Jump to content

சமூகப் பொறுப்புணர்வு பேணப்பட வேண்டும்

Recommended Posts

யாழ் கருத்துக்களத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றிய திரி ஒன்றில் எழுதப்பட்ட கருத்துக்களால் மனம் வருந்தி இப்பதிவினை இடவேண்டிய தேவையேற்படுகின்றது.

அரசியல்வாதிகள் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தினைத் தூற்றுவதும், குறைந்தபட்ச மனிதநேயமின்றி அரசியல் சாயம் பூசி எழுதுவதும் எமக்கிடையேயான இடைவெளியினை மேலும் அதிகப்படுத்தும் கருத்துக்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. நீண்ட கால நோக்கில் இவ்வாறான கருத்துக்கள் எம்மையும் தமிழக உறவுகளையும் அந்நியப்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு கள உறவுகள் தமது கருத்துக்களை சமூகப் பொறுப்புணர்வுடன் வைத்தல் வேண்டும்.

மேலும் எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த தோல்விக்கு, தோல்விக்கான காரணங்களைத் தெரிந்திருந்தும் தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவது என்பது அறியாமையும் அபத்தமும் ஆகும்.

இச் சிறிய கருத்துக்களத்திலேயே எமக்கிடையே ஒற்றுமையைப் பேண முடியாது இருப்பதும் கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் எழுத்து / கருத்து நாகரீகத்தினை தாண்டுவதும் வருத்தத்திற்குரிய விடயமாகவே நாம் பார்க்கின்றோம்.

வெள்ளப் பெருக்கினால் உயிர் உடமைகளை இழந்து நிற்கும் தமிழக மக்களின் துயரங்களிலும் துன்பங்களிலும் யாழ் இணையம் பங்கு கொள்கின்றது என்பதை இத்தருணத்தில் மீண்டும் அழுத்திக் கூறிக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் உங்களின் கருத்தோடு உடன்படுவதோடு, அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் யாழ் களத்தோடு இணைந்திருப்போம் மோகன் அண்ணா. நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை ஏலவே குறிப்பிட்ட திரியில் தெளிவாக எழுதியிருப்பதால் இங்கு எழுதுவதற்கு சிறப்பாக எதுவும் இல்லை. நன்றி

Link to comment
Share on other sites

குறுஞ்செய்திகளிலை உலவின பல செய்திகளில் ஒரு செய்தி மறைக்க முடியாத உண்மயை சொல்லி நிண்டது.. 

"சென்னைக்கு ஒரு பிரச்சினை எண்றால்  மற்ற ஊர்காறன் உதவ சென்னைக்கு போவான்...  மற்ற ஊர்களுக்கு பிரச்சினை எண்றால் சென்னைகாறன் வேலைக்கு போய்விடுவான்... "

மற்றவர் பற்றி அக்கறை கொள்ளாத இயந்திரங்கள் என்பதே  அங்கே சொல்லப்பட்ட சேதி.. 

வலியுடன் கூடிய உண்மை அதுதான்...  அதிகப்படியான சுறண்டல்களால் இன்னலுக்குள் இருக்கும் மக்கள் இதைவிட வேறு விதமாக எழுந்து நிற்பதும் கடினம்...  தலைநகர் சென்னையே தமிழ்நாட்டின் முகம்... அந்த முகம் எதை பிரதிபலிக்கிறதோ அதுவே மற்றவர்களால் கிரகிக்கப்படுகிறது... 

வலிந்து திணிக்கப்படும் கருத்துக்களும் தற்பெருமைகளும் அவர்களை சுற்றி ஒரு கூட்டமும் அதுக்கான எதிர்வாதங்களுமாகவும் பொழுது போக்கோடும் போகும் யாழ்தளத்தில்  பரந்து பலரின் நோக்கம் அற்ற ஒட்டு மொத்தமாகவே ஒரு திண்ணை நிலைக்கு போக ஆரம்பித்து நீண்ட காலம் ஆகிவிட்டது தெரிகிறது.. 

