Jump to content

2015ல் அறிவியல் தந்த வரவுகள்!


Recommended Posts

2015ல் அறிவியல் தந்த வரவுகள்!

 

தொழில்நுட்பம் எல்லைகள் கடந்து அசாத்திய வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆராய்ச்சிகள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை ஈன்று வருகின்றன.

‘அறிவியல் வளர்ச்சி ஆக்கமா தாக்கமா’ என்று இன்னும் பள்ளிகளும் கல்லூரிகளும் பட்டிமன்றம் நிகழ்த்தி வந்தாலும், மனிதனின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்களை இக்கண்டுபிடுப்புகள் நிகழ்த்தி வருகின்றனர். தொலைபேசி, விமானம்,மின்சாரம் போன்று மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றும் அருபெரும் கண்டுபிடிப்புகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத போதும், சமைக்கக் கற்றுக் கொடுக்கும் பேன் முதல் முன்வரும் வாகனத்தை படம் பிடித்துக் காட்டும் டிரான்ஸ்பரன்ட் டிரக் வரை நம் வாழ்க்கையை சற்று எளிமையாக மாற்றும் பல கண்டுபிடிப்புகள் இவ்வாண்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

அப்படியான கண்டுபிடிப்புகளில் சிலவற்றைப் பற்றிய பார்வை இதோ…

பையானிக் இயர்ஸ்

in_vc1.jpg

ஒரு இடத்தில் இரைச்சல் அதிகமாக இருந்தால், நாம் என்ன செய்வோம்? காதுகளைப் பொத்திக்கொள்வோம் இல்லையெனில் அவ்விடத்தை விட்டுப் போய்விடுவோம். இனிமேல் அதற்கு அவசியம் இல்லை. நமக்கு வேண்டிய சத்தங்களை கழித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். ரயிலில் பயணிக்கும்போது ரயிலின் சத்தத்தை ம்யூட் செய்துவிட்டு ரஹ்மானின் பாடல்களை நிம்மதியாக ரசிக்கலாம். ஹாலிவுட் பட சீன் என்று நினைத்துவிடாதீர்கள். அப்படிப்பட்ட பையானிக் இயர்சை உண்மையாகவே அறிமுகப்படுத்தியுள்ளது நியூ யார்க்கின் டாப்ளர் லேப்.

இவற்றை ஹெட் செட் போல அணிந்து கொண்டு நமக்கு தேவையான ஃப்ரீகுவென்சியை (frequency – அதிர்வெண்) மட்டும் செலக்ட் செய்து விட்டு பிற ஃப்ரீகுவென்சிகளை நிராகரித்துக் கொள்ளலாம். இதனால் இரைச்சல்களின்றி இனி நிம்மதியாக இருக்கலாம். இதை முதல்லயே கண்டுபுடிச்சிருந்தா பல காதல்கள் தப்பிச்சிருக்குமேப்பா..!

டிரான்ஸ்பரன்ட் டிரக்

samsaun1.jpg

இனிமேல் நாம் வாகனம் ஓட்டும்போது விபத்துகள் இல்லாமல் படம் பார்த்துக் கொண்டே போகலாம். அப்படியொரு பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கிறது சாம்சங். நமக்கு முன்னாள் ஒரு வாகனம் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் ஏதும் தெரியாததால்தான் பல விபத்துகள் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க சமயோசிதமாக யோசித்த சாம்சங் நிறுவனமும் லியோ பர்னர் நிறுவனமும் அறிமுகப்படுத்தியதே இந்த டிரான்ஸ்பரன்ட் டிரக். 

ஒரு டிரக்கின் முன்பகுதியில் கேமராவும் பின்பகுதியில் திரையையும் பொருத்தியுள்ளது சாம்சங். கேமராவானது முன்னாள் வரும் வாகனங்களை படம்பிடித்து அதைத் திரையில் புரொஜெக்ட் செய்யும். இவ்வாகனம் சுமார் 1,000 கிலோ மீட்டர் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சாலைப் போக்குவரத்தின் பாதுகாப்பில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று பெருமிதம் கொள்கிறார் அர்ஜென்டினா சாம்சங் நிறுவனத்தின் தலைவர் சாங் ஜிக் லீ.

பேன்டெலிஜென்ட்

inv_vc2.jpg


இதை ஒரு சமையலறை புரட்சி என்று தான் சொல்ல வேண்டும். இனிமேல் வீட்டில் தோசை தீயாது, இறைச்சி சரியாய் வேகாமல் இருக்காது. சமைக்கத் தெரியாதவர்கள் கையில் சிக்கினாலும் பேன் பாழாகாது. அதுதான் பேன்டெலிஜென்டின் சிறப்பு. இதை புளூடூத் மூலம் நமது ஸ்மார்ட் போனோடு கனெக்ட் செய்துவிட்டு, என்ன பொருளை சமைக்கிறோம் என feed செய்துவிட்டால் போதும், அடுப்பை பற்றவைப்பது முதல் என்னவெல்லாம் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று நமது போன் ஸ்கிரீனில் தெளிவாக சொல்லிக் கொடுத்துவிடும். உண்மையிலேயே இது ஒரு புரட்சிதானே. மார்க்கெட்டில் 200 அமெரிக்க டாலர்களுக்குக் கிடைக்கிறது இந்த கற்றுக்கொடுக்கும் பேன்.

