நவீனன்

சமையல் செய்முறைகள் சில

483 posts in this topic

மாம்பழ லஸ்ஸி.. செய்வது எப்படி??

12508827_1238231609526581_12927422362709

தேவையானவை: நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - ஒரு கப், பால் - அரை கப் (காய்ச்சி ஆற வைத்தது), ஐஸ்கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, குளிர வைத்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.

 

 

 

தேங்காய்ப்பொடி.. செய்வது எப்படி??

1654290_1236430819706660_233180614497584

தேவையானவை: முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து... தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

 

 

பூண்டுப்பொடி.. செய்வது எப்படி??

1888447_1236430446373364_313800811463560

தேவையானவை: பூண்டு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 10, உளுத்தம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்... மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

 

 

பருப்புப்பொடி... செய்வது எப்படி??

12096458_1236429046373504_56353402156190

தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.

 

 

 

பூசணிக்காய் கலவைக் கூட்டு.. செய்வது எப்படி??

1960116_1235073446509064_882886377455912

தேவையானவை: நறுக்கிய இளம் வெள்ளைப் பூசணி - ஒரு கப், வெந்த துவரம்பருப்பு - அரை கப், உலர்ந்த மொச்சை - 50 கிராம், கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துருவிய தேங்காய் - அரை கப், எண்ணெய் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, தேங்காய் துருவல் - கால் கப், தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை: உலர்ந்த மொச்சை, கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவிட்டு, மறுநாள் காலை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு வடிக்கவும். பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு வடிக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் வெந்த பூசணி, மொச்சை, கொண்டைக்கடலை, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த துவரம்பருப்பு, பொடித்த மசாலா சேர்த்து மேலும் நன்கு கொதிக்கவிட்டு, தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும் (கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்).

 

கறிவேப்பிலை குழம்பு.. செய்வது எப்படி??

1935285_1234479456568463_708688057592145

தேவையானவை: கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

 

 

3 people like this

Share this post


Link to post
Share on other sites

வீட்டிலேயே கார்லிக் பிரெட் தயாரிக்க வேண்டுமா?

https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xfl1/t31.0-8/12471491_472796579575668_8182837982359117766_o.jpg

அரை ஸ்பூன் பூண்டு பேஸ்ட் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் குழையுங்கள். இதை பிரெட் துண்டுகளின் மேல் லேசாகத் தடவி, தோசைக்கல்லிலோ அல்லது டோஸ்ட்டரிலோ டோஸ்ட் செய்தால்.. கார்லிக் பிரெட் தயார்.

இதைவிட எளிமையாக தயாரிக்க...முதலில் வெண்ணெய் தடவிய பிரெட்டை டோஸ்ட் செய்யுங்கள். பிறகு, இரண்டாக வெட்டிய ஒரு பல் பூண்டை அதன் மேல் தேய்த்துவிட்டால்..கார்லிக் வாசனையுடன் பிரெட் கமகமவென்று இருக்கும்.

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிட மனம் வருமா

Share this post


Link to post
Share on other sites

மொச்சை சாம்பார்.. செய்வது எப்படி??

993853_1239592566057152_6800089468552324

 

தேவையானவை: உலர் மொச்சை - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், புளி - எலுமிச்சைப் பழ அளவு, தேங்காய்த் துருவல் - சிறிய கப், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக் கவும்.

புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
Aval Vikatans Foto.
 

கீரை மிளகூட்டல்.. செய்வது எப்படி??

