தேசத்து....எடை கூட்டும் உணவுகள் கொடுத்து வளர்க்கப் படும் கொழுத்த...  செம்மறி ஆடு...அந்த வெயில காஞ்சு முறுகின வெள்ளாடுக்கு கிட்ட வருமேக்கா...?

உதென்ன கேள்வி எண்டு கேக்கிறேன்? ?‍♀️

Edited by Nathamuni
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2018 at 6:17 AM, நவீனன் said:

சூப்பரான பால்சுறா குழம்பு ரெடி.

 

சுறா என்றவுடன் வெள்ளையர்... அட அந்த மனிதரை தாக்குவதோ என்பார்கள்..

அந்த பெரிய ஆள்விழுங்கி இல்லை... இது... பேபி சுறா என்று விளக்கம் கொடுக்க வேண்டி இருந்தது...

ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி

சாமையும்... பயறும் தான் வித்தியாசம்... மத்தபடி எங்கண்ட சிவப்பரிசி.. சித்திரைக் கஞ்சி தான்...

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

சப்பாத்திக்கு அருமையான எள்ளு மட்டன் கிரேவி

 

தோசை, இட்லி, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எள்ளு மட்டன் கிரேவி. இந்த இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.

 
சப்பாத்திக்கு அருமையான எள்ளு மட்டன் கிரேவி
 
தேவையான பொருட்கள் :

மட்டன் - அரைக் கிலோ
தயிர் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
கிராம்பு - 2
முந்திரி - 6,
பட்டை - சிறு துண்டு
வெங்காயம் - 3
தக்காளி - 3
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


201805041212435893_1_Sesame-Mutton-Curry._L_styvpf.jpg

செய்முறை :

மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

கொத்தமல்லி, 1 தக்காளி, 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.

கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக‌ வைக்கவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன் 1 வெங்காயம், காய்ந்த‌ மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள‌ வெங்காய‌ மசாலா கலவை, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.

பின்னர் அதனுடன் வேக‌ வைத்த‌ மட்டனை சேர்க்கவும். மட்டன் வேக‌ வைத்த‌ தண்ணீர் மற்றும் தேவையான‌ அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விடவும்.

நன்கு கொதித்த‌ பின்னர் கொத்த‌மல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான‌ எள்ளு மட்டன் கிரேவி தயார்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

ஆப்பத்திற்கு அருமையான முட்டை குருமா

 

சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசை, இட்லிக்கு சூப்பராக இருக்கும் முட்டை குருமா. இன்று முட்டை குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ஆப்பத்திற்கு அருமையான முட்டை குருமா
 
தேவையான பொருட்கள் :

முட்டை - 6
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
பச்சைமிளகாய் - 8
இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி - தலா 1
கொத்தமல்லி - கால் கப்
வெங்காயம் - 5
எண்ணெய் - ஒரு குழிகரண்டி
கொத்தமல்லி - ஒரு கொத்து

201805041506564959_1_kurma._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பச்சைவாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான பூரிக்கு அருமையான முட்டை குருமா ரெடி.

குறிப்பு - கெட்டியான தேங்காய் பால் தான் சேர்க்க வேண்டும். தேங்காய் விழுது சேர்க்க கூடாது.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

பாகற்காய் பக்கோடா

என்னென்ன தேவை?

பாகற்காய் - 1/4 கிலோ,
கேழ்வரகு மாவு - 1/4 கிலோ,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
16.jpg
எப்படிச் செய்வது?

பாகற்காயை சிறு சிறு வில்லைகளாக நறுக்கிகொள்ளவும். கேழ்வரகு மாவில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பாகற்காயை கேழ்வரகு கலவையில் கலந்து பக்கோடா போல் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

 

 

கருணைக்கிழங்கு பொரியல்

என்னென்ன தேவை?

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ,
தக்காளி - 2,
வெங்காயம் - 2,
முழு பூண்டு - 1,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
30.jpg
எப்படிச் செய்வது?

குக்கரில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், கருணைக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விடவும். விசில் சத்தம் அடங்கியதும் கருணைக்கிழங்கு பொரியலை சாதத்துடன் பரிமாறவும்.
 

 

வாழைப்பூ கூட்டு

 

என்னென்ன தேவை?

சுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப்,
துவரம் பருப்பு - 1/2 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
தக்காளி - 2,
முழு பூண்டு - 1,
வெங்காயம் - 2,
காய்ந்தமிளகாய் - 2, உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு.
31.jpg
எப்படிச் செய்வது?

