Jump to content

தீமையை தடுக்காததும் பாவமே!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தீமையை தடுக்காததும் பாவமே!
கருத்துகள்
 
மாற்றம் செய்த நாள்:
செவ்வாய், டிசம்பர் 22,2015, 5:45 AM IST
பதிவு செய்த நாள்:
திங்கள் , டிசம்பர் 21,2015, 6:06 PM IST
201512211805343624_not-Stop-evil-Sin_SEC
காபாரத போரில் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருந்தார். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தின் காரணமாக, அவர் உயிர் பிரியவில்லை. காலம் சென்று கொண்டே இருந்தது. பலர் வந்து பார்த்த வண்ணம் சென்றனர். அப்போது அங்கு வந்த வியாசரிடம், 'நான் என்ன பாவம் செய்தேன்?. என் உயிர் போகவில்லையே' என்று மனம் வருந்தினார். அதற்கு வியாசர், 'ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் செய்வது மட்டுமே தீமை இல்லை. பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருந்தாலும் பாவம் தான்' என்றார்.

பீஷ்மருக்கு தான் செய்த பாவம் நினைவுக்கு வந்தது. சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை, துச்சாதனன் துகில் உரித்த போது அதை தடுக்காமல் இருந்ததை எண்ணிப் பார்த்தார். பின்னர், 'இதற்கு விமோசனம் இல்லையா?' என்றார். 
'எப்பொழுது நீ உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போதே அது அகன்று விட்டது. இருந்தாலும் கண்டும், காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது விதி' என்றார் வியாசர். 

பீஷ்மருக்கு நீத்தார் கடன் செய்ய யாரும் இல்லாததால் தர்மர் வருத்தப்பட்டார். இதுகுறித்து அவர் வியாசரிடம் கூற, அதற்கு அவர் 'சூரியனுக்கு எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில், நாடு முழுவதும் மக்கள் பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிப்பார்கள். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்து கொண்டு குளிக்கும் மக்கள், தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள். பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும்' என்று கூறினார்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.