தேவையானவை: முளைக் கீரை - ஒரு சிறிய கட்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... சீரகம், தேங்காய்த் துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து கீரையுடன் கலந்து, வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, வாணலியில் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இதனை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம். இதே முறையில் எல்லா கீரையிலும் தயாரிக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

செட்டிநாட்டுத் தைப்பொங்கல் ரெசிப்பிக்கள்

 

 

dot1%283%29.jpgபொங்கல் சாதம் 

dot1%283%29.jpgசர்க்கரைப் பொங்கல் 

dot1%283%29.jpgபருப்பு மசியல்

dot1%283%29.jpgவாழைக்காய்ப் பொரியல் 

dot1%283%29.jpgஅவரைக்காய்ப் பொரியல்

dot1%283%29.jpgசர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல் 

dot1%283%29.jpgமொச்சைக் கூட்டு

dot1%283%29.jpgபறங்கிக்காய்க் குழம்பு

dot1%283%29.jpgபல காய்க் குழம்பு

p111.jpg

தைப்பொங்கல் அன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் கடைப்பிடிக்கும் சம்பிரதாய உணவு வகைகளைச் செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.

பொங்கல் சாதம்

தேவையானவை:

 பச்சரிசி - 200 கிராம்
 தண்ணீர் - 4 டம்ளர்

p1112.jpg

செய்முறை:

பச்சரிசியை ஒரு முறை கழுவவும். இரண்டாவது முறை கழுவும்போது கொடுக்கப்பட்ட 4 டம்ளர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அரிசியில் ஊற்றி கழுவவும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வடிகட்டி பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கி வரும்போது தீயைக் குறைத்து அரிசியைச் சேர்த்து வேகவிடவும். அரிசி வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டியால் சிறிது தண்ணீரை எடுத்துவிடவும். தேவையென்றால் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம்.


சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - 200 கிராம் (புதியது)
 தண்ணீர் - 3 டம்ளர்
 வெல்லம் - 200 கிராம்
 தேங்காய்த்துருவல் - கால் கப்
 முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் (திராட்சை) - தலா 10
 நெய் - 4 டீஸ்பூன்
 ஏலக்காய் - 1

p113.jpg

செய்முறை:

பச்சரிசியை முதல்முறை நன்றாகக் கழுவவும். இரண்டாவது முறை கழுவும் தண்ணீரில், அரிசி வேகவைக்கத் தேவைப்படும் 3 டம்ளர் தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை வடிகட்டி, பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கிவரும் போது, அரிசியைச் சேர்த்து தீயைக் குறைத்து வேகவிடவும். அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை), ஏலக்காய் மற்றும் தேங்காய்த்துருவலை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

வெல்லத்தில் கல், மண் இருந்தால் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரிசியோடு சேர்க்கவும். பொங்கல் அதிக தண்ணீரை இழுக்கும் என்பதால், கவலை வேண்டாம்.


பருப்பு மசியல்

தேவையானவை:

 பாசிப்பருப்பு - 100 கிராம்
 காய்ந்த மிளகாய் - 3
 பூண்டு - 4 பல்
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

p114.jpg

செய்முறை:

பூண்டுப் பல்லைத் தோலுடன் இடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதில் பாசிப்பருப்பு, இடித்த பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள், சிறு துண்டுகளாக உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவிடவும். பருப்பு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும் (உப்பை கடைசியில்தான் சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால், பருப்பு வேகாது). இதை சாதத்தோடு பரிமாறவும்.


வாழைக்காய்ப் பொரியல்

தேவையானவை:

 வாழைக்காய் - 1
 தண்ணீர் - 3 கப்
 சின்ன வெங்காயம் - 5
 பச்சை மிளகாய் - 1
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

p115.jpg

செய்முறை:

வாழைக்காயைத் தோல் சீவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். இதில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைக்கவும். வெந்தவுடன் தண்ணீரை வடிக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த வாழைக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.