நறுக்கிய வாழைப்பூ, துவரம் பருப்பு இவற்றை தனித்தனியே வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாய், நறுக்கிய தக்காளி, இடித்த பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

 

 

அத்திக்காய் பொரியல்

என்னென்ன தேவை?

அத்திக்காய் - 1 கப்,
பயத்தம் பருப்பு - 1/4 கப்,
தக்காளி - 2,
முழு பூண்டு - 1,
வெங்காயம் - 2,
பச்சைமிளகாய் - 4,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
28.jpg
எப்படிச் செய்வது?

அத்திக்காயை இடித்து விதைகளை நீக்கி கழுவி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய  வெங்காயம், தக்காளி, இடித்த பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, பின்பு பயத்தம்பருப்பு, அத்திக்காய் சேர்த்து வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் அத்திக்காய் பொரியலை சாதத்துடன் பரிமாறவும்.

 

http://kungumam.co.in

Link to comment
Share on other sites

தயிர் சாதத்திற்கு அருமையான நெல்லிக்காய் ஊறுகாய்

 

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லிக்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
தயிர் சாதத்திற்கு அருமையான நெல்லிக்காய் ஊறுகாய்
 
தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 10
எலுமிச்சம்பழம் - 5
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

201805111503571948_1_Gooseberry-pickle._L_styvpf.jpg

செய்முறை :

நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும்.

நெல்லிக்காய் சூடு ஆறியதும், பல் பல்லாக உதிர்த்து கொட்டை நீக்கவும்.

அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து ஆறியதும் தூளாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்கவும்.

தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.

சூப்பரான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி ரசம்

 
அ-அ+

அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை சூப்பாகவும் பருகலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி ரசம்
 
தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு - கால் கப்
பூண்டு - 5 பல்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

201805101215401707_1_ginger-rasam._L_styvpf.jpg

செய்முறை :

துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும்.

அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

மசாலா தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான இஞ்சி ரசம் ரெடி.

இந்த ரசத்தை குடிக்கவும் செய்யலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

இறால் மாங்காய் குழம்பு

 

sl52698969.jpg

என்னென்ன தேவை?

இறால் - 1/2 கிலோ,
நீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 4,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
தக்காளி - 2, புளி - 50 கிராம்,
தேங்காய் - 1/2 மூடி,
காய்ந்தமிளகாய் - 5,
மிளகாய்த்தூள் - 50 கிராம்,
தனியாத்தூள் - 40 கிராம்,
மஞ்சள் தூள் - 10 கிராம்,
சீரகத்தூள் - 30 கிராம்,
கடுகு - 10 கிராம்,
வெந்தயம் - 10 கிராம்,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவைக்கு.

 

எப்படிச் செய்வது?

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கிள்ளிய காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இறால், தக்காளி, பச்சைமிளகாய், மாங்காய், புளிக்கரைசல், மசாலா தூள் வகைகள் போட்டு கிளறி கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக் கீரை சூப்

 
அ-அ+

சிறியவர் முதல் பெரியோர் வரை தினமும் ஏதாவது ஒரு கீரை சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெந்தயக் கீரை சூப் செய்து எப்படி என்று பார்க்கலாம்.

 
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக் கீரை சூப்
 
தேவையான பொருட்கள் :

வெந்தயக் கீரை - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
சோள மாவு - ஒரு டீஸ்பூன்,  
பூண்டு - 2 பல்,
வெண்ணெய் - சிறிதளவு,
காய்ச்சிய பால் - அரை டம்ளர்,
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

201805160947220118_1_vendhaya-keerai-soup._L_styvpf.jpg

செய்முறை:

வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டை தட்டிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.

காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும்.

எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான வெந்தயக் கீரை சூப் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பிரண்டை குழம்பு செய்வது எப்படி

வயிறு கோளாறு, வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
பிரண்டை குழம்பு செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

பிரண்டை இளசாக - 1 கப்
புளி - 100 கிராம்,
சின்னவெங்காயம் - 10,
தக்காளி - 1,
பூண்டு - 7 பல்,
சாம்பார்பொடி - தேவைக்கேற்ப,
வெல்லம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,

வறுத்துப்பொடி செய்ய :

நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
தனியா - 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
கசகசா - 1/4 தேக்கரண்டி

201805170937025986_1_pirandai-kumabu._L_styvpf.jpg

செய்முறை  :

பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம்.

தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும்

தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

கிராமத்து ஸ்டைல் வெந்தய குழம்பு

 
அ-அ+

சூடான சாதத்தில் வெந்தய குழம்பை ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று கிராமத்து ஸ்டைலில் வெந்தய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
கிராமத்து ஸ்டைல் வெந்தய குழம்பு
 
தேவையான பொருட்கள் :

சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 15,
தனியா - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 8,
வெந்தயம் - 3 டீஸ்பூன்,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
பெரிய தக்காளி - 1,
நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - ஒரு கொத்து.

201805171209190215_1_village-style._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

இத்துடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை நன்றாகக் குழைய வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.

அடுத்து அதில் உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

சுவையான வெந்தயகுழம்பு தயார்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் சூப்

 
அ-அ+

வயிற்று கோளாறு, வயிற்று உபாதை இருப்பவர்களுக்கு இந்த லெமன் சூப் சிறந்த உணவாகும். இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் சூப்
 
தேவையான பொருட்கள் :

எலுமிச்சைச் சாறு - கால் கப்,
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு,
வெங்காயம் - ஒன்று.
எலுமிச்சை தோல் - சிறிதளவு,
காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் - தேவைக்கு.

201805240903203812_1_lemon-soup._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை தோல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகலாம்.

புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

தித்திப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி

 
அ-அ+

இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
தித்திப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள்

மா‌ம்பழ‌ம் - 2
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
ஏல‌க்கா‌ய் - 2
நெய் - தேவையான அளவு
முந்திரி - சிறிதளவு

201805261124212929_1_mango-halwa._L_styvpf.jpg

செ‌ய்முறை :

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ நறுக்கிப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.

சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.

அடிக்கடி நெய் சேர்த்து கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம்.

பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌வறுத்த முந்திரியை சேர்த்து சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

சூப்பரான மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சாதத்திற்கு அருமையான காராமணி குழம்பு

 
அ-அ+

காராமணி குழம்பை சாதம், தோசை அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சாதத்திற்கு அருமையான காராமணி குழம்பு
 
தேவையான பொருட்கள் :

காராமணி - 1 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு

201805311510024133_1_Thatta-Payir-Kuzhambu._L_styvpf.jpg

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காராமணியை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்க வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த காராமணியை போட்டு, அதில் 2 கப் தண்ணீர் விட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

மற்றொரு வாணயிலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, வரமிளகாய், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, புளித் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி விட வேண்டும்.

நன்றாக கொதித்து வரும் போது வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

இப்போது அருமையான காராமணி கறி ரெடி!

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதம் விதமான பதார்த்தங்களில் செய்யப்படும் விதம் விதமான உணவு வகைகள்...... எல்லாமே நன்றாக உள்ளது.....!  ?

இந்த காராமணி கடலை வகையறா எல்லாம் இங்கு அடையார்(ன்) கடைகளில் வாங்கலாம்.....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

காரசாராமான பச்சை மிளகாய் ஊறுகாய்

 

 

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
காரசாராமான பச்சை மிளகாய் ஊறுகாய்
 
தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் - 200 கிராம்,
கடுகுத்தூள்  - ஒரு டீஸ்பூன்,
ஆம்சூர்பொடி  - ஒரு டீஸ்பூன்,
வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன்,   
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

201806011504590321_1_Puli-Milagai-Recipe._L_styvpf.jpg

செய்முறை:

பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய பச்சை மிளகாயுடன் கடுகுத்தூள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து… ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார்.

இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சம்மர் ஸ்பெஷல்: 30 வகை ஊறுகாய் & தொக்கு

 

 

ஊறுகாய்ப் பொடி

தேவை:      காய்ந்த மிளகாய் - 100 கிராம்,  வெந்தயம் - 25 கிராம்,  பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன் , கடுகு - 2 டீஸ்பூன் (விரும்பினால்).

2_1527507363.jpg

செய்முறை:     வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள், கடுகு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறுகாய் செய்யும்போது இந்தப் பொடியில் தேவையான அளவு சேர்க்கலாம்.

சிறப்பு:     இந்தப் பொடி மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.


3_1527508011.jpg

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

தேவை:      மாங்காய் இஞ்சி - 200 கிராம் (கழுவி, தோல் சீவி, வட்டமாக நறுக்கவும்),  பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்),  சிறிய எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்) ,
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  தண்ணீர் - 50 மில்லி,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இறக்கி ஆறவிடவும் நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து ஊறவிடவும். ஒருநாள் கழித்துப் பயன்படுத்தலாம். நன்றாக ஊறியதும் ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.


