Jump to content
  • 0

எனது சந்தேகம் , சர்வதேச வேட்டி தினம் யாரால் கொண்டுவரப்பட்டது ?


hari

Question

தமிழகத்தில் சர்வதேச வேட்டி தினம் இன்று என்று கொண்டாடப்படுகின்றது ,

எந்த சர்வதேச அமைப்பால் இந்த தினம் தீர்மாணிக்கப்பட்டது , தயவு செய்து யாராவது ஆதாரத்தை இணைக்கமுடியுமா ? இது ஒரு நல்ல விடயமாக இருந்தாலும் , சர்வதேசம் இதுக்கு முக்கியத்துவம் கொடுத்ததா என்று அறிய ஆவல்

Link to comment
Share on other sites

12 answers to this question

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யான் ஒரு ஒட்டு வேட்டி வாங்கியிருக்கேன்! ஒரு சுத்தோடு ஒட்டிவிட்டால் காணும்.  பெல்ற் கட்டுவதா, வேண்டாமா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை:cool:

Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

தமிழாட்கள் வேட்டி கட்டுவது குறைந்து கொண்டு போவதால்,கட்டுவதை ஊக்கப்படுத்த யாராவது தொடங்கி இருக்கலாம்

உலக பாரம்பர்யங்களை பாதுகாக்கும் நோக்கில் யுனஸ்கோவால் ஆண்டுதோறும் ஜனவரி 6-ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நமது பாரம்பர்யத்தை போற்றும் விதமாகவும், நினைவூட்டும் விதமாகவும் சர்வதேச வேட்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி வேட்டியை வலது பக்கமாகவா அல்லது இடது பக்கமாகவா அல்லது எப்பக்கமாகவும் கட்டலாமா? இதற்கென ஒரு முறை உள்ளதா? 
மெத்தப்படித்த(?) சிலர் இப்படி உடுப்பதில்லை அப்படி உடுப்பதில்லை என்று கூறுவதால் அறியவிரும்பகிறேன். 

dhoti-copy.jpg

 

Bildergebnis für tamil vetti fotoBildergebnis für tamil vetti fotoBildergebnis für tamil vetti foto

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்...! நான் பொதுவாகச் சொன்னேன்....!!

Link to comment
Share on other sites

27 minutes ago, suvy said:

நன்றி நவீனன்...! நான் பொதுவாகச் சொன்னேன்....!!

ஆனாலும் நீங்கள் சொன்ன அட்சய திருத்தியை விடயம் உண்மைதான்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் காரணம் பெரும் பெரும் வியாபார நிறுவனங்கள்தான்....!

ஒரு றாத்தல் உப்பை வாங்கி வந்து இரண்டு பூவுடன் லட்சுமி படத்துக்கு முன்னால வைத்து கும்பிட்டுட்டுப் போற அட்சய திருத்தியை இன்று தங்கம் வாங்கு, தங்கம் வாங்கு என்று உலகம் முழுதும் கூவிக் கூவி விற்கப் படுகிறது. இப்ப வேட்டி தினம் , கொஞ்சநாள் போக சால்வை தினம் வரும் என்று நான் நினைக்கின்றேன்...!!

Link to comment
Share on other sites

யாருமே கேள்வி கேட்காமல் இதை சர்வதேச வேட்டி நாள் என்று கொண்டாடுகின்றார்கள் , முகநூலில் ஆதாரத்தை தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது எனக்கு துரோகி பட்டம்

 

Link to comment
Share on other sites

 

 

 

 

 

 

'வேட்டி அணிந்து நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்!'

 

உலக பாரம்பர்யங்களை பாதுகாக்கும் நோக்கில் யுனஸ்கோவால் ஆண்டுதோறும் ஜனவரி 6-ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நமது பாரம்பர்யத்தை போற்றும் விதமாகவும், நினைவூட்டும் விதமாகவும் சர்வதேச வேட்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

v3.jpg

வேட்டி தினத்தையொட்டி வாசகர்களின் வெரைட்டியான புகைப்பட தொகுப்பு...

தமிழகத்தைப் பொறுத்தவரை சாதி, மதங்களைக் கடந்து அனைத்து சமுதாயத்தினரும் விசேஷ நாட்களில் அணிய விரும்புவது வேட்டியைத்தான். ஆண்களின் கம்பீரத்திற்கு அடையாளமாகவும், நமது கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது வேட்டி என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது.

மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட வெகு சிலர் வேட்டியை மறந்திருக்கும் இன்றைய நிலையில், அலுவலகச் சூழலுக்கும், பள்ளி, கல்லூரிகளின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வேட்டி அணிவதில்லை என்றே பலர் கூறுகின்றனர்.

v2.jpg

வேட்டி தினத்தையொட்டி வாசகர்களின் வெரைட்டியான புகைப்பட தொகுப்பு...

நமது தட்ப வெப்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொறுத்தமானது வேட்டிதான். அணிவதற்கு ஏதுவாக ரெடிமேட் வேட்டிகள், நறுமணம் கமழும் வேட்டிகள், மேட்சிங் சட்டைகளுடன் வரும் மிக்ஸ் மேட்ச் வேட்டிகள் என்று நவீன ஆடைகளுக்கு இணையாக வேட்டி தயாரிப்பாளர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கும் விலையில்லா வேட்டி, சேலைகளை நெய்வதால் தங்களுக்கு ஓரளவு வருவாய் கிடைப்பதாக கூறும் நெசவாளர்கள், "இன்றைய காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றங்களால் வேட்டி அணிவது வெகுவாக குறைந்து வருகிறது. நாகரீகத்தின் காரணமாக பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை இளைஞர்கள் அணிய விரும்புவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுகிறது. இதனால், நெசவுத் தொழிலை கற்றுக்கொள்ள எங்கள் பிள்ளைகள்கூட ஆர்வம் காட்டுவதில்லை" என்று வேதனைப்படுகின்றனர் நெசவுத் தொழிலாளர்கள்.

v1.jpg

வேட்டி தினத்தையொட்டி வாசகர்களின் வெரைட்டியான புகைப்பட தொகுப்பு...

மேலும் அவர்கள் கூறும்போது, தமிழரின் பாரம்பர்ய சின்னமாக கருதப்படும் வேட்டி அணிவதை இன்றைய இளைஞர்கள் அதிகமாக விரும்பி அணிந்தால், எங்கள் வாழ்வாதாரமும் நெசவுத் தொழிலும் பாதுகாக்கப்படுவதுடன் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
கால ஓட்டத்திற்கு ஏற்ப தேவைகளும், தேவைக்கு ஏற்ப கலாச்சாரமும் மாறுவது இயல்பான ஒன்றுதான். அப்படிப்பட்ட மாற்றங்களுக்கு இடையில் காணாமல் போவதும், சிக்கித் தவிப்பதும் நமது அடையாளங்கள் தான். நமது அடையாளங்களுள் ஒன்றான வேட்டிக்கு அந்த நிலை வராமல் பாதுகாப்பது நமது கடமை தானே!

http://www.vikatan.com/news/tamilnadu/57259-international-dhoti-day-wear-dhoti-protect-weavers.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத பொல்லாததுக்கெல்லாம் சர்வதேசதினம் வரும் போது இப்படியான நல்ல உடுப்புகளுக்கும் அதனை நெய்தெடுக்கும் ஏழை தொழிலாளர்களுக்காகவும் கொண்டாடலாம். :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழாட்கள் வேட்டி கட்டுவது குறைந்து கொண்டு போவதால்,கட்டுவதை ஊக்கப்படுத்த யாராவது தொடங்கி இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2016 at 0:00 PM, suvy said:

இதுக்கெல்லாம் காரணம் பெரும் பெரும் வியாபார நிறுவனங்கள்தான்....!

ஒரு றாத்தல் உப்பை வாங்கி வந்து இரண்டு பூவுடன் லட்சுமி படத்துக்கு முன்னால வைத்து கும்பிட்டுட்டுப் போற அட்சய திருத்தியை இன்று தங்கம் வாங்கு, தங்கம் வாங்கு என்று உலகம் முழுதும் கூவிக் கூவி விற்கப் படுகிறது. இப்ப வேட்டி தினம் , கொஞ்சநாள் போக சால்வை தினம் வரும் என்று நான் நினைக்கின்றேன்...!!

போன வருடம்

லா சப்பலில் நகைக்கடைகளின் குறைந்த வியாபாரமே பல லட்சங்களாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.