அவரைக்காய்ப் பொரியல்

தேவையானவை:

 அவரைக்காய் - 200 கிராம்
 தண்ணீர் - 2 கப்
 சின்ன வெங்காயம் - 6
 காய்ந்த மிளகாய் - 2
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

p116.jpg

செய்முறை:

அவரைக்காயைக் கழுவி நீளமாக நறுக்கிக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அவரைக்காயுடன்,  2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும். காய் வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்து, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அவரைக்காய் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல்

தேவையானவை:

 சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 கறிவேப்பிலை - 10 இலைகள்

p117.jpg

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை கழுவிதோலுடன் வட்டமாக நறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து வேகவிடவும். பிறகு, தண்ணீரை வடிக்கவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பின்னர் வேகவைத்த கிழங்கைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


மொச்சைக் கூட்டு

தேவையானவை:

 ஃப்ரெஷ் மொச்சை - கால் கிலோ
 துவரம்பருப்பு - 100 கிராம்
 தண்ணீர் - ஒன்றரை கப்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 சின்னவெங்காயம் - 6  (இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்)
 சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 சீரகம் - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்

p118.jpg

செய்முறை:

துவரம்பருப்பை ஒன்றரை கப் தண்ணீர், மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக குக்கரில் வேக விடவும். இதனுடன் ஃப்ரெஷ் மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து மேலும் வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மொச்சைக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


பறங்கிக்காய்க் குழம்பு

தேவையானவை:

 பறங்கிக்காய் - 200 கிராம்
 சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.)
 தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு - 4 பல் (இடித்து வைத்துக்கொள்ளவும்)
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 புளி - சின்ன எலுமிச்சை அளவு
 தன்ணீர் - 2 கப்
 உப்பு - தேவையான அளவு
 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
 எண்ணெய் - 3 டீஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
 வெந்தயம் - 10
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

p119.jpg

செய்முறை:

புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். பறங்கி விதைகள் மற்றும் தோலை நீக்கிவிட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் பறங்கிக்காய் சேர்த்து லேசாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து மசிய வதக்கவும். பிறகு புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.  பிரஷர் குறைந்ததும் குக்கரைத் திறந்து, நன்கு கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறவும்.


பல காய்க் குழம்பு

தேவையானவை:

 முருங்கைக் காய், கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - தலா 1
 கத்திரிக்காய் - 3
 சுரைக்காய், பறங்கிக்காய், பலாக்காய், வாழைக்காய் - சிறிதளவு
 அவரைக்காய் - 10
 ஃப்ரெஷ் மொச்சை - அரை கப்
 காராமணி - 10
 தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
 சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை - 20 இலைகள்
 புளி - எலுமிச்சை அளவு
 தண்ணீர் - 2 கப்
 சாம்பார் பொடி - 5 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்

p120.jpg

செய்முறை:

புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். சுரைக்காய், வாழைக்காய், பலாக்காயைத் தோலை நீக்கி ஒரே அளவில் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். மற்ற காய்கறிகளையும் நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் நறுக்கிய காய்கறிகள், ஃப்ரெஷ் மொச்சை, காராமணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும், பிரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து தாளித்ததைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

இதற்கு இங்கு சொன்ன காய்களைத் தவிர்த்து நீங்கள் விரும்பும் காய்கறிகளையும் பயன்படுத்தலாம்

vikatan.com

2 people like this

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி.. செய்வது எப்படி??

12510220_1242029865813422_47031404535640

தேவையானவை:வெண்டைக்காய் - கால் கிலோ, வெல்லம் - 50 கிராம், புளி - சுண்டைக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெண்டைக்காயை சின்னச் சின்ன வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பச்சடியில் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், 3 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்க்கலாம்.

குறிப்பு: வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றது.

Share this post


Link to post
Share on other sites

இன்ஸ்டன்ட் போண்டா
தேவையானவை:
இட்லி மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
அரிசி மாவு, ரவை - தலா 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - பொரிக்க‌
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள்வும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை கெட்டியாக ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் இன்ஸ்டன்ட் போண்டா ரெடி.

12492032_474375216084471_843949914219449

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

10308341_1239593819390360_71574825929042

வெந்தயக்கீரை சாம்பார்.. செய்வது எப்படி??

தேவையானவை: வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு, துவரம்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்.