4_1527508023.jpg

மாங்காய் இஞ்சி - மாங்காய்த் தொக்கு

தேவை:      மாங்காய் இஞ்சித் துருவல், மாங்காய்த் துருவல் - தலா ஒரு கப் (250 மில்லி கப்), நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் , கடுகு - முக்கால் டீஸ்பூன்,  மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், மாங்காய் இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.


5_1527508034.jpg

தோசைக்காய் ஆவக்காய் ஊறுகாய்

தேவை:      விதைகள் நீக்கி நறுக்கிய தோசைக்காய்த்துண்டுகள் (மஞ்சள் வெள்ளரிக்காய்) - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,  கடுகு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,  நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,  உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:     உப்புடன் மிளகாய்த்தூள், கடுகு சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும். அகலமான பீங்கான் பவுலில் தோசைக்காய்த் துண்டுகள், அரைத்த பொடி, நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 24 மணி நேரம் ஊறியதும் பரிமாறவும். இதைச் சாதம், சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம்.

சிறப்பு:     ஆந்திராவில் மாங்காய் கிடைக்காத சீஸனில் தோசைக்காய் வைத்து ஆவக்காய் ஊறுகாய் செய்வார்கள். இது ஆவக்காய் ஊறுகாய் போலவே இருக்கும். இந்த ஊறுகாயைச் சாதத்தில் சேர்த்து  பிசைந்தும் சாப்பிடலாம்.


6_1527508046.jpg

எலுமிச்சை ஊறுகாய்

தேவை:      சதுரத்துண்டுகளாக நறுக்கிய எலுமிச்சைப்பழம் - 2 கப்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,  வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,  கடுகு - அரை டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,  உப்பு - முக்கால் கப்.

செய்முறை:     எலுமிச்சைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். பிறகு, இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மறுநாள் வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:     உடனடியாக எலுமிச்சை ஊறுகாய் தேவையானால் எலுமிச்சைப்பழத் துண்டுகளைத் தண்ணீரில் வேகவைத்தும் செய்யலாம். மிளகாய்த் தூளுக்குப் பதிலாக காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்தும் சேர்க்கலாம்.


7_1527508059.jpg

பச்சை மிளகு ஊறுகாய்

தேவை:      பச்சை மிளகு - 50 கிராம் (அரை இன்ச் துண்டுகளாக்கவும்),  எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்),  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  உப்பு - ஒன்றரை டீஸ்பூன்.  

செய்முறை:     எலுமிச்சைச் சாற்றுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் பச்சை மிளகுத்துண்டுகளைச் சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவைத்துப் பயன்படுத்தலாம்.


8_1527508071.jpg

மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

தேவை:      மாகாளிக்கிழங்கு - 300 கிராம்,  எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்),  கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 6 , கடைந்த தயிர் - 125 மில்லி (அரை கப்) ,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     மாகாளிக்கிழங்கை மண்போக கழுவி, 12 மணி நேரம் (இரவு முழுவதும்) ஊறவைக்கவும். மறுநாள் தோல் சீவி, நடுவில் உள்ள தடிமனான வேரை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும். கடுகுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். பெரிய பாத்திரத்தில் மாகாளிக்கிழங்கு, அரைத்த பொடி, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.  நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

சிறப்பு:    இது நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும்.


9_1527508083.jpg

மாவடு

தேவை:      மாவடு - அரை கிலோ,  விளக்கெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க:      கடுகு - ஒரு டீஸ்பூன்,  வெந்தயம் - அரை டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 20,  உப்பு - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:     மாவடுவின் காம்பை நீக்கி, கழுவித் துடைக்கவும். அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்துப் பிசிறவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். இதை மாவடுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். (தேவையானால் சிறிதளவு தண்ணீரைச் சூடாக்கி ஆறவைத்துச் சேர்க்கலாம்). இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:     காம்புள்ள வடுவாக வாங்கவும். அப்போதுதான் ஊறுகாய் நன்றாக இருக்கும்.


10_1527508096.jpg

ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய்

தேவை:      மாங்காய்த்துண்டுகள் - இரண்டரை கப்,  உப்பு, மிளகாய்த்தூள் - தலா கால் கப்,  வெல்லத்தூள் (அ) சர்க்கரை - கால் கப்,  கடுகு - 2 டீஸ்பூன்,  வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்.

தாளிக்க:      நல்லெண்ணெய் - கால் கப்,  கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,  தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன் (தேவையானால்),  கறிவேப்பிலை, பூண்டு - சிறிதளவு.