பல காலம் முன்னம் ஆக்க நோகோடு தனித்துவமாக இருந்த யாழுக்கும் இப்போது வெறும் சேறடிப்போடும் போகும் நிலையில் .. இருக்கும் ஈழத்தமிழருக்குள்ளேயே நிலை அப்படி இருக்க..   யாழில் இருக்கும் ஒருவர் தமிழ் நாட்டை பற்றி புரிந்துணர்வோடு இல்லை என்பது ஆச்சரியமான விடயமே இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகன் said:

யாழ் கருத்துக்களத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றிய திரி ஒன்றில் எழுதப்பட்ட கருத்துக்களால் மனம் வருந்தி இப்பதிவினை இடவேண்டிய தேவையேற்படுகின்றது.

வெள்ளப் பெருக்கினால் உயிர் உடமைகளை இழந்து நிற்கும் தமிழக மக்களின் துயரங்களிலும் துன்பங்களிலும் யாழ் இணையம் பங்கு கொள்கின்றது என்பதை இத்தருணத்தில் மீண்டும் அழுத்திக் கூறிக் கொள்கின்றோம்.

நன்றி யாழ் இணையம்

அந்தத் திரியில் நான் எழுதிய கருத்துக்கள் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னுடைய கருத்தை உறுதியாக கூறிவிட்டேன்...உண்மை கசக்கும்.கொஞ்ச காலத்தின் பின்னர் நீங்களே அந்த உண்மையை ஏற்பீர்கள்...மற்றப் படி ஒரு இணையத்தின் பொறுப்பாளாராக இருந்த மோகன் அண்ணா இப்படி எழுதியதில் வியப்பேதும் இல்லை...உலகத் தமிழருக்கான இணையத் தளத்தை நடத்துபவர் அப்படித் தானே எழுத வேண்டும்.

இறுதியாக எமது போராட்டம் தோற்றதிற்கு அவர்களை முழுக்க,முழுக்க குற்றம் சாட்டவில்லை.ஆனால் அவர்கள் நினைத்திருந்தால் எம் மக்களது சாவை குறைத்திருக்கலாம் அல்லது தடுத்திருக்கலாம் என்பது என் ஆணித்தரமான கருத்து.

அரசியல்வாதிகள் மீது பழியைப் போட்டு த.நாட்டு மக்களை காப்பாற்ற முனைகின்றமையானது அவர்கள் அதாவது த.நாட்டு மக்கள் ஒன்றும் தெரியாத பப்பாக்கள் என சொல்லி நிற்கின்றது. உங்கள் கருத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் இது தொடர்பான ஆரோக்கியமான வாதத்தை ஏற்படுத்தி கொடுத்து இருப்பீர்கள். அப்படி இல்லாத படியால் நாங்கள் எழுதிய கருத்தை வெட்டிப் போட்டு இப்படி வந்து இங்கே எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்

**********************

பி;கு; 2ம்,3ம் பந்தி மோகன் அண்ணாவுக்கு விளக்கம் கொடுப்பதற்காக எழுதப்பட்டது

Link to comment
Share on other sites

உலகத்தமிழரிடையே தொடர்பாடல் இப்போதுதான் சாத்தியப்பட ஆரம்பித்துள்ளது. அதுவும் அடித்தட்டு பாமரர் அளவில் இன்னும் சாத்தியப்படவில்லை. தற்போதைய முன்னேற்றத்திற்கு இணையம் ஒரு காரணியாக உள்ளது.

கடந்த காலங்களில் இந்தப் புரிந்துணர்வு ஏன் சாத்தியப்படவில்லை என்பது ஏற்கனவே பலமுறை அலசப்பட்டுவிட்டது. ஈழவிவகாரம் ஒரு பேசுபொருளாகவே இல்லாமல் செய்யப்பட்ட ஒரு காலமும் இருந்தது. இன்று அது ஒரு மாற்றத்தைக் கண்டிருக்கிறது.