 

2 people like this

Share this post


Link to post
Share on other sites

10606309_474376899417636_347948613116065

மிளகு மாதுளை

தேவையானவை:
மாதுளை முத்துக்கள்- 100 கிராம்
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- ஒரு சிட்டிகை

செய்முறை:
வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் மிளகுத்தூள், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, மாதுளை முத்துகளைச் சேர்த்து லேசாகப் புரட்டி எடுத்து, பரிமாறவும்.
 

Share this post


Link to post
Share on other sites

hs983l.jpg

தேங்காய்ப்பால் சொதி.. செய்வது எப்படி??

தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - 100 மில்லி, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். காய்களை, சிறிது எண்ணெய் விட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.

குறிப்பு: தேங்காய்ப்பால் சொதி, இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷன்.

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

நன்றி இணைப்புக்கு சகோதரம் நவீனன்!!

Share this post


Link to post
Share on other sites

பேபி பீட்ஸா தோசை

12507316_474696909385635_806641244600504

தேவையானவை:
தோசை மாவு- அரை கிலோ
பேபி கார்ன் - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய மூன்று கலர் குடமிளகாய்- தலா ஒன்று
துருவிய மொசரல்லா சீஸ்- சிறிதளவு
சில்லி ஃபிளேக்ஸ்- ஒரு டீஸ்பூன்
ஓரிகானோ- ஒரு டீஸ்பூன்

செய்முறை:
பேபி கார்னை வேக வைத்து மெல்லிய வட்டமாக நறுக்கி வைக்கவும். தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தி, சிம்மில் வைக்கவும். ஒரு சின்ன கரண்டி தோசை மாவெடுத்து, உள்ளங்கை அளவிலான ஊத்தப்பமாக தோசைக்கல்லில் ஊற்றவும். மாவு வேகும் முன் அதன் மேல் வெங்காயம், பேபி கார்ன், குடமிளகாயை வைக்கவும். தோசையைத் திருப்பிப் போட்டு அதைச் சுற்றி ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும். இதை அப்படியே பிளேட்டுக்கு மாற்றவும். இனி தோசையின் மேல் சீஸ் தூவி அது உருகும் நேரத்தில், சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோவைச் சேர்க்கவு. இதை 2 நிமிடம் கழித்து கஞ்ச் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து விடவும்.

2 people like this

Share this post


Link to post
Share on other sites
 
 
 
Aval Kitchens Foto.
 
 

தக்காளி சட்னி


தேவையானவை:
தக்காளி - 5
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 8
உப்பு - தே.அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தக்காளியுடன் மிளகாயை அரைத்தால் திப்பி திப்பியாக வரும். இத்துடன் தக்காளியை சேர்த்து அரைத்து பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்திருக்கும் தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாசனை போக லேசாக வதக்கவும். கொதி வந்தது, பெருங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கி பரிமாறவும்.

2 people like this

Share this post


Link to post
Share on other sites

அம்மியில் என்டால் மம்மி எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு அரைப்பா..., இங்கு மிக்சியில் தக்காளி வெங்காயத்தைத் தனித்தனியாக அரைத்து அரைத்தமிளகாயுடன் மீன்டும் சேர்த்து அரைப்பதுதான் சுலபமாய் இருக்கும்...!

நன்றி நவீன்...!

Share this post


Link to post
Share on other sites
Aval Kitchens Foto.
 

மோர்க்குழம்பு


தேவையானவை:
மோர் - 200 மில்லி
தேங்காய் - 30 கிராம்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
இ ஞ்சி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - தே.அளவு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
வெள்ளை பூசணி - 50 கிராம்
எண்ணெய் - தே.அளவு
செய்முறை:
ஊறவைத்த கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்புடன் மல்லி தேங்காய் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாயைச் சேர்ந்து நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் வெள்ளை பூசணி சேர்த்து வதக்கவும். இத்துடன் சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்த கலவையைச் சேர்த்து வதக்கி பச்சை வாசனை போன பிறகு மோர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Share this post