செய்முறை:    மாங்காயுடன் உப்பு சேர்த்து ஊறவைக்கவும். இரண்டு நாள்கள் கழித்து மாங்காயைப் பிழிந்து எடுத்து வெயிலில் காயவைக்கவும். தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். மறுநாள் மாங்காயை மட்டும் வெயிலில் வைக்கவும். மாங்காய்த் தண்ணீரை லேசாகக் கொதிக்க வைக்கவும். ஆறியதும் அதனுடன் மிளகாய்த்தூள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துச் சேர்க்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மாங்காய்த் தண்ணீர்க் கலவையில் சேர்க்கவும். அதனுடன் காயவைத்த மாங்காய்த்துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்தவும்.


11_1527508107.jpg

குஜராத்தி ஸ்வீட் மாங்காய் ஊறுகாய்

தேவை:      மாங்காய்த் துருவல் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப்,  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,  சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,  பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன்,  மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:     மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்). அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும். சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும்.

மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம். 

குறிப்பு:     பட்டைத்தூள், லவங்கத்தூள் ஆகியவற்றை விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.


12_1527508121.jpg

ஃப்ரெஷ் மஞ்சள் ஊறுகாய்

(குஜராத்தி ஹல்டி பிக்கிள்)


தேவை:      ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக்கவும்),  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),  சிறிய எலுமிச்சைப்பழம்  4 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்),  உப்பு - முக்கால் டீஸ்பூன்.

செய்முறை:      கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் எடுத்துப் பயன்படுத்தலாம்.

குறிப்பு:    இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.    இந்த ஊறுகாயை நான்கு நாள்கள் வெளியே வைத்து உபயோகிக்கலாம். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

சிறப்பு:    இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இது மாங்காய் இஞ்சி ஊறுகாய் போல இருக்கும். ஆரோக்கியத்துக்கு  மிகவும் நல்லது.


13_1527508134.jpg

ஃப்ரெஷ் மஞ்சள் - இஞ்சி ஊறுகாய் (குஜராத்)

தேவை:      ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, வட்டமான வில்லைகளாக நறுக்கவும்),  தோல் சீவிய இஞ்சி - 2 இன்ச் துண்டு (வட்டமாக நறுக்கவும்),  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),  எலுமிச்சை - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்),  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     அகலமான பாத்திரத்தில் எலுமிச்சைச்சாற்றுடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒருநாள் முழுவதும் ஊறவிடவும். மறுநாள் பயன்படுத்தலாம்.


14_1527508146.jpg

பூண்டு ஊறுகாய்

தேவை:      தோலுரித்த பூண்டு - 250 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்),  எலுமிச்சைப்பழம் - 6 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்),  மல்லி (தனியா), வெந்தயம், சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 25,  கடுகு - ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 50 மில்லி,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     வெறும் வாணலியில் தனியா, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு சிறிதளவு வதங்கியதும் அரைத்த பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து வேகவிடவும். பூண்டு முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறி வேகவிட்டு இறக்கவும்.

குறிப்பு:     அவரவர் விருப்பத்துக்கேற்ப மிளகாயைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம்.


15_1527508158.jpg

கடா நார்த்தங்காய் ஊறுகாய்

தேவை:      கழுவி, விதை நீக்கி நறுக்கிய கடா நார்த்தங்காய்த்துண்டுகள் (கிடாரங்காய்) - 3 கப்,  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 12  வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  ,நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,  கடுகு - ஒரு டீஸ்பூன்,  உப்பு - அரை கப்.

செய்முறை:    கடா நார்த்தங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு ஊறவிடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறவைத்த நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பயன்படுத்தவும்.


16_1527508169.jpg

நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்

தேவை:      நெல்லிக்காய் - 10 (கொட்டைகளை நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும்),  சர்க்கரை - அரை கப் , குங்குமப்பூ - 2 சிட்டிகை,  மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், கறுப்பு உப்பு - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:     வாணலியில் நெல்லிக்காயுடன் சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நெல்லிக்காய் பாதியளவு வெந்ததும் குங்குமப்பூ, மிளகுத்தூள், கறுப்பு உப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை வெளியிலேயே வைத்துப் பயன்படுத்தலாம்.

குறிப்பு:     நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து உதிர்த்தும் சேர்க்கலாம்.

சிறப்பு:     சப்பாத்தி, தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.


17_1527508182.jpg

நெல்லிக்காய் கார ஊறுகாய்

தேவை:      நெல்லிக்காய் - கால் கிலோ,  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,  வெந்தயப்பொடி - முக்கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  கடுகு - அரை டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்  உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:    நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்துக் கொட்டைகளை நீக்கி, சுளைகளாகத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் நெல்லிக்காய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு இறக்கி தயிர் சாதத்துடன் பரிமாறவும்.