மொத்தத்தில் மக்களில் எந்தத் தவறும் ல்லை. இயல்பாகவே யாரையாவது நம்பினால் அவரை விடாமல் பற்றிக்கொள்ளும் எளிய மனம் கொண்ட மக்களை ஏமாற்றிய திராவிட அரசியலை மக்கள் விளங்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இது காலம் கடந்த ஒரு ஞானமாக சிலருக்குத் தோன்றலாம். ஆனாலும் எதற்கும் Never say too late. :)

Link to comment
Share on other sites

1 hour ago, இசைக்கலைஞன் said:

உலகத்தமிழரிடையே தொடர்பாடல் இப்போதுதான் சாத்தியப்பட ஆரம்பித்துள்ளது. அதுவும் அடித்தட்டு பாமரர் அளவில் இன்னும் சாத்தியப்படவில்லை. தற்போதைய முன்னேற்றத்திற்கு இணையம் ஒரு காரணியாக உள்ளது.

கடந்த காலங்களில் இந்தப் புரிந்துணர்வு ஏன் சாத்தியப்படவில்லை என்பது ஏற்கனவே பலமுறை அலசப்பட்டுவிட்டது. ஈழவிவகாரம் ஒரு பேசுபொருளாகவே இல்லாமல் செய்யப்பட்ட ஒரு காலமும் இருந்தது. இன்று அது ஒரு மாற்றத்தைக் கண்டிருக்கிறது.

இசை உங்கள் இந்தக் கருத்துக்காகத்திறக்கான பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கட வழிக்கே வாறன் இசை,தமிழகத்தில் எத்தனை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள்? 6,7 கோடி இருப்பார்களா?...அத்தனைத் கோடி தமிழர்கள் இருந்தும்,தொடர்பாடல்கள் வசதிகள் இல்லாததால் வன்னியில் இருக்கின்ற சனம் செத்தது என்று எழுதுகிறீர்களே உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் இல்லை.

தொடர்பாடல் என்பது இரண்டாம் பட்சம் தான்...முதல் காரணம் அக்கறையின்மை,எங்களுக்கென்ன என்ட அசிரத்தை,அசட்டை போன்ற காரணங்களால் தான் வாயை மூடிக் கொண்டு இருந்தார்களே தவிர தொடர்பாடல் ஒரு பிரச்சனையே அல்ல.

தமிழனுக்கு ஒரு ஆபத்து,ஒரு அழிவு என்டால் இதயம் தானாக துடிக்க வேண்டும்.தங்கட இனத்திற்கு ஒரு ஆபத்து என்டவுடன் மனம் பதை பதைக்க வேண்டும்.உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவனுக்காக குரல் கொடுக்க வேண்டும்.அது தானாக வர வேண்டும். தமிழ் நாட்டு தமிழர்களுக்கு அது அறவே இல்லை.

யுத்தத்தின் இழப்பையும்,அங்கு என்ன நடக்கின்றது என்பதையும் ஊடகங்களும்,அரசியல்வாதிகளும் வேண்டுமானால் மறைத்திருக்கலாம்[அவர்கள் சொல்லித் அங்குள்ள மக்களுக்கு போய் சேர வேண்டியதில்லை.ஜடியில் முன்னோடியாக தமிழகமும் இருக்கின்றது.]... ஆனால் அதை எல்லாம் மீறி பக்கத்து நாட்டில் தங்கள் சக தமிழனுக்கு ஒரு அவலம் நடக்குது,என்ன நடந்ததோ! எத்தனை பேர் செத்தார்களோ எனத் தேடி அறிந்து கொள்ள வேண்டாமா!,அதற்கான முயற்சிகள் தான் எடுத்தார்களா?