Link to post
Share on other sites

12493957_476478915874101_118991610520432

இட்லி டிக்கா


தேவையானவை:
சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லி - 1 கப்
மூவர்ண குடமிளகாய் - தலா 1
ப்ராசஸ்டு சீஸ் - 200 கிராம்
இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தே.அளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
டூத்பிக் - தே.அளவு
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஒரு பவுலில் இட்லி துண்டுகளை சேர்த்து அதன் மேல் சோள மாவை தூவி கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இட்லிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இதன் மேலே இட்லி மிளகாய்ப்பொடிகளை எல்லா பக்கமும் படுவது போல தூவவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கியூப் வடிவத்தில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும். இனி டூத்பிக்கில் இட்லி, குடமிளகாய், சீஸ் என ஒன்றன் பின் ஒன்றாக சொருகி பரிமாறவும்

2 people like this

Share this post


Link to post
Share on other sites

இட்டலியையும் பார்பிகியூப் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாச்சா..., இட்டலிக்கு வந்த வாழ்வைப் பார்....!  :)

2 people like this

Share this post


Link to post
Share on other sites

பாலக்கீரை பக்கோடா

12604872_477648939090432_819455777326249


தேவையானவை:
பாலக்கீரை - 1 கப்
பெரிய வெங்காயம் - அரை கப்
சோம்பு - அரை டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தலா 1 டீஸ்பூன்
கடலைமாவு - ஒன்னரை கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பாலக்கீரையின் பின்புறம் உள்ள தண்டை நீக்கிவிட்டு இலையை மட்டும் பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். பூண்டு சோம்பு இரண்டையும் இடிக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பாலக்கீரை, பெரிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இடித்த பூண்டு கலவையை சேர்த்து பிசையவும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கலவையை பொரித்தெடுக்கவும்.

2 people like this

Share this post


Link to post
Share on other sites

பாலக் கீரை என்டால் எந்த வகைக் கீரை?

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, ரதி said:

பாலக் கீரை என்டால் எந்த வகைக் கீரை?

images?q=tbn:ANd9GcTsFOfbKs1q9KqdVmLfnAa

Share this post


Link to post
Share on other sites

வாழைப்பூ வடை

12621979_477591962429463_209839702009172


தேவையானவை:
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்
மாவில் கலக்க:
வாழைப்பூ - 1 கப்
பெரிய வெங்காயம் - கால் கப்
கறிவேப்பிலை, புதினா - தலா 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை , உப்பு - தே.அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வடைக்கு கொடுத்துள்ள பொருட்களை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். வாழைப்பூவை அதன் நடுவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு கழுவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கவும். இனி அரைத்த மாவுடன் இவற்றை சேர்த்து கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வட்டமாக தட்டி பொரித்தெடுக்கவும்.

Share this post


Link to post
Share on other sites
·
 
 
 
Aval Kitchens Foto.
 
 

பூண்டுச் சட்னி

தேவையானவை:

பூண்டு - 150 கிராம்
வரமிளகாய் - காரத்திற்கு ஏற்ப
புளி - சின்ன நெல்லிக்காய்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை :

பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். மற்றவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.அடுத்து பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளி மூன்றையும் நன்றாக பொடிக்கவும். பின் வதக்கிய பூண்டை சேர்த்து அரைத்தெடுக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான பூண்டு சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு சூப்பர் காமினேசன்

Edited by நவீனன்
1 person likes this

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, நவீனன் said:
·
 
 
 
Aval Kitchens Foto.
 
 

பூண்டுச் சட்னி

தேவையானவை:

பூண்டு - 150 கிராம்
வரமிளகாய் - காரத்திற்கு ஏற்ப
புளி - சின்ன நெல்லிக்காய்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை :

பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். மற்றவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.அடுத்து பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளி மூன்றையும் நன்றாக பொடிக்கவும். பின் வதக்கிய பூண்டை சேர்த்து அரைத்தெடுக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான பூண்டு சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு சூப்பர் காமினேசன்

ம்ம்.. நல்லாய் தான் இருக்கும் ஆனா பூண்டு மணம் தான்.....

Share this post


Link to post
Share on other sites