18_1527508194.jpg

ஆவக்காய் ஊறுகாய்

தேவை:      மாங்காய் - அரை கிலோ,  கடுகு - 30 கிராம் (3 டேபிள்ஸ்பூன்),  காய்ந்த மிளகாய் - 30 கிராம் (20),  வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்,  வெள்ளைக் கொண்டைக்கடலை - 3 டேபிள்ஸ்பூன்,  நல்லெண்ணெய் - 100 மில்லி,  உப்பு - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:     மாங்காயைக் கழுவி தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை எடுத்துவிடவும்). வெறும் வாணலியில் பாதியளவு வெந்தயத்தைச் சேர்த்து வறுத்து அரைத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், கடுகை வெயிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஜாடியில் வெந்தயப்பொடி, மிளகாய் - கடுகுப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் மீதமுள்ள வெந்தயம், வெள்ளைக் கொண்டைக்கடலை, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை வெயிலில் மூன்று நாள்கள் வைக்கவும். தினமும் ஊறுகாயைக் கிளறிவிடவும். அப்போதுதான் மாங்காய் நன்றாக மசாலாவுடன் கலந்து ஊறும்.

10 நாள்கள் ஊறிய பிறகு பயன்படுத்தலாம்.


19_1527508205.jpg

பிரண்டைத் தொக்கு

தேவை:      இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப்,  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,  புளி - நெல்லிக்காய் அளவு,  பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,  மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்). இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


20_1527508217.jpg

நாரத்தை இலைப்பொடி (வேப்பிலைக் கட்டி)

தேவை:      இளசான நாரத்தை இலை - 25 (நடு நரம்பை நீக்கவும்),  காய்ந்த மிளகாய் - 15,  ஓமம் - அரை டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - அரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை:     நாரத்தை இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விடாமல் அரைத்தெடுக்கவும். இந்தப் பொடியைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்துச் சேகரிக்கவும். தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:     நாரத்தை இலை கிடைக்காவிட்டால், எலுமிச்சை இலையிலும் செய்யலாம்.


21_1527508229.jpg

உப்பு எலுமிச்சை ஊறுகாய்

தேவை:      எலுமிச்சைப்பழம் - 10 (ப்ளஸ் போல நான்கு துண்டுகளாக லேசாக நறுக்கவும்; முழுவதுமாக நறுக்க வேண்டாம்),  உப்பு - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:     எலுமிச்சைப்பழத்துக்குள் உப்பை அடைக்கவும். இதை பாட்டில் (அ) ஜாடியில் சேகரித்து மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைத்து எடுக்கவும். (வீட்டின் உள்ளேயும் வைக்கலாம்). பழம் நன்றாக ஊறிவிடும். இந்த ஊறுகாய் இரண்டு வருடங்கள் வரை நன்றாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்து எலுமிச்சைத் தொக்கு செய்துகொள்ளலாம். நன்றாக ஊறியதும் எலுமிச்சையில் இருந்து உப்பு நீர் கசிந்து மிருதுவாக இருக்கும்.

குறிப்பு:     இதேபோல நாரத்தங்காயிலும் செய்யலாம். நன்றாக ஊறியவுடன் வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். இரண்டு வருடங்கள் நன்றாக இருக்கும்.


22_1527508247.jpg

இஞ்சி - புளி ஊறுகாய்

தேவை:      தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்,  பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்),  புளி - சிறிய எலுமிச்சை அளவு,  வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை , வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:      தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  கடுகு - அரை டீஸ்பூன்  காய்ந்த  மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:     புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும். அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

குறிப்பு:     தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.


23_1527508262.jpg

சிம்பிள் மாங்காய் ஊறுகாய்

தேவை:      கிளிமூக்கு மாங்காய் - 2 (தோலுடன் சிறிய துண்டுகளாக்கவும்)  மிளகாய்த்தூள், கல் உப்பு  - தலா 2 டீஸ்பூன்.

செய்முறை:    மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வெயிலில் மூன்று முதல் நான்கு நாள்கள் வரை வைத்தெடுக்கவும். பிறகு, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். தேவையானால் கடுகு தாளித்துச் சேர்க்கலாம்.

குறிப்பு:    கிளிமூக்கு மாங்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் வெளியே வைத்தால் கெட்டுவிடும்.