அவர்கள் எப்பவுமே தங்களை ஒரு இந்தியராகத் தான் முதலில் கருதுவர்.அது உங்கட சீமானாகட்டும்,அல்லது வைகோ ஆகட்டும். இரண்டாவதாகத் தான் தங்களை தமிழன் என்று சொல்லுவர்...இழிச்சவாயத் தமிழராகிய எங்களை மாதிரி முதலில் தமிழன் என்று சொல்ல அவர்களுக்கு என்ன விசரா?

உங்களுக்கு வேண்டுமானால் தமிழகத்துடான தேவைகள்,தொடர்புகள் இருக்கலாம்.அதற்காக அங்குள்ள மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என எழுதுகிறீர்களே! நீங்களே இப்படி எழுதலாமா?

இதை விடுங்கோ இது கடந்த காலம்... முடிந்து போனவற்றை எழுதி ஒரு பிரயோசனமும் இல்லை.ஆனாலும் இவர்கள் செய்த தூரோகத்தையும் நான் கடைசி வரைக்கும் மறக்க மாட்டேன்...நெஞ்சில ஈரம் உள்ள எந்தத் தமிழனும் மறக்க மாட்டான்.

இப்பத் தான் உலகத் தமிழர்களுக்கிடையே தொடர்பாடல் விரிவடைந்து இருக்குது என எழுதி இருக்கிறீர்கள்...என்ன செய்யப் போகிறார்கள்?...எங்களுக்கு நாடு கேட்டு ஆயுதம் தூக்கிப் போராடப் போகிறார்களா அல்லது தங்கட அரசை எதிர்த்து அகிம்சை வழியில் போராடப் போகிறார்களா?...இனி மேல் இவர்களுக்கு எங்கள் போராட்டம் புரிந்து என்ன?,புரியா விட்டால் எனன?...இனி மேல் இவர்களால் ஆகப் போவது ஒன்றுமே இல்லை.

என்னைப் பொறுத்த இவர்களது காலில் விழுவதை விட இலங்கையிடம்,இந்தி மத்திய அரசின் காலில் விழுந்தால் ஆவது அவர்கள் எதாவது செய்வார்கள்...தமிழகத்தை பிரிக்க மாட்டோம்,எங்களுக்கு,எங்கட இடத்தை தந்தால் மட்டும் காணும் என்று சொன்னால் மட்டுமே இனி மேல் எங்களுக்கு ஒரு தீர்வு சாத்தியம்.

புலிகள் செய்த பெரிய பிழைகளில் தமிழ்நாட்டையும்,அந்த மக்களையும்,அங்குள்ள அரசியல்வாதிகளையும் நம்பியது...இவர்களை நம்பாமல் இந்திய மத்தியரசின் காலில் விழுந்திருந்தாலவது ஏதோ ஒரு தீர்வு கிடைத்திருக்கும்.

இனி மேல் இந்திய மத்திய அரசால் எங்களுக்கு ஒரு தீர்வு வந்தால் கூட அதை குழம்பும் சக்தியாகத் தான் இந்த தமிழ்நாட்டுக்காரர்கள் இருப்பார்களே தவிர,இவர்களால் எங்கள் போராட்டத்திற்கு ஒரு பிரயோசமும் இல்லை.

இதே நேரத்தில் எமக்காக பல தியாகங்களை செய்த,உயிர்களை அர்ப்பணம் செய்த,சிறையில் வாடும் உறவுகளை நான் மறக்கவில்லை...இத்தனை கோடி தமிழர்கள் இருந்தும் ஒரு கொஞ்சப் பேராவது இரக்க மனதுடன் இருப்பது நெகிழ்வைத் தருகின்றது...அதே நேரத்தில் அரசியல் தவிர்த்த வேறு விடயத்தில் எனக்கு அவர்களோடு எந்த முரண்பாடும் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கடைசியாக இசையிடம் ஒரு கேள்வி,டெல்லி மத்தியரசை தவிர்த்து தமிழ்நாட்டால் மட்டும் எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமா?...நேபாளத்தில் நில நடுக்கம் என்டவுடன் டெல்லி அழிய வேண்டும் என்று எழுதியவர் நீங்கள்...எங்களை அழித்தவன் அழிய வேண்டும் சரி,அப்ப வேடிக்கை பார்த்தவன்?