ஹோவர்போர்டு

in_vc4.jpg


இனிமேல் மார்க்கெட் போய் காய்கறி வாங்க சைக்கிளையோ இருசக்கர வாகனங்களையோ எடுக்கத் தேவையில்லை. ஹாயாக காற்று வாங்கிக் கொண்டு, பாட்டுக் கேட்டுக் கொண்டு எந்த வலியும் இல்லாமல் இந்த ஹோவர் போர்டில் போய் வரலாம். இது கிட்டத்தட்ட ஸ்கேட்டிங் போர்டுதான். ஆனால் இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. தானாகவே பேலன்ஸ் செய்துகொள்ளும் இந்த ஸ்கூட்டர். இதில் ஏறி நின்று சாதாரணமாக நம் உடல் வலுவை நமக்கு வேண்டிய திசையில் செலுத்தினால் போதும், மின்னலென பயணிக்கும் இந்த ஹோவர் போர்டு. இது அறிமுகமானதிலிருந்து பல நட்சத்திரங்களும் இதற்கு ஃபேன் ஆகிவிட்டார்கள். பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர், ஜிம்மி ஃபாலோன் என நீளும் அப்பட்டியல்,  இதை இவ்வாண்டின் வைரல் ஹிட்டாக மாற்றியுள்ளது. அதிலுள்ள சிறப்பம்சங்களைப் பொறுத்து 350 முதல் 17000 அமெரிக்க டாலர்கள் வரை இது விற்கப்படுகிறது. இனி அடுத்து ஹோவர் போர்டு ரேஸ் சூடு பிடிக்குமே..!

ஓசன் கிளீனிங்

inv_43.jpg

பசிபிக் சமுத்திரத்தை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்ய போயன் ஸ்லாட் என்பவர் கண்டுபிடித்த திட்டமே இந்த ஓசன் கிளீனிங். எத்தனையே ஆய்வாளர்கள் எத்தனையோ திட்டங்களை முயற்சி செய்தும் பலனளிக்காத நிலையில்,  மற்றவர்களை விட மிகவும் குறைந்த செலவில் (வெறும் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள்தான்!!) செய்து முடித்துள்ளார் ஸ்லாட். சுமார் 100 கிலோமீட்டர் சுற்றளவில் மிதந்து கொண்டிருக்கும் பலூன் போன்ற கிளீனர்கள், 10 ஆண்டுகளில் சுமார் 42 சதவிகித பிளாஸ்டிக்கை சுத்தம் செய்துவிடுமாம். அடுத்த ஆண்டு நடைபெறும் சோதனை முயற்சி வெற்றி பெற்றால் 2020ல் இருந்து இதன் செயல்பாடு தொடங்கும்.

TZOA  என்விரான்மென்டல் டிராக்கர்

inv_vc5.jpg 


சுவாசிக்கும் காற்றை விலை கொடுத்து வாங்கும் நிலைமைக்கு வந்துவிட்டது உலகம். கார்பன் மோனாக்சைடு, சல்பர் டையாக்சைடு போன்ற வாயுக்களாலும் பூக்களிலிருந்து வரும் மகரந்த துகள்களாலும் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது மனித இனம். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் என்ன இருக்கிறது என்று தெரிந்தா சுவாசிக்க முடியும்? இனிமேல் முடியும் என்று உலகிற்கு சொல்கிறார் கெவின் ஹார்ட். இவர் கண்டுபிடித்துள்ள TZOA  என்விரான்மென்டல் டிராக்கர்,  நம்மைச் சுற்றியுள்ள காற்றில் மாசுக்களையும் பிற விஷ வாயுக்களையும் கண்டறிகிறது. தற்சமயம் கையில் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ள இதனை,  வரும் நாட்களில் நாம் அணிந்து கொள்ளுமாறு தயாரிக்கவுள்ளனர். இதன் இப்போதைய மதிப்பு சுமார் 139 அமெரிக்க டாலர்கள்

ஸ்ப்ரௌட்லிங்

inv_vc7.jpg


இனி குழந்தையின் இதயத் துடிப்பு முதல் நடுநிசியில் குழந்தை தூக்கத்திலிருந்து எழுவது வரை எல்லாம் இனி நம் உள்ளங்கைக்குள். ஆம் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அதில் சில மாறுதல்கள் ஏற்படும்போது நமக்கு தகவல் சொல்லும் இந்த ஸ்ப்ரௌட்லிங். இதை குழந்தையின் கையிலோ காலிலோ கட்டிவிட்டால் போதும் 24 x 7 ஜேம்ஸ்பாண்ட் போல் குழந்தையை கவனிக்கும் இந்தக் கண்டுபிடிப்பு. இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மாற்றங்கள் ஏற்படும்போது நமது செல்போனிற்கு அலாரம் கொடுத்துவிடும். ஆனால் பசி எடுத்தா அம்மாதான் கண்டுபிடிக்கனும்!

விஞ்ஞானத்தின் வளர்ச்சி நம் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டமாக மேலே மேலே எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு ஆப் முதல் ஆகாய விமானம் வரை தினமும் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. இனி வரும் புத்தாண்டு என்னென்ன சாதனங்களை நம் கைகளில் புகுத்தப் போகிறதோ?

ஹாலிவுட் படத்தில் நாம் பார்த்து வியந்த எத்தனையோ பொருட்களை இனி நம்ம ஊர் சந்தையிலும் இனி கூவிக்கூவி விற்கப் போகிறார்கள்.

http://www.vikatan.com/news/rewind-2015/56783-invention-of-science-2015.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.