சிறப்பு:    இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


24_1527508273.jpg

ஆரஞ்சுத்தோல் பச்சடி

தேவை:      ஆரஞ்சுத்தோல் - ஒரு கப் (பொடியாக நறுக்கவும்),  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) , கறிவேப்பிலை - சிறிதளவு,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  புளி - நெல்லிக்காய் அளவு,  பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஆரஞ்சுத்தோல் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல் ஊற்றி நன்கு வேகவிடவும். இறுதியாக வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.


25_1527508285.jpg

மாங்காய் இஞ்சித் தொக்கு

தேவை:      மாங்காய் இஞ்சி - கால் கிலோ (தோல் சீவி, துண்டுகளாக்கவும்) , எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்),  மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் , மஞ்சள்தூள், வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன்,  கடுகு - முக்கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் , உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     மாங்காய் இஞ்சியுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தொக்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.


26_1527508297.jpg

நாரத்தங்காய் ஊறுகாய்

தேவை:      நாரத்தங்காய் - 3 (சதுரத்துண்டுகளாக்கி, விதைகளை நீக்கவும்),  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , வெந்தயம் - அரை டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 8,  கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் , உப்பு - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:     ஜாடியில் நாரத்தைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும். வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:     நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும்.


27_1527508308.jpg

தக்காளித் தொக்கு

தேவை:      தக்காளி - அரை கிலோ (பொடியாக நறுக்கவும்),  மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 3,  கடுகு - அரை டீஸ்பூன்,  பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிதளவு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். இறுதியாக வெல்லம் சேர்த்து, கலவை சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் சேகரிக்கவும்.


28_1527508320.jpg

செட்டிநாட்டு வெந்தய மாங்காய்

தேவை:      புளிப்பு மாங்காய் - 2,  காய்ந்த மிளகாய் - 15,  வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,  கல் உப்பு - 4 டேபிள்ஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:     மாங்காயைத்தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை நீக்கவும்). மிளகாய், உப்பைத் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அகலமான பாத்திரத்தில் மாங்காய்த்துண்டுகளுடன் வெந்தயப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வெயிலில் 10 முதல் 15 நாள்கள் வரை வைத்து எடுத்துப் பயன்படுத்தலாம்.


29_1527508332.jpg

செட்டிநாட்டுப் பல ஊறுகாய்

தேவை:      பிஞ்சு வெள்ளை மிளகாய், தோலுரித்த பூண்டு, பிஞ்சு சுண்டைக்காய் - தலா 50 கிராம், எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்),  காய்ச்சி ஆறவைத்த நீர் - கால் கப்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் (தேவையானால்),  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     வெள்ளை மிளகாய், சுண்டைக்காயின் காம்பை நீக்கி கீறிவிடவும். பீங்கான் ஜாடியில் எலுமிச்சைச்சாறு, காய்ச்சி ஆறவைத்த நீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து உப்பு கரையும் வரை கலக்கவும். அதனுடன் சுண்டைக்காய், பூண்டு, வெள்ளை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, ஜாடியின் வாய்ப்பகுதியை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் நான்கு நாள்கள் வைத்து எடுக்கவும்.

குறிப்பு:     இதனுடன் பிஞ்சு முருங்கைக்காய், பிஞ்சு கொத்தவரங்காய் ஆகியவற்றை அரை இன்ச் அளவுக்கு நறுக்கி சேர்க்கலாம்.


30_1527508347.jpg

செட்டிநாட்டு மாங்காய் ஊறுகாய்

தேவை:      மாங்காய்த்துண்டுகள் - 4 கப்,  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,  வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன் , கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
 உப்பு - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:     மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். மூன்றாவது நாள் அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து ஊறுகாயுடன் சேர்க்கவும்.


31_1527508358.jpg

ஆப்பிள் ஊறுகாய்

தேவை:      ஆப்பிள் - ஒன்று (விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்),   மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன் , மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,  எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன் ,
 கடுகு - அரை டீஸ்பூன்,  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:     ஆப்பிள் துண்டுகளுடன் எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:     கிரீன் ஆப்பிள் பயன்படுத்தினால் எலுமிச்சைச்சாறு குறைவாகச் சேர்க்கவும்.


32_1527508369.jpg

ஊறுகாய் இல்லாத உணவு மேஜையா?