Link to comment
Share on other sites

50 minutes ago, ரதி said:

அப்ப நீங்கள் போய் இந்திய அரசின் காலில்  விழுந்து ஒரு தீர்வை பெற்று கொடுக்கிறது. 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

2009 இல் புலம்பெயர் நாடுகளில் எமது உறவுகள் ஆயிரக்கணக்கில் தெருவுக்கு வந்து போராடினார்கள். லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டரில், கனடாவில் கார்டினர் பெருந்தெருவில் என்று எல்லாம் மறியல் செய்தார்கள்.

இப்போது ஒரு மாற்று சூழ்நிலையை சிந்தித்துப்பாருங்கள். ஒரு வேளைக்கு இங்கிலாந்திலும், கனடாவிலும் பின்வரும் சட்டம் ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். 

"பயங்கரவாதப் பட்டியலில் உள்ள அமைப்புகளை ஆதரித்துப் பேசினால் அல்லது ஒன்றுகூடினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்."

இப்படி ஒரு நிலை இருந்திருந்தால் புலம்பெயர் நாடுகளில் எத்தனைபேர் வீதிக்கு வந்து போராடியிருப்பார்கள்?! விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே. 

அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே தமிழகத்திலும் எதற்கும் துணிந்து போராடினார்கள். பலர் உயிரையே விட்டார்கள்.

அக்கால கட்டத்தில் சீமான் மீது கலைஞர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவி விட்டார். எத்தனை முறை உள்ளே போட்டார்கள் என்பது மறந்துவிட்டது. இதற்குப் பிறகும் பொதுமக்கள் வீதிக்கு வருவார்களா?

அநியாயத்தைக் கண்டு சகித்துக் கொள்கின்றவன் காலப்போக்கில் அடிமையாகின்றான். இது யாரோ சொன்ன கூற்று. மிகவும் உண்மையானதும்கூட. தமிழகத் தமிழர்களின் நிலையும் இதுதான். "நமக்கெனப்பா வம்பு". இதுதான் அவர்களின் நிலை.

மே 2009 இன் பின்னர்.. இல்லாத புலிகளை வைத்து தமிழகத்தில் ஒடுக்குமுறை செய்யும் வாய்ப்பு ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால் இன்று தாராளமாக பலவகை பிரச்சாரங்கள், உணர்வூட்டும் விடயங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய வசதியினால் பல இளைஞர்கள் அடிமைத்தளையில் இருந்து விடுதலைபெற முயற்சிக்கிறார்கள். அதனால்தான், ஈழவிடுதலை என்பது அந்த நாட்டு மக்களின் விடுதலை மட்டுமன்று; அது ஒரு ஒட்டுமொத்த இனத்தின் விடுதலை என்கிற விழிப்பூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அண்மைய வெள்ள நிவாரண நடவடிக்கையில்கூட, மத்திய அரசு எவ்வாறு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியது. வட இந்திய ஊடகங்கள் பலதின் முகத்திரைகள் கிழிந்தன. பாஜக பிரமுகர் ஒருவர், இந்துத்துவத்திற்கு வாக்களிக்காத தமிழகத்தைப் பற்றி எனக்கொரு கவலையும் இல்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிந்து மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானார். இவை எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு உள்ளது.

அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம், ராஜீவ் கொலை, தேசியக் கட்சிகளுக்கான ஆதரவின்மை இவையெல்லாம் வட இந்தியர்களுக்கு கசப்பானவை. அதனால் தமிழகத்தின்மேல் அவர்களுக்கு இயல்பாகவே ஒரு வெறுப்புணர்வு உள்ளது.

நடுத்தர வர்க்க தமிழக மக்களும் அந்த வட இந்தியர்களின் மனங்களின் இடம்பிடிக்க முயன்று தோற்றுப்போய் விட்டார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த திராவிடக் கட்சிகள் அவர்களைக் கைவிட்டதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை. இனிமேல் தமிழ் தேசிய அரசியல் அங்கே முன்னால் வருவதை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது.

எமக்கு ஒரு நிரந்தரமான, நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு தமிழக மக்களின் நிலைப்பாடு முக்கியமானது. சிங்களம் ஈழத்தமிழர்கள் குறித்து அச்சப்படவேண்டிய நிலை ஒன்று இல்லை. புலம்பெயர் தமிழர்கள்.. அதற்கு மேலாக தமிழகம்.. இந்த இரண்டும்தான் சிங்களத்தை வழிக்குக் கொண்டுவர உதவக்கூடிய காரணிகள். எங்கெல்லாம் மக்கள் பலம் உள்ளதோ, அங்கெல்லாம் பலமான அரசியல் அதிகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஏழுகோடி மக்களினால் கிடைக்கக்கூடிய அதிகாரபலம் என்பது தமிழ் தேசியத்தின் பக்கமாக இருக்குமானால், அதைவிடச் சிறந்த பலம் ஒன்று இக்காலத்தில் கிடைக்கப் பெறாது.

நீங்கள் நினைக்கலாம்.. இது எப்ப நடந்து முடிந்து.. எப்ப தீர்வு வாறது என்று. எந்தச் சித்திரமாக‌ இருந்தாலும் ஒற்றை புள்ளி ஒன்றில் இருந்துதான் தொடங்க வேண்டும். தமிழகத்தில் இன்று நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம் என்பது மே 2016 தேர்தலில் தெரிய வந்துவிடும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், திமுக என்கிற கட்சி அஸ்தமனத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருப்பது புலனாகும். இது ஒரு வரலாற்றுத் தேவை. தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் என்பது தமிழரிடமே மறுபடியும் சென்று சேர வேண்டும்.

நிறைவாக.. உலகத்தமிழர் எவராயினும், அவர்களது துன்பம் என்பது எல்லோரது துன்பமும் ஆக உணரப்படவேண்டும். அவர்களது மகிழ்வு என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் மகிழ்வாக அமைய வேண்டும். இதன் அடிப்படையிலேயே மோகன் அவர்கள் இந்தத் திரியைத் தொடங்கியிருந்தார் எனக் கருதுகிறேன். அவ்வகையில் மோகன் அவர்களுக்கும், யாழ் இணையத்திற்கும் நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் கருத்தைப் பார்த்தால் தமிழக மக்களால் முள்ளிவாய்க்கால் அவலத்தைத் தடுத்திருக்கமுடியும் என்ற தோற்றப்பாடு வருகின்றது. இது படுபிழையான சிந்தனை. முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு ஈழத் தமிழராகிய நாம்தான் முழுப்பொறுப்பும் எடுக்கவேண்டும். அப்படியான நிலை உருவானதற்கு வெளியாரைக் குற்றம் காணுவதை முதலில் கைவிடவேண்டும்.

ஒரு மக்கள் அலை என்பது தானாக உருவாவதில்லை. அதனை ஒரு சில வசீகரமான தலைவர்கள் உருவாக்குகின்றார்கள். ஆனால் பதவியில் இருப்பவர்களையும் மீறி மக்கள் போராட்டம் வலுப்பெற அரசுத் தலைவர்கள் விட்டுவைப்பதில்லை. அப்படி நடந்தால் அதனைப் புரட்சி என்றுதான் கூறுவார்கள். எனவே நடந்த வரலாறுகள் தெரிந்தும், குறிப்பாக இலங்கையின் எந்த ஒரு பகுதியிலும் அடையாள எதிர்ப்பைக் கூட காட்டமுடியாமல் தமிழர்கள் மெளனமாக தமக்குள்ளே அழதுகொண்டிருந்தது தெரிந்தும், மக்கள் அழிவைத் தடுத்திருக்க சாதாரண மக்களால் முடிந்திருக்கும் என்று நினைப்பது கூட ஒரு கையாலாகாத்தனம்தான்.