நினைக்கும்போதே நாவில் நீர் ஊறவைக்கும் உணவு வகைகளில் ஊறுகாய்க்குத் தனி இடம் உண்டு. கையால் தொட்டு வாயில் இடும்போதே  `சுர்ர்ர்’ என்று சுண்டியிழுக்கும் சுவை ஊறுகாய்க்கே உரித்தான சிறப்பு. உணவு காம்பினேஷன்களில் தயிர் சாதம் - ஊறுகாய்க்கு ஈடு இணை கிடையாது. ஊறுகாய்களில் ஒரு வாரம் முதல் இரண்டாண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய வகைகள் உள்ளன. ஊறுகாய், தொக்கு வகைகளை சப்பாத்தி, தோசைக்கும்கூட சைடிஷ்ஷாகப் பயன்படுத்தலாம். இப்படி உணவு மேஜையில் ஆபத்பாந்தவனாக விளங்கும் ஊறுகாய், தொக்கு வகைகள் பலவற்றை இந்த இணைப்பிதழில் படங்களுடன் வழங்குகிறார் சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்...

``மாங்காய், மாவடு, எலுமிச்சை, மாங்காய் இஞ்சி, கடாரங்காய், தோசைக் காய், பூண்டு, மாகாளிக்கிழங்கு, நெல்லிக்காய், பச்சை மிளகு, தக்காளி, பிரண்டை எனப் பலவற்றிலும் தயார் செய்யக் கூடிய ஊறுகாய், தொக்கு வகைகளின் ரெசிப்பிகளை வழங்கியுள்ளேன். இவை உங்கள் டைனிங் அறையை `யம்மி ஏரியா’வாக மாற்ற உதவும். சாப்பாட்டு நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அழைப்பு விடுக்காமலே அங்கு ஆஜராகிவிடுவார்கள்’’ என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார்.

ஹேப்பி ஈட்டிங்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஐயங்கார் ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி

 

அனைவருக்கும் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பெருமாள் கோவில் புளியோதரை / ஐயங்கார் புளியோதரை செய்முறையை பார்க்கலாம்.

 
 
ஐயங்கார் ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

சாதம் - 2 கப்

புளிக்காய்ச்சல்...

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு

பொடி செய்வதற்கு...

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி (தனியா) - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்

201806091149093226_1_iyengar-puliyogare._L_styvpf.jpg

செய்முறை :

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பின் கடைசியாக பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், சூப்பரான ஐயங்கார் புளியோதரை ரெடி!!!

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

தயிர் சாதத்திற்கு அருமையான இஞ்சி - புளி ஊறுகாய்

 

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
தயிர் சாதத்திற்கு அருமையான இஞ்சி - புளி ஊறுகாய்
 
தேவையான பொருட்கள் :

தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்),
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு.

201806111131572467_1_tamarind-ginger-pickle1._L_styvpf.jpg

செய்முறை :

புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும்.

அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும்.

அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

சூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி.

குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சப்பாத்திக்கு அருமையான முட்டை உருளைக்கிழங்கு கறி

 
அ-அ+

சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
சப்பாத்திக்கு அருமையான முட்டை உருளைக்கிழங்கு கறி
 
தேவையான பொருள்கள்

முட்டை - 4
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்

அரைக்க

இஞ்சி - 1/2 இன்ச் அளவு
பூண்டு - 3 பல்
கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி 

தாளிக்க

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
வெங்காயம் - 1/4 பங்கு
கறிவேப்பிலை - சிறிது

201806181508540707_1_Egg-and-Potato-Curry._L_styvpf.jpg

செய்முறை  :

உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும்.

தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.

அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும்.

அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.

உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

ஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா ரசம்

 
அ-அ+

காய்ச்சல், சளி உள்ளவர்கள் புதினா ரசம் செய்து குடித்தால் உடலுக்கு தொம்பு கிடைக்கும். இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா ரசம்
 
தேவையான பொருட்கள் :

புதினா - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

201806231132515236_1_Pudina-rasam1._L_styvpf.jpg

செய்முறை :

வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும்.

மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும்.

புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும்.

புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்.

நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சூப்பரான ஸ்நாக்ஸ் பாசிப்பருப்பு பக்கோடா

 
அ-அ+

பாசிப்பருப்பில் பாயாசம் வச்சு சாப்பிட்டு இருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா… சூப்பரான சுவையுடன் மொறுமொறுனு பிரமாதமா இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான ஸ்நாக்ஸ் பாசிப்பருப்பு பக்கோடா
 
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 1/2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - சிறிய துண்டு
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

201806251507395498_1_moong-dal-pakora._L_styvpf.jpg

செய்முறை :

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.

இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/06/25150739/1172516/moong-dal-pakora.vpf

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.