Link to comment
Share on other sites

இந்திய அரசியல் ,தமிழ் நாட்டு அரசியல்  என்றும் மாறப்போவதில்லை மக்களும் மாறப்போவதில்லை மாற்றம் வரும் என்று கனவு காண்பவர்களை அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவோம்

ஒரு இயற்கை அனர்த்தத்தில் துன்படுபவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியது சக மனிதனாக தமிழனாக எங்களது கடமை .கடைசி ஆறுதல் சொல்லாவிட்டாலும் இந்த நேரத்தில் புண் படுத்தகூடாது .

தனி நபர்களாக எம்மை காயப்படுத்திய யாராவது அரசியல்வாதிக்கு ஏதும் நிகழ்ந்தால் சந்தொசப்படுவதில் தப்பில்லை .

தமிழ் நாடு மட்டும் அல்ல உலகில் எங்கு இப்படி அனர்த்தம் நடந்து அப்பாவிமக்கள் உயிர்கள் போகும்போது அதில் சந்தோசப்பட்டால் நாம் மனிதாபிமானம் அற்றவர்கள் ஆகிவிடுவோம் அது முன்னர் யாழில் நடந்தது .அரசுகள் செய்யும் தவறுகளுக்கு அப்பாவி மக்களை பிழை சொல்லமுடியாது .

இலங்கையில் சிங்கள பிரதேசத்தில் ஒரு பேரழிவு வந்தாலும் நாம் ஆறுதல் சொல்லவேண்டும் என்பதுதான் எனது நிலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. மோகன் இத்திரியைத் திறந்து யாழ் இணையத்தின் திடமான தனித்துவத்தை வெளியிட்டிருப்பது வரவேற்கப்படவேண்டிய விடயம். நன்றி மோகன்.

தமிழகத்தில் தற்சமயம் ஏற்பட்டுள்ள இயற்கையின் பேரனர்த்தத்தில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எங்களுடைய வார்த்தைகள் அவர்களின் துயர் துடைப்பதாக இருக்கவேண்டும். ஈழத்தில் மிகப்பெரும் அனர்த்தம் நடைபெற்ற காலத்தில்  அவர்கள் அதைச் செய்யவில்லை இதைச் செய்யவில்லை என்பது  இத்தனை ஆண்டுகள் கடந்தபின்னர் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது. தமிழகத்தில் தமிழர் ரீதியான மிகப்பெரும் விளிப்புணர்வு ஏற்றபட்டது 2009 இன் பிற்பாடு என்பதே உண்மை சமூகவலைத்தளங்கள், இணையப் போராட்டங்கள் 2009 இல் அதிகார வர்க்கங்களால் திட்டமிட்ட முறையில் மழுங்கடிக்கப்பட்டமையும் அடிப்படை அன்றாட வாழ்வுக்காக மாரடிக்கும் மக்களிடம் தேர்தல் வியாபாரங்கள் முன்னணி வகித்தமையாலும் மக்கள் சக்தி முழுமைபெறவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் அவர்களால்கூட எங்கள் விடயம் தொடர்பாக எதனையும் செய்திருக்கமுடியாது. ஒரு இனம் சாதியால், மதத்தால், அரசியல் பிரிவுகளால் பிளவு பட்டிருந்தால் எதனையும் சாதிக்கும் வக்கற்றது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். 2009தான் தமிழகமும் அரசியல் பெருச்சாளிகளின் மத்தியில் சிக்குண்டிருக்கும் தம்மால் எதனையும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்ட காலம். அன்று முகிழ்த்த அவர்களின் பெரும் வேதனைக்கு இன்று இயற்கை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சாதி, மதம், அரசியல் கடந்து மனித நேயத்துடன் பயணியுங்கள் என்று இயற்கையின் கட்டளை அவர்களுக்கு மிகத் தெளிந்த ஏறுமுகத்தை வழங்கியிருக்கிறது. நேற்றுவரை மானுட அவலத்தில் பெரும் பரப்பை அறியாதவர்களை இந்த துன்பம் அறியவைத்திருக்கிறது உயிர்களைக்காப்பாற்றுவதும், வாழவைப்பதும் எத்தகைய பெறுமதியானது என்பதை நாங்கள் அறிவோம். எங்களுக்கு துயர் என்றால் அவர்களுக்கும் அது அவர்களுக்கு துயரம் என்றால் எங்களுக்கும் அது..... அனுபவங்களே சிறந்த ஆசான்., 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா, நான் புயல் வெள்ளத்தில் தமிழ் நாட்டு மக்கள் சிக்கி இறந்ததையிட்டு மகிழ்ச்சி அடையவில்லை...நாளைக்கே அப்படி ஒரு நிகழ்வு தாயகத்திலும் நடக்கலாம்... அதே நேரத்தில் எனக்கு ஒரு துளி கவலையும் இல்லை...கவலைப்படுகின்ற மாதிரி நடிக்கவும் முடியாது.

இசை, உங்கள் முதலாவது கருத்திற்கும், நீங்கள் எனக்கு எழுதிய கருத்திற்கும் பாரிய வேறுபாடு இருக்குது...கடைசியில் நீங்களும் நான் சொன்னதையே தான் சொல்கிறீர்கள். ஆனால் என்ன அந்த மக்களை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீர்கள் அவ்வளவு தான்...நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் என்றும் அதன் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் யாழ் இணைய ஸ்தாபகர் மோகன் அண்ணாவின் கருத்தை வரவேற்கிறோம்.

எமக்கு உதவி செய்தால் தான்.. மற்றவைக்கு உதவி செய்யனும் என்ற அந்தச் சுயநலம் தான் எம்மினம் அடிமைப்பட்டுக்கிடக்க முக்கிய காரணம்.

நான் பெரிது நீ பெரிது என்று வாழ்வதை விட நம் இனம் பெரிது என்று வாழ்வது தான் நல்லம்... மொத்த இனத்தையும் பாதுக்காக உதவும்.

Link to comment
Share on other sites

நான் நெடுக்கர் சொன்னதையே வளி மொழிகிறேன்...    ஈழத்தமிழர்களே அவர்களுக்கு துரோகிகளாக இருக்கும் இடத்து தென் இந்திய தமிழர்கள் ஈழத்தவர்களுக்கு உதவவில்லை எண்று அங்கலாய்பது கேவலமானது... 

ஈழத்தமிழரின் படுகொலைகளை கண்டித்த தமி, சர்வதேச அரங்குக்கு எடுத்து செண்ற தமிழ் தலைவர்களை எல்லாம் சிங்களம் சுட்டு கொண்ற போது தங்களின் சக உறுப்பினர்கள் படுகொலை மீது கூட கண்டனங்களை எந்த விதத்திலும் பதிவு செய்யாது தங்களின் உயிர்களை பாதுகாத்து கொண்டு சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் தலைவர்களை இண்று  தூக்கி பிடிக்கும் எம்மவர்கள் தமிழ நாட்டு தமிழர்களை குற்றம் சொல்ல எந்த தகுதியும் அற்றவர்கள்.. 

இவர்கள் விமர்சனம் கூட தன்னலம் கொன்டதே.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் உங்களின் பொறுப்பை உணர்ந்து சரியான தருணத்தில் சரியாக செயல்பட்டு இருக்கின்றீர்கள்.

எதிரிகளின் எண்ணத்திற்கு ஏற்ப நாம் பிரிந்து சிதறுண்டு போகாமல் நல்லதையே நினைத்து செயற்படுவதே சிறந்தது என்பதுதான் எனது கருத்து. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.